Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-36 &37

அத்தியாயம் 36

 

நீர் இரைக்கும் கேணி கைநழுவி தரையில் விழுந்து சிதறகாரிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்த சாதிக்கை கண்டு அப்படியே உறைந்து நின்றிந்தவளின் எண்ணோட்டத்தில் பல கேள்விகள்??

 

இவன்இவன் இப்போது எதற்கு இங்கு வருகிறான்??

 

இருக்கிற பிரச்சனை போதாதென்று இது வேறயாஎன்று நினைத்தவளுக்கு ஆயாசமாக வந்தது

 

இவனுக்கு எப்படி தான் தங்கியிருக்கும் இடம் தெரியும்???

 

அவள் தனக்குள் முழுகி யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் அருகில் வந்தான் சாதிக்

 

மித்ரா…. ஏன் இப்படி சொல்லாம கொள்ளாஎதுக்கு இங்க கிளம்பி வந்திருக்கிங்க”?- அவனின் கேள்வி அவளுக்கு எரிச்சலை கிளப்ப அமைதியாக இருந்தால்அவளிடமிருந்து பதில்லாமல்  போக அவன் மேலே தொடர்ந்தான் `என்னபிரச்சனையா இருந்தாலும் அதுக்குன்னு நீங்க இப்படி தனியா இங்க வந்து கஷ்டப்படனுமா???

 

நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது நீங்க இருக்கும் இடம் எப்படி தெரியும்னு தானே பிஸ்னெஸ் விஷயமா வெளியூர் போயிருந்தேன் போனவாரம் தான் நான் இந்தியாவுக்கு திரும்புனேன் வந்ததும் வராததுமா என் பிரண்ட் ஒருத்தன் உங்களை எக்மோர் ஜங்க்ஷன்ல பார்த்ததா சொன்னான் அப்போவே சந்தேகமா இருந்தது அதான் கிளம்பி இங்க வந்தேன் நீங்க இங்கதான் இருப்பீங்கன்னு

 

நான் நினைச்சது சரியாபோச்சிஎன்றவன் மித்ராவை பார்த்துக் கொண்டே

 

நான் அன்னைக்கு சொன்னதை நீங்க கொஞ்சம் யோசிச்சி பார்த்திருந்திருக்கலாம்நீங்க கொஞ்சம் யோச்சிருந்தா இந்த நிலைமைக்கு நீங்க தள்ளப்பட்டிருக்க மாட்டிங்க மித்ரா”- சாதிக் தன் கணவன் மீது பழி சுமத்தியதை பொறுக்க மாட்டாமல் `போதும் சாதிக்எங்களுக்குள்ள என்ன நடந்ததுனு  தெரியாம நீங்களா எப்படி ஒரு முடிவுக்கு  வரலாம்தன்னை பொரிந்து தள்ளியவளை பார்த்தவன்….

 

அவன் உங்கள வேண்டாம்னு தானே அனுப்பிட்டான்அவனுக்கு போய் இவ்ளோ சப்போர்ட் பண்றிங்கசாதிக்கின் பேச்சு மித்ராவிற்கு கோபத்தை அதிகப்படுத்த

 

சாதிக்….,,,,, போதும் இதுக்குமேல ஒருவார்த்தை பேசுனிங்க ….. நான் மனுஷியா இருக்க மாட்டேன்….. அவர பத்தி பேச உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது….

 

அதுவுமில்லாம….  உங்களுக்கு எந்த உரிமையுமில்ல…வார்த்தைய அளந்து பேசுங்க என் பாவா ஒன்னும் என்னைய போக சொல்லலநான் தான் அவர் வாழ்க்கை நிம்மதி வேண்டி பிரிந்து வந்தேன் என்றவள்  தன் கணவன் மீது குற்றம் உரைத்த சாத்திகை அரவே வெறுத்தவள்

 

அவளின்என் பாவாஎன்ற சொல் சாதிக்கை ரணப்படுத்ததான் செய்தது ஏனென்றால் முன்பு அவள் மீது காதல் சுமந்த இதயம் அல்லவா வலி இருக்கத்தான் செய்தது இருந்தும் அதை சமாளித்தவன் இன்று அவள் வேறு ஒருவனுக்கு மனைவி மட்டுமில்லாமல் ஒரு குழந்தையை சுமக்கும் தாய் என்பதை கருத்தில் கொண்டவனாய்

 

வலிமிகுந்த ஒரு புன்னகையை சிந்தினான்அவளின் இந்த தெளிவான பேச்சும் அவள் பாவா மீது அவள் கொண்டுள்ள அன்பை  வெளிக்கொணரவே இது வரை பேசியதுஅதை அவளுக்கு புரிய வைக்க முனைந்தான்….

 

அவள் மீது தான் கொண்ட காதல்தான் அழிந்ததே தவிர அவள் மீது கொண்ட அன்பு என்றும் மாறாமல் நிலைத்திருக்கவே அவளை நாடி வந்தான்

 

இவ்ளோ தூரம் விட்டுக்கொடுக்காம பேசுற உங்களுக்கு ஏன் ஆதி மேல நம்பிக்கையில்லாம போச்சு’- அவன் கேள்வி, தன் மண்டையில் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்துப்போல் உணர்ந்தாள்

 

உண்மை உரைக்க அவள் மனமோ அதை ஏற்றது

 

உண்மைதான் அவன் கேட்பது முற்றிலுமாக உண்மை

 

ஏன்????… ஏன்????

 

அந்த நம்பிக்கை தன்னவனின் மேல் தனக்கு இல்லாமல் போயிற்று…. இதை நான் எப்படி யோசிக்க மறந்தேன்…. அவள் சிலை என இறுகி நின்றிருக்க

 

அவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன்  `நான் உங்கள எந்த விதத்திலும் காயப்படுத்த விரும்பல மித்ராநான் இப்போ எந்த சொந்தமும் கொண்டாட வரலஒரு நண்பனா உங்ககிட்ட கேட்கிறேன் வாங்க வீட்டுக்கு போகலாம்அங்க உங்கள காணோம்னு தவிச்சிபோயிருப்பாங்க’- அவனின் பதிலோ அவள் கருத்தில் பதியாமல் தன்னவனின் மீது நம்பிக்கை எப்படி தனக்கு இல்லாமல் போனது என்றதில்லையே திளைத்து நின்றது

 

தான் அவசர பட்டுவிட்டோமோ தன் பாவாவிடம் கலந்து பேசிருக்கலாம் என தோன்றஅவனிடம் விளக்கம் கூட கேட்காமல் அவனை பிரிந்து வந்தது தவறென்று புரிந்தவளுக்கு தான் செய்தது முட்டாள் தனமாகவே தோன்றியது

 

இதை உணர்வதற்கு மூன்றாம் மனிதனின் உதவியோடுதான்  தன்னவனை புரிந்துக்கொண்டோமா அவள் மனம் தன்னையே வெறுத்து

 

தன்னவனின் கணிப்பில்  அவன் சரியாகத்தான் நடந்துக் கொண்டானோ தாம் தான் அறிவற்றுப்போய் வந்துவிட்டோமா என்று தோன்றி குற்ற உண்ர்வு எழ நான் வரவில்லை என்றவள் எனக்கு யோசிக்க அவகாசம் வேண்டுமென்றும் கூறினாள்

 

அவள் எங்கே மறுத்து விடுவாளோ என்று பயந்தவன் பின்பு யோசிப்பதாய் அவளின் வாய் மொழியாக  கூற மகிழ்ச்சி அடைந்தான்

 

`எதுவா இருந்தாலும் நல்ல முடிவா எடுப்பிங்கன்னு நான் நம்புறேன்சரி அப்போ நான் கிளம்புறேன்என்று கூற தன்னை தடுத்தவளைப் பார்த்தவன் ` உங்க பயம் அவசியமில்லாதது மித்ராநானா எதுவும் சொல்லமாட்டேன்இதை என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நம்பலாம் என்றவன் கிளம்பி சென்றான்( தானா போய்த்தான சொல்லமாட்டான்  கேட்கிறவங்க வந்து கேட்டா)

 

அவன் கேட்ட கேள்விகள் அவள் மண்டையை குடைய அவதானித்தவளாக கால்கள் தரையில் மடிய அப்படியே அமர்ந்தாள்

 

எப்படி????… எப்படி நான் இதை மறந்தேன்

 

திருமணத்திற்கு முன்பு அவன் நடந்துக் கொண்ட விதம் அவன் மனதில் ஏற்பட்ட காயங்களின் ரணத்தைப் போக்க மட்டுமே…. அவன் சென்ற பாதை தவறென்றாலும் அதுவும் தன்னை அவன் பார்ப்பதற்கு முன்பு அதுவும் இறந்தகாலம்

 

பிறகு அதையும் அவன் சரிசெய்து விட்டானே

 

பின்பு ஏன் இந்த பிடிவாதம் அவள் மனம் எடுத்துரைக்க ஏன் என்ற கேள்விக்கு விடையும் கிடைத்தது

 

நேஹா…. ஆம் நேஹா அப்போது நேஹாவின் வயிற்றிலிருக்கும் குழந்தை மீண்டும் குழம்பினாள்

 

இல்லை நிச்சயம் இதற்கும் தன்னவனுக்கு எந்த சம்மந்தமும் இருக்காது என்பதை உறுதியாக நம்பியவள்அவளுக்கே வியப்பாக இருந்தது இந்த தெளிவான சிந்தனை ஏன் முன்பேயில்லாமல் போனது….

 

மேலும் தன்னவனிடம் செல்ல துடிக்கும்  மனம் ஒருபுறமிருந்தாலும்வேறொரு மனமோ அவளை குற்றம் சாட்டியது அவன் மேல் குற்றம் சுமத்தி பிரிந்து வந்தவள் இன்று இணைய துடிக்கிறாயே அவன் உன்னை ஏற்றுக்கொள்வானா என்று

 

 என்ன???  நிச்சயம்

 

 அவளுக்கு நன்கு தெரியும் தன்னவனைப் பற்றி…. அவன் தன்னிடம் என்றும் கூறுவது

 

` ஒரு பொருள் வேணும்னா எப்படி என்னோட தக்கவச்சிக்கணும்னு எனக்கு தெரியும்….

 

 

அதே வேணானாலும் அது எவ்வளோ பெரிய பொக்கிஷமா இருந்தாலும் தூக்கி ஏறிஞ்சிட்டு போயிட்டே இருப்பேன்’- மனம் இரண்டாக பிளக்க உள்ளுக்குள் நொறுங்கி போனாள்

 

உண்மையாக அவன் தன்னை வெறுத்துவிட்டீர்ப்பானோ அதனால் தான் தன்னை தேடி வரவில்லையா!!!

 

இருக்கலாம்தான் செய்த முட்டாள் தனத்திற்கு இந்த தண்டனை தனக்கு தேவைத்தான் என்றே தோன்றியது ….

 

மீண்டும் அவள் மனதில் ஒரு நப்பாசை இப்போது நான் சென்றாள் அவர் என்னை ஏற்பாரா???

 

இல்லை என் மேல் நம்பிக்கையில்லாமல் தானே சென்றாய் அப்படியே இருக்கட்டும் நம்பிக்கை இல்லாதவள் எனக்கு வேண்டாமென்று கூறிவிட்டாள்…. நினைக்கவே அவள் மனம் நடுங்கியது

 

என்றும் அவன் கண்ணில் காதலை மட்டுமே சுமந்து தன்னை பார்க்கும் பார்வையில் இன்று வெறுப்பை சுமந்துக் கொண்டு பார்க்கும் சக்தி தனக்கு இல்லையென்றும் தோன்ற, வேண்டாம் அவர் என்னை அப்படி பார்த்தார் என்றால் அந்த நிமிடம் என் உடம்பில்  உயிர் தரிக்காது என்றவள் தன் முடிவில் உறுதியாய் இருந்தால் நாம் இப்படியே இருந்து விடுவது நல்லது என்று

 

********************************

 

நள்ளிரவு தாண்டி  வீட்டிற்கு வந்தவன் மதுவின் உதவியோடு நன்கு உறங்கிக்கொண்டிருக்க… அவனது அலைபேசி அலறியது… நெற்றி யோசனையில் சுருங்க அளறிக்கொண்டிருந்த அலைபேசியை உயிர்பித்தவன்‘ ஹலோ’ என்றபடி காதில் வைக்க …. மறுபக்கத்திலிருந்து வந்த செய்தியை கேட்டு’வாட்’ என்று அதிர்ந்தவன்

 

‘என்ன’???

 

என்ன சொல்றிங்க உண்மையாகவா’ என கேட்டு அறிந்தவன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்தான்

 

*************************************

 

` டோன்ட் நீட் எனி எக்ஸ்பிளனேஷன் வான்ட் தி அன்செர்`

 

சார் என்றவனை தடுத்த ஜெகதீஷ் தன் ஆள்காட்டி விரலை வைத்து பிரபாவை எச்சரிக்க

 

இங்க பாருஉன்கிட்ட நான் எதுவும் கேட்கலஎனக்கு வேண்டியது ஒரே பதில் எஸ் ஆர் நோஅது மட்டும்தான் வேண்டுமென்று கறாராக கூறியவனிடம் இதற்குமேல் உண்மையை மறைப்பது நல்லதன்று என உணர்ந்தவனாய் `ஆமா…,,, சார் உண்மைதான்என்று கூறியவனை அடித்து நொறுக்கும் வெறியோடு பார்திருந்தவன் இதற்கு மேல் தன் பொறுமையை இழுத்து வைக்க முடியாது என எண்ணியவன்இங்க இருக்கும் பொறுப்புகளை ஆதியிடத்திலிருந்து பிரபாவை பார்க்க சொன்னவன் தான் இந்தியாவிற்கு செல்ல விமான பயணச்சீட்டை ஆன்லைனில் அவசர அவசரமாக பதிவு செய்தான்

 

பிரபாவோ சூழ்நிலை புரிந்தாலும்ஜெகதீஷ் அங்கு சென்றால் என்ன நடக்கும் என ஊகித்தான்….ஏற்கனவே தன் மனைவி எங்கு சென்றால் என்று தவித்துக் கொண்டிருக்கும் ஆதியை பத்தி யோசித்தவன் இந்நிலையில் இவன் அங்கு சென்றால் நிச்சயம் பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளதாக எண்ணி

 

மீண்டும் ஜெகதிஷை தடுத்த வண்ணம்`சார்…. இன்னும் ஒரு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு சார்அது முடிஞ்சதும் கிளம்பலாம் சார்’- பிரபாவின் மனதை அறிந்தவன்

 

`உன்னோட இந்த விசுவாசத்தை அவனோடு நிறுத்திக்கோஉண்மைய சொல்லபோனாநீங்க ரெண்டு பேரும் எனக்கு செய்த துரோகத்திற்கும் இப்போ எனக்கு இருக்கிற கோபத்துக்கு நான் உன்ன ஏதாவது செய்யுறதுக்கு முன்னாடி போயிடு’- ஜெகதிஷின் இந்த கோபத்தைப் பற்றி முன்னே அறிந்துவைத்திருந்தவன்

 

`சார் நான் சொல்றத கொஞ்சம்தன் ஒற்றை விரலை அவனை நோக்கி உயர்த்தியவன்

 

 `வில் யூ ப்ளீஸ் கெட் அவுட் இடியட்….

 

டூ வாட் செஅதற்குமேல் அவனுக்கு பேச துணிவிருக்குமா என்ன ` ஓகே சார்நீங்க சொல்ற மாதிரியே செய்றேன் சார்என்றவன் விட்டால் போதுமென்று வெளியே ஓடிவிட்டான்என்ன செய்வதென்று யோசித்த பிரபா, ஆதிக்கு அழைத்து விவரத்தை தெரிவித்தான்….

 

அத்தியாயம்37

 

அலுவலகத்திற்கு கிளம்பி தன்னை தயார் செய்துக் கொண்டு கீழே வரவேற்பு தளத்திற்கு வந்தவனை தீபாவின் பார்வை  தொடர்ந்தது

 

மித்ரா சென்ற நாள் முதலாய் இன்று வரை அவனின் செய்கையை கவனித்துக் கொண்டுதான் வந்தார்அவன் மகிழ்ச்சியாக இருந்ததே இந்த இடைப்பட்ட நாட்கள்தான் மீண்டும் அவன் மகிழ்ச்சி பறிபோக முன்னே மாதிரி அழுத்தமாக காணப்பட்டான்

 

ஆனால் வேறு மாதிரியாக முகத்தில் சிரிப்பில்லாமல் கலையிழந்து எந்நேரமும் கவலையும் யோசனையும் தொய்த முகமாக காட்சியளித்தவனைக் கண்டு அவர் மனம் வெதும்பியது….

 

`ஆதி கண்ணா சாப்பிட்டு போடா வேலைக்குதீபா அவனை அழைக்க அவனோவேண்டாம்என்ற ஒற்றை வார்த்தையோடு சென்றவனை தடுத்து`கண்ணா எனக்கு உன்னோட கஷ்டம் புரியுது அதுக்குனு இப்படி இருந்த எப்படி கண்ணா

 

`ஆமா ஆதி…,,,, போலீஸ் கிட்ட தகவல் கொடுத்திருக்கோம்கண்டிப்பா மித்ரா இருக்கும் இடம் தெரியும் நீ பயப்படாம தைரியமா இருதீபாவை தொடர்ந்து வெங்கட்ராமனும்  ஆதிக்கு ஆறுதலித்த அதே சமயம்

 

சென்னையில் தளமிறங்கிய நியூயார்க் (JFK) ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து இறங்கியவன் நேராக தன் உடமைகள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு `கால் டாக்ஸியைபிடித்தவன் தன் வீட்டிற்கு விரைந்தான்

 

தான் தாய் நாட்டிற்கு திரும்புகிறோம் என்ற செய்தியை எவரிடமும் கூற பிடிக்காமல் விரைவாக தன் பயணத்தை மேற்கொண்டு வந்தவன் தன் வீட்டை அடைந்த நிமிடம் அங்கு ஆதியை கண்டான்

 

ஆதியை பார்த்தவனின் கோபம் எக்குதப்பாக ஏகுற அவன் செய்த துரோகத்தை நினைத்தவனுக்கு  கோபம் அழையா விருந்தாளியாக வந்தது அய்யனார் சிலைப்போல் நின்றிருந்தான் ஜெகதீஷ்

 

அவர்கள் உரையாடலை கேட்டவன் எரியும் தீயில் என்னை ஊற்றியத்துப்போல் தோன்ற

 

`சபாஷ்…. வேல் டன்என்று

 

கைதட்டலுடன் உள்ளே நுழைய ஜெகதிஷின் வருகை ஆதியை தவிர அனைவருக்கும் இன்பதிர்ச்சியாக இருக்கஅதிர வேண்டியவனோ அழுத்தமாய் நின்றான்

 

எந்த ஒரு சலனமுமின்றி அவனைப் பார்த்து அமைதியாக நின்றான்

 

ஆதியை தவிர அனைவருக்கும் ஜெகதிஷின் வருகை ஆனந்தமாக இருக்க சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பின்று வந்து நின்ற மகனை கண்ட பூரிப்பில் இன்முகத்தோடு அவனை நெருங்க

 

தன் அன்னையை கைக்கொண்டு தடுத்தவன்` அங்கையே நில்லுங்கயாரோட பாசப்பிணைப்பும் எனக்கு தேவையில்லைஎன்றவனை புரியாமல் பார்க்க

 

அவனோ `நான் இப்ப பேசவேண்டியது ஆதிக்கிட்ட மட்டும்தான்அதை நீங்க எல்லாரும் இடையில் கேள்வி கேட்காம வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்என்றவன் தன் அழுத்தமான காலடிகளை எடுத்து வைத்து ஆதியை நெருங்கதீபா முதல் வர்ஷா வரை அனைவரின் பார்வையும் ஜெகதீஷ் மீதே நிலைத்திருந்தது

 

ஆதி தன் அழுத்தமான பார்வையை வேறெங்கோ பதித்தப்படி நின்றுக்கொண்டிருந்தான் `அது எப்படி ஆதி அச்சு பிசகாம நடிச்சி அருமையா காரியத்தை சாதிச்சிருக்க….

 

ஹ்ம்ம் பக்கா நடிப்பு….

 

உன் நடிப்புல நானே முட்டாள் மாதிரி ஏமாந்திருக்கேன்ஹ்ம்ம் குட் ஜாப்

 

ஆனா பாவம் என்ன செய்றது உன்னோட சாயம் வெளுத்திரிச்சி…. ஒட்டுமொத்த குடும்பத்தையும் நம்ப வச்சி ஏமாத்திருக்க’ – ஜெகதீஷ் கூற வருவது அனைவருக்கும் புரியாத புதிராக இருக்க

 

ஜெகதிஷை பார்த்த தீபா` என்னடா ஜெகா வந்ததும் வராததுமா என்னடா சம்பந்தமில்லாம கேள்வி கேட்டுகிட்டு இருக்கபார்வையால் தன் அன்னையை உற்று நோக்கியவன்

 

`எதுவும் சம்பந்தமில்லாமலோபுரியாமலோ இந்த ஜெகதீஷ் பேசமாட்டான்என்று கூறியவன் மேலே தொடர்ந்தான்

 

` துரோகம் பண்றதுக்கு கூட ஒரு வரைமுறை இருக்கு ஆதி

 

ஆனா நீ???

 

உன்னோட சுயநலத்துக்கு மூணு பேரோட வாழ்க்கையை வீணாக்கியிருக்க…. நான் மித்ராவ காதலிச்ச நாள் முதல் நான் நியூயார்க் போற வர எல்லாமே உனக்கு தெரியும்

 

எல்லாத்தையும் தெரிஞ்ச நீ

 

உன்னோட பழி உணர்ச்சிக்கு மித்ராதான் இரையானாளாமித்ராவை காதலித்தேன் என்று ஜெகதீஷ் கூறுகையில் கைமுஷ்டி இறுக நரம்புகள் புடைக்க கோபம் தலைக்கேற தன்னை மிகுந்த சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தான்அவன் பேபி அவனுக்கு மட்டும் உரிமையானவள் அவளை தன்னை தவிர்த்து யாரும் சொந்தம் கொண்டாட பிடிக்காமல் வந்ததின் கோபம்….

 

அனைவரின் முகத்திலும் கலவரம் தோன்றியது ஜெகதீஷ் மித்ரா மீது ஆசைப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம், ஆனால் ஆதி பழி தீர்ப்பதற்கு மித்ராவை திருமணம் செய்துக் கொண்டான் என்பது அனைவருக்கும் புதிய செய்தியாக இருந்தது

 

அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த தீபா`என்ன சொல்ற ஜெகா…. பழி உணர்ச்சிக்காக திருமணம் நடந்ததாஎன்னடா சொல்ற புரியுற மாதிரி சொல்லு

 

தன் அன்னையைப் பார்த்தவன்`மாம் இந்த மேரேஜ்ஜெ ஒரு டிராமா மாம்அவன் தினேஷ் கூட தொழில் ரீதியா மோதரத்துக்காக அவனை சிக்கவைக்க நினைச்சி போட்டப் ப்ளான் மாம்இது எதுவும் உண்மையும் கிடையாது

 

நீங்க ஒன்னு யோசிக்க மறந்துட்டீங்க கல்யாணம் அன்னைக்கு ஏன்?? நேஹா காணாம போகணும் எல்லாம் பக்கா ப்ளான்பின்பு எதற்கு திருமணம் நடந்தது   என்ற கேள்வி தான் அனைவரையும் குழப்புவது என்று கூறியவன்

 

தன் மரியாதைக்கும், தன் குடும்ப கௌரவர்த்துக்கும் பங்கம் வந்துவிடக்கூடாதென்றும் தொழில் வட்டாரத்தில் அவன் பெயர் இழிவு படாமல் இருப்பதற்காக அவனுக்கு மனைவி என்ற பெயரில் ஒருத்தி வேண்டும் என்று தோன்ற அவளை திருமணம் செய்துக்கொண்டான்

 

அவனைப் பார்த்து கொண்டே குற்றங்களை அடுக்கியவன் கடைசியாக`இவ்ளோ ப்ளான் போட்ட நீ ஒன்ன மட்டும் மறந்துட்டியே ஆதிஇதை சொல்ல மறந்துட்டியா இல்ல உனக்கு சொல்ல விருப்பமில்லையோபரவால நானே நியாபகப்படுத்துறேன்

 

நேஹாவ வேண்டாம்னு நினைச்ச நீ அவளோட குழந்தைக்கு மட்டும் உன்னோட இன்ஷியல கொடுத்திருக்கேஜெகதேஷின்  பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால்…. ஆதிக்கோ மனதில் குற்றவுணுர்ச்சி எழுந்து மேலும் அவன் மனதில் பாரம் ஏறிக்கொண்டே சென்றது…..

 

 மொத்த குடும்பம் தலையில் இடி விழுந்தது ஆதியை பார்த்திருக்க இதற்கு இன்னொரு காரணம் தன் அன்னை என்று கருதியவன்   `நீங்கதான் குடும்ப கௌரவத்தை காப்பாற்றபவர் ஆச்சே எனக்கு நிச்சயித்த பொண்ணுன்னு கூட பார்க்காம அவனுக்கு தாரைவார்த்து  கொடுத்தீங்க

 

சொல்லபோனா இவனைவிட நீங்கத்தான் ஒருபடி மேலப் போய் துரோகம்  பண்ணி யிருக்கிங்க மாம்’- இதுவரை அவன் பேசிய அனைத்திற்கும் மௌனமாக இருந்தவன் தன் சிற்றன்னையை பேச வெகுண்டான்`நிறுத்து ஜெகதிஷ்நான் பண்ணதுக்கு இப்போ சித்திய ஏன் நடுவுல இழுக்கிறஏதுவாகயிருந்தாலும் என்னடம் மட்டும் பேசு என்றவனைப் அனல் பறக்க பார்த்தவன்

 

`யூ ஸ்கௌன்றல்என்ன நடிக்கிறியா?? யாரு யாருக்குடா சித்தி.. அந்த உறவுக்கு மட்டுமில்லஎன்னைக்கு உன் துரோகத்தை காட்டுனுயோ அன்னைக்கே நமக்குள்ள உறவு முறை முறிஞ்சிப்போச்சி

 

ஹ்ம்ம் மித்ராவ இவனே எங்கையாவது கடத்தி வச்சிட்டு டிராமா போட்டாலும் போடுவான் இடியட்என்றவன்

 

`ஏய்…,,,, இப்போ சொல்றேன் கேட்டுக்கோநான் உனக்கு தம்பியுமில்லஎங்க அம்மா உனக்கு சித்தியுமில்ல

 

நீ எப்பவும் ஒரு அனாதை…,,,, அனாதைத்தான் ஆதிநீ…  எப்பவும் என்னைக்கும் தனிமரம்தான் அவன் கூறி முடித்ததும் தீபா பெருங்குரலெடுத்துஜெ…..காதிஷ்ஷ்ஷ்என்றவர் அவன் கன்னத்தில் இடியென ஓங்கி இரு கன்னத்திலும் மாறி.. மாறிஅறைந்து விளாசினார்….

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

 

 

 
9 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Romba wait panra mathiri oru feel. Story maranthu pokuthu pa neenga next epi post panurathukulla. Expect next update every room dear. Anyways as usual superb n fantastic. But feels bad abt brother’s fight.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Romba wait panra mathiri feelam illa paa unmaithaan😂😂😂 indha story arambichi 4 months aga podhu naa sekiram mudika try panren ji konjam adjust panikonga


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Regulara ud koduka try panren sis… Thanks😍


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nandhini Mageswaran says:

  semaaa…..epi mam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks paa


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Super PA. Next epi seekirama podunga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks rajee sis … Nxt sunday


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Sorry dis sunday


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
     Vidya Priyadarsini says:

     Sunday mudunju pochu PA…..