Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-17

அடுத்த நாளே விக்ரம் குடும்பத்தினர் நிராஷாவின் வீட்டுக்கு பெண் கேட்டு வருவதாக இருக்க, தன் தந்தையின் சம்மதத்தை பெற எண்ணி தன் காதல் விவகாரத்தை கூற கொதித்தெழுந்தார் செனவிரட்ன. பல விதமாக எடுத்துக் கூறியும் அவர் ஒத்துக் கொள்வதாய் இல்லை.

 

“ தமுசெட எயாவ ஓனினம் தமுசெ மே மொஹதெம மே  கெதரின் எலியட யனவா..” (உனக்கு அவன் தான் வேண்டுமென்றால் இந்த நிமிஷமே இந்த வீட்டை விட்டு வெளியேறு.” என்று கர்ஜிக்க இதற்கு மேல் அவருடன் வாதாடுவதில் பிரயோஜனமில்லை எனத் தோன்ற இதற்கு மேலும் அந்த இடத்தில் இருக்கவே கூடாது என எண்ணியவளாக அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.

 

ஏன் இந்த ஜாதி,மத போர்வைக்குள் புகுந்து கொண்டு உண்மை காதலையே வெறுக்கின்றனர்? காதலிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? காதலுக்கு ஏது ஜாதி,மதம்.

 

வீட்டை விட்டு வெளியேறியவள் விக்ரமிற்கு அழைப்பெடுத்து நடந்தவற்றை கூற அடுத்த சில மணத்தியாலங்களில் அவளை அபிநவ்வின் வீட்டிற்கு அழைத்துச் சென்று இது பற்றி அவனிடம் கலந்துரையாடினர்.  சிறிது நேரத்தில் விக்ரம் குடும்பத்தினரும் வருகை தர இன்னும் இரண்டு வாரங்களில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என பேசி முடித்தனர். 

 

அதுவரை நிராஷாவை பாதுகாப்பான ஓரிடத்தில் தங்க வைக்க முடிவு செய்தவர்கள் இனியாவை தொடர்பு கொண்டு அவளிடம் பேசி அவளது வீட்டிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இனியாவுக்கும் இதில் ஆனந்தமே. இப்படியே  நாட்கள் மிக வேகமாக உருண்டோடின.

 

அன்று இரவு வழமை போல அவளது  மஞ்சத்தில் அவளும் நிராஷாவுமாக உறங்கிக் கொண்டிருக்க இனியாவின் செல்போன் ஒலித்தது. திரையில் தன்னவனின் பெயரை கண்டதும் அவள் இதழ்கள் தானாக மலர்ந்தன.

 

ஓர் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன் தானே பேசிவிட்டு வைத்தான் அதற்குள் பேச வேண்டுமா? என புன்னகையுடனே அழைப்பை ஏற்றாள்.

 

அபி என்ன இந்த டைம்லஎனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ,

இனியா உன் ஜன்னலை கொஞ்சம் திறந்து பாருஎன்று கூற என்னமோ ஏதோ என பதறியவள் ஏதும் கேட்கத் தோன்றாது ஜன்னலை திறந்து பார்க்க அங்கே அவன் சுற்று மதிலில் சாய்ந்த வண்ணம் இவளுக்கு கையசைத்தான்

 

தன்னவன் இந்நேரத்தில் இங்கு என்ன செய்கிறான்? என்று தோன்ற தன் செல்லை காதில் வைத்த வண்ணம் என்ன என செய்கையால் வினவ, தூரத்திலிருந்தபடியே அவனது லேசர் கண்களால் அவளை ஆராய்ந்தவன்,

 

ம்ம்.. இந்த டிரஸ்ல வெளியே வர முடியாது.. வேற ஏதாவது டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வெளியே வா..” என்று கூற தான் அணிந்திருக்கும் இரவு உடையை தூரத்திலிருந்தே கண்டு கொண்டானே என்ற நாணம் தலைதூக்கியது.

 

அவன் தன் காதலனாக இருப்பினும் இந் நேரத்தில் வெளியே செல்லலாமா? என அவள் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொள்ள, “நோ அபி இந்த டைம்ல எப்படி அபி..” என்ற தயக்கத்துடன் கேட்க, அவள் தயக்கத்தை தவறாக புரிந்து கொண்டவன்,

 

ஓகே.. ஃபைன் என்னை நம்பி வராதே..” என்று அழைப்பை துண்டித்து விட துடித்துப் போனாள் அவள்.

 

நிராஷாவின் அருகில் சென்று பார்க்க அவள் நன்றாக உறங்குவது தெரியவே அவசர அவசரமாக ஓர் உடையை அணிந்து கொண்டவள் அவளது சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து தலையை சுற்றி முக்காடு போட்டபடி ஜன்னலேறி குதித்து வெளியே வந்தாள்.

 

அவள் தன்னை நோக்கி வேக நடையுடன் வருவதை கண்டவன் பேசாமல் திரும்பி நிற்கஅருகில் வந்து அவனது தோளை பற்றி,

 

அபி..” என அழைக்க அந்த ஒற்றை அழைப்பில் முழுவதும் கரைந்தவன், முக்காடு போட்ட வண்ணம் இருந்தவளின் பக்க வாட்டுத் தோற்றம் அப் பூரண நிலவொளியில் மிளிர் அவளை நோக்கி,

 

இப்போ போகலாமா?” என்று கேட்க ஒன்றும் புரியாமல் விழித்தவள்,

 

எங்கே அபி இந்த டைம்ல? நோ நோ அம்மா யாராவது பார்த்தா அவ்வளவு தான். முடியவே முடியாதுஎன மறுத்துக் கொண்டிருந்தாள்.

 

 அவளது துயிலகன்று கலங்கிய விழிகளை, ஸ்தீரமாக நோக்கியவன்,

என் மேல உனக்கு உண்மையாகவே லவ் இருந்தா என் கூட வா.” என்றவன் தன் கையை அவளை நோக்கி மெல்ல நீட்டினான்.

 

இப்படிக் கூறிய பின் அவளால் எப்படி அவனின் அழைப்பை மறுக்க முடியும்? அவளது காதலும் உண்மையே என்பதை நிரூபிப்பதற்காக அவனருகில் வந்து அவளுடைய மலர்ச்செண்டு கரத்தை அவனுடைய கரத்தில் வைத்தாள்.

 

தன் காதலி தன் மேல் இருக்கும் உண்மை அன்புக்கு கட்டுப்பட்டு, தன்னோடு வர இணங்கியதை எண்ணி தன் காதல் மேல் அவனுக்கு சிறு கர்வமும் உண்டாயிற்று. காதல் பெருக்கெடுக்க அவள் உச்சந்தலையில் மென்மையாக முத்தமிட்டவன், “போகலாமாஎன்று கேட்க அவளும் அவன் தந்த ஒற்றை முத்தம் தந்த சுகத்தில் புன்முறுவலுடன் தலையசைத்தாள்.

 

அவன் வந்த வழியே அவளையும் அழைத்துச் சென்றான். அந்த ஐந்தடி காம்பவுண்ட் சுவரையும்  தாண்டி தன் காதலியையும் ஏற்றி இறக்கி விட்டவன் சாலையோரத்தில் அவளுடன் இணைந்து நடந்தான்.

 

அவன் கைகளை தன் கைகளோடு பிண்ணிக் கொண்டவள் அவன் தோளில் சாய்ந்த வண்ணம் நடந்தாள்எங்கே செல்கிறோம் என்று கூட கேட்கக் கூட தோன்றாமல் அவனோடு ஒன்றி நடந்தாள்.

 

அங்கே சாலையோரத்தில் அவனுடைய புதிய வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஏதும் பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தவன் பின் சீட்டை தட்டிக் காட்டி, “வா ஸ்வீட்டி ஏறுஎன்று அழைக்க ,

 

வாவ் பைக்.. சூப்பர்..” என்று சிறு பிள்ளை போல கொட்டி சிரித்தவளை தன்னுள் வாங்கிக் கொண்டவன் பைக்கில் அமர்ந்தபடியே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய வண்ணம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 இது வரை அவன் காரில் மட்டுமே பயணிப்பதை கண்டு பழகியிருந்தவளுக்கு இன்று தன்னவன் பைக்கில் வந்திருப்பது ஏனோ அவன் வித்தியாசமாக இருப்பது போல் தோன்றியது.

 

வெளியே லேசாக குளிரடிக்க தன் துப்பட்டாவை இழுத்துப் போர்த்திய வண்ணம் அவனது பைக்கை ஒரு சுற்று சுற்றி விட்டு,

 

பைக் சூப்பரா இருக்கு.. யாரோட பைக் இது? ஆரவ்வோட பைக்கா?” என்று கேட்க, அவளை நோக்கியவன் குனிந்து,

 

ஏன் ஆரவ் கிட்ட மட்டும் தான் பைக் இருக்கனுமா? புது வண்டி இன்னைக்கு தான் வாங்கினேன். அதான் உன் கூட நைட்ல ஒரு ரைட் போகனும்னு ஆசை ப்ளீஸ்மா..” என்று அவன் கூறிய பின்பும் அவளால் பின் வாங்கத் தோன்றுமா? ஓர் புன்னகையுடனே அவன் பின்னால் ஏறிக் கொண்டாள்.

 

அவளுடைய கைகளிரண்டும் அவன் வயிற்றை இறுகப் பற்றிக் கொண்டன. அவளுடைய ஒரு பக்க முகம் அவன் முதுகில் புதைய, யாருமில்லா இரவில் குளிர் காற்று முகத்தில் மோத, பயணிப்பது  அவளுக்கும் பிடித்திருந்தது. அவளும் அப்படியே இதே மோன நிலையாய் அமைதியாய் வர அவ் ஆண்மகனுக்கோ உள்ளே ஆயிரம் பட்டாம் பூச்சி பறப்பது போல் உணர்வு.

  

வண்டியை சடன் பிரேக்கிட்டு நிறுத்த திடுக்கிடலுடன் பார்க்க சுற்றிலும் இருட்டாக தெரிந்தது. ஆனால் அங்கே வீசிக் கொண்டிருந்த கூதல் காற்று இது கடற்கரையோரம் என உணரச் செய்தது. சுற்றிலும் பார்த்தவளுக்கு இதுகோல் ஃபேஸ்’ (காலிமுகத்திடல்) அவளை இறங்கச் செய்தவன் வண்டியை பார்க் செய்து விட்டு தானும் இறங்கி அவளருகில் வந்தான்.

 

எப்போதும் சுற்றிலும் விளக்குகளுடன் வெளிச்சத்துடனேயே காணப்படும் கோல் ஃபோஸ் இன்று ஏன் இப்படி இருட்டாக இருக்கிறது? என்று புருவம் சுருக்கி அபிநவ்வை பார்க்க, அந்த பார்வையிலேயே அவள் கேள்வியை புரிந்து கொண்டாலும் எதுவும் பேசாமல் அவளை தோளோடு அணைத்தவாறு நடந்தான்.

 

காதலுடன் இப்படி நடப்பதில் கூட எவ்வளவு சுகம்? என்று தோன்ற அவளுக்கு அவனிடம் வேறு கேள்வியே கேட்கத் தோன்றவில்லை. இதமான குளிர் காற்றில் அவனது அணைப்பு இன்னும் இன்னும் சுகத்தை தர அவனுடனேயே ஒன்றி நடந்தாள் பெண்ணவள்.

 

அங்கிருந்த ஒர் பெஞ்சில் அமர அவன் தோளிலேய சாய்ந்த வண்ணம் அமர்ந்து கொண்டாள்.

 

அபி.. என் லைஃப்ல இந்த நாளை என்னால மறக்கமுடியாது.” என அவள் ஏதேதோ கதை பேசிய வண்ணம் இருக்க அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் அக் காதல் மன்னன்.

 

இவள் பேசுவதற்கெல்லாம்உம்”  மட்டுமே கொண்டிருந்தவனிடமிருந்து சரியான பதில் வராது போகவே அதில் கடுப்பானவள், “என்ன அபி நான் இப்…: என்ற வண்ணம் தலையை உயர்த்திப் பார்க்க அப்போது தான் அவளுக்கு புரிந்தது தன் செல்ல கிறுக்கனின் பார்வை அவள் வதனத்தில் நிலைத்திருப்பது.

 

அந்நொடி தான் அவள் எதிர்பாராத நிகழ்வொன்று நடந்தது.  சட்ட எழுந்து நின்றவன் அவளையும் எழுந்து நிற்குமாறு கூறி அவள் இரு விழிகளை தன் கரங்கொண்டு மூடியவன் அவளை முன்னோக்கி நடக்கச் செய்தான்.

ஒன், டூ, த்ரீஎன அவன்  தனக்குள் முனுமுனுக்க அவள் கண்களை விட்டும் தன் கரத்தை எடுத்த அடுத்த நொடி நாலா புறம் விளக்குகள் எறிய அவ்விடமே வண்ணமயமாக  மாறிக் காட்சியளித்தது. அங்கே ஓரிடத்தில் பல ஓர்கிட் மலர்களாலும் ரோஜா மலர்களாலும் அலங்கரிக்கப்ட்டிருக்க அதில் அழகாக ஹேப்பி பர்த்டே இனியாஎன்ற வாசகமும் மிக வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது.

 

 

இந்த ஏற்பாட்டை பார்த்து உறைந்து போயிருந்தவளது காதருகே குனிந்துஹேப்பி பர்த்டே ஸ்வீட்டீஈஈஈ..” என்று கூறி பசக் என அவள் கன்னத்தில் இதழ் பதிக்க தன்னவனின் செய்கையில் சற்றே நெளிந்தாள்.

 

அந்நேரம் சரியாக நிராஷா கைகளில் கேக்கொன்றை ஏந்தியவண்ணம்  “ஹேப்பி பர்த்டே டூ யூ..”  முன்னால் வர அவளுக்கு பின்னால் ஒரு பட்டாளமே கோரஸாக பாடிக் கொண்டு வர அதிர்ந்து விழியகல பார்த்த வண்ணம் நிற்க, அருகில் வந்த நிராஷா அங்கிருந்த மேசையில் கேக்கை வைத்து விட்டு அவளை அணைத்துக் கொண்டாள்.

 

திருடி நீ கூட என் கிட்ட இத பத்தி சொல்லவே இல்லைல..” என தன் நண்பியின் காதோரம் முனுமுனுக்க,

 

லூசு.. அப்படி சொல்லியிருந்தா இந்த சர்ப்பைஸ்ல ஒரு கிக் இருக்காதுல..” என்றவள் தள்ளி நின்று, “வாங்கப்பா இப்போ கேக் கட் பண்ணலாம்.” என இனியாவின் அந்த குட்டி கத்தியை நீட்டினாள்.

 

அந்த இடம் அபிநவ், விக்ரம் மற்றும் இனியாவின் குடும்பத்தினரால் நிரம்பி வழிந்தது.  அதன் பிறகு கேக்கை வெட்ட முதல் துண்டை அபிநவ்விற்கு ஊட்டி விடுமாறு ஆரவ் கத்த அவளும் ஊட்டி விட தன் காதல் பார்வையை மாற்றாமலே ஊட்டினான். அந்தப் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளை தானாக நாணம் குடி கொண்டது.

 

அவ்வாறே தன் தாய். தந்தை. தம்பி, நிராஷா என அனைவரும் அவளுக்குக்கு வாழ்த்துக்களோடு பரிசுகளையும் வழங்க சந்தோசமாகவே ஏற்றுக் கொண்டாள். எந்நேரமும் அவள் விழிகளை தன்னவனையே சுற்றிச் சுற்றி வந்தது.

 

இப்படியே ஒருவாறு எல்லா ஆர்ப்பாட்டங்களும் முடிய, ஒவ்வொருவராக கிளம்ப தானே இனியாவை கொண்டு விடுவதாக கூறினான். அனைவரும் சென்ற பின் இருவருமாக தனித்து இருக்க, எதிர்பாராத முத்தமொன்றை அவனது கன்னத்தில் பதித்தாள் இனியா.

 

அந்த முத்தத்தில் திளைத்தவன் அவளை தன் மார்போடு அணைத்து விடுவித்தவன்அந்த கடற்கரை காற்று அவன் முகத்தில் மோத தன் இரு கைகளையும் அகல விரித்து நின்ற வண்ணம் பரந்த கடலை நோக்கி,

 

இன்னைக்கு  நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். ஏன் தெரியுமா? என் மனசுக்கு ரொம்ப்ப்ப்பபப பிடிச்ச என் ஸ்வீட்டியோட பிறந்த நாள்.” என்று அவன் பெருங்குரல் கொண்டு கத்த அவனது காதல் அவளை ஈர்க்க ஓடிச் சென்று அவன் முதுகோடு அணைத்து கட்டிக் கொண்டாள்.

 

அவளது திடீர் அணைப்பில் தன்னவளின் மேலுள்ள காதல் பன்மடங்காக பெருகியது. அதே நிலையில் நின்றவன் வயிற்றோடு கோர்த்திருந்த அவளது பிஞ்சுக் கரங்களை பற்றிக் கொண்டு,

 

இப்படி ஒரு முறையாவது உன் பிறந்த நாளை கொண்டாடனுங்குறது உன்னோட நீண்ட நாள் ஆசைல? இதுக்கப்புறம் உன்னோட ஒவ்வொரு பிறந்த நாளும் மறக்க முடியாத பிறந்த நாளாகத் தான் அமையும்.” என அதே உற்சாகத் தொனியில் கூற சற்று அதிர்ந்தவள் பின் அவனை தன் புறம் திருப்பி, அவனது கூர்மையான விழிகளை ஆராயும் பார்வை ஒன்றை செலுத்திய வண்ணம்,

 

இது என்னோட ஆசைனு உங்களுக்கு எப்படி தெரியும்? மிட் நைட் பைக் டிரைவ்பீச்ல லேட் நைட் பர்த்டே பார்ட்டி  இதெல்லாம் உங்க கிட்ட நிராஷா தானே சொன்னா?” என்று தன் விழியின் கருமணிகளை உருட்டி வண்ணம் கேட்டாள்.

 

அவளை பார்த்து புன்னகைத்தவன்  தன் ஒற்றை விரலால் அவள் நாடியை உயர்த்தி, “எனக்கு யாரும் சொல்லை. நீயே தான் இதோ உன்னோட இந்த வாயால சொன்ன..” என அவள் உதட்டை ஒற்றை விரலால் வருடிய வண்ணம் ஹஸ்கி வாய்ஸில் கூற கிறங்கியவள் அவனை விலக்கி தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய வண்ணம், அவனை உச்சி முதல் பாதம் வரை ஒரு பார்வை பார்த்தவள்,

 

நீ பொய் சொல்லாத அபி.. நான் உன் கிட்ட இதை பத்தி பேசினதே இல்லை. எப்படி தெரியும் அபி? என அதிகார தோரணையில் வினவ, அவளது செய்கை ரசித்தவன் அதே மாறாத புன்னகையில் அவளை நோக்கி,

 

ஆமா நீயே தான் சொன்ன. ஆனா அதை இப்போ சொல்ல மாட்டேன். உன்னோட அடுத்த பர்த்டேக்கு  தான் சொல்லுவேன் அது வரைக்கும் வெயிட் பண்ணு பேபி..” எனக் கூற அவளை தோளோடு அணைத்தவன் பார்க்கிங் ஏரியாவுக்கு அழைத்துச் செனறான்.

 

அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அவன் பார்த்து வைத்த பார்வையில் அவனிடம் மீண்டும் வாதாட தோன்றவில்லை. நானா எப்போது சொன்னேன் என  தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

வீட்டை வந்தடைந்தும் கூட அவளுக்கு இறங்கத் தோன்றவேயில்லை. “ஸ்வீட்டிஎன்றழைத்த அவன் இவ்வுலகத்துக்கு அழைத்து வர சட்டென இறங்கிக் கொண்டாள்.

 

இறங்கியதும் அவன் செய்தது போல கைகளை அகல விரித்து,  “ நான் ரொம்ப ஹேப்பீஈஈஈதேங்க்ஸ்  அபி இது தான் என்னோட வாழ்கையில பெஸ்ட் பர்த்டே. ஏன்னா நீங்க என் கூட இருக்கீங்க.. லவ் யூ.” என்றவள் சற்று எம்பி அவனது நெற்றியில் முத்தம் வைத்தாள்.

 

ஆசையாய் தன் காதலியின் கன்னத்தை தாங்கியவன் அவளை நோக்கி,  “ இனியா இதுக்கப்புறம் உன்னோட லைஃப்ல வரப்போற ஒவ்வொரு பிறந்த நாளும் நீ எனக்காக மட்டும் பிறந்தவள்னு உனக்கு உணர்த்தும்.” என்றவன் அவள் பிறை நுதலில் இதழ் பத்தித்தான்.

 

 

அந்நேரம் பார்த்து அவளது சங்குக் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் தோன்ற சட்டென தன் கழுத்தை பிடித்துப் பார்க்க ஓர் பிளாட்டின மாலையை போட்டு விட்டான். அதில் ஏஐ (AI) என இருவர் பெயரின் முதல் எழுத்துக்களும் அழகாய் இணைந்திருந்தன.

 

 தொடரும்..

 

அன்புடன் அபிநேத்ரா.
Comments are closed here.

error: Content is protected !!