Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

என்ன தவம் செய்தனை டீஸர்

 

என்ன தவம் செய்தனை:

குட்டி டீஸர்( சும்மா போட்டேன் நல்லார்க்கான்னு சொல்லுங்க)

நள்ளிரவில் கண்விழித்தவள் பட்டப்பகல் போல் எரியும் ஒலிவிலக்கின் வெளிச்சம் அவள் முகத்தில் பட்டு கூசச் செய்ய நெற்றியை சுருக்கொண்டு மெல்ல கண்வழித்தாள் ஈஷா…

கண்கள் இரண்டையும் மிக சிரமப்பட்டு பிரித்தவள் அறையை நன்கு சுற்றி பார்த்தாள்… தாம் இங்கே எதற்கு வந்தோம் என்று சிந்தித்தவள் சற்று நேரத்திற்கு முன் நடந்த களோரபத்தை எண்ணியவள்,  அதனால் தான் தற்கொலைக்கு முயற்சித்து தூக்க மாத்திரை சாப்பிட்டது  நினைவில் வர கண்களிலிருந்து நீர்மனிகள் உருண்டோடியது… அதுவரை தன் சிந்தையில் இருந்தவள் அப்போதுதான் கவனித்தாள்  தனக்கு வெகு அருகில் நாற்காலியில் கையில் புத்தக்கத்தோடு சைதன்யா அமர்ந்திருக்க  விழிகள் சுருங்கி யோசனை மேலோங்கியது இவன்….. இவன் எதற்கு தனக்காக அமர்ந்திருக்கிறான் என்று தோன்ற..

தன் கழுத்தை ஏதோ உறுத்த என்ன என்று பார்த்தவளுக்கு தலை உண்மையாகவே சுற்றியது…. ‘எனக்கு… எனக்கு திருமணம் ஆகிவிட்டதா …. இது எப்படி நடந்தது ….. ஒருவேளை மண்டபத்தில் நடந்ததா இல்லை தான் சுயநினைவு இல்லாமல் இருக்கும் போது நபாந்ததா…. யோசிக்க முடியாமல் முடிவில் தலைவலியை வாங்கி கொண்டதுதான் மிச்சம்….

‘எனக்கு ஒன்னும் புரிலையே யார்??

யார் ??

எனக்கு தாலி கட்டுனது ஒரு வேளை சக்தி மாமாவா’ …

இல்லை வாய்ப்பில்லை ….. அவர்கள் பேசிய வாரத்தை இன்னும் அவள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது….

அய்யோ நான் இப்போ யாரிடம் கேட்பது….  அம்மா அப்பா எங்கே!!  தன் அண்ணன் எங்கே!!! யாரும் இல்லையே என்றவள் சற்று உடலை அசைத்தாள்…

அவளின் அசைவை அறிந்து… வேகமாக வந்த சைதன்யா ஏதாவது வேணும்னா என்ன கூப்பிடுங்க என்று தனுக்கு தெரிந்த  தத்துக்குத்து தமிழில் மெதுவே பேசினான்… தன் முன் நின்றவனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் ஈஷா…

அவள் பார்வையை அவனும் உணர்ந்தானோ… என்னவோ அவளை நோக்கி புன்னகை வீசினான்( மன்மதனின் மாய புன்னகைக்கு மயங்காதாவர் யவர்!!!)… அவனின் சிரிப்பு எதற்கு என்று உணர்ந்தவள்’சாரி… சாரி… நான் ….. நான்.’

‘நீங்கதான் சொல்லுங்க ‘ என்று சைதன்யா எடுத்துக் கொடுக்க அவளுக்கு வெட்கத்திலும் அறிமுக மில்லாத ஆடவன் முன் இப்படி தான் இருக்கும் நிலையை அறிந்தவளுக்கு வார்த்தை வரவில்லை போலும் ‘அது இல்லை எனக்கு …. கழுத்தில் தாலி…. அம்மா அப்பா அண்ணா எங்கே??’ அவள் எதை கேட்க வருகிறாள் என்று உணர்ந்தவன்

அவளை நோக்கி ஒரு அடி முன்னே சென்று ‘தாலி மட்டும்தான் பாத்தீங்களா… உங்க நெற்றியில் குங்குமமும் …. காலில் மெடியும் இருப்பதை பார்க்க தவரிட்டீங்க ‘ என்றவன் அவளுக்கு ஒரு புரியாத புதிரை போட்டுவிட்டு ‘ வேற ஏதாவது உதவி வேணுமா’ என்று கேட்டவனை பார்த்து வலதும் இடத்துமாய் தலையை மட்டும் ஆட்டி வேண்டாம் என்றாள்…

அவள் பதிலுக்காக காத்திருந்தவன் ‘சரி’ என்ற தோடு அவளைவிட்டு  விலக முயல ‘சாரி சொல்லவேண்டிய அவசியமில்லை’ என்றிவிட்டு சென்றான்…

அச்சோ தன்னை கண்டுகொண்டானே என்றவளுக்கு முகுந்த வெட்கமாய் போய்விட்டது…

பின்பு

தன் கழுத்தில் கிடக்கும் தாலியை நொடிக்கு ஒருப் பொழுது எடுத்துப் பார்ப்பதுமாய் வைப்பதுமாய் இருந்தால்….

அவளது சிறுபிள்ளை தனத்தை ரசித்தவனாய் அவளை பார்வையால் விழுங்கிக் கொண்டு இருந்தான் சைத்தன்யா சர்மா( டேய் அவளுக்கு தெரிஞ்சது என்ன நடக்குமோ)

நன்றி💐💐💐
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    T Selvi says:

    Nice story line.

You cannot copy content of this page