Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


நல்லதோர் வீணை செய்தேன்-11

ல்லதோர் வீணை செய்தேன்

 

அத்தியாயம் 11

 

மிச்சங்கள் சொச்சங்களின்றி இன்ப சுகத்தில் கழிந்த இரவின் தாமதத்தால் விடிகாலை வேளையின் போது  இருவரும்  தங்கள் உறக்கத்தை தழுவ… முதலில் விழுப்பு தட்டி எழுந்த ஆர்னவின் கைகள் மனைவியை அலசி மேய்ந்தது இரவில் பற்றி எரிந்த தாபத் தீ மீண்டும் பற்றிக்கொள்ள உறங்கிக் கொண்டிருந்த மனைவியை வேகமாக இழுத்து அணைக்க அவன் அணைப்பில் உறக்கத்தை துறந்தவள் அவன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தாள்… தன் கையணைப்பில் இருப்பது செவ்வந்தி என உணர்ந்தவன் மோகம் என்னும் தீ அறுபட்டு அவளை இழுத்த வேகத்திலே தன்னிடமிருந்து பிரித்தெடுக்க…. அவன் தள்ளியவேகத்தில் தடுமாறியவள் கட்டிலின் மறுபக்கம் சென்று விழுந்தாள்…

 

அவனோ கண்களில் ரௌத்திரத்தோடு ” எத்தினி நாள் கனவுடி இது உனக்கு… எவ்ளோ நெஞ்செழுத்தம் இருந்தா…

 

 என் பெட்ல… அதுவும் என் கூட…

 

நல்லா பணக்காரனா கிடைச்சத்தும் வளைச்சிப்போட தோணுதோ… ஒரு சந்தர்ப்பம் கிடைச்சத்தும் இவ்ளோ கேவலமா பயன்படுத்திகிட்டே… ச்சே” அவன் பேசிய வார்த்தையிலும் அவன் பார்த்த பார்வையிலும்  அனலில்லிட்ட புழுவாய் துடித்தவள்  உயிரே போய்விட்டது போல் உணர்ந்தாள்…

 

“இல்லைங்க… நான்  ச…. சத்தியமா அந்த நினப்புல அப்..  அப்படி எதுவும் நினைக்குல” கண்களில் கண்ணீர் குளம் போல் தளும்பி நிற்க

 

” நேத்து நைட் நீங்கதான் என்னைய” மேலும் சொல்ல முடியாமல் தவிர்க்க எப்படி கூறுவாள் அதை தன்னவன் தன்னை நாடி வந்ததை

 

” சரி எனக்கு வேணும்னு வந்த… எல்லாம் முடிஞ்ச பிறகு உன்னோட இடத்துக்கு போயிருக்கணும்… அதை விட்டுட்டு எனக்கு சரிசமமா”அவளை காரணம் காட்டி ஏசினாலும் அதைப் பற்றி நினைக்கும் போது அவனுக்கே தன்னைப்பற்றி  அருவருப்பாக இருந்தது…

 

ஆர்னவிற்கு தன் மேல் தனக்கே கோபம் வர…. தன்மேல் இருந்த கோபம் முழுவதும் செவ்வந்தி மீது திரும்ப

 

” அண்ட இடம் கொடுத்தா மடத்தையே விலைக்கு வாங்குறது தானே உங்க புத்தி” நேற்று இரவு எவ்வளவு ஆசை ஆசையாக என்னுடன் கூடி கலித்தார்… இப்போது ஏன் இப்படி பேசுகிறார்…. வாள் கொண்டு அருக்கும் அவன் வார்த்தைகள் மிகவும் வலித்தது அவளுக்கு…

 

நேற்றிரவு  உயிர் உயிரோடு கலந்து ஜனித்து சொர்க்க சுகமாக இருந்த மலர் படுக்கை இப்போது  தணல் படுக்கையாக காந்தியது…

 

தேளின் விஷக்கொடுக்கை விட விஷம் மிகுந்த தன்னவனின் வார்த்தையின் வீரியத்தை தாங்க முடியாமல் சட்டென்று அவன் மஞ்சத்திலிருந்து எழுந்தவள் அவனை நிமிர்ந்துக் கூட பார்க்க அஞ்சினாள்…

 

மனம் முழுவதும் வலி…

 

ஒரு காதல் கணவனுக்கு  மனைவியாக இருந்து செய்யும் கடமையைத்தான் அவள் செய்தால்… இதில் தன்னை மட்டும் குற்றவாளியாக கருதுவது எந்த விதத்தில் நியாயம்??? தன்னையே அவள் கேள்வி கேட்டுக் கொண்டாள்…

 

அவரை பொருத்த மாட்டில் அது வெறும் உடல் பசியாக இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை புனிதமான தாம்பத்தியம் அந்த புனித உறவை இப்படி அந்தஸ்தைக் காட்டி பேரம் பேசிவிட்டானே…

 

அவனுடன் எதிர் வாதம் செய்ய அவள் காதல் மனது இடம் கொடுக்க வில்லை… சரமாரியான வார்த்தைகள் அவளை நோக்கி எய்திவிட்டு எழுந்தவன் குளியல் அறைக்குள் சென்று மறைந்தான்… கண்களில் கண்ணீர் கோடும் உடலில் அவன் ஏற்படுத்திய வலிகளோடு மன வலியும் சேர்ந்துக் கொள்ள அது அவள் உயிர்வரை சென்று வேரோடு அறுத்தது…

 

மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் தன் அறைக்கு வந்தவள்… மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்… உடலில் நீரை வாற்றி இறைக்க… அவள் உடல் எங்கும் எரிந்தது தன்னவனின் பல்தடம் ஆழமாக பதிந்த இடங்களில்…  சுகமான வலியாக மாறவேண்டியது எல்லாம் உடலில் காயமாய் மனதில் ஆறாத ரணமாய் மாறியிருக்க… தன் மனம் ஆரமட்டும் நீருக்கடியில் இருந்தவள் ஒருவாரு மனதை தேற்றி தலைக்கு குளித்துவிட்டு துண்டால் தலையை முடிச்சிட்டுக் கொண்டு வந்தவள் வெள்ளேனே தன் சமையலை ஆரம்பித்தாள்…

 

தன் கைமட்டும் வேலையை செய்துக்கொண்டிருக்க… நினைவோ தன்னவன் பேச்சில் மங்கி நின்றது… குத்தல் பேச்சு வாடிக்கையான தொன்று… ஆனால் பழிச்சொல் தன்னை அவன் புரிந்துக்கொள்ளவே இல்லையா இன்னும் பழைய பகையோடுத்தான் என்னை காண்கிறாரா… பழைய மனஸ்தாபம் குறையவில்லை என்றால் பின்பு ஏன் நேற்று என்னுடன் ஒரே படுக்கையில் மனம் மீண்டும் அவன் செய்யலில் குழம்பி தவித்தது…

 

தன்னை தீண்டத்தகாத பிறவியாக நினைக்கும் கணவன் தன்னைடம் உறவு வைத்துக் கொள்வது???…

 

இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில்… அவளவனே அறிந்திராத ஒன்று…

 

 காலையில் தலைக்குளித்து கண்ணுக்கு அழகாக  காட்சியளிக்கும் மருமகளை கவனித்த மித்ராவிற்கு உள்ளம் குளிர்ந்தது தன் மகன் தாம்பத்திய வாழ்க்கையை நிறைவுடன் வாழ்கிறான் என்பதை செவ்வந்தியின் முக ஜொலிப்பிலே தெரிந்தது… தன் கணவனை அழைத்த மித்ரா உணவை பரிமாரிக் கொண்டிருக்கும் மருமகளை பார்க்குமாறு கண்களால் ஜாடைக் காட்ட அதை கவனித்த ஆதியின் உதட்டில் மென்னகை பூத்து மெல்ல மனவியவள் காதருகில் குனிந்து

 

” பேபி… இந்த மாதிரி நீ தரிசனம் குடுத்து ரொம்ப நாலாச்சு… எனக்கு எந்த ஆட்சேபனையுமில்ல… நீ ஊனு ஒரு வார்த்தை சொல்லு நைட் நம்ப பெட்ரூம சும்மா பர்ஸ்ட் நைட் ரேஞ்சுக்கு ரெடி பன்றேன்” கண்ணில் மயகத்தோடு தன் வயதை மறந்து இளவட்டம் போல் பேசிய ஆதி

 

தன் மனைவியை கண்ணடித்து இன்றும் அதே காதல் குறையாமல் உருகும் கணவனின் மேல் மித்ராவுக்கு காதல் பெருக்கெடுத்தது…

 

இருந்தும் “பாவா முடி நரச்சி…. பல்லு போயி பேரன் பேத்தி எடுத்தும் உங்க குசும்பு அடங்களையே…. இன்னும் பதினாறு வயசுனு நினைப்பு” பொய்யான கோபத்தோடு மித்ரா முறைக்க ஆதி உதட்டில் சிரிப்பு மாறாமல் தன் மனைவியின் செல்ல கோபத்தை ரசித்தவண்ணம் ” எனக்கென பேபி இப்பயும் ஐயா எல்லா விஷயத்திலும் கில்லிதான்… என் கூட கில்லி ஆடவரியா”

 

“இத்தனை வருஷம் உங்க கூட ஆடாமா வேற யாருகூட ஆகிட்டு இருக்கேன்” மித்ராவும் தன் பங்கிற்கு ஆதியுடன் பேச்சில் இறங்கி காலைவாற…

 

அந்த நேரம் பார்த்து மாடி படியில் இறங்கி வந்துக் கொண்டிருந்த ஆர்னவை கண்டு மித்ரா ஜாடைக் காட்டி கணவனை அடக்க… உணவு மேஜைக்கு வந்தமர்ந்த ஆர்னவின் முகம் செவ்வந்தியைக் கண்டு இறுகியது… பின்பு உணவருந்த பிடிக்காமல் எழ அவனை ஏக்கமாய் பார்த்த செவ்வந்தியை கண்டு கொண்ட மித்ரா மற்றும் ஆதி தங்கள் மகனை அழைத்து

 

” ஆரி ஏன் என்னைச்சுப்பா சாப்பிட ஒக்காந்த… சாப்பிட்டு போப்பா… வையித்த காயபோடாத” அன்னையின் பதிலுக்கு  செவ்வந்தியை முறைத்தப்படி ” ஆஃபீஸ் டைம் ஆச்சு மாம் நான் வெளில சாப்பிட்டுக்குறேன்” பேருக்கு பதிலை உரைத்து விட்டு சென்றவன் பின் நின்று தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த முடிவை அமல்படுத்தும் பொருட்டு

 

” நான் பிஸ்னெஸ் பார்க்க பாம்பே போறேன்… சோ நாளைக்கு நைட் பிலைட்” வேக வேகமாக உரைத்தவன் செவ்வந்தியிடம் திரும்பி ” ரெடியா இரு… எனக்கு பஞ்சுவள் முக்கியம்” மகனின் இத்தகைய முடிவு ஆதி மித்ராக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்க செவ்வந்திக்கு உள்ளுக்குள் உதரலெடுத்தது…

 

இவனுடன் தனியாகவா இருக்க வேண்டும் என்ற நினைப்பே  அவளுக்கு ஆயாசமாக வந்தது… ஆனால் இந்த முடிவு மாறதே ஏனென்றால் கணவன் எடுத்த முடிவாயிட்றே அவன் முடிவில் மாற்றுக் கருத்து ஏது!!!

 

செவ்வந்தியிடம் வந்த மித்ரா ” செவ்வந்தி ஆரி பத்தி பயம் வேண்டாம் அவன் வெளியே முரடா இருந்தாலும் உள்ளுக்குள்ள அவன் சின்ன குழந்தை மாதிரி… குழந்தைங்க தெரியாதனம்மா தப்பு பண்ணா  விட்டிட்டு போறதில்லையா அதே மாதிரி அவன கொஞ்சம் பொறுத்து போமா”

 

” பெரியம்மா…. இதுலாம் நீங்க சொல்லனுமா… அவரு போகப்போக புரிஞ்சிப்பாரு பெரியம்மா எனக்கு நம்பிக்கை இருக்கு” மித்ராவுக்கு ஆறுதல் கூறிய செவ்வந்திக்கு பிற்காலத்தில் தனக்கு ஆறுதல் வார்த்தைக்கு கூட ஆளில்லா அவளத்திற்கு தள்ளப்படும் நிலை அறியாமல் மனக்கோட்டை காட்டினாள்…

 

அவன் காதலில் கரைவாளா… இல்லை அவன் துரோகத்தில் மடிவாளா!!! பார்ப்போம்…

 

வீணை மீட்டும்….

 

நாளைக்கு 12 போடறேன் பிரண்ட்ஸ் type பண்ணிட்டேன் கொஞ்சம் எடிட்டிங் ஒர்க் இருக்கு🙏🙏🙏
6
Leave a Reply

avatar
6 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
5 Comment authors
KALYANI NathanRadhi MuthuvelJAYALAKSHMI PALANIAPPANGayathri RajeshVidya Priyadarsini Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
KALYANI Nathan
Member

Hi all..I’m not able to view next uds…can anyone help me to find… from 12

Radhi Muthuvel
Member

Nice

JAYALAKSHMI PALANIAPPAN
Member

Next episode??

Gayathri Rajesh
Member

Nice…..

Vidya Priyadarsini
Member

Neenga update pottu irukeengala thedi pakurathu mathiri iruku pa…. atleast recent post la notify aana easy a irukum…. Bcoz update iruka ilayane theriyala…. ila page set up marunathala readers ku athu siramama thonuthanu theriyala….. anyways semma epi….. waiting for the next episode eagerly pa….. try to post soon dear….

Vidya Priyadarsini
Member

Oru appavi ponoda life a start panitu avala thevai mudiyavum thavara pesalama aarnav…. padichum pathara irukkan nama hero….. aana sevvandhi onum theriyatha appaviya iruka….. pala naal thirudan oru naal agapaduvan ngira mathiri unmai theriyum pothum oru erimalaye vedikkum…. atha rendu perum epadi manage pana poranga wait pani than parkanum….