Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு- 19

அத்தியாயம் – 19

மிருதுளாவின் பதட்டம் சற்றும் குறையவில்லை. என்ன காரியம் செய்துவிட்டான். அவளும் தன்னை மறந்து இசைந்துவிட்டாளே! ஒரு கொடியவனின் தீண்டலில் எப்படி மதி மயங்கினாள்! பதறி துடித்துக்கொண்டு அவனிடமிருந்து விலகியிருக்க வேண்டாமா? அந்த அளவுக்கா கட்டுப்பாடற்று போய்விட்டாள்! – அவமானத்தில் மனம் குன்றியது. அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க முடியாமல், வேடிக்கை பார்ப்பது போல் ஜன்னல் பக்கம் பார்வையை பதித்திருந்தாள்.

 

சாலையில் ஒரு கண்ணும் அவள்மீது மறு கண்ணும் வைத்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன். மதிய உணவுவேளை நெருங்கிய போது, “பசிக்குதா? ஏதாவது சாபிடறியா?” என்றான்.

 

மிருதுளா பதில் சொல்லவில்லை.

 

அவன் வெறுக்கும் உதாசீனம் அவளிடம் நிறையவே இருக்கிறது என்பதை உணர்ந்து, “உன்கிட்டதான் பேசிட்டிருக்கேன்” என்று பல்லைக்கடித்தான்.

 

அப்போதும் அவள் வாய்திறக்கவில்லை. உண்மையில் அவள் அவனிடம் பேச சங்கடப்பட்டுத்தான் மெளனமாக இருந்தாள். அதை அலட்சியம் என்று புரிந்துகொண்ட அர்ஜுன் எரிச்சலுடன் காரை ஓரம்கட்டி நிறுத்தி, முரட்டுத்தனமாக அவள் கையை பிடித்து தன்பக்கம் திருப்பி, “டோன்ட் டெஸ்ட் மை பேஷண்ட்ஸ்” என்றான் கடுமையாக.

 

அவன் பிடியில் நசுங்கிய மிருதுளாவின் மென்கரத்தில், வலி எலும்பு வரை ஊடுருவியது. கண்களில் நீர் திரண்டது. “லீவ் மீ…” – அவன் கையை எடுத்துவிட முயன்றாள்.

 

அப்போதும் அவள் தன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை என்பதை கவனித்தவன், “லுக் அட் மீ…” என்றான் பிடியில் அழுத்தத்தைக் கூட்டி.

 

உடனடியாக அவன் பார்வையை சந்தித்தாள் மிருதுளா. வேறு வழி?

 

“பசிக்குதா?” – மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.

 

“நோ…” – உதட்டை கடித்துக் கொண்டு தலையை குறுக்காக ஆட்டினாள். அவளிடமிருந்து பதில் வந்த பிறகே பிடித்த பிடியை விட்டான் அர்ஜுன்.

 

அவன் இறுக்கிப் பிடித்த இடத்தை தேய்த்துவிட்டுக் கொண்ட மிருதுளா, சீட்டின் மறுபக்கத்தில் ஓரமாக ஒடுங்கினாள். அவனிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் விலகிவிட துடித்தது அவள் உள்ளம். தொண்டையில் அடைத்து நின்ற ஆத்திரத்தை உள்ளேயே விழுங்கிக் கொண்டாள்.

 

அவளுடைய விலகளையும், அவள் மறைக்க முயலும் கண்ணீரையும் சில நொடிகள் வெறுப்புடன் பார்த்த அர்ஜுன் வேறெதுவும் சொல்லாமல் காரை கிளப்பினான். அடுத்த சில நிமிடங்களில் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நல்ல உணவுவிடுதியில் காரை கொண்டுவந்து நிறுத்திவிட்டு, “இறங்கு” என்றான்.

 

மறுபேச்சில்லாமல் கீழே இறங்கினாள் மிருதுளா. காலியாக இருந்த ஒரு மேஜையில் இருவரும் வந்து அமர்ந்தார்கள்.

 

“என்ன வேணும்?” – அர்ஜுன்.

 

“காபி” – அவளை வெறித்துப் பார்த்தவன், வெயிட்டரிடம் மதிய உணவை கொண்டுவர சொன்னான். அவளுக்கு மட்டும் தான் ஆர்டர் செய்தான். அவன் நீர் கூட அருந்தவில்லை. அவளுக்கு தேவையானதை எடுத்து தட்டில் பரிமாறி சாப்பிடச் சொன்னான். அவனை எதிரில் வைத்துக் கொண்டு அவளுக்கு ஒரு வாய் கூட இறங்கவில்லை. வெகுவாய் சிரமப்பட்டாள்.

 

“என்ன ஆச்சு? பிடிக்கலையா?”

 

“இல்ல… போதும்…” – முணுமுணுத்தாள். அதற்கு மேல் அவன் அவளை கட்டாயப்படுத்தவில்லை. தட்டில் இருப்பதை மட்டும் உண்டு முடிக்கும் படி கூறிவிட்டு மீதமிருந்ததை பேக் செய்யச் சொன்னான்.

 

மிருதுளா தட்டில் இருந்த உணவை முடித்ததும், காபி ஆர்டர் செய்தான். அதுதான் அவளுக்கு தேவையாக இருந்தது. சந்தோஷமாக எடுத்து பருகினாள். உணவிற்காக கட்டணத்தை செலுத்துக் போது, பேக்கெட்டிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்து அதிலிருந்து சில நோட்டுக்களை உருவி பில்லோடு வைத்தான்.

 

மிருதுளாவின் புருவம் சுருங்கியது. ‘கார்ட்ல பே பண்ண மாட்டானா!’ – ஆச்சரியமாக பார்த்தாள். ‘இவ்வளவு பணத்தை பாக்கெட்ல வச்சுக்கிட்டு சுத்துறான்! மிஸ் ஆயிட்டா என்ன செய்வான்! அதுசரி.. இவனே ஒரு கேடி… இவன்கிட்டேருந்து பணத்தை அடிக்க இந்த ஊர்ல எவன் இருக்கான்! – நக்கலாக நினைத்தபடி காபியை குடித்து முடித்தாள்.

 

பேக் செய்ய சொல்லியிருந்த உணவு கவரை வெயிட்டர் கொண்டு வந்து கொடுத்தான். அதை கையில் எடுத்துக் கொண்டு, “கிளம்பலாம்” என்றான். இருவரும் வெளியே வந்தார்கள். சாலையோரம் மர நிழலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரிடம் அந்த கவரை கொடுத்துவிட்டு காரில் வந்து ஏறினான். வியந்த பார்வையுடன் அவனை பின்தொடர்ந்தாள் மிருதுளா.

 

அவனை சந்தித்த நாளிலிருந்து இன்று தான் அவனிடம் ஒரு நல்ல பணப்பை பார்க்கிறாள் மிருதுளா. அதுவும் நடிப்புதான் என்பது அவளுக்கு தெரியும். ஆனால் ஏன் இந்த நடிப்பு என்பதுதான் அவளுக்கு புரியவில்லை. அவளிடம் தன்னை நல்லவனாகக் காட்டிக்கொண்டு எதை சாதிக்க பார்க்கிறான்! அவளிடமிருந்து எதை வேண்டுமானாலும் வலுக்கட்டாயமாக பறித்துக்கொள்ளும் சக்தி அவனிடம் இருக்கிறது. இருந்தும் அவளை கவர வேண்டும் என்று ஏன் நினைக்கிறான்! இயல்புக்கு மாறான அவனுடைய செயல்கள் அவளை குழப்பின. மெளனமாக அமர்ந்திருந்தாள். சற்று நேர பயணத்திற்குப் பிறகு அவளிடம் பேச்சு கொடுத்தான் அர்ஜுன் ஹோத்ரா.

 

அவளுடைய பெற்றோரைப் பற்றி விசாரித்தான். விபரம் தெரிந்ததிலிருந்து பார்த்ததே இல்லை என்று பச்சைப்பொய் சொன்னாள். யாரிடம் வளர்ந்தாள் என்று கேட்டான். பாட்டியிடம் வளர்ந்ததாகவும், அந்த பாட்டியும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதாகவும் அவிழ்த்துவிட்டாள். எதிர்கால பாதுகாப்புக்கு வீடு சொத்து என்று ஏதேனும் இருக்கிறதா என்றான். அடுத்த மாத ஹாஸ்ட்டல் வாடகையே ஹாஸ்ப்பிட்டல் கொடுக்கும் சம்பள பணத்தில் தான் கொடுக்க வேண்டும் என்றாள். படித்த பள்ளி, கல்லூரி, நட்பு வட்டம் என்று எதையும் விடாமல் விசாரித்தான். அசராமல் அனைத்திற்கும் பொய்யை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

 

பேசிக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மளிகை வளாகத்திற்குள் கார் நுழைந்தது. கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்கள் செக்யூரிட்டி கார்ட்ஸ்.

 

‘இத்தனை துப்பாக்கிக்கு லைசன்ஸ் வாங்கியிருக்கானா! இல்லன்னா எல்லாம் கள்ள துப்பாக்கியா!’ – மிருதுளாவின் கண்கள் பாதுகாவலர்களை அளந்தது.

 

கார் மாளிகை வாயிலில் வந்து நின்ற போது, எம்ஆர்ஐ ரிப்போர்ட்டை எடுத்து அவளிடம் கொடுத்து, “உனக்கு எந்த பிரச்சனையையும் இல்ல… யு ஆர் ஆல்ரைட்…” என்றான்.

 

அப்போதுதான் தான் ஒரு மெடிக்கல் செக்கப்பிற்கு சென்றோம் என்பதே அவளுக்கு உரைத்தது. எப்படியோ… எந்த பிரச்சனையும் இல்லை என்று ரிப்போர்ட் வந்துவிட்டது.

 

இவனிடம் மாட்டிக் கொண்டிருப்பதே பெரிய ஆபத்து… இதில் இன்னொரு ஆபத்தும் சேர்ந்துகொள்ளாமல் போனதே… தேங்க் காட்… – கடவுளுக்கு நன்றி கூறியபடி கீழே இறங்கினாள்.

 

பாதுகாப்பு பணியில் இருந்த கார்ட் ஒருவன் அர்ஜுனிடம் நெருங்கி ஏதோ காதில் முணுமுணுத்தான். சட்டென்று அவன் முகத்தில் ஓர் இறுக்கம் தோன்றி மறைந்ததை கவனித்தாள் மிருதுளா. ‘என்னவா இருக்கும்!’ – தெரிந்துகொள்ளும் ஆர்வம் தலை தூக்கியது. அப்போதுதான் மாளிகைக்குள்ளேயிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார்.

 

பெரிய மீசை வைத்திருந்தார்… தாடி பாதி நரைத்திருந்தது. முகத்தில் அதீத இறுக்கம்… அவர் சிரித்தே ஆண்டுக்கணக்கில் ஆயிருக்கும் போல் தோன்றியது. சிவந்திருந்த கண்களில் ஏதிர்மறை உணர்வு விரவியிருத்தது. அவரை தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே மிருதுளாவின் உடலில் குளிர்பரவியது.

 

அதற்கு தகுந்தாற்போல் அவரும் அவளை தலை முதல் கால் வரை பார்த்தபடியே தான் அர்ஜுனிடம் நெருங்கினார்.

 

இனம் புரியாத பயம் அவளுக்குள் பரவியது. ஈவில் லுக் என்பார்களே… அப்படி ஒரு துஷ்ட பார்வையைத்தான் அவர் மிருதுளாவின் மீது வீசினார். அவள் உடல் நடுங்கியது.

 

அவருடைய உருட்டல் மிரட்டலெல்லாம் அர்ஜுனை பாதிக்கவில்லை போலும். அவன் சாதாரணமாகத்தான் இருந்தான்.

 

“யார் இது?” – மிருதுளாவை பார்த்தபடி அர்ஜுனிடம் அவர் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

 

அவருடைய கேள்விக்கு பதில் சொல்வதை தாமதித்து அவளிடம் திரும்பினான் அர்ஜுன். அவளுடைய அச்சத்தை உணர்ந்து, “ஒன்னும் இல்ல… உள்ள போ…” என்றான் அவள் கை மீது கை வைத்து. அவனுடைய பார்வையும் அவன் பேசிய விதமும், மிருதுளாவின் மீது அவனுக்கு இருக்கும் அக்கறையை உறக்கக் கூறியது.

 

ஆமோதிப்பாக தலையை அசைத்துவிட்டு, அந்த புது மனிதரின் கோர பார்வையை மீண்டும் ஒருமுறை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றாள் மிருதுளா.

 

“உள்ள போயி பேசலாம் அங்கிள்…” – அர்ஜுனின் தேய்ந்த குரல் தூரத்தில் கேட்டது.

 

மிருதுளா தன்னுடைய அறைக்கு வந்த போது அங்கே வேலைக்கார பெண் ஒருத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தாள். இவளை பார்த்ததும், “உங்க ரூமை மாடிக்கு மாத்தியாச்சு மேம்” என்றாள்.

 

‘மேம்!’ – திடீர் மரியாதையில் புருவம் உயாத்திய மிருதுளா, “மாடிக்கா! என்ன திடீர்ன்னு?” என்றாள் குழப்பத்துடன்.

 

“தெரியல மேம். அர்ஜுன் சார் போன்ல சொன்னதா பானு தீதீ சொன்னாங்க. அதான் உங்க சாமானையெல்லாம் மேல கொண்டு போயி வச்சிட்டு இந்த ரூமை சுத்தம் பண்ணிக்கிட்டு இருக்கேன்”

 

மிருதுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. எப்போது ரூமை மாற்றும்படி போனில் சொன்னான்! காரில் அத்துமீறினானே… அதற்கு முன்பா அல்லது பின்பா? இன்னும் அதிகமாக நம்மிடம் நெருங்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறானா! – கடவுளே! இங்கு ஒரு நாள்… ஒரு பொழுது கூட நிம்மதியாக இருக்க முடியாது போலிருக்கிறதே! – தளர்ந்து கட்டிலில் அமர்ந்தாள்.

 

“மாடியில எந்த ரூம்?”

 

“வலது பக்கம் ரெண்டாவது ரூம் மேம்”

 

‘அவனோட ரூமுக்கு பக்கத்து ரூம்…!’ – அவளுக்கு நன்றாக புரிந்துவிட்டது. அவனுடைய இச்சைக்கு அவளை பலியாக்க பார்க்கிறான். பாவி..! – குமுறினாள். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம்! இந்த சூழலிலிருந்து எப்படி மீள போகிறோம். அவள் உள்ளம் கலங்கியது.

 

“மேம்… சுத்தம் செய்யணும்… பானு தீதீ வந்தாங்கன்னா என்னைய சத்தம் போடுவாங்க” – அவளை அந்த அறையிலிருந்து வெளியேறும்படி நாசுக்காக கூறினாள்.

 

அதற்கு மேலும் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் வெளியே வந்தாள் மிருதுளா. அன்று வழக்கத்தைவிட அதிகமாக வீடு முழுக்க ஆட்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அதில் பலர் புது முகமாக இருந்தார்கள். அவள் தன்னந்தனியாக நட்டநடு ஹாலில் சிலை போல் நிற்கும் போது அவர்களுடைய பார்வை அவள் மீது விழத்தானே செய்யும். மிகவும் சங்கடமாக உணர்ந்தாள். வேறு வழியே இல்லாமல் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளை மாடிக்கு தள்ளியது.

 
15 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anjali Suresh says:

  Aju ithu too much. Unaku avala pudichiruntha avalukum unna pudiche aganum nu force panrathu thappu. Ava yaarayavathu love paniruntha ipove marakkanum nu solra. suppose mrg agiruntha enna seiva… unna evlo decent boy nu patha ipdi kappi vela pakra. Yerkanave avaluku unna pathale bp 450 ku poguthu. Yenda avala ipdi torture panra???
  Un anbe vamba iruntha yeppadi????


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Afrin Zahir says:

  Next ud ?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Daisy Mary says:

  அட அட அட…..
  என்ன ஒரு அருமை…

  மிது டியர்.. என்னமா இப்படி பச்ச மண்ணாட்டாம் இருக்க…
  ஒரு கிஸ் ல இப்படி பிளாட் ஆகிட்டியே….
  ச் ச் ச…. மானம் போச்சி போ…..

  டேய் அர்ஜுனு … கேப் கிடைக்காமலே இப்படி புகுந்து விளையாடுறியே !!! இது நியமா…..?!?!

  கல்யாண சமையல் சாப்பிட நாங்க ரெடி…
  வெஜ் or நான் வெஜ் எதுன்னு நம்ம wtiter ஓட வெண்டைக்காய் விரல் ட +brain ட சொல்லுங்க……

  then இது கல்யாணம் வரை போகுமா?!?!
  அர்ஜுன் மிது சொன்ன எதையும் நம்ப போறது இல்லை… பின்ன ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு…

  வில்லன் attack எப்போ…
  waiting for turning point….

  thn இதே போல் கதையோட பதிவு 2 or3 times வந்தா happy…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Afrin Zahir says:

   Super review


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  PAPPU PAPPU PAPPU PAPPU says:

  siper ud ma


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  super ud sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sumithra Ramalingam says:

  Nice ud. Nee eppadi kettalum bathil poi than solluven. .


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Uma maheswari says:

  Wow அற்புதமான பதிவு ..
  சீக்கிரம் அடுத்த பதிவை தாருங்கள் ..


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Ganeshan says:

  இவனை நம்பி எப்படி உண்மையை சொல்ல முடியும்?ஆனால்….மிருதுளா பாவம்…. என்ன செய்ய போகிறாள்….. கதை நகர்வு அருமை சகோதரி…… வாழ்த்துக்கள்👍👍👍👍


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  saranya shan says:

  arjunin kuruvo,,,,,,,,,,,,,,……….ada nee eppadi keettaaalum vidamal poi solraal ssema thillu miru unakku……….maadikke kondu poitaanaa unnai,,,,,,,,,,,,,,,,,,,,,


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  எம்மா மிருதுளா பொய் சொல்லுறதுக்கும் ஒரு அளவு.வேணும் மா அவன் கேட்குற எல்லாத்துக்கும் ஆப்போசிட்டா சொல்லுற அவன் ரொம்ப சின்சியரா இருக்கான் இந்த பொண்ணு வேலைக்கு ஆகாது


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Ganeshan says:

  Nice ud sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Umamanoj says:

  யாரந்த புதுஅறிமுகம்…
  நல்லது செஞ்சாலும் ஊர் நம்பணும் இல்ல..
  அர்ஜுனா!!அர்ஜுனா!!!


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Hmmmm he is sincere. But will she understand the love? Ivalo poi sollama unmai ya pattu nu sollidalam. Epdiyum matiyachi, veliya vida matanga, idula poi sonna thappikava mudiyum?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Tina says:

  YIpppieeee …. thank you nithya

You cannot copy content of this page