Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


முள்ளோடு முத்தங்கள் epilogue

எபிலாக்:

 

இரண்டு வருடம் கழித்து

 

 

“ஆரூ ஒழுங்கா வந்து சாப்பிடு அம்மா பாவுமில்லையா குட்டி இங்க பாரு அக்கா ஆதிரா எவ்ளோ அழகா  சமத்தா சாப்புட்றா வாடா கண்ணா முடியலடா அம்மாவால” தன் ஆறுமாத வயிற்றை தூக்கிக் கொண்டு  தன் மகன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள் மித்ரா….

 

அந்நேரம் அலுவல் வேலையை முடித்துக்கொண்டு வந்த ஆதி தன் மக்கள் தன்னவளை படுத்தும் பாட்டை பார்த்துக்கொண்டு வந்தவன் “ஹேய் ஆரூ அம்மா பாவமில்லையா அவளை ஓட வைக்காத நீ குட் பாய் தானே “ ஆதியின் குரல் கேட்டதும் அந்த வாண்டு தந்தையிடம் தாவி சென்றது “ப்பா…. அம்மா தாச்சு…. ங்கா குடுகதா” தன் அன்னை சாப்பாடு கொடுக்க வில்லை என்றும் அடித்துவிட்டாள் என்று தந்தையிடம் புகார் வைத்தான்…

 

தன் மகன் கூறுவது உண்மையில்லை என்றாலும் அவன் மழலை மொழியில் ஆதி கரைந்து நின்றான்… தன் பாட்டி சாந்தியிடம் சமத்தாக  உணவு உட்கொண்டிருந்த ஆதிரா தந்தையை பார்த்ததும் ஓடி சென்று அவன் காலை கட்டிக்கொண்டு “ ப்பா…. பாபாவ தூக்கு பாபாக்கு கால் வதிக்கும்” தன் அன்னையின் கைவரிசையை மகள் அவன் தந்தையிடம் காட்டிக்கொண்டிருந்தாள்… இது மித்ரா ஆதியை பணிய வைக்கும் அணுகுமுறை இதை தன் மகள் உபையோகித்துக் கொண்டிருந்தத்தை பார்த்தவள் “ ஐயோ இதுங்க முன்னாடி நம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போலற்கு” என்று நினைத்தவள் மீண்டும் மகனிடம் கத்த துவங்கினாள்…

 

 

தன் மகனை இறக்கி விட்டு மித்ராவிடம் செல்ல சொன்ன ஆதி “ மை  டால்” என்றவன் மகளை தூங்கிக் கொண்டு கொஞ்ச அவளது மகளோ தந்தையிடம் மழலை மொழியில் “ ப்பா அம்மா தாச்சு இத்த ஆரூ பொய் சொல்லுதான்” மகன் கூறிய பொய்யை தமைக்கையவள் தன் தந்தையிடம் உண்மையை கூற அவனோ மகளை அள்ளி முத்தமிட்டான்… ஆதியின் அருகில் வந்த சாந்தி “ ஆதி கண்ணா பாப்பா  இன்னும் சாப்பிட்டு முடிகள நான் அவளை சாப்பிட வைக்குறேன் நீ போயி பிரேஷ் ஆகிட்டு வா கண்ணா” என்க அவனோ இன்னும் பாப்பா சாப்பிட்டு முடிகளையோ என்று மகளைப் பார்த்து கேட்க அதுவும் வையிற்றை தடவிக்கொண்டு “பாப்பா இன்னும் சாப்பித்து முடிகல” என்று கூற அதனை தொடர்ந்து ஆதி“ நான் சாப்பிட வைக்குறேன் அம்மா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்று சாப்பாடு கிண்ணத்தை தன் கையில் வங்கியவன் பல தரப்பட்ட கதைகளை சைகையால் செய்துக் காட்டி அவன் தன் மகளுக்கு உணவு ஊட்ட அவளோ தந்தையின் கதையில் லையித்து கண்களை விரித்து கேட்டுக்கொண்டே சாப்பிட அதை பார்த்த சாந்திக்கு மனம் கனத்தது ஒரு அம்மாவாக தன் கடமையை தவறவிட்டதை இன்றும் அவருக்கு குற்றவுணர்வாய் இருந்தது சாப்பிட்டு முடித்த மகளை தன் மடியில் போட்டுக்கொண்டு மீதி கைதைகளை பேச ஆதிரா அப்படியே ஆதியின் மடியில் உறங்கியும் போனால்…

 

 

அவன் அருகில் வந்த தீபா “ ஆதி கண்ணா ஆதிராவ என்கிட்ட கொடு நான் அவளை தூக்கிட்டு போறேன்” என்றவர் ஆதிராவை தூங்கிக்கொண்டு செல்ல அவ்வழியே வந்த வெங்கட்ராமன் “தீப்பு என் செல்ல பேராண்டி எங்க அவன் இல்லாமல் நான் தூங்கவே மாட்டேனே” என்று அடம் பிடித்தவரை பார்த்த தீபா “ வெங்கட் ஆரூ அக்கா கூட இருக்கான் அவன் கொஞ்சநாள் அக்கா கூட இருக்கட்டும்… அக்காவும் பாவும் தானே ரொம்ப வருஷம் கழிச்சி இப்பதான் நம்ப கூட சேர்த்ந்திற்காங்க” தன் தமக்கையின் மனதை புரிந்துகொண்ட சகோதரியாக தீபா தன் கணவனிடம் கூற அதுவும் சரிதான் என்று அமோதித்தார் வெங்கட்ராமன்…

ஆர்னவ் ஆதிரா இருவரின் முதல் பிறந்தாநாளுக்கு ஆதி தன் அன்னையை அழைத்திருந்தான் தன் மனைவி பிடிவாதத்தினாள்… சாந்தியை பல வருடங்கள் பிறகு சந்தித்த அனைவரின் கண்களும் கலங்கிவிட்டது இதனை வருடங்கள் எங்கு சென்றார் எங்கு போனார் என்று தெரியாமல் இருந்த குடும்பம் இன்று நேரில் கண்டதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க நேராக உள்ளே வந்த சாந்தி தன் அன்னையை பார்த்தவர் அவர் காலில் விழுந்து கதறிவிட்டார் சாந்தியை பற்றி தூக்கிய தீபா தன் அக்காவை கட்டிக்கொண்டு அழுதார் சாந்தியோ “ எல்லாரும் என்ன மன்னிச்சிருங்க இந்த வார்த்தைய கேட்க எனக்கு அருகதை இல்லத்தான் இருந்தும் எனக்கு வேற என்ன பண்றதுனே தெரியல” என்றவரை கமலம்மாள் அணைத்துக்கொண்டு தன் மகளை சமதானப்படுத்தினார்… எல்லாரும் இயல்பு நிலைக்கு திரும்ப அங்கு சந்தோஷணமான சூழ் நிலை உருவானது

 

அனைவரும் மகிழ்ச்சி பொங்க பிறந்த நாள் விழாவை சிறப்பிக்க அமோகமாக முடிந்த வேளையில் சாந்தி சொல்லிக்கொண்டு கிளம்ப அவரை தடுத்த மித்ரா “உங்க மகன் கிட்ட சொல்லாமையே போறீங்களே அத்தை” என்க கண்கள் கலங்க தன் மருமகளை பார்த்தவர் “ சொல்லிட்டு போறளவுக்கு நான் அவனுக்கு நல்ல அம்மாவா நடந்துக்களையே… அவன் இதுவரைக்கும் ஒரு பையான எனக்கு எல்லாமே செஞ்சாலும் என்னால அதை இயல்பா ஏத்துக்க முடியல” என்றவர் வாயிலை நோக்கி நடக்க மித்ரா “ பாவா…. இப்பவும் உங்க கோவம் குறையுல்லையா…. பாவும் பாவா அத்தைய கூப்பிடுங்க பாவா அவங்க நம்பாலோடவே இருக்கட்டும்” என கூற அவனோ அசையாமல் இருக்க அதில் கோபம் கொண்டவள் “ டேய் ஆதி ரொம்ப பண்ற… அவங்க வயசான காலத்துல எங்கடா போவாங்க அவங்கள இங்கையே இருக்க சொல்லு இல்ல” ஒருமையில் “டா” போட்டு பேசும் மனைவியை பார்த்தவன் அவளோ “ அப்புறம் நான் இந்த வீட்டுல இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்” மித்ரா கையில் பலமான பிரமஸ்திரத்தை எடுக்க அதில் அவளை திகைத்துப் போய் கோபமாக நின்ற மனைவியை பார்க்க “ அவள் செய்தாலும் செய்வாள்” என்பதை உணர்ந்து வாயிலை நோக்கி செல்லும் தன் அன்னையை பார்த்தவன் “ அம்மா” என்று அழைக்க  அந்த ஒற்றை சொல்லில் சாந்தியின் நெஞ்சில் அமுதம் சுரக்க தன் மகனை பார்த்தவர் “ ஆதி கண்ணா…. இந்த… இந்த அம்மாவை மன்னிச்சிட்டியா” என்க அவனோ “ உங்க மேல கோபம் எனக்கு அப்படியேதான் இருக்கு ஆனாலும் திரும்பவும் உங்கள தெரிந்தும் இழக்க மனம் விரும்பல” என்று தன் மகனை கட்டிக்கொண்டு அழுத்துவிட்டார் தன் மருமகள் இல்லையேல் அவருக்கு இது நடப்பது சாத்தியமாவே முடிந்திருக்காது என்பதை குடும்பமே அறிந்து விடயம் ஒன்று…. சாந்தி அன்றிலிருந்து இன்று வரை நன்றாக பேசிக்கொள்ள வில்லை என்றாலும் ஓரளவிற்கு சுமுகமாக சென்றது…

 

 

அன்றிலிருந்து இன்றுவரை சாந்தி அங்கு தன் குடும்பத்தோடு தங்கிக்கொண்டு அவ்வப்போது ஆஷ்ரமம் சென்று வந்துகொண்டிருந்தார்…

 

வேலையெல்லாம் முடித்துக்கொண்டு மித்ரா தங்களின் அறைக்குள் நுழைய ஆதி தன் மனைவிக்காக காத்திருந்தவன் அவள் வந்ததும் அறையை சாற்றிவிட்டு மனைவியை கையில் எந்தியவன் கட்டிலைநோக்கி வீர நடையிட்டான்….

 

“ பச் பாவா இறக்கி விடுங்க….. ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு  சொன்னிங்க இதுதான் உங்களுக்கு முக்கியமான விஷயமா” அவள் சீனிங்கி கேட்க அதில் ஆதி பலமாக சிரித்தவன் “ முக்கியமான விஷயம் இருக்கு சொல்கிறேன் ஆனாலும் இதுவும் முக்கியமான விஷயம் தான்” தன்னவளைப் பார்த்து  கண்ணடிக்க அவளோ தலையில் அடித்துக்கொண்டாள்

 

“ பாவா என்ன விஷயம்னு சொல்லுங்க” என்றவளைப் பார்த்து “ பேபி ஜெகதீஷிக்கும் நம்ப வர்ஷாவுக்கும் பொண்ணு மாப்பிள்ளை பாரத்திருக்கேன் கல்யாணம் பண்ணிவைக்க” அவன் கூறி முடித்ததும் “பாவா உண்மையாவா  யாரு அந்த நபர்கள் சொல்லவே இல்ல” என்றவளை பார்த்து “ சொல்றேன் அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் நான் உன்கிட்ட கேட்கணும்” சற்று நிறுத்தி அவன் கேட்டக

 

மித்ரா “ என்ன பாவா கேட்கணும் எண்ணவேணுமோ கேளுங்க …. என் கிட்ட என்ன கேட்க போறீங்க” அவள் தனக்குள் கேள்வி கேட்டுக்கொள்ள

 

அவனோ “ பேபி உனக்கு ஒருசில விஷியங்கள் என்கிட்ட கேட்கணும்னா கேளு பேபி இதுதான் நான் உன்கிட்ட கேட்க வந்த கேள்வி”

 

“பாவா” என்று அழைத்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ கண்களால் கேளு பேபி என்க மித்ராவும் “ பாவா ஒரே ஒரு கேள்வி மண்டைய கொடஞ்சிட்டு இருக்கு ரொம்ப நாளா நான் கேட்கவா” என கேட்டவளை அமோதிக்க

 

“ அது வந்து பாவா என்… என்ன எப்புடி கண்டு புடிச்சிங்க… நான் கேரளா அஷ்ரமத்துல இருந்ததை” அவள் கேள்விக்கு தன் ஒற்றை புன்னகையை பதிலாக கொடுத்தவன் அவளை தன் மார்பில் கிடத்தி “ உன்னை யாரும் அவளோ சீக்கிரம் என்கிட்ட இருந்து பிரிச்சிற முடியுமா என்ன???

 

நீ காணாம போனதும் உன்ன சீக்ரேட்டா தேட ஆளு போற்றுந்தேன் உனக்கு யாரு யாரு பழக்கமோ எல்லாருக்கும் அவர்களுக்கே தெரியாம ஆள் போற்றுத்தேன் அப்போதான் சாதிக் உன்ன திரிசூர்ல வந்து பார்த்ததா செய்தி அறிந்து அடுத்தநாள் நான் சாதிக்கை போய் பார்த்தேன் என்நிலமைய  புரிஞ்சி அவனே சொல்லிட்டான் நீ அங்கேதான் இருந்தேனு” அன்று சாதிக் தன்னிடம் கூறியது இப்போது நினைவு வந்தது “ நானா போய் சொல்லமாட்டேன்” அதன் அர்த்தம் இப்போது புரிந்தவளுக்கு நன்கு விளங்கியது….

 

 

“ என்ன மேடம் டௌப்ட் கிளீயர் ஆச்சா” என்க அவளோ ஹ்ம்ம் “ கிளீயர் ஆகிடிச்சி” என்றபடி சுகமாக தன் மார்பில் சாய்ந்துக்கொண்டவளை தடுத்தவன் “ ஒருநிமிஷம்  பேபி..கொஞ்சம் இரு வரேன்” என்றவன் எழுந்து செல்ல

 

மித்ராவோ “ எங்கு செல்கிறான் என்று பார்திருந்தவள் அவனுக்காக காத்திருந்தாள்…

 

தன்னவளை வெகுநேரம் காக்கவைக்காமல் வெளியே வந்தவன் கையில் சிறிய நகை பெட்டிபோல் இருக்க அதை பார்த்து “ என்ன பாவா அது” கண்கள் மின்ன கேட்டவளை கண்டு அந்த சிறிய நகை பெட்டியை திறந்து காட்ட அதில் இருந்த இரண்டு  அழகிய பிளாட்டினம் மோதிரத்தை பார்த்தவள் “ ,பாவா இது அந்த பார்ட்டி கப்புல் ரிங் தானே” அவள் கூற அதில் ஆமென்று தலையாட்டியவன் “சாரி பேபி அன்னைக்கு குடுக்க நினைச்சது ஆனா கொடுக்க முடியாம” போய்விட்டது என்பதை உணர்ந்து கவலை கொள்ள

 

 

அதில் மித்ரா சட்டென தன் கையை நீட்டியவள் “அப்போ போட முடிலனா என்ன பாவா இப்போ போட்டு விடுங்க” என்க அவனும் மகிழ்ச்சியோடு தன்னவளின் கையில் போட்டுவிட அவளும் அவன் கையில் மோதிரத்தை அணிவித்து பாஷா படம் ஸ்டைலில் அவன் கையில் முத்தம் வைத்தாள்…

 

“ பாத்தியா பேபி நான் சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க விட  மாட்டேன்ற அப்புறம் சேதாரத்திற்கு நான் பொறுப்பில்ல” அவனைப் பார்த்து சிரித்தவள் “ இப்பமட்டும் சேதாரம் இல்லாம இருக்கநாக்கும்… அதான் வைத்துள்ள ஆறு மாசம் இருக்கே பின்னென்ன பாவா” என்றவளைப் பார்த்து “ என்ன பேபி மூனுக்கே அழுவுற நம்ப லிஸ்ட் பெருசாச்சே” என்க அவளோ “ போங்க பாவா இதுக்கு மேல என்னால முடியாது என்றவளைப் பார்த்து சிரிக்க அவளோ சரி யாரு பொண்ணு மாப்பிள்ளை சொல்லவே இல்ல”

 

“அதுவா ஜெகதீஷ்க்கு உன்னோட ஆருயிர் தோழி ஹேமாவையும் நம்ப வர்ஷாக்கு சாதிக்கையும் முடிக்கலாம்னு முடிவு பண்ணி சித்தி கிட்டையும் கேட்டாட்சி நீ என்ன நினைக்குற” தன் மனைவியிடம் கேட்க

 

அவளோ பலமாக சிரித்து “ பாவா ஜெகதீஷ் பாடு திண்டாடம்தான் ஹேமா சரியான ஜோடித்தான் ஜெகதீஷ் அத்தான்கு அவளோட வாய்க்கும் அத்தானோட பொறுமையும் சும்மா பத்து பொருத்தம் பச்சக்கணு இருக்கும்” அவள் சிரிப்பை அடக்கம் சிரிக்க அவனோ “ பாத்து பேபி எங்கையாவது புடிச்சிக்க போகுது”

 

“ ஹ்ம்ம் வர்ஷாக்கு சாதிக் சூப்பர் ஜோடி பாவா…. பெரிய பிஸ்னெஸ் மேன்… நல்ல குணம்” அருமையான சேலெக்ஷன் என்று தன் கணவனை சிலாகித்தவள் அவர்களது விருப்பத்தையும் அறியுமாறு கேட்டும்கொண்டாள்….

 

எல்லாம் சரி பாவா நான் உங்களுக்கு எப்படி என்று கேட்டவளை அற்பமாக பார்த்தவன் அவள் முகத்தை கையில் ஏந்தி “ நான் இதுவரைக்கும் சொர்கத்தை பார்த்ததில்லை பேபி…. அத உன்கூட வாழ்ந்து அனுபவிச்சிருக்கேன், அனுபவச்சிட்டு இருக்கேன் அனுபவிப்பேன்”…. நீ என் வாழ்வில் வந்த வரம் பேபி நான் தவமாய் தவமிருந்து எனக்கு கிடைத்த வரம் என்றவன் அவளை இருக்கு அவள் இதழில் தன் முத்திரையை பதித்தான்….

 

அவர்கள் நேசம் என்றும் தொடர ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் ஆர்த்மார்த்தமான காதலே… காதல் ஒற்றை பார்வையில் வருவதில்லை பழக பழக வருவது வலிகள், கண்ணீர், வேதனை,விட்டுகொடுத்தல், எதையும் எதிர் பார்க்காத அன்பு இவைமட்டுமே காதலின் உன்னதம்!!!

 

 
14
Leave a Reply

avatar
10 Comment threads
4 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
12 Comment authors
Naga LakshmiDeepika PPreethi BhagavathyAnamika RamyaNithya Karthigan Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Naga Lakshmi
Member

Divya story Super. Full story padichu mudichitaen. Very nice.

Deepika P
Member

Semma story sis👌👌👌👌😍😍😍😍

Preethi Bhagavathy
Member

Wow… Semaya iruku story

Anamika Ramya
Member

Semma super story da.. avanga love ah semmaya sollirka😍😍😍😍

Deepika Krishna
Member

Superb story sis.. Naa inga new member.. Unga story tha inga first ah padicha..samaya irundhuchu…😍😍😍

Nithya Karthigan
Admin

Hi Deepika,
Welcome to Sahaptham… 🙂 Thanks for reading and commenting …

Bharathi Viswanathan
Member

Nice

Rajee Karthi
Member

Super story pa. Sema ya touching ah irunthuchi. Wait panni padicha story .Miss you adhi and Mithra. 👌👌👌👌👍

Hemalokzhni
Guest
Hemalokzhni

Super story mam super super fantastic

Vidya Priyadarsini
Member

Nice story….. happy ending…… we are going to miss aadhi and mithra….. waiting for the new story eagerly pa……

Uma Maheswari
Member

Nice story

error: Content is protected !!