Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-38,39,40

அத்தியாயம் 38

தன் அன்னையிடமிருந்து இத்தகைய செயலை எதிர்பாராது மாம்என்றபடி ஒரு கையால் தான் அறைவாங்கிய கன்னத்தை பிடித்திருந்தவன் முகம் வெளுக்க தீபாவை பார்த்திருந்தான்

 

யார பார்த்துடா அனாதைன்னு சொன்ன

 

மாம் போயும் போயி இவனுக்காக என்னையே அடிச்சிட்டீங்களாஇவன் பண்ணது முழுசா தெரியாம பேசாதிங்கஎன்னைய முட்டாளாக்கி நம்ப எல்லாரையும் ஏமாத்திருக்கான் அதுமட்டுமில்லாம பாவம் அந்த மித்ராவ நல்லா நம்பவச்சி ஏமாத்திருக்கான் ப்ளடிஎன்றபடி பல்லைகடிக்க போதும் ஜெகதீஷ் இதற்குமேல் எதுவும் பேச வேண்டாம் என்று தடுத்தவர்

 

மித்ரா பத்தி பேசவோ அவ மேல பரிதாபப்படவோ உனக்கு எந்த தகுதியுமில்ல ஜெகாஇப்ப அவ ஆதியோட பொண்டாட்டி

 

அதுவுமில்லாம மித்ரா எப்பையாவது உன்ன காதலிக்கிறதா சொல்லிற்காளாதீபாவின் பேச்சிற்கு அமைதியாக இருந்தவன் கேட்ட கேள்விக்கு எந்த பதிலுமின்றி சன்னமாக நின்றான்

 

உண்மைதானே அவள் தன்னிடம் எப்பொழுதும் காதலை யாசித்தது இல்லையே ஒரு பார்வை கூட தன்மேல் அவள் காதல் பார்வை  வீசியதில்லையே தன் எண்ணத்தில் முழுகியிருந்தவனுக்கு உண்மை சுட்டது

 

அவன் செய்தது நான் சரின்னு நான் சொல்ல வரலஎன்ன வார்த்தை விட்றோம்னு பாத்து பேசுஉங்க அப்பாவும் நானும் உனக்கு சொல்லிக்கொடுத்தது இதுதானா??” என்ற தீபாவுக்கு அழுகை வெடித்து

 

தன் கணவன் தோலில் அடைக்கலமாக வெங்கட்ராமன் தீபாவுக்கு ஆறுத்தலளித்தார்

 

ஆதியின் மனமோ `நீ ஒரு அனாதைஎன்ற  சொல்லிலே மனம் உலைப்போல் கொதித்துக் கொண்டிருந்ததுநெஞ்சம் கனத்த பொழுதும் தான் பேசவேண்டியதை தன் சிற்றன்னை பேசியதை அடுத்து மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றான்இந்த முறை யாரும் அவனை தடுக்கவில்லை

 

ஜெகதீஷ் தன் அன்னையின் அழுகையை பொருட்படுத்தாதவனாய் இங்க நடந்த எல்லாத்துக்கும்  நீங்கதான் காரணம் மாம்.. என்னைய விட உங்களுக்கு அவன் பெருசா போய்ட்டான்லகுரல் நடுங்க கோபத்தில் பேசியவனின் வார்த்தைகள் தடைப்பட்டு ஒலிக்க அவனைப் பார்த்த தீபாவை நேராக சந்தித்தவன் ஆல் ஆர் சீடெர்ஸ், ஆல் ஆர் செல்பிஷ்என்று கூறி கத்திக் சென்றவனை என்ன சொல்லி புரியவைப்பதென்று தெரியாமல் தன் மகனை வெறித்தார் வெங்கட்ராமன்

 

தன் மகனின் மனவேதனை அவருக்கு புரியத்தான் செய்தது பாவம் காதலில் தோற்றுப்போன வலி அவனை இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்பதை உணர்ந்தவர் அமைதிகாத்தார்வர்ஷாவும், கமலம்மாளும் வார்த்தைகளின்றி கண்ணீர் மல்க என்ன செய்வதென்று மௌனமாக நின்றிருந்தனர்

 

இருவரின் மேலும் தவறு இருக்குமாயின் இதில் யாரை குற்றம் சொல்வது!!!

 

தீபா கொஞ்சம் அழுகைய நிறுத்திட்டு யோசிமாகணவரின் குரல் திடமாக ஒலிக்க ஏறிட்டு பார்த்த தீபா என்ன யோசிக்க சொல்றிங்கநான் வளத்ததுதான் இப்படி பண்ணுதுனாநான் பெத்ததும் அப்படித்தான் இருக்குஜெகதீஷ் என்னென்னமோ சொல்லிட்டு போறான்இதுலாம் உண்மையா இருக்குமானு நினைக்கவே பயமா இருக்குஇதுல இந்த பொண்ணு எங்க இருக்கானு தெரியலஇவன் வேற நான் தான் அவன் வாழ்க்கைய வீணாகிட்டேன்னு சொல்லிட்டு போறான்முடில வெங்கட் வாழ்க்கையில் முதல் முறையாக தவறு செய்துவிட்டோமோ என்று குற்ற உணர்வு எழுகிறது என்றவர் தன் கணவனின் தோலில் சாய்ந்து அழுதார்

 

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல தீபாஜெகதீஷ் இடத்துல இருந்து பாத்தாஅவன் கோபம் நியாயமானது தான் இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதுக்கு ஏத்தமாதிரி அமைவதுமில்ல,”அதனை அமோதித்த தீபாவை பார்த்தவர் ஆனா அவனோட அந்த வார்த்தை ரொம்ப ஆழமானதுஎனக்கு ஒன்னும் மட்டும் புரியல ஜெகதீஷ் நேஹா பத்தி சொன்னதுக்கு ஆதி எதுவும் பேசாம நின்னது அந்த ஒரு விஷயம் மட்டும் தான் என் மனச நெருடிட்டே இருக்குதன் கணவனின் பேச்சில் துணுகுற்ற தீபா நீங்க நம்புறீங்களா ஆதி இப்படி பண்ணிற்பானு

 

இல்ல தீபா நம்புறதும் நம்பாததும் அடுத்த விஷயம்ஆனால் அவனுடைய அமைதி தான் எனக்கு சரியாகப்படவில்லை என்று கூற ஆமாங்க நானும் அதைத்தான் யோசிச்சேன்நீங்களும் அதே சொல்லிட்டீங்கஏங்க ஜெகா என்ன புரிஞ்சிக்குவானா இப்படி பேசிட்டு போறானேஎன்ன மன்னிப்பானா???” என்க தன் கணவனை யாசிக்க அவரோ தீபா ஜெகதீஷ் ஏதோ கோவதுல பேசிட்டு போறான்அவன் நம் மகன்டா நிச்சயமா உன்ன புரிஞ்சிக்குவா நீ கவலைப்படாம இருதன் மனைவிக்காக ஆறுதல் மொழி உரைத்தாலும் தன் மகனின் புதிய முகத்தை கண்டு அவன் இறங்கி வருவானா என்று கூடவே ஐயமும் எழுந்தது

 

***********************************

 

அலுவலகத்திற்கு வந்தவன் தன் அறைக்குள் நுழைந்த வண்ணம் தொப்பென்று நாற்காலியில் அமர அவன் மனம் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்தது `நீ ஒரு அனாதை…. நீ எப்பவும் ஒரு தனிமரம் தான் ஆதிஜெகதீஷ் கூறிய வார்த்தைகளே அவன் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கஅவனது மனமோ தன் மனையாளிடம் முறையிட்டது `பேபிநான் அனாதையாஎனக்குன்னு யாருமில்லையாஎனக்கிருந்த சொந்தம் நீநீ மட்டும்தான் பேபிநீயும் என்ன இப்படி தனியா  விட்டுட்டு எங்கடி போனஎங்கடி இருக்கபேபி உண்மையாவே  நான் யாருமில்லாத அனாதையா ஆகிருவேணு பயமா இருக்குஎனக்கு நீ வேணும்நம்ப குழந்தைங்க வேணும்உன்கூட நான் நூறு வருஷம் ஆசைதீர வாழணும்வந்திடு பேபி தன் போக்கில் அரற்றியவன் கடைசி கட்டத்தில் பாரம் தாங்கத்தவனாய்….

 

அவன் மனமோ தன்னவளின் மடியை தேடி துடித்தது…. தன் துயரை போக்கும் அவள் மடியை தேடியவனாய்!!!

 

மயில் இறகைப் போல் வருடி கொடுக்கும் அவள் மென் பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தை தேடியவனாய்!!!

 

பின்பு நிதர்சனம் உரைக்க தன் தலையை அழுந்த கொதியவன் தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடுபட்டான்

 

அவனின் ஒவ்வொரு அணுவும் தன்னவளுக்காக ஏங்கியது தன் உணர்வுகளோடு சண்டையிட்டு களைத்தவன் கண்கள்மூடி அப்படியே இருக்கையில் சாய்ந்தான்

 

 அதே நேரத்தில்  கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்தவன் அவசரமாக உள்ளே நுழைந்த பிரபாவைப் பார்த்து என்னாச்சு பிரபாஏன் இவ்ளோ வேகம்அவன் முகத்தை பார்த்தவன் இவ்ளோ பதட்டத்தோடு இருக்கீங்க என்னாச்சு எனி ப்ராப்ளம்சார்அது வந்துநம்ப கம்பெனி ஷார்ஸ்அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே  ஆதித்ய வர்மனின் அலைபேசிக்கு அழைப்பு வர

 

பிரபாவை தடுத்தவன் அழைப்பை ஏற்றான் சொல்லுங்க சார்ஏதாவது இன்போர்மேஷன் கிடைச்சிதாமிக பதட்டத்தோடும் ஆர்வத்தோடும்கேட்க மறுமுனையில் கூறிய செய்தியை கேட்டு அவன் முகத்தில் இன்னைப்பிரிக்க முடியாத கலவை ஒன்று தோன்றி மறைந்தது இப்போஇப்போ உடனே வரேன் சார்…. யா  ஐம் ஆன் தி வேஎன அழைப்பை துண்டித்தவன் பிரபாவை பார்த்து நான் இப்போ அவசரமா போறேன் வந்து பேசிக்கலாம்என்றதோடு அவன் தோல் தட்டிவிட்டு சென்றான்

 

நேரே ரகசிய உளவுத்துறையின் இடத்திற்கு சென்றவன் வந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டி அவன் மனம் வேண்டிக்கொண்டது வாங்க ஆதி சார் எங்களுக்கு வந்த  தகவல் படி ஒரு முக்கியமான க்ளு கிடைச்சிருக்குஆனா எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருக்குநீங்க கொடுத்த போன் நம்பர ட்ரெஸ் பண்ணதுல நம்ப எதிர் பார்த்த மாதிரி சிக்னல் சென்னை டு கேரளா மாநிலம் திரிசூர் ஜூங்க்ஷன்னு மாறி…,, மாறி  காட்டுது சார்எங்க கணிப்பு படி அவங்க போன் மிஸ் ஆகிருக்க வாய்ப்பிருக்கு

 

சிம் மட்டும் ஆக்டிவில இருக்கு அதுனால உங்க மனைவி காணாம போன அன்னைக்கும் இப்போ விசாரிச்ச வரைக்கும் அவங்கள யாரும் கடத்தலன்னு ப்ருவ் ஆகிருக்குசோ உங்க மனைவி காணமா போன ஈவினிங் கேரளா எக்ஸ்பிரேஸ் சரியா 6.30 க்கு ட்ரைன் பிடிச்சிருக்காங்கஅவனை தீர்க்கமாய் பார்த்த ஆதியின் மனமோ தன்னவளை கடத்தவில்லை  என்ற செய்தி அவனுள் பல யோசனைகளை ஆழ்த்தியது இன்னோரு மனமோ  ஒருவேளை அவளாக விருப்பப்பட்டுத் தான் என்னை விட்டு பிரிந்து சென்றாலோ இந்த கேள்வி முதலிருந்து அவன் மனதை குடைந்துக் கொண்டுதான் இருக்கிறது

 

கண்டிப்பா சென்னைல இருக்க வாய்ப்பில்லை சார்என்றவனின் குரலில் நடப்புக்கு வந்தவன் அவன் கூறுவதை கவனிக்கலானான் கண்டிப்பா கேரளா திரிசூரில் இருக்க வாய்ப்பிருக்கு மறைமுகமா  இன்வெஸ்டிகஷன்  போட்டு இருக்கு சார்வித்தின் ட்வெண்ட்டி போர் ஹௌர்ஸ் உங்க மனைவி பத்தி இன்பர்மேஷன் வரும் என்று கூற அவன் கண்ணில் நன்றி உணர்வோடு பார்த்தவன் கைகுலுக்கி குட் ஜாப்எனக்கூறி யோசனையுடே விடைபெற்றான்…..

  

*********************************

அத்தியாயம் 39

தன் அன்னை கூறியதை யோசித்தவன்  ரு முடிவுடன் நேரே வீட்டை நெருங்கினான் விறுவிறு வென்று வந்தவனை பார்த்த தீபா

 

அவன் வருகைக்காக காத்திருந்தவர் போல் அவனை நெருங்க… அவனோ தன் அன்னையின் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் வேறு புறம் திரும்பி நின்றவன் நான் நியூயார்க் செல்கிறேன் என்ற குண்டைத் அணுகாமல் தூக்கி போட

 

தீபாவோ வேகமாக ” வேண்டாம் ஜெகா நீ இங்க இருக்கிற பிஸ்னஸையே பார்க்கலாம்… எதுக்கு திரும்பவும் நியூயார்க் போற” அவர் கேள்வியில் அடைத்து வைத்திருந்த கோபம் மேலும் பொங்கி வர பார்த்தவன்…

 

அவரோ மகன் இருக்கும் மனநிலையில் அங்கு செல்வது சரியாக படாததால் இவ்வாறு கூற  அவனோ வேறு கோணத்தில் புரிந்துக் கொண்டு கோபம் கொண்டான்…

 

” நான் இங்கே இருக்கணும்னா… கே.கே கம்பெனி ஷார்ஸ் பாதி என் பெயரில் வரணும்… அப்புறம் MD போஸ்டிங்க்ல என் பெயர் தனியா வேணும் …. இந்த கம்பெனில ஆதி பங்கு ஒரு பெர்ஸன்ட் கூட இருக்க கூடாது… அவனோட ஷார்ஸ் அவனுக்கு கொடுக்க படும் … மேற்கொண்டு அவனோட வேலை இங்க இருக்கவே கூடாது… இதுக்கு ஒத்துக்கீட்டா நான் இங்க இருக்கிறதா பத்தி யோசிக்கிறேன்…. அவன் முழுமையா விலகிறனும் இதுதான் என்னோட முடிவு” இல்லனா என் இஷ்டப்படி  தான் என்றவன் ஆதியின் மேல் இருக்கும் தன் கோபத்தையும் காதல் தோல்வியால் ஏற்பட்ட ரணங்களும் சேர்ந்துக் கொள்ள இவ்வாறு முடிவெடுத்தவன் தன் அன்னையிடம் கோரிக்கை வைத்து சென்றான்..

 

அவனது முடிவில் ஸ்தம்பித்து போன தீபா என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்கஜெகதீஷ் முடிவில் மாற்றம் ஏற்படாது என்று ஊர்ஜிதமாக நம்பியவர் கம்பெனி ஷார்சை சரிபாதியாக பிரிக்க முடிவெடுத்தார்

 

 

கண்ணு  சீக்கிரம் கிளம்பு இன்னைக்கு செக்கப் போகணும்மா இல்லையாஅம்பிலி மித்ராவை துரிதப்படுத்த சென்னையில் பரிசோதித்த மெடிக்கல் ரிப்போர்டை எடுத்துக்கொண்டு தன்னை தயார்படுத்திக் கொண்டவளுக்கு கால்கள் வலியெடுக்க நிற்க முடியாதவளாக மீண்டும் நாற்காலியில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்

 

மித்ரா கண்ணுஇன்னும் என்ன பண்றஎன்றபடி உள்ளே நுழைந்த அம்பிலி அவளின் கலங்கிய கண்களை பார்த்தவர் ஏன்டா கண்ணு என்ன பண்ணுதுகொஞ்ச நேரம் கழிச்சு போலாமாஎன்க அதற்கு சம்மதமாக தலையாட்டியவள் அவரைப் பார்த்து வலியைப் பொறுக்கமுடியாமல் அம்பிலிம்மா கால் நிக்க முடில ரொம்ப வலிக்குது (knee crutches) காலில் பொறுத்தும் கருவியை பார்த்து போட முடியல பாவமாக கூறியவளை பார்த்தவர் இரு குழந்தைகளை தாங்கி நிற்கும் தாய்மையை மறந்தவளாக சிறுகுழந்தைப் போல் கண்களில் நீர் கசிய கூறியவளை கண்டவர்

 

கண்ணு குழந்தைங்க வளர்ச்சி அடையுது இல்லையா அதான் பாரம் தாங்க முடியாம கால் வலிக்குதுகொஞ்சம் பொறுத்துக்கோடாசெக்கப் போயிட்டு வந்து ஒத்தடம் கொடுத்துக்கலாம்அவளது மனமோ இத்தருணத்தில்  கணவனின் அருகாமைக்கு மிகவும் ஏங்கியது இதனுடன் மசக்கையும் சேர்ந்துக்கொண்டு அவளை வாட்டியது தன்னவனின் தோல் சாய்ந்து தன் துயரத்தைப் போக்க அவள் மனம் பெரிதும் ஏங்கி தவித்ததுஆயிரம் பேர் தன்னை சுற்றி இருந்தாலும் பெண்ணவளின் மனம் தன் கணவனை வெகுவாய் நாடியது அதைப்பற்றி எண்ணியவள் கனவிலும் நடவாத ஒன்றை  நினைத்து சுயபட்சாதபம் எழ கலங்கி நின்ற கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல தயாரானாள்

 

 

வரவேற்பு  அவையில் ஜெகதீஷ் உட்பட அனைவருக்கும் ஆஜராகிருக்க ஆதியின் வருகைக்காக காத்திருக்கலானர்போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு வந்தவன் யாரையும் கண்டுகொள்ளாது தன் அறைக்கு செல்ல படிகளில் ஏறிய கால்கள் தனிச்சையாய் நின்றும் போனது  வெங்கட்ராமனின் குரலில் ஆதி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்நீயில்லாமா நாங்க முடிவெடுக்கிறது நல்லாயிருக்காதுஎன்று கூற அமைதியாக வந்து நின்றவனின் தோரனையே என்ன சொல் என்பதுப் போலிருக்க வெங்கட்ராமனே தொடர்ந்தார் இந்த வீட்டு பெரிய மனுஷங்க அவங்களாவே ஒரு சில முடிவெடுத்திருக்காங்க சோ உன்னோட முடிவு என்னனு சொல்லிட்டு போய்ட்டினா அவங்க அவங்க எடுத்த முடிவு சாதகமானதா இல்லையான்னு சொல்லிடலாம்வெங்கட்ராமன் கூறியதைப் பற்றி  முன்பே அறிந்தவன் தன் அழுத்தமான பார்வையை ஜெகதீஷ் மீது செலுத்த அவனோ உன் பார்வைக்கு அஞ்சுபவன் நானில்லை என்பதுப் போல் அவனது பார்வையும் ஆதியை துலைத்தெடுத்தது

 

கே.கே கம்பெனி ஷார்ஸ் எல்லாம் இன்னைய வரைக்கும் ஒன்னதான் இயங்கிக்கிட்டு வருது…. ஆனா இப்போ இருக்கிற ஷார்ஸ்ச பிரிக்கலாம்னு முடிவெடுத்திருக்காங்கஇதுல உனக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்காஎன்று அவனைப் பார்த்து கேட்க

 

அதில் ஜெகதீஷ் தவிர்த்து அனைவரின் மனதிலும் இடி இறங்கியது இதை சற்றும் எதிர் பாராத ஆதி நிதானத்துடனே பதிலளித்தான் கம்பெனி ஷார்ஸ் பிரிக்கணும்னு அவசியமில்லை, கே.கே ஷார்ஸ் பிரிக்க எனக்கு விரும்பலஎனக்கு MD போஸ்டிங் வேணாம்நான் நார்மல் ஷார்ஸ் கிளயன்ட்டாகமட்டும் இருந்து செயலாற்று வருகிறேன் என்று கூறியவன் கம்பெனி பங்குகளை பிரிக்க கூடாது என்றும் திட்டவட்டமாய் கூறி முடிவெடுத்தான்

 

ஆதியை இதிலிருந்து முடக்க வேண்டும் என்றெண்ணியவனுக்கு அவனின் இந்த முடிவே போதுமானதாய் இருக்க மனம் சற்று அசைந்து கொடுத்தது இவன் செய்ததற்கு இது தேவையென அவனது மனம் பறைசாற்றியது..

 

ஜெகதிஷின் மனநிலையை அறிந்திருந்த ஆதியும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவன் விருப்பப்படியே விட்டுச்சென்றான்

 

அத்தியாயம் 40

வலி சற்று மட்டுப்பட எழுந்து நின்றவள் இப்பொழுது செல்லாமென்று அம்பிலியை அழைத்துக்கொண்டு திரிசூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றாள்…  மாத பரிசோதனைக்கு சென்ற மித்ராக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருப்பது தெரியாமல் மருத்துவமனையை அடைந்தாள்

 

வரிசையாக போடப்பட்டிருக்கும் நாற்காலி ஒன்றில் வரிசை எண்படி அமர வைத்த அம்பிலி மித்ரா கண்ணு இங்கையே உட்காரு நான் பதிவு செய்துவிட்டு வரேன்என்றவர் அவளை அமரவைத்து சென்றார்

 

அமர்ந்த சற்று நேரத்தில் மருத்துவர் அழைக்கதன் கையில் வைத்திருந்த மருத்துவ குறிப்போடு உள்ளே சென்று அமர்ந்தாள்ஐந்து மாதம் தான் என்றாலும் இரட்டை குழந்தைகள் என்பதால் வயிறு சற்று பெரிதாக எட்டு மாதம் போல் காட்சியளித்தது

 

கால் வலியால் சிறிதுதாமதமாகவே நடந்து வந்தவளை பார்த்த மருத்துவருக்கு பாவமாக இருந்ததுஅதை வெளியில் காட்டாதவாறு சிரித்த முகத்தோடு மித்ராவை வரவேற்றவர் இருக்கையில் அமரச்செய்து கையில் வைத்திருந்த குறிப்பேடுகளை புரட்ட ஆரம்பித்தார்

 

 “ இதுவரைக்கும் பார்த்த ரிப்போர்ட்ல எல்லாம் நார்மலதான் இருக்குஇன்னக்கி ஸ்கேன் எடுக்கணும்என்றவர்  ஏதோ தோன்ற இத்தனை தடவ செக்கப்க்கு வர உன் புருஷன ஒரு தடவக்கூட நான் பார்த்ததே இல்லையேஒருவேளை வெளியூரில் இருக்கிறாரா???” மருத்துவரோ முடியாமல் இருக்கும் பெண்ணை இப்படி தனியாக அனுப்பி வைத்திருக்கிறானே என்ற ஆற்றாமையில் அவர் கேட்டுவிட

 

அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்க கடைசியில் ஆம்என்று ஒப்புக்கொண்டவளை முறைக்க தவறவில்லை அம்பிலிஅவரது முறைப்பை பெற்றவள் தாமாக தலையைக் குனிந்துக்கொண்டாள்….

 

மேலும் அந்த மருத்துவ பெண்மணி இந்த காலத்து பசங்களுக்கு அவசரம் இருக்குமளவுக்கு அக்கறை துளியும் இல்லாம போய்டுதுகொஞ்சம் கூட மனிதத்தன்மை இல்லை என்றவர் ஆதியை நன்றாக அர்ச்சனை செய்தார்

 

ஸ்கேன் செய்யும் அறைக்கு செல்லுமாறு மருத்துவர் கூற பக்கவாட்டில் நானும் வரலாமாஎன்ற குரல் திடுமென ஒலிக்க அந்த குரலுக்கு உரியவனை திரும்பி பார்த்தவள் பாவாஎன்ற சொல் காற்றோடு கலக்க இங்கே அவனது வரவை சிறிதும் எதிர் பார்க்காதவளாய் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்….

 

ஆதியை கண்ட அம்பிலி மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் என்றால் மித்ராவின் செயல் இதற்கு எதிர்மாறாக இருந்து….

 

மருத்துவரோ ஒன்றும் புரியாமல் நீங்க யாரு சார்என்று கேட்க ஆதித்ய வர்மனோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டீங்களேஉங்க ஹஸ்பண்ட் யாருனு…. நான் மித்ராவோட ஹஸ்பண்ட் அண்ட் ஷி இஸ் நோட் மித்ரா கீர்த்திவாசன் , ஷி இஸ் MRS. மித்ரா ஆதித்யவர்மன் என்றவன் தன் திடமான குரலில் அழுத்தமான   பார்வையை தன் மனைவி மேல் பதித்தப்படியே பதிலளித்தான்

 

 மித்ரா கீர்த்திவாசன் என்று கூறிய கணவனை அதிர்ச்சி மீறாமல் பார்க்கதன்னை கண்டுகொண்டானே

 

யார்??? எப்படி தெரிந்திருக்கும்?? அவளுள் பலதரப்பட்ட கேள்விகள்

 

மருத்துவரும் அவர்களுக்குள் ஏதோ ஊடல் விவகாரம் என உணர்ந்தவர் சரி என்றபடி ஸ்கேன் செய்யும் அறைக்கு அழைத்து சென்றார்

 

நன்றாக கைகால்கள் அசைந்து முழுவடிவத்தை பெற்றிருந்த தன் மகவுகளை பார்த்திருந்தவன்மறந்தும் மனைவியின் புறம் பார்வையை பதிக்கவில்லை தன் மனைவி மேல் கடல் அளவுக்கு காதல் இருந்தாலும் அதே ஈடுக்கு கோபம் இருப்பதை உணர்ந்தவன் எங்கே அவளை தன் கோபத்தினால் வருத்திவிடுவோமோ என்று பயந்து தன் மனையாளை கண்டுக் கொள்ளவில்லை

 

அவன் அமைதியை கண்டு அவளுள் ஒருவித ஏக்கம் எழுந்தாலும்அவன் பார்வை தன் மேல் இல்லையே என்று வருந்தியவளின் உள்ளம் தன்னைத்தானே நொந்துக்கொண்டதுகண்களுக்கும் அதற்கு ஈடாய் இப்பவவோ அப்போவோ என டேமை திறக்க தயாராகவே இருந்தது….

 

ஸ்கேன் முடிந்து எழ போனவள் கால் கருவியை பொருத்தாமல் இறங்க முடியாமல் தடுமாறினால்அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவன் செவ்வனே அந்த கருவியை அவளது காலில் அணிவித்தான் அவனது செயலில் மீண்டு வந்தவள் எதர்ச்சியாக தன் கைகள் அவன் சிகையைக் வருட துடித்ததுஅந்த நினைப்பை புறம் தள்ளியவளுக்கு எத்தகைய அன்பை இழந்துவிட்டோம் என்று தோன்ற அழுகை முட்டிக்கொண்டு வந்தது

 

அதில் இரண்டு மணி நீர் துளிகள் அவன் தலையில் பட்டு தெரித்த நொடி அதை உணர்ந்தவனாய் அவனது உடலும் விரைத்து காணப்பட…. தன் காரியத்தை செவ்வனே செய்து முடித்தவன் அம்பிலியை துணைக்கு விடுத்து மருத்துவரை நாடிச் சென்றான்….

 

தன்னைக் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்பவனை பார்த்தவளின் மனதில் சொல்லமுடியாத துயரம் ஆட்கொள்ளஅதை அவனையும் தாக்கியதோ என்னவோ இதற்குமேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என்றுதான் அவன் விலகிச் சென்றது

 

ஆனால் அவனின் மனையாளோ வேறுகோணத்தில் புரிந்துக்கொண்டு தன்னையே வருத்திக் கொண்டாள்தன்னை வருத்திக்கொள்பவளுக்கு தெரியவில்லை தன்னைவிட தன் உயிருக்கு இணையானவன் தான் இதில் அதிக காயமடைக்கிறான் என்பதின் உண்மை தெரியாமல் இருந்தால் அந்த பேதை

 

சார் உங்க மனைவிக்கு பிளட் சுகர் நார்மலா இருக்குமேலும் BP மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தனும் ட்வின்ஸ் நால கொஞ்ச மாதம் ஆக ஆக கேர்ப்புள்ளா பாத்துக்கோங்க முக்கியமா அவங்களால ஆர்டிபிசியல் லெக் யூஸ் பண்ண முடியாது அவங்கள உங்க உதவியோடு நடைப்பழக்குங்கஅப்புறம் வலி எடுத்ததும் ஹாஸ்பிட்டலுக்கு போய்டனும் இல்லனா ரொம்ப ரிஸ்க் சார் “ மின்னாமல் முனகாமல் அவன் தலையில் இடியை இறக்க  அதில் அலறித் துடித்தவன் டாக்டர் என்ன சொல்றிங்க …. ஏன்?? ஏதாவது ப்ராப்ளமாஎன்க அவனை பார்த்த மருத்துவர் இதெல்லாம் ப்ரெக்னண்ட் டைம்ல நார்மல் சார் டோன்ட் ஒரிஎன்றவர் அவனை சமாதானம் செய்தார்….

 

அனைத்தையும் கேட்டுத் தெளிந்தவன் மெடிக்கல் ரிப்போர்டுடன் வெளியே வரஒரு நொடி பொழுது அவளைப் பார்த்து நெடு மூச்சு ஒன்றை வெளியிட்டு கோப்புகளை அம்பிலியிடம் கொடுத்தவன்

 

சட்டேன அவள் எதிர்பார்க்கும் முன் சடுதியில் தன் கையில் ஏந்த அதில் அவளது கண்கள் இரண்டும் படபடவென்று அடித்துக்கொண்டதுவிழியின் கருமணிகள் அங்கும் இங்கும் உருள அழகிய ஓவியம் போல் காட்சியளித்தவளின் அழகில் அவன் மனம் சொக்கித்தான் போனது

 

அதில் அவளோ  தன்னவனின் கடைக்கண் பார்வை தன் மேல் வீசாதோ என்று வருந்தியவளின் மனதிற்கு அவனின் இந்த செயல் போதுமானதாய் இருந்ததுகண்கள் நான்கும் ஒன்றோடு ஒன்று கலக்க தங்களின் மனதின் மொழியை பரிமாறிக் கொண்டிருக்கநீண்ட நாட்கள் இடைவேளைக்கு பின்பு கிட்டும் நெருக்கத்தை இருவருமே அன்போடு அரவணைத்தனர்காணவே முடியாது என்றவனின் தொடுகையில் அவளும்தொலைத்த பொக்கிஷத்தை கைப்பற்றி அதை மீண்டும் நழுவ விடமாட்டேன் என்பதுப்போல் அவளின் ஸ்பரிசத்தை உணர்ந்த அவனும் அப்படியே சலைக்காது தன்னவளை பார்த்திருந்தான்

 

சிறிது நேரம் நீடித்த மோன நிலையை கலைத்து வெளியே வந்தவன் இருக்கும் நிலையை அறிந்து அவளை மெல்ல தாங்கிச் சென்று காரில் அமரவைத்தான்மூவரையும் ஏந்திக்கொண்டு  கார் ஆஷ்ரமத்தை நோக்கி  பயணப்பட்டது….

 

மௌனமாக மேற்கொண்ட பயணம் மித்ராவிற்கு சிறிது கலக்கத்தை கொடுத்ததுதன்னை பற்றி தெரிந்து விட்டது ஆனால் அதைப்பற்றி கேள்வி எழுப்பாமல் வரும் கணவனின் அமைதியான இந்த முகம் அவளுக்கு அச்சத்தை கொடுத்தது

 

உள்ளே நுழைந்த சமயம் அம்பிலியை பார்த்த ஆதி  ரொம்ப நன்றிம்மாஎன் மனைவியை இத்தனை நாள் பாதுகாப்பாய் பார்த்துக்கொண்டதற்கு என்றவன் நன்றியுரைக்க அட என்ன தம்பி பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு மித்ரா என் பொண்ணு மாதிரி அதுவுமில்லாம அவள நான்தான் வளத்தேன்…. இதுக்கெல்லாம் எதுக்கு நன்றிநீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும் பாத்து போய்ட்டுவாங்க தம்பிஎன்க சரி என்றவன்  தன் காரை நெருங்கும் சமயத்தில்

 

அதில்  சுயநினைவு பெற்றவள் வேகமாக தன் கால்வலியை கூட பொருட்படுத்தாமல் காரைவிட்டு இறங்கினாள்

 

அவளின் எண்ணம் புரிந்தவன் ஏதோ செய்தி வாசிப்பதுப் போல் மித்ராநீயும் என்கூட வீட்டுக்குத் தான் வரகாரிலையே உட்கார்அவனின் கட்டளைக் குரலில் நெஞ்சம் அதிர நின்றவள் மறுப்பாய் தலையசைக்க நான் வரவில்லை என்றவளை கொலைவெறிப் பொங்க பார்த்திருந்தான்….

 

இதனை கவனித்த அம்பிலி அவர்களுக்கு தனிமை தேவைப்படுவதை வேண்டி நாகரிகமாக நகர்ந்து சென்றார்

 

இங்க பாரு நான் உன்கிட்ட அனுமதி கேட்கல மித்ரா… நான் சொல்றத மட்டும் நீ செஞ்சா போதும்”ஆதியின் தீவிரமான முடிவில் நிலைகுலைந்தவள் தன் சபதத்தை நினைத்தவளாக

 

“நான் ….. நான்… உங்க கூட வரல பாவா… நான் உங்க வாழ்க்கைய இனிமேட்டு கெடுக்கவும் விரும்பல…. உங்களோட சந்தோஷத்துக்கு நான் என்னைக்கும் குறுக்கே நிக்கவும் விரும்பலஉங்க விருப்பப்படி வாழ உங்களுக்கு முழு உரிமை இருக்கு.. உங்க வாழ்க்கைய நீங்க வாழலாம்” பல நாட்கள் கழித்து கேட்கும் அவளின் பாவாஎன்ற அழைப்பிற்கு காத்திருந்தவனின் உள்ளம் அவள் பால் உருகியதுஆனால் எதற்கு இந்த பிடிவாத பேச்சு ஆதியின் பொறுமையை சற்று சோதித்துதான் பார்த்தது… பொறுமையே இல்லாதவன் அவளின் தவறான எண்ணத்தை அவளுக்கு புரியவைக்க  மிகுந்த பொறுமையோடு அவளை பார்த்திருந்தான்

 

“அப்போ உன்னோட முடிவு இதுதானா”சற்று அதட்டலாகவே வந்தது அவனது வார்த்தை… அவனை பார்த்துக்கும் திரனில்லாதவளாக தன் தலையை மட்டும் ஆட்டி ‘ஆம்’ என்று தன் முடிவை அவனிடம் தெரிவித்தாள்…

 

“அந்த பதில என்னப்பாத்து ….. என் கண்ண பார்த்து சொல்லுடி….. நான் இப்போவே இந்த நிமிஷம் போறேன்”என்றவனின் பதிலில் வெடுக்கென நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கி குளம் போல் காட்சியளிக்க … மீண்டும் தலை குனிந்தவள் அவனை பார்க்காமல் வேறு புறம் திரும்பி நின்று

 

“நீங்க எப்… எப்போ எப்பிடி கேட்டாலும் என் பதில் இதுவாதான் இருக்கும்”கண்களில் சுரந்த கண்ணீரை தன் உதட்டை கடித்துக்கொண்டு கட்டுப்படுத்தியவள் தன்னவனிடம் சேரவும் முடியாமல் பிரியாவும் முடியாமல் தத்தளித்தாள்….

 

அவளின் இத்தகைய பதிலில் எரிச்சலடைந்தவன்  நாலு அறைவிடலாம் போல் கோபம் எழுந்தாலும் புரியாமல் ஏதோ ஒன்றை நினைத்து பேசுபவளை பார்த்தவன் என்ன செய்வதென்றே புரியவில்லை…

 

இதற்குமேல் பேசினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவன் அவளை வேகமாக தன் புறம் இழுத்து என்ன சொன்ன என்னோட விருப்பப்படியா…. ஹ்ம்ம் என்னோட விருப்பம் என்னான்னு  தெரியுமா உனக்கு அதை உணர்த்தடுமாஎன்றவன் அவளை நெருங்கி தன்னுடன் இருகியவன் ஒரு இன்ச் மேல அவளை தூக்கியவன் நெற்றி , கண் , நாசி என்று முத்தங்களால் வலம் வர கடைசியில் அவள் செரிப்பழ இதழில் ஒரு நிமிடம் தாமதித்தவன் பின்பு அவளிடம் தனக்கு எது விருப்பம் என்பதை உணர்த்தும் பொருட்டு அவள் இதழை கடித்து தன் உதட்டால் அவளின் இதழை முரட்டுத்தனமாக சிறை செய்தான்

 

அவனது இந்த தீடீர் தாக்குதலில் மனம் தடுமாற உடலும் அதற்கேற்றார்போல் அவன் கையில் குழைந்தது.. அவளின் உடல் மொழி அறிந்தவன் இன்னும் ஆழமாக அவள் இதழில் புதைய பெண்ணவளுக்கு வலிகொடுத்த போதும் அதை தடுக்காமல் ஏற்றால் இத்தனை நாள் பிரிவின் வலியை விட இந்த சுகமான வலியாகவே இருக்க அவளின் காயப்பட்ட இதயத்திற்கு மருந்தாகி போனது தன்னவனின் வன்மையான இதழ் தீண்டலில்

 

உயிரை வாய் வழியாக உறிஞ்சி எடுத்து விடுபவன் போல் அவளது இதழை விட்டு இம்மியும் அசையாமல் மேலும் புதைந்தவனின் கைகள் அவளது வெற்று மேனியில் சுகமாக எல்லைமீற

 

பெண்ணவள் மயங்கினாலும் தாய்மை விழித்துக் கொள்ள அதே சமயம் சுவாச காற்றுக்கு ஏங்கி அவனிடமிருந்து மூச்சுவாங்க பிரிந்தாள்

 

அவளது நிலையை அறிந்தவன் மெல்ல இறக்கிவிட ஹ்ம்ம் ஒரு தொடுகைக்கே உன்னால என்கிட்ட எதிர்ப்பு காட்ட முடியல இதுல காலம் முழுக்க தனியா இருக்கப்போறியாதன் மனதில் நினைத்தவன் அதை தன் மனைவியிடத்தில் கூறாமல் மறைத்தவன் அவளிடம் திரும்பிஇப்போ புரிஞ்சிருக்கும் என்னோட விருப்பம் என்னதுனு…. மேலும் என்ன சோதிக்காமஎன்னுடன் கிளம்பி வருவது தான் உனக்கு நல்லது

 

அவளோ எந்த ஒரு உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் நிற்க  மௌனத்தையே சம்மதமா நினைத்தவன் இந்த பதிலே போதுமென்று கருத மித்ராவிற்கு பதிலாக அம்பிலியிடம் விடை பெற்றவன் நாங்க அப்போ கிளம்புறோம்குழந்தை பிறந்ததும் சொல்லி அனுப்புறேன்என்று கூறியவனிடம் தம்பி மித்ரா சின்ன புள்ள ஏதோ தெரியாம இப்படி அவசரப்பட்டு முடிவெடுத்துட்டா…. ரொம்ப பயந்த சுபாவம் எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொருத்துகொங்கஎன கூறியவரிடம்

 

கண்டிப்பா உங்கள விட அவளை எனக்கு நல்லாவே தெரியும்நான் பார்த்துக்கொள்கிறேன் என்றவனை பெருமை பொங்க பார்த்தவர் மித்ராவிற்கு பிரியா விடை கொடுத்தார்….

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி

 
5 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  adhira shana says:

  super ji…..update podunga ji


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Super very nice story. Anal neenga than late ah update panringa. Wait panna mudiyalapa.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks sis💐💐💐 kandipa sis sekiram tharen


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nandhini Mageswaran says:

  Awesome……mam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks nandhini sis😍

error: Content is protected !!