Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

நல்லதோர் வீணை செய்தேன் – Teaser

நடு இரவில் கண்களை கூச செய்யும் வீதி விளக்கின் துணையோடு மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டும் பரப்பர்ப்பாக இயங்கும் மும்பை மாநகர் அந்த இரவு நேரத்தில் எதிர்மறையாக வெறிச்சோடி காணப்படும் வேளையில் துளிக்கூட கண்ணை  சிமிட்டாமல் தன் கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்னவின் கை கடிகாரம் மணி ஒன்று என  காட்ட  தன் வேலையை முடித்துக் கொண்டு எழுந்தவன்… வாட்ச் மேனிடம் கூறிவிட்டு….

 

அந்தேரியில் இருக்கும் தனது வீட்டிற்கு பயணப்பட்டான் ஆர்னவ்….

வள்ளி அக்கா நீங்க போயி படுங்க அவரு வந்த பிறகு…. அவருக்கு சாப்பாடு போடணும்… அப்பறம் தான் தூங்க போவேன் நீங்க போங்க ” என கூறிய செவ்வந்தியை அதிசயமாக பார்த்த வள்ளியின் மனதில் இருந்த ஒரே பிராத்தனை செவ்வந்தியின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று…

 

இவ்வளவு அருமையான பெண்ணை வேண்டுமென காயப்படுத்தும் ஆர்னவின் குணத்திற்கும் செவ்வந்தியின் பொறுமைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது

 

இருந்தும் கணவனின் சூடு சொற்களை தாங்கிக்கொண்டு அவனுக்காகவே அக்கறையுடனும் அன்புடனும் முகம் சுளிக்காமல் மனைவியின் கடமை செய்யும் செவ்வந்திப் போல் மனைவி அமைவது இறைவனின் வரும்

 

அந்த வரத்தை இப்படி போற்றாமல் அவளது அன்பை நாளுக்கு நாள் சோதித்து காலால் எட்டு உதைக்கும் ஆர்னவ் மீது வள்ளிக்கே கோபம் வந்து…

 

வள்ளி சென்ற சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ஆர்னவ்… கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்து தன் அறைக்கு சென்றுக் கொண்டிருக்க அவனை தடுத்து நிறுத்தியவளாய் “ எங்… ஏங்க…கொஞ்சம் நில்லுங்க….. அது… வந்..  வந்து சாப்பிட்டு போங்க” தயக்கத்தோடும் பயத்தோடும் அவள் வார்த்தைகள் திக்கி திணறி ஒருவாறு வெளியே வர

 

ஒரு நொடி நின்று அவளை தீப் பார்வை பார்த்தவன்  “ நான் சாப்டாச்சி” என்றதோடு மட்டும் நில்லாமல் காலையில் நடந்த நிகழ்வை நினைத்தவனாய் அவளை வருத்துவதற்கே “ இப்படி நடிக்க வேண்டிய அவசியம் உனக்கு இல்ல…  ஏன் இந்த பொய்யான நடிப்பு…  ஏதோ நான் சாப்பிடாம நீ அப்படியே பட்டினி கிடக்குற மாதிரி ஸீன் போட வேண்டியது” மனதில் எரிந்துக் கொண்டிருந்த பழிவாங்கும் தீ அவளை சந்தர்ப்பம் பார்த்து வார்த்தைகளை பானம் போல் எய்தினான்…

 

இங்கு நடப்பதை எல்லாம் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த வள்ளிக்கு கோபமும் அதே  சமயம் ஆர்னவின் அறியாமையை எண்ணி மனம் பரித்தவித்தது…

 

ஆர்னவிற்காக காத்திருந்தவள்…. அவன் உணவு வேண்டாம் என்று  சென்று விட பின்பு அவளும் உணவுண்ண பிடிக்காமல் அனைத்தையும் எடுத்து எப்போதும் போல் குளிர் சாதன பெட்டிக்குள் அடுக்கினால்…  அவள் ஆர்னவுடன் மும்பை வந்த நாள் முதல் இன்று வரை இது பழகியும் போனதன்று…

 

செவ்வந்தியை தொடர்ந்து வந்த வள்ளி “ பாப்பா அவரப் பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பண்றியே… கொஞ்சம் சாப்பிட்டு படு பாப்பா” வள்ளியைப் பார்த்து சிரித்த செவ்வந்தி “ இல்லம்மா எனக்கு பசியில்ல… அதைவிட அவரும் சாப்பிடல்னு எனக்கு தெரியும்

 

அவரோட கண்ணுலையே தெரிஞ்சிது அவரு பொய் சொல்றாருன்னு…அவருக்கு என்மேல இன்னும் கோபம் போகல போல இருக்கட்டும்மா மதியம் சாப்பிட்டதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு… நீங்க போய் படுங்கம்மா… நான் நேரத்தொட ரூம்க்கு போறேன் அப்றம் அவரு கோபப் படுவாறு” கண்ணை சிமிட்டி தன் மனதின் வருத்தத்தை முழுவதும்  உதட்டின் சிரிப்புக்குள் மறைத்தவளாய் கணவனின் தேவையை பூர்த்தி செய்ய விரைந்து ஓடினாள்…

 

அவர் இருவர்களுக்குள்ளும் எழுத்தப் பாடாத சட்டம் ஒன்று இருந்தது என்னதான் கணவன் காலையில் முகம் சுழித்தாலும் இரவு வேளையில் பெண்ணவள் மஞ்சத்தின் மேல் பூவாய் மாற  அதை நுகர்ந்து  தேன்னுன்னும் வண்டாய் ஆனவன் அவளுடன் உண்டாகும் ஊடலை ஏற்பான் வெற்றி களிப்போடு!!!

 

கணவன் என்னதான் செய்தாலும் அதை மறந்து அவன் தேவையை நாடி பின்னே செல்லும் செவ்வந்தியின் அன்பு வள்ளியை வியக்க வைத்து பெருமிதமும் கொண்டது….

 

தங்களின் அறைக்கு வந்தவள் குளியல் அறையில் நீர் விழும் சத்தம் வர செவ்வந்தி தன் படுக்கை விரிப்பை கீழே விரித்து அவனுக்காக காதிருக்கலானால்…

 

அவளுள் பல கேள்வி…. காலையில் சுடுதண்ணி முகத்தில் கொட்டியதுப் போல் தன்னை பார்த்து  விலகும் கணவன் இரவானதும் தன்னை நாடி வரும் விந்தை புதிராகவே இருந்தது….

 

அவள் எண்ணங்களை கலைக்கும் விதமாய் ஆர்னவ் தன்னை சுத்தப் படுத்திக்கொண்டு கட்டிலில் வந்து படுத்தவன் தன் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தான்…

 

செவ்வந்தி அவன் அழப்பிற்காக காத்திருந்தாள்… வீட்டில் நேரத்தோடு எழுந்து வேலை செய்ய வேண்டும் இது ஆர்னவின் கட்டளை…அவன் கட்டளைக்கு இணங்க எழுந்து வேலை செய்பவளுக்கு உடல் அசதியில் தூக்கம்  கண்களை சுழட்டியது… இருந்தும் அவன் அழைக்க வில்லை என உறுதி செய்தவள் படுக்கையில் சரிந்து கண்களை மூடினாள்…

 

படுத்த நிமிடம் தூங்கி விட தன்னை யாரோ உலுக்கி எழுப்பவதுப் போலிருக்கே லேசாக கண்ணை திறந்து பார்த்தவள் தன் கணவன் தான் என உணர்ந்தவள் திடுதிப்பென்று எழுந்து அமர்ந்து அவனைப் பார்த்தால்….

 

அவனோ  அடக்கமட்ட கோபத்தில் “ஏண்டி நானா வந்து உன்கிட்ட கெஞ்சனுமா… நானா வந்து உன்ன வற்புறுத்தி கூப்பிடனும் அதுக்குத்தான பிளான் பண்ற….

 

எத்தனை நாள் ஆசடி உனக்கு நான் உன் காலடியில் விழனும்னு” அவன் எதற்கு இத்தனை கோபம் படுகிறான் என்பது முதலில் புரியாமல் இருந்தாலும் பின்பு அவன் கோபத்தை புரிந்தவளாக மனதில் சிரித்துக் கொண்டாள்…

 

இருந்தும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் “இல்ல நீங்க போன் பாத்துட்டு இருந்திங்க சார்… அதுனாலதான்…

 

“ நான் என்ன பண்ணிட்டு இருந்த உனக்கென்ன… ஒரு மனைவியா உன்னோட கடமையை  நீ செய்யணும்… இதுகுல்லாம் நான் உன்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்கணும்னு அவசியமில்லை…

 

காசு விட்டேரிஞ்சா போதும் எவ கூட வேணாலும் நான் இருப்பேன்… ஏன்னா நான் ஆம்பலடி” அவன் பேச்சு செவ்வந்திக்கு குமட்டிக் கொண்டு வந்தது இருந்தும் அவள் வெளிகட்டிக் கொள்ளாமல் அவன் மெத்தை விரிப்பில் எழுந்து அமர்ந்தாள்

 

அவள் அமர்ந்ததுதான் தாமதமென்று அவளை தன்னோடு இழுத்து சரித்தவன் “இது நல்ல பிள்ளைக்கு அழகு” இனிமேல் நான் உன்னை அழைத்துக் கொண்டு இருக்கமாட்டேன் எனது தேவையை உணர்ந்து பூர்த்தி செய்ய கற்றுக்கொள் ஒரு நல்ல மனவியாக என்றான் தான் கணவன் என்னும் பொறுப்பை மறந்தவனாய்…

 

அதன் பின் அவள் அவன் கையில் மாட்டியா புறா குஞ்சிப்போல் ஆகிவிட அவள் இதழை முரட்டுத்தனமாக சிறையெடுத்து… வன்மையாக அவளுள் புதைந்தான்… அவள் அங்கங்கள் அவனிடம் ரணப்பட பல்லைக் கடித்துக்கொண்டு வலியை பொருத்துக் கொண்டு பெரும் போராட்டத் துடன் தன்னவனின் செயலுக்கு இடம் கொடுக்க கண்ணீர் கரை கட்டும் வரை அவன் முரட்டு தனத்தில் திண்டாடி போனால் செவ்வந்தி….

 

விடியும் வேளையில் ஆர்னவ் உறங்கி விட … கண்ணீர் கரையோடு தன் படுக்கைக்கு வந்து விழுந்தவளால் சொல்ல முடியாத உடல் வலி அவள் அங்கங்களில் தன்னவனின் பலதரப்பட்ட பல் தடங்கல்….

 

வீணை மீட்டும்….
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Chandramani says:

  Episode 12?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   Hi Chandramini, She is not writing here anymore…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Chan says:

  How to read ur episode 12


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sujatha Ashokan says:

  Epi 12 link kodunga


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sujatha Ashokan says:

  Ep 12 let no kodunga


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Siva rangani says:

  Sis story link koduinga

error: Content is protected !!