Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-10

உன் உயிரென நான் இருப்பேன்-10

அவளது வீட்டுக்கு வழி சொல்லிக் கொண்டே வந்தான் அபிநவ். அவளை சென்று பார்க்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை அவனுக்கு. ஆரவ் மிக மெதுவாக காரை ஓட்டுவது போலேயே தோன்றியது. அரை மணி நேரத்திற்கு பிறகு அவள் வீட்டுத் தெருவை அடைந்ததும்,

“ஆரவ் ஸ்டாப்..” என அவளது வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி எதிரில் இருந்த மரத்தடியில் நிறுத்த,

“அண்ணா அது தானே அவங்க வீடு? தென் ஒய் இங்கேயே ஸ்டாப் பண்ண சொல்ற?” என ஆரவ் புரியாமல் கேட்டான்.

“ ஆமாடா அப்படியே அவ வீட்டுக்குள்ளேயே போய் விடு. அவங்க அம்மா எனக்கு ஆர்த்தி எடுத்து வெல்கம் பண்ணுவாங்க.. ப்ச் நானே யாருக்கும்ஙயாருக்கும் தெரியாம அவளை பார்க்க போறேன் நீ வேற” என்றவன் காரை விட்டு இயக்கியவன் பதிலையும் எதிர்பாராது சென்றிருந்தான்.

அவளது வீட்டுக்கு செல்வது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. அவள் வீட்டு ஐந்து அடி உயர பின்பக்கத்து சுற்று மதிலை ஏறிக் குதித்தான் அபிநவ்.

இதனை காரினுள் அமர்ந்தபடியே வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்த ஆரவ்வுக்கு தன் அண்ணனின் செய்கையில் அதிர்ந்தான். ஒரு வீட்டுக்குள் திருடனை போல சுவரேறி குதித்து பூனை போல் பதுங்கி பதுங்கிப் போகும் அண்ணனை பார்த்தவனுக்கு,
“ அடப்பாவி அண்ணா.. இந்தப் பூனையும் பால் குடிக்குமானு இருந்தவன் இப்போ பண்றதை பார்த்தா நமக்கே சந்தேகமா இருக்கே.. நம்ம அண்ணாவா இது..” என்றிருந்தது. “சரி நாம நம்ம வேலையே செய்வோம்” தன் ஃபோனை எடுத்தவன் அதில் மூழ்கிப் போனான்.

சுவரேறி குதித்தவன் நேரே சென்றது அவளுடைய அறைப் பக்கம் தான். அன்று போலவே இன்றும் அவளறை ஜன்னல் திறந்திருந்திருந்தது. ஆனால் இன்று அதைப் பாரத்தவனுக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. இப்படி கவனயீனமாக தினமும் திறந்து வைத்திருப்பதற்கு திட்ட வேண்டும். அவனாக இருந்தால் பரவாயில்லை இதுவே திருடனாக இருந்தால் அவ்வளவு தானே எனத் தோன்ற மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தான்.

காற்றிலே வெள்ளை நிற ஜன்னல் திரைச்சீலை பறந்து கொண்டிருந்தது. அவளுடைய மஞ்சத்திற்கு அருகில் மஞ்சள் நிற விளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவனுடைய காதல் தேவதையோ அன்று போல் உறங்கியிருக்கவில்லை. விளக்கின் ஒளியில் மிளிர்ந்த அவள் அழகு, சூரியனின் ஒளி வாங்கி மிளிரும் அந்த நிலவை அவனுக்கு ஞாபகமூட்டியது.

அவளது பக்கவாட்டு தோற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தவன் மெல்ல ஒலியெழுப்பாமல் அவள் பக்கம் விரைந்தான்.

இவன் வந்தது கூட தெரியாமல் இவள் ஏதோ யோசனையில் இருப்பவளை “ஸ்வீட்டி.. ஸ்வீட்டி.. ஸ்வீட்டி! என்றவனின் மூன்றாவது அழைப்பில் திடுக்கிடலுடன் திரும்பியவள் எதிரிலிருப்பவனை கண்டு அலற முற்பட அபிநவ் தன் கையால் அவள் வாயை பொத்தினான்.

“ஹேய் ஸ்வீட்டி நான் தான் அபிநவ்.. ரிலாக்ஸ்” என்று கூறிக் கொண்டிருக்கையில் அவளை பொத்தியிருந்த கையை நனைத்தது இனியாவின் கண்களில் இருந்து வழிந்த ஒற்றைத் துளி.

ஒரு கணம் பதறியவன் அவள் அருகில் அமர்ந்து அவளது முகத்தை கைகளில் ஏந்தினான். தன் தேவியின் கலங்கியிருந்த விழித்திரையை பார்த்தவன் துடித்துப் போனான். என்னுயிரின் பாதியை அழ வைக்கும் தைரியம் யாருக்கு வந்தது?

“ இனியா என்னாச்சு மா? ஏன் அழுற?” என அவள் முகத்தை கையிலேந்தியபடி தன்னவள் அழுகைக்கான காரணத்தை வினவ , மறு கணம் அவன் மார்பினுள் முகம் புதைத்து அழ மேலும் பதறிப் போனான்.

எதிர்ப்பாராத தன் காதலியின் அணைப்பில் உடல் சிலிர்தாலும் அவளது அழுகைக்கான காரணத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் அவளை விலக்கியவன் அவளது முகத்தை நிமிர்த்தி ,

“ஹேய் சொல்லுடி ஏன் அழுறனு கேட்குறேன்ல” என அவளை பார்த்துக் கேட்டான்.

“இல்லை நீ..நீங்க என் கூட பேசவே இல்லையே.. அன்னைக்கு நைட் மட்டும் வந்துட்டு போயிட்டீங்க .. அதான் பயந்துட்டேன்.. நீங்க என்னை மறந்துட்டீங்கனு…” என தன் தலையை குனித்த வண்ணம் மெல்லிய குரலில் அவளது அழுகைக்கான காரணத்தை அபிநவ்வின் இதழ்கள் மலர்ந்தது.

“அது சரி.. அப்படி பார்த்தா நீ என் கூட கோவமா தானே இருக்கனும் பட் மேடம் அப்படியே என்னை அணைச்சிகிட்டீங்களே அது ஏன்?” என கண்களில் குறும்பு மின்ன அவளைப் பார்த்துக் கேட்க, அவளோ வெட்கத்தில் கண்ணக்கதுப்புக்கள் சிவக்க அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சப்பட்ட வண்ணம் தரையை நோக்கிக் கொண்டிருந்தாள்.

அப்படியே அவளை அள்ளி அணைக்க வேண்டுமென்ற ஆவலை கட்டுப்படுத்தியவன் அவளை நெருங்கி அமர்ந்து தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“ ஏன் ஸ்வீட்டி இந்த ஜன்னலை டெய்லி இப்படி திறந்து வைச்சிட்டு தான் தூங்குவியா? திருடன் ரொம்ப ஈஸியா வர்றதுக்கா?” எனக அவளிடம் கேட்க, அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்,

அவனது கண்ணம் கிள்ளியபடி
“ ஆமா உங்களை விட பெரிய திருடனா என் ரூம் உள்ள வர போறான்.. திருட்டுப் பயலே.. என்றவள் தொடர்ந்து “இல்லை அபி.. எனக்கு தெரியும் நீங்க எப்படியும் என்னை பார்க்க வருவீங்கனு.. அதான் தினமும் ஜன்னல் கதவை மூடாம பார்த்துட்டே இருப்பேன்.. இன்னைக்கு உங்களை பார்த்ததும் எனக்கே தெரியாம நான் அப்படி பண்ணிட்டேன்” என்று அவள் தனக்காக காத்திருந்ததை கூற அவ் ஆண்மகனின் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றினாலும் அவளை காக்க வைத்து வருத்தி விட்டோமே என வருத்தம் கொண்டவன்,

“ சாரி ஸ்வீட்டி.. ஆஃபீஸ்ல ரொம்ப வர்க் மா.. அட்லீஸ்ட் உனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாம்.. உன் கால் இப்போ எப்படி இருக்கேனு கூட கேட்க முடியலை. ச்சே.. சாரிம்மா..” என அவளிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டான்.

தன்னவன் வருந்துவது பிடிக்காத இனியா,

“ஐயோ இதுக்கெல்லாம் எதுக்குங்க சாரி விடுங்க. கால் இப்போ முன்ன விட பெட்டர் இன்னும் மூனு வாரம் தானே சரியாகிடும்” என்று கூறிக் கொண்டிருந்தவள் அப்போது தான் அவளது கண்கள் அவனது கையின் உள்ளங்கையில் போடப்பட்டிருந்த பேன்டேஜ் கட்டை கண்டதும் அவள் உள்ளம் பூகம்பம் வரும் போது திடுக்குற்று அசையும் நிலத்தைப் போல பதறித் தான் போயிற்று.

கண்களில் ஒரு கலக்கம் மீதூற உள்ளம் இவனுக்கு கைகளில் என்னவாயிற்று என்று பதைபதைக்க கலங்கிய கண்களின் கடினத்தை கட்டுப்படுத்திக் கொண்டவள் விளையாடச் சென்ற குழந்தை அடிபட்டு வர அந்த காயத்தை கண்ட தாய் துடித்துப் போவது போன்ற பதற்றத்தை தான் அங்கணம் அவள் அனுபவித்தாள்.

இந்த உள்ளங்கை காயம்பட்டு கொள்ளும் அளவுக்கு என்ன செய்தான் இவன்? எதை செய்வதாய் இருந்தாலும் பாரத்து செய்யக் கூடாதா? என அவன் மேல் ஓர் அன்பு கலந்த கோபத்துடன் ஓர் நடுக்கம் பரவ இனியாவும் கலங்கிய குரலில்,

“ எ..என்னாச்சு அபி.. ஏன் கைக்கு இவ்வளவு பெரிய பேன்டேஜ்? ” என பதற்றம் மிகுந்த குரலில் கவலையுடன் வினவ,

அவளது பதற்றத்தை உணர்ந்தவன், “ ஒன்னும் இல்லைமா கிட்சன்ல கிளாஸ் எடுக்க போகும் போது கை தவறி கீழே விழுந்து உடைஞ்சு போச்சு.. சரி அதை கிளீன் பண்ணி விடுவோம்னு கையை வைச்சா அது நம்ம கையை டேமேஜ் பண்ணிருச்சு.. சின்ன காயம் தான்டா.” என அவளை ஆசுவாசப்படுத்த முயன்றான்.

“எது செய்யுறதா இருந்தாலும் பாரத்து செய்யக் கூடாது.. ரொம்ப வலிக்குதா?” என்றபடி தன் இடது உள்ளங்கையால் அவனது கையை தாங்கி வலது கை விரல்களினால் மயிலிறகால் வருடுவது போல் மெல்ல வருடிய வண்ணம் கவலையுடன் வினவினாள்.

அவளது அன்பான இச்செய்கை அவனது இதயத்தையே வருடுவது போல் சுகமாக இருக்க அவளது கையை பற்றியவன் மெல்ல முத்தமிட்டான். தனது இந்த சின்ன காயத்துக்கே துடித்துப் போகும் தன்னவளின் காதலை எண்ணி அவனது உள்ளம் பூரிக்க அவளை எந்த சந்தர்ப்பத்திலும் கலங்க விடவே கூடாது என அவனது காதல் மனம் ஆசை கொண்டது.

“ஸ்வீட்டி உன் மடியில கொஞ்சம் படுத்துக்கவா..” என்று அவள் விழிகளைப் பாரத்து தன் தலைவன் கேட்க வேண்டாமென்று தான் சொல்லத் தோன்றுமா என்ன அவனது காதல் தலைவிக்கு. “ம்” என்ற ஒற்றை வார்த்தையே அவனுக்கு போதுமாயிருந்தது.

இத்தனை நாட்களாய் இருந்த களைப்பும் சோர்வும் சேர அப்படியே உறங்கிப் போனான் அவன்.உறங்கும் தன் தலைவனின் தலையை கோதிய வண்ணம் மஞ்சத்தில் சாய்ந்தபடி அவளும் உறங்கிப் போனாள்.

காரிலேயே உறங்கி விட்டிருந்த ஆரவ்வுக்கு விழிப்புத்தட்டியது. எழுந்தவன் தனது மொபைல் திரையில் நேரத்தை பார்க்க அதிகாலை நான்கு மணியைக் காட்டியது. அப்போது போன அபிநவ் இன்னுமா வரவில்லை? ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ? என எண்ணி பயந்தவன் அவனுக்கு அழைப்பெடுத்தான்.

அபிநவ்வின் பாக்கெட்டில் இருந்த ஐஃபோன் அலற இருவருமே பதறி விழித்துக் கொண்டனர். “ஐயோ இவளை பார்க்கும் ஆர்வத்தில் ஃபோனை சைலன்ட் போடாம வந்திருக்கேனே.” என்றவாறு தன் மொபைலை எடுத்து சட்டென சைலன் செய்து விட்டு திரையில் விழுந்த பெயரை பார்த்தவனுக்கு அவன் அங்கே காத்திருப்பது நினைவில் வர அழைப்பை ஏற்காமல் அணைத்துவிட்டான்.

இனியாவோ இவனது ரிங்டோன் சத்தம் வீட்டில் யாருக்காவது கேட்டிருக்குமோ? எனப் பயந்த வண்ணம் அவனை பார்க்க அவளது மனநிலையை தெளிவாக உணர்ந்தவன்,

“ சாரிடா.. நேரம் போனதே தெரியாம தூங்கிட்டேன். உங்க அம்மா வந்தா தப்பாயிடும்ல? கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு தான். இனி இப்படி திருட்டுத் தனமா உன்னை மீட் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது. கூடிய சீக்கிரமே என்னோட ஸ்வீட்டியை மிஸஸ் அபிநவ்வா ப்ரமோட் பண்ணிடறேன். ஓகேயா? அன்ட் கால் பத்திரமாக பார்த்துக்க ஸ்வீட்டி ” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு வந்த வழியே திரும்பி போய் விட்டான்.

அவள் நெற்றியை தீண்டிச் சென்ற குறுகுறுப்பு ஒரு புறம் இருக்க.. கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாக அவன் கூறிச் சென்ற விதத்தில் மயிர் கூச்செறிந்தது அவளுக்கு.

காரிலிருந்து இறங்கியவன் மீண்டும் தன் அண்ணனுக்கு அழைப்பெடுக்க முயல அங்கே சுவரேறி குதித்து வரும் அபிநவ்வை கண்டு கொண்டான்.
“அடப்பாவி அண்ணா… திருடன் கூட இவ்வளவு பர்ஃபெக்ட்டா சுவரேறி குதிப்பானானு தெரியலை. ம்ம் எப்படி வரானு பாரு..” என வாய்க்குள் முனு முனுத்தபடி நின்று கொண்டிருக்க அருகில் வந்தவன் கைகளை உயர்த்தி நெட்டி முறித்த வண்ணம்,
“ஓகே லெட்ஸ் கோ” என்றவன் காரில் ஏறி அமர ஆரவ்வும் அமர்ந்து ஸ்டார் செய்து ஓட்டத் தொடங்கினான்.

“அண்ணா..” என்று ஆரவ் அழைக்க

“என்னடா?” என்றபடி சீட்டில் சாய்ந்து அமர்ந்த வண்ணம் கேட்க

“ இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?”

“தூங்கிட்டு இருந்தேன்” என கூலாக கூறியவன் தன் காதலி மடியில் உறங்கியதை நினைத்து அவன் உதடுகள் தானாக மலர்ந்தது.

“அடப்பாவி பயலே உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த நான் ரோட்ல படுத்துட்டு இருந்தேன். நீ அங்க ஜாலியா தூங்கிட்டு வந்து இருக்க..” என்று மனதால் புலம்பியவன், அண்ணனை திரும்பி பார்க்க புன்னகைத்தபடியே கண்கள் மூடியபடியே சாய்ந்திருந்தான்.

தன் அண்ணனின் இறுகிய முகத்தையே பார்த்துப் பழகியவனுக்கு தற்போதைய அண்ணனின் இந்த மாற்றத்தை எண்ணி மகிழ்ச்சியாகவே இருந்தது.

“சத்தியமா ப்ரோ மிட் நைட்ல போனவன் நாலு மணிக்கு தான் வந்தான்.. கேட்டா தூங்கிட்டு இருந்தேனு சொல்றான்.. கை அடிபட்டிருந்தும் கூட எப்படி அசால்ட்டா சுவரேறி குதிக்கிறான்பா..” என ஆரவ் யாரிடமோ சொல்லிக் கொண்டிருப்பது கிணற்றுக்குள் பேசுவதைப் போல தன் காதுகளுக்குள் ஒலிக்க உறக்கம் கலைந்தவன் சட்டென எழுந்தமர்ந்தான்.

ஆம் அது ஆரவ்வின் குரல் யாரிடம் இதையெல்லாம் புலம்புகிறானோ என்றெண்ணி அறைக்கு வெளியே வந்தவன் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் விக்ரமும் ஆரவ்வும் அமர்ந்திருப்பதை கண்டான்.

முதலில் அபிநவ் வந்ததை கண்டு கொண்ட ஆரவ் பேச்சை பட்டென நிறுத்தி விட்டு திரும்பி பார்க்க அவனை முறைத்தவன்,

“ஊருக்கே சொல்லிட்டியா ஆரவ்.. உன்னை நம்பி ஒரு வேலை செய்ய முடியாது.. ப்ச்” என்று சலித்துக் கொண்டவன் தானும் அவர்களுடன் அமர, ஆரவ் அங்கிருந்து நைசாக நழுவிக் கொண்டான்.

ஆரவ் சென்றதும் அபிநவ்விடம் “எல்லாமே ஒரு குழப்பமா இருக்கு அபி.. அடுத்து என்ன பண்ண போற?” எனக் கேட்க,

“நெக்ஸ்ட் எனக்கும் இனியாவுக்கும் கல்யாணம் தான்” என்று அவன் பதிலளிக்க, எதிர்பாராத பதிலில் சற்று அதிர்ந்தவன்,

“ என்ன அபி சொல்ற தெரிஞ்சு தான் பேசுறியா? இவ்வளவு குழப்பத்துக்கு மத்தியில் இப்போ நீ கல்யாணம் பண்ணனுமா?” என சற்று குரலை உயர்த்தியே கேட்டான்.

“ஆமா இதை அப்புறம் பார்த்துக்கலாம்டா.. இந்த பிரச்சினைக்காக இனியாவை விட்டு கொடுக்க முடியாது.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.. இது விஷயமாக உங்க அம்மா அப்பா கிட்ட இதை பத்தி போய் பேசனும்.. வெயிட் வந்துட்றேன்” அவனது பதிலுக்காகவும் காத்திராமல் அறைக்குள் சென்றான்.

விக்ரமுக்கோ தன் நண்பனின் செயல் எரிச்சலை மூட்டினாலும் இனியாவை திருமணம் செய்வது குறித்து சந்தோசமாகவே இருந்தது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் அபிநவ் இந்த முடிவை எடுத்தது தவறோ என தோன்றியது.

காலையிலேயே வீட்டு வேலைகளையும் சமையலையும் முடித்துக் கொண்ட லலிதா தன் கணவரையும் வருணையும் அனுப்பி வைத்து விட்டு இனியாவுக்கான உணவை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தார். மஞ்சத்தில் சாய்ந்திருந்தவள் இதழ்கள் மலர தன் ஃபோனை நோண்டிய வண்ணம் இருந்தாள்.

தன் அன்னையை கண்டவள், “மம்மீ… பசிக்குது மம்மி சீக்கிரமாக ஊட்டி விடுங்க.. ஆ..” என வாயை திறக்க லலிதாவுக்கே ஆச்சரியமாய் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பசியில்லை என சாப்பாட்டை மறுத்துக் கொண்டிருந்தவள் இன்று இப்படி கேட்கிறாளே.. அதிலும் அவளது முகத்திலிருந்த மலர்ச்சியும் ஏதோவொன்றை உணர்த்த அமைதியாக ஊட்டியவர்,

“ இனியா..” என்று லலிதா அழைக்க ,
மொபைலை நோன்டியபடியே “என்னம்மா” என்று கேட்க,

“ யாரு அந்த பையன் இனியா..”என்று லலிதா தான் நீண்ட நாட்களாக கேட்க நினைத்த கேள்வியை கேட்க மெதுவாக தலையுயர்த்தி பார்த்தவளுக்கு உள்ளே பக்பக்கென்றது.

“இனியா உன்னை தான் கேட்கிறேன்..” என்று சற்று குரலை உயர்த்தி கேட்க திகைத்தவள் பரவாயில்லை எப்படியும் சொல்லத் தானே வேண்ணடும்.
மறைத்து வைப்பதில் பிரயோஜனம் இல்லை எனத் தோன்ற “அ..அது வந்து.. அம்மா அது.” அவர் ரொம்ப நல்லவரும்மா.. நானும் அவரும் விரும்புறோம்மா.. ”என வார்த்தைகள் தடுமாற கூறி முடித்தவளுக்கு உள்ளே உதறல் எடுத்தது. அம்மா என்ன சொல்லப் போகிறாரோ எனக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்க,

அவரது முகம் தெளிவடைய “ம் தெரியும். அதை உறுதி செய்ய தான் உன்னை கேட்டேன். அவரை வீட்டு பெரியவங்களோட வர சொல்லுமா..” என்று புன்னகையுடன் கூற இனியாவால் நம்ப முடியவில்லை.

“எப்படிம்மா?” என்றபடி சந்தோச மிகுதியில் தாயை அணைத்துக் கொண்டாள் இனியா.

“நான் உன்னை பெத்த அம்மாடி எனக்கு தெரியாதா.. அது மட்டுமா உன் தம்பியும் எப்போ பாரு அபிநவ் சார் புராணம் தான்..” என்றவர் அபிநவ்விடம் இதை பற்றி பேசுமாறு கூறி விட்டுப் போனார்.

பொதுவாக எப்போதும் அவளது விருப்பங்களுக்கு தடை போடாதவர் தான். ஆனாலும் மகளின் வாழ்க்கை என்று வரும் போது எந்த தாயும் இந்த விடயத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை.

அபிநவ் இரவு அவளை பார்க்க வந்திருந்த போது கூட கூடிய விரைவில் தன்னை திருமதி அபிநவ் ஆக்கிக் கொள்வதாக தானே கூறிச் சென்றான். அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தவளுக்கு லலிதாவும் அபிநவ்வை வந்து பேசுமாறு கூறியது அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையே அளித்தது. “சீக்கிரமாக இந்த கால் குணமாகனும். அப்புறம் என் செல்ல கிறுக்கனோட சேர்ந்து டூயட் பாட வேண்டியது தான்..” என்று உதட்டில் புன்னகை பூக்க எண்ணிக் கொண்டவள் காதல் கனவுகளுக்குள் மூழ்கிப் போனாள்.

தொடரும்..

அன்புடன் அபிநேத்ரா..❤
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Bharathi Viswanathan says:

    What’s happening Going to continue or……

error: Content is protected !!