Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நல்லதோர் வீணை செய்தேன் டீஸர்

நல்லதோர் வீணை செய்தேன் டீஸர்:

 

“பாவா நான் யார்கிட்டையும் பேசுறதா இல்ல அவள போக சொல்லுங்க… மேடம் இப்போ ரொம்ப பெரியாளாகிட்டாங்க நம்ப கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு சுயமா முடிவெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க” மித்ரா கோபாமாக ஆதியிடம் பேசுவதுப் போல் செவ்வந்தியை கடிந்துக் கொண்டிருக்க

 

செவ்வந்தியோ மனம் பாதைத்தவளாய்“அச்சோ பெரியம்மா… அப்படியெல்லாம் இல்ல… நீங்க எனக்கு எவ்ளோவோ பன்னிற்கிங்க… அதுக்கே நான் என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல்ல அதான்… மேலும் உங்கள கஷ்டப்படுத்த என் மனசு கேட்கள… உங்கள பாக்க முடியாம போய்டுமோன்னு ரொம்ப பயந்துட்டு இருந்த சமயத்துலதான்  சரவணன் மாமா நீங்க பணம் கொடுத்ததா சொல்லி மேஸ்திரி கிட்ட பணத்த கொடுத்து கூட்டி வந்துச்சு” அவளின் கள்ளமற்ற அன்பு என்றும் போல் மித்ராவை நெகிழ வைக்க அவள் தலையை தன் மடியோடு சாய்த்து “ என்ன விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா என்ன???” மித்ராவின் கேள்விக்கு இல்லை என்று தலையடிவளை அணைத்துக்கொண்டு “ உனக்கு ஏதாவது ஒண்ணுனா நாங்க இருக்கோம் சரியா எதுவா இருந்தாலும் தயங்காம கேளு” என்று மித்ரா கூற அதற்கும் செவ்வந்தியிடம் தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது…

 

அவளது தலையை நிமிர்த்தியவள் “ அப்புறம் சொன்னியே எனக்கு கைமாறு செய்யணும்னு… அது நான் உன்கிட்ட கேக்கும் போது நீ மாட்டேன்னு சொல்லாம செஞ்சா போதும்” சரியா என்க செவ்வந்தியும் என்கிட்ட நீங்கள் கேட்டும் அளவிற்கு என்ன இருக்கிறது என்று மனதில் நினைத்தாலும் வெளியே மித்ராவிடம் சரி என்க அவள் தலையை தடவிக்கொடுத்த மித்ரா “ அத நான் காலையில கேக்குறேன் இப்போ போய் நீ தூங்கு சரியா”

 

தன் அறைக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தவளை ஆர்னவின் பட்டிக்காடு என்ற அழைப்பு தடுத்தி நிறுத்தியது “ ஏய் பட்டிக்காடு” என சொடக்கிட்டு அழைக்க அவளோ பயத்தில்  திரும்பி பார்க்க கூட பயந்தவளாக அப்படியே பயந்து நின்றுந்தவளின் அருகில் வந்தவன் தன் ஏலனப் பார்வையை அவள் மீது சுழலவிட்டு

 

அவளுக்கு அருகில் இன்னும் நெருங்கி “ உன்கிட்ட நான் என்ன சொல்லிட்டு போனேன்… நான் திரும்பி வரும்போது நீ இங்க இருக்க கூடாதுனு எவ்ளோ தூரம் சொன்னேன்… ஒரு விஷயம் சொன்னா அது உன் மண்டையில் ஏறாதா” வேண்டுமென்றே அவளிடம் வழியே சென்று வம்பிழுத்தவன் அப்பொழுதான் அவளை கவனித்தவனாய் அவள் அணிந்திருக்கும் உடையை சுட்டிக்காட்டி “ ஹ்ம்ம் பட்டிக்காடுன்னு நான் சொல்றதுல தப்பே இல்லடி நீயும் உன்னோட ட்ரெஸ்ஸும்” என்றவன்… “ஓகே அதுலாம் உன்னோட விருப்பம்… லிசன்  நான் இங்கிருந்து திரும்பி ஊருக்கு போறவரைக்கும் உன்ன இந்த ரூம் பக்கமோ… இல்ல இந்த வீட்டுல வேற எங்கையாவது என் கண்ணுலப் பட்ட தொலச்சிருவேன்” அவன் போட்ட  “டி”யில் ஏற்கெனவே நடுங்கிக்கொண்டிருந்தவள் மேலும் அவனது் மிரட்டலில் பயந்து உடலும் உள்ளமும் வெளிப்படையாகவே  நடுங்கிக் கொண்டிருக்க“ச…சரி சார்” என்றவள் அவனை நிமிர்ந்தும் பாராமல் அங்கிருந்து விட்டால் போதுமென்று ஓடிச் சென்றுவிட்டாள்….

 

“ பேபி நீ தெரிஞ்சிதான் இந்த முடிவை எடுத்திருக்கியா தலைக்கும் காலுக்கு முடிச்சு போடுற மாதிரி இருக்கு உன்னோட முடிவு….. இதுக்கு ஆர்னவ் சமதிப்பானா அவன பத்தி தெரிஞ்சும் நீ இப்படி முடிவூப்பன்னிருக்க… இது சரியா வருமா” ஆதி சந்தேகத்துடன் தன் மனையளிடம் வினவியவன் தன் மகனின் பிடிவாத குணத்தை அறிந்த ஒரு தந்தையாக கவலையும் கொண்டான்…

 

மித்ரா “ பாவா அதுலாம் சரியா வரும்… நான் பாத்துக்குறேன்” தன் கணவனை சமாதானம் செய்தவள் மனதில் ‘அவன் சமதிச்சிதான் ஆகணும் பாவா கண்டிப்பா அவன் சமதிப்பான் ஏன்னா அவனுக்கு வேற ஆப்ஷன் இல்ல பாருங்க’ என்ற மித்ரா  தனக்கு தானே சவாலும் விடுத்துக் கொண்டாள்….

 

வீணை மீட்டும்…..

 
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Super


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Selvi Ong says:

  When will serial 2 will be published? Waiting eagerly.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Superb teaser…. mithra mrg ku sammatham ketka porala aarnav kita….. aana sevvandhi sammathipala…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Sevvandhi yenna panalum…. Arnav kitta irundhu thapika mudiyuma yenna sis😍😘😘

error: Content is protected !!