Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-11

ஒரு மாதத்திற்கு பிறகு..

 

விக்ரம்  அடிக்கொரு தரம் ஃபோனை பார்ப்பதும் மீண்டும் எடுத்து டயல் செய்வதும் அந்தப் பக்கம் பதில் வராது போகவே எரிச்சலுடன் தலையை கோதிக் கொள்வதுமாக தன் ஃபோனோடு போராடுவதை நீண்ட நேரம் அவதானித்துக் கொண்டு தான் இருந்தான் அபிநவ். நண்பனின் இச்செய்கை சற்று விநோதமாகத் தெரிந்தாலும் வாய் விட்டு கேட்கவில்லை. அப்படி என்ன தான் செய்கிறான் என்று பார்ப்போம் என எண்ணியவன் நண்பனின் செய்கையை ஓரக் கண்ணால் பார்த்த வண்ணம் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

ஏய் ஏய்.. நான் சொல்றதை கேளு..” என்று யாரிடமோ விக்ரம் பேச இவன் கூறி முடிக்குமுன் அந்தப் பக்கத்தில் அழைப்புத் துண்டிக்கப்பட்டது. இதில் கோபமடைந்தவன்,

 

ச்சே என்ன இவ நாம என்ன சொல்ல வர்றோம்னு கூட கேட்காம பிசாசு மாதிரி கத்துறா..உன்னை..” என்று தனக்குத் தானே அவன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருந்தவனை திரும்பிப் பார்த்து,

 

விக்கி என்னாச்சு? யாருக்கு திட்டுற?” என அடக்கிய சிரிப்புடன் கேட்டான்.

 

அவன் இருக்கும் மனநிலையில் யாரிடம்  என்ன உளறுகிறோம் எனத் தெரியாமல்..

அவ தான்டா.. எப்போ பார்த்தாலும் சும்மா நொய் நொய்னு.. ஒரு நைட் பேசலைனு ரெண்டு வாரமா சண்டை போடுறாடா.. சரி நம்ம மேல தான் தவறுனு மன்னிப்பு கேட்டா பழைய ரெக்கோர்டர் மாதிரி அதையே சொல்லிட்டு இருக்கா. கூட என்ன பேசவே விடமாட்டேங்குறா.. வர்ற கோவத்துக்கு..” என தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துக் கொண்டிரைருக்க,

 

ஓகே.. அவ அவன்னு திட்டுற அவ எவனு சொன்னா தானே எனக்கு தெரியும்..” என்றவன் அவன் வாயாலேயே போட்டு வாங்கும் நோக்கில் கேட்டான்.

 

நிராஷாடா..” என பட்டென கூறியவன் நாக்கை கடித்துக் கொண்டான். “விக்கி நீ என்ன பண்ணிட்டு இருக்க நீ பாட்டுக்கு இவன் கிட்ட எல்லாமே உளறிவிட்டியே.. இப்போ படுத்துவானே.. ஐயோஎன எண்ணியவன் அபிநவ்வை திரும்பிப் பார்க்க அவன் முகத்தில் எதுவும் கண்டு கொள்ள முடியவில்லை. “அப்பாடா.. நம்ம சொன்னது அவனுக்கு கேட்கலை போலஎன நினைத்து பெருமூச்செறிய, பெரிய உணவகத்தின் முன்  அபிநவ்வின் கார் நின்றது.

 

இங்கு எதற்காக இப்போது வந்திருக்கிறான் என்பது புரியாத விக்ரம், “என்னடா நம்ம ரெஸ்ட்டாரண்ட்ல நிறுத்தியிருக்க..? என கேட்டக,

 

வேற எதுக்கு உன்னோட ரெஸ்ட்டாரண்ட்ல உன் அக்கவுண்ட்டில நல்லா வயிறு முட்ட சாப்பிட தான்என்று சிரித்துக் கொண்டே கூறியவன் அவனையும் இறங்குமாறு கூறி தானும் காரை விட்டு இறங்கினான். இதில் எரிச்சலடைந்த விக்கி ,

ஆமா இந்த டைம்ல இது ரொம்ப முக்கியம்என்று முனுமுனுத்தபடி அபிநவ்வுடன் உள்ளே சென்றான். அங்கே தங்கள் முதலாலியும் அவரது நண்பனான அபிநவ்வும் வருவதைக் கண்ட மேனேஜரும் சக ஊழியர்களும் இருவரையும் இன்முகத்துடன் வரவேற்றனர். அபிநவ்வில் அருகில் வந்த மேனேஜர், “சார் நீங்க சொன்ன மாதிரி மேலே எல்லாம் ரெடியா இருக்கு..” என்று கூறி விட்டு நகர்ந்தான்.

 

விக்ரமையும் அழைத்துக் கொண்டு லிஃப்ட் வழியாக மேல் தளத்திற்கு சென்றனர். அன்று அவர்களுக்கென அந்த தளமே ரிசர்வ் செய்யப்பட்டிருந்ததை அறியாதவன், “ என்ன அபி நம்ம ரெஸ்ட்டாரண்ட் மேலே காய்ந்து போய் இருக்கு.. கஸ்டமர்ஸ் யாருமே இல்லை.. ஒரு வேளை நம்ம ரெஸ்ட்டாரண்ட் சாப்பாடு நல்லா இல்லையோ.. அப்படினா ஹெட் செஃப்பை மாத்திட வேண்டியது தான்என புலம்பிக் கொண்டிருக்க,

 

டேய் போதும்டா எதுக்கு வந்து இருக்கோம்னு தெரியாம பேசி கடுப்பேத்திட்டு இருக்கஎன சலித்துக் கொண்டன் அவன் எதிரில் அமர்ந்து கொண்டான்.

 

மேலும் , இரண்டு மணித்தியாலங்களுக்கு இந்த தளம் முழுவதும் ரிசர்வ் செய்யப்பட்டிருப்பதாகவும் முக்கியமான வி..பி  ஒருவர் வர இருப்பதாகவும் அதற்காக தான் இந்த ஏற்பாடு எனவும் கூற புரியாமல் விழித்தவன்ஒரு வேளை இனியாவுக்காக இந்த செட்டப்பா இருக்குமோ? ச்சே ச்சே அவ கூட ரொமான்ஸ் பண்ண நம்மல கூடவே வச்சிருக்க மாட்டானே. அந்த வி..பி யாரா இருக்கும்?”என யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

 

தன் நண்பனை பாரத்து கேலிச் சிரிப்பொன்றை சிந்தியவன் தனது  ஃபோனை எடுத்தான்.

 

அதே சமயம் இனியா தன் தோழி நிராஷாவுடன் காரில் போய் கொண்டிருந்தாள். நிராஷாவுக்கு அழைப்பெடுத்தவள் தன்னுடன் ஷாப்பிங் செல்ல வருமாறு அழைக்க இனியாவின் அழைப்பை மறுக்க முடியாமல் மாலை மூன்று மணிக்கு மேல் போகலாம் என கூறியவள் சரியாக மூன்று மணிக்கு இனியாவின் வீட்டை அடைந்திருந்தாள். ஆனால் அவளோ இன்னும் குளியலறைக்குள் இருந்தாள்.  அரை மணி நேரத்திற்கு பின் வெளியே வந்த இனியா தயாராகி வெளியேற நான்கு மணியாகி இருந்தது. வெளியே அபிநவ் வீட்டின் கார் ஒன்று தயாராக இருக்கவே அதிலேறி புறப்பட்டனர். ஷாப்பிங் என்ற பெயரில் கடை கடையாக ஏறி இறங்கினாலே தவிர இனியா எதையும் வாங்குவதாக இல்லை.

 

நண்பியின் செயலில் எரிச்சலடைந்த நிராஷா,

என்னடி வந்ததிலிருந்து நானும் பாரக்கிறேன்  நீ ஒன்னுமே வாங்குற மாதிரி தெரியலை. இப்பவே ஆறு மணியாச்சு..” என்று கத்திக் கொண்டிருக்க இனியா அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. பதிலேதும் கூறாமல் காரிலேறி அமர தானும் அமர்ந்து கொண்டாள். கார் வேறு திசையில் போவதை அவதானித்தவள், “ஹேய் இனியா இப்போ எங்கேடி போற. ஆல்ரெடி லேட்பா.. வீட்டுக்கு போனா திட்டு விழும்என்று புலம்பிக் கொண்டே இருக்க கார் நின்றது.

 

வெளியே இறங்கிய இனியா அவளையும் இறங்கி தன்னுடன் வருமாறு கூறி அழைத்துச் சென்றாள்.

 

 

இங்கு விக்ரமோ பலமான யோசனையில் இருக்க, “நிராஷா பத்தி என்னமோ சொல்லிட்டு இருந்தியேஎன்ற அபிநவ்வின் குரல் அவன் சிந்தனையை கலைத்தது.

 

அதில் திடுக்கிட்டு அவனை பார்த்தவன்பயபுள்ள காதுல விழலைனு நினைச்சிடடு இருந்தா.. கரெக்ட்டா ஞாபகம் வச்சி கேட்குறானே..  அவ கிட்ட லவ்வையே இன்னும் சொல்லலை..விக்கி சமாளிடா சமாளி..” என தனக்குள்ளே கூறிக் கொண்டான்.

 

அது மச்சி..நம்ம இனியா ஃப்ரெணட் டா நிராஷாடா..” என அசடு வழிய கூறினான்.

 

ஆமா இனியா ஃபிரெண்ட் தான் அவ கூட ஏன் நீ பேசுற?  என் கிட்ட கூட சொல்லலை.. லவ் பண்ணுற மாதிரி தெரியுதே..” என ஒரு மாதிரி குரலில் தன் தாடையை தடவிய வண்ணம் கேட்க,

 

ச்சே ச்சே அந்த சப்பை மூஞ்சிய யாராச்சும் லவ் பண்ணுவாங்களா.. சும்மா டைம் பாஸுக்கு ஓட்டிட்டு இருக்கேன்டா.. ஃப்ரெண்டா கூட இருக்க முடியலைடா.. அவ போரிங்டா.. ஒரு நாள் பேசலைனு பிசாசு மாதிரி கத்துறா.. இவளை எல்லாம் லவ் பண்ண முடியுமா?” என்றவன் டீசர்ட்டில் மாட்டியிருந்த கூலர்ஸை அணிந்து  ஒரு திணுசாக அமர்ந்தவன்,

 

ஐயா அழகுக்கும் ஸ்டைலுக்கும் ஒரு ஐஸ்வர்யா ராய் ஒரு கத்ரீனா கைப் தான் சரியா வரும்டா..” என்று விக்ரம் கூற  அபிநவ்வோ வந்த சிரிப்பை நாவால் தன் உள் கண்ணக்கதுப்புக்களை  உப்பச் செய்து கட்டுப் படுத்தியன், நண்பனை நோக்கி,

 

மச்சி பின்னாடி நிற்குற ஃபிகர் ஓகேயான்னு பாரு.. ” என்று கூற ஸ்டைலாகவே திரும்பி பார்த்தவன் வெளவெளத்துப் போனான்.

 

அங்கே நிராஷா பத்திரகாளி தோற்றத்தில் நின்றிருப்பதை கண்டவன், சட்டென இருக்கையை விட்டும் எழுந்து,

ஸ்..ஸ்ட்ரோபெரி நீ.. நீ யெப்போ வந்த..?” என்று நடுக்கத்துடன் எச்சில் விழுங்கிய வண்ணம் கேட்க, அதற்கு நிராஷா பதில் சொல்ல முன்னர் ஆதியே சொன்னான்.

 

அதான் விக்கி நீ லவ் பண்றியானு கேட்டேனே. அப்பவே வந்துட்டா.” என்றவன் சிரித்துக் கொண்டே எழுந்தவன் நிராஷாவை நோக்கி, “நானும் இனியாவும் ஏதாவது ஆர்டர் கொடுத்துட்டு அப்படியே அந்த பால்கனி பக்கம் போறோம்.. விக்கியை நல்லா கவணிச்சுக்கமாஎன்று சாடைமாடையாக பேசி விட்டு விக்ரமின் மாரில் கைமுஷ்டி இருக்கி ஒரு குத்து குத்தி விட்டு, “ஆல் பெஸ்ட் மச்சி.” என்று  கூறியவன் சத்தமாக விசிலடித்படி, “வா டார்லிங்என இனியாவை தோளோடு அணைத்த வண்ணம் அங்கிருந்து அகன்றான்.

 

நிராஷாவின் கோபம் கண்ணீராய் உடைப்பெடுத்தது. டைம் பாஸுக்காக தான் பழகினேன் என்று சொல்லி விட்டானே. அவனை எந்தளவுக்கு நேசிக்கிறாள் என அவளுக்குத் தானே தெரியும். நண்பர்களாய் கூட இருக்க நான் தகுதியில்லாதவளா? தன்னவன் தன்னை காதலிக்கவில்லை அலுத்து விட்டதாக கூறியதால் விளைந்த கண்ணீர் அது.

 

இது நேரம் வரை என்ன செய்யப் போகிறாளோ என்று பயத்தில் நின்றிருந்தவன் தன்னவளின் அழுகையை காணவும் மனம் இலகிப்போனது.

 

ஹேய் குயிலு.. சாரிடிஎன அவளை நெருங்க முற்பட அவனது கையை தட்டி விட்டு முறைத்தவளுக்கு அவன் இன்னும் கழற்றாமல் அணிந்திருந்த கண்ணாடி  மேலும் கோபத்தை தூண்டியது. அதை இழுத்து கழற்றி தரையில் எறிந்தவள்,

 

உனக்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல். நீ என்ன அபிஷேக் பச்சன்னு நினைப்போ.. பெரிய அழகும் ஸ்டைலும் இந்த கரடி மூஞ்சிக்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி பொண்ணு கேட்குதா? உனக்கு நான் சப்பை மூஞ்சாடா?” என மூச்சை இழுத்து விட்டபடி அவன் முகத்துக்கு நேரே கை நீட்டி கேட்க அவளை சாந்தப்படுத்தும் நோக்கோடு அருகில் வந்தவன்,

 

 

நிரூ சாரிடி நான் விளையாட்டுக்கு தா..” என்று கூறி முடிக்கும் முன் மேசையில் இருந்த ஃபோர்க்கை எடுத்து அவனை முறைத்தவள்,

 

என்னடா என்ன வசமா மாட்டிகிட்ட இப்போ சமாளிக்கலாம்னு பார்க்குறியா? டைம் பாஸ்க்கு தான் என் கூட பேசினியா ? நான் தான் நீ என்னை லவ் பண்றனு தப்பா புரிஞ்சிகிட்டேன். நீயா ப்ரபோஸ் பண்ணுற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்த என்னை உனக்கு பிடிக்கலைல.. என்ன சொன்ன நான் பிசாசுல இரு காட்டுறேன் பிசாசு என்ன பன்னுதுனு..” என்றவள் ஃபோர்க்கை எடுத்து  அவனை நோக்கி முன்னேற அதில் சற்று மிரண்டவன்,

 

ஐயோ நம்மல இன்னைக்கு டேமேஜ் பண்ணாம விட மாட்டா போல இருக்கேஎன்று நினைத்தவன் பின்னோக்கி நகர முற்படுவதை கண்டு கொண்டவள் ,

 

உன்னைஎன்றவாறு அவள் துரத்த இவன் அந்த மேசையை சுற்றி சுற்றி ஓடினான். அவனது செய்கையில் கடுப்பானவள்,

 

டேய் தடிமாடு எங்கேடா ஓடுற? உன்னை விட மாட்டேன். நில்லுடா..” அவனை துரத்த,

 

சாரிடி சாரி.. நீ சூப்பர் ஃபிகர்டி.. உன்னை எனக்கு ரெம்ம்ம்ப்ப்ப்பப பிடிக்கும். நானும் உன்னை லவ் பண்றேன்டீ..” என்று கூறிக் கொண்டே ஓட அந்த வார்த்தை அவளது காதுக்கு எட்டியதும் அப்படியே நின்று விட்டாள். இது தான் தருணம் என்று எண்ணியவன் அவள் அருகில் பாய்ந்து கையிலிருந்த ஃபோர்க்கை பறித்து எடுத்து விட்டான்.  

 

ஆழ மூச்சுக்களை விட்டுக் கொண்டிருந்தவன் அவள் உறைந்து போயிருப்பதை பாரத்து, “அப்பாடா ஆஃப் ஆகிட்டாஎன நினைத்து அவளருகில் வந்து

 

ஹேய் ஸ்ட்ரோபெரிநீ என் அழகு தேவதைடி.. லவ் யூ என்று புன்னகைத்தவாறு கூற கண்களில் கண்ணீர் வழிய அவனை நோக்கி,

நெஜமா?” என்று கேட்டவளை கண்ணீர் துடைத்து மாருடன் அணைத்து சத்தியமா..”என்றான் காதலுடன். அவளும் அப்படியே அவனுடன் ஒன்றிப் போனாள்.

 

பால்கனியில் நின்று இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அபிநவ்வும் இனியாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பார்த்தியா ஸ்வீட்டி விக்கியை எவ்வளவு சந்தோசமா இருக்கான்னு. பயபுள்ள நம்ம கிட்டயே மறைச்சிட்டான்ல.சீக்கிரமா அவங்க வீட்ல இதை பத்தி பேசனும்..” என்று கூற, இனியா ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க, அவளை தோளோடு அணைத்தவன், “என்ன இப்படி யோசிக்குறமா?” என கனிவாக கேட்டான்.

 

அதெல்லாம் ஒன்னும் இல்லை அபி.. என்ன தான் இருந்தாலும் நிரு சிங்கள பொண்ணுல. விக்கி அண்ணா வீட்ல ஒத்துக்குவாங்களா..” என கவலை மீதூறும் குரலில் கேட்க,

 

ஹேய் என்ன  இப்படி சொல்லிட்ட. இந்த காலத்துல யாரு இதெல்லாம் பார்க்குறா.. விக்கி வீட்டுல இருக்குறவங்களை பத்தி எனக்கு தெரியும்.” என்று அவன் கூறியபோதும் அவளது பயம் குறையவில்லை.

 

அவங்க வீட்ல ஓகே சொன்னா கூட நம்ம நிரூ வீட்ல அக்செப்ட் பண்ண மாட்டாங்க அபி. செனவிரட்ன அங்கிள் ரொம்ப ஸ்டிரிக்ட்அதான் பயமா இருக்கு.” என தன் மன பயத்தை அவனிடம் கூற அவளை மேலும் இறுக்கி அணைத்தவன்,

 

ஸ்வீட்டி.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை வராது. விக்கியும் அப்படி சும்மா விட மாட்டான். அதான் நான் இருக்கேன்ல நான் பார்த்துக்குறேன்.” என ஆறுதலாக அவளிடம் கூற இதழ்கள் தானாக மலர அவனை காதலுடன் அண்ணாந்து நோக்கினாள்.

 

அந்நேரம் பார்த்து சில்லென்று வீசிய காற்றில் அவள் அணிந்திருந்த துப்பட்டா சரிய எதேச்சையா திரும்பியவனின் பார்வைக்கு அது விருந்தாக அமைந்தது. அவனது பார்வை சென்ற திசையை கண்டு கொண்டவள், “அபிஈஈ..” என்றழைக்க சட்டென தன் பார்வையை வேறு புறம் செலுத்திக் கொண்டான்.

 

பொறுக்கி.. பொறுக்கி..”என்ற் படி அவனுக்கு  சரமாரியாக அடிகள் விழ சிரித்துக் கொண்டே ஒவ்வொரு அடியையும் வாங்கியவன் சட்டென்று அவள் கைகளை பற்றி காதலுடன் அவளைப் பார்க்க அப் பார்வை வீச்சை தாங்க முடியாதவள் நாணத்துடன் தலையை குனிந்து நின்றாள்.

 

இன்னும் ஒன் வீக்ல நமக்கு நிச்சயதார்த்தம்டிஅப்புறம் கல்யாணம் தானே அதுக்கப்புறம் உன்னை..” என்று ஹஸ்கி வாய்ஸில் கூறியவன் அவள் செவ்விதழ்களை நோக்கி குனிந்தவனுக்கு ஷாக் அடித்தது போல ஏதோ நினைவு வர அவளிலிருந்தும் விலகியவன் அவள் இதழில் தன் சுட்டு விரலை வைத்துஇது தப்பு.. கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஓகே.” என்று கூறிய தன் துணைவனை காதல் கமழ நோக்கினாள் அவள்.

 
Comments are closed here.

error: Content is protected !!