Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 14

அத்தியாயம் – 14

அவள் அந்த அறையில் அடைபட்டு எவ்வளவு நேரம் ஆகிறது என்று தெரியவில்லை… இப்பொழுது இரவா பகலா என்பது கூட தெரியவில்லை… அவளுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்… இந்த துன்பம் நீங்க வேண்டும்… இந்த வலி தீர வேண்டும்… மணிக்கட்டெல்லாம் தெறிக்கிறது… கயிறு அழுந்தி கன்றிப் போன இடமெல்லாம் எரிகிறது… கால்கள் வீங்கிவிட்டன… தலை வெடித்துவிடுவது போல் வலிக்கிறது… உடம்பில் எஞ்சியிருந்த சக்தியெல்லாம் மொத்தமாய் வடிந்துவிட்டது… இதற்கு மேல் அவளால் முடியாது…. முடியவே முடியாது… அரை மயக்கத்தில் சோர்ந்து போய் கிடந்தாள் மிருதுளா.

 

“பேஸ்மெண்ட் டோரை எப்படி அன்லாக் பண்ணின? யார் உனக்கு உதவி செஞ்சது?” – எண்ணிலடங்காத கேள்விகளில் இதுவும் ஒன்று. இந்த கேள்வியை எத்தனையாவது முறை கேட்கிறான்?

 

“ஐ டோன்ட் நோ…” – எந்த கேள்வியை எப்படி கேட்டாலும்… எத்தனை முறை கேட்டாலும் அவளிடமிருந்து வரும் பதில் இது ஒன்று மட்டும் தான்.

 

“மிருதுளா… உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காத… நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் ட்ரை பண்ணறோம். பிடிவாதம் பிடிக்காத… கரெக்டா ஆன்சர் பண்ணினா சீக்கிரமே இங்கிருந்து போயிடலாம்” – கரிசனமாகக் கூறினான் டேவிட்.

 

ஆரம்பத்திலிருந்தே அவன் மட்டும் அவளிடம் சற்று இணக்கமாகத்தான் நடந்து கொண்டான். ஆனால் அவன் கேட்கும் கேள்விகளுக்கு அவளிடம் எங்கே பதில் இருக்கிறது? யார் என்றே தெரியாத எவனோ ஒரு பட்டேலை, ஏன் கொன்றாய் என்று கேட்டால் என்னவென்று பதில் சொல்வது!

 

“நிஜமாவே எனக்கு எதுவும் தெரியல… ப்ளீஸ்… லீவ் மீ…” – சோர்வுடன் முணுமுணுத்தாள்.

 

“யு ப்ளாடி டாஷ்… என்னடி திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்க?யாருடீ நீ… எதுக்காக இங்க வந்த? யார் உன்ன அனுப்பினது… சொல்லப் போறியா இல்ல உன்ன கொல்லவா?” – அறையே அதிரும்படி கத்தினான் சுஜித்.

 

மிருதுளாவின் உடல் குலுங்கியது. அவன் அருகில் வந்தாலே ஒடுங்கிவிடுவாள். இப்படி அடிப்பது போல் சீறி கொண்டு வந்தால் சொல்லவா வேண்டும். கண்களை இறுக்கமாக மூடியபடி முகத்தை தோள்பட்டைக்குள் புதைத்துக் கொண்டாள். அவளிடமிருந்து மெல்லிய தேம்பல் வெளிப்பட்டது.

 

டேவிட் அவனை அமைதியாக இருக்கும்படி சமிங்கை செய்தான். ஆனால் அவனால் முடியவில்லை. எவ்வளவு நேரமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாயையே திறக்காமல் இருக்கிறாள் என்றால் எவ்வளவு அழுத்தக்காரியாக இருப்பாள்! – கொதித்தான்.

 

மாலிக் சர்புதீனும் மிருதுளாவின் மீது கடுமையான கோபத்தில்தான் இருந்தான். கொலை நடந்த நேரமும் இவள் தப்பிச்சென்ற நேரமும் சரியாக இருக்கும் போது இவளுக்கு எதுவும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சாமர்த்தியமாக சமாளிக்கிறாள் என்றே அவனும் நினைத்தான். அந்த கடுப்பில், “உன்னோட நடிப்பு எந்த விதத்துலேயும் உன்ன இங்கிருந்து வெளியே கொண்டு போகாது மிருதுளா. உண்மையை சொல்றது ஒன்னு மட்டும் தான் உனக்கு இருக்க ஒரே வழி” என்றான் கடுமையாக.

 

“ஐயோ… எனக்கு எதுவும் தெரியாது… ப்ளீஸ்… நா யாருக்கும் ஒர்க் பண்ணல… யாரையும் கொலை செய்யல… தவறிதான் இங்க வந்துட்டேன்… ப்ளீஸ்… பிலீவ் மீ… ப்ளீஸ்…” – அழுதாள். டேவிட் அவளை இரக்கத்துடன் பார்த்தான். அவன் மனம் அவளை நம்ப விழைந்தது. ஆனால் சூழ்நிலை அவளுக்கு எதிராக இருக்கிறதே! – சந்தேகம் என்னும் மூன்றாம் கண், கோர்த்தா ஆட்களின் பிரத்தியேக அணிகலன்களில் ஒன்றாயிற்றே! அதை அணிந்திருக்கும் போது அவனாலும் எப்படி அவளை முழுமையாக நம்ப முடியும்? இறுகிப்போய் நின்றான்.

 

இன்னும் எவ்வளவு நேரம் அவளால் இதையெல்லாம் தாக்குப் பிடிக்க முடியும்! இவர்கள் எந்த அளவுக்கு கொடுமை செய்வார்கள் என்பதை ஒருமுறை நேரிலேயே பார்த்திருக்கிறாளே! அன்று சவுக்கடி வாங்கிய மனிதனும் அவனுடைய கதறலும் நினைவில் வந்த போது அடக்க முடியாமல் வெடித்து அழுதாள். இதெல்லாம் ஒரு கெட்டக்கனவாக இருக்கக் கூடாதா என்று ஏங்கியது அவள் உள்ளம்.

 

கதவு திறக்கப்படும் ஓசை அவள் கவனத்தை ஈர்த்தது. நிமிர்ந்து பார்த்தாள்… போர்க்களத்தில் நுழையும் வீரனின் வேகத்தோடு உள்ளே வந்த அர்ஜுன் ஹோத்ராவைக் கண்டதும் அவளுக்குள் பீதி படர்ந்தது.

 

அவனை நிமிர்ந்து பார்க்கும் திராணியில்லாமல் குறுகி அமர்ந்திருந்தாள். அவன் கண்கள் அவள் முகத்தில் தான் நிலைத்திருந்தது. அந்த பார்வையில் எந்த உணர்வும் இல்லை… வெறுமையான வெற்றுப் பார்வை…

 

ஓரிரு நிமிடங்கள் கழித்து அவனுடைய ஆட்களுக்கு கண்களால் ஏதோ குறிப்புக் காட்டினான். உடனே டேவிட் அவளிடம் நெருங்கினான். ‘என்ன செய்யப் போகிறான்!’ – மிரண்டு போய் மிருதுளா சேரோடு ஒட்டிக்கொள்ள, அவன் கயிற்றை அவிழ்த்தான். ஆச்சரியத்துடன் மலர்ந்த அவள் முகம் மறுகணமே வலியில் சுருங்கியது… கைகள் விடுவிக்கப்பட்டுவிட்டன… காயம்பட்ட இடத்தை மென்மையாக வருடிவிட்டுக் கொண்டாள். அடுத்து கால்களும் விடுவிக்கப்பட்டன.

 

அவள் மீது நம்பிக்கை வந்துவிட்டதா! அவளை விடுதலை செய்கிறார்களா! அல்லது வேறெங்காவது கொண்டு போய் இன்னும் சித்ரவதை செய்யப் போகிறார்களா! – அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

 

“கெட் அப்…” என்று கடுமையான குரலில் கட்டளையிட்டான் அர்ஜுன் ஹோத்ரா.

 

உடனடியாக அவன் சொன்னதை செய்தாள் மிருதுளா. மறு கணமே காலில் சுரீரென்ற வலியை உணர்ந்து தடுமாறினாள். அவள் கீழே விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்தான் டேவிட்.

 

“ஆர் யு ஓகே?” – அவன் குரலில் அக்கறை இருந்தது. தொண்டையை அடைக்கும் ஆத்திரத்தை விழுங்கி கொண்டு தலையை மேலும் கீழும் அசைத்தபடி நிதானித்து காலை ஊன்றினாள்.

 

“கோ டு யுவர் ரூம்… யு ஆர் ஃபிரீ…” என்றான் அர்ஜுன். அவன் குரலில் கோபமும் இல்லை கனிவும் இல்லை… அது வறண்ட குரல்… உணர்வற்ற குரல்…

 

ஆனால் மிருதுளா உணர்வுப்பிழம்பாக இருந்தாள். ‘ஃபிரீ’ – அந்த ஒற்றை வார்த்தை அவளை என்னவோ செய்தது… கதறி அழ வேண்டும் போல் உள்ளே உணர்வுகள் பொங்கின. இனி இந்த அறை இல்லை… வலி இல்லை… துன்பம் இல்லை… நிம்மதியாக அவளுடைய அறையில்… அவளுடைய கட்டிலில் படுத்து உறங்கலாம்… – கண்களில் வடிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு மெல்ல அடியெடுத்து வைத்தாள்.

 

“நடக்க முடியுமா? நா வேணா ஹெல்ப் பண்ணறேன்” – அவளை தாங்கிப் பிடித்தபடியே உடன் நடந்தான் டேவிட்.

 

அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை அவளை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அவள் அவனைக் கடக்கும் போது, “இனி எஸ்கேப் ஆகணும்ங்கற எண்ணமே வர கூடாது” என்றான் எச்சரிக்கும் தொனியில்.

 

உதட்டை மடித்துக் கடித்தபடி, அவனை நிமிர்ந்து பார்க்காமல் ஆமோதிப்பாக தலையை அசைத்தாள் மிருதுளா.

 

தப்பிக்க முடியாது என்பதுதான் தெரிந்துவிட்டதே! இனியும் அதை பற்றி யோசிக்க என்ன இருக்கிறது… மீறி யோசித்தால் மீண்டும் இந்த அறையில் அடைபட்டுக்கிடக்க வேண்டியதுதான்… அவளுடைய நம்பிக்கை செத்துப் போய்விட்டது.

 

“போகலாமா?” – டேவிட்டின் குரல் அவள் சிந்தனையில் இடையிட்டது.

 

“ம்ம்ம்” – அவனுடைய உதவியோடு படிக்கட்டில் ஏறினாள்.

 

சுஜித்தின் முகத்தில் ஈயாடவில்லை. அவனால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் அர்ஜுன் ஹோத்ராவின் முகத்தில் இருந்த கடுமையை மீறி அவனிடம் கேள்வி கேட்கவும் முடியவில்லை. பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றான்.

 

டேவிட்டின் துணையோடு மெல்ல மெல்ல படியேறி மேலே வந்தாள் மிருதுளா. ஆட்கள் நடமாட்டமற்று அமைதியாக இருந்தது மாளிகை.

 

“மணி என்ன?” – மெல்ல கேட்டாள்.

 

“விடியற்காலை ரெண்டு…”

 

சட்டென்று நின்றாள். ‘விடியற்காலை ரெண்டா! கிட்டத்தட்ட இருபது மணிநேரம்…! இருபது மணிநேரமாக பேஸ்மெண்டில் இருந்திருக்கிறோம்!’ – தன்னிரக்கத்தில் மனம் வாடியது.

 

“இட்ஸ் ஓகே… யு ஆர் ஆல்ரைட்… கம்…” – அவளுடைய மனநிலை புரிந்து, இணக்கமாக பேசி அவளை அறைக்கு அழைத்து வந்தான் டேவிட்.

 

“தேங்க்ஸ்…” என்று அவனிடம் முணுமுணுத்துவிட்டு கதவை மூடி தாழிட்டாள். அறை இருண்டு போயிருந்தது. சுவற்றை தடவி ஸ்விட்சை தேடி மின்விளக்கை எரிய விட்டாள்.

 

உடம்பெல்லாம் வலி… சோர்வு… பசி… தூக்கம்… எல்லாவற்றையும் மீறிய ஒரு விரக்தி… நேராக குளியலறைக்குள் நுழைந்தாள்… ஷவரை திறந்துவிட்டு குளிர்ந்த நீருக்கடியில் வெகுநேரம் நின்றாள். காயம்பட்ட இடமெல்லாம் திகுதிகுவென்று எரிந்தது… நீரோடு சேர்ந்து அவள் கண்ணீரும் கரைந்தது…

 

மனநிலை ஓரளவுக்கு சமன்பட்ட பிறகு ஷவரை அணைத்துவிட்டு, துண்டை எடுத்து உடம்பில் போர்த்திக் கொண்டாள். கால்கள் வலுவிழந்து நடுங்கின… ஹேங்கரில் தொங்கி கொண்டிருக்கும் ஆடையை எடுத்து அணிந்துகொள்வது கூட மலையை புரட்டுவது போல் தோன்றியது. எப்படியோ வெகு சிரமப்பட்டு அந்த ஆடைக்குள் தன்னை புதைத்துக் கொண்டு வெளியே வந்தவள் அதிர்ந்து பின்வாங்கினாள்.

 

அவளுக்கு முதுகுக்கு காட்டி கட்டிலில் அமர்ந்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவனைப் பார்த்ததுமே அவளுக்குள் பதட்டம் வந்தது. உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது. குளியலறை கதவுக்கு பின்னால் பதுங்கினாள்.

 

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிய அர்ஜுன், மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் கண்களில் கலவரத்துடன் கதவுக்கு பின்னால் பதுங்கும் மிருதுளாவை கண்டு ஒரு கணம் திகைத்தான். பிறகு சிறு தயக்கத்துடன் எழுந்து, “ஷ்ஷ்ஷ்… இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே… ஐம் நாட் ஹியர் டு ஹர்ட் யு… பயப்படாத… ஓகே…” என்றபடி அவளிடம் நெருங்கினான்.

 

மிருதுளாவின் விழிகள் விரிந்தன. எத்தனை மென்மை… எத்தனை கனிவு அந்த குரலில்…! – ‘இது நிச்சயம் கனவுதான்…’ – கண்களை இறுக்கமாக மூடி, தலையை உலுக்கிவிட்டு மெல்ல கண் திறந்தாள். இப்போதும் அந்த உருவம் அவள் கண்ணெதிரில் நின்று கொண்டுதான் இருந்தது.

 

‘நிஜம்தானா!’ – சிந்தனையில் அவள் புருவம் சுருங்கியது. அவன் முகத்தில் சின்ன புன்னகை தோன்றியது… வசீகரமான புன்னகை… மிருதுளாவின் உடல் இன்னும் அதிகமாக நடுங்கியது… கால்கள் வெலவெலத்தன. ஒரு அடி எடுத்து வைத்தாலும் விழுந்துவோம் என்று தோன்றியது.

 

“கம்…” – அவள் தோள்களை பிடித்து கைத்தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் அமரச் செய்தான். அப்போதுதான் கவனித்தாள். அங்கே ஒரு முதலுதவிப் பெட்டி இருந்தது.

 

அதை திறந்து உள்ளேயிருந்து பஞ்சையும் ஆன்டிசெப்டிக் மருந்தையும் எடுத்துவிட்டு மிருதுளாவை நிமிர்ந்து பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இவருடைய கண்களும் ஒன்றையென்று சந்தித்தன. அவன் கண்களில் தெரிந்த நெருக்கம் மிருதுளாவை உறைய செய்தது.

 

அவளுக்கு அருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து காயம் பட்டிருந்த இடத்தில் மிருதுவாக மருதை பூசினான். அவள் வலியில் ,”ஸ்ஸ்ஸ்..” என்று லேசாக முனகிய போது சட்டென்று கையை எடுத்துவிட்டு, “டிட் ஐ ஹர்ட் யு?” என்றான் மென்மையாக.

 

உதட்டை கடித்துக் கொண்டு மெளனமாக குனிந்து கொண்டாள் மிருதுளா. இந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்ல முடியும்?

 

அவளுடைய மௌனத்தில் எதை கண்டானோ… சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் பிறகு, “சாரி” என்றான்.

 

மிருதுளாவின் விழிகள் விரிந்தன. அவன்!!! அர்ஜுன் ஹோத்ரா…!!! கோர்த்தாவின் தளபதி… அசுர குணம் படைத்தவன்… கொலைக்கு அஞ்சாதவன்… அவளிடம் மன்னிப்புக் கேட்கிறானா! வருத்தப்படுகிறானா!! அவளால் நம்ப முடியவில்லை…

 

அவள் வியப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் குனிந்து மெல்ல அவள் கைகளில் இருந்த காயங்களை ஊதிவிட்டபடி மெல்ல சுத்தம் செய்து மருந்து பூசி, கட்டுப்போட்டு முடித்துவிட்டு, “தட்ஸ் ஆல்…” என்று நிமிர்ந்தான்.

 

மிருதுளாவின் இமைகள் அவன் பார்வையை தவிர்த்து தாழ்ந்தன. அவள் கண்களிலிருந்து உருண்ட கண்ணீர் மணிகள் அவன் கைகளில் பட்டுத் தெறித்தன.

 

சட்டென்று அவன் உடல் இறுகியது. ஓரிரு நிமிடங்கள் அசையாமல் அமர்ந்திருந்தான். பிறகு அவனுடைய விரல்கள் அவள் கைகளில் போடப்பட்டிருந்த பேண்டேஜை மெல்ல வருடின. நொடிகள் கழிந்து கொண்டிருந்தன… கவிழ்ந்திருக்கும் அவள் முகத்தை பார்த்தபடியே மெல்ல அவள் கைகளை உயர்த்தி அதில் மென்மையாய் இதழ்பதித்தவன், “நான் உன்ன நம்பறேன்…” என்றான்.

 

மிருதுளாவின் இதயம் நின்று பின் துடித்தது. அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். மூளை மரத்துப் போய்விட்டது… என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளவே சிரமமாக இருந்தது.

 

“தட் வாஸ் எ மிஸ்டேக்… உன்ன அங்க கொண்டு போயிருக்கக் கூடாது. அப்படி ட்ரீட் பணியிருக்கக் கூடாது…” என்று சற்று இடைவெளிவிட்டவன், “திஸ் வோண்ட் ஹாப்பன் அகைன்… இனி உன்ன யாரும் இங்க மிஸ்ட்ரீட் பண்ண முடியாது… யு ஆர் சேஃப்…” என்றான்.

 

அவள் திகைப்புடன் அவனை பார்த்தாள். அவன் கனத்த மனதுடன் பேசுகிறான் என்பதை அவளால் உணர முடிந்தது. ஆனால் ஏன்? அவன் ஏன் அவளுக்காக வருந்துகிறான்! அவளுக்கு ஏன் சலுகை காட்டுகிறான்! – குழம்பினாள்.

 

முதலுதவி பெட்டியை மூடிவைத்துவிட்டு எழுந்த அர்ஜுன், அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேராக டீபாயை இழுத்துப் போட்டான். மேஜையில் இருந்த உணவு ட்ரேயை எடுத்து அதில் வைத்து, உணவருந்த வசதியாக அவளுக்கு டேபிளை செட் செய்துவிட்டு, “ரொம்ப வீக்கா இருக்க… சாப்பிடு, குட் நைட்” என்று கூறிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

 

அவன் அங்கிருந்து சென்ற பிறகுதான் அவளால் சிந்திக்க முடிந்தது… ‘இதெல்லாம் உண்மைதானா? அல்லது ஏதாவது கபட நாடகம் ஆடுகிறானா…?’ – அவளுக்கு சந்தேகம் வந்தது.

 

சற்று நேரத்திற்கு முன் குரல்வளையை பிடித்து நெரித்து கொல்லப் பார்த்தவன் இப்போது வெகு இணக்கமாக நடந்துகொள்கிறான் என்றால் சந்தேகம் வருவதுதானே நியாயம்.

 

 
16 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Super episode


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Superb as usual. But I think somebody is against Arjun.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Who is that black sheep?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  Super ud sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reen says:

  Can’t wait for the romance b/w Arjun and Miruthla


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anjali Suresh says:

  Che enna da paavam pannuchu intha poonu. Yenda avan manasodavum, unarvodavum ipdi velayadringa. Ponga da…… neengalum unga basementum…
  Haiyo onnume pannamaye ivlo torture panrane jvan aalunga oru aala konangale athu iva than satchi nu therinja??? Aju unna epdi nambarthu???


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Ganeshan says:

  Nice ud sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reen says:

  Guys … story cover picture la irukaadhu yaru nu sollunga pa


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ragini Ravi says:

  Hai Sooper pa indha episode……ivlo visarikaranga midhu Ena panra endha college idhu yelam visarikava mudiyadhu……sekrama unmaya terinjikita Nala irukum……waiting for love sequence


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Umamanoj says:

  Anniyan ipo Remo agitaan😀😀


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Daisy Mary says:

  கண்ண கட்டி காட்டுல விட்டுடூடா …
  கயிற வச்சி கட்டி புடிச்சிடுடா…
  கண்டபடி பேசி புடு டா…
  ஆனா இந்த பார்வை வேண்டாம் டா டா டா….

  கப் சிப் னு வாய மூடி கிடறேன் டா..
  கண்டுக்காம போய்டரின் டா…
  கள்ளத்தனம் பண்ண மாட்டேன் டா…
  ஆனா இந்த காதல் தொல்லை வேண்டாம் டா டா டா….

  லலலா..லலலா… லலலா…….

  என்னடா அர்ஜுன் இப்படி கவுத்துட்ட….
  உன்னை நம்பி பெரிய அடிதடி ஆர்ப்பாட்டம் கொடுமை இரத்தம் லாம் எதிர் பார்த்தேன்…
  இப்படி தக்காளி சட்டினிய காட்டிட்ட டா.. டேய்….
  அய்யோ… அய்யோ…
  இப்படி அநியாயத்துக்கு காதல் பன்றியே டா….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Ragini Ravi says:

   Ena oru villathanam pavam pa midhu


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vishnu Priya says:

  Wonderful…..very excited for next update


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Uma maheswari says:

  மிருதுளா உண்மையாவே ஸ்பை கிடையாதா ..
  அப்போ, அவளை வச்சு யார் game play பன்னுறா.. interesting Nithya sis..


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  saranya shan says:

  innum valnumnu asaipadriye miruthu………………


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  PAPPU PAPPU PAPPU PAPPU says:

  happa super uddd ma

You cannot copy content of this page