நிழல்நிலவு – 47
7584
31
அத்தியாயம் – 47
‘காரில் எதை வைத்திருந்தான்? அல்லது… யாரை? பிரபஸருக்கு ஏதேனும்… இல்லை… இருக்காது… அப்படி எதுவும் நடந்திருக்காது. நடந்திருக்க முடியாது’ – மனம் பதைபதைத்து. மேலே சிந்திக்க கூட அச்சமாக இருந்தது. திகைப்பும் அதிர்ச்சியுமாக அவனை வெறித்துப்பார்த்தாள் மிருதுளா.
அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. வெகு அமர்த்தலாக அவளிடம் நெருங்கியவன், “கம்” என்று கூறி அவள் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அவன் மீது ஏதோ கெமிக்கல் வாடை வீசியது. மிருதுளாவிற்கு அடிவயிற்றை பிசைந்தது.
“படு…” – அவளை மெத்தையில் அமரவைத்தபடி கூறியவன், அலமாரியை திறந்து துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி சென்றான்.
“அர்ஜுன்” – இடையிட்ட அவள் குரலில் நின்று திரும்பிப் பார்த்தான்.
“டி.. டிக்கியில எ…என்ன…?” – கேட்டுவிட்டாள். ஆனால் அவன் பதில் சொல்லிவிடக் கூடாதே என்று மனம் அடித்துக் கொண்டது. காரணம், விரும்பத்தகாத பதிலை சொல்லிவிடுவானோ என்கிற பயம்.
மிரண்ட மான் போல் விழிகள் தெறிக்க தன்னை வெறித்து பார்ப்பவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து நோக்கிய அர்ஜுன், “இப்ப எதுவும் இல்ல… தூங்கு” என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
அந்த பதில் அவளுடைய கலவரத்தை இன்னும் அதிகரிக்கத்தான் செய்தது. தலையை சாய்க்கக் கூட தோன்றவில்லை அவளுக்கு.
‘அந்த மனிதர்… அவளுடைய ஆசான்… அவள் மீது அக்கறை கொண்டவர்… அவளுடைய வழிகாட்டி… என்னவாயிற்று அவருக்கு?’ – உள்ளம் பதற, நடுங்கும் உதடுகளை அழுந்த மூடியபடி அசையாமல் அமர்ந்திருந்தாள்.
ஷவரில் சிதறும் குளிர்ந்த நீரில் தலையை கொடுத்தபடி வெகுநேரம் நின்றான் அர்ஜுன். மண்டையோட்டை இறுக்கி பிடிப்பது போலிருந்த அந்த உணர்வு குறையவே இல்லை. நேரம் செல்ல செல்ல அந்த இறுக்கம் தலையிலிருந்து உடல் முழுவதும் பரவுவது போலிருந்தது. சட்டென்று ஷவரை அணைத்துவிட்டு, டவலை எடுத்து சுற்றிக் கொண்டு விருட்டென்று வெளியே வந்தவன், அறையில் கிடந்த மேஜையில் கைகளை ஊன்றி குனிந்து நின்றான். அவன் அடர்ந்த கேசத்திலிருந்து வடிந்த நீர் சொட்டுச்சொட்டாக மேஜையில் விழுந்தது.
அவன் வெளியே வந்த வேகத்தையும் அவனிடம் தெரிந்த மாற்றத்தையும் கவனித்த மிருதுளா சட்டென்று எழுந்து அவனிடம் நெருங்கினாள். அவள் மனம் ஒரே நொடியில் பிரபஸரை மறந்து அவனிடம் திரும்பிவிட்டது.
“என்ன ஆச்சு அர்ஜுன்?”
அவன் தலையை மட்டும் திருப்பி அவள் முகத்தை பார்த்தான்.
“ஆர் யு ஓகே?” – கவலையுடன் கேட்டபடி அவன் தோளை ஆறுதலாக பற்றினாள் மிருதுளா.
“தூங்கலையா?” – கனத்த குரலில் கேட்டபடி நிமிர்ந்து நின்றான்.
மிருதுளா விழித்தாள். பேய் துரத்துவது போல் அடித்துப்பிடித்துக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வந்துவிழுந்தவன் என்ன கேள்வி கேட்கிறான்! பேச்சை மாற்ற விழைகிறானா! – அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் மீண்டும் கேட்டான்.
“ஏன் தூங்கலை?” – அவன் அந்த கேள்வியை கேட்ட போதுதான் அவளுக்கு மீண்டும் பிரபஸரின் நினைவு வந்து, உள்ளத்தை சுருக்கென்று தைத்தது. மெளனமாக அவனைப் பார்த்தாள்.
“ஏதாவது தெரிஞ்சுக்கணுமா?” – அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அவன் எதையோ அவளிடம் கொட்டிவிட நினைக்கிறான். ஆனால் அதை தாங்கும் சக்தி அவளுக்கு இருக்கிறதா?
மிருதுளா யோசிப்பதற்கு முன்பே அவளுடைய தலை குறுக்காக அசைந்தது. “நோ… எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். நா எதையும் தெரிஞ்சுக்க விரும்பல…” – மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
அர்ஜுனின் உதடுகள் அழுந்த மூடின. முகத்தில் உணர்வு குவியல்… கண்களில் வலி… சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்தான்.
“கிவ் மீ பீஸ்” – அமைதியை கொடு என்றான்.
மிருதுளா அவனை புரியாமல் பார்த்தாள்.
விறைத்து நிமிர்ந்த உடல் அவன் உயரத்தை அரை இன்ச் கூட்டிக் காட்ட, “ஹக் மீ” என்றான். .
அவனுடைய கட்டளையிடும் தொனியில் அவள் சற்று தயங்கினாள். காரணம் புரியவில்லை. ஆனால் அவளுடைய தயக்கம் நன்றாகவே புரிந்தது அவனுக்கு. கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன், “யு லவ் மீ ரைட்?” என்றான்.
“அஃப்கோர்ஸ் எஸ்…” – யோசனைக்கு இடமின்றி வேகமாக வெளியே வந்து விழுந்தன வார்த்தைகள்.
“தென் டூ இட்…” – வறண்ட குரலில் கூறினான்.
அவனுடைய நடவடிக்கையும் பேச்சும் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. புரிந்துகொள்ள முயன்று அவனை நிலைத்துப் பார்த்தாள். முகம் பிடிவாதத்துடன் இறுகியிருக்க, கண்களில் மட்டும் ஏதோ கலக்கம் தெரிந்தது. மறுத்துவிடுவாள் என்று எண்ணுகிறானா! – அவள் யோசனையுடன் பார்க்க, கணத்திற்கு கணம் இறுகி கொண்டிருக்கும் தாடையும் முஷ்டிகளும் அவனுடைய டென்ஷனை பறைசாற்ற, ‘ஏன் இப்படி எதிர்மறையாக எண்ணுகிறான்?’ என்று அவன் மீது பரிதாம் கொண்டு, இரண்டடி முன்னே எடுத்துவைத்து வந்து தானாக அவனை அணைத்துக் கொண்டாள்.
கற்சிலையை கட்டிக்கொள்வது போல் இலக்கமில்லாமல் இறுகியிருந்தது அவன் உடல். இதயம் துடிக்கும் வேகத்தில் அவன் நெஞ்சுக்கூடு அதிர்வதை அவளால் உணர முடிந்தது. தன் மெல்லிய விரல்களால் அவன் முதுகை வருடி அவன் கேட்ட அமைதியை அவனுக்கு கொடுக்க முயன்றாள்.
மெல்ல சீர்பட்ட அவன் சுவாசத்தில் தன் முயற்சியின் பலனை உணர்ந்தவளின் மனம் கனிந்தது. தன் மீதான அவனுடைய பாதிப்பு அவள் அடிமனதில் ஓர் இனிய உணர்வை சுரக்கச் செய்தது. தொடர்ந்து அவன் முதுகை வருடி பிடரி முடியை கோதி அவனை ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தாள்.
“மிருதுளா…” – கண்கள் செருக அவள் அணைவில் ஒண்டியபடி அடங்கி நின்றவன் மெல்ல அழைத்தான்.
“ம்ம்ம்” – ‘உம்’ கொட்டினாள்.
“நீ ஒரு விஷயத்தை எப்பவும் மறக்கக் கூடாது”
“எதை?” – முணுமுணுத்தாள்.
“நா என்ன செய்றேனோ அது என்னோட வேலை மட்டும் தான். தட்ஸ் நாட் மீ” என்றபடி அவளை தன் வலிய கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டான்.
அவன் அணைவில் ஒட்டி உரசியபடி தன்னிலை மறந்து மயங்கி நின்றவளுக்கு ஒருகணம் அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை. ஆனால் அந்த நிலை ஒரே கணம் மட்டும் தான். அடுத்த கணம் மின்னல் பளிச்சிட்டது போல் பிரபஸரின் நினைவு அவள் மூளையில் உரைத்தது.
‘எப்படி மறந்தோம்!’ – மனசாட்சி குத்தியது.
அரைகுறையாக இருந்த சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது போல் உணர்ந்தவள் உடனடியாக அவனிடமிருந்து விலக முயன்றாள். அதை எதிர்பார்த்துத்தானோ என்னவோ அவளை இறுக்கமாக தன்னோடு சேர்த்துப் பிடித்திருந்தான் அர்ஜுன்.
அவள் பிடிவாதத்துடன் அவனை உதற முயன்றாள். ஆனால் அவனுடைய முரட்டுப்பிடி மேலும் இறுகியது.
“நோ… யு காண்ட் லீவ் மீ ஹனி… என்னால உன்ன விட முடியாது”
“அர்…ஜு…ன்…” – அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் நெஞ்சை நனைத்தது. சற்று நேரம் அவள் தலையை கோதியபடியே மெளனமாக இருந்தவன் பிறகு, “ப்ராமிஸ் பண்ணியிருக்க. என்னவிட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்க. அதை எப்பவும் மறக்கக் கூடாது” என்றான்.
மிருதுளாவின் மௌன கண்ணீர் பெரும் கேவலாக மாறியது. இப்போது அவன், அவள் முதுகை ஆறுதலாக வருடினான்.
**************
அன்று கல்லூரிக்கு செல்லவே அவளுக்கு கால்கள் கூசின. நெஞ்சுக்கூடு பயத்தில் சில்லிட்டுப்போனது. மனம் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்திருந்தாலும் பிரபஸருக்கு எதுவும் ஆகியிருக்காது என்கிற சின்ன நம்பிக்கையும் மனதின் ஏதோ ஒரு மூலையில் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் இப்போது அவளை கல்லூரிக்கு இழுத்துக்கொண்டு வந்திருந்தது.
அவன் முகத்தை ஏறிட்டுப்பார்க்காமல் காரிலிருந்து இறங்கி கட்டிடத்தை நோக்கி நடந்தவளின் கண்கள் அவர் எங்கேயாவது தென்படுகிறாரா என்று தேடி களைத்தன. செவிகள் அவரைப்பற்றி யாரேனும் பேசுகிறார்களா என்று கூர்ந்து கவனித்தே சோர்ந்து போயின. சாதாரணமாக செல்வது போல் ஆசிரியர்கள் அறை, லைப்ரரி, கேண்டீன் என்று முடிந்த அளவுக்கு எல்லா இடத்திலும் ஒருமுறை வட்டம் அடித்துவிட்டு வகுப்பறையை வந்தடைந்தாள். உள்ளே ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். காலதாமதம் அப்போதுதான் அவளுக்கு உரைத்தது. இடையூருக்கு மன்னிப்புக்கேட்டு உள்ளே சென்று அமர்ந்தாள்.
பிரபஸர் கல்லூரிக்கு வந்ததாகவும் தெரியவில்லை. அவரைப் பற்றி யாரும் பேசியதாகவும் தெரியவில்லை. அவளுடைய எதிர்பார்ப்பு வடிந்தது. மனம் ஏமாற்றத்தில் சோர்ந்து. அவருடைய நினைவுகளிலேயே உழன்று பாடத்தில் கவனம் இல்லாமல் அவள் எங்கோ வெறித்துக் கொண்டிருந்த போது, “மிருதுளா” என்று ஓங்கி ஒலித்த ஆசிரியரின் அவளை நிகழுலகிற்கு மீட்டு வந்தது.
“சார்…” என்றபடி சட்டென்று எழுந்து நின்றாள்.
“பிரின்சிபால் ரூம்லேருந்து உனக்கு கால் வந்திருக்கு. போய்ட்டுவா” என்றார். அப்போதுதான் வாயிலில் பியூன் நின்றுக் கொண்டிருப்பதை கவனித்தாள். ஏன் இந்த அழைப்பு என்று புரியாமல் முதல்வரின் அறைக்கு சென்றாள்.
ஒரு மத்திய வயது பெண்மணி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தாள். மிருதுளா உள்ளே நுழைந்ததும் அளவெடுக்கும் பார்வையை அவள் மீது வீசினாள். துளைக்கும் அந்த பார்வையை சிரமப்பட்டு ஒதுக்கிவிட்டு முதல்வரிடம் கவனத்தை திருப்பி, “கூப்பிட்டீங்களாமே சார்” என்றாள்.
அவரும் உணர்வற்ற சிலை போல் தான் அமர்ந்திருந்தார். அவளை ஏறிட்டு பார்த்து ஒரு நொடி அமைதியாக இருந்தவர், பிறகு, “இவங்க க்ரைம் பிராஞ்ச் சப்-இன்ஸ்பெக்டர். உன்கிட்ட ஏதோ விசாரிக்கணுமாம்” என்றார்.
மிருதுளாவின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது.
“என்கிட்ட… என்ன?” – வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தடுமாறினாள்.
“அதை இங்க பேச முடியாது. வா என்கூட…”
“எங்க!” – அவள் பார்வை அவசரமாக முதல்வரிடம் திரும்பி உதவியை யாசித்தது. அவரோ அசையமறுத்து அமர்ந்திருந்தார்.
“உன்கிட்ட சில கேள்விகள் கேட்கணும். அதுக்கு நீ எங்க ஆபீஸுக்கு வரணும். நீயா வந்தேன்னா அமைதியா போயிடலாம். இல்லன்னா இங்க ஒரு ஸீன் கிரியேட் ஆகும். அதுக்கு பிறகு நான் உன்ன வலுக்கட்டாயமா இழுத்துகிட்டு போக வேண்டியிருக்கும்” – மிகவும் உள்ளடங்கிய குரலில் எச்சரித்தாள். அந்த குரலில் இருந்த அழுத்தம் மிருதுளாவை அச்சுறுத்தியது. முயன்று துணிவை இழுத்துப் பிடித்துக் கொண்டு, “என்ன விஷயம் மேடம்?” என்றாள் பணிவுடன்.
“பிரபஸர் பால்கி மிஸ்ஸிங் ஃப்ரம் எஸ்டர்டே. நீதான் அவரை கடைசியா மீட் பண்ணியிருக்க. இன்பர்மேஷன் போதுமா இல்ல இன்னும் வேணுமா?” – வெடுவெடுத்தாள்.
‘நானா! நான்தான் அவரை பார்க்கவே இல்லையே! ஐயோ அர்ஜுன்…! இதை சொன்னால் அர்ஜுன் மாட்டிக்கொள்வானே!’ – பதட்டத்துடன் எண்ணியவளுக்கு அர்ஜுனின் பெயரை நினைத்த மாத்திரத்திலேயே, ‘அவன் வெளியில் தானே இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான்’ என்கிற தெம்பும் வந்தது.
தைரியமாகவே அந்த பெண்மணியுடன் கிளம்பினாள். வெளியே வரும் பொழுதே அவள் கண்கள் அவனை தேட துவங்கின. வழக்கமான இடத்தில் அவனை காணாமல், கார்பார்க்கிங்கில் பார்வையை சுழலவிட்டவள் திகைத்தாள்.
‘காரை கூட காணவில்லையே! எங்கு போனான்!’ – மனம் பதைபதைக்க சுற்றும் முற்றும் கண்களால் தேடினாள். ‘அர்ஜுன்… ஆர்ஜூன்’ என்று புலம்பியது அவள் உள்ளம்.
அவளை அலட்சியத்துடன் பார்த்த அந்த பெண், “ஏய், என்ன சுத்தி சுத்தி பார்த்துகிட்டு நிக்கிற? ஏறு” என்று அதிகாரமாக கூறியபடி தன் இருசக்கரவாகனத்தை உறும விட்டாள். அச்சத்துடன் அவள் பின்னால் ஏறி அமர்ந்தாள் மிருதுளா.
பிரபஸர் கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது மிருதுளாவின் அலைபேசிதான் என்று தெரிந்த போதே, இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை அர்ஜுன் எதிர்பார்த்தே இருந்தான். ஆனால் அது இவ்வளவு விரைவாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி எதிர்பார்த்திருந்தால் இப்போது என்ன வேலைக்காக அவன் வெளியே சென்றானோ அந்த வேலையை நேற்றே முடித்திருப்பான்.
31 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
OMG!
I am reading this novel since yesterday and finished 47th chapter today-thrills, thrills and thrills! Is that really love in between? Godfather movie like scenes
So much of violence. I live in an area about 7-8 miles from the mafia group of families. I heard that no one except the White Americans will buy a house in that neighborhood, Lots of stories and events. One thing- they never hurt others all dealings are within their group members. This story goes on those line. Unfortunately a commoner-girl வந்து மாட்டிகிட்டா.
Please limit your violent episodes please.
I panic really.
But you are a great writer!
Longlive your talents.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you so much Prasanna. Remaining epis are listed here.
https://www.sahaptham.com/community/serials-by-nithya-karthigan/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi Nithya Super! arrogant heros and azhagana heroeins no words to express i love your novels waiitng for ur next ud.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நித்தி
அடுத்த எப்பி எங்கபா..
சீக்கிரம் வாங்களேன்…
சகாப்தம் அப்டேட்ல
உங்களை காணாம ஏமாந்துப் போறேன்..
மூஞ்சிபுக்ல
சகாப்தம் அப்டேட் வந்துட்டே இருக்கு..
உங்களோடதை காணலையே????
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Waiting for the next episode nithuma….. try to post soon dear….
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அய்யோ என்ன இது அர்ஜுன் எங்க போயிட்ட நீ …மிரு தவிக்கிறாளே… இப்பத்தான் இதுவரை படிச்சி முடிச்சேன்…. இப்படி ஒரு சஸ்பென்ஸ் தாங்கல… செமயான திகில் சம்பவத்தில் மிரு அர்ஜுன் கூடவே இருந்துடேன் மிருவின் தவிப்பைவிட என் தவிப்பும் பயமும் அதிகமாயிட்டு ப்ளீஸ் அர்ஜுன் சீக்கீரம் வாடா…😲😲😳😱😱😱
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
nice ud sis…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அச்சச்சோ மிரு இப்டி மட்டிகிட்டாளே.அர்ஜு அவளை எப்டி காப்பத போற
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Goosebumps vandhuduchu nithu ma….. aju irukan aana ila apadinu than ninaika thonuthu….. prof konnutan aana yen konan….. miruvuku ena aabathu kathutu iruku…. onume puriyala nithu….. epadiyo enoda sleep today nite suvaka than…… anyways waiting for the next episode eagerly pa…… post soon dear….
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hmm Appa oru mudivula than irukreenka hmm nadaththuka
Nice update
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Romba harsha pesuranga ippove. Waiting for the next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithu…
Still maintaining suspense..
Just wow..👏👏
🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rusha…. 🙂 🙂 🙂
Thank you so much dear… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nama kandupidikalam rusha dear….. side la oru new update nama ready panalam…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
☺️👍yeah dear..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Visarikka thane vandenga madam.en intha murattu Tanaka.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji,
Thank you… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice epi ….. superb
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ahi Gokul,
Thank you pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Oh sis very interesting… Superb 👏 eagerly waiting for your next ud 👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Samrthi… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
susnebcelaavay kondu poreengapaaaaaaaaa
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
😀 😀 Ugi… innum konja naal thaan.. appuram ellaam open book thaan… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice ud sis…👌👌👌👌
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hey Priya, Thank you… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
அர்சூன் ரொம்ப டென்ஷன்ல இருக்கான் மிரு யாருனு தெரிஞ்சுட்டா இல்லை வேற எதுவுமா இவ்வளவு நாள் அவளை ரொம்ப பாதுகாத்தான் போலீஸ் வர்றப்பா எங்க போனான்😰😰😰
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika, I got you now. Thanks a lot dear friend.. 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Interesting epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Jothi Priya… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Semma interesting…superb sis,
Wait pannadhu waste aakala✌🏻✌🏻
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you so much Mithra… 🙂