Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 20

அத்தியாயம் – 20

 

ராகேஷ் சுக்லா – கோர்த்தாவின் இன்றைய தலைவர். எந்தவித முன்னறிவிப்பும் இன்று அர்ஜுன் ஹோத்ராவை சந்திக்க அவனுடைய வீட்டிற்கே வந்திருந்தார். அவருடைய இந்த திடீர் வரவை அர்ஜுன் விரும்பவில்லை. ஆனால் அதை அவரிடம் அவன் காட்டிக்கொள்ளவும் இல்லை.

 

“எப்ப வந்தீங்க? சொல்லியிருந்தா வெளியே போகாம வெயிட் பண்ணியிருந்திருப்பேனே?” – உபச்சாரமாக கூறினான்.

 

“இடியும் மின்னலும் சொல்லிட்டா வரும். வரணும்னு தோணிச்சுன்னா வர வேண்டியதுதான்” – அவருடைய அடர்ந்த மீசைக்குள் ஒளிந்திருந்த உதடுகள் மேல்நோக்கி வளைந்தன.

 

அவருடைய அதிகாரத்தை புறந்தள்ளி, “ஆல்ரைட்… ஹாட் ஆர் கோல்டு…? என்ன கொண்டு வர சொல்லட்டும்?” என்றான் இண்டர்காமை கையிலெடுத்தபடி.

 

“நா வந்து ரெண்டு மணிநேரம் ஆச்சுப்பா… வரவேற்பையெல்லாம் உன்னோட செக்ரெட்டரி முடிச்சுட்டான்…” என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.

 

“நாட் மை மிஸ்டேக்… ஸ்டில்… ஐம் சாரி ஃபார் மை ஆப்சென்ஸ்… சொல்லுங்க அங்கிள்… எனிதிங் சீரியஸ்?”

 

“அந்த பொண்ணு மேல உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்க மாதிரி தெரியுதே! சீரியஸ் ரிலேஷன்ஷிப்பா இல்ல ஜஸ்ட் டெம்ப்ரவரிதானா?” – இறுகிய குரலில் கேட்டார்.

 

“ரிலேஷன்ஷிப்பா! ஹா…” – நக்கலாக சிரித்தான் அர்ஜுன் ஹோத்ரா.

 

சட்டென்று அவர் முகம் பிரகாசமானது. மனதில் பொங்கும் மகிழ்ச்சியை அவர் முகத்தில் காண முடிந்தது. ஓரிரு நொடிகள் தான்… அதற்குள் மீண்டும் புருவம் சுருங்கி முகம் இறுகியது.

 

“வேற மாதிரி கேள்விப்பட்டேனே!” என்றார் அவனை சந்தேகமாக பார்த்து.

 

அவன் சிரித்தான். “என்னை ஸ்பை பண்ண இன்னும் கொஞ்சம் பெட்டரான ஆளை ரெடி பண்ணுங்க” என்றான்.

 

“நோ நோ.. அப்படியெல்லாம் யாரும் இல்லப்பா” என்று மறுத்தார்.

 

அவன் அதற்கும் சிரித்தான். அவருடைய இடத்தில் இவனே ஆள் வைத்திருக்கும் போது, அவருடைய ஆள் இங்கு இல்லை என்கிற கூற்றை நம்பிவிடுவானா என்ன!

 

“ஏன் இப்படி சிரிக்கிற? என்னோட ஆள் உன்கிட்ட இல்ல. எனக்கு அடுத்து நீதான் கோர்த்தாவோட தலைவன். உன்னை ஏன் நா வேவுபார்க்க போறேன். நீ கோர்த்தாவுக்கு எதிரா என்ன செஞ்சாலும் அது உனக்கே செய்றமாதிரி தானே?” – நம்பிக்கைக்குரிய வகையில் அவர் பேசினாலும் அவரை நூல் நுனியளவும் அவன் நம்பவில்லை. இது நிழல் உலகம்… நிழலைக் கூட சந்தேகிக்கும் உலகம்…

 

“ஐ நோ…” – அவருடைய கூற்றை ஆமோதிப்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

 

“சரி சொல்லு. அந்த பொண்ண ரொம்ப ப்ரொட்டெக்ட்டிவா பார்த்துக்கற போலிருக்கே! இன்ட்ரெஸ்ட் இல்லாம எப்படி?”

 

“நாம பிசினஸ் பண்ணறோம்… உலகத்துக்கு காமிக்கற பிசினஸ் வேற… உண்மையிலேயே நாம பண்ணற பிசினஸ் வேற…” – கபடமாக புன்னகைத்தான்.

 

“யு மீன்…?” – ராகேஷ் சுக்லாவின் புருவம் சுருங்கியது.

 

“எக்ஸாக்ட்லி…” – அவருடைய கணிப்பை உறுதி செய்தான்.

 

“இது வெறும் பிசினஸ் தானா? அவகிட்ட உனக்கு எந்த எமோஷன்ஸும் இல்லையா?” – அவனுடைய கூற்றை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துகொள்ளும் நோக்கில் தெளிவாகவே கேட்டார்.

 

“எமோஷன்ஸுன்னா வீக்னஸ். அது என்கிட்ட நெருங்க முடியாது” – உறுதியாகக் கூறினான்.

 

மெச்சுதலுடன் அவனைப் பார்த்து மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார். பிறகு அவன் தோளை தட்டிக்கொடுத்து, “கெட் மீ சம்திங் ஹாட்” என்றார்.

 

சின்ன புன்னகையுடன் இன்டர்க்காமை எடுத்தான் அர்ஜுன் ஹோத்ரா. அடுத்த சில நிமிடங்களில் அவனுடைய அலுவலறைக்கு அவருக்கு பிடித்தமான மதுபானங்கள் வந்து சேர்ந்தன.

 

“உன்ன பத்தி நல்லா தெரிஞ்சும் மிஸ்ஜட்ஜ் பண்ணிட்டேன்…” என்றார் வருத்தத்துடன்.

 

“நோ ப்ராப்லம்…” – அதை பொருட்படுத்தாமல், கிளாஸை உயர்த்தினான். இருவரும், “சியேர்ஸ்…” செய்து கொண்டு மது அருந்தினார்கள்.

 

“பட்டேல் மேட்டருக்கும் இந்த பொண்ணுக்கும் ஏதாவது சம்மந்தம்?”

 

“நோ…” – அவர் முடிப்பதற்குள் உறுதியாக மறுத்தான்.

 

“ம்ம்ம்… ஓகே…” – சிந்தனையுடன் தலையை மேலும் கீழும் அசைத்தவர், “டெல்லி ட்ரிப் பத்தி உன்னோட பிளான் ரொம்ப கிளீனா இருந்தது. டீம் ரெடி பண்ணிட்டியா?” என்று அடுத்த விஷயத்திற்கு தாவினார்.

 

“எஸ்… ஆல் செட்…”

 

“நைட்ல நிம்மதியா கண்ணை மூட முடியல. ஐ ஜஸ்ட் நீட் தட் ப்ளடி நாயக்ஸ் பிளட்…” – வெறியில் பளபளக்கும் கண்களுடன், பாட்டிலில் இருந்த சிகப்பு வொயினை கிளாசில் ஊற்றி அதையே நாயக் குடும்பத்தின் ரத்தமாக பாவித்து தொண்டையில் சரித்தார். அவருடைய கொதிப்பு அடங்கவில்லை.

 

“சீக்கிரமே அந்த சூடான திரவத்தை உங்க கிளாசுக்கு கொண்டு வருவேன்…” – பெரும் சூறாவளியை உள்ளடக்கிக் கொண்டு, அமைதியாக அவர் கிளாசில் இன்னொரு பெக் ரெட் வொயினை ஊற்றினான் அர்ஜுன் ஹோத்ரா.

 

**********************

 

அதே நேரத்தில் உத்திர பிரதேசம் கான்பூரில் உள்ள ஸ்ரீ ரிஷிமகான் ஆசிரமத்திற்குள் பிரவேசித்த பகவான், ஒரு துண்டு சீட்டை அங்கிருக்கும் பணியாள் ஒருவன் கையில் திணித்தார். அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவன் சற்று நேரத்தில் திரும்பி வந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

 

“எனிதிங் சீரியஸ்?” – காவி உடையில் அவர் எதிரில் தோன்றினான் ஜெனார்த் நாயக். ஆம்… அடிக்கடி இடமாறிக்கொண்டே இருக்கும் ஜெனார்த்தின் தற்போதை இருப்பிடம் இந்த ஆசிரமம் தான்.

 

“ஆபரேஷன் கன்பார்ம்… இந்த மாசம் இருபத்தியஞ்சாம் தேதி… ஹோட்டல் அன்தாஸ்… ரூம் நம்பர் 302…” – குறிப்பாக கூறினார் பகவான்.

 

ஜெனார்த் அவரை இமைக்காமல் பார்த்தான். ஜெகன் நாயக் காலத்திலிருந்தே கோர்த்தா ப்ளாக்கை முற்றிலும் வழிநடத்தும் மூத்த தளபதி… தலைமை பொறுப்பில் ஜெகன் இருந்தாலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை முற்றிலும் பெற்றிருந்தவர்… ஜெகன் நாயக்கின் நட்பை சம்பாதித்தவர்… நம்பிக்கைக்கு பாத்திரமானவர்…

 

நியாயமான நம்பிக்கை தான். அனைத்தையும் இழந்த பிறகும், சிறிதும் மனம் தளராமல், சர்வபலம் பொருந்திய கோர்த்தா ஒயிடின் ஆணிவேரை பிடுங்க ஆயத்தமாகி நிற்கிறாரே இந்த மூத்த மனிதர்! – அவனுடைய பார்வையில் வியப்பு கூடியது.

 

“கூட பாதுகாப்புக்கு எத்தனை பேர் வர்றாங்க?” என்றான் ஜெனார்த் நாயக்.

 

“சுக்லா வர்ற பிளைட்ல கார்ட்ஸ் யாரும் வரல… 3 மணிநேரம் கழிச்சு அடுத்த பிளைட்ல தான் வர்றாங்க”

 

“விசித்திரமான இருக்கு! நமக்கான ட்ராப்பா இருக்க போகுது” – எச்சரித்தான் ஜெனார்த்.

 

“இல்ல… டிக்கெட் ப்ராப்லம்…”

 

“இன்பர்மேஷன் உண்மையா?”

 

“நூறு சதம்…”

 

“அப்போ அந்த மூணு மணிநேரம் தான் நமக்கு கிடைக்கிற கோல்டன் டைம்”

 

“கரெக்ட்… ஏர்போர்ட்லிருந்து ஹோட்டல் வரைக்கும் லோக்கல் செக்யூரிட்டி கார்ட்ஸ் கூட இருப்பாங்க”

 

“அப்போ ரூம்ல வச்சு முடிப்போம்”

 

“பால்கனி இல்லாத ரூம். மெயின் டோர் வழியா மட்டும்தான் உள்ள போக முடியும்”

 

“செக்யூரிட்டி கேமிராவை ஹேக் பண்ணிட்டு உள்ள உள்ள நுழைஞ்சிடலாம்”

 

“டோர்ல இருக்கறது டிஜிட்டல் லாக்… ரிப்ரோகிராம் பண்ணினாதான் கதவை திறக்கமுடியும்”

 

“அதுக்கான ஸ்பெஷலிஸ்டை ஹயர் பண்ணுங்க”

 

“பண்ணியாச்சு” – பகவானின் கூற்றை கேட்டு அவரை பெருமிதத்துடன் பார்த்தான் ஜெனார்த்.

 

“அப்போ டீம் ரெடியாயிடிச்சு ரைட்?”

 

“ரைட்…” – ஆமோதிப்பாக தலையை அசைத்தார்.

 

“தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. இந்த ஆப்பரேஷனோட வெற்றி தான் என்னோட தூக்கம்” – ஜெனார்த் நாயக்கின் குரலில் துக்கமும் கோபமும் விரவியிருந்தது.

 

அவன் தோளை தட்டிக் கொடுத்தார் பகவான். “ராகேஷ் சுக்லா செத்துட்டாங்கற செய்தியோட வந்து உன்ன தாலாட்டுறேன்… அதுவரைக்கும் அமைதியா இரு” – ஜெனார்த் நாயக்கின் பாரத்தை தன் தோள் மீது சுமந்துக் கொண்டு மலை போல் நிமிர்ந்து நின்றார்.

 
9 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Ada Arjun avala love pannalya?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Ganeshan says:

  Nice ud sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Daisy Mary says:

  என்னப்பா நடக்குது இங்க….

  மீசை காரன் வந்தான்…
  சின்ன பிள்ளை தனமா பூச்சாண்டி காட்றான்….

  thn mission ஸ்டார்ட் ஆக போகுதுன்னு புரியுது…

  டேய்… அர்ஜுன் கழுதை….
  மிது விஷயத்துல தப்பு பண்ண நீ காலி…. பார்த்துக்கோ….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Daisy Mary says:

   thn மிது கிட்ட ஏதோ ஒரு ரகசியம் இருக்கு…..

   அப்படி ஏதும் இருந்தா வாசகர்களாகிய எங்கள் நெஞ்சு புண் படும் படி ஏதும் கதைல சொல்லிராதிங்க….

   அர்ஜுன் ஹோத்ரா மிரட்டி கேட்டாலும் சொல்லிராதிங்க….

   மீசை காரன் கோபத்தை முடிக்குள்ள மரஞ்சிருக்கிற முகத்துல காட்ட try பண்ணாலும் சொல்லிராதிங்க…..

   சொல்லிராதிங்க…
   சொல்லிராதிங்க…..

   பூ போல மிது ஓட கதை ய சொல்லுங்க….
   எங்க மனசு சந்தோச படர மாதிரி சொல்லுங்க….:-D


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma maheswari says:

    Yeah daisy naanum ithai thaan நினைக்கிறேன் .
    But enaku ennamo Ava yetho ivanai divert Panna ippadi nadanthukiraalo அப்படின்னு இருக்கு


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  NICE UD SIS


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kurinji says:

  Arjun Mulu pusaniyai maraikiriyo.talaivaa solamal kudhisitte.miru bagavan ponno.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Naina says:

  Add Arjun and Mrithula scenes ya


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Naina says:

  Where’s mrithula?

You cannot copy content of this page