நிழல்நிலவு – 16
11555
21
அத்தியாயம் – 16
பாறையில் செதுக்கிய சிற்பம் போல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவனை சூழ்ந்திருந்த காற்றில் வெப்பம் சற்று கூடியிருந்தது. அந்த அறையில் கவிழ்ந்திருந்த கனத்த மௌனத்தை உடைத்துக் கொண்டு ‘தட்..தட்…’ – ‘தட்..தட்…’ என்று ஓசை எழுப்பியது சுமனின் இதயம். அவள் கண்களில் கலவரம் தெரிந்தது.
“சொல்லு… என்ன விஷயம்?” – அர்ஜுனின் பார்வை சுஜித் சிங்கை துளைத்தது.
“சுமனை கூப்பிட்டிருந்தியே…”
“ஆனா நீ சுமன் இல்ல… தென் வொய் ஆர் யு ஹியர்?”
“ம்ம்ம்… வந்து… கார்ட்ஸ் வந்தப்போ நா… சுமன் கூட பேசிட்டிருந்தேன்… என்ன… அர்ஜுன்? எனிதிங் ராங்?” – அவன் பேச்சில் தடுமாற்றம் இருந்தது.
அர்ஜுன் ஹோத்ராவின் புருவம் உயர்த்து… “ஹும்ம்ம்… எஸ்…” என்று ராகம் போட்டபடி எழுந்தவன், மேஜையை சுற்றிக் கொண்டு சுமனிடம் மிக நெருக்கமாக வந்து, “இன்னொரு ஓநாய் சிக்கிக்கிச்சுன்னு நினைக்கறேன்” என்றான். அவன் பார்வை அவள் கண்களை ஊடுருவியது. முதுகெலும்புக்குள் சிலீரென்று உணர்ந்தாள் சுமன். கால்கள் வலுவிழந்து நடுங்கியது. ‘என்ன பார்வை இது!’ – அதுவரை சகோதரன் ஸ்தானத்தில் இருந்த அர்ஜுன் ஹோத்ரா இப்போது முற்றிலும் வேறு பரிமாணம் எடுத்திருந்தான்.
“வ்வ்…வ்வாட்! வாட் ஆர் யு…” – “ட்ரு…” – அவள் கண்களிலிருந்து பார்வையை விலக்காமல் சுஜித்தை இடைவெட்டியவன், நிதானமாக அவனைத் திரும்பிப் பார்த்தான்.
அவனுடைய பார்வை, பேச்சு, உடல்மொழி எதுவுமே சாதாரணமாக இல்லை. இந்த அர்ஜுன் எப்போது வெளிப்படுவான் என்பதை நன்கு அறிந்திருந்த சுஜித், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தான்.
“இல்ல… இல்ல அர்ஜுன்… நீ ஏதோ தப்பா…” என்று ஏதோ சமாதானம் கூற வாயெடுத்தான். ஒற்றைவிரலை உயர்த்தி அவனை தடுத்தவன், “ஐ வில் டேக் யுவர் அட்வைஸ் லேட்டர்… கிளம்பு… எனக்கு சுமன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு… ஜஸ்ட்… ஒன் சிம்பிள் கொஸ்டின். ஆன்ஸர் கிடைச்சதும் அனுப்பி வைக்கிறேன்…” என்றான்.
சுமனின் கை தன்னிச்சையாக சுஜித்தின் கையை பற்றியது. அவள் பார்வை பீதியுடன் அர்ஜுனின் முகத்தில் படிந்திருந்தது. அவன் சிரித்தான். அந்த சிரிப்பில் அழகில்லை… குரோதமிருந்தது.
“அர்ஜுன்… ப்ளீஸ்…” – சுஜித்.
“கெட்…அவுட்…” – அர்ஜுன்.
“நா உனக்காக எவ்வளவோ செஞ்சிருக்கேன். இந்த ஒரு விஷயத்துல என்னைய கொஞ்சம் கன்சிடர் பண்ணு அர்ஜுன். சுமன் கண்டிப்பா உனக்கு எதிரா எதையும் செஞ்சிருக்கமாட்டா. என்ன பிரச்சனைன்னு சொல்லு… ஐ வில் மேக் எவிரித்திங் கிளியர்…ப்ளீஸ்…” – தன் இயல்பை மீறி வெளிப்படையாக கெஞ்சினான்.
அர்ஜுன் ஹோத்ராவின் புருவம் உயர்ந்தது. சிந்தனையுடன் தலையை மேலும் கீழும் அசைத்தவன் பிறகு ஒரு முடிவுடன் சுமனிடம் திரும்பி, “நேத்து நைட் … பன்னிரண்டரையிலிருந்து ரெண்டு மணி வரைக்கும் கண்ட்ரோல் ரூம்ல என்ன பண்ணின?” என்றான்.
சுமனின் முகம் வெளிறியது. பதில் சொல்ல திணறினாள். சுஜித் பேஸ்மென்ட்டிற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் மறைப்பதில் இருந்த கவனம், தான் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைவதை மறைப்பதில் இல்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் சுஜித் அதை அவளிடம் குறிப்பிட்டு கூறியிருந்தான். அப்படி இருந்தும் பதட்டத்தில் தவறவிட்டுவிட்டாள்.
அதன்பிறகும் கூட அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. காரணம் அதற்குள் குற்றம் மிருதுளாவின் பக்கம் திரும்பிவிட்டது. தாங்கள் செய்த தவறில் அவள் மாட்டிக் கொண்டுவிட்டாளே என்கிற கவலையில் இருந்தவளுக்கு, தான் விட்டுவிட்டு வந்திருந்த தடயத்தைப் பற்றிய நினைவே இல்லை… அர்ஜுன் அதைப்பற்றி கேட்கும் வரை…
‘ஓ… காட்…’ – நீண்ட மூச்சுக்காற்றை வெளியேற்றியபடி தளர்வுடன் கண்களை மூடினான் சுஜித். முடிந்தது… திடமான ஆதாரம் சிக்கிவிட்டது. இதற்கு மேல் மறைப்பதற்கு எதுவும் இல்லை… மறைக்க முயன்றால் சுமனை பலிகொடுக்க வேண்டும். ‘நோ… நோ…’ – தலையை உலுக்கிவிட்டு அர்ஜுனின் பார்வையை சந்தித்தவன், “ஷி ஹெல்ப்ட் மீ…” என்றான் இறங்கிய குரலில்.
அர்ஜுன் ஹோத்ராவின் இதழ்கடையோராம் மேல்நோக்கி வளைந்தது. – ‘இதைத்தான்டா எதிர்பார்த்தேன்’ என்றது அவன் பார்வை.
“வெல்… ஐம் லிசனிங்” என்றபடி தன் இருக்கையில் சென்று அமர்ந்து, “கன்ஃபெஸ்…” என்றான்.
“கொஞ்ச நாளா… ஆபத்து நம்ம பக்கத்துலேயே இருக்க மாதிரி எனக்கு ஒரு ஃபீல் இருந்துகிட்டே இருக்கு. மிருதுளாகிட்ட தப்பு இருக்குன்னு தோணறதை என்னால தவிர்க்க முடியல. பட்டேலை விசாரிச்சா ஏதாவது தெரியும்னு தான்பேஸ்மெண்ட்டுக்கு போனேன். பட் ஹி வாஸ் சோ அட்மென்ட். ஐ லாஸ்ட் மை கண்ட்ரோல்… ஆனா அவன் இப்படி டக்குன்னு செத்துப்போவான்னு நா எதிர்பார்க்கல. இட்ஸ் ஆன் ஆக்சிடென்ட் அர்ஜுன். நீ நினைக்கற மாதிரி இல்ல…” என்றான்.
“நா என்ன நினைக்கறேங்கறது செகண்டரி… என்னை கேட்காம இந்த கேம்பஸ்க்குள்ள யாரும் மூச்சு கூட விடக்கூடாது. நீ பேஸ்மெண்ட்டுக்கு எப்படி போன? கன்வெண்ஸிங்கா ஏதாவது சொல்லு” என்றான்.
“உண்மையை கண்டுபிடிச்சிடலாம்னு நெனச்சேன்…”
“பட் யு ஃபெயில்ட்… உன்னால உண்மையையும் கண்டுபிடிக்க முடியல… என்னையும் கன்வெண்ஸ் பண்ண முடியல…”
“ஐம் சாரி…”
“அண்ட் யு…” என்று சீற்றத்துடன் சுமனிடம் திரும்பியவன், “யு ஆர் நாட் எ கோர்த்தா கேர்ள் எனிமோர்… இனி உனக்கு இங்க எந்த வேலையும் இல்ல…” என்றான் திட்டவட்டமாக.
“நோ… அர்ஜுன் நோ… அவ அப்பா கோர்த்தாவுக்காக உயிரை விட்டவர்… ப்ளீஸ் கன்ஸிடர்…” – சுஜித் பதறினான். அவளுடைய உயிருக்கு வெளியே பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம் அவனை வசமிழக்கச் செய்தது. “ஷி ஹேஸ் லைஃப் திரெட் அர்ஜுன்… ப்ளீஸ்… ப்ளீஸ்…”
“இன் தட் கேஸ், ஷி கேன் ஸ்டே ஹியர்… ஆனா டொமஸ்டிக் ஏரியாவை தாண்டி ஒர்க் பிளேஸ் எங்கேயும் அவளை பார்க்கக் கூடாது”
‘சரி’ என்பது போல் தலையை மேலும் கீழும் அசைத்துவிட்டு சுமனைத் திரும்பிப் பார்த்தான். கலங்கிய விழிகளுடன் இறுகி நின்றாள்.
“உன்னோட பொசிஷன்லேருந்து உன்னை டிகிரேட் பண்ணறேன்… இனி நீ கமாண்டோ கிடையாது. சாதாரண சோல்ஜர்… உனக்கு கீழ வேலை பார்த்தவனை கமாண்டோவா ப்ரோமோட் பண்ணறேன். நீ அவனோட ஆர்டர்ஸுக்கு ஒபே பண்ணனும். ஆம் ஐ கிளியர்…?” – அவனுடைய ஆணவத்தை தட்டித் தகர்ப்பது போன்றதொரு தண்டனை.
சுஜித் சிங் விறைத்து நிமிர்ந்தான். “இதுக்கு நீ என்னை ஷூட் பண்ணியிருக்கலாம்” – வார்த்தைகள் கரடுமுரடாய் வெளியே வந்து விழுந்தன.
“நீ அதுக்கு தகுதியானவன்தான். ஆனா இவ்வளவு நாள் நீ கோர்த்தாவுக்கு பண்ணின சர்வீஸை மைண்ட்ல வச்சு ஒரு சான்ஸ் கொடுத்திருக்கேன். யூஸ் இட் அண்ட் லேர்ன் டு ஒபே ஆர்டர்ஸ்” – கடித்த பற்களுக்கிடையில் வார்த்தையை துப்பினான் அர்ஜுன்.
“கண்டிப்பா ஒபே பண்ணறேன். ஆனா எனக்கு ஆர்டர் பண்ணறவன் என்னைவிட பெட்டரானவனா இருக்கணும். நீ யாரை வேணா சூஸ் பண்ணு. அவனோட நா ரிங்ல இறங்கறேன். அவன் என்னை ஜெயிச்சுட்டான்னா காலம் முழுக்க அவன் காலடியில நாயா கிடக்கறேன்” என்றான் கோபத்துடன்.
கலவரத்துடன் அவன் பக்கம் திரும்பினாள் சுமன். கட்டு மிருகம் போல் வெறித்தனமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் போட்டி… ரத்தமும் சதையும் சிதறச் சிதற யாராவது ஒருவர் சாகும்வரை தொடரும் போட்டி…
“வேண்டாம்… வேண்டாம் சுஜித்… சொல்றதை கேளு ப்ளீஸ்…” – ஒரு கையால் அவன் கையையும் மறு கையால் அவன் சட்டையையும் பிடித்து உலுக்கினாள்.
இதற்கு முன்பும் சில முறை அவன் அந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கிறான். அவன் உயிரோடு வெளியே வருவதற்குள் அவள் செத்துப் பிழைப்பாள். அதன் பிறகும் கூட பல நாட்களுக்கு அவனை மனிதனாக பார்க்க முடியாது. அந்த அனுபவம் இன்னொரு முறை வேண்டாம்… கடவுளே! – கலங்கி தவித்தாள்.
அவளை இலகுவாக விளக்கித்தள்ளியவன், “ஐ நோ மை பவர்… எனக்கு எதிரா ரிங்ல இறங்கறவனை கிழிச்சு எறிஞ்சுட்டு வெளியே வருவேன்…” என்று வெறியுடன் உறுமினான் சுஜித்.
அவனை வெறித்துப் பார்த்த அர்ஜுன் ஹோத்ரா, “குட் லக்…” என்றான்.
******************
அன்று இரவெல்லாம் அவள் உறங்கவில்லை. அர்ஜுன் ஹோத்ராவின் அறையிலிருந்து வெளியேறியதும் அவளிடம் எதுவும் சொல்லாமல் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான் சுஜித் சிங். அந்த நேரத்தில் அவன் எங்கு சென்றான் என்று புரியாமல் கலங்கித் தவித்த சுமன் இமையோடு இமைசேர்க்காமல் இரவை கழித்தாள். விடிந்தும் அவன் வரவில்லை. கவலையுடன் அலைபேசியை எடுத்து பார்த்தாள். அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. பெருமூச்சுடன் அவனுடைய எண்ணை டயல் செய்தாள். அணைத்து வைக்கப்பட்டிருந்தது. “ச்சே…” – வெறுப்புடன் அலைபேசியை மெத்தையில் விட்டெறிந்தாள்.
மிருதுளா எப்படி இருக்கிறாளோ என்கிற நினைவு வந்தது. எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு அவளுடைய அறைக்குச் சென்றாள். ஜன்னல் பக்கம் நின்று ஏதோ சிந்தனையுடன் தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த மிருதுளா அறைக்குள் யாரோ நுழையும் அரவரம் கேட்டு திரும்பினாள். தோழியைக் கண்டதும் அவள் உணர்வுகள் தளும்பின. ஓடிவந்து கட்டி கொண்டு தேம்பினாள். நேற்றைய நினைவில் மிருதுளாவின் உடல் இப்போதும் நடுங்கியது. அவளை அணைத்துப் பிடித்து, “சாரி… சாரி…” என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்த சுமனின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
அவள் ஏன் தன்னிடம் மன்னிப்புக் கேட்கிறாள் என்கிற கேள்வியே மிருதுளாவிற்கு எழவில்லை. பட்ட துன்பத்தையெல்லாம் கொட்டித் தீர்க்க ஓர் உறவு கிடைத்துவிட்டது போல், “ஐம் நாட் எ ஸ்பை… ஐம் நாட்… என்னைய பிடிச்சு… அந்த ரூம்ல… கட்டி… சுமன்… அது… அங்க… செத்…துட்டே…ன்…” என்று கோர்வையற்று புலம்பியபடி அவளோடு ஒட்டிக் கொண்டு கண்ணீரில் கரைந்தாள்.
“ஷ்ஷ்ஷ்… அவ்வளவுதான்… அவ்வளவுதான்…. எல்லாம் முடிஞ்சிடிச்சு… இனி உன்னை யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க… பயப்படாத மிருது… யு ஆர் ஆல்டரைட்…” – அவளை அமைதிப்படுத்த முயன்றாள்.
“நோ… தே ஆர் ப்லேயிங் ஸம் கேம் வித் மீ… எனக்கு தெரியும்… நல்லா தெரியும்… இன்னைக்கோ நாளைக்கோ… என்னை கொல்ல போறாங்க… ஐம் கோயிங் டு பீ டெட்…”
“நோ மிருது… நோ… யு ஆர் சேஃப்… ஓகே…?” – அவள் தோள்களை பிடித்து தன்னிடமிருந்து விளக்கி, அவள் கண்களை பார்த்து… வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து அவள் மனதில் பதியும்படி கூறினாள்.
மிருதுளாவின் நம்பகமின்மை அவள் பார்வையிலேயே தெரிந்தது.
“உனக்கும் நேத்து இங்க நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு நிரூபணம் ஆயிடிச்சு”
அவள் புருவம் சுருங்கியது. “நிஜமாவா! எப்படி?” என்றாள் குழப்பத்துடன்.
“உண்மையான குற்றவாளி யாருன்னு தெரிஞ்சிடிச்சு”
“ரியலி!!!” – விடுதலை உணர்வுடன் விழிவிரித்தாள்.
“எஸ்”
“யாரு?” – ஆர்வத்துடன் கேட்டாள். சுமன் சற்று நேரம் பதில் சொல்ல தயங்கினாள். பிறகு அவளுடைய கையை பிடித்துக் கொண்டு, அடைத்த தொண்டையை செருமி சரிசெய்துக் கொண்டு, “அது… நாங்கதான்…” என்றாள்.
“என்னது!!!” – அதிர்ந்தாள் மிருதுளா.
“எஸ்… நானும் சுஜித்தும்…”
“நோ…” – சட்டென்று அவளிடமிருந்து கையை உருவிக் கொண்டாள்.
“ஐம் சாரி…”
“நீ… நீ கொலை!!! ரியலி?” – அவள் சொன்ன விஷயத்தை கிரகிக்க முடியாமல் தடுமாறினாள்.
“இல்ல… நா… நா ஜஸ்ட் ஹெல்ப் பண்ணினேன்…”
“ஹெல்ப்? கொலை பண்ண!! எப்படி… நீ எப்படி!” – வெறுப்புடன் அவளிடமிருந்து விளகி நின்றாள்.
“ஹேய் மிருது… எனக்கு என்ன நடக்க போகுதுன்னே தெரியாது… சர்வைலென்ஸ் கேமிராவை கொஞ்ச நேரத்துக்கு முடக்கினேன்… அவ்வளவுதான்…. சுஜித் கூட கொலை செய்யணும்னு நினைக்கல…”
“பட் ஹி டிட்…” – கோபத்தில் முகம் சிவந்தது.
“எஸ்…” – சுமன் சங்கடத்துடன் முணுமுணுத்தாள்.
“ஹா…” – விரக்தியுடன் சிரித்த மிருதுளா, “ஹி டார்ச்சட் மீ எ லாட்… ஹௌ குட் ஹி…!” என்று வியந்தாள். தான் குற்றம் செய்துவிட்டு அதை இன்னொரு பெண்மீது சுமத்தியது மட்டுமல்லாமல், அவளை ஒரு நாள் முழுக்க அடைத்துவைத்து சித்தரவதை செய்திருக்கிறான். மனிதனா அவன்! – அவளால் நம்பவே முடியவில்லை.
“சாரி மிருது… சாரி…” – தவிப்புடன் யாசித்த சுமனை விசித்திரமாகப் பார்த்தாள் மிருதுளா. ‘இவளுக்கு என்ன பைத்தியமா!’ என்று தோன்றியது அவளுக்கு. எவ்வளவு பெரிய தப்பை செய்துவிட்டு சாதாரணமாக சாரி என்கிறாளே!
“சூழ்நிலை அப்படி ஆயிடிச்சு மிருது… அந்த சம்பவம் நடந்த நேரத்துல நீ தப்பிக்க ட்ரை பண்ணலேன்னா உனக்கு இந்த பிரச்சனையே வந்திருக்காது”
“சோ… சுஜித் கொலை பண்ணினது தப்பு இல்ல… அந்த பழியை என்மேல திருப்பினது தப்பு இல்ல… நான் தப்பிக்க முயற்சி செஞ்சதுதான் தப்பு. இல்ல?”
“நோ… நா அப்படி சொல்லல…”
“வேற எப்படி?”
“ப்ச்… நா உனக்கு எப்படி சொல்லுவேன்…” என்று தடுமாறி தோழியின் முகத்தை ஓரிரு நொடிகள் மெளனமாக பார்த்தவள், “சுஜித்துக்கு ஏற்கனவே உன்மேல சந்தேகம். அதனாலதான் நீ தப்பிக்க ட்ரை பண்ணின சந்தர்ப்பத்தை, உன்ன விசாரிக்கிறதுக்கு பயன்படுத்திக்கிட்டான். சந்தேகங்கறது இங்க சாதாரண விஷயம் மிருதுளா. எல்லாரும் எல்லாரையும் சந்தேகப்படுவாங்க… ”
“லீவ் மீ அலோன்” – வெடுக்கென்று கூறினாள்.
“மிருது ப்ளீஸ்…”
“உன்ன கெஞ்சி கேட்கறேன்… தயவு செஞ்சு கொஞ்ச நேரம் என்னை தனியா விடு… விட்…டு…டு…” – கூச்சலிட்டாள். அவள் உள்ளம் கொதித்தது. சுஜித்தின் அட்டூழியத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு வக்காலத்து வாங்கும் இவளுடைய குணத்தையும் சகிக்க முடியவில்லை. பெருங்குரலெடுத்து கத்திவிட்டாள். அதற்கு மேல் அங்கு தாமதிக்க முடியாமல் வெளியேறினாள் சுமன்.
21 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin Zahir says:
Next episode podunga pa .. can’t wait
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
updated
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Tina says:
Next please
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
Wonderful ud sis….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Crct mrithu kekrathu sarithane.. dei sujith manangettavane unku vantha ratham. Aduthavanuku vantha thakkali satniyaada????😡😡😡
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
Interesting ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
As usual kalakiteenga pa. Next episode quick pods try panuga pa. Next ennava irukumnu sometimes nite la thookam poyiduthu. Anyways semma episode
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dhanamano says:
Sema epi.Weakly two epi avathu kudunga sis romba arvama wait pannitu irukom
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you pa… Kandippa try pannaren pa…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
மிருதுளாவ இனி வெளியே விடவே மாட்டான இந்த அர்சூன் சுமன் பாவம் தான்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Ambika.. 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
ஹப்பாட… . ஒரு வழியா எபி வந்தாச்சு….
இப்போ தான் மூச்சே வருது….
சரியான அடி…
ஹே டண்டணக்கா… டனுக்கு டக்கா….
மாட்டுனிய சுஜித்துத்துது…….
உனக்கு இது தேவை தான்….
அந்த ரிங் சண்டையில் நீ தோத்து மண்ணை கவ்வுறத நான் என் 2 கண்ணால கண் குளிர பாக்கணும் மவனே…..
இது போதும் எனக்கு… இது போதும் எனக்கு… இது போதுமே….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
😀 😀 //இது போதும் எனக்கு… இது போதும் எனக்கு… இது போதுமே….// paattellaam palamaa irukku!!! 😀
//கண் குளிர பாக்கணும் மவனே…..// padikkanumaa paarkkanumaa??? 😀
anyways… thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Ithu thevaithan sujith ku…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Lakshmi… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Umamanoj says:
Superb update Nithya.. cover page hero Yar..so smart..ithukune room potty yosipingalaa😀… weekly once thana update..konjam consider pannungalen thrice poda😊
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Uma… Indha week konjam kashttamaa pochchu… my second kid school poga start panniyirukka… so naanum kooda poga vendiyirukku… writing ku time spend panna mudiyala. next week ok aayidumnu ninaikkaren…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Cover page hero Danial afzal… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reen says:
Hayya … google ke answer therla pa … finally sonnengle
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
really…! 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reen says:
Yes ma .. 1month ah search panren
And please ma regular updates kudunga