நல்லதோர் வீணை செய்தேன் 7 & 8
7894
0
வீணை 7:
ஆலம் கரைத்து வரவேற்க… மணமக்களை அழைத்து வந்து அமரச்செய்து பால் பழம் கொடுக்க… அதை மறுத்த ஆர்னவ் செவ்வந்தியின் அருகிலிருந்து எழுந்தவன் “ மாம் எனக்கு வெளில கொஞ்சம் வேலையிருக்கு” – நான் அவசரமாக செல்ல வேண்டுமென்றவன் யார் பதிலையும் எதிர்பாராமல் விடு விடுவென்று எழுந்து நடந்து தன் காரை எடுத்துக்கொண்டு எமி வீட்டிற்கு சென்றான்…
ஆர்னவ் எழுந்து சென்றிட செவ்வந்தி அவனையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தாள்….
தான் இருப்பது மாப்பிளை கோலம் என மறந்தவனாய் மனதில் அவளை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையே ஆட்கொண்டது…. எமியின் வீட்டை அடைந்தவன் தயக்கத்தோடவே காரைவிட்டு இறங்க… ஆர்னவின் கார் வந்து நின்ற சத்தத்தை உணர்ந்தவள் தனது கஷ்டமருடன் பிஸியாக இருந்தவள் அவனை விளக்கிவிட்டு எழுந்து அவசரமாக உடையணிந்து பின் வாசல் வழியாக வெளியேற்ற எண்ணி பின்பு அவனை நிறுத்தி அவன் பரிசிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேற்றினாள்….
அவன் சென்று விட்டதை உறுதிசெய்த பின்பு அரக்கப்பறக்க உடையணிந்து வேகமாக கதவை திறக்கும் தன் மகளைப் பார்த்த சுமித்ராவின் புருவம் யோசனையில் சுருங்கியது…. வாசலில் மணமகன் கோலத்தில் பட்டு வேஷ்டி சட்டையுடன் நின்றிருந்த ஆர்னவைக் கண்டு வாயை பிளந்தவள் “ டார்லிங்… சோ ஸ்வீட் என்ன இவ்ளோ காலையுளையே”பலக் கனவுடன் இருந்த எமியை நாம் ஏமாற்றி விட்டோம் இதை அவள் அறியும் நேரம் எப்படி ஏற்க கூடும் அவளை நினைத்து வருத்தம் கொண்டான் ஆர்னவ்…
வந்தவனை கட்டியணைத்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடி அவன் தோலில் சாய இவை அனைத்தையும் உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்த சுமித்ராவை எமி தன் பார்வையால் உள்ளே செல்லுமாறு செய்கை செய்ய… சுமித்ரா பெரு மூச்சு ஒன்றை விடுவித்து உள்ளே சென்றார்…
ஆர்னவை அனைத்தப்படியே உள்ளே அழைத்து வந்தவள் “ சிட் டார்லிங் நான் உனக்கு காபி கொண்டுவறேன்” என்று எழுந்தவளை தடுத்து அமரசெய்தவன் “ அதுலாம் வேண்டாம் ஹனி உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…. அதுக்குத்தான் நான் உன்னைய பாக்க வந்தது”- ஆர்னவ் அவள் கையை பிடித்து பேச அதில் உருகி குழைந்தவள் அவன் மீதே சாய்ந்து அவன் மடியில் அமர்ந்து தன் இருகையால் அவனை சுற்றி வளைத்து“ ஹம் தெரியும் டார்லிங் நல்லா அழகா பட்டு வேஷ்டில இப்படி உன்ன காலையிலையே பாக்குறது எனக்கு நம்ப கல்யாணம் நியாபகம் வருது…
எப்ப நம்ப கல்யாணம் பன்னிக்கலாம்” அவள் இந்த கேள்வி தன்னிடம் கேட்டதும் அவளிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டு
எழுந்து நின்று அவளைப் பார்க்காமல் “ இது விஷயமாதான் உன்கிட்ட நான் பேச வந்தேன்..
எனக்கு!!!
உனக்கு- குதுகலத்தோடும் ஆர்வதோடும் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் மழை சாரலாய் நெஞ்சம் குளிர்ந்தது…
“ எனக்கு…. எனக்கு கல்யாணம் ஆகிடிச்சி”… இதை சற்றும் எதிர் பாக்காதவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க சற்று நேரமுன் மழை சாரலில் நினைந்த உள்ளம் இப்போது உலைகொள்ளாய் மாற…
தன் காதுகளை நம்ப முடியாமல் “ வாட் … வாட் தி ஹெல் யூ சைட்???” நம்பமுடியாமல் ஆர்னவைப் பார்க்க…
அவனோ “ எஸ்…. ஹனி ஐ காட் மேரிட் இன் கம்பெல்ஷன்” தன் விருப்பத்திற்கு மாறாக என்று அவன் கூறி முடிக்கும் போது ஆர்னவின் சட்டை காலர் எமியின் இரு கரங்களில் அகப்பட்டது…. அவளைப் பார்த்தவனுக்கு நன்கு தெரிந்தது கோபத்தின் ரேகைகள் அவள் முகத்தை சுமந்திருப்பதென்று…
ஆர்னவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தி ஒரு புரமிருந்தாலும் அவன் சொத்துக்களை தன்னால் அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என்பதும்…. இப்பெரும் ஏமாற்றத்தை அவள் எதிர் பாக்கவில்லை…. அவன் சொத்துக்களை பிரதானமாக எண்ணி அவள் சாதிக்க நினைத்ததெல்லாம் தவுடிப் பொடியாக தன் ஏமாற்றத்தை தங்கி கொள்ளவே முடியவில்லை அவளால்…
எமி தன்னை விரும்பவில்லை தன் பணத்தை தான் என்பதை ஆர்னவின் காதல் அவன் யோசிக்கும் திறனை மறைத்திருந்தது….
ஆக்ரோஷமாக எழுந்தவள் “ ஆ… ஆரி யூ சீட்டர்…. ஐ டிடன்ட் எஸ்பேக்ட் பிரௌம் டிஸ் யூ… என்னைய ஏமாதிட்ட…. யூ டாமிட்” அவன் சட்டையை கொத்தாக பற்றியவள் பொய் கண்ணீர் விட்டப்படி அவன் தோலில் சாய்ந்து கதற…. அவள் வேசத்தை நம்பியவன் அவளின் வேதனையை போக்க தன் தோலோடு அணைத்தான்…
“ ப்ளீஸ் ஹனி கண்ட்ரோல் யூர்செல்ப்…. ஐ வில் பி தேர்” என்றவனைப் பார்த்து “ அப்பவா… நம்ப இப்பையே போய் கல்யாணம் பண்ணிக்கலாம்
தென் …. தென் எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சிரும்” வெறி பிடித்தவள் போல் பேசியதையே திரும்ப திரும்ப பேசி… உள்ளிருக்கும் அறைக்கு விறைந்தவள் கையோடு கிறிஸ்துவ முறைப்படி சிலுவை பொறிகபட்டிருக்கும் பொன் தாலி சங்கிலியை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்து கட்ட சொல்ல….
அவனுக்கு புரிந்தது இந்த மாங்கல்யத்தை அவள் தங்களின் திருமணத்திற்காக வாங்கிருக்கிறாளென்று… அதைப் பார்த்து சகிக்க முடியாமல் தன் காதலியின் ஆசையை ஒரு காதலனாக இருந்து நிறைவேற்ற முடியாமல் போனதை நினைத்து சுயப்பட்சாதபம் எழ… அவன் கோபம் மீண்டும் செவ்வந்தியின் மீது திரும்பியது…
இதற்கெல்லாம் காரணம் அவள்தானே என நினைத்தவன் அவளை சமாதானம் செய்ய மீண்டும் அவனை அழைத்து விடாப்பிடியாக
“ஆர்னவ் …. லேட் கம் வித் மீ மேன்…. இந்த தாலிய என் கழுத்துல கட்டு மேன்… என்ன யோசிக்குற அப்போ… நான் உனக்கு முக்கியமில்ல…. அவ அந்த படிக்காடுத்தான் உனக்கு முக்கியமா” எமி ஆர்னவின் உலுக்கி கேட்க
செய்வதறியாது நின்றிருந்த ஆர்னவ் “ஹனி…. லூசு மாதிரி பேசாத… நான்தான் உன்கிட்ட சொன்னேன்ல எங்க அம்மாவ மீறி என்னால எதும் பண்ண முடியாது…. லேட் வெய்ட் பார் டிவோர்ஸ்”
ஆர்னவைப் பார்த்துக் கொண்டிருந்த எமி “ எப்போ…. ஆரி டார்லிங் அவ கூட சேர்ந்து குடும்ப நடத்துன பிறகா”
“வில்… ஜஸ்ட் ஷுட் அப் எமி…. நான் ஏற்கனவே சொன்னதுதான் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்… பட் அதுக்கான நேரம் இது இல்ல சரியா… இப்போ நான் அல்ரெடி மேரிட்…. லீகல் போர்மலடிஸ் நடந்துகிட்டு இருக்கு” நாம் காத்திருப்போம் என்று கூறியவன் “ பாய்…. ஹனி டேக் கேர்”… என்றவனின் கையை பிடித்து இழுத்து அவன் இதழில் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்க… அவனும் மறுபேச்சின்றி அவளின் ஆழ்ந்த முத்தத்தில் தன்னை மறந்தவனாய் புதைந்த நேரம்
அவன் அலைபேசி சிணுங்கியது அதனை எடுத்து பார்த்தவன் தன் அன்னை என்று தெரிய “ லேட் வி மீட் சூன்” என்றபடி அலைபேசியை உயிர்பித்துக்கொண்டே “ எஸ் மாம் ஆன் தி வே” என்க மறுபக்கத்தில் இருக்கும் அவனது அன்னையோ “எங்க ஆரி போன…. இவ்ளோ நேரம் எங்க இருக்க…. இன்னக்கி உனக்கு என்னானவது நியாபகம் இருக்கா”
தன் அன்னையின் கேள்வியில் மனம் உலைப்போல் கொதிக்க …. தன் வாழ்க்கை தன்னை மீறி தடம்புரண்ட நாள் அவன் சம்மதம் சிறிதுமின்றி நடந்த திருமணம் அல்லவா…. அதை எப்படி மறக்க முடியும் என்றென்னியவன் “வொய் நாட் மாம்….. இன்னக்கி எனக்கு என்ன நாளுன்னு நியாபகம் இருக்கு… நான் உங்ககிட்ட சொன்னதுதான் உங்க விருப்பம்” என கூறியவன் தொடர்பை துண்டித்து அலைபேசியை தொப்பென்று இருக்கையில் வீசி எறிந்தான்….
“எமி… இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க…. இதுக்குத்தான் ஒருத்தன மட்டுமே நம்பி வழக்கூடாதுன்னு சொல்றது…. உன் தகுதி என்னனு அவனுக்கு தெரியும் அதான் இப்படி உன்ன நிற்கதியா விட்டுட்டான்…. நம்ப ஒரு கூத்தாடிமா…. நம்ப தகுதிக்கு மட்டும் அசப்படனும்… நான் முதலிருந்தே சொன்னேன் நீ கேட்கள ” தன் தாயிடமிருந்து எதிர்பாராத பதிலை கேட்டவள் கண்களிள் கனல் பறக்க
“ம்மா… அந்த வேலைக்காரிய விட நான் எதுல கொரஞ்சிட்டேன் சொல்லுங்க ம்மா…. போயும் போயும் கேவலமான ஒரு வேலைக்காரி கிட்ட உன் பொண்ணு தோத்துட்டா ம்மா…. தோத்துட்டா” கண்களில் கண்ணீர் ஆறாக பெறுக உணர்ச்சிவசப்பட்டு பேசும் மகளைப் பார்க்க கஷ்டமாக இருந்தாலும்…. பெரிய பெரிய அரங்கில் நடனமாடுவதும் , விலைமாந்தராக போவதும் வயிற்று பிழைப்பிற்காக ஆரம்பித்த தொழில் நாளடைவில் அதே நிரந்தர தொழிலாகவே மாறியது….தங்களின் பொருளாதார நிலை மட்டும் உயர்ந்தது ஒழிய தங்களின் நிலை என்றும் உயராது என்ற நிதர்சனம் புரிந்தாலும் மகளின் பிடிவாதம் நல்லதில்லை என்றே தோன்றியது ….
“விடமாட்டேன் மாம்…. இந்த எமி யாருனு காட்றேன்” சபதம் விடுத்தவள் ஆர்னவின் மனைவி செவ்வந்தியே ஜென்ம எதிரியாகி போனாள் அவள் பார்வையில்….
**********************************************
பால் பழத்தை உண்ண மறுத்து சென்றவனின் நினைவாகவே செவ்வந்தி கிச்சனில் வேலை பார்த்துக்கொண்டிருக்க புது பெண் என்பதற்குரிய எந்த வெட்கமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவளை அல்லியின் பார்வைலிருந்து தவறவில்லை “ அக்கா… இப்போ எதுக்கு நீ இந்த வேலையெல்லாம் செய்யுற… அதான் நான் இருக்கேன்ல விடு நீ மாமா ரூம்க்கு போ” என்க
செவ்வந்தி அல்லியைப் பார்க்க அவளின் மனதினை படித்தவளாய் “ அக்கா எதையும் உடனே எதிர் பாக்காத போக … போக சரியாகிடும்… சரியா உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை… உன் மேல ஆசை இருக்க போய்த்தான மாமா உன்ன மண்டபத்தில வச்சி எல்லார் முன்னாடியும்
என்…. பொண்டாடின்னு சொலிச்சி அது வெறும் வாய் வார்த்தையா எனக்கு தெரில்ல” பெரிய மனுஷி தனமாய் பேசும் அல்லியை கண்டு “ ஹ்ம்ம்… மேடம் எனக்குலாம் அட்வைஸ் பண்றளவுக்கு வளந்துட்டீங்க” செவ்வந்தி கூறிய பிறகுதான் தன் பெரிய மனுஷி தனமான பேச்சு தெரியவர அசடு வழிந்து நின்றாள்.. “ நீ சொன்னது உண்மைதான் அல்லி… அவருக்குள்ள அப்பப்போ குரங்கு தனமான குணம் எட்டிப் பார்த்தாலும் அவருக்கும் ஒரு பூ மனசிருக்கு… மித்ரா பெரியம்மா பேட்ச கேட்டு நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாலும்…
அவரு சபைக்கு முன்னாடி என் பொண்டாடின்னு சொல்றப்போ ஒரு நம்பிக்கை வந்துச்சு” கண்ணில் காதலோடு பேசும் செவ்வந்தியை ஆச்சரியமாக பார்த்த அல்லி “ நம்பிக்கை வந்திச்சா…. இல்ல காதல் அதிகமாட்சா” அவளை நக்கல் செய்யா
செவ்வந்தி வெட்கப்பட்டுக் கொண்டு “ போடி…. அதுலாம் எதும் வரல…. அப்படியே வந்தாலும் என்ன என் புருஷன் தானே”
“அஹ்ஹா… என்ன …. என்ன சொன்ன எனக்கு சரியா கேட்கள அக்கா” என்றவளைப் பார்த்து “ போடி நான் தூங்க போறேன்”தன்னிடமிருந்து தப்பிக்க நினைத்தவளை கையோடு இழுத்துவைத்து “ ஹ்ம்ம் அங்க இல்ல… மாமா ரூம்க்கு” செவ்வந்தியிடன் பேச்சு கொடுத்தபடி அல்லி அவள் கையில் பால் சொம்பை திணிக்க….
அவளோ கலவர முகத்துடன் “ ஹக்கும்… நான் போகமாட்டேன்” வலது புறமுமாகவும் இடது புறமாகவும் தலையாட்டியவள் தனது மறுப்பை தெரிவிக்க…
“ அப்போ சரி நான் போய் பெரியம்மா கிட்ட சொலிடறேன்” அல்லி மித்ராவிடம் கூறிவிடுகிறேன் என்று மிரட்டியவாறு முன்னே செல்ல அவளை தடுத்த செவ்வந்தி “ ஹேய் வேண்டாம் டி பாவும் டி பெரியம்மா…. அசந்து தூங்குவாங்க எழுப்பாத…. இப்ப என்ன நான் அவர் ரூம்க்கு போனும் அவ்வளவு தானே சரி போறேன் டி பெரியம்மா கிட்ட சொல்லிடாத” என்று பத்து முறையாவது அவளிடம் கேட்டு உறுதி செய்த பின்பே ஆர்னவ் அறைக்கு சென்றால் செவ்வந்தி…
************************************
வீணை 8:
தன்னையே நொந்துகொண்டவன் திருமணமே பிடிக்காமல் நடந்தது… இதில் முதலிரவு ஒன்றுதான் கேடு என்றெண்ணி காரை விரைவாக கிளப்பிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்….
தன் ஆறைக்குள் நுழைந்த மாத்திரம் அவன் முகத்தில் டன் டன்னாக கோபத்தின் ரேகைகள் குடிக்கொண்டது…. அவனின் மனைவி அவன் அறையில் அதுவும் அவன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்…
கதவு திறக்கப்படுவதை உணர்ந்த செவ்வந்தி பயத்தில் தானாக எழுந்து நின்றாள்… அவள் அங்கு நிற்பதை ஒரு பொருட்டாக கண்டு கொள்ளதவன் கட்டிலில் வந்து அமர்ந்தவனின் கோபம் எக்கு தப்பாக ஏகுறியது ‘எவ்ளோ நெஞ்சழுதம் இருந்தா அதுவும் என் ரூம்ல என்னோட பெட்ல ஒக்காருவா… இவளுக்குலாம் என்ன தகுதி இருக்கு அதுவும் என்னோட மனைவியா’ அந்த நினைவே அவனுக்கு கசந்தது மனம் ஒரு நிலையில்லாமல் தாறுமாறாக யோசித்துக் கொண்டிருக்க…
செவ்வந்தி தன் கணவனின் கோபம் தனிய மட்டும் காத்திருந்தவள்….. மேலும் நேரம் சென்றுக்கோண்டிருக்க அவள் கணவனோ அவளை அழைப்பதாய் தெரியவில்லை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் தன் நினைவில் இருக்கும் கணவனை ஏறெடுத்துப் பார்த்தவள்
தன் முழு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ மாமா…. நானா இங்க வரல பெரியம்மா தான்”
அவன் முறைப்பை பரிசாக சேர்த்து வாங்கிக்கொண்டவள் கப்பென்று வாயையும் மூடிக்கொண்டாள்…
“அவுட்… கெட் லாஸ்ட் பிரௌம் ஹியர்”…… என்று ஆர்னவ் கர்ஜிக்க
அதில் மிரண்டவள் “என்…. என்ன மாமா சொன்னிங்க”
மேலும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் “ச்ச… இது கூட தெரியாதா???…
வெளில போனு சொன்னேன்….பட்டிக்காடு பட்டிக்காடு சரியான பட்டிக்காடு…..
ஏய் பட்டிக்காடு அப்புறம் என்ன சொன்ன??? மாமாவா யாரு டி உனக்கு மாமா… இனிமேட்டு மாமானு சொல்லு கூப்பிட வாய் இருக்காது… முன்ன கூப்பிட மாதிரி சார்னு கூப்பிடு இல்ல” என்று மிரட்டியவனை பயத்தோடு பார்த்தவள் மேலும் அங்கு நின்று அவனை எரிச்சல் படுத்த விரும்பாமல் சரி என்று தலையை உருட்டியப்படி அறையை திறந்துக் கொண்டு வெளியே வெளியேறினாள்…
பின்பு யாருக்கும் தெரியாதவாரு சத்தம் செய்யாமல் அடுக்குக்கு சென்றவள் உறக்கத்தை தழுவ முயன்றாள்…
உறக்கம் வர மறுத்தது “காலைல நல்லதான இருந்தாரு… இப்போ என்னாச்சு… மனுஷன் எப்போ எந்த மாதிரி இருக்காருனே தெரியல்ல… ஏன்???” இப்படி!!!
ஏனென்று யோசித்தவளின் மூலையில் மின்னல் வெட்ட அப்போதுதான் கருத்தில் கொண்டாள் தன் கணவன் முகத்தில் இருந்த வித்தியாசத்தை ஹக்கும் முகத்தில் இல்லை அவன் உதட்டில் சிவப்பாக ஏதோ சாயம் போல்….
போல் இல்லை சாயமேதான் ஆனித்தரமாக நம்பியவள் ஆம் பெண்கள் அணியும் உதட்டுச் சாயம் எப்படி தன் கணவனிடத்தில் என்று யோசித்தவளுக்கு விடை தெரியவில்லை…. யோசித்துக்கொண்டே இருந்தவளை நித்ராதேவி சுகமாக தழுவிக்கொள்ள…. அந்த பேதை உள்ளத்திற்கு தெரியவில்லை… தன் கணவன் ராமன் இல்லை கிருஷ்ணனென்று….
*************************************
செவ்வந்தியை ஒருவழியாக ஆர்னவ் அறைக்குத்து மீதம் இருந்த வேலையை செய்ய ஆரம்பித்தாள் அல்லி…. சமையல் கட்டில் அவள் மட்டுமே தனித்திருக்க இந்த தனிமைக்காக நீண்ட நேரம் காத்திருந்த ஆதவ் சமையல் கட்டில் யாருமில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு அல்லியிடம் இன்றாவது தன் காதலை கூறிவிட வேண்டுமென்று எண்ணியவன் பூனைப் போல் பதுங்கி… பதுங்கி கிட்சனை அடைந்தான்….
அங்கு அவன் காதலி நின்றிருந்த கோலத்தைக் கண்டு அவன் இதய துடிப்பு எங்குத் தப்பாக எகிறி தவித்தது….
நீல வண்ண தாவணியில் கொசுவத்தை இழுத்து இடுப்பில் சொருகியப்படி முழங்கால் வரை ஏற்றி அதையும் தூங்கி சுமந்த அவள் இடை அவளிடம் படாத பாடுபட்டது…
வாஷ் பேஷன் அருகில் நின்று பாத்திரங்களை தேயித்துக் கொண்டிருந்தவளை பார்த்த ஆதவ் அவள் இடை அழகில் சொக்கி நிற்க அது மேலும் அவனை போதை ஏற்றும் வகையில் அவள் இடை தாவணி மேலும் சுருண்டு இடைக்கு கீழ் பகுதிக்கு வந்து நின்றது அவன் கண்களுக்கு விருந்தாக அமைந்தது….
செவ்வந்தி அல்லியை வீட்டு வேலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஆதவ் அவள் தேக்கு கட்டையான உடல் அமைப்பிலும் வெகுளிதனமான பேச்சிலும்…. வலியே சென்று உதவும் தன்மை அனைத்திலும் அல்லி அவன் மனதை கவர்ந்தாள்…. எத்தனையோ நகரத்து பெண்களிடம் பழகுபவன்… எத்தனையோ பெண்களை தன் வாழ்வில் சந்தித்திருந்தாலும் அல்லி அவன் கண்களுக்கு புதுமையாக இருந்தாள்…. அவன் மனம் எதிர் பார்த்த அத்தனை குணங்களும் அவளிடம் கொட்டிக் கிடந்ததை உணர்ந்தவன் அவள் வசம் காதல் கொண்டான்… அனைத்திலும் அவன் மனதை அல்லி கவர்ந்தாள்…
அவள் கருப்பு நிறமாக இருந்தாலும் அவன் கண்களுக்கு அவள் பேரழகியாக தெரிந்தாள்… அவளது கலையான முகம் ஆதவ் இதயத்தில் பத்திரமாக பதிந்தது…
அவளின் தேக்கு கட்டை உடம்பில் கருப்பு சந்தனத்தில் குழைந்து எடுத்ததுப் போல் வழ வழப்பான இடை அவனை அன்போடு அழைத்தது…. திரும்பவும் சுற்றி முற்றிப் பார்த்தவன் யாரும் வரும் அரவம் இல்லை என்பதை உறுதி செய்து… அவள் இடையை பற்றும் நோக்கத்தோடு அவளை நெருங்க “ அப்பாடி இன்னக்கி இந்த நாட்டு வெடக் கோழிய விட்டோம் அப்புறம் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்…. இன்னக்கி ஒரே அமுக்கா அமுக்கிற வேண்டியதுதான்” என்றவன் பார்வை வெறியாக மாறி மீண்டும் அவள் இடையில் விழ அது சுருங்கி விரிந்து மேலும் சுருங்கி விரிய அவனது உதவியை நாடி அழைத்துப்பு விடுத்தது…
நடுங்கும் கைகளோடு அவள் இடையை பற்ற செல்லும் நொடி தட தட வென்று வாசலில் மூச்சிரைக்க ஓடி வந்து கொண்டிருந்தான் ஜெயவர்மன்… அவனது ஓசைக்கேட்டு இருவரும் திரும்பி பார்க்க…அதிர்ந்தவள் தனக்கு மிக அருகில் ஆதவைக் கண்டு ரெண்டேட்டுப் பின்னே சென்றாள்…
தன்னை விட்டு பயத்தோடு விலகிய அல்லியை பார்த்த ஆதவ் ஜெயவர்மனை மீது கோபமாக வந்தது அவனைப் பார்த்த படியே“அட கலவரத்துக்கு பொறந்தவனே இந்த நேரம் பாத்துதான் நீ வரனுமா”…
உள்ளே வந்த ஜெயவர்மன் யாரையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை குளிர் சாதன பெட்டியை திறந்து… உள்ளிருக்கும் தண்ணீர் அடைக்கப்பட்ட பாட்டிலை எடுத்தவேன் மூடியை திறந்து மடக்மடக்கென்று தன் தொண்டையில் குளிர்ந்த நீர் இறங்கிய பின்பே தன் நிதானத்திற்கு வந்தான்…
அதுவரை ஆதவையும் அல்லியையும் கண்டு கொள்ளதாவன்… தன்னை அசுவாசப் படுத்திக்கொண்ட பின்பே கவனித்தான் “ ஏய் மச்சான் இந்த நேரத்துல இங்க என்னடா பண்ற”
“இந்த கேள்வியா நான் கேட்கணும்”ஆதவ் மனதில் நினைக்க ஜெயவர்மன் பார்வை அருகில் நின்றுகொண்டிருந்த அல்லியிடம் சென்றது….
“மச்சான் புரிஞ்சிருச்சி… சாரி பார் தி டிஸ்டுர்பன்ஸ் மாமு… நீ கோழிய பதமா புடிச்சு ஜமாய்டா மச்சான்” கொலைவெறியோடு பார்த்த ஆதவ் “ எங்கடா புடிக்க விட்ட” நந்திப்போல் குறுக்கே வந்தவனை மனதில் திட்டி தீர்த்தான்…
ஆதவின் மனநிலை புரிந்தவன் தன்னை சமாலிக்கும் பொருட்டு அல்லியைப் பார்க்க அவளோ அஷ்டக்கோணத்தில் முகம் சுளித்தப்படி அவர்களை கடந்து சென்றாள்..
அவள் முகம் போன திசையை கவனித்த ஆதவ் ஜெயவர்மனை பார்க்க அவன் கீழே வேட்டியில்லாமல் கால்சட்டையுடனும் வெறும் மேல் சட்டையோடு நின்றிருந்த கோலத்தைக் கண்டு “ நான் கோழி புடிக்கறது இருக்கட்டும் நீ என்ன பல தடவ கோழி புடிச்சிதான் கலச்சி போய்ட்டியா…. செம்ம புடியோ வேஷ்டிக் கூட இல்லாம நிக்குற”அதங்கத்துடன் வெளி வந்தது ஆதவின் வார்த்தைகள்…
அவனோ “ சீ….. போங்கள்…. எனக்கு வெட்கமா இருக்கு” இருகையால் முகத்தை மூட ஆதவ் தலையில் அடித்துக்கொண்டு “காலக் கொடுமை…. அடைசீ மூட வேண்டியத முதல மூடுடா.. கருமம்… கருமோ” என்க ஜெயவர்மன் வெடுக்கென்று குளிர் சாதன கீழ் பெட்டியால் தன்னை மறைத்துக் கொண்டான்
“வந்த வேல சிறப்பா முடிஞ்சிதுல …. நீ கிளம்பலாம்” என்றவனின் தோலில் கைவைத்து “ மச்சான் பொறுமைடா…. காதல்ல பொறும வேணும் மச்சி…. கொஞ்சம் பொறுமையா இரு… சரி நான் போயி என் வேலையே கண்டினியுப் பன்றேன்” கரடி மாதிரி வந்து காரியத்தை கெடுத்தது மட்டுமில்லாமல்… இதில் அறிவுரை போதித்து செல்பவனை கொலை வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதவ்…..
சென்றவன் நடை தடைப்பட மீண்டும் ஆதவிடம் வந்தவன் “ மச்சி… ஹேவி ஒர்க் அவுட்…. மச்சி கேக்க மறந்துட்டேன் உன்கிட்ட எஸ்ட்ரா முந்திரி பாக்கெட் இருக்க” அவனை முறைத்த ஆதவிடம் மீண்டும் அவனருகே சென்று “சும்மா சொல்லக்கூடாது மச்சி செம்ம மேட்டர்போ”என்க
மேலும் பொறுக்க முடியாத ஆதவ் “ எடு அந்த செருப்ப”- ஆதவ் கூறி முடிக்கும் முன்பே ஜெயவர்மன் தன் அறையை நோக்கி ஓடிச்சென்று கதவை அடைத்துக்கொண்டான் “ என்னடா சின்னப் புள்ள தனமா இருக்கு… அவன் அவன் படையால் போட்டு பிரியாணி தீங்குறானே… கோழி புடிக்க வந்த எனக்கு ஒரு குல்பி ஐஸ் கூட இல்லாம பண்ணிட்டீங்களேடா….ஹோ ஹோ.. மம்மி” கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத வேதனையில் வடிவேலு பாணியில் புலம்பி விட்டு சென்றுவிட்டான் ஆதவ் வர்மன் தனது கட்டழகி காதலியின் ஏமாற்றத்தில்….
வீணை மீட்டும்…
Comments are closed here.