Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-44

                      முள்ளோடு முத்தங்கள்

 

அத்தியாயம் 44

 

விழா நிறைவு பெறும் தருவாயில் கணவன்-மனைவி சேர்ந்து நின்று அவையில் இருப்போரை வணங்க வேண்டும் என்று கூற அதனை ஆமோதித்தவனாய் ஆதி மித்ரா இருக்கும் மேடையை  அடைந்தவன் தன்னவலுடன் சேர்ந்து நின்று அவையில் இருப்போருக்கு இருவரும் மரியாதை செலுத்தி வணங்கினர்….

 

மித்ராவின் கால்கள் அவள் உடல் எடைக்கு  சற்று ஒத்துழைக்கவில்லை நிறக்க முடியாமல் தள்ளாடியவளை   பார்த்தவன் “பேபி நீ இங்க உட்காரு நான் போய் எல்லாரையும்  அனுப்பிட்டு வரேன்” என்று கூறிய கணவனின் செயல் அவளுக்கு இன்னும் வியப்பை அளிக்கிறது  அவனிடம் பல மாற்றங்கள் தெளிவு முக்கியமாக பக்குவம் அதைவிட தன்னை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொள்வது  மருத்துவர் கூறிய குறிப்பின்படி தன்னால் தொலைதூரம் கூற நடக்க முடியாமல் இருக்கும்போது கணவனாய் பார்த்தவள் தோள் கொடுக்கும் தோழனாய் மாறி அவன் தாங்குகையில் உண்மையாகவே அவள் மனம் மிகவும் வலிக்கும்  அதை கேட்டாளும் அவனிடம் இருந்து வரும் ஒரே பதில் “நீ சுகமான சுமை” என்பான் என அறிந்தவள் அவனின் செயலுக்கு இசைந்தும் போனாள்… தன் நினைவில் இருந்தவளை அவளது கணவன் நிகழ்காலத்திற்கு மீட்டெடுத்தான் “பேபி இப்போ ரூம்க்கு பேசலாமா”என்க கணவனின் குரலில் கனவிலிருந்து விழிப்பதுப் போல் அவனை விழித்துக் பார்க்க அவனோ அவளிடம் நெருங்கி “பேபி இப்படி ரொமான்டிக்கா பார்த்து வைக்காதடி மாமன் மூடு மாறுது” மயக்கம் வருவது போல் தள்ளாடி கூறியவனின் பாவனையில் அவள் சிறு வெட்கச் சிரிப்போடு பார்த்து வைத்தாள் இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்க்கும் ஜெகதீஷின் மனம் வெறுமையாய் உணர்ந்தது அங்கு நிற்பது மனதை அழுத்த அகன்று சென்று விட்டான்…

 

அவளை தன் கையில் என்றும் போல் ஏந்திய ஆதித்திய வர்மன் அறைக்கு தூக்கிச் சென்றான் அவன் அவன் கையில்  அடங்கினாலும் இந்த வார்த்தையை அவனிடம் கேட்காமல் அவளால் இருக்க முடியவில்லை “ பாவா நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறனா”  தான் கேட்டதற்கு எந்த பதிலுமின்றி இருக்கும் கணவனின் தாடையைப் பற்றி இழுத்து பதில் சொல் என அவன் கண்களைப் பார்த்து யாசிக்க அவனோ “ நீ இப்படி கேக்குறது தான் பேபி…. எனக்கு கஷ்டமா இருக்கு நான் எப்பவும் அது மாதிரி நினைச்சதில்லை… சரி போய்…. ட்ரெஸ் மாத்திட்டு வா” அவள் எதோ யோசனையில் இருப்பதை  உணர்ந்தவன் “ என்ன பேபி நானே மாத்தி விடட்டா” கூறியபடி அவளது புடவையை களைத்தவனை கண்டு விழி விரிய சட்டென அவன் கையை தடுத்தவள் “ பாவா…,,,,, என்னதிது நானே மாத்திட்டு வரேன்” என செங்கொழுந்தாய் சிவந்து கூறியவளை பார்த்தவன் “ ஹ்ம்ம்… அந்த பயம் இருக்கணும் ஓடு…. போய் சீக்கிரம் மாத்திட்டு வா” என்றவன் சொலிர்க்கினங்க அவள் செல்ல அவளையே பார்த்தவன் இன்றோடு எல்லாம் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தவன் அவள் வரவிற்காக காத்து நின்றான்….

 

உடையை மாற்றிக்கொண்டு வந்த மனைவியை தன் அணைப்பில் கொண்டு வந்தவன்  அவளை நோக்கி “ பேபி… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…. நமக்கிடையே நடந்த சில விஷயங்கள் இன்னும் அப்படியே இருக்கு… நீ கேட்க போறதில்லை…. எனக்கு தெரியும் இருந்தாலும் ஒரு கணவனா சில விஷயங்கள் தெளிவு படுத்த வேண்டியது என் கடமை இல்லையா பேபி” என்று மனைவியை கையணைப்பில் வைத்துக்கொண்டே  பேச ஆரம்பித்தான்….

 

“ பேபி… நான் உன்ன  முதல் முதலா பார்த்தப்பவே …. எனக்கு உன்மேல் ஒரு ஈர்ப்பு பேபி”…. அவள் அவனை கண்ணில் உயிர்ப்பு இல்லாமல் பார்த்ததை “ பேபி…. பேசனும்னு முடிவு பண்ணிட்டா எல்லாத்தையும் சொல்றது நல்லது பேபி…. ப்ளீஸ்” என்று இறஞ்சும் கணவனை பார்த்தவள் சம்மதம்மாக தலையசைக்க அதுவே அவளுக்கு போதுமானதாய் இருந்தது

 

“ உன்னை கல்யாணம் பண்ணிக்க முன்வந்தது பழிவங்குறதுக்காகவும்… நீ நினைக்குற மாதிரி உரிமை மட்டும் இல்ல பேபி…. அதுக்கு முன்னாடியே நீ என்மனசுல நுழைஞ்சுட்ட… நமக்கு நடந்த கல்யாணம் எல்லாம் பக்கா பிளான்” வாயை பிலந்துக்கொண்டு பார்த்தவளை கண்டவன் “ உண்மை பேபி…. உன்ன யாருக்கும் நான் விட்டுத்தர மாட்டேன் பேபி” என்று கூறியவன் நொடி பொழுது அவளை இறுக அணைதிருந்தான்…

 

அன்றைய நினைவில் அவன் எத்தகைய வலியை கொண்டுள்ளான் என்பதை அந்த ஒற்ற அணைப்பே அவளுக்கு உணர்த்தியது “ உனக்கு நியாபகம் இருக்கானு தெரியல ஆனா…. எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு ஜெகதீஷ்  உன்ன கல்யாணம் பண்ணிக்குறதா சொல்லி அவனோட காதல சொல்லமுடியுமா லெட்டர் மூலமா உனக்கு எழுதி கொடுத்தான் நீ பிலைட்டை பார்த்திருந்த சாகுல நான் …. நான் அந்த லெட்டரை உனக்கு தெரியாம எடுத்துடென் நீயும் அதை கவனிக்க தவறிட்ட… நீ எனக்கு மட்டும்தான்னு பிடிவாதமா எனுக்குள்ள ஒரே யோசனை அப்போவே நான் உன்ன துக்கணும்னு பிளான் பண்ணிட்டேன்”….

 

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் கணவனை விழி விரிய பார்திருந்தாள் அவனின் அருமை மனையாள் “ஆனா உன்ன கடத்துறது எனக்கு தப்பாப்பட்டது…. உன்னோடு சேர்ந்து வாழப் போற வாழ்க்கை நிம்மதி வேண்டி நான் அந்த எண்ணத்தை கைவிட்டுட்டேன்….. அல்ரெடி நேஹா உடனான இந்த கல்யாணம் தினேஷை ஏமாத்தூர ட்ராமவா இருந்து நடக்க கூடாதுனு தள்ளிவட்ச இந்த கல்யாணம்….. உண்மையாவே உன்ன பார்த்த பிறகு எனக்கு கல்யாணம் வாழ்க்கை வாழ ஆசை வந்தது பேபி… இதை நீ நம்பனும்” அவன் நேஹாவின் பெயரை கூறும்போதே அவளின் முகம் கருத்துப்போக  அந்நினைவில் மட்டுமில்லாமல்… அவர்கள் பிரிந்த காரணமும் சேர்ந்தே அவளை வாட்டியது…..

 

அவள் மனதை கண்ணாடிக் கொண்டு படித்தவனாய் அவளது மனநிலையை எடுத்துறைப்பதுப் போல் “ அப்பவே உன்ன பிரிஞ்சி என்னால இருக்க முடியல பேபி…. அப்புறம் என்ன விட்டு நீ போனது…. நான் உயிர் வாழ்த்தேன் தான் ஒரு நடைப்பினமா மட்டுமே…. அப்போ அந்த நிமிஷம் என் மனசு சொலிச்சி இதுதான் காதல் …. ,,,,, இதுதான் உண்மையான அன்புனு” கண்கள் கலங்க அவனை கட்டிக்கொண்டவள் ஒன்று மட்டும் நல்லா புரிந்தது அவனுடைய தவிப்பு அவளையும் சேர்த்து அல்லவா வாட்டுகிறது…. இதைத்தான் மனமொத்த தம்பதியர் என்று கூறுகின்றனரோ( made for each other) …..

 

தன் மனையாளின் அணைப்பில் இருந்தவன் அவள் முதுகை தடவிக்கொடுத்தான் “ அன்னைக்கு உங்கள நேஹாவுடனான திருமண கோலத்தில் பார்த்து….. எப்படி நான் துடிச்சேன் தெரியுமா”… அன்றைய நாளில் நினைவில் இன்று அவள் கண்கள் கலங்க… அவனோ தீர்மானித்தவனாய் நேஹாவை பற்றி பேசுவது இதுவே கடைசி முறை என்று தனக்குள் பேசிக்கொண்டவன் மனைவியிடம் இருந்தே ஆரம்பித்தான் “ பேபி நேஹாவை பத்தி நீ கேட்கவே மாட்டிய” என்க அவளோ “ ஹம்ம்ஹும்” இல்லை என்று அவன் முகத்தை பார்க்காமல் தலையாட்டிவளை கூர்மையோடு பார்திருந்தான் ஆதித்ய வர்மன் அவளோ “ வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை தகுதி நம்பிக்கை பாவா… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு உங்களுக்கும் இதுக்கும் எந்த சமந்தமில்லனு தெரியும்… அந்த நம்பிக்கை நான் நம்புறேன்” என்று கூறிய மனைவியை கட்டிக்கொள்ள அவன் கைகள் பரபரத்தது இருந்தும் அவளை தெளிவுப்படுத்தும் விதமாக “ அது உன்னோட பெருந்தன்மையா இருக்கலாம் பேபி…. இருந்தும் நான் சொல்லித்தான் ஆகனும்

நான் உன்னை தேடி அலஞ்ச ரெண்டாவது நாள் நான் நேஹா மேல சந்தேகப்பட்டு அவவீட்டுக்கு போனேன்… அவ வயித்துல வளர குழந்தை என்னோடதுனு சொல்லி நாடகமாட அதையும் எல்லாரும் நம்பினாங்க” அதில் அவள் முகம் வேதனைக்கு அடைந்து“ அவங்க மட்டுமில்ல நானும் தானே பாவா” என்றவளை  அணைத்துக்கொண்டு பேசக்கூடாது என அவளது இதழில் தன் ஒற்ற விரலைக் கொண்டு தடுத்தவன் மேலே கூறினான்….

 

“ நான் அவகிட்ட எடுத்து சொல்லியும் அவ முரண்டு பிடிச்சா… அவ கர்பதுக்கு நான் தான் காரணம்னு அடிச்சி பேசுனா…. இதை இப்படியே விட்டா சரிவராதுனு தான் அவ மறுக்க… மறுக்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் பிடிவாதமா DNA டெஸ்ட் எடுத்து… எல்லாருக்கும் புரியவச்சேன் உன்னையும் உட்பட பேபி” அன்று அவன் தன்னிடம் கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட்டை நினைவு வர அவள் தலை தானாக கவிழ்ந்தது…. இந்த செயல் அவள் வாழ்நாளில் மரக்கமுடியாத அவநம்பிக்கை இழைத்த குற்றமாயிற்ற….

 

அதை உணர்ந்தவன் “ இதுக்கு நீ தலைகுனிய வேண்டிய அவசியமில்லை பேபி…. சொல்லபோனா நான் தான் பேபி தலைகுனியனும்”…..

 

“வேண்டாம் பாவா போதும் ரெண்டு பேரும் மாத்தி…. மாத்தி மன்னிப்பு கேட்டுகிட்டது” அவன் செய்தது குற்றமாக இருந்தாலும் அவனை தண்டிக்க அவள் யார்???….  உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிப்புக்கோ….. குற்றவுணர்வுக்கோ வேலையில்லை என்று எண்ணியவள் “ நான் எப்பவும் சொல்றதுதான் பாவா கணவன் மனைவிக்கு இடையில் சுகமான உறவு இருக்கலாம் ஆனா அந்நியத்தன்மை குறிகுற எந்த செயலும் சரி…. சொல்லும் சரி வேண்டாம் பாவா” அவளது கையை ஆறுதலாய் பற்றியவன் “ புரியுது பேபி… ப்ளீஸ் இது மட்டும்” என்க அவளாலும் அவனை தடுக்க முடியவில்லை  “ அவ குழைந்தைய வச்சி என்கூட வழனும்னு திட்டம் போட்ருந்தா…. ஆனா அன்னைக்கு ஹாஸ்பிட்டல் போனப்போ ஜான் இந்த விஷயம் கேள்வி பட்டு அவன் அங்க வந்தான்….. ஜான் நேஹா கர்பத்துக்கு அவனே காரணம்னு சொல்லியும் அவ இல்லன்னு அடிச்சி பேசுனா…. அப்புறம் டெஸ்ட்ல ப்ரூவ் ஆகிடிச்சி ஜான் தான் அந்த குழைந்துக்கு அப்பானும்…. அவனே முன்வந்து உண்மைய ஒத்துகிட்டான்…

 

நான் அவளை எச்சரிச்சிட்டு வந்துட்டேன் …. அப்புறம் அவளோட சாயம் வெளுத்து போச்சின்னு நினைச்சாலோ என்னவோ பொடிப் படுக்கைய கட்டிட்டு கிளம்பிட்டா இப்போ சொல்லு பேபி… நான்… நான்… உனக்கு நம்பிக்கையாதனே நடந்திருக்கேன்” என்றவனை அணைத்தவள் அவனது காதில் ரகசியம் பேசியவளாய்…. “அது உங்களுக்குத்தான் பாவா புரியனும்… நான் சொன்னது நல்லா யோசிச்சி பாருங்க” என்று கூறிய மனைவியின் அணைப்பில் இருந்துகொண்டே யோசிக்க… ஆமாம் அவள் மனம் பாதித்த செயல்…,,,,  

 

ஆதிக்கு சட்டென்று ஒரு விஷயம் புரிந்தது நேஹா உடன்னான திருமணம் தன் மனைவியை பாதித்திருக்கிறது என்றால் அப்போதே என்னை அவள் விரும்பிருக்க வேண்டும் என்று நினைவு கூர்ந்தவள் அவளின் ஒதுக்கம்….,,,, பாரமுகம், அவள் கண்களில் தோன்றும் அலைப்புறுத்தல்,,,,, தன் ஒற்றை இதழ் முத்தத்திற்கு  முதல் முதலில் அவள் வாய் மொழியாக வேண்டாம் என்று கூறினாலும் உடல் மொழி அவனின் கையில் குழைந்ததை எண்ணியவனின் மனம் கலங்கியது தன்னவளின் மனதை அறியாமல் எத்தகைய துன்பம் இழைத்திருக்கிறோம் என்று உணர்ந்தவன் தன் மீது தன்னவளுக்கு எப்போது காதல் வந்தது என்பதை அறிய அவன் மனம் பிடிவாதம் கொண்டது…..

 

அவனின் மனம் எல்லையில்லா உவகை கொண்டது மனைவியின் மனதில் நாம் முன்பே ஆழமாக பதிந்திருக்கிறோமென்று இதை தெரியாமல் அவளை மிகவும் வாட்டி எடுத்துவிட்டோம் என்று நினைத்தவன் அவளிடம் திரும்பி “ ரொம்ப கஷ்டப்படுத்திடனா பேபி” என்க அவளோ கண்களில் நீர் திரையிட “ரொம்பவே” என்றவளை காற்றுகூட புகமுடியத அளவிற்கு அணைத்தவன் அவள் காதலுக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவள் இதழை மென்மையாக தீண்ட அது வன்மையிலே முடிந்தது… இருந்தும் அவன் மனம் ஒரு ஆசைகொண்டு கேட்க துணிந்தது “ ஆமா அப்பவே என்னை உனக்கு பிடிக்குமா பேபி???”…. அவனை செல்லமாக முறைத்தவள் “ பாவா இது தேவையில்லாத சந்தேகம்…. ஜெகதீஷ் அத்தான் என்ன லவ் பண்றது எனக்கு தெரியாது” என்றவள் சடுதியில் நாக்கை கடித்துக் கொண்டு “ சாரி பாவா “ என்று தலை குனியா அவனோ தாழ்ந்த தலையை நிமிர்த்தியவன் “ இதில் என்ன இருக்கு பேபி… நீ எப்பவும் போல அவன அத்தானே கூப்பிடு….. இதுல எனக்கு எந்த ஆட்சியபணுமில்லை”

 

அவனையே பார்திருந்தவள் “இருந்தாலும் பாவா அவர் மனசுல நான் தப்பான உணர்வ தூண்டி விட்டுடன்னு நான் நினைக்காத நாள் இல்ல”……

 

“அதுக்கு நீ மட்டும் காரணமில்லை பேபி….. நானும் காரணம்தான்…. நான் என்மனசுல இருந்ததை அன்னைக்கே சொலிருந்தா….. இது இவ்ளோ பெரிய பிரச்சனையா உருமாறி இருக்காது” என்றவன் தன் நினைவில் ஆழ்ந்தான் ஏதோ பெரிய தப்பொன்றை இழைத்துவிட்டதுப் போல் உணர்ந்தான்….

 

அவன் வருந்துவது பிடிக்காமல் “ பாவா உங்கள் மீதான என் காதல் இன்னைக்கு நேத்தி வந்ததில்ல விவரம் தெரியும் முன்னவே நான் உங்களை பாவானு கூப்பிட முதலிருந்தே…  நம்ப காதல் பல யூகங்கள் கடந்த காதல் பாவா…. உங்கள எனக்கு அவ்ளோ பிடிக்கும்”

 

தன்னை பிடிக்கும் மென்று மனைவியின் வாய்மொழிய கேட்கும் எந்த ஆடவனுக்கும் கர்வம் தலை தூக்கும்….. தன்னை நினைத்தும் மனைவியை நினைத்தும் கர்வம் கொண்டவனாள் இரண்டு விஷயம் அவனை தலைகுனிய வைத்தது ஒன்று தன்னவளை கடுமையாக அவளின் விருப்பமில்லாமல் தீண்டியது பின்பு தன்னவள் யாரென்று தெரியாமல் அவளுடன் வாழ்ந்தது…..

 

இதையெல்லாம் நினைத்தவனின் முகம் கருக அவன் எண்ணத்தை புரிந்தவள் “ பச்…. பாவா இங்க என்ன பாருங்க…. நீங்க என்ன நினைக்குறிங்கன்னு எனக்கு புரியுது இருந்தும் பாவா கொஞ்சம் யோசிச்சி பாருங்க  அப்போதிருந்த சூழ்நிலையுல நான் உங்க மாமா பொண்ணு சின்ன வயசுல காணாம போன மாமா பொண்ணுன்னு சொலிருந்தா நீங்க நம்பிர்பிங்களா??? அவனைப் பார்த்து கேள்வி கேட்க”…..

 

அவனோ “ அதற்கு பிறகாவது சொலிர்க்கலாமே பேபி”…..

 

“அதற்கான சந்தர்ப்பத்தக் கூட எனக்கு தரலையே பாவா” அன்று அவளுடன் அவன் நடந்துக் கொண்ட முறை இன்றும் அதை நினைத்தவன் தன்னையே வெறுத்தான்….

“நான் செஞ்சது மன்னிக்க முடியாத குற்றமில்லையா பேபி…  என்ன மன்னிக்க” மீண்டும் மீண்டும் தன்னிடம் மன்னிப்பை யாசிக்கும் கணவனின் மனம் புரிந்தவள் அவன் பணியிலே  அவன் குற்றவுணர்வை போக்க செய்தால் “ அதுக்கூடா என்மேலிருக்கும் உரிமைதான பாவா அப்பிடி நடந்துக்கிட்டிங்க….. நமக்குள்ள மன்னிப்பு வேண்டாம் பாவா”…..,,,,,,,,,,

 

தன்னவளை இறுக அணைத்துக்கொண்டவனின் அணைப்பு இறுக அவளோ லேசாக முனகினாள் “இஷ்ஹ்ஹ்…. பாவா குழந்தைங்க நசுங்குறாங்க…. வலிக்குது” என்ற மனைவியின் முனகளில் அவளை விட்டு விலகியன் “ சாரி…..,,,,, பேபி….. ரொம்ப வலிக்குதா” அவனின் பதட்டம் அவளை  தொற்றிக்கொள்ள அவள் நமுட்டு சிரிப்பு சிரிக்க அதை கவனித்தவனாய் “பேபி” என்று அழைத்து அவளின் விளையாட்டை ரசித்தவனாய் அவளை இன்னும் அணைத்தவனின் கையில் பாந்தமாக அடங்கிவளை “ ஐ லவ் யூ” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தவனின் முத்தம் அவள் இதழில் வந்து நிறுத்தம் கொள்ள அவளது இதழை  விட்டு பிரியாதவன் போல மீண்டும்… மீண்டும் அவனை இழுத்து அவளுள் முழுகச்செய்ய அவளின் நிலையரிந்து விலக மணமில்லாதவன் மிக சிரமப்பட்டு தன்னவளின் இதழுக்கு விடுதலைக் கொடுத்தான்…..

 

ஏனோ  மனதிலிருந்த அனைத்து மனஸ்தாபங்களும் குறைய… இருமனமும் லேசாக இருப்பதுப் போல் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு நிம்மதியாக உறங்க…. காமம் கலக்காத மௌனமான காதல் கூட அழகே என்ற விதத்தில் இருவரும் தங்களின் உலகில் சஞ்சரித்தனர்…..

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

 
15 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Bharathi Viswanathan says:

  Thanks mam Now able to read one more doubt there are many on going stories which are not updated yet why and what is the reason


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Bharathi Viswanathan says:

  Not able to read your story It is asking me to login I have already logged on Why not coming


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   plz try now…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sarala Devi says:

  Lovely


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Ganeshan says:

  Nice ud sis…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks sister😘😍😍


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Epavum pola kalakkiteenga…. But story mudikka plan paniteengala…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Ama sis….. May 1st la irundhu rendu new story panna poren sis😍😁😁😁 Apr 25 finale ud


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Kk waiting for the final epi n new stories pa….


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
     Dhivya Bharathi says:

     Thanks dr


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Ayyo mudiyapogutha


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Ama sister😍😊😊 final udya mothama koduthudren …. 8 months agiduchu sis indha story arambichu athan 😁😁😁😊😊😊


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Ok waiting for final episode


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  adhira shana says:

  superb ji ………adutha ud kaha waiting ji


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks maa….. Nxt final ud da straighta

error: Content is protected !!