Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள் 41 – 42

அத்தியாயம் 41
முன் புறமாக ஏறச் சென்றவளை தடுத்து“இங்க வேணாம் பின்னாடிப் போய்உட்காரு” அவள் முகம் சட்டென்று சுனங்கஅதை கவனித்தவனாய் “இங்க உனக்குகபர்டபுலா இருக்காதுன்னு தான்சொன்னேன்” மனைவியின் மன வருத்தத்தைக் கூட பொருக்க முடியாதவனனின் செயல்உண்மையாகவே அவள் மனதை மழைச்சாரல் கொண்டு நினைக்கச்செய்தது…

 

வீட்டிற்கு செல்லும் வரை இருவருக்குமிடையே எந்த பேச்சின்றிமௌனங்களே ஆட்சி செய்ய பெண்ணவளோ கணவனின் முகத்தை நொடிக்கொரு பொழுது பார்ப்பதுமாய்திரும்புவதுமாய் இருக்க அதைக் கண்டுகொண்டாலும் அவன் தன்
மௌனத்தையே மேற்கொண்டான்….

 

கணவனின் மனதை புரிந்தும் புரியாமலும் ஒருவித குழப்ப நிலையேதொடர…. மித்ராவின் ஏக்கப்பார்வைமட்டும் அவனைவிட்டு அகலமறுத்தது….

 

நள்ளிரவாகியும் வீட்டின் விடிவிளக்குஎரிந்துக்கொண்டிருக்க…. மித்ராவின்மனதிற்குள் சற்று அச்சம் தலைதூக்கஆரம்பித்தது… தன்னைப் பற்றி கேட்டாள்என்ன கூறுவது நான் இங்கிருந்துசெல்லும் போது எத்தகைய சூழ்நிலையில் சென்றேன்…. என்னைப்பற்றி கூறியிருப்பாறோ??? என்னைப்பற்றின உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்குமோ??? “என்னவென்று கணிக்க முடியாதவாறுஅமர்ந்திருந்தாள்…

 

தன்னைப் பற்றின உண்மை கணவன்அறிந்திருந்தும் அதைப்பற்றி ஏதும்பேசாமல் வருபவனை பார்த்தவளுக்குஅவனின் கோபம் முழுவதும் புரிந்ததுஇருப்பினும் இத்தகைய அவனின்ஒதுக்கம் அவளுக்கு புதியதாய் தெரியஅவளுள் நடுக்கத்தை பரப்பியது…. வீடு வந்துவிட காரைவிட்டு இறங்கியவன் மறுபக்கம் வந்து கார்கதவை திறந்துவிட்டவன் அவளைமுன்னே செல்லுமாறு பணிக்க தானும்அவளோ பெரும் யோசனையோடு அடியெடுத்து வைக்க அவளை தொடர்ந்துஅவனும் பின்னே சென்றான்…

 

அவர்கள் வரவை எதிர்பார்த்துகாத்திருப்பதுப் போல் அனைவரும்அங்கே காத்திருந்தனர் மித்ரா இருக்கும்இடத்தை கண்டுப்பிடித்த முதல்,அனைத்து உண்மைகளும் புலப்பட…. அவளை அழைத்துக்கொண்டு வருமாறுஆதி சென்றதை தொடர்ந்து அனைவரும்வனவாசமிருக்க மித்ராவின் வருகையைமுதலில் பார்த்த வர்ஷா “அம்மா…. அண்ணி வந்துட்டாங்க “ அவளது குரல்அனைவரையும் திரும்பிப் பாக்கச்செய்ய… நம்ப முடியாமல் பார்திருந்தனர்….

 

மித்ராவை பார்த்த மாத்திரத்தில் தீபாஓடிச்சென்று அணைத்துக்கொண்டுகதறிவிட்டார் “ ஏம்மா…. ஏன்டா எங்களவிட்டுட்டு எங்க போன…. நீ கூடவேஇருந்தும் உன்னைப்பற்றி எங்களுக்குதெரியல… நீதான் என் அண்ணன் பொண்ணு தெரிஞ்சதும் எனக்குஎவ்ளோ சந்தோஷம் தெரியுமா… உன்னை தெரிஞ்சி பறிகொடுத்துட்டோம்னு இத்தனை நாள்நாங்க வருத்தப்படாத நாளே இல்லஎங்களுக்கு மறுபடியும் கிடைச்சா நீதிரும்பவும் தொலச்சிட்டோம்னு ரொம்பபயந்துட்டோம்… இப்பதான் எங்களுக்குஉயிரே வந்த மாதிரி இருக்கு… உன்னயாரும் எதும் பண்ணலையயே” என்றவர்கண்கள் மீண்டும் அவளை அளவெடுக்கஅதில் மித்ராவின் கண்கள் கலங்கியது,எதனால் தெரியவில்லை… ஒருவேளைதன் குடும்பத்தினரிடம் தான் வந்துசேர்ந்ததாயில்லை , தனக்கும் தன்கணவனுக்கும் இடையில் நடந்த சிறுகருத்து வேறுபாட்டை கூட அவன்யாரிடமும் கூறாமல் தன்னை காட்டிக்கொடுக்காமல் இருப்பதனின்காரணம் இதில் ஏதோ அவளை கண்கலங்க செய்தது…

 

கமலம்மாவோ “மித்துமா “ என்றழைக்கஅவர் அருகில் சென்றவள் “பாட்டி என்னமன்னிச்சிடுங்க… உங்க எல்லாரையும்நான் ரொம்பவே கஷ்டப்படித்திட்டேன் “அவளது மனம் தன் கணவனுக்கும்சேர்த்தே மன்னிப்பு கோர இங்குநடப்பதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும்இல்லாததுப் போல் அவன் முகம் இறுகநின்றிருந்தான்…. அவள் அனைவரிடமும்சற்று சகஜமாக பேச்சுக் கொடுக்க…அவளுக்கு சிறிது மாற்றம் வேண்டிஅவன் நகர்ந்து தன் அறைக்கு
சென்றான்….

 

“பாட்டி…. இனிமேட்டு உங்கள இப்படிதவிக்க விட்டுட்டு போகமாட்டேன்… மாமாசாரி “ அனைவரிடமும் மன்னிப்புகேட்டவளை பார்த்த தீபா “ மாசமாஇருக்குற பொண்ணு இப்படிலாம் பேசிகண்கலங்க கூடாது… அதன் எங்க மித்ராஎங்களுக்கு திரும்ப கிடச்சிட்டாலே…. இனிமே எங்க போனாலும் சொல்லிட்டுபோட… நாங்க இழந்த வரைக்கும்போதும்…. நாங்க திரும்பவும் இழக்கஒன்னுமில்ல மீண்டும் இழப்ப தாங்குறசக்தி எங்களுக்கு இல்லை” புரிந்துக்கொள்வாய் என்று நம்புகிறேன் என்றவர்ஆதியின் நினைவில் “மித்துமா நாங்ககவலைப்பட்டதோட ஆதி தாண்டா ரொம்பபாவம்… அவன் இத்தனை நாள் எப்படிஇருந்தானு எங்களுக்கு மட்டும்தான்தெரியும்”

வெங்கட்ராமனும் “ஆமா மித்துமா…எதுக்கும் கவலைப்படாதவன் அவனநான் சின்னவயசுல இருந்து பார்த்தவரைக்கும் எதுக்கும் கலங்காதவன் இந்தஒன்ற மாசமா அவன் அவனா இல்லமா…நீயும் அப்படியே ஆளே பதியாகிட்ட…சரி நீபோய் ரெஸ்ட் எடுமா” என்றவர் மேலேஇருக்கும் அவர்கள் அறைக்குசெல்லுமாறு கூறினார்…

 

அவர்வர் அறைக்கு அனைவரும் திரும்பிசென்றுவிட இதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஜெகதீஷ் தான்செய்த காரியத்தின் வீரியம் மனதைபிசைய அமைதியான முறையில் தன்அறைக்கு சென்றான்…. தங்களது அறைக்கு செல்ல ஆயுத்தமானவளின் மனதில் பயப்பந்துஉருள தொடங்கியது இருந்தும் அம்பிலிகூறிய அறிவுரை அவள் மூலையில்உரைக்க செய்தது “ வாழ்க்கைனா ஆயிரம் மனஸ்தாபங்கள் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும், சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமும் இல்ல… இன்னும் எவ்ளோ கொடுமைகள்இருக்கு…. ஒருதங்க சுயநலமற்ற அன்பைபொழியும் போது நாமும் திருப்பிகொடுத்து அந்த இணையை பலப்படுத்தி மகிழ்ச்சிப்படுத்தனும்… கஷ்டங்கள்இல்லாத வாழக்கையுமில்லை…

 

துரோகங்கள் செய்யாத மனிதர்களும்இல்ல… இதில் எல்லாம் வென்றுவருவதே உண்மையான வாழ்க்கையின்வெற்றி… நீ புத்திசாலி பொண்ணு நான்என்ன சொல்லவரேணு நீ புரிஞ்சிப்பனுநினைக்குறேன்” என்றவர் வாழ்க்கையின் பாடத்தையும் கூறிஅனுப்பினார்…

 

அறைவாயிலுக்கு வந்தவளால் அவன்அனுமதியின்று உள்ளே செல்ல
தோன்றாமல் அறைவயிலிலே தாமதித்தாள்… அவள் தயகத்தைக்கண்டவன் அவள் அருகில் சென்று அவள்கையைபிடித்து அழைத்து வந்தவன்அறைக்கதவை தாழிட்டு விட்ட கரத்தைமீண்டும் பிடித்து படுக்கை அறைநோக்கிஅவளை அழித்து சென்றான்… வரவேமுடியாது என்று நினைத்து சென்றவள் இன்று இங்கு வந்ததை அடுத்து அவர்கள் மகிழிச்சியாக  செலவழித்த செல்ல சினுங்ளுடன் கூடிய கூடல்கள்….

 

கணவனின் தீரா தேடல் அனைத்தையும் நினைவு கூர்ந்தவளுக்கு அந்த நாட்களை திரும்பி பார்க்க வேண்டும்போல் இருந்தது…. அவளை கட்டிலில் அமரச்செய்து அருகிலிருக்கும் மேசைமீதிருந்த வைக்கப்பட்டிருந்த பழச்சாறை அவள் கையில் திணித்தவன் “ குடி “ என்ற ஒற்றை சொல்லொடு கூறியவனை பார்த்துக் கொண்டிருந்தவளை மிரட்டும் தோணியில் “ என்ன வேடிக்கை குடி” அவன் சொல்லில் அதிர கையில் வைத்திருந்த பழச்சாறை ஒரே மூச்சில் வாயில் சரித்தவளின் பசி அவன் அறிந்ததாயிற்றே….

 

அவளுக்கும் சற்று உடல் தெம்பு வந்ததுப்போல் உணர்ந்தாள்… கையில் வெறும் கண்ணாடி குவலையை வைத்துக்கொண்டு தலைக் குனித்திருந்தவளிடம் அதை வங்கியவன் மேசைமீது வைத்த மறுநொடி அவள் மடியில் தஞ்சம் புகுந்திருந்தான்….

 

எத்தத்தனை நாள்…. இந்த சுகத்தை இழந்திருக்கிறான்… எத்தனை நாள் அவளின்றி அவன் தவித்திருக்கிறான்… அவனது அழ்மனதில் அவள் மேல் கோபமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த தெரியாதவன் அவளிடமே தஞ்சமடைந்தான் அவனின் வலியும் அவளே!!! அவனின் மருந்தும் அவளே!!! கதி என்றவன் சேயாய் மாறி அவள் மடியில் தஞ்சமடைந்திருந்தான்…

 

அவளது மடியில் படுத்தவன் இத்தனைநாள் பிரிவின் துயரைப் போக்க அவள் மடியில் கண்மூடு படுத்திருந்தான்… அவன் எந்த ஒரு பதிலுமின்றி இப்படி இறுகிப்போய் படுத்திருப்பதை ஒருவித பய பீதியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா… பின்னே தான் செய்த முட்டாள் தனத்திற்கு அவன் எதுவும் செய்யாமல் இப்படி பொறுமையாய் அதுவும் தன் மடியில் படுத்திருக்கும் கணவனின் செய்கை முற்றிலும் புதியதாய் தெரிய அவளுக்கு வேர்த்துக்கு கொட்டியது…

 

அவளின் சொட்டு நீர் வேர்வை அவன் தலையில் பட்டு தெறித்த நொடி பட்டென்று கண்களை திறந்தவன் அவள் மடியிலிருந்து எழுந்து ஏசியை கூட்டி வைத்து மீண்டும் அவளது மடியிலையே கண்களை மூடி படுத்துக்கொண்டான்… அவளுக்கோ ஏசியை கூட்டி வைத்தாளும் அவளின் படபடக்கும் நெஞ்சின் பதட்டத்தை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை… பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் ஒட்டுமொத்த தைரியத்தை திரட்டி அவனை அழைத்தாள்…

 

“பாவா என்…. என்ன மனிச்சிடுங்க …. இந்த வார்த்தைய சொல்றதுக்கு எனக்கு தகுதி இல்லதான் பாவா… இருந்தும்” அவள் பேச்சை தடுத்தவனாய் “நான் உன்னை இப்ப எதுவும் கேக்களையே மித்ரா” முதல் தடவையாய் அவளை அவன் பெயர் சொல்லி அழைத்தான்… அவனின் “பேபி” என்று தனித்தன்மையாக அவன் தன்னை அழைக்கும் செல்ல பெயர் எங்கே சென்றது…

 

அவள் இதயத்தில் சுருக்கென்று ஒரு வலிதைக்க ஏதோ அவனை விட்டு தாம் வெகுதூரம் சென்றுவிட்டோமா என்ற உணர்வு அவளை தாக்க அவனை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் மனையாள்… “பாவா …. நான் உங்களை விட்டு போயிருக்க கூடாதுதான் என்ன மன்னிச்” – தன்னிடம் மீண்டும் மன்னிப்பு யாசிக்கும் மனைவியை பார்த்தவனின் கோபம் உயிர்த்தெழ தன் உக்கிறப்பார்வையை மித்ரா மீது வீசினான்…

 

கோபத்தோடு தன் முன் நின்றவனை பார்த்தவள் கப்பென்று அடங்கியும் போனாள்… அவள் எதற்காக தன்னை விட்டு சென்றால் என்று நன்கு அறிந்தவானால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் ருத்ரமூர்த்தியாக அவள் முன் நின்றவன் அவளை நோக்கி மெடிக்கல் ரிப்போர்ட் ஒன்றை தூக்கி எறிந்தான்….

 

தன் முன் கிடந்த மெடிக்கல் ரிப்போட்டை கையில் எடுத்தவள் அதை இருந்த இடத்திலையே வைத்தாள்…. அவளையே பார்த்திருந்தவன் “ என்ன எடுத்து பாரு… அப்பையாவது என் மேல உனக்கு நம்பிம்கை வருத்தானுப்பார்போம்” தன் மேல் தப்பிருப்பது புரியசெய்தாலும் அவன் வார்த்தை அவளுக்கு வலிக்கச்செய்தது….

 

“ அது…. அதுக்குலாம் அவசியமே இல்ல பாவா…. என் பாவா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அப்படிலாம் பண்ணிருக்க மாட்டீங்கனு எனக்கு தெரியும்” அவள் பதில் அவனுக்கு அற்பமாய் தெரிய அவன் இதழ் ஓரத்தில் வலி மிகுந்த ஒரு புன்னகை தோன்றி மறைந்தது

 

“ ஹ்ம்ம் காலம் கடந்த ஞானோதயம்…. இந்த எண்ணம் எப்போ வந்துச்சி முன்னாடியா…. இல்ல சாதிக் வந்துட்டு போன பிற்பாடா” பாவா என்றவளுக்கு வார்த்தை வரவில்லை

 

“ என்ன அப்பிடி பாக்குற… இவனுக்கு எப்படி தெரியுமுனா உன்ன கண்டுபிடிக்க ஆரம்பிச்சதுமே, உனக்கு சம்மந்தமான எல்லா தகவலும் என் கைக்கு வந்திரச்க்க்சி…. ஒருத்தன் சொல்லித்தான் புரியனுமா அவ்ளோ சந்தேகமா என் மேல????”

 

“அச்சோ பாவா…. உங்கள சந்தேகப்பட்டுலாம் நான்”….

 

“போதும் எதுவும் பேச வேண்டாம்” என்று தடுத்தவனை கண்டவள் கலங்கிப் போய் நின்றாள்…

 

“ நான் உன்ன கடைமைக்காகதான் கல்யாணம் பண்ணினெனு பாதி வரைக்கும் கேட்டுட்டு முடிவெடுத்துட்ட இல்லையா… சுயநலமா முடிவெடுக்கும் உரிமை உனக்கு நான் என்னைக்குமே கொடுக்கல…. இதில் என்னோட வாழ்க்கையும் அடங்கிருக்கு முக்கியமா என்னோட குழந்தைங்க வாழ்க்கையும் அடங்கிருக்கு”…. தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டவன் தன் முழு உயரத்திற்கு உயர்ந்து நின்று அவளைப் பார்க்காத வண்ணம் “ என்னை கேட்காம நீயா முடிவெடுத்தது முதல் தப்பு,,,,,,,, இரண்டாவது என் குழந்தைகளை என்கிட்ட இருந்து பிரிச்சது…. மூன்றாவது என்ன கேட்காம நீயா உன்னோட வாழ்க்கைய மட்டும் முன்நிறுத்தி சுயநலமா என்னை விட்டு போனுனு எடுத்த முடிவு” அவன் வாசித்த குற்றப்பதிரிகையை மறுபரிசீலனின்றி ஒப்புக்கொண்டவள் அவதானித்தவளாக நின்றாள்….

 

அவன் தன்னுடனான வாழ்க்கை வாழ பிடிக்கவில்லையென்று எண்ணி தானே அவள் அவனை விட்டு பிரிந்து வந்தது…. அவனைவிட்டு வந்தவள் தான் என்றாலும் அவள் மட்டும் என்ன நன்றாகவா இருக்கிறாள் உடலில் உயிர் இருந்தும் ஜீவணற்றிப் போய் தான் இதுநாள் வரை அவள் வாழ்ந்தது இல்லை இன்றும் அப்படியே கணவனின் பாராமுகத்தால்…

 

“நேஹா உடனான என்னோட பழக்கம் நான் உன்ன கல்யாணம் பண்ண வரும் முன்ன எனக்கும் அவளுக்குமான உறவு நீ தெரிஞ்சது தான்… நான் இல்லன்னு சொல்லவரல” அதே திருமணத்திற்கு பிறகு உன்னை நான் காதலித்து உன்னைமட்டுமே நினைத்து நான் அன்பை பொழிந்தது நீ உணரவில்லையா… “என் மேல் உனக்கு உண்மையான காதல் அன்பும் இருந்திருந்தால் இந்த முடிவுக்கு நீ வந்திருக்கமாட்டாய்… இந்த முடிவுக்கு நீ வந்ததின் காரணம்???” அவள் என்ன காரணம் சொல்வாள் தான் அவனுக்கு பொருதமில்லை என்றும் அவளது ஊனம் இப்போது அவளுக்கு பூதகரமாய் தெரிந்தது தான்னை மணந்துக் கொண்டு அவன் நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு அவளது மனம் இடம் கொடுக்கவில்லை அவன் வாய் மொழியாகவே அன்று கேட்டவலாயிற்றே ஆனால் இன்று அதற்கு மாறாக தன் மேல் காதல் உள்ளது என்று கூறும் கணவனை அதிசயமாக பார்த்தாள்….

 

“என்னைவிட்டு பிரிய முடிவெடுத்த நீ ஏன் என்கிட்ட உரிமையோட சண்டபோடல???…. ஒருவேளை நீ காரணம் கேட்காத அளவுக்கு நான் கேவலமா போய்ட்டனா”

 

“அய்யோ பாவா போதும் என்னால முடில” என்று கேவி அழுதவளை சமாதானப்படுத்த அவன் கைகள் பரபரத்தது… இருந்தும் இரண்டில் ஒரு முடிவு தெரிய வேண்டும்மென்று காத்திருந்தான்… ‘என்னலையும்தான்டி முடில…. என்ன தவிக்க விட்டுட்டு போனியே டி … எனக்கு எப்படி வலிச்சிருக்கும்’ பார்வையால் தன் மனைவியிடம் கேட்டுக்கொண்டிருந்தவன்…. மேலும் அவனே தொடர்ந்தான்….

 

“என்னோட எந்த ஒரு செயலும் சரி … என்னோட காதலும் சரி என்னைக்கும் உன்னையே மட்டும் தான் சிந்திச்சி செயல் படும் இப்ப இந்த நொடி வரைக்கும் அப்பிடிதான்… என்னைய விட்டு விலகி போகணும்னு நினைச்ச நீ…. ஒருநிமிஷம் கூட என்கிட்ட என்ன கேக்கணும்னு தோணலல!!! அந்தளவுக்கு நான் உனக்கு நம்பிக்கை இல்லாம போய்ட்டேன் இல்லையா மித்ரா…”அவனின் நம்பிக்கை இல்லையென்ற கேள்வியில் முற்றிலுமாக உடைந்தாள். ஆனாலும் அவளிடம் பதிலில்லை…

 

“என்ன காரணம்னு தெரியாம…. ஒரு பைத்தியம் மாதிரி இருந்தேன்… நான் நானா இல்லடி… ஆனா சத்தியமா நான் எதிர்பாக்குல… நீ என்ன நம்பாமதான் போனனு…. ரொம்ப வலிக்குது டி இங்க” தன் நெஞ்சை சுட்டுக்காட்டி அவன் கூறுகையில் உண்மையிலே அவள் தான் துடித்துப் போனாள்…

 

அவன் வலியை உனர்ந்தவளின் கண்களில் கண்ணீர் மட்டுமே… அவன் வாழ்க்கை சிறக்க வேண்டித்தான் அவள் விலகியது…. அவள் நினைத்தது வேறு நடப்பது வேறாக இருந்தது…. அவனின் வலி அவளையும் தாக்கியதோ இல்லை அத்தகைய வலியை தானும் அனுபவித்ததோ தெரியவில்லை… அவள் மனம் தன்னவனுக்காக கலங்கியது…

 

அவனோ அவளை நேராக பார்த்து “ எங்க அம்மா என்னைய வேண்டாம்னு தூக்கியேறிஞ்சிட்டு போனப்ப கூட எனக்கு எந்த கஷ்டம் தெரில்ல… அதுக்கு அப்புறம் எங்க அப்பாவோட இழப்பு… யாரும் மில்லாம தனியா நின்ன என்வாழ்கையில் நீ நுழைஞ்ச நிமிஷம் நீ எனக்காணவள்னு தோனிச்சி…. உன்னையும் இழக்க விரும்பாமதான் நான் உன்னை உரிமை என்ற அடிப்படையில் மணந்தது… அதுக்கு அப்புறம் உன்கூட நான் வாழ்ந்த வாழக்கை உண்மையானது உணர்வுப் பூர்வமானது… இது உனக்கு புரியலையா இல்ல என்னோட காதலை நீ உணரலையா… என் வாழ்க்கையை வண்ணமையமா மாத்தினது நீ” அதேப் போல் என்னை இருட்டில் தள்ளிவிட்டு சென்றுவிட்டதும் நீதான் என்று கூறும் கணவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை… அவளோ அவன் பேச… பேச பதிலிக்க முடியாமல் நின்றாள்…

 

அவன் காதலை உணராது… அவன் மேல் நம்பிக்கை கொள்ளாது அவனை பிரிந்து சென்றவலாயிற்றே அவள்…. அது மட்டுமா தன் மேல் உயிரை வைத்திருப்பவனின் காதலை உணராது சுயநலமாக யோசித்து அவன் காதலை காலால் எட்டி உதைத்து அல்லவா சென்றாள்… தானும் குழம்பி அவனையும் குழப்பி இதில் குலைந்தது அவர்களது நிம்மதி என்றது அவள் எங்கனம் அறிவாள்!! சூழ்நிலைகளே கேள்வி!!! காரணங்களே வினா!!! இதில் பக்குவமாய் கையாளவிடில் வாழ்க்கை கேள்விக்குறியே…..

 

அத்தியாயம் 42

 

அவளிடமிருந்து பதில் வராது என்று எண்ணியவன் அங்கு நிற்பது பலனில்லை என்று அறிந்தவனாக கார் சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்…

 

தன்னை கடந்து செல்லும் கணவனை பார்த்து தடுக்கக் கூட முடியாமல் பயத்தில் உறைந்திருந்தாள்…. இரவு உணவை வற்புறுத்தலோடு உண்டவள் அனைவரும் எவ்ளோவோ எடுத்து கூறியும் கணவனுக்காக காத்திருந்தாள் அவனோ அவளை தவிக்க விட்டு நள்ளிரவு தாண்டி தாமதமாகவே வீட்டிற்கு வந்தான்…. அவன் வரவை எதிர்பார்த்தவள் அவன் அருகில் செல்ல அவளை தடுத்து நிறுத்தினான்….. எப்போதும் தனக்காக காத்திருக்கும் மனைவியை பார்க்க அவனுக்கு புரிப்பில் பழைய நியாபகங்களின் என்ன அலைகள் அவனை வேரோடு சாய்த்தது அவனுக்கு நன்கு தெரியும் தன் மனம் மனைவியின் அருகமையை முற்றிலும் நாடும் என்பதை அறிந்தவன் அவளை தடுத்து நிறுத்தி அவள் முகம் பார்க்காது இரவு உடையை அணிந்து படுக்கையில் சரிந்தான்….

 

கணவன் தன்னை முற்றிலுமாக வெறுத்துவிட்டானோ என்று நினைத்து அழக்கூட சக்தி யற்றவளாய் அவனுக்கு மறுபக்கம் வந்து படுத்தவள் தூக்கமின்றி கணவனையே பார்த்திருந்தால்… அவன் உறங்கிவிட்டான் என்று எண்ணியவள் அவனை நெருங்கி படுத்தவளுக்கு அவனிடமிருந்து வந்த மது வாடை அவளை கவலைக்குள்ளாகியது தன்னால் தான் அவன் அவனையே வருத்திக்கொள்கிறானே என்று கழிவிரக்கம் எழுந்த அதே நொடி அவன் முகத்தில் ஏதோ புது வித்யாசமாக முதலிருந்து பட அது என்னவென்று புலப்பட அவன் முகத்தில் புதிதாக குடி கொண்டிருக்கும் தாடி அவனது மனதை எடுத்துரைக்க அவனை இன்னும் நெருங்கியவள் அவன் தலையை கோதி கொடுத்து அவன் நெற்றியில் முத்தம்வைத்தாள்…

 

அவனோ உறங்குவதுப்போல் பாசாங்கு செய்துக்கொண்டிருந்தவன் மனைவி என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்கு அசையாது படுத்திருக்க அவளது இதழ் ஒற்றலில் அவனது மனமோ நீண்ட நாட்களுக்கு பின் கிடைக்கும் மனைவியின் அருகாமை அவனை பித்துக்கொள்ளசெய்து மேலும் அவனை சோதித்து பார்த்தது……

 

தன்னவனை விட்டு விலகிப் படுத்தவள் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே உறக்கத்தை தழுவ…. ஆதியோ உறக்கத்தை தொலைத்திருக்க கண் மலர்தி மனைவியை பார்த்தவன் அவளின் நலுங்கிய தோற்றம் அவனை பெரிதும் பாதித்தது….

 

இரு உள்ளங்களும் தன் இணையானவர்களை நினைத்து அவரவர் போக்கில் கலங்கி நிற்க…. சொல்லி வரும் காதலை விட சொல்லாமல் புரிந்துக்கொண்டு வரும் காதலே பெரிது என்று நினைத்தது அந்த இரு நெஞ்சங்களும்….

 

பிரிந்திருந்த இருவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டாலும் மனம் இன்னும் சேரவில்லை என்பதை இருவரும் அறிந்ததொன்று!!!

 
3 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Sema story pa. Romba touching ah irunthuchi👌👌👌👌. Late pannama next epi seekirama podunga please.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  As usual kalakkiteenga pa. Romba naal update ilama irundhadha discontinue panoteenganu think panunen. Anyways waiting for the next episode eagerly. Post Sooooon pa…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Just konjam personal work…. Thanks sis try to give regular updates thank u

error: Content is protected !!