Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-4

உன் உயிரென நான் இருப்பேன் -4

 

கொழும்பில் அமைந்திருக்கும் எம்.சி எனப்படும் மெஜஸ்டிக் சிட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்காரங்களுடன் அழகாக காட்சியளித்தது. அந்த மாலில் உள்ள அத்தனை கடைகளின் உட்புறமும் வெளிப்புறமும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்ததன. ஆங்காங்கே சில இளம் ஜோடிகள் கைகளை கோர்த்துக்கொண்டும் , கல்லூரி மாணாக்கள் சிலர் தன் நண்பர்கள் படை சூழ அரட்டை அடித்துக்கொண்டும், சில செல்ஃபி மன்னர்கள் தங்கள் கைப்பேசியுடன் ஐக்கியமாயிருக்க சில சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் தளங்களை பார்வையிடுவதோடு பொருட்களை வாங்குவதிலும் பிஸியாக இருந்தது அன்றைய எம்.சி.

 

தன் முழங்கால் அளவு வரையிலான கரும்பச்சை நிறத்தில் ஒரு சோர்ட் பிராக்கும் அதற்கு பொருந்தும் வகையில் ஹை ஹீல்சும் அணிந்து அல்ட்ரா மாடர்ன் யுவதியாக தன் தோழிகளான ஜூலி மற்றும் நிராஷா சகிதம் எம்.சியை வலம் வந்துகொண்டிருந்தாள் இனியா. கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜூலியின் வீட்டில் மாலை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவே அன்றைய நாள் தோழிகள் மூவரும் அணிவதற்கான உடைகள் மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காகவே அன்றைய எம்.சி விஜயம்.

 

மேல் தளத்தில் உள்ள துணிக்கடைக்குள் நுழைந்தனர். ஜூலியும் நிராஷாவும் மாடர்ன் ஆடைகள் பிரிவினுள் செல்ல அதற்கு எதிர் புறம் இருந்த சாரீ மற்றும் சுடிதார் பகுதிக்குள் நுழைந்தாள் இனியா. அங்கிருந்த ஆடைகள் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தவள் கண்களை கவர்ந்தது ஆப் வைட் நிறத்திலான அழகிய சுடிதார். அதை வாங்கவென்று ஆசையுடன் எடுத்துப் பார்க்க அதன் விலையோ அவள் பட்ஜெட்டுக்குள் வரவில்லை. நீண்ட பெருமூச்செறிந்தவள் அப்படியே வைத்து விட்டு அதை திரும்பி பார்த்தபடியே தன் தோழிகள் இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள். அங்கே இரு விழிகள் அவளையே நோக்கிக் கொண்டிருந்ததை அவள் அறியாள்.
போதுமானளவு வருமானம் இருந்தாலும் வீண் செலவுகள் செய்ய லலிதா அனுமதிக்க மாட்டார். கண்டிப்பானவரும் கூட அதே சமயம் பழமை வாதியுமல்ல.

 

ஷாப்பிங் முடித்துக் கொண்டு கீழ் தளத்திற்கு வந்ததும் தனக்கு தெரிந்த யாரோ வந்திருப்பதாக கூறி ஒரு ஆடவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். அது வரை அந்தப் பக்கம் திரும்பி பாராதவள் அருகில் யாரோ வந்து ஹாய் கூற திடுக்கிடலுடன் திரும்பிப் பார்க்க அங்கு அபிநவ்வின் உயிர் தோழன் விக்ரம் நின்று கொண்டிருந்தான்.

 

“இவர் என் டாட் பிரென்ட் பையன் விக்ரம்” என தான் தோழிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்க இனியாவும் விக்ரமும் ஏற்கனவே அறுமுகமானவர்கள் என்பதை காட்டிக் கொள்ளவில்லை. விக்ரமும் அப்படியே நடந்து கொள்ள இனியாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

ஆடைகள் வாங்கிய கடையில் தன் பை ஒன்றை மறந்து விட்டு வந்தவளுக்கு அப்போது ஞாபகம் வர தோழிகளிடம் கூறி விட்டு மேல் தளம் நோக்கிச் விரைந்தாள். பையை எடுத்துக் கொண்டு எஸ்கலேட்டர் வழியாக அவசர அவசரமாக வந்து கொண்டிருந்தவள் எதிர்பாரா நேரம் அவள் கால் தடுக்கி கையிலிருந்த பை விடுபட தடுமாறியவளை விழாமல் தாங்கிப் பிடித்தது இரு வலிய கரங்கள். அவன் முகம் பாராமலே அவளுக்குப் புரிந்தது அது யாரென்று.

 

“அப்படி என்ன பகல் கனவு ?”என அவன் கேட்க திடுக்கிடலுடன் அவனை திரும்பிப் பார்த்தாள்.

 

“அ..அது.. அது..” என்று அவள் வார்த்தைகள் தடுமாற்றத்துடன் வெளிவரவே கீழே விழுந்து கிடந்த பையை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி நன்றி கூறியவளை கூர்ந்து நோக்கினான். என்ன என்பது போல் பார்வையால் வினவியளை உச்சந்தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.

 

“இந்த டிரஸ்ல சூப்பரா தான் இருக்க. ம்ம்..ஆனால் என்ன இந்த மாதிரி ஹீல்ஸ் போட்டா கொஞ்சம் கவனமா நடக்கனும் மேடம். ஹும்.. டெய்லி நீ விழும் போது உன்ன தாங்கி பிடிக்க என்னால வர முடியாதே..” என அவன் கண்ணடித்து சிரிக்க அவனுடன் சேர்ந்து அவளும் புன்னகைத்தாள்.

 

“என்ன சிரிப்புடா அது சான்ஸே இல்லை..” அவனது காந்தச் சிரிப்பில் தன்னிலை மறந்து நின்றிருந்தாள் இனியா. அப்போது தான் தன் தோழிகள் காத்துக் கொண்டிருப்பது நினைவில் வந்தது அவளுக்கு.

 

“ஹேய் சாரிப்பா. என்னோட ஃபிரண்ட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப நேரமாச்சு சீ யூ லேட்டர்” என அவனிடம் விடை பெற அவனும் புன்னகையுடன் விடை கொடுத்தான்.

 

**********

 

தோட்டத்தில் பனி மூடிய ரோஜாக்கள் இளங்காலை பொழுதில் உடல் சிலிர்த்து தங்கள் மீது இருந்த பனித்துளிகளை புல்தரையில் தெளித்துக் கொண்டிருக்க , பொழுது விடிந்து விட்டதற்கான அறிகுறியாக பலவண்ணப் பறவைகளின் ஒலி ஜன்னல் வழியாக கேட்க, அதிகாலை சூரியனின் செங்கதிர் ஒன்று ஒரே நேர் கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் படுத்திருந்த இனியாவின் முகத்தில் சுள்ளென்று விழுந்தது. ஆனாலும் கண் விழிக்க மனமின்றி அப்படியே படுத்துக்கொண்ட இருக்க அவளது கைப்பேசி சிணுங்கியது.

 

“குட்மார்னிங் ஜூலி, சொல்லு..ஹா…”என கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

 

“இன்னும் தூங்கிட்டு இருக்கியா? ஈவ்னிங் மறக்காம வந்து சேர்ந்துடு”எனக் கூறும் போது தான் இன்று கிறிஸ்மஸ் தினம் என அவளுக்கு ஞாபகம் வந்தது.

 

“ஹேய் மேரி கிறிஸ்மஸ்.. சாரி டி மறந்துட்டேன். ஈவ்னிங் வர்றேன்” என அழைப்பை துண்டித்தவள் குளியலறைக்குள் புகுந்தாள்.

 

************

 

வெள்ளை மற்றும் சிவப்பு நிற சுடிதாரில் அதற்கு பொருத்தமாக ஜிமிக்கி கம்மல் அணிந்திருந்தாள். தலையை வாரி சைட் பிரெய்ட் இட்டு தன் ஒரு பக்க மார்புக்கு முன் போட்டுக் கொண்டாள். தன் செவ்விதழ்களுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டவள் கண்ணாடியில் ஒருமுறை சரி பார்த்துக் கொண்டாள். எல்லாம் பக்கவாக இருக்கவே லலிதாவிடம் கூறி விட்டு ஜூலியின் வீடு நோக்கிச் சென்றாள்.

 

நிராஷா மற்றும் ஜுலி இனியாவின் உயிர்த் தோழிகள். பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள். நிராஷா ஒரு சிங்களப் பெண் இருந்தாலும் தமிழ் நன்றாக பேசுவாள். இவர்களில் ஜூலி செல்வந்தர் வீட்டுப் பெண். அவளது வீட்டில் அடிக்கடி விருந்துகள் நடக்கும். ஒரு நாள் கூட தன் தோழிகளை அழைக்காமல் இருக்க மாட்டாள். இவர்கள் மூவரும் இடத்தில் சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது.

 

“ஹாய் இனியா.. வா வா .. ரொம்ப அழகா இருக்க மா. நிரு வந்துட்டா. ஜூலி இன்னும் ரெடியாகிட்டு இருக்கா போ மா..” என அவளை ஜூலியின் அன்னை அவளை வரவேற்றார்.

 

“தேங்க்ஸ் ஆன்டி. நீங்களும் தான் ரொம்…ப.. அழகா இருக்கீங்க” என அவரது கண்ணம் கிள்ளி முறுவலுடன் ஜூலியின் அறைக்குள் நுழைந்தாள்.

 

“இனியா.. ரொம்ப அழகா இருக்க பேபி” அவளை அணைத்துக் கொண்டாள் நிராஷா.
அங்கே ஜூலி இன்னும் தயாராகி முடிய விருந்து நடக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கே ஜூலியும் அவளது குடும்பத்தினரும் விருந்தினர்களை வரவேற்பதில் பிசியாக இருக்க இனியாவும் நிராஷாவும் ஒரு ஓரமாக இருந்த மேசையில் குளிர்பானத்துடன் அமர்ந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில் நிராஷாவின் கைப்பேசி ஒலிக்க பேசி விட்டு வருவதாக கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

 

தனித்து இருப்பது அவளுக்கு அலுப்பாக இருக்கவே குளிர்ப்பானத்தை எடுத்துக்கொண்டு எழ யார் மீதோ மோதி நின்றாள்.

 

“ஐயோ சாரி சார்.. டிரஸ்ல எல்லாம்..” என அவனை விழி விரியப் பார்க்க அவனோ உதட்டில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான். அது அபிநவ் ஆதித்யனே தான்.

 

“என்ன மேடம்.. எப்பவுமே நாம ஒரு ஆக்ஸிடன்லேயே மீட் பண்ணிட்டு இருக்கோம்?” என அவன் சிரித்த முகமாகவே கேட்க என்ன சொல்வதென தெரியாமல் தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

 

“சாரி அபி.. என்னால உங்களுக்கு எப்பவுமே இப்படி ஏதாவது நடந்துட்டே இருக்கு. இப்போ பாருங்க உங்க டிரஸ்…”என தொடர்ந்து “வாங்க நான் க்ளீன் பண்ணி விடறேன்” என அவன் கையை பிடித்து வாஷ் ரூமுக்கு அழைத்துப் போனாள்.

 

அவனது கோர்ட்டை கழற்றி அதை சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருக்க அவன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“இனியா..”

 

“ம்..” என்றவள் அதை சுத்தம் செய்வதிலேயே கண்ணாக இருக்க அவனிடமிருந்து பதில் எதுவும் வராது போகவே மெதுவாக விழியுயர்த்திப் பார்க்க அவளுக்கு மிக அருகில் இருந்தான் அவன். திடுக்கிடலுடன் விழி விரிய பார்த்தவளை அவன் மேலும் நெருங்கி வர பேச்சிழந்து நின்றாள் அம்மாது.

 

அவளது மூச்சுக் காற்றின் உஷ்னம் அவனைத் தாக்க சுற்றம் மறந்தான் அவன். சுவரோடு ஒன்றியிருந்தவளை இழுத்து அவள் இடையோடு அழுத்தி அணைத்துக் கொண்டான். கிரக்கத்துடன் பார்த்தவன் அவளது செவ்விதழ்களை சிறை செய்திருந்தான்.

 

மலர்களில் தேன் அருந்தும் வண்டு போல அவள் இதழ்களில் அருந்திக் கொண்டிருந்தான் அக் கள்வன். அதுவரை விலகும் எண்ணம் வராதவளாய் நின்றிருந்தாள் இனியா. அவனது அணைப்பு மேலும் இருக தன்னுனர்வு பெற்றவள் தான் இருக்கும் நிலை உணரவேஅவனது மார்பில் கை வைத்து பலமாக தள்ளினாள்.

 

புரியாமல் விழித்தவன் என்ன என்பது போல் புருவமுயர்த்திக் கேட்டான்.

 

“அபி.. எ..என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?” என கோபமாக வினவியவள் அவன் பதிலையும் எதிர்பாராது வெளியேறினாள்.

 

அவனிடம் தோற்கும் தன் மனதை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டவள் அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் என்ற கவலையே மேலோங்கியது. இதற்கு மேலும் அவனது முகம் பார்க்க வெட்கியவள் தன் தோழிகளிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் விறு விறுவென கேட்டை தாண்டி நடந்தாள்.

 

அவள் காரணமின்றி அவன் மேல் கோபம் கொண்டு செல்வாதாக எண்ணியவன் பின்னால் சென்று கையை பற்றி நிறுத்தினாள்.

 

“இனியா.. இப்போ என்ன நடந்துசுன்னு கோவமா போற?” என அவன் அடக்கிய கோபத்துடன் கேட்டான். பதில் வராமல் போகவேம அவனது கோபம் உச்சமடைந்து கையை அழுத்திப் பிடிக்க வலித்தது அவளுக்கு.

 

“நான் கேள்வி கேட்டா பதில் சொல்லு?” என சினத்துடன் வினவினான்.

 

“எ..என்ன சொல்லனும் இ..இப்போ?” என கேட்டவளது அவள் குரல் தழு தழுத்தது.

 

“எதுக்கு நீ என்மேல கோவப்பட்டு அவொயிட் பண்ணிட்டு வந்த? அவ்ளோ நேரம் நீயும் என்ஜோய் பண்ணிட்டு தானே இருந்த திடீர்னு உனக்கு என்னாச்சு இனியா?” என அழுத்தமாக கேட்டவன் அவளது கையை மட்டும் விடவேயில்லை.

 

அவன் அப்படிக் கேட்ட விதத்தில் தன்னை கேவலமான பெண்ணாக கருதித் தான் இத்தனையும் செய்திருக்கிறான். அவளுக்குள் அழகாக தளிர் விடத் தொடங்கிய காதலை இப்படி என்ஜோய் என்ற ஒரு வார்த்தையில் கொச்சைப் படுத்தி விட்டானே. அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 

“என்னை அ..அந்த மாதிரி பொ..பொண்ணுனு நினைச்சு தானே அ..அட்வான்டேஜ் எடுத்துகிட்டி..ங்க?”என அவளது குரல் உடைய தொடர்ந்து “ஆமா என்ன சொன்னிங்க எ..என்ஜோய்.. ஆமா அப்போ என்ஜோய் பண்ணேண் இப்போ பிடிக்கலை போதுமா?” என ஆத்திரத்துடன் மொழிந்தவள் அவளது கையை உருவிக் கொண்டு வேகமாக நடந்தாள்.

 

அவள் கூறிய விதத்தில் அவனுக்குப் பேச நா எழாமல் அப்படியே அதிர்ந்து நிற்க அப்போது அவன் சிந்திக்க மறந்து பேசிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தான். அவன் இதுவரை வார்த்தைகளால் வெளிப்படுத்தாத காதலை அவள் புரிந்து கொள்வாள் என நினைத்து வெளிப்படுத்திய விதம் அவனது பிழையே. ஒரு பெண் அவனைக் காதலிக்கிறாளா? இல்லையா? எனத் தெரியாமல் அவன் உணர்வுகளுக்கு அவளை அடிமையாக்கியது பிழையென அங்கணம் உணர்ந்தான். அவளைக் கண்ட நொடி முதலாய் அவனுள் வேறூன்றத் தொடங்கிய காதல் பெரு விருட்சமாய் வளர்ந்திருக்க அவளில்லாமால் அவனால் வாழ முடியுமா என்ன?

 

இவர்களை தூரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்த விக்ரம் அவசரமாக ஓடி அவன் அருகில் வநதான்.

 

“அபி.. ஆர் யூ ஆல்ரைட்? வாட் ஹேப்பன்ட்? இனியா ஏன் அழுதுட்டு போறா?” என அவள் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தவனது தோளை உலுக்கி கேட்டான்.

 

“இரு விக்கி..” என அவள் பின்னால் ஓடியவனை வியந்து நோக்கினான்.

 

“ஒரு வேளை லவ்வ சொல்லிட்டானோ? அதான் இனியா கோவமா போறா போல? இல்லையே அவ சொல்லனாலும் அவளுக்கும் அபியை பிடிச்சிருக்கு.. அப்போ வேற என்ன?” என குழம்பினான் விக்ரம். அபிநவ் இப்படி நடந்து கொள்வது அவனுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு.

 

“ஸ்வீட்டி.. நில்லு” என அவன் கத்த அந்த ஸ்வீட்டி என்ற அழைப்பில் அவள் கால்கள் ஒரு கணம் தடைபட்டு நின்றது. இருந்தும் திரும்பிப் பார்க்க மனமற்றவளாய் மேலும் முன்னேறி நடந்தாள்.

 

தனது அழைப்புக்கு செவி சாய்க்காமல் செல்லும் இனியாவின் மேல் ஏகத்துக்கும் கோபம் வந்தது. ஆயினும் அவளை விட்டுத் திரும்பி வர மனம் வரவில்லை. தன் காதலை எப்படியாவது இன்று புரிய வைத்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் அவளை நோக்கி நடந்தான்.
கண்களில் கண்ணீர் ஊற்றாய் பெருக வேகமாக சென்றவள் மீது ‘கிரீச்’என்ற ஓசையுடன் ஓர் கார் மோத தூக்கி எறியப் பட்டாள்.

 

“ஸ்வீட்டிஈஈஈஈ…” என இவ்வுலகமே உதிரும் தொணியில் கத்தினான் அபிநவ்.

 

இந்தக் காட்சியை கண்ட அதிர்ச்சியில் விழிகள் விரிய அவனது இதயம் ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்தது. மறுநொடி நடப்புக்கு வந்தவன் விழுந்தடித்துக் கொண்டு அவள் அருகே ஓடினான்.

 

தொடரும்…
அன்புடன் அபிநேத்ரா❤

 

 
5 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Nice.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Super update. But y everybody ends the episode always as tension. Be casual pa.sometimes it affects my working system n make hurried to come online n to read story.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Abinethra says:

   Haha thanks da.. I’ll upload next ud tomorrow ok😊


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  Nice ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Abinethra says:

   Thanks da

error: Content is protected !!