Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

என்ன தவம் செய்தனை

என்ன தவம் செய்தனை

 

தவம்1

 

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க

 

ஈரேழு புவனங்கள் படைத்தவனை

கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட நீ

 

சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதித்ததை

 

புனிதமாதே எளிதில் பெற

 

பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள

 

உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை

 

சாட்டல், உத்தரகண்ட் மாநிலம் பிரபலாமான நைனிட்டால் நீர்விழிச்சிக்கு நடுவே 26 கிலோமீட்டரு பரப்பளவில்  அமைந்துள்ள சிறுமலை தொகுப்புகள் அதனை  சுற்றி பசுமை நிறங்கலும் டேலியா பூக்களின் நறுமண்த் தோடும் பறவைகளின் சலசலப்போடு சூரியன் தன் செந்நிறக் கதிர்களை எங்கும் பரப்பிக்கொண்டிருக்க மிக அழகாக காட்சியளித்தது

 

 அந்த ரம்மியமான மாலைப்பொழுதில் குன்றுகளின் நடுவே விசாலமாக வீற்றிருக்கும் புகழ்பெற்ற கீதாஞ்சலி கர்நாடக இன்னிசை சபாவில்தன் இனிமையான குரலினால் கேட்போரின் மனதை சுண்டி இழுக்கும் வகையில் தன்னிலையே மறந்த ஒரு நிலையில் பாடிக்கொண்டிருந்தாள் ஈஷா….

 

கர்நாடக சங்கீதமே தன் உயிர் மூச்சாக சுவாசித்து வந்தவளை திருமணம் என்னும் பந்தத்தில் விருப்பமே இன்றி திணித்து மட்டுமில்லாமல்அவள் உயிர்க்கும் மேலாக நேசித்து வந்த இசைக்கும் சேர்த்து தடை விதிக்கப்பட்டிருப்பதை நினைத்து மனம் நொறுங்கிப் போனாள்

 

 சைதன்யா( பஹாலி சீ ஹீ சாமே டீஜீ சீ ஆடீ ஹாய்ன்) – ஆல்ரெடி நேரம் ஆகிடிச்சி கொஞ்சம் சீக்கிரம்டாசரண் தன் நண்பனை துரிதப்படுத்தினான்  தன் தங்கையின் கச்சேரியை காண்பதிற்காக

 

நீலநிற ஷர்ட் மற்றும் அஷ் கோர்ட் அணிந்து பாந்தமாக வந்து நின்றவனை காணுகையில் சரண் மனதில் என்றுமில்லாததுப் போல் ஒரு யோசனைத் தோன்றத்தான் செய்தது….

 

ஏன்? தன் நண்பனையே தன் தங்கைக்கு மணமுடித்து வைக்கக்கூடாது அந்த எண்ணம் தோன்றியதும் தான் அவன் மூளையில் உரைத்தது அவன் சகோதரிக்கு திருமணம் நிச்சயிக்க பட்டிருக்கும் சேதி…. அதை நினைத்தவன்  மெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் அந்த கிராதகன் சக்திக்கு என் மாப்பிள்ளை எந்த விதத்தில் குறைச்சல் என்றவன் தன் நண்பனை மேலும் கீழுமாகப் பார்த்தான்

 

ஆறடிக்கும் சற்றுக் குறையாமல் தன் கோதுமை தோலைவிட நன்றாக மெழுகு பாவையில் செய்து வைத்த சிலைப்போல் எந்த ஒரு குறையுமின்றி பேரழகு எழிலுடன் கம்பீர ஆண்மகனாக இருக்கும் தன் நண்பன் சைதன்யா ஷர்மாவை ஒருமுறை தன் தங்கையுடன் ஒப்பிட்டுத்தான் பார்த்தான் அந்த மருத்துவ சகோதரன்மாநிறமாக இருந்தாலும் அழகில் சற்று குறைந்தவள் இல்லை அவளின் பொறுமை குணத்திற்கு ஏற் மணவாளன் தன் நண்பன் என்றே தோன்றியது!!!

 

இந்த யோசனை தனக்கு ஏன் முன்பே வரவில்லை என்று அவன் மனம் தன்னைத்தானே நொந்துக் கொண்டது கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம்  செய்வதில் எந்த பயனுமில்லையே

 

அப்படியே உறைந்து போய் தன்னையே பார்க்கும் சரண் அருகில் வந்தவன் அவன் முன் சுடக்கிட்டு

 

சரண் (தும் க்யா சோச் ரஹீ ஹோ) என்ன அப்படி ஒரு பார்வை என்று கேட்க ஒன்றுமில்லை என்றவன் நேரம்  ஆகிவிட்டது  செல்லலாம் என்று  கூறியவன் கச்சேரி நடக்கும் இடத்திற்கு இருவரும் பயணப்படனர்

 

 சரணின் பூர்விகம் சென்னை , விஜயா மற்றும் மூர்த்தியின் மைந்தன்  சென்னை எஸ். ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி. பி.எஸ் முடித்தவன் தன்னுடைய மேற்படிப்பு எம்.டி படிப்பதற்காக சண்டிகர்  சென்றான் கல்லூரியின் முதல் நாளே சைதன்யாவிற்கும் சரணுக்கும்  இடையே நல்ல நட்பு பிணையப்பட்டது   மருத்துவனாக தேர்ச்சி பெற்ற இருவரும் தங்களின் மருத்துவ படிப்பு வீணாகாமல் இருக்க சமூக சேவையில் இறங்கி இன்று பொதுமக்கள் பலப்பேருக்கு சிகிச்சை அளித்தனர்…  இலவச மருத்துவம் வழங்கும் திட்டம்           முழுமையடைய இவர்கள் இருவரும் முக்கிய காரணமே, தங்கள் பொது சேவை தொடரவேண்டும் என்று எண்ணியவர்கள் தங்கள் பணியை உத்தரகண்ட் மாநிலத்திற்கு மாற்றியமைத்துக் கொண்டனர்

 

சங்கீத சபாவில் உள்ளே நுழைந்தவர்கள்  அதிர்ச்சியூட்டும் வகையாக சரண் தன் வருகையை தன் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமலே விஜயம் புரிந்திருந்தான்…. அவர்கள் கவனம் முழுவதும் அரங்கில் இருப்பதை அறிந்து மெல்லிய நடையுடன் அவர்களை நெருங்கினான்

 

சரண் தன் குடும்பத்தை இத்தனை  வருடம் கழித்து சந்திக்கிறான் என்பதை உணர்ந்த சைதன்யா அவன் தனக்காக தானே அவன் குடும்பத்தை கூட பார்க்க செல்லாமல் தன் கூடவே இருந்து பார்த்துக்கொண்டது  அவன் செய்த உதவிற்கு தான் வாழ்நாள் முழுவதும் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதை  நினைத்தவனாக பெருமை பொங்க தன் நண்பனை பார்த்திருந்தான்அன்றுமட்டும்  அவன் தன்  அருகில் இல்லையென்றால் இன்று இந்த சைதன்யா ஷர்மா  உயிருடன் இருப்பது சந்தேகமே!!!

 

 தன் மனதில் என்னத்தான் பல எண்ண போராட்டங்கள் இருந்தாலும் அதன் உணர்வலைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன் அழகிய கூர்வால் விழியை மூடிக்கொண்டு தன் பாடலில் லயித்து ஒருவகை மோன நிலையில்  பாடிக்கொண்டிருந்தவளின் பாடலுக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க வல்லரே!!!

 

அங்கு எதிர் பாராத விதமாக சரணை சந்தித்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து நின்றனர்

 

விஜயாவோசரண் எங்கள பார்க்க உனக்கு இப்பையாவது நேரம் கிடைச்சிதா…. உனக்கு பொது சேவைத்தானே முக்கியம் போடா போய் அதை கவனி…. ‘ தன் அருமை மைந்தனை பொரித்து தாளித்து கொண்டிருந்தார் விஜயா ….

 

தன் அன்னையை சமாதானம் செய்யும் பொருட்டு தன் தந்தையை துணைக்கு அழைத்தான் சரண்விஜயா ரொம்ப வருஷம் கழிச்சி பையன பாக்குற ஏன் இந்த கோபம் அவன் பாவமில்லையாமூர்த்தி தன் மனைவியிடம் தன் மகனை விட்டுக்கொடுக்காது தாங்கி பேசவிஜயா தன் கணவனை எரித்தி விடும் பார்வையால் ஹ்ம்ம்  இந்த கோபம் ஏன்னு உங்களுக்கு தெரியாது …. இத்தனை வருஷம் ஆச்சி இருக்கோமா செத்துட்டோமானு கூட பார்க்கவரல இவனுக்கு நீங்க சப்போர்ட்டாஎன்ன தான் செய்தாலும் விஜயாவின் கோபம் குறையாமல் இருக்க

 

அதுவும் சிறுபிள்ளை தனமாக தன் மனைவியிடம் கெஞ்சும் மகனை பார்த்த  மூர்த்தி சரண் அப்படியே இருக்கடா கொஞ்சம் கூட மாற்றமேயில்லைஎன்று கூற….

 

அவன் ஏன் மாறவேண்டும் தந்தை போலத்தான் இருப்பான் ? என் பிள்ளையை நீங்களே கெடுத்துவிடுவீர்கள் போலவிஜயா சமாதான கொடியை பறக்க விடுவதை கண்ட மூர்த்தி பார்த்தாயா சரண் இதுதான் உன் அம்மா அவளால் உன்மீதும் சரி அம்மு (ஈஷா) மீதும் சரி அவ்வளவு எளிதில் கோபம் கொள்ள முடியாது எல்லாம் வெளி டிராமா …. நீங்கள் இருவரும் எனக்கு உலகம் என்றால் உன் அன்னைக்கு நீங்கள்தான் உயிர் என்றவரை  பார்த்த விஜயா போதும் போதும் ரொம்ப புகழ வேண்டாம் என் பிள்ளையே பாவம் பாருங்கள் எப்படி இளைத்து விட்டான் என்று   ஏன் சரண் ஒழுங்காக சாப்பிடுவது இல்லையா என்க

 

தன் அன்னையை பார்த்து தந்தையிடம் அப்பா அம்மாக்கு ஆஸ்கர் அவார்ட் கொடுக்கலாம் போலிருக்கே என்னா….. நடிப்பு……,,,,’ அவன் கேலியில் கோபம் அடைந்தவர் என்னடா சொன்ன என்று அவன் காதை பிடித்து திருக ஐயோ அம்மா வலிக்குது விடுங்க

 

அது அந்த பயம் இருக்கட்டும் மகனே இனி இப்படி சொல்வாய்….இல்லை அம்மா உங்களைப்போய் நான் இப்படி சொல்வேனா தன் காதை நன்றாக தேய்த்து விட்டான் …. தங்களையும் விட்டுக்கொடுக்காமல் தட்டிக்கொடுத்து பேசும் குடும்பத்தை பார்க்கும் போது சைதன்யாவின் மனதில் ஒரு வித வெறுமை சூழ்ந்தது….

 

 அதே நேரத்தில் தனிச்சையாக அவன் பார்வை அரங்கில் பாடிக்கொண்டிருந்த ஈஷாவின் மேல் படர்ந்தது அவள் பாடலை ரசித்தவன் அதில் தன்னை மறந்து ஐக்கியமாகினான்அவள் குரல் அவனை ஏதோ செய்ய வைத்தக் கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

 

அப்போதுதான்  கவனித்தான் சரண் தன்னுடன்  நண்பனென்று  ஒரு ஜீவன் வந்ததை அறிந்தவன் எங்கு சென்றிருக்க கூடும் என்று திரும்பி பார்த்தவன்…. சைதன்யா தன் தங்கையின் பாடலில் அர்ரெஸ்ட் ஆகியிருப்பதை தெரிந்து அவனை மீட்கும் பொருட்டு அவன் அருகில் சென்றான் மச்சான் பிகர் போத் அச்சா ….

 

(‘அச்சா!!…. லட்கி போத் அச்சா…. அடீ சுந்தர்)

மச்சான் பிக்கர் சூப்பர்ல சரண் தன் நண்பனை கேட்க

 

ஆமா  மச்சான் பொண்ணு சூப்பர்…. ரொம்ப அழகுடாஎன்று சைதன்யா தன் நண்பனின் தங்கையை வர்ணிக்க அடி பிச்சி போடுவேன் பிச்சி என்ற தங்கையை பார்த்து என்ன வார்த்தடா சொன்ன நாட்டாமை பாணியில் சரண் தன் நண்பனை விளையாட்டிற்கு கடிந்தவன்

 

அதில் தன்னிலை உணர்ந்த சைதன்யா நண்பனைப் பார்த்து( ‘ சாரிமேரா …. மேரா …. சிஸ்டர்)’ ‘ இல்லைஇல்லை தங்கை போதுமாபயந்தவன் போல் பாவனை செய்ய… அதில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வைத்தான் சரண்….

 

தன் பெற்றோரிடம் ஏற்கனவே சைதன்யாவைப் பற்றி கூறியிருப்பதால்அவனை அறிமுகப்படுத்தி வைப்பது அவனுக்கு மிகுந்த சிரமமில்லாமல் போனது

 

அவர்கள் பேசும் தமிழ் மொழியை புரிந்து கொள்பவனுக்கு பேச தெரியாது என்பது அங்கு சிறிது வருத்தம் தரும் நிகழ்வுத் தான் என்றாலும் சரணின் உதவியால் எந்த குறையுமின்றி சூழல் மிகவும் அமைதியாக சென்றது

 

 சைதன்யா மீண்டும் அவள் பாடலில் தன்னை தொலைக்க ஆரம்பித்தான் கைகளால் தாளம் தட்டிக்கொண்டு பாடல் வரிக்கு ஏற்ப மேட்டுகளை  வகித்தவள் ஸ்ருதி குறையாமல் கடைசி வரை வெற்றிகரமாக பாடிமுடித்ததும் அரங்கில் எழுந்த பெருத்த கைதட்டலுடன் கோஷங்கள் எழுந்தது…. என்றும் மனதை அலைபாய விடாமல் பாடுபவளின் மனதில் மகிழ்ச்சி பொங்கி பெருகுவதிற்கு பதிலாக மிகுந்த துக்கமே இருந்தது…. தான் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்தவள் தன் முகத்தை சீர் செய்துக் கொண்டு அவையொருக்கு தன் நன்றியை தெரிவித்தாள்….

 

ஈஷாவை எதிர்பார்ப்போடு சந்திக்க காத்திருந்தவன் அவளை நீ சந்திக்கும் நேரம் இதுவல்ல உனக்கு தகுந்த நேரம் வரும்வரை காத்திரு என்றவர்…  உங்கள் முதல் சந்திப்பே வேறு விதமாக இருக்கும் என்று சூழுரையை அறிவித்த இறைவன் தற்காலிகமாக இவர்கள் இருவர் சந்திப்பிற்கு தடை விதித்தான்

 

சைதன்யாவின் அலைபேசி அவனை அழைத்து ஒரு எமெர்ஜென்சி( அவசர நிலை) என்றவுடன் தன் நண்பனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்

 

அவன் விடைபெற்று சென்றதும் மேடையை விட்டு கீழே இறங்கியவளின் வதனம் தங்கத்திற்கு முலாம் பூசியதுப்போல் மாநிறத்தில் மேனி ஜொலிக்ககுறுக்கு சிறுத்து அளவான ஒப்பனையுடன் தேவதைப் போல் காட்சியளித்தாள் ஈஷா அந்த மகேஸ்வரனின் பாதியவள் போல் சௌபாக்யவதியாக நடந்து வந்தவளை பெருமையுடன் பார்த்தது அவள் குடும்பம்

 

தன் அண்ணனை அங்கு சந்தித்தவள்  கண்கள் கலங்க ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள்…. தன் மனம் ஆறுதல் வேண்டி  தன் சகோதரனின் தோளில் சாய்ந்தாள்….’ அம்மு …. எப்படி இருக்க…. பாத்து எத்தனை வருஷம் ஆச்சி …. ஹ்ம்ம் உன்ன கல்யாணத்துக்குத்தான் பார்க்கணும்னு இருந்திற்கு போலதிருமண பேச்சை எடுத்ததும் தன் தங்கையின் முக மாறுதலைக் கண்டவன் மூளையில்  பொறிதட்டியது

 

ஏன் ???

 

அமைதியாக இருக்கிறாள் இந்த திருமணத்தில் ஈடுபாடு இல்லையோ!!

 

தனக்குள் யோசித்துக்கொண்டிருந்தவனை விஜயா அழைத்து சைதன்யா எங்க என்று கேட்க

 

ஹான்அம்மா அவனுக்கு ஒரு எமர்ஜென்சி அதனால போயிருக்கான்என்றவனை தொடர்ந்து

 

ஓஹோ அப்படியா சரண் சரிப்பா நாங்க ட்ரையின்க்கு  கிளம்புறோம்ஆல்ரெடி டைம் ஆகிடிச்சி இல்லையாமேற்கொண்டு திருமண வேலைகள் எல்லாம் அப்படியே இருக்கிறது சென்று தான் கவனிக்க வேண்டும்…. நாங்கள் விரைவில் செல்கிறோம் இதில் இரண்டு ட்ரெயின் டிக்கெட் இருக்கிறது மறக்காமல் சைதன்யாவை அழைந்துக் கொண்டு வந்து விடு என்க….

 

கண்டிப்பாக அழைத்து வருகிறேன் என்று கூறிய சரண் ஏதோ சரியில்லாததுப் போல் தோன்ற யோசனையோடு விடை கொடுத்தான்….

  

தவம் 2

 

சென்னைக்கு செல்லும் ரயிலில் பயணப்பட்டவளின் மனம் முழுவதும் ஜன்னல் ஓரத்தில் தன்னை கடந்துச் சென்ற இருள் சூழ்ந்த மரம் காட்சியளிக்க தன் வாழ்க்கையே ஒளியில்லாமல் இருட்டாகி விட்டதுப்போல் உணர்ந்தாள்

 

இன்னும் பத்து தினத்தில் திருமணம் தனித்து விடப்பட்டவளாக தனிமை விரும்பி போல் தன் அறைக்குள்ளே முடங்கி கிடந்தாள்ஏதாவது மாயம் நிகழ்ந்து இத்திருமணம்  நின்றுவிடக்கூடாதா அவள் மனம் நொடிக்கு ஒரு பொழுது உருப்போடுக் கொண்டே இருந்ததுஆனால் அதற்கான வழித்தான்  அவளுக்கு தெரியவில்லை

 

 

பதினைந்து வருடத்திற்கு முன் உறவே வேண்டாமென்று முறித்துக்கொண்டு சென்ற தன் அத்தை மரகதம் இப்போது சொந்தம் வேண்டுமென்று உறவை புதுப்பிப்பதற்காக தன்னை பரிசம் போடுட வந்தது இன்றும் தன் பெற்றோருக்கு நம்ப முடியாத இன்ப அதிர்ச்சி தான்….

 

மூர்த்தியின் ஒரே தங்கை மரகதத்தை பரமசிவத்திற்கு திருமணம் செய்து வைத்தனர்…. இருவரும் அன்னோன்யமாக வாழ்ந்தது சக்தி பிறகும் வரைதான்சக்தி பரமசிவத்தின் ஒரே வாரிசு மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்கள் வாழ்க்கை திசை மாறியது பரமசிவம் குடி பழக்கத்திற்கு ஆளானார் குடும்பத்தை பற்றி சிறிதும் அக்கறை இல்லாதவராய் குடிக்கு அடிமையானதால் மாரடைப்பு  வந்து இறந்துவிட்டார் ….

 

கணவன் இறந்த துக்கத்தில் இருந்தவரிடம் மரகத்தின் ஒன்று விட்ட சொந்தம் இல்லாதத்தையும் பொல்லாததையும் போதித்துஅவரின் யோசிக்கும் திறனைகூட மழக்கடித்து அவர்களின் ஆதாயத்திற்கு அடி போட்டனர்இதுயவும் தெரியாத மரகதம் தன் சகோதரன் கொடுத்த பூர்விக  சொத்தான ஒரு பங்கினை அவர் முகத்தில் விட்டேரிந்துநீ ஒன்னும் எனக்கு பிச்சை போட வேணாம்…. என் தகப்பனும் என் முப்பாட்டனும் சம்பாரிச்ச சொத்ததான் நான் கேட்டேன்உனக்கு என்ன பங்கு இருக்கோ அதைவிட சமபங்கு எனக்கும்’  இருக்கிறது  என்று வாதிட்டு தன் பூர்விக சொத்து அனைத்தையும் தனக்கே தருமாறு கூறினார்….

 

மூர்த்தி எந்த பேச்சுமின்றி தன் பாட்டன் சம்பாதித்த அனைத்தையும் மரகதம் பெயருக்கு மாற்றி எழுதியவர் தனக்கும் இதற்கும்  எந்த சமந்தமும் இல்லை என்று கையிழுதிட …. இது போதும் என்ற நினைப்புடன் மரகதம் உறவே வேண்டாமென்று சென்றவர்இன்று மனஸ்தாபத்தை மறந்து  சொந்தத்தை வலுப்படுத்துதும் விதமாக திருமண சமந்தமும் பேசினார்….

 

அன்றே முகூர்த்த தேதியை குறித்துக்கொண்டவர் ஒரு மாதத்தில் திருமணம் முடிக்க வேண்டுமென்று அவசரப்படுத்தினார்….

 

இதோஅதோ என்றிருந்த திருமண நாளும் இனிதே வந்து சேர்ந்ததுபுதுமணப் பெண் என்பதற்கு பெயரளவில் கூட முகத்தில் சிரிப்போ,இல்லை பெண்களுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பகிர்ப்பு எந்த ஒரு உணர்ச்சியுமின்றி இவை அனைத்துக்கும் பஞ்சமாகிப் போனது

 

அவளின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டு வந்த சரண் தங்கையை அழைத்து தனிமையில் பேசினான்அம்முநான் உன்கிட்ட ஒன்னு கேட்கவாதன் முகத்தை பார்த்து கேட்கும் சகோதரனின் பேச்சில் தீவிரம் இருப்பதை கண்டவள்

 

என்ன அண்ணா? ….. என்ன பேசணும்?…’

 

அம்மு இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமாஒருவாறு தான் கேட்க வந்த கேள்வியை அவளைப் பார்த்து கேட்டான்

 

அண்ணா இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்னு நீ எதிர் பாக்குறஎனக்கு பிடிக்கலனா மட்டும் இங்க ஏதாவது நிக்க போதா…. இல்ல என்ன கேட்டுடுத்தான் முடிவு பண்ணங்களாஎதுவுமே என் விருப்பத்தோடு நடகுலஎன் விருப்பமின்றி நடக்கும் திருமணம் தான் என்றாலும்அதில் உறவுகளை திணித்துவிட்டு வேடிக்கை பார்பவரிடம் என்ன கூறுவது???…

 

எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை விட என் திருமணத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி தருமாயின் அதை நான் ஏற்க தாயார் …. இதை பற்றி இனிமேல் பேசவேண்டாம் என்று முடித்துவிட்டால்

 

அப்போ விருப்பம் இல்லாத வாழ்க்கைய வாழப்போரியா’ – சரண் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் செயலில் உணர்த்தினாள்….

 

நாழி  ஆயிடுத்துபொண்ண கூட்டிண்டு வாங்கோஐயர் குரல் கொடுக்க …. கழுத்தில் மாலைக்கு பதிலாக சுருக்கு கையிற்று இருப்பதுப் போல் ஒரு பிரம்மை தோன்றியது அவளுள்…. உணர்வே இல்லாத ஒரு ஜடப்பொருளாக மணவரையில் வந்து அமர்ந்தாள்….

 

தன் எண்ணம் நிறைவேறப் போகிறது என்று வெற்றிக் களிப்பில் அமர்ந்திருந்தான் சக்தி…. ஐயர் மாங்கல்யத்தை கையில் எடுத்துக் கொடுக்கபெற்றோரின் ஆசையை பூர்த்தி செய்வதற்கு கடமையே என்று அமர்ந்திருந்தாள் ஈஷாதன் பெற்றோரை ஒருமுறை நிமிருந்துப் பார்த்தவள் அவர்கள் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கிருக்க தன்னை வெகுவாக தேற்றிக்கொண்டவள் சக்தி தான்  கணவன் என்று முடிவடைய அவன் முகத்தை தன் மனதில் பதிய வைக்க போராடிக்கொண்டிருந்தாள்

 

நாதஸ்வரம் இன்னிசைக்க, அக்னி தேவன் சாட்சியோடு  அனைத்து இசைக்கருவிகளை முழங்க  ஈஷாவின் கழுத்திற்கு  தாலியை எடுத்துச் சென்றவனின்  கை தன்னிச்சையாக நின்றும் போனது….

 

தாலி எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கையே வைத்தவன் மணமேடையை விட்டு எழுந்தான்…. சுபமுகூர்த்த நிகழ்ச்சியை  தன்  கேமராவில் பதிவு செய்துக் கொண்டிருந்த சைதன்யா அங்கு நடப்பதை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்அவன் மட்டுமல்ல ஒட்டுமொத்த மண்டபமே அதிர்ச்சியின் உச்சியில் இருந்ததுஅவையில் இருப்போர்க்கே இந்த அதிர்ச்சி என்றால் பாவம் மணப்பெண்ணின் கதி விவரிக்க முடியாமல் இருந்தது

 

தன் கழுத்தில் கிடந்த மாலையை கழற்றி கிழே வீசியவன் எனக்கு இந்த கல்யாணத்துல துளியும் விரப்பமில்லஏதோ எங்க அம்மா சொன்னதுக்காக சம்மதிச்சேன்…. ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கிற தகுதி இவளுக்கு இல்லஇவ தகுதி என்ன?…. ஏன் தகுதி என்ன? எனக்கு சரிசமமா இவளா என் ஸ்டேட்டஸ்குனு ஒரு தகுதி இருக்கு…. இருந்தும் இவள நான் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன் ஆனால் அவள் தூய்மை பட்டவள் இல்லையே …. அவள் தூய்மையுடையவளாக நிருபித்து காம்பித்தால் நான் திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்குறேன்….

 

சக்தியின் பேச்சை கேட்டு கொதித்தெழுந்த சரண் பாய்ந்து வந்து அவன் சட்டை காலரை பிடித்து அடிக்க வந்தான்….

 

சரணின் கோபத்தை கண்ட சைதன்யா அவனை தடுக்க வருவற்குள் சக்தியின் முகத்தை பதம் பார்த்திருந்தான் சரண்….

 

தன் மகனை அடித்துவிட்டான் என்று பொங்கிய சினதுடன் வந்து நின்றார் மரகதம்என்னப்பா போனா போகுதுனா உன்னோட தங்கச்சிக்கு வாழ்க்கை குடுத்தா அவனையே அடிக்க வறிங்களாஇது எல்லாம் அநியாயம் கேட்க யாருமில்லைன்னு நினைப்பா

 

அதேதான் நானும் கேட்குறேன் எப்பையோ நடந்த ஒரு குடும்ப சண்டைக்கு பிழிவாங்குறது இதுதான் நேரமா என்ன சொன்னிங்க பாவமா யாருக்கு யாரு வாழ்க்கை பிச்சை போன்றது….  எங்க வீட்டு பொண்ணு மேல பழிசுமத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல எங்க பொண்ணப் பத்தி எங்களுக்கு தெரியும்…. கல்யாணம் முன்னாடியே ஒரு பொண்ண சந்தேகப்பாட்ரவன் அவ கூட நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது …. உங்கள பத்தி தெரிஞ்சும் எங்க வீட்டுப்பொண்ண கொடுக்க நினச்சது எங்க தப்புதான்…. இப்படி அசிங்க படுத்ததான இந்த கல்யாணம் வரைக்கும் காதிக்கிட்டு இருந்திங்கஇனொன்னு தெரிஞ்சிக்கோங்க எப்பவும் நாங்க மத்தவங்களுக்கு கொடுத்துதான் பழக்கம் பிடிங்கி பழக்கமில்லைகோபத்தோடு வெடவெடுத்தான் சரண்….

 

பொறுமை இழந்து மரகதம் வாப்பா உன்னத்தான் தேடிட்டி இருந்தேன் சொலிக்காமிக்குற நாங்க போட்டா பிச்சையில் தான் நீங்க உயிர் வால்றிங்ஞனு அதுதானேஒரு பொண்ண ஒழுங்கா வழக்கை தெரில்ல நல்லா மேயவிட்டுட்டு பேச்சு ஒன்னு பேசுறீங்க…. நீங்க ஆயிரம் சொன்னாலும் அவ கேட்டுப்போனவ கேட்டுப்போனவதான்

மரகத்தின் பேச்சில் கூனிக்குறிகி போனால் ஈஷா….

 

தன் நண்பன் குடும்பம் படும் பாட்டை தாங்க முடியதவனாய் ….. மாப்பிள்ளையாக நின்றுகொண்டிருந்த சக்தியிடம் சென்ற சைதன்யா சக்தி ஈஷா ரொம்ப நல்ல பொண்ணு…. உங்க பேமிலி பிரோப்ளேம் குள்ள ஒரு பொண்ணோட வாழ்க்கைய வீணாக்க வேண்டாம்யாரோ ஒருவன் தன்னிடம் அறிவுரை யாசிக்க …. தன் தகுதி குறைவதுப்போல் உணர்ந்தவன்

 

ஆஹான் அவளோ கஷ்டமா இருந்த நீயே போய் அந்த கேவலாமான பிறவிக்கு வாழ்க்கை கொடுஅவன் பேச்சில் ஆத்திரமடைந்த சைதன்யா பழைய சைதன்யாவாக வெளியே வந்தான் தன் பலம் கொண்ட மட்டும் அவன் சட்டை காலரை பிடித்து இருக்கினான் ….

 

அதைப் பார்த்த மரகதம் சைதன்யாவின் பிடியை தளர்த்த முயற்சித்தார்யாருடா நீ உனக்கு இவ்ளோ நெஞ்சழத்தம் இருந்தா என் பையன் சட்டைய பிடிப்ப…. என்ன அவ உன்னையும் விட்டுவைகளையாசரியான மாயகாரியா இருப்பா போலர்க்குஎல்லாரையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்க …. அப்பப்பா இந்த திறமலாம் யாருக்கும் வராது…. அப்போ நீயும் அவக் கூட

 

மரகாதம் இதுகுமேல  ஒருவர்த்த என் பொண்ணப்பத்தி தப்பா பேசுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்….. போதும் நீங்க எனக்கும் என் குடுமத்திற்கும் செஞ்ச உதவி…. என் பொண்ணப்பத்தி எனக்கு தெரியும் யாரும் வந்து என் பொண்ண பத்தி சான்றிதழ் கொடுக்க வேண்டாம்…. வாசப்படி திறந்திற்கு நீங்க போகலாம்….’’’’ மூர்த்தி தன் மகள் மீது கலங்கம் சுமத்தியவர்களை பார்க்கூட பிடிக்காமல் வாயிலை நோக்கி வெளியே செல்லுமாறு கட்டளையிட்டார்.. 

 

இவ்ளோ நடந்த பிறகும் நாங்கள் இங்க இருக்க ஒன்றும் எங்களுக்கு ஆசையில்லை…. சக்தி கிளம்புடா போகலாம் இனிமேல் இந்த குடும்பமும் வேண்டாம் இந்த சம்மந்தமும் வேண்டாம் என்றவர் தன் மகனுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்….

 

மரகத்தின் வார்த்தை தேளாய் கொட்டஈஷா மனமுடைந்து நின்றிருந்தாள் ….

என்ன அக்கா கல்யாணம் மணமேடையை வந்து நடக்காம நின்னுடிச்சி….’

ஹ்ம்ம் யாருக்கு தெரியும் இவ என்ன பண்ணிவச்சாளோ…. ஆதாரம் இல்லாம யாரும் பழி சொல்லமாடங்க கற்பகம்…. என்ன பண்றது  எல்லாம் வயசு அப்பிடி சரி நமக்கு எதுக்கு பெரிய இடத்து விவகாரம்லாம் . …’

 

அதுவும் சரிதான் அக்கா…. நம்ப நடைய கட்டுவோம்

 

திருமணத்திற்கு வந்தவர்கள் தங்களுக்குள் வாய்க்கு  வந்தபடி பேச இது அனைத்தும் ஈஷாவின் காதில் நன்கு விழுந்திட இப்படி ஊரார் முன் சிரிக்க தான் இனி வாழவே வேண்டாம் என்று முடிவேடுத்தவளாக தன் உயிரை விட துணிந்தாள்….

 

மணமகள் அறைக்குள் சென்றவள் தன் தந்தை உபயோகிக்கும் தூக்க மாத்திரையை முழுவதையும் தன் கையில் கொட்டியவளாக ஒரே மூச்சில் அனைத்தையும் வாயில் போடுக் கொண்டு மடமட வென்று தண்ணீரை குடித்தால் மாத்திரையை போட்ட பத்து நிமிடத்தில் கண்கள் சொருக வாயிலிருந்து நுரை தள்ளியப்படி மயங்கி சரிந்தாள்….

 

சரணும் சைதன்யாவும் மூர்த்தியை சமாதானப்படுத்த விஜயா மௌனமாக கண்ணீர் வடித்தார் ஒரே பெண் பிள்ளையின் வாழ்க்கையை இப்படி அசிங்கப்படுத்திவிட்டு சென்றிவிட்டார்களே இனிமேல் யார்? இவளை திருமணம் செய்து கொள்வார்கள்?? என்று பிள்ளையை பெற்ற அன்னையாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு கலங்கினார்….

 

மண்டபதிலிருந்து கூட்டம் அனைத்தும் சிறிது சிறிதாக களைந்து சென்ற பின்பே நினைவு வந்தவர்களாக ஈஷாவை தேடினர்அவள் எங்கும் இல்லை என்று மனம் பதரியவர்கள் மண்டபம் முழுவதும் அலசினர்…  மணமாகள் அறை உள்புரமாக பூட்டப்பட்டிருப்பதை சரண் சந்தேகத்திற்கு உட்பட்டவனாக கதவை திறக்க போராடினான்எவ்வளவு தட்டி பார்த்தும் திறக்காமல் இருக்க அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது

 

கதவை உடைப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்த சரண் தன் நண்பன் சைதயாவை துணைக்கு அழைத்தான் இருவரும் சேர்ந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்

உடைக்கப்பட்டு இருந்த கதவை கடந்து உள்ளே சென்றவர்களின் முகத்தில் தீவிரம் கூட வாயில் நுரைதள்ளியப்படி மயக்க நிலையில் இருந்தவளை கண்ட சரண்அம்முஅம்மு இங்க கண்ண திறந்து பாரு அம்மு…. ‘ அவளை கன்னம் தட்டி அழைத்தவன் அழைப்பிற்கு எந்த எதிரொலியும் இல்லை என்று அறிந்தவன் வெலவெலத்து போனான்

 

ஈஷாவிற்கு வெகு அருகில் மண்டியிட்டு அமர்ந்த சைதன்யா மெதுவாக அவளின் நாசியில் கைவைக்க சுவாசம்  சுத்தமாக இல்லை என்பதை உணர்ந்தவன் மிகுந்த பதட்டத்தோடு  அவள் கையை எடுத்து  பரிசோதித்தவன் பல்ஸ்  இருப்பதை உணர்ந்து ‘ (ஆரோஹி…. ஆரோஹி.. தும்தும் ப்ளீஜ் உத் ஜயோகீஆரோஹிஆரோஹி) ஆரோஹி எழுந்திரு இங்க பாருஎன்று பித்து பிடித்தவன் போல் அவளை உளுக்கியவன் யாரையும் கண்டுக்க கொள்ளாது ஈஷாவைத் தன் கையில் எந்தியவன் காரை கிளப்பிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்

 

சைதன்யாவின் உள்ளத்து உணரவுகளை அறிந்த சரண் அவனை தடுக்காது அவன் செயலை அனுமதித்தான்கதி கலங்கிப்போய் இருந்த தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விறைந்தவன் . சி.யூ (I C U) வாயிலில் பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருந்த சைதன்யாவை கண்ட சரண் பெற்றோரை இருக்கையில் அமரவைத்தவன் அவன் அருகில் சென்றான்….

 

சரண் வந்ததைக் கூட கண்டுக் கொள்ளதாவனாய் ஆரோஹி…. ஆரோஹிஎன புலம்பிக் கொண்டிருந்தவனிடம் சென்ற சரண்.

சைதன்யா( முஜ்ஹீ தேக்கோ) இங்க பாரு ஈஷா எப்படி இருக்கா டாக்டர் ஏதாவது சொன்னங்களாசரணின் கேள்விக்கு பதிலளிக்காமல் மீண்டும் சரண் ஆரோஹி திரும்பவும் என்ன விட்டு போய்டுவாளா..   சரண் போக வேண்டாம்னு சொல்லுஅவ இல்லாம நான் எபிடிடா

 

சைதன்யாவின் சட்டை காலரைப் பற்றியவன் அவனை தரதரவென்று இழுத்து சென்று . சி.யூ அறைக்கு முன் பொறிக்கப்பட்டிருந்த சதுர வட்டமாக மறைக்கப்படாமல் இருந்த பார்க்கும் கண்ணாடி அமைப்பின் வழியாக பார்க்கச் செய்தவன்நல்லா பாரு சைத்து அது ஆரோஹி இல்ல…  . .. ஆரோஹி எப்பையோ  இறந்துட்டா …. ஏண்டா புரிஞ்சிக்காம இருக்க உன்னோட கனவுல இருந்து வெளியே வாடாஉன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு இடியட் அது ஈஷா’  என்னோட தங்கை என்றதும் பிதற்றலை கைவிட்டவனாக அவனின் கவனம் முழுவதும் ஈஷாவின்  மேல் விழ தன்னிலை உணர்ந்தவனாய் அமைதிகாத்தான்

 

சரணோ தன் நண்பனை எதை மறக்க வேண்டும் என்று முயற்சிசெய்தேனோ அதுவே  மீண்டும்  நினைவு கூறும் வகையில் சூழ்நிலை அமைந்ததை  யாரை குற்றம் கூற முடியும்

 

ஈஷாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்று கூறியதும் தான் அனைவருக்கும் உயிரே வந்தது….

 

உள்ளே சென்றவர்கள் மருந்தின் வீரியத்தில் உறங்குபவளை தொந்தரவு செய்யாது விஜயா அமைதியாக அவள் தலையை கோதினார்அம்மு உன் வாழ்க்கை வீணாக  நாங்களே முக்கிய காரணமா இருந்திட்டோமேஈஷாவின் நிலையை  மூர்த்தியும் கண்ணீர் வடித்தார் ஐயோ என் பொண்ணு வாழ்க்கையை நானே அழிச்சிடேனேஎன் பொண்ணு வாழ்க்கை எப்புடி இருக்கப்போதோமனம் தளர்ந்து போக பேசியவரை கண்ட சைதன்யா

 

(சம்பாஷனைகள் அனைத்தும் ஹிந்தியில் இருப்பதால் தமிழில் கொடுத்துள்ளேன்)

 

சரணை தனியாக அழைத்தவன் சரண்நான்உன்கிட்ட ஒன்னு கேட்கணும்நீ தப்பா நினைக்கலனா ‘- சைத்து இதுவரை நான் அப்படி ஏதும் நினைத்ததில்லை நீ என்னிடம் கேட்க?

 

அதுவும் இப்போது இருக்கும் நிலையில்என்ன என்று தெளிவாக கூறவும் என்று கட்டன் ரைடாக பேசுபவனை பார்த்தவன்

 

சரி சரண்  நேரடியாக கேட்கிறேன்இங்கு நடந்த குழப்பத்திற்கு ஏதோ ஒரு வகையில் நானும் ஒரு காரணம்அதனால் நான் இப்போது கூறபோகும் செய்தி உனக்கு கோபம் வரலாம்ஆகையால் எனக்கு வேறு வழி தெரியவில்லைநீங்கள் அனைவரும் என்னை எதிர்த்தாலும் சரி என் முடிவு இதுதான் சரண்

 

உன் தங்கை ஈஷாவை என் மனைவியாக மனம் முடித்து தரவேண்டும் சரண்…. இதற்கு உன் முடிவு நல்ல விதமாக இருந்தால் நான் மகிழ்வேன்….

 

தன் நண்பனின் இத்தகைய முடிவை எதிர்பாராத சரண் அவனை பார்க்கசரண் நீ எதுக்கும் பயப்பட வேண்டாம் ஈஷாவை நான் என்றும் கண்கலங்க விட மாட்டேன் நான் சொல்வது உனக்கு புரிந்திருக்கும்சரண் பதில் சொல்லாமல் இருக்கவும்?? இதற்குமேல் உனக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் முடிவு உன்கையில் என்றான்….

 

போட முட்டாள் என் நண்பனுக்கு அதுவும் உன்னைப்போல் ஒருவனுக்கு என் தங்கையை மனம் முடித்து கொடுக்க நான் எதற்கு கவலை படவேண்டும் ஆனால் என் தங்கையை நன்றிகடனுக்காகவோ அல்லது பரிதாபப்பட்டு திருமணம் செய்து  கொள்வதாக இருந்தால் வேண்டாம்’ – சரணின் பதிலில் மகிழ்ந்த சைதன்யா நிச்சயமாக இது இரண்டு காரணமும் அல்ல நான் மனமுவந்துதான் உன் தங்கையை திருமணம் புரிய கேட்டேன்

சரணும் உன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாமலா சைத்து அவளை அந்நியப்படுத்தாமல் கூறும்போதே மனைவி என்றுதானே சொன்னாய்எந்த காரணமுமின்றி அதுதான் உண்மை என்றால் நான் மனப்பூர்வமாக சமதிக்குறேன் என் நண்பனுக்கு என் தங்கையை கொடுக்க இருந்தும் சைத்து தீப்ஷிக்கா ஏதேனும் வில்லங்கம் விளைவித்தால் ??

 

வாய்ப்பே இல்லை அவளுக்கும் எனக்குமான உறவு முறிந்து விட்டதென்று நீதிமன்றமே தீர்மானித்து விட்டது அவள் இடையூறு கொடுக்க வாய்பேயில்லைசைதன்யா தன் முடிவில் உறுதியாக நின்றான்….

 

 மேற்கொண்டு நடக்க வேண்டியதை சரண் தன் பெற்றோரிடம் தெரிவிக்க விஜயா கண்ணீரும் அந்தமுமாய் சைதன்யாவின் கையை பிடித்துக்கொண்டு நன்றி தெரிவிக்கஐயோ ஆண்ட்டி என்ன பண்றிங்க’…. நன்றிலாம் வேண்டாம் இனி இவள் என் பொறுப்புஇவள் என்னவள்இவள் கண்முழித்து பார்க்கும் வேலையில் இந்த சைதன்யாவின் மனைவியாக தான் அவள் கண்விழிக்க வேண்டும்..  இதை அவள் எப்படி ஏற்றுக்கொண்டாலும் பரவாக இல்லை என்றவன் இறைவன் சாட்சியாக வைத்து விஜயாவும் மூர்த்தியும் சிவலிங்கம் பொருத்தப்பட்டு இருக்கும் பொன் தாலியை சைதன்யாவின் கையில் கொடுக்க

 

அவள் கழுத்திற்கு எடுத்து சென்றவன்ஒரு நிமிடம் அவள் முகத்தை உற்று நோக்கியவன் பிறகு இவள் தன்னவள் என்னுள் சரிபாதி என்று தனக்குள் கூறிக்கொண்டவன் நிறைந்த மனதுடன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சி போட்டு தனது சொந்தமாக்கினான்

 

பின்பு அவள் நெற்றிவகிட்டிலும் தான் கட்டிய பொன் தாலியிலும் திலகத்தை வைத்தவன் அவள் பாதங்களை கையில் ஏந்தி இருக்கால்களிலும் மெட்டி அணிவித்தான்மனதில் புதுவித ஒரு உணர்வு தோன்ற ஈஷா மூர்த்தி என்னும் பெயரை மாற்றி ஈஷா சைதன்யா ஷர்மாவாக தன்னவளை முழு மனதுடன் கரம்பிடித்தான்

 

நன்றி தோழமைகளே

தவம் தொடரும்

 

இந்த கதை பிடித்திற்கா இல்லையா என்று கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்
7 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Daisy Mary says:

  செம speed ஆ போகுது ..
  starting ye தாறுமாறாக இருக்கு…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   ரொம்ப தங்க்ஸ் சிஸ்…. நிறையா பேரு டெய்லி ud கேக்குறாங்க அதுனால கதைய முழுவதுமாக முடித்து விட்டு வருகிறேன் விரைவில்


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Aadhira says:

   Super story ka
   Asusual take it in your unique way.
   All the best ka.
   Eagerly waiting for nallathor veenai seidhae story ka
   Nxt epi please! Please ka


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Super nice


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks rajee sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Superb…….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks vidhya sis😍💕💕

error: Content is protected !!