நிழல்நிலவு – 18
11982
39
அத்தியாயம் – 18
“என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ஆனா அதுக்கு நீ என்னை நம்பனும். உன்னோட பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லணும்” – அர்ஜுன் ஹோத்ராவின் குரல் அவள் செவிகளில் எதிரொலித்தது. உறக்கம் வராமல் புரண்டு படுத்தாள். அனந்த்பூரின் நினைவு நெஞ்சை அரித்தது. தாயின் முகம் கண்களை மூடவிடாமல் துரத்தியது. யாரோ கதவை தட்டினார்கள்.
‘இந்த நேரத்துல யாரு!’ – அர்ஜூனாக இருக்குமோ என்கிற சந்தேகம் அனிச்சையாய் எழுந்தது. அவனாக இருந்தால் கதவை தட்டியிருக்கவே மாட்டான்.. நேரடியாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருப்பான். அறிவு வேறு கோணத்தில் சிந்தித்தது. ‘ப்ச்’ – அலுப்புடன் எழுந்துச் சென்று திறந்து பார்த்தாள்.
“ஹாய்… ஐம் டாக்டர் மோகன் ராவ்” – ஐம்பது வயது மதிக்கத்தக்க தடித்த உருவம் கொண்ட மனிதர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
“எஸ்…”
“உள்ள வரலாமா?”
“என்ன விஷயம்?”
“உங்களோட காயங்களை செக் பண்ண வந்திருக்கேன். மே ஐ?” – அவளுடைய அனுமதியை கோரினார்.
“ப்ளீஸ்…” – அர்ஜுன் ஹோத்ரா அனுப்பியிருக்கிறான் என்று புரிந்தது. தயக்கத்தை மறைத்துக் கொண்டு அவரை உள்ளே அனுமதித்தாள். அவனுடைய கரிசனமும் அக்கறையும் அவளை மேலும் துன்புறுத்தியதே ஒழிய ஆறுதலாக இல்லை. சிறகை உடைத்து கூண்டுக்குள் அடைத்துவிட்டு காயத்திற்கு மருந்து போட ஆள் அனுப்பியிருக்கிறான். வெறுப்பை மென்று விழுங்கி கொண்டு மெளனமாக நின்றாள்.
“ரொம்ப நேரம் எடுக்க மாட்டேன்… ஜஸ்ட் டென் மினிட்ஸ்…” – அவளுக்கு சமாதானம் கூறியபடி கை கட்டை பிரித்து காயத்தை பரிசோதித்து மருந்திட்டார்.
“லேசான காயம்தான்… கட்டு தேவையில்லை… மருந்து போட்டா போதும். தானா சரியாயிடும்” என்று கூறிவிட்டு நெற்றி வீக்கத்தை கவனித்தார்.
தலையில் சில இடங்களில் அழுத்தி, வலி எங்கெல்லாம் இருக்கிறது என்பதை பரிசோதித்துவிட்டு சில மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தார். வாயிலில் அரவரம் கேட்டது. இருவருமே திரும்பிப் பார்த்தார்கள். அர்ஜுன் ஹோத்ராதான்…
“இஸ் ஷி ஓகே?” – மருத்துவரிடம் கேட்டான். ஆனால் பார்வை அவள் முகத்தில் பதிந்திருந்தது.
“கைல காயம் ஒன்னும் பெருசா இல்ல. ஆனா தலையில கொஞ்சம் சென்சிட்டிவான இடத்துல அடி பட்டிருக்கு. எதுக்கும் ஒரு எம்ஆர்ஐ எடுத்து பார்த்துடலாம்”
அர்ஜுன் சட்டென்று அவர் பக்கம் திரும்பினான்.
அவன் பார்வையில் எதை கண்டாரோ… “ஒர்ரி பண்ணிக்க எதுவும் இல்ல… தலையில அடி பட்டிருக்கதுனால ஒரு சேஃப்டிக்கு ஸ்கேன் பண்ணிக்கறது நல்லது” என்றார் ஏதோ உறவினருக்கு ஆறுதல் கூறுவது போல.
“நாளைக்கு காலையில பத்து மணிக்கு அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணிடுங்க” – அவன் குரலும் கூட இறங்கித்தான் இருந்தது.
‘ஆஹா! எவ்வளவு வருத்தம்!’ – எள்ளலாக நினைத்தாள் மிருதுளா.
‘தத்ரூபமான நடிப்பு தான். ஆனால் குறிதான் தவறானது. இந்த ஜாலத்திலெல்லாம் மயங்குவதற்கு நான் என்ன முட்டாளா?’ – உள்ளுக்குள் பொருமினாள். அவனுடைய ஒவ்வொரு அசைவும் அவளை இரு மடங்கு எச்சரிக்கை செய்தது. எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாக நின்றாள்.
மருத்துவர் விடைபெற்று கொண்டிருக்கும் போதே சமையலறை ஊழியர் ஒருவர் கையில் ட்ரேயுடன் உள்ளே வந்தார்.
“இங்க வை” – டீப்பாவை சுட்டிக்காட்டினான் அர்ஜுன். அவன் சொன்னபடியே செய்துவிட்டு அவரும் வெளியேறினார்.
இப்போது அறையில் அவளும் அவனும் மட்டும் தான்… தலைகவிழ்ந்து நிலம் நோக்கி நிற்கும் அவள் முகத்தை துளைத்தது அவன் பார்வை.
“சாப்பிடு” – மிருதுவாய் கூறினான். அவள் அசையாமல் அப்படியே நின்றாள். அவன் பாத்திரங்களை திறந்து பதார்த்தங்களை பரிமாறினான்.
நேற்று கட்டி வைத்து சித்திரவதை செய்தவன் இன்று ஒரேடியாக உருகுகிறான்… பணிவிடை செய்கிறான்! மனதில் என்ன திட்டத்தை வைத்திருக்கிறானோ! – அவளிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. “என்ன ஆச்சு?” என்றபடி உடேன நிமிர்ந்து அவளை பார்த்தான் அர்ஜுன்.
சட்டென்று அவள் விழிகள் விரிந்தன. மூச்சுக்காற்றைக் கூட கவனிக்கிறான்! – உடல் இறுகியது.
“ரிலாக்ஸ்… டோன்ட் திங்க் டூ மச், ஓகே? சூப் ஆறிட போகுது. கம்…” – வற்புறுத்துவதைக் கூட வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் செய்கிறான் என்பதை கவனித்தாள் மிருதுளா.
மறுத்துப் பேசி நேரத்தை கடத்தாமல், இறங்க மறுத்த உணவை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளினாள். அவன் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது அவளுக்கு.
அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக ஒரு சேரில் அமர்ந்து அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தான் அர்ஜுன் ஹோத்ரா.
மிருதுளா காலி பாத்திரங்களை மூடி ட்ரேயில் அடுக்கும் போது, “லீவ் இட்… லீவ் இட்… சர்வெண்ட் யாராவது வந்து எடுத்துப்பாங்க” என்றபடி அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு எழுந்தவன், மருத்துவர் கொடுத்திருந்த மாத்திரைகளை எடுத்து பார்த்தான்.
மருத்துவம் படிக்கவில்லை என்றாலும் மருந்துகள் பற்றிய அடிப்படை அறிவு அவனுக்கு இருந்தது. எந்த மாத்திரை எதற்காக கொடுத்திருக்கிறார் என்பதை ஒருமுறை சரிபார்த்துவிட்டு இரவு வேளைக்கு உள்ளதை பிரித்து அவளிடம் நீட்டினான்.
மிருதுளாவின் முகம் மாறியது. “இல்ல… நா அப்புறம் சாப்பிட்டுக்கறேன்” என்றாள்.
உண்மையில் அவளுக்கு மாத்திரை விழுங்குவது, பாறையை விழுங்குவது போல் கடினமான காரியம். அதனால் தான் அவள் முகத்தில் அந்த மாற்றம் தோன்றியது. ஆனால் அர்ஜுன் வேறு விதமாக புரிந்துகொண்டான்.
தான் தவறான ட்ரக்ஸ் எதையோ கொடுப்பதாக நினைத்து அஞ்சுகிறாள் என்று எண்ணி அவளை வெறித்துப் பார்த்தான். பிறகு எடுத்த மாத்திரையை அதன் கவரிலேயே வைத்துவிட்டு, “உனக்கு பிடிக்காத எதையும் இங்க நீ செய்ய வேண்டிய அவசியம் இல்ல” என்றான்.
‘பிடிக்காத எதையும் செய்ய வேண்டாமா!’ – இப்போது வெறித்துப் பார்ப்பது அவள் முறை. இங்கு இருப்பதே அவளுக்கு பிடிக்கவில்லை. சொன்னால் அனுப்பிவிடுவானா! – உள்ளுக்குள் பொங்கினாள்.
“இது வெறும் பெயின் கில்லரும் ஆன்டிபயாட்டிக்கும் தான். வலி இருந்தா எடுத்துக்கோ… இல்லன்னா தேவையில்லை. இந்த காயமெல்லாம் தானா சரியாயிடும்” – மெல்லத் தீண்டும் தென்றல் போல் மென்மையாகப் பேசினான்.
பதில் சொல்லவும் தோன்றாமல் அவன் முகத்திலிருந்து பார்வையை விளக்கவும் தோன்றாமல் சிலை போல் நின்றாள் மிருதுளா. கண்ணீர் ஒரு மெல்லிய திரையாக திரண்டது அவள் கண்களில்.
சாதாரண பார்வைக்கு புலப்படாத கண்ணீர் தான். ஆனால் அவன் கழுகுப் பார்வையில் தப்பவில்லை போலும். மெல்ல அவளிடம் நெருங்கினான். நெற்றியில் சரிந்த கூந்தலை ஒற்றை விரலால் அவள் காதோரம் ஒதுக்கிவிட்டபடி, “நாளைக்கு காலையில பத்து மணிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட். எட்டு மணிக்கு ரெடியா இரு. குட் நைட்…” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான். திகைப்பிலிருந்து மீள முடியாமல் சமைந்து நின்றாள் மிருதுளா.
**************
இரண்டு மணிநேர பயணம் மௌனமாகவே கழிந்தது. மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து மிருதுளாவிற்கு கதவை திறந்துவிட்டான் அர்ஜுன் ஹோத்ரா. வழக்கமாக அணிந்திருக்கும் சூட்டை தவிர்த்து அன்று சாதாரண டீ-ஷர்ட் தான் அணிந்திருந்தான். அதில் கூட அவனுடைய கம்பீரம் குறையவில்லை என்பதை கவனித்தபடி கீழே இறங்கினாள் மிருதுளா.
அந்த மாளிகையிலிருந்து… இல்லையில்லை… இராட்சச மண்டபத்திலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்பதை இன்னமும் கூட அவளால் நம்ப முடியவில்லை. மருத்துவமனையில் ஆள்நடமாட்டம் அதிகம் தெரிந்தது. தப்பிக்க முடியுமா? – மரித்துப்போன ஆசை மீண்டும் அவளுக்குள் துளிர்விட்டது. சுற்றும்முற்றும் பார்த்தாள். இந்த முறை பிசகினால் மரணம்தான். பயத்துடன் எச்சரிக்கையும் இருந்தது. அதே சமயம், கிடைக்கும் சந்தர்ப்பத்தை விட்டுவிடாதே என்று ஆசையும் உந்தியது.
“உள்ள போகலாமா?…” – இடைபுகுந்து அவள் சிந்தனையை தகர்த்தது அர்ஜுன் ஹோத்ராவின் குரல்.
“ஆ..ங்… ப்…போ…போகலாம்” – தடுமாற்றத்துடன் பதிலளித்தாள் மிருதுளா.
இருவரும் உள்ளே சென்றார்கள். ரிஷப்ஷனிஸ்ட் அவர்களை வரவேற்று கெஸ்ட் ரூமில் அமரச் செய்தாள். சற்று நேரத்திலேயே அங்கு வந்த மருத்துவர் மோகன் ராவ், அர்ஜுன் ஹோத்ராவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மிருதுளாவை தனியாக ஸ்கேன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அவரிடம் தன்னுடைய நிலைமையை கூறி உதவி கேட்கலாமா என்று எண்ணியவள் மறுகணமே அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். ரிஷப்ஷன் முதல் மேனேஜ்மெண்ட் வரை இங்கு அவனுக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்த பிறகும் அப்படி யோசிப்பது முட்டாள்தனம். அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தாள்.
ஸ்கேன் செய்து முடித்த பிறகு மருத்துவர் அவளை கையேடு அழைத்து வந்து அர்ஜுனிடம் ஒப்படைத்துவிட்டார். ‘அவ்வளவுதானா… மீண்டும் சிறைவாசமா…’ – மிருதுளாவின் மனம் வாடியது.
“ரிப்போர்ட் ரெடியாக கொஞ்ச நேரம் ஆகும் சார்” – மோகன் ராவ்.
“எவ்வளவு நேரம்?”
“ரேடியாலஜிஸ்ட் ரெவியூ பண்ணிக்கிட்டு இருக்காங்க”
“ம்ம்ம்… ஒன்னும் அவசரம் இல்ல… வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்” என்று கூறி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு மிருதுளாவோடு வெளியே வந்தான்.
ரிஸப்ஷனை நெருங்கிய போது மிருதுளா நடையின் வேகம் குறைந்தது. “என்ன ஆச்சு?” – அர்ஜுன் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்.
பதில் சொல்ல சற்று தயங்கிய மிருதுளா பிறகு “ரெஸ்ட்ரூம்…” என்று மெல்ல முணுமுணுத்தாள்.
“ஓ…” என்று இழுத்தவன், “அந்த பக்கம்…” என்று ஒரு திசையில் கைகாட்டினான்.
“தேங்க் யூ…” – கீழே குனிந்தபடியே மெல்லிய குரலில் கூறிவிட்டு அவன் கைகாட்டி திசையில் நடந்தாள். சற்று தூரத்தில் பெண்களுக்கான கழிவறை இருந்தது. அதன் வாயிலில் நின்றபடி மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள். அலைபேசியில் கவனமாக இருந்தவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. சட்டென்று உள்ளே நுழைந்தாள். பெண்கள் சிலர் முகம் கழுவிக் கொண்டும், கண்ணாடியில் சிகையை சரி செய்து கொண்டும் இருந்தார்கள்.
அவர்களில் ஒரு மூத்த பெண்மணியிடம், “எக்ஸ்கியூஸ் மீ… எமெர்ஜென்சி… போன் இருக்கா… ப்ளீஸ்” என்று அவசரமாக கேட்டாள்.
ஒரு நொடி தயங்கிய அந்த பெண், “ப்ளீஸ்..” என்று அவள் மீண்டும் கெஞ்சியதும் கைப்பையிலிருந்து அலைபேசியை எடுத்து அன்லாக் செய்து கொடுத்தாள்.
“தேங்க்ஸ்… தேங்க்ஸ் எ லாட்…” – அவசரமாக நன்றி கூறியவள், வேகமாக தாயின் எண்ணை அழுத்திவிட்டு எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். இணைப்பில் எந்த ஒலியும் இல்லாமல் சில நொடிகள் கடந்தது. மிருதுளாவின் இதயத்துடிப்பு எகிறியது… படபடப்புடன் காத்திருந்தாள். இறுதியாக, ‘அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது’ என்றது பதிவு செய்யப்பட்ட குரல்.
“நோ…! ம்மா… ப்ளீஸ்…” – ஏமாற்றத்துடன் வாய்விட்டு புலம்பியவள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தாள். மீண்டும் இன்னொரு முறை… இன்னொரு முறை… எத்தனை முறை முயன்றாலும் அணைத்து வைக்கப்பட்டிருக்கும் அலைபேசி தொடர்பில் வர வாய்ப்பே இல்லையே! – “கடவுளே!” – கலங்கினாள். கண்களில் கண்ணீர் வடிந்தது.
“வருத்தப்படாதம்மா… வேற யாருக்காவது ட்ரை பண்ணி பாரு” – நல்ல மனம் கொண்ட அந்த பெண், அவளுடைய கண்ணீரைப் பார்த்துவிட்டு கருணையுடன் கூறினாள்.
எவ்வளவு யோசித்தும் மிருதுளாவிற்கு வேறு யாருடைய எண்ணும் நினைவிற்கு வரவில்லை. அனைத்து தொடர்புகளையும் அலைபேசியில் சேமித்து வைக்கும் பழக்கத்தில் டயல் செய்யும் பழக்கமே இல்லாமல் போனதன் விளைவு. செயலற்று தவித்தாள் மிருதுளா. யாருக்காவது தொடர்புகொள்ள வேண்டும்… அலைபேசி கையில் இருக்கிறது… ஆனால் முடியவில்லை… பொங்கி அழுதாள்.
“என்னம்மா ஆச்சு? யாருக்கும்மா முடியல… ரொம்ப சீரியலா?” – ஆதரவுடன் அவள் தோளை பற்றினாள் அந்த பெண்.
மிருதுளாவிற்கு பதில் சொல்ல முடியவில்லை. இப்படியே தப்பித்து போக ஏதேனும் வழி இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். சினிமாவில் ஜன்னலை உடைத்துக்கொண்டு எகிறி குதித்து தப்பிப்பார்களே… அப்படியெல்லாம் தப்பிக்க இங்கு எந்த வாய்ப்பும் இல்லை. தளர்ந்து போனாள்.
“கவலைப்படாதம்மா… எல்லாம் சரியாயிடும். இப்படி வா… மூஞ்சிய கழுவு… ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான் ஆண்டவன். தைரியத்தை விடாத…” – பொதுப்படையாக அவள் கூறி ஆறுதல், கடவுள் கொடுக்கும் குறிப்பு போல் மிருதுளாவிற்குப் பட்டது.
சட்டென்று தெளிந்த மனதுடன், “தேங்க்ஸ்” என்று அந்த பெண்ணிடம் முணுமுணுத்துவிட்டு முகத்தை கழுவிக் கொண்டு, மற்ற பெண்களோடு கலந்து வெளியே வந்தாள்.
அவன் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கவே அச்சமாக இருந்தது. ஆனால் நிலவரத்தை தெரிந்துகொண்டாக வேண்டுமே! – மெல்ல திரும்பினாள். அவனை காணவில்லை. எங்கு போய்விட்டான்! கண்களால் அலசினாள். இல்லை… அந்த பகுதியில் அவன் இல்லவே இல்லை. ஒழியட்டும்… – வெறுப்புடன் நினைத்தபடி மறுபக்க வாயிலை நோக்கி ஓடினாள்.
அது ஊழியர்களுக்கான பகுதி… நோயாளிகளுக்கோ பார்வையாளர்களுக்கோ அங்கு அனுமதியில்லை. எப்படியோ ஒளிந்து மறைந்து யார் கண்ணிலும் படாமல் பின்பக்கம் வந்துவிட்டாள். ஆனால் மதில் சுவர் மிகவும் பெரிதாக இருந்தது. தாண்டி குதிக்க வழியே இல்லை. சுற்றிக் கொண்டு போனால் முன்பக்கம் தான் செல்ல வேண்டும். அவனிடம் மாட்டிக்கொள்ள நேரிடும். ‘கடவுளே… ஆண்டவா… ப்ளீஸ் எப்படியாவது ஹெல்ப் பண்ணுப்பா…’ – ஏதாவது வழி கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“யாரும்மா நீ? இங்க என்ன பண்ற?” – அதட்டியபடி அவளிடம் நெருங்கினான் ஒரு வாட்ச்மேன். அவனை தொடர்ந்து இன்னொருவனும் வந்தான். “என்ன பிரச்சனை?” – அந்த குரலை கேட்டதும் சர்வமும் ஒடுங்கிவிட்டது மிருதுளாவிற்கு. ‘அர்ஜுன்!’
அவனைப் பார்த்ததுமே வணக்கம் வைத்த வாட்ச்மேன், “எம்ப்லாயீஸுக்கு மட்டும் தான் சார் இந்த பக்கம் பர்மிஷன். அதான் யாருன்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்” என்று விளக்கமும் கொடுத்தான்.
இறுகிய முகத்துடன் அவளை வெறித்துப் பார்த்தான் அர்ஜுன் ஹோத்ரா. அந்த பார்வையை எதிர்கொள்ளும் திராணியில்லாமல் உதட்டை கடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள் மிருதுளா. வியர்த்துக் கொட்டியது… உள்ளங்கையெல்லாம் கூசியது.
“வா என்கூட…” – கட்டைளையிரும் தொனியில் கூறிவிட்டு முன்னோக்கி நடந்தான். விசையால் ஈர்க்கப்பட்டது போல் அவன் பின்னால் ஓடினாள் மிருதுளா.
காரில் வந்து அமர்ந்து வெகுநேரமாகியும் அவன் இஞ்சினை ஸ்டார்ட் செய்யவில்லை. ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி சிலை போல் அமர்ந்திருந்தான். உஸ்-புஸ்ஸென்று வேகமாக வெளியேறும் மூச்சுக்காற்றை தவிர அவனிடம் வேறு எந்த அசைவும் இல்லை.
மிருதுளாவின் இதயம் எகிறி குதித்தது… வயிறு கலங்கியது… டேஷ்போர்டில் கிடந்த எம்ஆர்ஐ ரிப்போர்டை பார்த்தாள். இதை வாங்கத்தான் சென்றிருந்தானா! – எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
‘இனி எஸ்கேப் ஆகணும்ங்கற எண்ணமே வர கூடாது’ – பேஸ்மெண்டில் அர்ஜுன் எச்சரித்தது இப்போது அவள் செவிகளில் எதிரொலித்தது. கண்களில் கண்ணீர் கோர்த்தது.
“அவ்வளவு தைரியம்… ம்ம்ம்?” – உள்ளடங்கிய குரலில் உறுமினான். மிருதுளாவின் உடல் நடுங்கியது.
“சாரி… ப்ளீஸ்… ஐம்… சா… சாரி…” – பிசிறுதட்டிய குரலில்
“தப்பிச்சு எங்க போகப்போற நீ? அனந்த்பூருக்கா?” – அதட்டினான். பதில் பேசும் அளவுக்கெல்லாம் அவளிடம் துணிவில்லை. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரை அவனிடமிருந்து மமறைக்க முயன்று தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
“நிமிரு… நிமிர்ந்து பாருன்னு சொல்றேன்ல…” – கடுமையாக குரலை உயர்த்தினான். உடல் தூக்கிப்போட சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“அனந்தப்பூர்ல யார் இருக்கா உனக்கு? ஃபேமிலி தான் இல்லைன்னு சொல்லிட்ட. பாய் ஃபிரண்ட் எவனாவது இருக்கானா?” – அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
மிருதுளா பதில் சொல்லவில்லை. எதை சொன்னால் அவனுடைய கோபம் குறையும் என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் தெரிந்த கள்ளத்தனம் தப்பாமல் அவன் கருத்தில் பதிந்தது.
ஓரிரு நொடிகள் அவளை வெறித்துப் பார்த்தவன், முழுமையாக அவள் பக்கம் திரும்பி, அவள் முகத்தை கைகளில் ஏந்தி இதழோடு இதழ் சேர்த்தான். ஆழமாக.. அழுத்தமாக… முதலில் மிரட்சியில் விரிந்த அவள் விழிகள் பின் மெல்ல இமை மூடின. நொடிகள் நிமிடங்களாக மாறிய போது மெல்ல விலகினான் அர்ஜுன். அவனுடைய இழுப்பிற்கு இசைந்து, எதிர்ப்பற்ற நிலைக்கு சென்றுவிட்ட தன் பலவீனத்தை எண்ணி வெட்கி தலைகுனிந்தாள் மிருதுளா.
அவளுடைய கன்றி சிவந்த முகத்தை விழியாகற்றாமல் பார்த்தவன், முகவாயில் கைகொடுத்து நிமிர்த்தி அவள் கண்களை சந்தித்து, “அப்படியே யாராவது இருந்தாலும் இந்த நிமிஷத்தோட மறந்துடு…” என்றான் அழுத்தமாக.
39 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice ud. Avan love kooda athigarama than irukku
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Yes Yes… Thank you… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice ud sis👌👌👌👌
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Priya
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Superrrrrr👌👌
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Rajee
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Romba late aakama next ep potrunga nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sure sure… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
தப்புவதற்கு பதிலா பேசாம உண்மைய சொல்லலாம் போல..திக்திக் என்குது..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அட நீங்க வேற உமா… ஹோம் ஒர்க் பண்ணலன்னு மிஸ் கிட்ட சொல்லுங்கற மாதிரி ஈஸியா சொல்லறீங்க… He is a bloody killer. தப்பிச்சு ஓடத்தானே ட்ரை பண்ணுவா.. உண்மையை சொல்லறது அவ்வளவு ஈஸியா போச்சா உங்களுக்கு…
தமிழ் எழுத்துல உங்க கமெண்டை படிக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது…நன்றி… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அவன் என்ன தான் killer a இருந்தாலும் , அவனும் மனுஷன் தானே. ஆட்களை எடை போட தெரியாதா என்ன அவனுக்கு. இவ உண்மையை சொன்னா நிச்சயம் புரிஞ்சிக்க try பண்ணுவான் ல..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அவன் புரிஞ்சுப்பான்… ஆனா அவன் புரிஞ்சுப்பான்னு அவ எப்படி நம்புவா? 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
வாஸ்தவம் தான் ..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
I’m dead !!
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Seriously!!! Thank you… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ppaaahhhhh kalakiteenga
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ha Ha… naanaa Arjun ah? 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
2 perum than
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஆஹா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
superrrrrrrrrrr
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank youuuuuuuuuu… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
super ud ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Pappu… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Adappavi
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ha Ha… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Super
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Aahaaa kadaisila kavunthe poyacha. Rendu perume vaa. Baesh!!!!!
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ha Ha… Yes… Kavundhe pochchu… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Evlo peria terror aala irunthalum avsnukkana kaadhal kittenthu thapa mudiyathu la. Super.
இனி அர்ஜுன் என்கிற இந்த புலி ம்ருதுளா என்கிற மானோடு சேர்ந்து புல்ல திங்குமா? இல்ல புலியாவே இருந்து மான தின்னுடுமா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ஹாஹா… மானை தின்னுட்டு அது அப்புறம் எங்க போகும்… புல்லை தின்னு பழக வேண்டியது தான்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Miruthu la thappikka dry pannurathu vida porathu illai pola ava ammaku ennachu arjun semma pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Amma paththi innum 3 4 epi la theriyum Ambika… Ava try pannaradha vida maattaa…
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hmmmm superb episode pa……. Next epi ku romba wait pana vidatheenga pa. Bcoz want mirthu s reaction for Arjun s action.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Vidya,
ezhuthittu irukken pa… seekkiram pottudren… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
wowwwwww….. super…..
sema….
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Daisy,
Thank you… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Miri unakku SEMA thyriyam.arjun avalai patri ellam terinthum innum miratal.
Miri intha villan than in jodinnu vithi sirikuthu.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Kurinji,
Miri…! hmmm nice Name 🙂