Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 15

அத்தியாயம் – 15

பேஸ்மெண்டில் அரை மயக்கத்தில் இருந்த மிருதுளாவிடம் தொடர்ந்து விசாரிக்கும்படி சகாக்களிடம் கூறிவிட்டு தன்னுடைய அலுவலக அறைக்கு வந்த அர்ஜுன் ஹோத்ரா, அனந்த்பூரிலிருந்து அவளை பற்றி வந்திருந்த ரிப்போர்டை பிரித்துப் பார்த்தான்.

 

தன்னை பற்றி மிருதுளா கூறிய அனைத்து விபரங்களும் பொய் என்கிற கூற்றுடன் அதற்கான ஆதாரங்களும் அதில் இணைக்கப்பட்டிருந்தன. அவள் வேலை செய்வதாக கூறிய மருத்துவனை ஊழியர்கள் மற்றும் அவள் தங்கியிருப்பதாக கூறிய விடுதியில் வசிக்கும் பெண்கள் ஆகிய அனைவருடைய ஜாதகமும் அடிமுதல் நுனி வரை ஆராயப்பட்டு ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்தன. அதில் மிருதுளா என்னும் கேரக்டர் எந்த இடத்திலும் வரவில்லை.

 

ஒரு முறைக்கு இரண்டு முறை தன் கையிலிருந்த கோப்பை புரட்டியவன், அனந்த்பூரில் இருந்து கொண்டு இந்த ரிப்போர்ட்டை தயார் செய்து அனுப்பியவனை, ஒட்டு கேட்க முடியாத ஹாட் லைன் போனில் தொடர்பு கொண்டு பல கேள்விகள் கேட்டான்.

 

அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக பதில் சொன்னவன் இறுதியாக, “அந்த பொண்ணு சொன்ன ஹாஸ்ப்பிட்டல் அண்ட் ஹாஸ்டல்… எங்கேயும் யாரும் மிஸ் ஆகல… ஐ திங்க் ஷி ஜஸ்ட் கேவ் சம் ராண்டம் இன்ஃபோ…” என்றான்.

 

அர்ஜுன் ஹோத்ராவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. பிறகு, “எனி அதர் இன்ஃபோ?” என்றான்.

 

“எஸ் சார்… ஐ ஹேவ்…”

 

“என்ன?”

 

“அனந்த்பூர் ஆபரேஷன்ல கடைசில இண்ட்ரூட் ஆனது ஒரு ஆண் இல்ல…” என்றான்.

 

“வாட்!” – சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

 

“எஸ்… அது ஒரு பொண்ணு… அவளோட செல் போன் போலீஸ் கையில சிக்கியிருக்கு. ஆனா எவிடென்ஸ் லிஸ்ட் ரெக்கார்டல இல்ல”

 

“வாட் யு மீன்? வீ நீட் தட் டாம் போன்…” – துரிதமாகக் கூறினான்.

 

“சாரி சார்… நமக்கு முன்னாடி அதை வேற யாரோ கலெக்ட் பண்ணிட்டாங்க”

 

“யாரு?”

 

“ஐ சஸ்பெக்ட்… தட் மஸ்ட் பி பகவான்…” – அந்த பெயரை கேட்டதும் அவன் உடல் விறைத்தது.

 

அதற்கு மேல் அவனிடம் கேட்பதற்கு ஒன்றும் இல்லை… அழைப்பை துண்டித்துவிட்டு நாள் முழுவதும், அந்த பெண் யார்… அவளுடைய அலைபேசியை பகவான் ஏன் கைப்பற்றினான் என்கிற கேள்விகளுக்கான விடையை தேடி ஓடிக் கொண்டிருந்தான்.

 

அனந்த்பூர் ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குழுவை நேரில் அழைத்துப் பேசினான். அவர்களிடம் அந்த மர்ம நபரை பற்றி விசாரித்தான். இப்போதும் அவர்கள் அது ஒரு ஆண் என்கிற ரீதியில் தான் பேசினார்கள். உருவ அமைப்பைப் பற்றி கேட்டபோது, “ஒல்லியா… உயரமா இருந்தான். வாய்ஸ் மட்டும் கொஞ்சம் ஷார்ப்பா… கேர்லியா இருந்தது” என்றார்கள்.

 

‘காட்! எவ்வளவு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டிருக்கிறார்கள்!’ – பற்களை நறநறத்தான்.

 

“டிரஸ் எப்படி பண்ணியிருந்தான்? ஏதாவது நியாபகப்படுத்த முடியுதா?” – தனக்கு தெரிந்த விபரத்தை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவர்களுடைய போக்கிலேயே அடுத்த கேள்வியை கேட்டான்.

 

“எஸ்…. என்னால நியாபகப்படுத்த முடியுது… இட்ஸ் எ கைன்ட் ஆஃப் ஜாக்கெட் வித் ஹூட்…”

 

‘ஓ… ஷி…ட்…’ – தலையை அழுத்த கோதியபடி சேரில் தளர்ந்து சாய்ந்தான்.

 

சந்தேகமே இல்லை… அது அவளே தான்… முதல் நாள்… கட்டிலுக்கு கீழேயிருந்து அவளை வெளியே இழுத்த போது அவள் அணிந்திருந்தது ஜீன்ஸ் வித் ஹூடி ஜாக்கெட் தான்.

 

அவனுக்கு தெரியாமல்… அவனுடைய காரில்… அனந்த்பூரிலிருந்து மஹல்பாட்னா வரை பயணம் செய்தவள் நிச்சயம் சாதாரணமானவளாக இருக்க முடியாது. இது தெரிந்தும் எப்படி அவளை நம்பினான்! எது அவன் கண்ணை மறைத்தது! எவ்வளவு பெரிய பொறுப்பு அவன் தலையில் இருக்கிறது… இப்படி ஒரு கேவலமான பலவீனத்திற்கு இடம் கொடுத்துவிட்டானே! வெளியே தெரிந்தால் அசிங்கம். – தன் மீதே அவனுக்கு கோபம் வந்தது.

 

“லீவ்…” – ஒற்றை வார்த்தையில் எதிரில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு வெகுநேரம் தனிமையில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். அவளுடைய அலைபேசியில் பகவானுக்கு ஏன் அத்தனை ஆர்வம் என்கிற கேள்வி அவனை குடைந்தது. அதற்கான விடையை தேடிய போது அவனுக்கு இன்னும் சில விபரங்கள் கிடைத்தன.

 

அதன் பிறகு தன்னுடைய இடத்தில் நடந்த கொலையைப் பற்றி ஆராய துவங்கினான். வீடு முழுக்க பொருத்தப்பட்டிருக்கும் சர்வைலென்ஸ் கேமிராக்களில் பதிவான வீடியோ காட்சியை திரும்பத்திரும்பப் பார்த்தான். பட்டேலின் மரணம் குறித்து வந்திருந்த ஆய்வறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தான். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து பேஸ்மென்ட்டிற்குச் சென்று மிருதுளாவை விடுதலை செய்தான்.

 

*********************

மிருதுளாவை விடுவித்த பிறகு பேஸ்மென்ட்டிலிருந்து வெளியே வந்த சுஜித் நேராக சுமனுடைய அறைக்கு சென்றான். நேரம் அதிகாலை இரண்டு அல்லது இரண்டரை இருக்கும். கதவு தட்டப்பட்டவுடன் உடனே எழுந்து வந்து கதவைத் திறந்தாள் சுமன்.

 

“தூங்கலையா?” – அவள் முகத்திலிருந்த கலவரத்தை கண்டு சுஜித்தின் புருவம் சுருங்கியது.

 

“என்ன நடக்குது இங்க? மிருதுளாவுக்கு என்ன ஆச்சு?” – பரபரத்தாள்.

 

பதில் சொல்லாமல் அவளை ஒதுக்கிவிட்டு உள்ளே வந்தான் சுஜித். சட்டென்று அவன் கையைப்பிடித்து இழுத்து, “கேட்கறேன்ல… பதில் சொல்லு” என்றாள்.

 

“அவ தப்பிக்க முயற்சி பண்ணினா… பிடிபட்டுட்டா… அவ்வளவுதான்…” – எரிச்சலுடன் சிடுசிடுத்தான்.

 

“அதுக்காகத்தான் அவளை பேஸ்மெண்ட்டுக்கு கொன்டு போனீங்களா?” – ஓரிரு நொடிகள் அவளை வெறித்துப் பார்த்த சுஜித், “அது அர்ஜுன் எடுத்த முடிவு” என்றான்.

 

“அர்ஜுன் பாய்க்கு தெரியாது… பட்டேலோட சாவுக்கும் மிருதுளாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு அவருக்கு தெரியாது” – குரலை உயர்த்தினாள்.

 

சட்டென்று அவள் கழுத்தை பிடித்தவன், அவளை சுவற்றோடு தள்ளி நெறித்தான். கோபம் கனன்ற விழிகளுடன், “ஹௌ டேர் யு… கொன்னுடுவேன்” என்று உறுமினான்.

 

அவனுடைய அதிரடி தாக்குதலில் ஒரு கணம் திகைத்த சுமன் பிறகு சுதாரித்துக்கொண்டு, தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவன் நெஞ்சில் கைவைத்து அவனை பின்னுக்கு தள்ளிவிட்டு, “கொல்லு… கொன்னுடு… ஒரேடியா செத்து தொலஞ்சுடறேன்” என்று ஆத்திரத்துடன் கத்தினாள்.

 

அவனுடைய பதட்டம் அதிகமானது. சட்டென்று வாசல் பக்கம் திரும்பி, யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்தபடி, “ஷ்… கத்தாதடி…” என்று தாழ்ந்த குரலில் கூறிவிட்டு, பாய்ந்துச் சென்று கதவை மூடி தாழிட்டான்.

 

“இட்ஸ் அவர் மிஸ்டேக் சுஜித்… நீ அவளை சேவ் பண்ண ட்ரை பண்ணியிருக்கணும்” – வருத்தத்துடன் கூறினாள். மனசாட்சி அவளை கொத்திப் பிடுங்கியது…

 

அவளுடைய வருத்தம் சுஜித்திற்கு கோபத்தை தான் வரவழைத்தது. “என்னோட வேலையை எப்படி செய்யணும்னு நீ எனக்கு சொல்லித்தராத” என்றான் கடுப்படித்தான்.

 

உடனே ரௌத்திரமான சுமன், “எக்ஸ்கியூஸ் மீ… உன்னோட வேலையில நானும் பங்கெடுத்திருக்கேன்… நீ திருட்டுத்தனமா பேஸ்மெண்ட்டுக்குள்ள நுழைய நா ஹெல்ப் பண்ணியிருக்கேன்… சர்வைலென்ஸ் கேமிராவை உனக்காக ஒன்றரை மணிநேரம் நான் ஹேக் பண்ணியிருக்கேன். டோன்ட் யு ரிமெம்பர் தட்?” என்று கொதித்தாள்.

 

“கா…ட்…!!! சும…ன்…!!!” – வெறுப்பும் இயலாமையுமாக தலையை கோதினான் சுஜித்.

 

“விசாரிக்கத்தானே போன? ஏன் அவனை கொன்ன?”

 

“அது என்னோட இன்டென்ஷன் இல்ல… லேஸாதான் தட்டினேன்… அவன் இவ்வளவு ஈஸியா செத்துடுவான்னு நா என்ன கனவா கண்டேன்? தட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட்…”

 

“ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட்…?”

 

“எஸ்… ஜஸ்ட்… ஆன்… ஆக்ஸிடென்ட்…” – அழுத்தமாகக் கூறினான். அவனை எரித்துவிடுவது போல் முறைத்தாள் சுமன். அவன் அதை கண்டுகொள்ளாமல் துப்பாக்கி அலைபேசி ஆகியவற்றை எடுத்து அதற்கான இடத்தில் வைத்துவிட்டு குளியலறைக்குள் செல்ல எத்தனித்தான்.

 

அவனை இழுத்துப் பிடித்து வைத்து, “எது எப்படியோ… அவன் உன் கையாலதான் செத்தான்…” என்று அவனை குற்றம் சாட்டினாள் சுமன்.

 

“ஆமாம்… அதுக்கு என்ன இப்போ? அர்ஜூன்கிட்ட போயி நான்தான் பட்டேலை கொலை செஞ்சேன்… எனக்கு தண்டனை குடுன்னு கேட்க சொல்றியா?” – வெகுண்டான்.

 

அவனுடைய ஆக்ரோஷம் சுமனை வாயடைக்கச் செய்தது. சற்று நேரம் அவனை வெறித்துப் பார்த்தவள், “அவ பாவம்…” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

 

கண்களை மூடி… ஆழ மூச்ச்செடுத்து கோபத்தை கட்டுப்படுத்தியவன், “அவளை ரிலீஸ் பண்ணியாச்சு… ஷி இஸ் பிரீ நௌ…” என்றான் வறண்ட குரலில்.

 

“வாட்!” – வியப்பும் ஆனந்தமுமாக அவனைப் பார்த்தாள் சுமன்.

 

“ட்ரு…” – என்று முணுமுணுத்துவிட்டு தளர்ந்து கட்டிலில் அமர்ந்தான். அவளால் ஏதோ பெரிய ஆபத்து வர போகிறது என்கிற எண்ணம் அவனுக்குள் இருந்துக் கொண்டே இருந்தது.

 

சுஜித்தின் முகவாட்டத்தைக் கண்டு, “நீ… நீ பிரச்சனையில இருக்கியா?” என்றாள் பயத்துடன்.

 

அவ்வளவு நேரம் குற்ற உணர்ச்சியுடன் மிருதுளாவிற்காக கவலைப் பட்டுக் கொண்டிருந்தவளை, இப்போது சுஜித்தின் மீதுள்ள அக்கறை அச்சுறுத்தியது.

 

“இல்ல…” – மறுப்பாக தலையசைத்தான்.

 

“பின்ன என்ன? ஏன் டல்லா இருக்க?”

 

சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன், “அவ மேல தப்பு இல்லைன்னு இன்னும் ப்ரூவ் ஆகல…” என்றான் இறுகிய குரலில் கூறினான்.

 

அதுவரை கவலையும் கலவரமுமாக இருந்த சுமனின் முகம் சட்டென்று மலர்ந்தது.

 

“என்ன சொன்ன?” – குடுகுடுவென்று ஓடிவந்து அவனுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

 

அவன் பதில் சொல்லாமல் அவளை முறைத்தான். அவளுடைய மகிழ்சசி அவனை எரிச்சல் படுத்தியது. ஆனால் அதை பற்றியெல்லாம் அவள் எப்போது கவலைப்பட்டிருக்கிறாள்.

 

“மிருது இன்னசென்ட்னு ப்ரூவ் ஆகறதுக்கு முன்னாடியே அர்ஜுன் பாய் அவளை ரிலீஸ் பண்ணிட்டாரா!!!! வா…வா…வாவ்…!!!” என்று மலர்ந்த புன்னகையுடன்… அண்ணார்ந்து… கண்களை மூடி… கைகளை விரித்து… காதல் மோடிற்கு சென்றாள்.

 

அவளை கடுப்புடன் பார்த்த சுஜித், “ஷி இஸ் நாட் எ கோர்த்தா கேர்ள்…” என்றான் எச்சரிக்கும் விதமாக.

 

“சோ வாட்? அர்ஜுன் பாய்க்கு பிடிச்சிருக்கு… வேற என்ன வேணும்?” என்றாள் துள்ளலான.

 

“அதுதான் பிரச்சனையே… இந்த கண்மூடித்தனமான கருமம் நம்ம எல்லாரையும் காலிப் பண்ண போகுது” என்றான்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அறை கதவு தட்டப்பட்டது.

 

‘யார் இந்த நேரத்துல!’ – இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

 

“நா பார்க்கறேன்” – சுஜித் எழுந்துச் சென்று கதவைத் திறந்தான்.

 

வெளியே இரண்டு பாதுகாவலர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

 

“சுமன் எங்க?” – வந்திருந்த இருவரில் ஒருவன் கேட்டான்.

 

“என்ன விஷயம்?” – அதட்டினான் சுஜித்.

 

“பாஸ் கூட்டிட்டு வர சொன்னார்”

 

‘இந்த நேரத்துலேயா!’ – சுஜித்தின் புருவம் சுருங்கியது.

 

“என்ன விஷயம்னு தெரியுமா?” என்றான். அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் அந்த கேள்வியை கேட்டான். தனக்கென்று வரும் பொழுது அனைத்தும் மறந்துவிடும் என்பதற்கு அவனும் விதிவிலக்கல்ல… அதோடு மடியில் வேறு கணம் இருக்கிறதே!

 

சுஜித் சற்று முன் கேட்ட கேள்விக்கு, “தெரியல…” என்று இழுத்தான் பாதுகாவலன். அவன் இழுத்த விதமே அவளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்திவிட சுஜித் பதட்டமானான்.

 

சட்டென்று திரும்பி அவளை பார்த்தான். அவன் முகத்திலிருந்த கலவரத்தைக் கண்டு அவனிடம் நெருங்கிய சுமன், “எனிதிங் ராங்?” என்றாள்.

 

“நோ… நத்திங்… நத்திங் ராங்…” – அவனுடைய வாய்தான் அப்படி சொன்னதே ஒழிய முகம் பேயறைந்தது போல் இருந்தது.

 

“கம் வித் அஸ்” – சுமனிடம் கூறினான் பாதுகாவலர்களில் ஒருவன்.

 

“எங்க?” – விழித்தாள். சட்டென்று அவள் கையை பிடித்தான் சுஜித்… அவன் பிடித்த பிடியின் இறுக்கத்தில் அவள் கை வலித்தது. உள்ளே இருக்கும் பதட்டம் அவன் முகத்தில் தெரிந்தது.

 

“நத்திங் வில் ஹாப்பன் டு யு… ஐ வோண்ட் லெட் இட்…” – ‘உனக்கு எதுவும் ஆகாது… ஆக விடமாட்டேன்’ என்றான் உறுதியாக. உணர்ச்சி மிகுதியில் அவன் குரல் கரகரத்தது.

 

 
15 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reen says:

  Wait panna mudila…double ep potrunga ma


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Daisy Mary says:

   intha deal rombave nalla aaaaaa irukkuuuuuu……


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reen says:

    Ellam perasai than… 6 days aachu … 1 ep ke valiya Kanom


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anjali Suresh says:

  Acho sis adutha epi eppo poduvinga???


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Very sorry pa…. epi type panni mudikkala… konjamtime edukkudhu… 🙁


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reen says:

  Can’t control ma .. please upload atleast on alternate days


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Umamanoj says:

  Hack senjathu therinjuduchaa


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Always rocking episode pa. But try to give daily update. Just a request n take ur own time.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  Super ud sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  PAPPU PAPPU PAPPU PAPPU says:

  super ud ma


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Daisy Mary says:

  டேய் சுஜித் உன் ஆளுக்கு ஒண்ணுனா இப்படி பதறுத… மிது னா உனக்கு cheap ஆ போய்ட்டாளா…

  அவளை அந்த பாடு படுத்தினியே டா…
  நாசமா போறவனே….
  உருப்படுவிய நீ….

  சரியான fraud பய நீ…

  சுமன் நீ கூட வா… இப்படி…
  மிது க்கு இப்படி நடக்க…… நீ நல்லா தூங்கிட்டு இருக்க…
  இதுக்கெல்லாம் சேர்த்து நீயும் அனுபவிப்ப மகாராணி…

  அச்சச்சோ.?இனி என்ன நடக்க போகுதோ….

  ஏ…. கதை எழுதுற தாயி…. சீக்கிரமே அடுத்த பகுதியை போட்டிருமா….
  தாங்க முடியல….

  காத்திருந்து காத்திருந்து…..
  மனது வாடுதம்மா…..
  try to post quickly….,


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Ganeshan says:

  Nice ud sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anjali Suresh says:

  Nenachen in sujith than irukum nu. Visarana panrathuku ethuku thiruttu thanama cctv hack lam panni ulla ponum. Ivan than antha black sheep ah?. Pavam intha paaviyala suman mattikittale.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Today night next ud tharengala


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Oh god… Enna than nadakkuthu… Mithu spy ahh illaiya nu sollave mudiyalaiye… Achchoo suman sujith enna aaga poragaloo… Semma update nithya

You cannot copy content of this page