Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முட்டகண்ணி முழியழகி-10

அசந்து உறங்கியவளையே பார்த்தவனுக்கு இவளது ஆடையை எப்படி சரி செய்வது என்பது தான் மிகப்பெரிய கேள்வியே, எப்படி சரி செய்ய வேண்டுமென்றாலும், அவள் அசையத்தான் வேண்டும், அசைந்தால் எழுந்து என்ன நடந்தது என்று யோசிக்காமல் பேயாட்டம் போட்டாலென்றால்..! அம்மாடி…’ நினைக்கவே பயமாக இருந்தது. அர்த்தராத்திரி வேறு

 

அதனால், கபோர்டில் தேடி மற்றொரு போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டு, தானும் உறங்க ஆரம்பித்தான். அவனுக்கும் மனதளவிலும், உடலளவிலும் அலைச்சல்தானே.. உறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் தன் மூக்கில் ஏதோ தொப்பென்று விழ, வலி உயிர் போக, பட்டென்று விழித்தவளின் பார்வையில் பட்டது மனைவியின் மருதாணிப் பாதம்.

 

சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை, மூக்கைத் தேய்த்து வலியைப் போக்கியவன், நிதானமாய் பார்க்க, மங்கையவள் கும்பகர்ணனின் வம்சத்தில் வந்தவள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு, தலைகீழாய் படுத்து, ஒரு கால் கணவனின் முகத்திலும், மற்றொரு காலை மடக்கியும், அவளது புடவை பரிதாபமாய் சுருண்டு, வாழைத்தண்டைப் போன்ற பளிங்கு கால்களை காட்டியபடி கிடந்தாள்.

 

அய்யோ..’ என அலறி எழுந்தவன்டேய் இவ இன்னைக்கு உன்னை பஞ்சராக்காம விடமாட்டா போல.. டிசைன் டிசைனா தூங்கிறா.. சர்க்கஸ்காரி கூட தோத்துடுவா..” என்று வாய்விட்டுப் புலம்பியவன், அவன் சற்று முன் போர்த்திவிட்ட போர்வையைத் தேட, அது கட்டிலின் மறுபுறம் கிடந்து இவனைப் பார்த்து பல்லிளித்தது.

 

புடவையை இழுத்து சரி செய்யலாம் என நகர்ந்தவனின் மண்டையில், தொங்கிக் கொண்டிருந்த, மற்றொரு கால் டொம்மென்று விழ, “அம்மா..” என்று சத்தமில்லாமல் கத்தியவன்ஒரு நாளே இவ்வளவு போராட்டம்ன்னா, இன்னும் வரப்போற நாளெல்லாம்..’ கண்ணைக் கட்டியது அவனுக்கு.

 

எப்போதும் அவளுக்கு இரவு உடை பேன்ட், ஷர்ட் தான். அதில் எப்படி அலங்கோலமாய் உறங்கினாலும், அசிங்கமாகத் தெரியாது. அதனால் அப்படித்தான் உறங்குவாள். இது நிலவனுக்குத் தெரியாதேபுடவையில் இருப்பதை மறந்து அவள் உறங்குவதைப் பார்த்தவன், ‘பொங்கல் வச்சாதான் சரியா வருவா போல.’ என்று நினைத்தவன், அவளது அழகை கணவனாய் ரசிக்க ஆரம்பித்தான்.

 

அவளைச் சீண்டும் விதமாக, தன் தோளில் கிடந்த அவளின் மருதாணிப் பாதத்தைக் கையில் எடுத்து மிகவும் ரசனையாய், உதட்டால் வருடி தன் முதல் முத்தத்தைப் பதித்தான். மீசை ரோமங்கள் அவளது பாதங்களை கூச வைக்க, அதில் சிலிர்த்தவள், தன் காலை உதறப் போக, அது வரவில்லை. மீண்டும் காலை உதறப் போக, தன் மற்றொரு காலால் துடைக்க முயல, அதையும் பிடித்தவனின் கையில் இப்போது இரண்டு பாதங்களும் வசமாய் சிக்கியிருந்தது.

 

மனைவியின் செயலில் புன்னகை மலர, அவளின் உறக்கத்தைக் கலைக்கும் வண்ணம், தன் மீசையால் பாதங்களை உரசவும், கன்னத்தை புரட்டவும் செய்ய, முதலில் நெளிந்தவள், பின் தன் கால்கள் எங்கோ சிறைபட்டது போல் உணர, அவன் நிதானிக்கும் முன் சட்டென்று திரும்பிப் படுக்க, அதில் அவன் முகத்தில் சிலபல சேதாரங்கள்.

 

அறிவு இருக்காடி..” என்று கட்டிலுக்கு கீழே விழுந்தவன் கத்த, “தூங்கிட்டு இருந்த என்னை நீ என்ன செஞ்சிட்டு இருந்த..” அவனை விட கோபமாய் அவள் கத்த,

 

மனைவியின் அக்னிப்பார்வையிலேயே சுதாரித்தவன், இப்போது அவளைத் தீப்பார்வைப் பார்த்து, “ம்ம்ம்பக்கத்துல ஒரு கன்னி கழியாத கன்னிப் பையன் படுத்துருக்கானேன்னு கொஞ்சம் கூட, கூச்சம் இல்லாம நீபெப்பரப்பேன்னுநான் எழுப்பும் போது, எழும்பாம, கும்பர்கர்ணன் என் அண்ணன் தான்னு சொல்லாம சொல்லி, குறட்டை விட்டுத் தூங்கிட்டு, இப்போ என்ன வந்து கேள்வி கேட்கிறியா.. முதல்ல உன்னோட ட்ரெஸ் எந்த அழகுல இருக்குன்னு பாரு, பாவமேன்னு சரி பண்ண ட்ரை பண்ணா ஓவரா பேசுற..” என்றவன் அவள் முகத்தில் தோன்றிய குழப்பத்தில், “அப்பாடா நம்பிட்டாடா…” என ஆசுவாசமாகினாலும், கோப முகத்தை மட்டும் மாற்றவே இல்லை.

 

வேக வேகமாக தன் உடைகளை சரி செய்தவள், தனக்கு கீழே கிடந்த போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, “இன்னைக்குத்தான் புடவையில தூங்கிருக்கேன், இப்படியாகும்னு யோசிக்கல, நீயாச்சும் சொல்லிருக்கலாம்..” என பாவமாய் முனுமுனுக்க, மனைவியின் பாவத்தில் அவளை அப்படியே அள்ளிக்கொள்ள வேண்டும் போல இருந்த ஆவலை அடக்கி, “க்கும்.. நீ இப்படித்தான் எப்பவும்ன்னு எனக்கு எப்படித் தெரியும்..” என்று எரிச்சலாய் கூறுவது போல் கூறி திரும்பி படுத்து சத்தம் வராமல் சிரிக்க,

 

இவளோ இவன் முன்னே இப்படி ஆகிவிட்டதே ச்ச்சை கனலி உனக்கு வர, வர கிட்னி சுத்தமா வேலை செய்யலடிஉனக்குத்தான் தூங்கும் போது உன்னோட டிசைன்ஸ் எப்படினு தெரியுமே, அப்புறம் ஏன் மாஇப்படி ..? கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்மொத்த மானமும் புடவையோட சேர்ந்து அலங்கோலமான டவுன் பஸ் ஏறிப் போயிடுச்சுஇப்போ இவனை எப்படி சமாளிக்க…’ நகத்தைக் கடித்தபடி யோசித்தவள், அவனிடம் சமாதானமாய் போய்விடலாம், அதுதான் இந்த நேரத்துக்கு நல்லதுஎன் அறிவுப்பூர்வமாய் யோசித்தவள், அவன் கோபமாகப் படுத்து விட்டதாக எண்ணி, “சாரி நான் வேணும்னே உன்னை உதைக்கல, தெரியாமதான்…” என இழுத்தபடியே சமாதானக் கொடியை பறக்க விட்டாள்.

 

மனைவியின் ஒவ்வொரு செயலும் ரசனையாகவே மாறிவிட, அதிலிருந்து மீளவே வேண்டாம் என்பதுபோல் தோன்றியது. ஆனாலும், இப்போது இதையெல்லாம் பேசினால், கனலியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவன், அவளாக வரட்டும், அதுதான் சரி, என தன் எண்ணத்தை உள்ளேத் தள்ளிவிட்டு, “நீ ஒரு தூக்கம் போட்டு எழுந்தாச்சு, எனக்கு உங்கிட்ட, வளைச்சு, வளைச்சு உதை வாங்கி தூக்கம் என்பதே இல்லாமல் போச்சு, உடம்பெல்லாம் வேற வலிக்குது. அவனவனுக்கு ஃபர்ஸ்ட் நைட்ல உடம்பு வலிக்கும் தான், ஆனா எப்படி வரும்..? அதுதான் இங்க கொஸ்டீன் மார்க்கே, டேய் நிலவா உனக்கு விதிச்சது இவ்ளோதாண்டா.. ஃபாரின் போனாலும், யூரின் போனாலும் உன் கற்பை பாதுகாத்து வச்சு என்ன பிரயோஜனம், எதுக்கும் யூஸ் இல்ல..” என்று தன் போக்கில் புலம்பியவன், அவளிடம் திரும்பிநீ படுத்து தூக்கத்தை கண்டின்யு பண்ணு ராசாத்தி, நானும் தூங்க முயற்சி பண்றேன். இனி எங்க வரப்போகுது..” என்று தன் மனதை கோடிட்டவன், குப்புறடித்து படுத்து விட்டான்.

 

எப்படியோ நம்ம மனசில் இருந்ததை சொல்லியாச்சு, இனி மேடம் என்ன செய்றான்னு பார்ப்போம்..’  விழிகள் மூடியிருந்தாலும், செவிகள் இரண்டும் அவளது அசைவை நுண்ணியமாய் உள்வாங்கிக் கொண்டிருந்தது. எதையோ யோசித்து தலையில் தட்டிக்கொண்டே அவனிடம் வருவது, அவளது அசைவில் தெரிகிறது.

 

ஆனாலும் அருகில் வந்தாலும் கையைக் கொண்டு போவதும், தொடாமலே எடுத்து விடுவதுமாக என ஒத்தையா.? ரெட்டையா.? போட்டுக் கொண்டிருந்தவளை, ‘இனியும் இவளா வருவான்னு நினைச்சா நாம தான் முட்டாள்போடுடா ஒரு ரொமாண்டிக் சாங்க, ஹேய் கேர்ள்ஸ் நீங்கெல்லாம் அவுட்.. இங்க ஒன்லி பொங்கல், நோ டான்ஸ் ப்ரோக்ராம்சோ ஆல் ஆடியன்ஸ் அவுட்.. அவுட்…’ என கவுன்டர் கொடுத்தபடியே, அவள் மறுபடியும் கையை நீட்டும் நேரம் சட்டென்று திரும்பி, கையை பிடித்திழுத்து தன்மேல் போட்டு இறுக்கிக் கொண்டான்.

 

என்ன பண்ற விடுடா..” எனத் திமிறியவளை, இறுக்கியவன்எங்கிட்ட வரதுக்கு உனக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்..” என்றதும், தன் ஒட்டு மொத்த பலத்தையும் கொடுத்து, அவனைத் தள்ளியவளின் முகம் கோபத்திலும், இயலாமையிலும் சிவந்து போனது.

 

 உங்கிட்ட நான் ஏன் வரனும்நீ யாரு எனக்கு, உன் புருஷன், டேஷ்ன்னு எந்த மண்ணாங்கட்டி விளக்கமும் சொல்லாத, என் அத்தைக்கு பையன் இல்லைன்னாலும் பரவாயில்லன்னு உன்னைக் கொன்னுடுவேன்.” என்றுக் கத்தியவள் நிற்காமல் வழிந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்து, அவனை உக்கிரமாய் முறைத்து, “ஒரு பொண்ணு தானா வந்து உங்ககிட்ட லவ் சொன்னா, அவ்வளவு எகத்தாளம் இல்ல உங்களுக்கு. அப்போ கூட உன்னை நான் லவ் பண்ணுன்னு சொல்லல, கல்யாணம் பண்ணிக்கலாமான்னு தான் கேட்டேன்.. அதுக்கு நீ என்னை எப்படி ட்ரீட் பண்ண..  நான் கேட்டும் நீ என்னை வேண்டாம் சொன்ன, பொறுப்பில்லாத அதிகப்பிரசங்கி சொன்ன, அதையெல்லாம் விட நீ.. நீ என்னைப் பார்த்து..” என்றவள், சொல்ல வந்ததை சொல்லாமல், கண்ணீரை உள்ளிழுத்துகைகளை இறுக்கமாகக் கட்டித் தன்னை ஆசுவாசப்படுத்தினாள். ஆனாலும் நீர் நிற்காமல் வழிந்தது.

 

தன்னுடைய அன்றைய முடிவு அவளுக்கு  இவ்வளவு வலியயைக் கொடுக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை. முதலில் அந்த வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியில் அப்படி கேட்கிறாள் என்று நினைத்து தான் அன்று அவன் அப்படி பேசியது. படிக்கிற வயதில் இப்படி வந்து கேட்கிறாளே என்ற கோபமும் வந்தது, அதனால் தான் அவன் அவளை கண்டபடி பேசிவிட்டு சென்றது. அதன்பிறகு காலத்தின் ஓட்டத்தில் இதன் ஞாபக சுவடு கூட இல்லை அவனிடம். ஆனால் வருடங்கள் கடந்து நாயகி இவர்களின் திருமணப் பேச்சை எடுக்க, அன்றைய சம்பவமும், இதற்குப் பின் கனலியின் தூண்டுகோல் இருக்குமோ என்ற எரிச்சலில் மறுபடியும் அவளை வேண்டாம் என்றான்.

 

அப்போது அவன் வெளிநாட்டில் இருந்தான். அன்றைய சிறுபிள்ளையாகவே இப்போதும் அவள் இருப்பாள் என்று நினைத்தான். ஆண்டுகள் கடந்தும் கூட அவள் இதே நினைப்பில் இருக்கிறாள், அப்படியென்றால் அன்றைக்கு நான் பேசியது எல்லாம் வீணா..? தன் பேச்சைக் கேட்காதவளை எப்படி காலம் முழுக்க  சகிப்பது என்று முட்டாள்தனமாக யோசித்து, நாயகியிடம் வேண்டவே வேண்டாம், வேறு பெண்ணைப் பாருங்கள் என்றும் சொன்னான் முட்டாளாக.

 

ஆனால் அவன் அறியாதது, நாயகி திருமணத்தைப் பற்றிக் கேட்டது, கனலிக்குத் தெரியாதென்று. கனலியிடம் கேட்டதற்கு அவளும் வேண்டவே வேண்டாம் என்ற பதிலைத் தான் சொன்னாள் என்பதும். இருவருக்கும் விருப்பம் இல்லை என்ற பிறகுதான் அப்போதைய இவர்களின் திருமணப் பேச்சு நின்றது என்றும். இவன் யோசனைகள்  இப்படியாக ஓட, அவளை சமாதனப்படுத்தும் நோக்கோடுநான்.. நான் அந்த மீனிங்க்ல சொல்லலநீ தப்பா…” என்று சொல்லி முடிக்கக் கூட இல்லை.

 

அவன் முடியைப் பிடித்து உழுக்கி, “நீ என்னை வேண்டாம்னு சொன்ன ஓகே, ஆனா வீட்ல வேற பொண்ணு பாருங்க சொல்லியிருக்க, என்னைப்பத்தி யோசிக்கவே இல்ல. போ.. போ.. உன்னால தான், உன்னால தான் நான் இப்படி ஆனேன். என்னோட இந்த ஆட்டிட்டியூட்க்கு மொத்த ரீசனும் நீதான்…” ஆவேசம் குறையாமல் பேசிக் கொண்டிருந்தவளை, எப்படி நிறுத்த என்பது போல் ஒரு பார்வைப் பார்த்தான்.

 

தன் முடியைப் பிடித்திருந்தவளின் கைகளை வலுக்கட்டாயமாக விலக்கி, தன் இறுகிய அணைப்பின் கீழ் கொண்டு வந்தவன், “நீ போ..போன்னு சொன்னா, நான் போயிடனுமா.. என்னைப் பார்த்தா உனக்கு கிறுக்கன் மாதிரி இருக்காசொல்லுடி.. சொல்லு…” என்று அவளது கோபத்திற்கு கொஞ்சமும் குறையாமல், அதேநேரம் அவளைப் போல் கத்திக் கூப்பாடு போடாமல் இறுகிய குரலில் அழுத்தமாய் கேட்டான்.

 

அந்தக் குரலில் அவளது மொத்த திமிறலும் அடங்க, விழியும் நீரைக் கசிவதை நிறுத்த, உடலும் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது. அதில் அவனும் சற்று நிதானம் பெற்று, “ ஆமா உன்னை வேண்டாம்னு சொன்னேன்தான், ஆனா பிடிக்கலன்னு எப்போ சொன்னேன். (அடப்பாவி.. உன்னை வச்சு எப்படிடா கதையை முடிக்க, இப்படி பொய் பொய்ய்யா சொல்றஅவ்வ்வ்) உன்னோட சிறுபிள்ளைத்தனம் எனக்கு பயமா இருந்தது. சைல்டிஷா பிஹேவ் பண்ற பொண்ணு எப்படி என் கூட என் லைஃப்லாங் இருக்க முடியும்ன்னு தோணுச்சு, என்னோட பேரண்ட்ஸை எப்படி பொறுப்பா பார்த்துப்பேன்னு தோணுச்சு, ஏன்னா அப்போ எனக்கு ஃபாரின்ல செட்டில் ஆகுற ஐடியா இருந்துச்சு.. அதுக்கு நீ செட்டாக மாட்டேன்னு நினைச்சேன். இதுல என்ன தப்பு இருக்கு நீயே சொல்லு..”

 

அதோட நீ எங்கிட்ட வந்து நாம கல்யாணம் கட்டிக்கலாமான்னு கேட்கும் போது உனக்கு வயசு வெறும் பதினேழுதான். அப்போ நான் என்ன செஞ்சிருக்கனும்சொல்லிட்டாளே அவ காதலன்னுமேலயும் கீழயும் துள்ளனுமா.. இல்ல கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லை ஓடிப்போய் கல்யாணந்தான் கட்டிக்கலாமான்னு ஒரு குத்து டான்ஸ போட்டு வரிசையா புள்ளய பெத்திருக்கனுமா..(எரும எரும…. உன்னை ஃபாரின்லாம் அனுப்பி வச்சேனே, எத்தன இங்க்லிஷ் படம் பார்த்துருப்ப, எத்தன ரொமாண்டிக் சீன்ஸ், சாங்க்ஸ் போயிருக்கும், அதையெல்லாம் சொல்லாம.. விக்ரம் பிரபு லக்ஷ்மி மேனன் ரெண்டு பேரும் ஆளையே காணோம், விக்ரம் த்ரிஷாவ போட்டுத் தள்ளிட்டு, கீர்த்தி சுரேஷ் கூட சாமி 2 வே நடிச்சிட்டு போயிட்டார்நீ இன்னும் அந்தப் பாட்ட பாடிக் காட்டிட்டு  இருக்க, ஃப்ர்ஸ்ட் நைட் அன்னைக்கே உனக்கு டிவோர்ஸ் ஆனா நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்மை மைண்ட் வாய்ஸ் அவ்வ்வ்)” என்று அதே குரலில் பேச, அவளது மிரட்சிக்  குறையவே இல்லை.

 

உடலில் விறைப்பும், கண்ணில் மிரட்சியுமாக நின்றிருந்தவளை, மீண்டும் இழுத்து அணைத்து, அவள் தலையில் தன் தாடையையும் பதித்து, “இப்படி ஒரு சூழல் வரும்னு தெரியும், அதை எப்படி ஹேன்டில் பண்றதுன்னும் தெரியும், நம்ம கோபமும், சண்டையும் நடக்க வேண்டிய இடம் இது இல்ல. நம்ம வீட்ல, நம்ம ரூம்ல தான் இது நடக்கனும். இங்க இருக்கிற வரைக்கும் எதுவும் வேண்டாம். உன்னை வேண்டாம்னு சொல்லும்போது, எங்கிட்ட பெருசா எந்த ரீசனும் இல்ல.”

 

இப்போ இந்த நிமிசம் நீ மட்டும்தான் வேணும்னு சொல்றதுக்கும் பெருசா எந்த ரீசனும் தெரியல. ஆனா நீ இல்லாம என்னால வாழமுடியாதுன்னு மட்டும் புரியுது. இனி இதைப்பத்தி பேசவே வேண்டாம். மணியும் நாலாகிடுச்சு, எதையும் யோசிக்காம தூங்கு, நானும் தூங்கிறேன்.. (ஆஹா எஸ்ஸாகிட்டானே)” என்றவன் தன் அணைப்பில் வைத்தபடியே படுக்கையில் சரிய, ஏனோ கனலிக்கு  அதன்பிறகு வாதம் செய்ய பிடிக்கவில்லை. தன்னுடைய இத்தனை வருடத் தவிப்புகள் அனைத்தும் அவனது இந்த ஒற்றையணைப்பில் கரைந்தது போல் தோன்ற, அவனிலேயே ஒன்றித் தன் தூக்கத்தை தொடர முயன்றாள்.

 

இருவருக்குள்ளும் காயங்கள்தான், வலிகள்தான் வடுக்கள்தான். அவளது காயத்தை ஆற்ற மருந்தாகினான் அவன். அவனுக்கு..?

 

இன்னும் முழிப்பாள்…..
Comments are closed here.

error: Content is protected !!