Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு- 64

அத்தியாயம் – 64

மலையை உடைத்து மனிதனாய் செதுக்கியது போன்ற மகா ஆஜானுபாகுவான தோற்றத்தில் மல்லார்ந்து படுத்திருந்தான் அர்ஜுன். அகண்டு திரண்ட அவன் புஜத்தில் தலை சாய்த்திருந்தாள் மிருதுளா. சீரான மூச்சு காற்றோடு மெல்லிய குறட்டை ஒலியும் அவனிடமிருந்து வெளியேறியது. இதற்கு முன் அவன் இத்தனை நிம்மதியாக உறங்கி அவள் பார்த்ததில்லை. கண்களில் கனிவோடு அவன் முகத்தை ஓரிரு நிமிடங்கள் பார்த்தவள், பிறகு தாடியை மெல்ல வருடியபடி அவன் வாழ்க்கையைப் பற்றி யோசித்தாள்.

‘ஓடிக் கொண்டே இருக்கிறான். அமைதியில்லாத ஓட்டம். ஆசுவாசம் இல்லாத ஓட்டம். எத்தனை நாள் இப்படி ஓட முடியும்?’ – அவள் மனதில் கணம் ஏறியது.

அர்ஜுன் உறக்கம் களைந்து அவள் பக்கம் திரும்பினான். குழப்பம் நிறைந்த அவள் முகத்தில் ஒற்றை விரலால் கோலம் வரைந்து, ‘என்ன?’ என்று புருவம் உயர்த்தினான்.

“ம்ஹும்…” – குறுக்காக தலையசைத்தாள் மிருதுளா.

அவள் இடையை வளைத்து இறுக்கி அணைத்து, “தூங்கலையா?” என்றான் கொஞ்சலாக.

முகத்தில் சின்ன புன்னகையுடன் பார்வையை உயர்த்தி சுவர்கடிகாரத்தை நோக்கினாள். அவளைத் தொடர்ந்து அவன் பார்வையும் உயர்ந்தது. நேரம் முற்பகல் முடியும் தருவாய் என்றது கடிகாரம்.

“ஓ! ரொம்ப லேட் ஆச்சு. பசிக்குதா?” – சட்டென்று பரபரப்பானான். அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் முகத்தில் சோர்வு தெரிந்தது. அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு போர்வையை விலக்கி எழுந்தான்.

மிருதுளா குளித்துவிட்டு வந்தபோது இருவருக்கும் இலகுவான காலை உணவு, மேஜையில் தயாராக இருந்தது.

“ஐ’ல் டேக் கேர்…” – அலைபேசியில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

‘டேக் கேர்’ என்று வேறு யாராவது சொன்னால் பத்திரமாக பார்த்துக் கொள்வதை பற்றி பேசுகிறார்கள் என்று தோன்றும். ஆனால் அந்த வார்த்தை இவன் வாயிலிருந்து வந்தால் மட்டும் யாரையோ ஒழித்துக்கட்ட போகிறான் என்று தான் எண்ணத்தோன்றும். இப்போது யாரை முடிக்கப் போகிறான்! அவளுடைய பெற்றோரையா! – குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்களே, அதுதான் இப்போதும் நடந்தது. அவன் என்ன செய்தாலும், பேசினாலும், தன் பெற்றோரை டார்கெட் செய்கிறானோ என்கிற சந்தேகம் தான் அவளை முதலில் தாக்கியது.

வெளிறிய முகத்துடன் அவள் திகைத்து நிற்பதைக் கண்டு, அலைபேசியை அணைத்துவிட்டு அவளிடம் நெருங்கினான் அர்ஜுன். “வாட்ஸ் அப்? யு ஓகே?” – அவள் கைகளை பிடித்துக்கொண்டு நெருக்கமாக கேட்டான்.

மிருதுளா புன்னகைக்க முயன்றாள். அவன் சமாதானம் ஆகவில்லை. அவளுக்குள் வருத்தம் இருப்பதை அவன் உணர்ந்தான். நேற்று அவ்வளவு பெரிய பிரச்னை நடந்து முடிந்த பிறகும் ஊடலில்லாமல் அவனோடு கூடிக் கலந்தவள் இன்று ஏன் வருந்துகிறாள்? காரணம் எதுவாக இருந்தாலும் அவள் முகம் வாடுவதை சகிக்க முடியவில்லை அவனுக்கு.

“டாக் டு மீ பேபி… எது உன்ன இப்படி வருத்தப்படுத்துது?” – ஊக்கப்படுத்தினான்.

“ஐம் ஓகே… ஜஸ்ட்… பசி… அவ்வளவுதான்” – சமாளித்தாள்.

“நிச்சயமா?”

“எஸ்”

“சரி வா. பிரட் டோஸ்ட் வித் சீஸ் ஆம்லெட், ஓகே தானே?” – டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்து அவள் அமர்வதற்கு வசதி செய்து கொடுத்தான்.

அவனுடைய ஒவ்வொரு செயலிலும் தெரிந்த கனிவும் காதலும் அவள் இதயத்தை தொட்டது. அமைதியாக உணவருந்தினாள். அவனும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் பதில் அவளுடைய பெற்றோர் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்று தெரிந்ததால் அவனும் மௌனமாகவே உணவை முடித்தான். ஆனால் அவளுடைய வருத்தத்தை நீக்க முடியாத இயலாமை உள்ளே குத்திக் கொண்டே இருந்தது.

உணவிற்கு பிறகும் எதுவும் பேசாமல் வெளி வராண்டாவிற்கு தனிமையை நாடி வந்து அமர்ந்துவிட்டாள் மிருதுளா. அவளுடைய ஒதுக்கம் அவன் மனதை பிசைந்தது. உடனே பின்தொடர்ந்து வந்துவிட்டான்.

“ஒரு ட்ரைவ் போகலாமா?”

மிருதுளா அவனை நிமிர்ந்து பார்த்தாள். மனதில் எழுந்த கேள்வியை வாய்விட்டுக் கேட்டாள். “எப்படி கண்டுபிடிச்சீங்க?” – அவன் புருவம் சுருங்கியது.

“இல்ல… நா எங்க இருக்கேன்னு எப்படி தெரிஞ்சுது?” – சின்ன தயக்கத்துடன் மீண்டும் விளக்கமாக கேட்டாள். அவன் முகம் சட்டென்று இறுகியது. மிருதுளா சங்கடத்துடன் உதட்டை கடித்தாள். அவனுடைய கோபம் அவள் குற்ற உணர்ச்சியை அதிகமாக்கியது. அவன் பார்வை அவள் கழுத்திற்குச் சென்றது.

‘இதுவா!’ – அவள் கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்தன. கை கழுத்தில் கிடந்த ஜெயினை வருடியது.

“வாட் அபௌட் ட்ரைவ்” – அவன் அந்த பேச்சை முற்றிலுமாக தவிர்த்தான். முகம் கடுகடுவென்றிருந்தது.

“அர்ஜுன்” – தழுதழுத்தபடி எழுந்தாள் மிருதுளா.

“சொல்லு” – அவனுடைய கோபம் அவளை பேசவிடாமல் தடுக்க முயன்றது. ஆனாலும் அவள் பேசினாள்.

“ஐ வாண்ட் டு பீ வித் யு. ஐ காண்ட் லூஸ் யு. ப்ளீஸ் சேவ் அஸ். சேவ் அவர் ரிலேஷன்ஷிப்…” – ‘எனக்கு உங்க கூடவே இருக்கணும். என்னால உங்கள இழக்க முடியாது… தயவு செஞ்சு நம்ம உறவை காப்பாத்துங்க’ – உடைந்து, கண்ணீர் வடிய கைகூப்பினாள்.

சட்டென்று இளகி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அர்ஜுன். சற்று நேரம் எதுவுமே பேச முடியவில்லை அவனுக்கு. தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு.

“ஆர் யூ மேட்? கூட தானே இருக்க? இப்போ… இங்க… ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற? எங்க போயிட போறேன் நான்…? என்ன ஆயிடும் நம்ம உறவுக்கு?”

“பயமா இருக்கு”

“ஷ்ஷ்ஷ்… எல்லாம் சரியாயிடும். வி ஆர் கோயிங் டு பி ஓகே” – அவளை அமைதிப்படுத்தினான். ஆனால் அவள் மனம் அமைதியடையவில்லை. “எப்படி? எப்படி எல்லாம் சரியாகும்?” – கேள்வி கேட்டாள்.

அதே கேள்விதான் அவனுக்குள்ளும் இருந்தது. ‘எப்படி சரியாகும்? சரியாக வேண்டும் என்றால் அவன் பகவானையும் ஷோபாவையும் மன்னிக்க வேண்டும். முடியுமா அவனால்?’ – ஆர்த்தியின் சிரித்த முகம் அவன் கண்ணெதிரில் தோன்றியது.

“டூ நோ வாட் ஹாட்பண்ட் டு மை வைஃப்?” – ‘என் மனைவிக்கு என்ன நடந்ததென்று உனக்கு தெரியுமா?’ – இறுகிய குரலில் கேட்டான்.

மிருதுளாவின் உடல் விறைத்தது. அவள் இதயம் வேகமாக துடிப்பதை அவனால் உணர முடிந்தது. அவளை விளக்கி நிறுத்தினான். மிருதுளா அவனை ஏக்கத்தோடு பார்த்தாள்.

“ஐ லவ்ட் ஹர்…” – மூன்றே வார்த்தைதான். அவளை மொத்தமாக நொறுக்கிவிட்டது.

“வாட் அபௌட் மீ?” – கண்ணீருடன் கேட்டாள்.

“அது உனக்கே தெரியும்”

“கடவுளே!” – தலையை பிடித்துக் கொண்டு மீண்டும் சேரில் அமர்ந்தாள். கண்ணீர் தாரை தாரையாய் வடிந்தது.

“மிருதுளா, யு ஹேவ் டு அக்ஸப்ட்… உன்னோட பேரன்ட்ஸ் தண்டிக்கப்பட வேண்டியவங்க”

“எனக்காக… என்னோட நிம்மதிக்காக எதுவுமே செய்ய மாட்டீங்களா? நாட் ஈவன் ஆஃப்டர் லாஸ்ட் நைட்?” – தளர்வும் இயலாமையுமாக கேட்டாள். அவ்வளவுதான். அவன் முகம் படுபயங்கரமாக மாறியது.

“நேற்றைய இரவு உன்னோட இரண்டாவது திட்டமா இருக்காதுன்னு நம்பறேன். அப்படியே இருந்தாலும் என்கிட்ட எந்த பருப்பும் வேகாது. புரியுதா?” – வார்த்தைகளை விஷமாக கக்கிவிட்டு விருட்டென்று அவன் உள்ளே சென்றுவிட, அடிபட்ட சிறு பறவை போல் துடித்துப்போனாள் அவள்.
Comments are closed here.

error: Content is protected !!