Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

காஜலிட்ட விழிகளே 18

கண்தட்டி விழித்தவள் , “என்ன ஸ்நேகா சொல்ற? ” என்றாள்.
“நீ கன்சீவ் ஆகியிருக்கிறதா என்னிடம் ப்ரியா சொன்னாளே! அப்படி ஒன்றும் இல்லையா? ”
அவளிடம் பதில் சொல்லாமல் “ப்ரியா எங்க? ”
“இன்னொரு ஃப்ளுடா ஆர்டர் செய்ய போயிருக்கா! ”
“நீ இங்கேயே இரு. நான் இப்ப வந்திடுறேன். ” என்றவள் அடுத்து ப்ரியாவைத் தேடிப்போனாள். தனது கைகளில் இரண்டு ஃப்ளுடா ஐஸ்கிரீம்களையும் ஒரு ஜம்போ பாப்கார்னையும் எடுத்துக்கொண்டு வந்தவளிடம் பாப்கார்னை வாங்கிகொண்டு தோழிகள் அனைவரும் சேர்ந்து அரட்டை அடித்த டேபிளுக்கு இருவரும் வந்தனர்.
ஸ்ருதி ப்ரியாவிடம் பேசப்போகும் விஷயம் தெரிந்ததால் ஸ்நேகா மற்ற தோழிகளுடன் சேர்ந்து ஏதோ ஒரு கடையில் புகுந்து கொண்டாள்.
ஸ்ருதிக்கு ப்ரியாவிடம் தனிமை கிடைத்தது.
“ப்ரியா நான் சாப்பிடும்போது நீ ஏன் பெப்ஸி குடிக்காதே என்று சொன்ன? ”
“சும்மாதான்.. ”
“ஏன் சொன்ன ப்ரியா? ”
“இல்லப்பா.. நீ தான் இப்ப ப்ரக்னென்ட் ஆகியிருக்கீல்ல? அதான்.. சாரி உன் பெர்சனல் விஷயம் நாங்க பேசியிருக்கக்கூடாது. தப்புதான். இனிமேல் காசிப் பண்ண மாட்டோம். ”
“உனக்கு யார் சொன்னது? ”
“மைவிழி சொன்னா. அவள் தற்செயலாக பேசும்போது எனக்குத் தெரிஞ்சிடுச்சு. அவளை தப்பா நினைக்காதே. சரியாடா? ”
“ஜான்விக்குத் தெரியுமா? ”
“ஜான்விக்குத் தெரியாது. யாரும் அவளிடம் சொல்லலை போல. ”
இருவரின் உரையாடலும் மற்ற தோழிகள் அருகே வரவும் நின்றுபோனது.
ஸ்நேகா, மைவிழி, ஜான்வி என்று தோழிகள் மூவரும் தன் அருகே வந்து அமர்ந்தபோது ஸ்ருதி ஜான்வியின் காதில் விழாமல் பார்த்துக்கொண்டு மைவிழியிடம் கேட்டாள் “நான் இப்ப ப்ரக்னென்ட் ஆகியிருக்கேன் என்று உனக்கு யார் சொன்னா? ”
“ஜான்விதான் சொன்னா.. நானே உன்கிட்ட தனியே இதைப்பற்றி பேசணும் என்று இருந்தேன் ஸ்ருதி. என்னடி நீ தொடாமல்தான் காதலே செய்வேன் என்று சொல்லிட்டு. இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிற? ”
ஆனால் பேசும் அவசரத்தில் ஸ்ருதியைப் போல அவள் சத்தம் குறைவாக எல்லாம் பேசவில்லை. கொஞ்சம் சத்தமாகவே பேசிவிட்டாள் மைவிழி.
ஸ்ருதி ஸ்நேகாவைப் பார்த்தாள்.
“ஸ்ருதி இவுங்க எல்லோருக்கும் தெரியும் என்று நான் கெஸ்கூடப் பண்ணலை! எனக்கு நிச்சயமாகத் தெரியாது!”
“சரி அதைவிடு. ” என்று ஸ்நேகாவிடம் சொன்னவள் ஜான்வியிடம் திரும்பி ஜான்வி உனக்கு யார் சொன்னா? என்று கேட்டாள்.
“தருண் தான் சொன்னான். ஆக்சுவலி கார்த்திக் தான் அவனிடம் என்கிட்ட இதைப்பற்றிப் பேசி உன்னை சமாதானம் பண்ணச்சொல்லி சொன்னான். ”
“ஓ! அப்படினா.. ஆக மொத்தம்.. நான் ப்ரக்னென்ட் ஆனது கார்த்திக்கிற்கு தெரிஞ்சிருக்கு , உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு.. ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியலை! ” என்றாள் ஸ்ருதி.
“என்ன நீ இப்ப ப்ரக்னென்ட் இல்லையா என்று மூவரும் சேர்ந்தே கேட்க.. ”
இல்லை என்று மறுப்பாய் தலையசைத்தாள்.
ஸ்ருதி கார்த்திக்கின் செல்பேசிக்கு அழைத்து கத்தினாள் பாய்ந்தாள் எகிறினாள் குதித்தாள் இன்னும் பலப்பல காரியங்கள் செய்தாள்.
“கார்த்திக் உன்னை நான் இப்பவே சந்திக்கணும். ”
மறுமுனையில் ஏதோ பதில்..
“எங்கேயா? அன்பு இல்லத்திற்கு வந்திடு. ”
மறுமுனையில் என்ன பதில் என்பதைக் கூட கேட்காமல் கைபேசியை அணைத்தாள் ஸ்ருதி.
தருணும் கார்த்திக்கும் சேர்ந்தே அன்பு இல்லத்திற்கு வந்தனர். தருண் வெளியே வாசல் பக்கமாக இருந்த பூங்காவில் உட்கார்ந்திருந்தான். அங்கேயே பிள்ளைகள் தகரம் பிய்ந்துபோன சருக்கிலும் மர ஊஞ்சல்களிலும் விளையாடு வதைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்துவிட்டான்.
ஆனால் அன்பு இல்லத்திற்குள் கார்த்திக் நுழைந்ததும் பத்து பதினைந்து சிறுவர்கள் அவனைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு அவன் வயிற்றில் காலில் கைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். அவன் வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டிருந்ததே..
கூச்சல்களைக் கேட்டு தருண் உடனே உள்ளே வந்தான். தருணைப் பார்த்ததும் கார்த்திக் மௌள எழுந்தான்.
தருணிடம் “டேய்.. நீ ஒரு ஓரமாய் இருந்துக்கோ.. மோகினி இப்ப வந்திடுவா..” என்று சொல்லி முடிக்கும் முன் அவனை எதிர்பார்த்து காத்திருந்த ஸ்ருதியும் அவளது தோழிகளும் வகுப்பறை ஒன்றில் புகுந்தனர். குழந்தைகள் அடுத்த அறையில் விளையாடிக்கொண்டிருந்தனர். கார்த்திக்கும் ஸ்ருதியும் மற்றவர்களும் இருந்த அறைக்குள் சென்றான்.
ஸ்ருதி அவன் அருகே வந்து அவன் காதினில் குனிந்து அவனது சட்டைக் காலரைப் பற்றி இழுத்து “கார்த்திக் karthik are we pregnant?” என்று கேட்டாள்.
அவன் “நோ.. நம்ம காதல்தான் இன்னும் கன்னிப்பருவத்திலே இருக்கும்போது எப்படிம்மா நீ கன்சீவ் ஆகுவ? தொடாமல் கிஸ் பண்ணாமல் யாருடா பேபி கன்சீவ் ஆகமுடியும்?” என்று சொல்லவும் அவர்களைச் சுற்றி இருந்த அவளது நண்பர்கள் கூட்டம் கிசு கிசு பேசியது.
தருண் தனது காதுகளையே நம்பமுடியாமல் நின்ற இடத்தில் இருந்தே கார்த்திக்கை அண்டப்புளுகன் என்று திட்டினான்.
நியாயமா திட்டு! ஆனால் அவனுக்குத் திட்ட மட்டுமா தோன்றியது?
தருண் கார்த்திக் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்துக்கொண்டு அவர்கள் அருகே மறைவாக நின்றான்.
ஸ்ருதி கார்த்திக் சட்டைக் காலரை விடாமலே தனது தோழிகளிடம் திரும்பி ,
“நானும் இந்த ஃப்லும் காதலிக்கிறோம் இரண்டு வருஷமாக காதலிக்கிறோம். ஆனால் அவனை நான் தொட்டதுகூட கிடையாது. அவனும் என்னை கிஸ்கூட பண்ணது கிடையாது. நாங்க வெஜிடேரியன் லவ்வர்ஸ். உங்களுக்கு அது என்ன என்று பிறகு புரியவைக்கிறேன். ப்ரியா ப்ளீஸ் நான் கார்த்திக்குடன் தனியாக பேசணும்.” என்றாள்.
தருண் மற்றும் அவளது தோழிகள் கூட்டம் சிறுவர்கள் இருக்கும் இடத்தில் புகுந்தது. ஆனால் அடுத்த அறையின் உரையாடலை ஒரு வரி விடாமல் ஒட்டுக்கேட்டது. தருணிற்கு கார்த்திக்குடன் ஒரு கணக்கு பைசல் பண்ணும் வேலை பாக்கி இருந்ததால் கோபத்தை ஒத்திவைத்துவிட்டு அமைதியாகவே ஸ்ருதி பேசுவதைக் கேட்டான்.
“ஸாரிப்பா.. ஸ்ருதி நீ ரொம்ப அழுதியா? ”
“…”
“கேட்குறேன் தானே? பதில் சொல்லு ஸ்ருதி. ”
ஸ்ருதி அவனது சட்டையை கொத்தாகப் பற்றி..
“ஆமாம் அழுதேன். அம்மா என்கிட்ட பேசலை. அதனால் அழுதேன். கார்த்திக் ப்ளீஸ். ஏற்கனவே என் பெயரை நானே கெடுத்துக்கிட்டேன். இன்னும் தப்புத்தப்பா உன் புத்தி போகுது? லவ் பண்றது தப்புன்னு அம்மா நினைக்க மாட்டாங்க. ஆனால் தனியே சந்திப்பதை சுத்தமாக விரும்ப மாட்டாங்க. நாம் அன்னைக்கு தனியே இருந்தது தப்பு!
எக்குத்தப்பா ஏதாவது செய்வதே உனக்கு வேலையாகிப்போச்சு. என் ஃப்ரண்ட் என்னைப் பற்றி என்கிட்டயே கிசு கிசு சொல்றா.. ஆனால் அந்த கிசு கிசுவிலும் நீ மட்டும் எப்படி நல்லவன் கேரக்டரை மெயின்டேன் பண்ற? தருண்கிட்ட நீ சொல்லி அவன் ஜான்விகிட்ட சொல்லி.. அவள் இன்னொருத்தர்கிட்ட சொல்லி.. ஐ கான்ட் டாலரேட் திஸ். திஸ் இஸ் டூ மச். என்னைச் சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் என்னைப் பத்தி மட்டும் தான் பேசுறாங்க. என்னைப் பற்றி தப்பா நினைக்கிறாங்க!
வேலைக்கார அம்மாகூட என் பக்கத்தில் உட்கார்ந்து ஐந்து நிமிஷம் அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க!
நான் ஏதாவது வேலை செய்தால் “உனக்கு எதுக்குமா இந்த கஷ்டம் வேற? கிரிஜா அம்மாகூட உன்கிட்ட எரிஞ்சி எரிஞ்சி விழுது.. நீ பேசாமல் படுத்து மனச நல்வழிப்படுத்துன்னு சாமி ஸ்லோகன் சொல்லு என்று சொல்லாமல் போகமாட்டிக்கிறாங்க! ”
” யாரைப் பார்த்தாலும் அட்வைஸ்! ஏதற்கெடுத்தாலும் அட்வைஸ். அம்மாவும் கிரிஜாவும் கெட்டுப்போன என் மனதுக்கு மறைமுகமாக கௌன்சிலங் கொடுக்கிறாங்க. ”
” அந்த அட்வைஸை எல்லாம் டன் டன்னாக உன் தலையில் வந்து கொட்டச் சொல்லணும் கார்த்திக். அன்றைக்கு பிடிச்ச பைத்தியம் இன்னும் தெளியலையா?
பிரசாத் வந்து என்னிடம் தனியே கங்ராட்ஸ் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ”
” ப்ளீஸ் நான் போறேன். இப்ப நாம் பேசினால் சண்டைதான் வரும். நான் ஒண்ணும் மத்தவங்க செய்யாததை செய்யலையே என்று நீ சொல்வ. நான் நீ ஏன் பிரசாத்கிட்ட பொய் சொன்ன? என்று வாக்குவாதம் செய்வேன். நான் பொய் சொல்லவில்லை அவனாகத்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டான் என்று நீ சொல்லுவ! என்னால் ட்ரூப்புக்கும் இனி வர முடியாது. அழுது அழுது தொண்டை கட்டிக்கிச்சு. என்னால் பாட முடியாது. கல்யாணம் முடிஞ்சு ஒரு மாதம் ஆனதால் கிரிஜா அக்கா வந்திடுவாள். நீ அவளை வைத்து அட்ஜஸ்ட் பண்ணிடு. அக்கா கோபமாக நடந்தால் ப்ளீஸ் எனக்காக பொறுத்துக்கோ! அவளுக்கு அப்பா பெயர் கெட்டுப்போயிடுமே என்று பயம். நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன்.. யாரும் கண்டபடி பேசக்கூடாது என்று எவ்வளவோ முயற்சி செய்தேன்.. டேவிட் அம்மா டேவிட்கிட்ட சொல்லியிருப்பார். டேவிட் நம்ம ட்ரூப்பில் இருக்கும் கமலா அக்காகிட்ட சொல்லியிருப்பான். அவுங்க இனிமேல் என்னைப் பார்க்கும்போது கேலி பேசுறேன் என்று ஜாடையாக “நானும் மாமாவும் இப்பகூட மொட்டை மாடியில் தனியாக இருந்ததேயில்லை.” என்று சொல்லுவாங்க!
நான் உன்கூட ஊர் சுத்துறேன் என்று அம்மா தெளிவாக நூறு சதவிதம் நம்புறாங்க. டேவிட் இப்ப கன்ஃபர்மே பண்ணிருப்பான் எனக்கு டிவின்ஸ்தான் பிறக்கப் போகுதுன்னு! சிரிக்காதே கார்த்திக். திஸ் இஸ் நாட் எ ஜோக்! ”
“நாளைக்கே என் ஃபேஸ்புக்கில் வாழ்த்துகள் நிரம்பி வழிந்தாலும் நான் அமைதியாக அதுக்கெல்லாம் லைக் போடணும்! இந்தப் பிரச்சனை எல்லாம் உன்னால்தான் வந்தது.. என்ன திரும்ப சிரிக்கிற மாதிரி தெரியுது? ம்? என்னால்தான் என்று சொல்றியா? நான் பிரசாத்திற்கு கால் செய்ததால்தான் என்று சொல்றியா? நானும் எல்லாத்தையும் மனதில் வைத்துக்கிட்டு மறந்திடணும் என்று பார்க்கிறேன். நீ விடமாட்டிகிற! யூ.. யூ அரெகென்ட். ஸ்டபெர்ன் அன்டாலரபிள் டெவிள்! ”
“ஸ்ருதி நீ ஒன்று மறந்திட்ட.. ”
“என்ன? ஆமாம் இடியட் மறந்திட்டேன்.” என்று சிடுசிடுத்தவளிடம் ,
“நீ என்கூடப் பேசிட்ட. என்னைத்தொட்டு பேசிட்ட. அழுதுகிட்டே பேசுற.. ஆனால் என்னை தொட்டுக்கிட்டேதான்
பேசுற.. கோபத்தால் என்னிடம் பத்து நிமிஷத்துக்கு மேல் பேசின. நாலு லைனுக்கு மேல் பேசிட்டடி! மனதில் இருப்பதைக் கொட்டிட்டடி!
உன் கோபம் மறந்து நீ பேச ஒரு மாதம் ஆகியிருக்கு. ஆக உனக்கு அதிகமாக கோபம் வரும் ஏரியாவைத் தொட்டால்தான் உன் மனதில் இருப்பது வெளியே அருவி மாதிரி கொட்டுது! பேசிப்பார்த்தேன் ஒன்றும் நடக்கலை. சிரிக்க வைத்துப் பார்த்தேன். ஒண்ணும் பெரிதாக மாற்றம் இல்லை உன்னிடத்தில். பாட வைத்து கைத்தட்டல் வாங்கிக் கொடுத்தேன். ஒரு தாங்க்ஸோடு நின்னுக்கிட்ட.. ஆனால் இதை முதலில் நான் செய்திருக்கணும். மரத்தின் வேரில் தண்ணீர் பாய்ச்சாமல் இலையில் கனியில் பூவில் தண்ணீர் பாய்ச்சினேனே.. அடடா! உன்னை நாலு லைன் பேச வைக்க நான் பட்டபாடு இருக்கே.. உன் அப்பா டில்லிக்கு வந்திட்டார்தானே? இனி உன் அப்பாவை ஃபிளைட் பிடித்து வரச்சொல்லப்போறேன். அவசரமாக உங்க பொண்ணை கல்யாணம் பண்ணணும். சீக்கிரம் வாங்க என்று மெசேஜ் பண்ணவா? ”
கார்த்திக் பேசி முடித்தபிறகுதான் ஸ்ருதி தான் அழுதுகொண்டே கோபப்படுவதும். சிரித்துக்கொண்டே அவனை அடிப்பதும். பேசிக்கொண்டே மனதில் இருப்பதை கொட்டுவதையும் உணர்ந்தாள்.
பத்து பர்சன்ட் பத்தடி தள்ளி விலகிப்போனது.
Comments are closed here.