Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க – 25

வனிதாவின் கார் வேகமாக திவ்யா இருக்கும் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அனிதா: அடியே! வினிதா லிண்டா உடைய மொபைல் லோகேஷன் மூவிங் ஆகுதடி. அவை எங்கேயோ வெளிய போற என்று நினைக்கிறேன். அவளோடு லொகேஷன் நமக்கு ஆப்போசிட்ல காட்டுதடி!

வினிதா: சரிடி திவ்யாவிடம் லொகேஷன் காட்டு தான் பாரு!

அனிதா: இல்லடி அவளுடைய லொகேஷனை காட்டவில்லை டி!

வினிதா: ஷிட்!

எதிர்த்திசையில் ஒரு கார் வனிதாவின் காரை நோக்கி வந்து கொண்டே இருந்தது.

அனிதா: லிண்டா அந்த காரில் தான் இருக்கா என்று நினைக்கிறேன். லொகேஷன் அப்படித்தான் காட்டுகிறது.

வினிதா இருவரையும் casual ஆக இருக்க சொன்னாள்.

இரு கார்களும் ஒன்றை ஒன்று கடந்து சென்றது.

சிறிது தூரம் சென்று வனிதா காரை நிறுத்தி இறங்கிப் பார்த்தாள்.

நடுவே செல்லும் ரோடை தவிர்த்து சுற்றிலும் மரங்கள் சூழ அடர்ந்த காடுகளாக காட்சியளித்தது.

வினிதாவிற்கு மூன்று யோசனைகள் சிந்தையை தட்டியது.

• திவ்யா இருக்கும் இருப்பிடத்தை எப்படி கண்டுபிடிப்பது?

• ஒருவேளை அவளை மீட்கும்போது லிண்டா வந்துவிட்டால் என்ன செய்வது?

• கார்த்திக்கும் ஊட்டியில் தான் இருக்கிறான். அவன் பார்வையில் படாமல் எப்படி ஊரை விட்டு வெளியேறுவது?

அனிதா: என்னடா யோசிச்சுக்கிட்டு இருக்கா?

வினிதா சுதாரித்துக் கொண்டு யோசித்து நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக லிண்டா வருவதற்குள் திவ்யாவை தேடுவோம் என்று முடிவெடுத்து காரை ஸ்டார்ட் செய்து நேராக விரைந்தாள்.

ஐந்து நிமிட பயணத்திற்குப் பிறகு தனித்து விடப்பட்ட ஒரு பங்களா போன்ற வீடு தென்பட்டது.

அந்த வீட்டு அருகில் காரை நிறுத்தினாள்.

வினிதா: சரி வாங்கடி! சுற்றிலும் எந்த வீடும் தென்படவில்லை. கண்டிப்பாக திவ்யா இந்த வீட்டில் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் முதலில் இந்த வீட்டை செக் செய்வோம்.

ஜென்னி லேப்டாப்பை கைல எடுத்து கொள் டி.

அனிதா: எனக்கு மிகவும் பயமா இருக்குடி.

ஜென்னி: o jesus! Help us!

வினிதா: சரி பயப்படாம வாங்கடி! அதுதான் நான் கூட இருக்கேன் இல்ல.

ஆள் நடமாட்டமே இல்லாத பார்ப்பதற்கு பேய் பங்களாவை போன்று காட்சி அளித்தது.

மயான அமைதியாக நிலவிய அந்த வீட்டின் உள்ளே மூவரும் உள்ளே சென்றார்கள்.

ஆனால் வீட்டின் உள்ளே சென்றால் பயன்பாட்டில் உள்ள விட்டை போன்று தோற்றமளித்தது.

வினிதா: ஜென்னி கையில் வைத்திருக்கும் லேப்டாப்பில் அவள் மொபைல் நம்பரை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இரு.

அனிதா நீ போய் அந்த ரூமை பார்.

நான் இந்த பக்கம் உள்ள ரூமை செக் பண்றேன்.

ஜென்னி இந்த இடத்தை விட்டு எங்கேயும் நகராத டி.

அனிதா அறையின் உள்ளே சென்றவுடன் ஓ என்று அலறினாள்.

வினிதாவும், ஜென்னியும் அந்த அறையை நோக்கி ஓடினார்கள்.

உள்ளே சென்று பார்த்தால் திவ்யா அரை நிர்வாணமாக கட்டிலில் கிடந்தாள்.

அனிதா அவள் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு உனக்கு என்ன ஆச்சுடி? உனக்கு என்ன ஆச்சுடி? கேட்டபடி அழத் தொடங்கினாள்.

அனிதா திவ்யாவின் முகத்தருகில் தனது முகத்தை கொண்டு சென்ற போதுதான் தெரிந்தது. அவள் மது அருந்தி இருக்கிறாள் என்று. அதை மற்றவர்களிடம் கூறினாள்.

வினிதா: அனிதா, ஜென்னி அவளை பாத்ரூம் இழுத்துட்டு போய் குளிக்க வைங்க!

திவ்யா குடிபோதையில் லீவு மீ! லீவு மீ! என்று உளறினாள்.

வினிதா: நா போய் லெமன் இருக்கிறதாடு பார்கிறேன்.

வினிதா லெமனை எடுத்துட்டு வந்து திவ்யாவின் வாயில் பிழிந்துவிட்டாள்.

திவ்யாவின் உளறல் சிறிது நின்று தெளிவு நிலைக்கு வந்தாள்.

அவளின் நிலையை கண்டு அனிதாவும், ஜென்னிவும் அழுதுகொண்டே இருந்தார்கள்.

அதுவரை தைரியமாக இருந்த வினிதாவின் கண்களை தனது தோழியை நிலைமையைக் கண்டு கண்ணீர் வடித்தது.

வினிதா பாத்ரூமிலிருந்து வெளியே வந்து அவளது உடைகளை எடுத்து மூவரும் அவளுக்கு அணிந்து விட்டார்கள்.

வினிதா: ஜென்னி லேப்டாப் எங்கடி?

ஜென்னி: ஹால்லே வச்சிட்டு வந்துட்டேன் நினைக்கிறேன் டி.

வினிதா: நீ போய் லேப்டாப்பை எடுத்து பார். லிண்டா இங்கே வருகிறாளால பாரு.

ஜென்னி லேப்டாப் போய் பார்க்கும்போது அவள் மீண்டும் வீட்டை நோக்கி வருவதாக சிக்னல் காண்பித்தது.

ஜென்னி அலறிக்கொண்டு வினிதாவிடம் வந்தாள்.

ஜென்னி: அவள் வீட்டை நோக்கி தாண்டி தான் வருகிற? என்னடி செய்வது?

வினிதா: அனிதா, ஜென்னி நமக்கு இப்ப நேரமில்ல. இந்த இடத்தை விட்டு நம்ம உடனே கிளபனும் வாங்க போலாம்.

லிண்டா தனது வீட்டு அருகில் புதிதாக ஒரு கார் நிற்பதை கண்டு பதற்றத்துடன் வீட்டை நோக்கி நுழைந்தாள்.

உள்ளே இருப்பவர்கள் எப்படி சமாளிப்பார்கள்?

தொடரும்


Tags:


Comments are closed here.

error: Content is protected !!