Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள் 34

முள்ளோடு முத்தங்கள்

அத்தியாயம்34

‘ஹலோ …..,,, ஆதி,,,, சார் வி ஆர் காலிங் ப்ரம் சீகிரேட் ஏஜென்ட் நீங்க சொன்ன மாதிரி MR குரூப் ஆப் கம்பெனி MD தினேஷ் அரெஸ்ட் பண்ணியாச்சு நீங்க கொஞ்சம் வரிங்களா சார்’ அவர்கள் அழைப்பிற்கு காத்திருந்தவன் போல் நேரம் கடக்காது விரைந்தான் ….

குளோரோபார்ம் உதவியோடு கைகள் பின்னுக்கு கட்டியிருக்க கால்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நாற்காலியில் கட்டப்பட்டிருக்க நேரே உள்ளே வந்தவன்…. தன் கோபம் முழுவதையும் திரட்டி தினேஷின் மீது பாய அவன் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்த வேகத்தில் கிழே விழுந்தான் தினேஷ்… அவனை படுத்த வாக்கிலையே சரமாரியாக அடித்தவன்… அவனை எழுப்பி அவன் தலைமுடியை கொத்தாக பிடித்து

‘ சொல்லுடா… என்னடா பிளான் பண்ணி வச்சிற்கிங்க நீயும் அந்த ஒழுக்கங்கெட்ட நாயும்…. அவ தப்பிச்சிடா நான் விட்டுவேன்  நினைச்சாலா அவள நான் அப்புறம் பாதுக்குறேன்… இப்போ சொல்லுடா… என் மனைவி எங்கனு சொல்லு’ என்றவாறு ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுக்கொண்டே அவனை அடித்து விலாசினான் ஆத்தியவர்மன்….

‘ இந்த மாதிரி நான் உன்ன முன்னவே பண்ணிருக்கணும்டா என் தப்புதான்’ என்றவன் அவன் தலை சரியமட்டும் அடித்தான்….

ஆதியின் ஆக்ரோஷமான கோபத்தை கண்டவர்கள் அவனை தடுக்க சென்றனர் ‘ விடுங்க சார்… நான் இவன கொல்லனும் … என் கையால கொன்னாதான் என் வெறி அடங்கும்’ என்றவன் மீண்டும் அவனை நோக்கி ஓங்கி கொண்டுவர….

‘ ஆதி சார் கொஞ்சம் பொறுமையா இருங்க நீங்க இப்படி அடிச்சிங்கனா அவன் செத்துர போறன்’ ஆதியை அடக்கியப்படி ரகசிய உளவுத்துறையை சார்ந்த ஒருவன் கூற…

தனியாத கோபத்தோடு நின்றிருந்தவன் தினேஷின் வயிற்றில் ஓங்கி உதைத்தப்படி ‘ சாகட்டும் சார் இவன் இருந்து என்ன பண்ணபோறான்’அவன் உயிருக்கு உயிரான மனைவி பிரிந்ததின் துக்கம் அவனுக்குத்தான் தெரியும்…,,,,

‘ஆதி ப்ளீஸ் சொல்றத கொஞ்சம் கேளுங்க நாளைக்கு கோர்ட்ல ப்ரொடியுஸ் பண்ணிட்டு பிப்பிடீன்  டேஸ் ரிமேண்ட்ல நம்ப கஸ்டாடில திரும்பவும் வருவான் … அப்போ பாதுக்கலாம் ஏனா கோர்ட்ல ஆஜர் ஆகுற அப்போ செக் பண்ணுவாங்க சார் ஏதாவது காயமிருக்கானும்… சோ பி  பெஷென்ஸ் ப்ளீஸ்’ என்று ஒருவன் தன்னை அடக்க… தன் கையை காற்றில் வீசியவன் கோபத்தோடு அகன்றி சென்றான்…

******************************

கூடாரத்தில் அமர்த்துக்கொண்டு நிலவின் மங்கிய ஒலியோடு காட்சியளித்துக் கொண்டிருந்த விட்டத்தை வெறித்தவள் ஏனோ தன்னையும்  அறியாது ஏதேதோ நினைவலைகள் எழுந்து பேயாட்டம் போட ஆரம்பிக்க கண்களில் நீர் சுரந்தது…. அம்பிலி வந்ததையோ தன் அருகில் அமர்ந்ததையோ கருத்தில் கொள்ளாமல் தன் யோசனையோடு கரைந்துக் கொண்டிருந்தாள்….

அவள் அருகில் வந்தவர் அவள் தோள்தொட்டு’ மித்ரா …. கண்ணு என்ன யோசன???’

அம்பிலியின் கேள்வியில் அவரை பார்த்து திரும்பியவள் தன் முகத்தை சீர்செய்துக் கொண்டு’ இல்ல அம்பிலிம்மா சும்மா பொழுது போலனு காத்தாட வந்தேன்’ என்றவளை கேள்வியால் பார்க்க’ ஏன் கண்ணு என் மித்ராக்கு பொய் சொல்லக்கூட வருமா…. பரவாலையே நிறையா விஷயம் கத்துகிட்ட கண்ணு’

மித்ரா அம்பிலியை அதிர்ந்த பார்வை பார்க்க’ மித்ரா உன்னோட புருஷன் கிட்ட பொய்ச்சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது… என்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன???’

அம்பிலிம்மா “எனக்கு தெரியும் கண்ணு நீ இங்க ஒண்டிக்கட்டையா வந்தப்போவே நான் புரிஞ்சிக்கிட்டேன் நீ உன்னை பத்தி எதுவும் உங்க விட்டார் கிட்ட சொல்லலனு”

அம்பிலிம்மா என்றவளுக்கு அதன் பிறகு வார்த்தை வெளியே வரவில்லை’ உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி…. ஆனா நான் காரணம் கேட்கமாட்டேன் கண்ணு..

உனக்கு உன் புருசனுக்கு என்ன பிரச்னைன்னு… அது நாகரிகமும் கிடையாது…. இருந்தும் என்னால சொல்லாம இருக்க முடில… இது

என்னோட கடமையும் கூட நான் சொல்லித்தான் ஆகணும்…. நீ இங்க வந்தது எனக்கு சந்தோஷம் தான்… ஆனால் எத நினைச்சிட்டு இங்க வந்தியோ அது என்னைக்கும் தப்பாகலாம்…ஒரு முடிவு எடுக்கும் போது ஆயிரம் தடவை யோசிக்கலாம்… ஆனா எடுத்த பிறகு தப்பா சரியானது யோசிக்கிறது ரொம்ப முட்டாள் தனம்…உன்னோட முடிவு சரியானதா?

இல்ல முட்டாள் தனமானதானு??? உனக்குத்தான் தெரியும் முகம் பாக்குற காண்ணாடியா இருந்தாலும் விரிசல் விழர வரைக்கும்தான் அத உபயோகிக்க முடியும் …. விரிசில் விழுந்த பிறகு  குப்பைக்குத்தான் போகும் அது எவ்ளோ விலை உயர்ந்ததா இருந்தாலும் சரிதான்… வாழ்க்கையும் அதுபோலத்தான் எதும் யோசிச்சி நிதானமா முடிவெடுக்கணும்… நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன் ’ முடிவு உன்கையில் இது உன் வாழ்க்கை நீதான் முடிவெடுக்க வேண்டும் என்றவர்

நேரம் ஆகிறது சாப்டுவிட்டு மருந்தை போட்டுக்கொண்டு படு என்றுவிட்டு மித்ராவை கடந்து சென்றார்…

தன்னை கடந்து செல்லும் அம்பிலியை பார்த்தவள் தன்னை பெறாத தாயாக இருந்தாலும் தன்னைப் பற்றி கவலை கொள்பவரை நினைத்து வருந்த… தன்னை கண்டுகொண்டதை நினைத்து பரித்தவித்தவளாக

என்ன முடிவெடுப்பது நான் தான் அன்றே முடிவெடுத்து விட்டேனே… என் உயிரை அவர் காதல் இல்லாத பொழுதே மாய்திருப்பேன் …..

அவர் இல்லாதது ஒருவாழ்க்கையா!!!

இதோ இங்கு நடமாடுவது ஒரு பிணம் தான் அதுவும் அவரின் பிள்ளைகளுக்காக தான் என்றவளுக்கு கொசுராக அந்த பிள்ளைக் கனியை தனக்கு வரமாக அளித்தவனின் நினைவும் சேர்ந்தே வந்து அவளை உயிருடன் வதைத்தது….

அவனோடு கழித்த மகிழ்ச்சியான நாட்கள்… தன்னை ஒரு குழந்தைப் போல் உள்ளங்கையில் வைத்து தங்கிய தருணங்கள்…

அவளால் இன்னும் நம்ப முடியவில்லை தன் கணவன்  பொய்யதுப் போனதை… அவன் மட்டுமா பொய்யதுப் போனான் அவளது காதலையும் அவள் உள்ளுணர்வுகளையும் சேர்த்தே அல்லவா கொன்றுக்குவித்து விட்டான்… சுயபட்சாதபம் எழ பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவளின் எண்ண ஊர்வலங்கள் பின்னோக்கி சென்றது…

அவனும் அவளும் உயிராக வாழ்ந்த இந்த இடைப்பட்ட நாட்களில்

‘ பாவா நீங்க என்ன ரொம்ப சோம்பேறி ஆக்குறீங்க … ப்ளீஸ் பாவா என்னால வேலையெல்லாம் செய்யாம இருக்க முடியாது ‘ என்றவளை பார்த்து முறைத்தவன்

பேபி புரியாமல் ‘பேசதா இந்த கர்ப காலத்தில் நீ கவனமா இருக்கணும்னு டாக்டர் சொலிர்கார் நீ ரொம்ப வீக்கா இருகர்த்தாவும் சொன்னாரா இல்லையா … ஹ்ம்ம் வீட்டுல ஆளு இருக்காரப்போ நீயெதுக்கு இப்படி ஷ்ரமப்படுற’ என

தன்னை அதட்டும் கணவனைப் பார்த்தவள்’ பாவா அதுக்குன்னு நான் வேலைசெய்யாம இருக்கணுமா… போங்க பாவா’ அவள் முடிப்பதற்குள் அவளை முந்திக்கொண்டு ‘ ஓஹோ அப்படியா அப்பனா மகா ராணி நான் சொல்றத கேக்கமாட்டீங்க அப்படித்தானே… அப்படினா என்னோட முடிவையும் கேட்டுக்கோ….

வீட்டுல வேலை செய்யுற மாதிரி இருந்தா… நீ ஒன்னும் என்னோட வேலையும் சேர்த்து கவனிக்க வேண்டாம்… என்ன பாதுக்க எனக்கு தெரியும்… சரியா’ என்றவனைப்  பார்த்தவள்

ஐயோ இப்படி அடிமடியில் கைவைத்தால் என்ன செய்வது என முழித்தவள் ‘ பாவா என்ன இப்படி சொல்லிட்டீங்க உங்களுக்கு செய்றதும் வீட்டுல வேலை பக்குறது ஒன்னா ….. ஹ்ம்ம் நீங்க என்னோட சுகமான இஷ்டம்… நான் உங்களுக்கு செய்றது  என்னோட விருப்பம்…. இது என்னோட உரிமை நான் யாருக்காகவும் விட்டு தரமாட்டேன்’ தன்னவளை ஆசையாக பார்த்தவன் ‘ உரிமைய பத்தி என்கிட்டையே பேசுரியா பேபி’ கணவனின் உரிமைபோராட்டம் தலைத் தூக்க தன்னை பார்த்து அவனுக்கு பணிவிடை செய்யக்கூடாது என சொல்வதற்கூட அவனுக்கு உரிமை இல்லை என்று எண்ணியவள்

‘ ஆமா அப்படியே வச்சிக்கோங்க … இது உரிமை போராட்டம்தான் என்னோட தனிமனிஷியோட உரிமை போராட்டம்  நீங்க மட்டுமில்ல உங்களோட எல்லாமும் என்னோட உரிமை கலந்த பொருள் இருக்கிறப்போ …. உங்களோட சேர்த்து சகலமும் என்னோட தனிப்பட்ட உரிமை பாவா… இது பண்ணாத அது பண்ணாதனு சொல்லக்கூட உங்களுக்கு உரிமை நான் கொடுகல புரிஞ்சிதா ‘ அவனை எச்சரிப்பதுப் போல் அவள் கேட்ட பாணியில் அவள் தன்மீது கொண்டுள்ள அன்பும் தன்னை யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டேன் என்று பொறாமையில் பொசுங்கியவளை பார்த்து மேலும் வம்பிழுக்க எண்ணியவன்…

‘என்ன பேபி சொன்ன நான் உன்னோட உரிமையா அது எப்போதிருந்து  ‘என்று கூறி அட்டகாசமாக சிரித்தவன்’என் மனசுல என்ன இருக்குனு தெரியாம நீயா ஒன்னு நினைச்சா நான் எப்படி பேபி பொறுப்பாக முடியும்’ அவனது பேச்சில் மனம் கனத்து பார்த்தவளின் நினைவில் தன் மனதில் எழும் உணர்வுப் போல் தன்னவனின் மனதில் எழ வில்லையோ நாம் தான் தேவையில்லாமல் கற்பனையில் வாழ்கிறோமோ என்றென்னியவள் கலங்கிய விழியோடு அவனை விட்டு அகன்று சென்றாள்…

அவள் எதுவும் பேசாமல் தன்னை விட்டு கலங்கிய விழிகளோடு விலகி  செல்பவளை பார்த்தவன் அவளை தடுத்து நிறுத்தி அவளது நாசியை பற்றி நிமிர்த்தியவன்’ என்னோட முழு உரிமைக்கும் ஒரே சாசனம் நீதான் பேபி… நான் எப்பவும் உனக்கு மட்டும்தான் சொந்தம்’ என்று கூற…

அவளோ அழுத விழியோடு அவனை அனைத்து அவன் மார்பில் முகம் புதைத்தால்

அவளை ஆரத்தழுவிக் கொண்டவன் அவள் உச்சியில் கன்னம் பதித்து நின்றான்… அவளோ அவனை விட்டு பிரியமனமில்லாமல்  அவனோடு இன்னும் ஒன்றியவளை பார்த்து அவள் காதருகில் குனிந்தவன்

‘என்ன பேபி இன்னும்  சந்தேகம் தீரலையா… ஹ்ம்ம் நிருபிக்கவா என்னோட உரிமை உன்னிடத்தில் எவ்ளோனு???’ என கூறிவனிடன்

பாந்தமாக அடங்க அவள் மீதான தன் உரிமையை அவளுக்கு நன்கு புரியவைக்குமாறு உணர்தினான்…

அன்றே தன்னிடம் உன்மீது எனக்கு எந்த உணர்வும் ஏழவில்லை என்று கூறியவனின் உளர்த்தம்  தெரியாது அவனை உயிராக கருதியவள் இன்று புரிவது ஆர்தமில்லாததாய் தோன்ற  அதை ஏற்க முடியாமல் கையறு நிலையாக தவித்தால் அந்த பேதையவள்…

********************************

அதே நேரத்தில் சென்னையில் புகழ் பெற்ற ஐந்து மாடிக் கொண்ட ஒரு நட்சத்திர பாரில் அமர்திருந்தவனின் கையில் மதுக் கோப்பும் மற்றொரு கையில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு தன் மனைவியின் நினைவில் முழுகியிருந்தான்….

அவள் இல்லாத வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் மது அருந்திக் கொண்டிருந்தவன்…

இதுவரை தன்னவளைப் பற்றின எந்த தகவலும் வரவில்லை இதைப்பற்றி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தால் பாவம் அவர்களுக்கு இருக்கும் சிறு நம்பிக்கையும் குலைந்துவிடும் என்று நினைத்தவன்…

“அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக தான் இருக்க”!!!

“தனக்கு யாரு நம்பிக்கை ஊட்டுவார்”???- கேள்வி எழுந்தது

ஒவ்வொரு நிமிடமும் அவளைப் பற்றின சிந்தனைகலே ஓடியது மணி இரண்டு என்று கைக்கடிகாரத்தை பார்த்தவன் சொல்லொண்ண  வேதனையோடு வீட்டிற்கு திரும்பினான்…

தங்களின் அறைக்கு சென்றவன் என்றும் தனக்காக இரவு எவ்வளவு நேரம் கடந்தாலும் இன்முகத்தோடு வரவேற்கும் அவன் மனைவி இல்லாத அறை வெறுமையாக காட்சியளித்தது… உலகமே சூனியமாக  தோன்ற ‘ பேபி எங்க டி போன… எதுக்கு பேபி என்ன தேடி நீ வரணும்…அவ்ளோ சொல்லியும் கேட்காம… ப்ளீஸ் பேபி எங்க இருந்தாலும் என்னோடு வந்திருடி … என்னால முடில பேபிம்மா…. நீ இல்லாம  எப்படி பேபி’ தன்னவளின் மதி முகமும் கள்ளச் சிரிப்பும் அவன் முன் நிழலாடி இம்சித்து கண்களில் நீர்மனிகள் உருண்டது

கர்வமின்றி முதன் முறையாக தன்வளுக்குகாக கண்ணீரை விட… தன் கண்ணத்தை தொட்டு பார்த்தவன் தாமா அழுகிறோம் யருக்காவும் கலங்காதவன் இன்று தன்னவளுக்காக சிந்தும் கண்ணீர் கூட சுகமான வலியாய் அவனை வருடியது…

அவன் கண்கள் கட்டிலை நோக்க அதனை வெறித்துப் பார்த்தவனின் முகம் வேதனையில்  கசிந்தது ….

அவளோடு சிரித்த நாட்கள் ….. தன்னவளோடு கூடிய கூடல் என்று ஒவ்வொரு இரவும் அவளில்லாமல் அவன் துடிக்கும் துடிப்பு இரவெல்லாம் தூங்காமல் நித்தமும் அவள் நினைவில் மடங்க தவித்துதான் போனான் அந்த ஆறடி கர்வம் கொண்ட ஆண்மகன்

கட்டிலில் அமர்ந்தவன் அவள் தலையணையை எடுத்து நுகர்ந்தவன் தன்னவளின் வாசத்தை தனது நூறையிரல் வரை நிரபிக் கொண்டான்

அவனின் ஒவ்வொரு அணுவும் தன் மனைவிக்காக ஏங்கியது அவளின் நினைவு அவனை பேரழையாக தாக்க அவள் நினைவுகளோடு முழுகினான்

‘வெளியில் சென்று வந்தவன் அவள் மடியில் தஞ்சம் புகுந்து அவள் வயிற்றில் முகம் புதைத்து ஒரு கையால் அவள் இடையை சுற்றி போடுக்கொண்டான்…

அவன் இதுமாதிரி தன் மடியை தேடி வந்து முகம் புதைத்துக் கொண்டாலே அவன் மனதை ஏதோ ஒரு செய்தி அறித்துக்கொண்டிருக்கும் என உணர்ந்தவளாக அவன் தலையை மென்மையாக கோதிவிட்டவள்

‘ என் பாவாக்கு என்னாச்சு??

ஏதாவது என்கிட்ட நீங்க கேட்கணுமா தாயங்காம கேளுங்க ‘ கனிவாக கேட்டவளை பார்த்து

தன் முகத்தை பதித்திருக்கும் தன்னவளின் வயிற்றிலிருந்து நிமிர்ந்தவன்’ பேபி என்ன உனக்கு எந்தளவுக்கு பிடிக்கும் ‘ அவன் கேள்வி அபத்தமாக தெரிய

அவனை முறைத்தவள்’ நன்றாக சலவை செய்து பால் நிறத்தில் இருக்கும் அவன் கண்ணத்தை வலிக்கொண்ட மட்டும் கிள்ளினாள்….

அவன் சற்று வலியில் கத்திட…

‘இனிமேட்டு இப்படி கேட்பீங்களா… ஹ்ம்ம் சொல்லுங்க’…

அவனோ கண்ணத்தை தேய்தவன் ‘ ராட்சசி இப்படியா கிள்ளுவ…. வலிக்குது டி வர வர உனக்கு என்மேல் பயமே விட்டுப்போச்சி பேபி’  வலியில் துடித்தவனை கண்டு பதரியவளாக

‘அய்யோ பாவா சாரி …. ரொம்ப வலிக்குதா….. சாரி பாவா ‘ மனம் தாங்காது உருகியவளை இதுதான் சமயம் என்று தோன்ற சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்திக் கொண்டான் அவள் மனதை கவர்ந்த கள்வன்…

‘சாரி சொல்றத விட்டிட்டு மருந்து போட்டுவிடு பேபி’ என்றவனை பார்த்தவள் ‘ இதோ கொஞ்சம் இருங்க பாவா போய் எடுத்துட்டு வரேன் ‘ தீவிரமாக கூறி தன்னை கடந்து செல்வதை பார்த்தவன் ‘ எங்க டி போற மருந்து எடுக்க பாவா ‘ என விளக்கம் அளித்தவளை பார்த்தவன் தன் தலையில் அடித்துக்கொள்ள

தியரியா சொன்னாலும் புரியாது பார்க்ட்டிக்கலா சொன்னாலும் புரியாது அவளுக்கு புரியும் படியாக ‘ மருந்து உன்கிட்டதான் இருக்கு பேபி ‘ என்று கூறி கிரகமாக அவள் இதழை வருடினான்….

தன் கணவன் பார்வை மாறுவதை உணர்ந்து லேசாக முகம் சிவக்க வெட்கம் கொண்டாள்…

அவனோ’ என்ன பிடிக்கும்னா அதை நிருபித்து காமி பேபி’ என்று கூற திறுதிருவென்று பார்த்தவள் தன் கணவனின் அடுத்த கேள்வியில் பிரமித்து நின்றாள் …

அவன் அவளிடம் தூதுவிட நினைத்து கேட்டது மழலைச் செல்வதை… வாழ்க்கையின் அடுத்த கட்டம் தாம்பத்திய வாழ்க்கையை நோக்கி அடுத்த படியை எடுத்து வைக்க தன் துணையிடம் கரம் நீட்டியவனாய்….

நீட்டிய கையை தட்டி விடாமல் தன் மறு கரத்தை கொடுத்தவளை அள்ளி எடுத்தவன் அவளை தன் கையில் தாங்கிக்கொள்ள

தன் மன வெளிப்பட்டினை தன்னவனுக்கு புரியவைத்தால் புரியும் விதமாய்

தாபங்களே ரூபங்களாய் பாடுதே

தொடுதே அழகினை சூடுதே

தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே”

அவள் பாட துவங்க அவனும் அவளுடன் இணைத்துப் பாட தொடங்கினான்…

“காலம் இரவின் புரவி ஆகாதோ

அதே கானா அதே வினா

வானம் நழுவி தழுவி ஆடாத

அதே நிலா அருகினில் வருதே

தாபங்களே ரூபங்களாய் பாடுதே

தொடுதே அழகினை சூடுதே

தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே

அவனோ

“ நான் நனைத்திடும் தீயா பெய்யும் நிலா நீயா

நான் அணைந்திடுவேன ஆலாபனனை தான”

காதல் கனாக்கள் தானா தீர உலா நானா, போதாதா

காலம் வினாக்கள் தானா போதும்…

அருகினில் வர மனம் உருகித்தான் கறையுதே

அவள் ஆரம்பித்த பாடலை அவன் முடித்து வைக்க மனதின் தேடலில் தொடங்கி இதழ் முத்தத்தில் திளைத்து உடலின் தேவையாய் மாறிப்போனதை அடுத்து கணங்கள் நிமிடங்களாக நிமிடங்கள் மணிகளாக பிரவேசித்து….

அவளுடன் காதலில் கசிந்த நாட்கள் அவன் கண்முன் படமாக ஓட…

ஆயிரம் ஆயிரம் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பவன்தான் என்றாலும் அவன் சொத்துக்களை துட்சமாக எண்ணி அவன் காதலை மட்டுமே பிரயத்தனமாக கொண்டவள்

“உங்கள் காதல் மட்டும் போதும் பாவா… காலம் முழுவதும் உங்கள் அருகினில் நான் என்றும் வேண்டும் ஏழேழு பிறவிக்கும்…

இறுதி மூச்சு உள்ளவரை உங்கள் மடியில் உயிர் துறக்கவும் ….

உங்கள் நிழலாகவே வாழ விரும்புகிறேன்” இப்படியெல்லாம் பேசியவள் இன்று எங்கே!!!

‘ இவ்ளோ பேசிட்டு இப்போ எங்க டி போன… எங்க டி இருக்க… என்னைவிட்டு போகம்மாட்டேன் சொன்ன’… இப்படி என்னை தனிமையில் தவிக்கவைத்து என் கூடை மட்டும் விடுத்தி என் உயிரை எடுத்து சென்றுவிட்டாயே கழிவிரக்கம் எழ

‘ பேபி நீ அன்னகி கேட்ட உங்க காதல்  மட்டும் போதும்னு….

இப்போ சொல்றேன் பேபி உன்ன காலம் முழுவதும் காதல் செய்ய நான் காத்திருக்கேன்  ப்ளீஸ் வந்திடு பேபி… என்னால முடியல டி’    என்றவன் அருகிலிருந்த பீர் பாட்டிலை பார்த்தான் தன்னவளுக்கு குடித்தால் பிடிக்காத காரணத்தினால் அதை இதனை நாள் ஒதுக்கி வைதிருந்தவன் இன்று அவளுக்குகாகவே அதை எடுத்து ஒரே மடக்கில் குடித்தும் குடிக்க முடியாமலும் பாட்டிலை ஓங்கி தரையில் அடித்து தள்ளாடிய படியே கட்டிலில் விழுந்தான்…

நா குழற ‘ ஐ லவ் யூ பேபி…. ஐ நீட் யூர் ப்ரெசென்ஸ் ….. உன் பாவா உனக்காக கத்திருக்கேன் பேபி’ என்றவன் கண்களில் நீர்வழிய அப்படியே உறங்கியும் போனான்…..

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nandhini Mageswaran says:

  superrrrr….story waiting for next epi


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks paa…. Ipo teaser pottruken poi padinga


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Super pa next epi seekiram podunga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks rajee sis indha….sunday sis💕


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Superb episode pa…. wait pana mudiyala pa. Next episode quick poda try panuga pa….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya bharathi says:

   Thanks raji sis nxt ud sunday sis💐💐😘😘

error: Content is protected !!