Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள் 33

                 அத்தியாயம் 33

 

நேஹா சென்றே பிறகே தான் சற்று அசுவாசம் அடைந்தவன் இருக்கையில் அமர்ந்தவாரே தன் தலையை பின்னுக்கு சாய்த்து கண்களை முடினான்’ பேபி …. என்ன மன்னிச்சிடு…. பேபி என் வாழ்க்கை திசை மாறும்போதே நீ வந்திருக்கலாம் பேபி’ நான் செய்த தவறுகளேனும் எனக்கு புரிந்திற்கும்… பலவாறு யோசித்தவன் இன்றைக்கு என்ன நடந்தாலும் சரி பேபி… 

 

நான் உன்னிடம் மறைத்த உண்மையை சொல்லியே தீருவேன் என் குற்றவுணர்சி என்னை நாளுக்கு நாள் கொல்கிறது பேபி… உன் அருகில் நெருங்கும் போதெல்லாம் என் மனம் என்னை கேள்வி கேட்கிறது நீ செய்துக் கொண்டிருப்பது தவறென்று..அவளது மாசுமறுவற்ற காதலுக்கு தான் செய்து கொண்டிருப்பது துரோகம் என்றே நினைத்தான்…

 

தனக்குள் யோசித்தவன்  அவள் தன்னுடன் வாக்கு வாதத்தில் இறங்கினாலும் 

 

கோபத்தில் ஏதாவது பேசினாலும்

 

ஏன்? 

 

நாளு அடிக்கூட அடித்தாலும் கவலையில்லை… ஆனால் அவள் என்னை மன்னிக்க வேண்டுமென்று வேண்டினான் அந்த பிடிவாத கணவன்

 

 மன்னித்து என்னை ஏற்றுக்கொள்வாயா பேபி….எதற்கும் துணிந்த  மனதுடன் தன்னை தயார் செய்ய முயன்றான்….

 

அவனை விட்டு செல்வதென்று முடிவெடுத்த மித்ரா ஒன்றுமட்டும் மறந்துவிட்டிருந்தாள்… தன் கணவன் கூறிய வார்த்தைகள்’ பேபி நீ எந்தளவுக்கு என்மீது அன்பு,காதல் நம்பிக்கை வச்சிருக்கியோ… அதே ஈடுக்கு எனக்கும் உன்மேல் காதல் அன்பு அளவுக்கு அதிகமாவே இருக்கு…அந்த நம்பிக்கை என்னைக்கும் என்மேல் நீ வைக்கணும்’ அந்த நம்பிக்கையை அவன் மனைவி இந்த கணம் உணர தவறினாள்…

 

அவனுக்கு தான் பதிலளிக்கும் விதமாக தன்னவனுக்கு தான் அளித்த  வாக்குறுதியையும் சேர்த்தே மறந்திருந்தாள் உங்களை விட்டு நான் பிரியேன் என்றவளைப் பார்த்தவன் ‘ இல்ல பேபி அப்படி ஒரு கட்டாயம்      வந்தா??? ‘ அவளுடன் பேசியபடியே நோக்கினான் ஆதி….

 

 உங்கள விட்டு நான் எப்படி பாவா தனித்திருப்பேன் என்று கூறியவளை பார்த்தவன் ‘ இதை நீ என்னைக்கும் மறக்காமல் இருக்கணும் பேபி’ 

 

அவனது பேபியோ அவன் சொன்னதையே நினைவில்லாமல் இருக்க இதில் எங்க தான் கூறிய வார்த்தை நினைவிலிருப்பது…. (ஸ்வக தான்)

 

 கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்ற முடிவுடன் தன் உடைமைகளை எடுத்து வைத்தவளின் கண்கள் அவர்கள் அறையில் இருக்கும் ஆளுர கண்ணாடி அளவிற்க்கு உயர்ந்து நின்று அழகாக சிரிக்கும் தன் கணவனின் பிம்பத்தை பார்த்தவள் அதற்கு அருகில் சென்று

‘பாவா நான் உங்க வாழ்க்கைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவ தான் … தேவையில்லாம உங்க வாழக்கையில் வந்து உங்க நிம்மதியை குலைச்சிட்டேன் இல்ல…. அந்த நேஹாவை கல்யாணம் பன்னிருந்தால் நீங்க சந்தோஷமா இருந்திருப்பிங்க இல்லையா …. இப்படி நடிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது’இதை சொல்லும் போதே அவள் இதயம் இரண்டாக பிளப்பதுப் போல் வலி ஏற்பட்டது… 

 

கண்களில் நீர் உடைப்பெடுத்து பெருகி நின்றவள் இனியும் உங்கள் வாழ்க்கைக்கு பாரமாக நான் இருக்க மாட்டேன்…

யாரென்று தெரியாமல் வந்தவள் தான் இடையிலே யாருக்கும் தெரியாமல் விலகி கொள்வதே நல்லது என்று மனம்தூற்ற மீண்டும் தன் கணவன் படத்தில் பார்வையை பதித்த படியே’ பாவா இனிமே உங்கள நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோ? 

 

ஒரே ஒரு தடவ… கடைசியா பாவா… உங்க அனுமதி இல்லாமல் எனக்கு’ என்றவள் மேலும் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க அவனே நேரில் இருப்பதுப்போல் உணர்ந்து அவன் பிம்பத்தின் உயரத்திற்கு எம்பியவள் அவன் இதழில் முத்தம் வைத்தாள்…

 

ஆனால் தன்னால் கொடுக்க முடிந்ததே தவிர அங்கு மறுபிரதபலிப்பு இல்லாமல் போனது… பின்பு தன் வயிற்றை நோக்கி குனிந்தவள் தனக்குள் இருக்கும் சிசுக்களை தடவிக் கொடுத்தவாரே’ பாவா நீங்க எனக்கு கொடுத்தெல்லாம் நான் திரும்பி கொடுத்திட்டே போறேன் ஆனா ரெண்டு பொருளத்தவிர ஒன்னு நீங்க கட்டுன தாலியும் என்…. என்கிட்ட நீங்க ஆசையா கேட்ட குழந்தைகளை மட்டும்’ நான் உங்கள் அனுமதியின்றி எடுத்துச் செல்கிறேன் பாவா என்றவள் தன்னுடைய உடைமைகளுடன் சேர்த்து தன்னவனின் புகைப்படத்தையும் எடுத்து வைத்தாள்….

 

வீட்டை விட்டு வெளியேறியவள் அங்கிருந்த  ஒரு ஆட்டோவை பிடித்திக் கொண்டு ‘எஃமோர் ஜங்க்ஷன்’ சந்திப்பிற்கு வந்து இறங்கினாள்… எங்கு செல்லவேண்டும் எதுவும் யோசியாமலே ஒரு வேகத்தில் வந்துவிட்டாள்…

 

அங்கு போடப்பட்டிருந்த கல் இருக்கையில் தன் உடமைகளுடன் சமைந்து வைத்த கல் சிலைப்போல் இறுகி அமர்ந்திருக்க…  எங்கு செல்வதென்று நாத்தியற்றவளாக  தன்னை கருத்தியவள் தன்னை தத்தெடுத்த இடத்திற்கே செல்ல முடிவெடுத்தாள்’கேரள மாநிலம் திரிச்சூரில் அமைந்திருக்கும் நாராயண சர்மா தபுவனம் ஆஸ்ரமத்திற்கு செல்ல முடிவெடுத்தவள் பயணச்சீட்டை வங்கிக் கொண்டு…. 

 

 ரயிலில் ஏறி அறந்து கண்களை மூடியப்படி இருக்க இன்னும் சற்று நேரத்தில் தனக்கும் தன் கணவனுக்ககுமான உறவு இல்லை முறிந்துவிட்டது என்று தோன்ற கண்கள் கண்ணீரை தத்தெடுத்தது….

 

என்ன செய்தாலும் அவன் நினைவு அவள் அடிமனதில் ஆழ புதைந்திருப்பதை எண்ணியவளாக  தன்னவனின் நினைவு என்றும் தன்னை விட்டு விலகாது என சாத்தியக்கூறாக கருத்தியவள் ‘ பாவா உங்க அளவுக்கு எனக்கு நடிக்க வரலையே நான் என்ன செய்யட்டும்…. எப்படி பாவா என்ன ஏமாத்த உங்களுக்கு மனசு வந்தது…ஒருவேளை அவள  மாதிரி நானும் பகட்டும் பொய்யுமாய் இருந்திருந்தாள் என்னையும் என் காதலையும் உணர்திருப்பிங்களா’ மீண்டும் மீண்டும் அவனிடம் வெட்கமின்றி ஓடிச் செல்லும் மனதை அடக்கும் வழியரியாது…தனக்குள் சிரித்துக் கொண்டவள் காதலே இல்லை என்ற பட்சத்தில் அவனிடம் தன் மனதின் காதலை எதிர்பார்ப்பது முட்டாள் தனமாகவே பட்டது….

 

என்ன செய்வது மனது ஒரு குழந்தைப் போலும்… அது அடம் பிடிகத்தான் செய்யும் முதலில் கடினமாக இருப்பது பழகிவிட்டால் சிரமம் தெரியாதல்லவா…. உயிரிருந்தும் உயிரில்லா அவன் நினைவுகளுடன் தன் பயணத்தை மேற்கொண்டாள் மித்ரா….

 

                

அவர் என்மேல் காதலை வைக்கவில்லை என்றால் அப்படியே இருக்கட்டும் ஆனால் நான் அவரின் மீது அளவு கடந்த காதலை சுமந்திருப்பது உன்மையே ஆதற்கு சாட்சி இதோ என்று தன் வயிற்றில் இருக்கும் பிள்ளைகள் என நினைத்தவள் இதழ்களில் கீற்று புன்னகை தோன்ற இந்த ஜென்மத்தில் இந்த பிள்ளையின் சுகம் போதும் பாவா நான் வாழ்ந்து விட்டேன் பிள்ளைகளை பெற்று உங்களிடம் தந்துவிட்டாள் என் பிறவிக் கடன் முடிந்தது என்று கூறியவள் தான் உயிருடன் இருப்பதே பிள்ளைகளுக்காகத்தான் என்று மறைமுகமாக தெரிவித்தாள்…

 

அவனே தன்னை வெறுத்தாலும் தன்னால் தன்னவனை தன் உயிரில் கலந்தவனை வெறுக்க முடியாது என்று நினைத்தவளின் மனம் பாறைப்போல் இறுகியது … 

 

பாறைக்குள் நீரூற்று இருப்பது இயற்கையின் வரம் அதேப்போல் நீரூற்று இருக்கும் பாறையை உளுக்கி  காதலென்னும் நீரை பருக செய்திடுவான அவள் காதலுக்கு சாட்சியானவன்!!!

 

      —” உயிரில்லா உன் நினைவுகள் தான் எனக்கு ஊக்க மருந்து”

 

**************************

 

 அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தவனின் மனம் என்றும் மில்லாததாய் இன்று மிக படப்படப்பாக காணப்பட்டது  ஏதோ விபரீதம் நடக்கப்போவது  உணரந்தவன் நேஹா மற்றும்  தினேஷின் நடவடிக்கைகளை அறிந்து சற்று ஆசுவமடைந்தான்… மித்ராவின் எண்ணிற்கு அழைத்தவன் அது எடுக்காமல் அணைக்கப்பட்டிருப்பதை கண்டு பொறுமையற்றவனாய் வீட்டிற்கு விரைந்தான்…

 

 பாவம் அவன் மனைவி அவனை விட்டு பிரிந்து செல்வாள் என்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை …. 

 

வீட்டின் வரவேற்பில் ஆதியின் வருகைக்காக காத்திருப்பத்துப்போல்…. தன்னை எதிர் நோக்கி  வந்துக்கொண்டிருந்த தன் சிற்றன்னை தீபவும், வெங்கட்ராமனும் வந்துக் கொண்டிருக்க அவர்கள் கேட்க வேண்டிய கேள்வியை இவன் கேட்டு வைத்தான் ‘ சித்தி… மித்ரா எங்க வீட்டுலதான இருக்கா…. போன் ஏன் எடுக்கல…’ ஏதேனும் பிரச்சனையா என்று முடிப்பதற்குள்

 

‘ஆதி கண்ணா என்ன சொல்ற மித்ரா உன்கூட இல்லையா…. நாங்க எல்லாரும் உன்கூட தான் இருப்பானு நினச்சு இருந்தா நீ என்ன சொல்ற…

 

‘ ஐயோ கண்ணா இருடக்கிட்டே வருதே வாயும் வைருமா இருக்கா’- தன் பங்கிற்கு கமலம்மாளும் அவள் எங்கே என்று கேட்க…

 

கொஞ்சம் பதட்டமடைந்த ஆதி வேக எடுக்கலை எடுத்து வைத்து தங்கள் அறைக்கு சென்றான்…. ஆனால் அங்கு தன் மனைவி இருப்பதின் சுவடே தெரியாமலிருக்க தங்கள் அறையை அலசியவன் அங்கிருந்த  ஆஃபீஸ் அறை மற்றும் குளியல் அறையைக் கூட விடாமல் முழுவதும் அலசினான்  என்ன என்று புரியாமல் குழப்பத்தின் ஊடே தளர்ந்த நடையோடு படி இறங்கியவன் அங்கு போடப்பட்டிருக்கும்  சோபாவில் தொப்பென்று அமர்ந்தவனின் நிலையைக் கண்டு சற்று பதறிப்போன தீபா ‘ கண்ணா உன்ன பாக்க தான… உனக்கு சமைத்து எடுத்திட்டு வந்தா ஆதி’ …. அவர் பேச்சில் தலையும் புரியாமல் காலும் புரியாமல் விழித்தவன்

 

‘ என்ன சித்தி சொல்றிங்க’???

 

‘ஆமா ஆதி உனக்கு பிடிக்கும்னு எல்லாத்தையும் தயார் பண்ணி சமைத்து எடுத்து கொண்டு சென்றாள்’- வெங்கட்ராமன் கூறியதை பார்த்தவன் 

 

‘ அவ ஆஃபீஸ்க்கு வரலையே.. நான் அங்கத்தான் தானே இருந்தேன்’ என்று விளக்கிக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ புரிய சட்டென்று ஆஃபீஸ் காவலாளிக்கு அழைத்து மத்திய நேரம் மித்ரா அங்கு வந்ததாக ஏதேனும் தகவல் கிடைக்காதா என்று ஏங்க  அவனை ஏமாற்றாது  காவலாளி மித்ரா வந்ததை கூற முற்றிலுமாக நிலைகுலைந்தான்…  அவனின் தளர்ந்த தோற்றத்தை கண்டவர்கள் கலங்கிப் போய் பார்திருந்தனர்….

 

எங்கு சென்றிருப்பாள்…. அவளுக்கு இங்க எந்த இடமும் தெரியாதே ஓருவேளை அவளை யாரேனும் கடத்தி சென்றிருக்க கூடுமா …. ஏனனில் அவன் தொழில் வட்டாரத்தில் அவனுக்கு எதிரிகள் அதிகம் ஆனால் இப்படி அவன் மனைவி மேல் கைவைக்கும் அளவிற்கு யாருக்கு தைரியமிருக்கும் என்று ஒவ்வென்றாக யோசித்தவனுக்கு தினேஷின் நியாபகம் வந்தவனாக…

 

கோபம் கொப்பளிக்க முகமெல்லாம் ரத்த வெல்லத்தில் சிவக்க தகிக்கும் தீக்குள் முழுகி எழுந்ததுப் போல் தேகம் முழுவதும் இறுகி நரம்புகள் புடைக்க தன் எச்சரிக்கையும் மீறி அவன் இப்படி செய்திருக்கிறான் என்றாள் அவனுக்கு நான் யாரென்று காட்ட வேண்டாமா அன்று ஆதியை சந்தித்தவன்  சீண்டுவதற்காக அவன் மனைவியை பற்றி பேசியதை  இன்று அவனுக்கே எதிர்வேனையாக அமைந்தது…

 

ஆதியின் மனதோ சிறிதும் சந்தேகத்திற்கு ஆட்கொள்ளாமல் வேறு கோணத்தில் யோசித்தவன் தன் மனைவி அதுவும் தான் நேஹாவுடன் பேசிக்கொண்டிருந்த உரையாடலை கேட்டிடு தன்னை விட்டு  சென்றிருப்பாள் என்று அவன் சிந்தைக்கு எட்டாமல் போனது அவன் துர்தஷ்டமே…

 

தனது ஆற்றல் கூறின் திறனை பயன்படுத்தி சீக்ரேட் கிரைம் பிராஞ்சுக்கு அழைத்தவன் தன் மனைவி காணவில்லை என்று கூறியவன் இந்த விஷயம் வெளியில் கசியாமல் ரகசியமாக தேட வேண்டும் என்று கூறியவன் தினேஷ்  மிக சந்தேகமாக இருக்கவும்  அவனை கைதி செய்யுமாறு கூறினான்…

 

ஏற்கனவே தன் காம்பேனிகளின் ஷார்சஸை சட்டப்படி திருடிய குற்றத்திற்கான பலமான சாட்சி இருப்பதால் அதை பயன்படுத்தி உடனடியாக கைது செய்யுமாறு கூறினான்…

 

ஆதியின் உத்தரவின் படி சீக்ரெட் உளவுத்துறை இரவு நேரமின்றி கூட பாராமல் தங்கள் பணியை செவ்வனே செய்தனர்…

 

******************************

சலனங்கள் மனதினை அறித்துக்கொண்டிருக்க தன் பயணத்தை மேற்கொண்டவள் அதிகாலை 6 மணி அளவில் கேரள மாநிலம் திரிச்சூரை அடைந்தவள் தான் தங்கியிருந்த ஆஸ்ரமத்திற்கு சென்றாள்… அவளுக்கு நன்கு தெரியும் இங்கு வருவோர் வாழ்வை தொலைத்து விதியால் கைவிடப்பட்டோர் என்று அனைவருக்கும் அடையாளமிருக்க இதில் தான் எந்த ரகம் 

நம்பிக்கையினால் கைவிடப் பட்டவளா??? இல்லை 

விதியின் சதிவசத்தால் வந்து சேர்ந்தவளா???

 

‘ அவர் என்னை வேண்டாமென்று கைவிடவில்லையே  நானா தானே உறவு வேண்டாமென்று வந்தேன்… இதில் அவர்மேல் என்ன குற்றமிருக்கு’ அவள் மனமோ தன்னவனை விட்டு கொடுக்காமல் அவளுடன்  மல்லுகட்டியது…

 

அவர் மேல் குற்றமே இல்லைதான்???

ஆனால்

 நீ ஏன் அம்மா விலகி வந்தாய்???  அவள் மசாட்சி அவளை எதிர் கேள்வி கேட்க…

பதிலளிக்க முடியாது என்று எண்ணியவள் இப்போது இருக்கும் என் கேள்விக்கு ஒரே பதில் தெரியவில்லை என்று மட்டுமே பதில்… 

 

அஷ்ரமத்திற்குள் நுழைந்தவள் நேராக அம்பிலி இருக்கும் இடத்திற்கு சென்றாள்…

 

‘அம்பிலி அம்மா இங்க வாங்களேன்(அம்பிலி அம்மே தயவயி இவ்விட வன்னு) ‘

 

‘குட்டி இவ்விட ஆன’ தன்னை மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டவள் அம்பிலிஅம்மாவை அழைக்க… மித்ராவின் குரலை கேட்ட வண்ணம் விரைந்து வந்தவர்…

 

மித்ரா கண்ணு எப்படி இருக்க(‘ மித்ரா எண்ணினே இருக்குன்னு’?) 

 

‘கண்ணு மாப்பிள்ளை இல்லாம தனியாவா வந்திருக்க  ‘ என்றவரை பார்த்து 

 

‘ஆஹா அம்பிலிமா… வந்ததும் வராததும் உங்க சி ஐ டி கேள்விய கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா … என்ன கேள்வி கேட்கறது  இருக்கட்டும் நீங்க எப்படி  இருக்கீங்க… நம்ப ஆஷ்ரமம் எப்படி இருக்கு என மித்ரா விசாரிக்க

 

‘ நான் நல்லார்கேன் மித்ரா கண்ணு நீ எப்படி இருக்க உன்ன பாத்து எவ்ளோ நாளாச்சு.. ஆஹான் கண்ணு … நான் இப்பதான் பாக்குறேன் எத்தினி மாசம் கண்ணு’ அவர் விசாரிப்பில் உருகியவள் கடைசியாக குழந்தைகளை பற்றி விசாரிக்க வெட்கம் மேலோங்க முகம் சிவந்து நாலு முடிஞ்சி அஞ்சு மாசம் என்று கூறியவள் கலங்கும் தன் கண்நீரை வெகுவாக அடக்கியவள் தன் அன்னைக்கு இணையானவரை வருத்த இயலாது தன்னை முயன்று சமாளித்தவள் ‘ எனக்கு என்ன அம்பிலி அம்மா… பாருங்க நான் ரொம்ப நல்லார்க்கேன்… உங்க மருமகன் என்னை நல்லா பார்திக்குறார்’ என்றவளை சந்தேகமாக பார்த்தவர்…

 

‘கண்ணு உன் புருஷனும் நீயும் சண்ட சச்சரவு  இல்லாம சந்தோஷமாதான இருக்கிங்க’… இல்லை சண்டைப் போட்டுக்கொண்டு வந்துதிட்டியா கண்ணு’ தன் மனதில் இருப்பதை படிப்போதுப் போல் கேட்டுவிட…

 

தன் அச்சத்தை தவிர்த்தவள் ‘ அம்பிலிமா என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது  சண்ட காரி மாதிரி தெரியுதா… அவருக்கு இங்க கொச்சின்ல ஒரு இருபது நாள் வேலை அதுனால என்ன தனியா பாத்துக்க கஷ்டம்னு நினைச்சி  அதான் என்ன இங்க விட்டுட்டு அவர் வேலைக்கு போய்ட்டார் என்று நா கூசாமல் பொய் கூறினாள்….

 

இன்னும் அவளை நம்ப முடியாத பார்வையை வீசியவரை கண்டு ‘ பாத்தீங்களா இன்னும் என்மேல் உங்களுக்கு நம்பிக்கை வரல ‘ என்று முறுக்கி கொள்ள…

 

இவள் கூறுவது உண்மையா பொய்யா என்று கணக்கிடமுடியாமல் தெள்ள தெளிவாக சமாளித்தவளைக் கண்டு அந்த கருணையுள்ளம் படைத்தவள் தன்னை நாடி வந்தவளை ஏமாற்ற மனமில்லாமல் அன்போடு அரவனைத்துக் கொண்டார்…

 

எத்தனை நாள் இந்த பொய்யை மறைப்பது  என தெரியவில்லை அவளுக்கு…. செல்வோம் விதியின் விளம்பு வரை செல்வோம் என்று முடிவெடுத்தாள்….

 

 நன்றி தோழமைகளே 

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

 திவ்யபாரதி

 

 
3 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Saravanan says:

    kadaisi chinna thanamana poiya solli eppadi itha valakka poringa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Nice as usual….. konjam tragedy than….

You cannot copy content of this page