Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

வரமாய் வந்தவனே!!!  

Page 1 / 8
  RSS

Ramya Anamika
(@anamika)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 58
19/12/2019 7:05 pm  

வணக்கம் கண்மணிஸ். நான் ரம்யா அனாமிகா. உங்களில் ஒ௫வள் இந்த கதை மூலம் உங்களில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் . மனதில் தோன்றிய கற்பனைக்கு வடிவம் தந்துள்ளேன் .  ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் அன்பை கருத்துகள் மூலம் (comment) வெளிப்படுத்துங்கள்.... என் எழுத்துக்கள் மூலம் உங்களோடு பயணிக்க வாய்ப்பு தந்த நித்யா சிஸ்டர் மற்றும் சகாப்தம் குழுவிற்கு  நன்றிகள் பல.....

 

வரமாய் வந்தவனே!!!

 

தன் சொந்த வீட்டிலே அந்நியமாக நடத்தப்படுகிறவளை காப்பாற்ற வருபவன் வரமாய்  இருப்பானா??? அல்லது சாபமாக மாறுவானா??? என்பதை பார்க்கலாம்.....

வரம் நாயகன்: *ஷ்யாம் யூதன்*
வரம் நாயகி: *அபூர்வ வர்ஷினி*

நாயகன் குடும்பம்:

அப்பா: அன்பு செல்வன்
அம்மா:பாவனி

பெரியப்பா: கணேசன்
பெரியம்மா: மல்லிகா
சகோதரன்: நிதர்சன்
தங்கச்சி: நிதிலா

நண்பன்: அரவிந்த்.

நாயகி குடும்பம்:

அப்பா: சந்திர மோகன்
அம்மா: மேகலா
பாட்டி: ராஜாத்தி
அக்கா: பூர்ண வர்ஷினி

நண்பர்கள்: பிரியா, கௌதம், ராஜேஷ், தீபன்.

💗வரமாய் வருவேனடி💗.........

வாரம் ஒரு முறை வரம் தர வருவான்....  

 

இப்படிக்கு உங்கள் இம்சை தோழி ,
                        -ரம்யாஅனாமிகா.       

 

நல்லாதே நினை நல்லதே நடக்கும்..
அன்புடன் ,
ரம்யா அனாமிகா


Ramya Anamika
(@anamika)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 58
22/12/2019 7:34 am  

என் பயணம் தொடங்கிவிட்டது உங்கள் வழி காட்டும் கருத்துகளுடன்.... 😀 😀 😀 

 

💖வரம்-1💖

 

"ஷ்யாம் கண்ணா அம்மா உனக்காக ஒரு விஷயம் பண்ணியிருக்கேன், அதுக்கு நீ ஓகே சொல்லனும் ", என்று நிபந்தனை வைத்தார் பாவனி .( நம்  ஷ்யாமின் அம்மா)

"என்ன மிஸ்டர் அன்பு உங்க மனைவி ஏதோ புதிர போடுறாங்க?? என்ன விஷயம்??", என்று புருவம் உயர்த்தினான் ஷ்யாம் யூதன் ( நம் கதையின் நாயகன்)

தன் முன்னால் ஆறு அடி உயரமும், உடற்பயிற்சியினால் கட்டுக்கோப்பான உடலையும், நேர்த்தியான நெற்றியும், மற்றவர்களை கவர்ந்து காந்தம் போல இழுக்கும் கண்களையும், கூர்மையான நாசியும், அடக்கமான அழகான மீசையும், எப்போதுமே சிரிப்புடன் இருக்கும் உதட்டையும் கொண்டு தன் முன் அமர்ந்து பேசும் தன் மகன் என்று கர்வத்தோடு பார்த்தனர் அன்பு செல்வன் மற்றும் பவானி தம்பதியினர்.

"என்ன ரெண்டு பேரும் இப்படி பார்க்கிறீங்க?? மிஸ்டர் அன்பு நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல??", என்றான் கிண்டலாக சிரித்துக்கொண்டே.

"அது வாடா கண்ணா உன் அம்மா உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கானும்னு ஆசப் படுறா" என்றார் அன்பு செல்வன் (ஷ்யாமின் அப்பா) சிரித்துக்கொண்டே.

"அம்மா என்னம்மா?? பொண்ணு ஏதும் பாத்துட்டியா இல்ல, நான் பார்க்கட்டுமா?? ", என்று கண்ணடித்தான்.

"நீ பார்த்திருந்தா தான் எனக்கு வேல மிச்சமாயிருக்குமே , ஒரு பொண்ணு எனக்கு பிடிச்சிருக்கு, ஜாதகம் பார்த்தோம் பொருத்தமா இருக்கு, நீ போட்டோவப் பார்த்துட்டு ஓகே சொன்னா பொண்ணு பார்க்க சண்டே போகலாம்", என்றார் எதிர்பார்ப்புடன்.

"பொண்ணு என்ன பண்றாங்க?? உனக்கு பிடிச்சிருக்காமா???", என்றான் விளையாட்டுதனத்தை  ஒதுக்கி வைத்துவிட்டு.

"எனக்கு பிடிக்கிறது முக்கியம் இல்ல, உனக்கு பிடிக்கணும் நீதான் வாழ  போற நான் இல்ல , பொண்ணு பேரு  பூர்ண வர்ஷினி, எம்பிஏ முடிச்சுருக்கா, ஒரு பிரைவேட் கம்பெனியில் வொர்க் பண்றா, அவகூட பொறந்தது ஒரே ஒரு தங்கச்சி, அப்பா பிசினஸ்மேன்", என்று விவரம் சொன்னார்.

"ஷ்யாம் நோட் பண்ணிக்கோ மச்சினிச்சி இருக்கலாம் ", என்றார் அன்பு கிண்டலாக.

"அட சும்மா இருங்க, போட்டோவ முதல்ல பாரு டா ", என்று ஷ்யாமிடம் போட்டோவை கொடுத்தார்.

"ம்ம்.. பொண்ணு நல்லா தான் இருக்காங்க, எங்க இருக்காங்க?? எந்த ஊர்??", என்று போட்டோவின் பின்னால் திருப்பி அட்ரஸ் டீடைல்ஸ் பார்த்தான்.

"போலாமாடா??", என்றார் பவானி எதிர்பார்ப்புடன்

"அம்மா நிதிக்கு கல்யாணம் முடியட்டும், அப்பறம் எனக்கு பண்ணலாம் ", என்றான்.

"ம்ம்.. அவள என்னமோ வெளிநாட்டுக்கு அனுப்புற மாதிரி நிதி கல்யாணம் முடியாதுன்னு சொல்ற, உன் ஃப்ரெண்ட்  அரவிந்த தானே கல்யாணம் பண்ணப் போறா, அவ  கல்யாணத்துக்கு உன் கல்யாணத்துக்கும் என்னடா சம்பந்தம்", என்றார் கேள்வியாக.

"நல்ல கேள்வி, ஷ்யாம் இப்ப என்ன பண்ணுவ?? இப்ப என்ன பண்ணுவ??", என்றார் கிண்டலாக.

"அப்பா கொஞ்சம் அமைதியா இருங்க பா, சரி மா போலாம் சண்டே எனக்கு ஓகே".

"அப்பா.... இப்ப தான்டா எனக்கு சந்தோஷமா இருக்கு ", என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு உள்ளே சென்றார் பவானி.

"ஷ்யாம் அம்மா தனியா இருக்க ரொம்ப பீல் பண்றா டா, அதுக்குதான் உன்னைய கல்யாணம் பண்ண சொல்றா, வர பொண்ணு அவளுக்கு மகளாமாம்" , என்றார் சிரிப்புடன்.

"அதான் நிதி இருக்காளே பா", என்றான் கிண்டலாக.

"அவ அவங்க வீட்டுல  இருக்கா டா, நம்ம ரெண்டு பேரும் ஆபீஸ் போயிருவோம் இவ்ளோ பெரிய வீட்ல தனியா இருக்க, தனிமையா இருக்கிற மாதிரி அவ ஃபீல் பண்றா டா",  என்றார் பொறுமையாக.

"அப்பா எனக்கு புரியுது அதான் ஓகே சொல்லிட்டேன், சரிப்பா நான் கிளம்புறேன் வேல இருக்கு, பாய்ப்பா பாய் மா ", என்று பவானியை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு சிரிப்புடன் சென்றான்.

அன்புச்செல்வன் மற்றும் பவானி இருவரின் ஒரே புதல்வன் தான் ஷ்யாம் யூதன், எம்.பி.ஏ லண்டனில் முடித்தான் இவன், நிதர்சன் மற்றும் அரவிந்த் மூவரும் சேர்ந்து கம்பெனி வைத்து நடத்துகின்றனர்.அரவிந்த் இவர்களின் பள்ளியில் இருந்தே நண்பன்.  நிதிலா மற்றும் அரவிந்த் இருவரும் காதலித்ததால் வீட்டில் அனைவரின் சம்மதத்தோடு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அன்பு செல்வன் மற்றும் கணேஷ் உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. இவர்களின் இரு தாத்தாவும் உடன்பிறந்தவர்கள். காலப்போக்கில் குடும்பம் பிரிந்து தனித்தனி ஆனது .எந்த விசேஷம் நடந்தாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். உடன் பிறந்த சகோதரர் போலவே நடந்துகொள்வார்கள் இரு வீட்டினரும்.

'ஒரு கிளையண்ட் பார்த்துட்டு வரதுக்குள்ள மணி பன்னிரெண்டு ஆச்சு, சரியான அறுவ புடிச்சவன இருக்கான், இதனால தான் இந்த நிதரும், அரவிந்தும் என்கிட்ட  தள்ளிடானுங்க போல', என்று மனதிலே புலம்பிக் கொண்டே காரை ஓட்டி வந்தான்.

'இந்த ஏரியா தானே காலையில அம்மா காட்டின பொண்ணு ஏரியா, அம்மாவுக்கு அந்த பொண்ணு ரொம்ப பிடிச்சு இருக்கு போல', என்று நினைத்தான்.

'ஏன் உனக்கு பிடிக்கலையா??', என்றது மனசாட்சி.

'பிடிச்சிருக்கு ஆனா எனக்கு வேற எந்த ஃபீலிங்கும் வரல, அழகா இருக்காங்க, படிச்சிருக்காங்க மே பி  பார்க்க பார்க்க தோண்ணலாம்', என்று நினைத்துக் கொண்டே ஓட்டினான்.

'19 ஆம் நம்பர் தானே அந்த பொண்ணு வீடு', என்று மூன்று வீடு தள்ளி இருக்கும் போதே யோசித்தான். அப்பொழுது 19 ஆம் நம்பர் வீட்டின் காம்பவுண்ட் சுவரிலிருந்து ஒருவன் கீழே இறங்க முயற்சி செய்வது தெரிந்தது.

'ஓ மை காட்.. திருடன்.. மணி பன்னிரெண்டு தான் ஆகுது, இந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்றனோ!! இல்லையோ!!, இவன புடிச்சு கொடுக்கணும் ', என்று வண்டியை அங்கேயே நிப்பாட்டி விட்டு மெதுவாக பக்கத்தில் வந்தான். திருடன் கீழே குதித்தான். பின்னாலிருந்து இருக்கமாக திருடனை பிடித்து," திருடன்.. திருடன்..", என்று சத்தம் போட்டான்.

"ஐயோ நான் திருடனில்ல" , என்றாள் ஒரு பெண்.

அப்பொழுதுதான் அவன் நிற்கும் நிலையும் அவள் சருமத்தையும் உணர்ந்து வேகமாக கையை எடுத்து, "திருடியா ", என்று நக்கலாக கேட்டுக்கொண்டே அவள் ஓடாமல் இருக்க அவள் கையை இறுக்கமாக பிடித்தான்.

"இல்ல இல்ல நான் திருடியும்  இல்லை", என்றாள் வேகமாக.

அந்த இடம் லேசான வெளிச்சம் மட்டும் இருந்ததால் அவள் முகம் அவனுக்கு தெளிவாக தெரியவில்லை, அந்த வீட்டிலிருந்து ஒரு நாய்  வெளியே வந்தது. இவன் அவள் கையை பிடித்து இருப்பதை பார்த்து, "லொள்... லொள்..", என்று  குறைக்க ஆரம்பித்தது.

"ஏய் ஸ்கூபி குறைக்காத வீட்ல இருக்க எல்லாரையும் எழுப்பிடாத, இவர் என் ஃப்ரெண்ட் தான்", என்றாள் பொறுமையாக. நாய் அவன் முகத்தை உற்றுப் பார்த்தது.

"ஓ... நாயக் கூட கரெக்ட் பண்ணி திருடுறியா, இது என்ன புது டெக்னிக்கா... ?? உன்ன என்ன பண்றேன் பாரு", என்றான் காட்டமாக.

"லொள்... லொள்", என்று குறைத்தது.

"ஸ்கூபி ப்ளீஸ் அப்பாவ எழுப்பிடாத, அந்த கிழவிக்கு உன் சத்தம் கேட்டா உடனே எழுந்து வந்துரும்", என்றாள் கெஞ்சலாக. ஸ்கூபி அமைதியானது. ஷ்யாம் வித்தியாசமான பார்வை இருவர் மேல்  செலுத்தினான்.

"நான் இந்த வீட்டு பொண்ணு தான், திருடியா இருந்தா பெரிய பேக் எடுத்துட்டு வருவாங்க, இங்க பாருங்க என்கிட்ட சின்ன சைட் பேக் மட்டும் தான் இருக்கு வேற எதுவும் இல்ல", என்று காட்டினாள்.

"நீ சொல்றத நான் எப்படி நம்புறது??".

"நான் உண்மையைதான் சொல்றேன், இது இந்த வீட்டு நாய் தான் என் பாதுகாப்புக்காக வந்திருக்கு", என்றாள் உண்மையாக.

"சரி இந்த வீட்டு பொண்ணுன்னே வச்சுக்கலாம், இந்த நேரத்துல எங்க போற??", என்றான் விடாமல்.

"இன்னைக்கு தலைவர் படம் ரிலீஸ் நைட்டு சோ டிக்கெட் தான் கிடைச்சது, என் பிரண்ட்ஸ் ரெண்டு பேரு தெருமுனையில நிப்பாங்க, ஸ்கூபி தெருமுனையில என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட விட்டுட்டு போக தான் வந்து இருக்கு, உங்களுக்கு சந்தேகம் இருந்தா வாங்க என் ஃப்ரெண்ட்ஸ இன்ரோ பண்றேன்", என்றாள் உறுதியாக.

"சரி வா நான் உன் கூட வரேன்", என்று அவள் கையை விட்டுவிட்டு அவளுடன் நடந்தான்.

"ஸ்கூபி நான் சொன்னல்ல இவர் என் ஃப்ரெண்டுன்னு , நீ இன்னும் சத்தம் போட்டு இருந்த எல்லாரும் வந்திருப்பாங்க ,நான் வசமா மாட்டி இருப்பேன்", என்று புலம்பினாள். ஸ்கூபி அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு அவளுடன் நடந்து வந்தது.

"ஆமா இந்த நேரத்துல இப்படி போறது சேவ்ஃப் இல்லைல்ல அப்புறம் ஏன் போற??", என்றான் அக்கறையாக.

"மார்னிங் காலேஜ், ஈவினிங் வீட்டுக்குள்ள வந்துட்டா வெளிய எங்கேயும் போகமுடியாது, நைட் சோ மூவி போகணும்னு ரொம்ப நாள் ஆசை, சொல்ல மறந்துட்டேன் என் பெயர் அபூர்வ வர்ஷினி, எல்லாரும் அபுன்னு கூப்பிடுவாங்க, நீயும் அப்படியே கூப்பிடலாம் ஃப்ரெண்ட்ஸ் ", என்று திரும்பி நின்று சிரிப்புடன் கை நீட்டினாள்.

அந்த இடத்தில் வெளிச்சம் நன்றாக இருந்ததால் அவள் முகத்தை அப்போது தான் பார்த்தான். அகன்ற நெற்றியும், பேசும் கண்களும் அதில் தெரியும் சோகமும், அளவான நாசியும், சிரிக்கும்போது குழி விழும் குண்டு கணமும், செவ்விதழும் , காதில் குட்டி வளையமும், வீட்டில் கொண்டை போடுட்டு கேச்சரில் முடியை தலை சிவாமல் அடக்கி வைத்திருந்தாள், தன் அழகை உணராமல்  இருப்பவளை கூர்மையுடன் அவளை பார்த்தான்.

"நீ என் ஃபிரண்ட் இல்லையா??", என்றாள் சோகமாக.

"ஏய் அப்படி எல்லாம் இல்ல ஃப்ரெண்ட்ஸ்",  என்று கை குலுக்கினான்.

சிரிப்புடன் கையை விலக்கினாள். தெருமுனையில் இவர்கள் நண்பர் கௌதம் மற்றும் தீபன் நின்றனர். "அவங்க தான் என் ஃபிரண்ட்ஸ்", என்று கை தூக்கி காட்டினாள்.

"ஏய் நாயே வராத வராதன்னு சொன்னா கேக்காம வந்து நிற்கிற, டிக்கெட் கிடைக்கலைன்னு சொல்றதுக்குள்ள ஏன்டி போன்ன வச்ச", என்று சத்தம் போட்டு கொண்டு நெருங்கி வந்தனர் இருவரும்.

"என்னது டிக்கெட்டு கிடைக்கலையா?? பிரியா சொன்னாலே!!", என்றாள் பாவமாக.

"அவ ஒரு லூசு, டிக்கெட் கிடைக்கவே இல்லை, போன் எங்க??", என்றான் தீபன் கோபமாக.

"பேக்ல சைலன்ட்ல இருக்குடா", என்று முழித்தாள்.

"ஏய் ரெண்டு பேரும் இருங்க, ஆமா இவரு யாரு??", என்றான் கௌதம்.

"என் புது ப்ரெண்ட் உன் பெயரென்ன??", என்றாள் அவனிடம்.

"ஷ்யாம் யூதன்".

"லொள்... லொள்..", என்று குறைக்க  ஆரம்பித்தது.

"ஸ்கூபி ஷட்டப் டா", நாய் குறைத்தில் முற்பாதி பெயர் அவள் காதில் விழாமல் பிற்பாதி மட்டுமே  விழுந்தது, "யூதன் இவன் கௌதம், இவன் தீபன்", என்று அறிமுகம் செய்தாள்.

"சார் இவ ஒரு லூசு தப்பா எடுத்துக்காதீங்க, இவ இப்படித்தான் ஃப்ரெண்ட் பிடிச்சிட்டா மரியாத இல்லாமல் பேசுவா , உரிம எடுத்து பேசுவா  தப்பா எடுத்துக்காதீங்க", என்றான் கௌதம் தயங்கியபடி.

"நோ ப்ராப்ளம் எனக்கு இவ கிட்ட பேசுற அப்பவே புரிஞ்சு போச்சு, எனக்கு இப்படி பேசுறது பிடிச்சுருக்கு தப்பா தெரியல,இதான் என் விசிட்டிங் கார்டு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணுங்க", என்று இருவரிடமும் தன் கார்டை கொடுத்தான்.

"தேங்க்ஸ் சார் ", என்றனர்.

"ஏய் லூசு இனிமே போன் எடுத்த எங்கள கொஞ்ச பேச விடு, நீ வருவேன்னு தான் வேஸ்டா இந்த தெருவுக்கு வாட்ச்மேன் மாதிரி நிக்கிறோம் டி ", என்றான் தீபன் பொய்யான கோபத்துடன்.

"ஓ.. அப்ப என் வீட்டு முன்னாடி வந்து நிக்க வேண்டியது தானே!!!", என்றாள் குத்தலாக.

"யாரு உங்க அப்பா விருமாண்டி கிட்ட திட்டு வாங்குறது???  நீ எங்கள பார்த்தா ஏழு ஊருக்கு கேக்குற மாதிரி கத்தி பேசுவ, அப்ப உங்க அப்பா எங்களை பிடிச்சுக்கவா அதுக்கு வேற ஆள பாரு மா", என்று தூசி தட்டுவது போல் செய்தான் கௌதம்.

"ம்ம்... இது எல்லாம் தெரிஞ்சு தானே உங்கள தெருமுனையில நிற்க சொன்னேன், சரி ஓகே டைம் ஆச்சு போய் தூங்குங்க நானும் வீட்டுக்கு போறேன், ஸ்கூபி நாம போலாமா", என்றாள். உடனே அது மண்டையை ஆட்டியது. "ஸ்வீட் பாய்", என்று குனிந்து அணைத்து முத்தமிட்டாள். அபுவின் ஒவ்வொரு அசைவும் ஷ்யாம் அறியாமல் அவன் மனது உள்வாங்கியது.

"ஏய் கொஞ்சுனது  போதும்டி நீ கிளம்பு ", என்றான் தீபன்.

"நீங்க ரெண்டு பேரும் கூட வரலயா??", என்றாள் வேண்டுமென்றே.

"உன் அப்பன் விருமாண்டி கிட்ட யாரு மாட்டிகிறது?? எப்படி வந்தியோ அப்படியே போயிடு", என்றான் கௌதம் விளையாட்டாக. ஆபு முறைத்தாள்.

"இவ வீட்டு பக்கத்துல தான் என் கார் நிப்பாட்டி வச்சிருக்கேன், நான் விட்டுட்டு போறேன் ", என்றான் ஷ்யாம்.

"தேங்க்ஸ் சார் ஆமா இந்த அர்த்த ராத்திரியில்ல இவர எப்படி ஃப்ரெண்டு பிடிச்ச", என்றான் தீபன் கிண்டலாக. ஷ்யாம் நடந்ததை சொன்னான் .கௌதம் மற்றும் தீபன் விழுந்து விழுந்து சிரித்தனர்.

"இது ஒன்னும் அவ்லோ பெரிய காமெடி இல்லையே!!", என்றாள் பொய்யான முறைப்புடன்.

"எங்களுக்கு தெரியும் என்னைக்காச்சும் நீ இப்படி வந்து நிப்பேன்னு, நீ சொல்ரத சார்  நம்பினதுனால  தப்பிச்ச  இல்லனா", என்றான் கௌதம்.

"இல்லன்னா என்ன போலீஸ்கிட்ட மாட்டியிருப்பா, போலீஸ் கிட்ட மாட்டுனா கூட கவலைப்பட மாட்டா அவங்க அப்பா விருமாண்டி கிட்ட மாட்டினா அவ்வளவுதான், இனிமே இப்படி வராத அபு, உன் நல்லதுக்கு தான் சொல்றேன்", என்றான் தீபன் விளையாட்டுத்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு.

"ம்ம் புரியுது போன் அட்டென்ட் பண்ணி பேசிட்டு வரேன்", என்றாள் குறும்புடன்.

"உன்ன...", என்றனர் இருவரும் கோபமாக.

"ஓகே.. ஓகே.. இனிமே இப்படி பண்ணமாட்டேன், யூது வா போலாம் ", என்றாள் சாதாரணமாக.

"பாய் மறுபடியும் ஒரு நாள் மீட் பண்ணலாம்", என்று அவளுடன் சென்றான்.

"உன் மேல உன் ஃப்ரெண்ட்ஸ்கு ரொம்ப பாசம் ஆபு, எப்படி தெரு முனையில நின்னு நம்மள பாக்கிறாங்க பாரு, உன்னைய கடத்திட்டு போயிடுவேன்னு பார்க்குறாங்களோ", என்றான் சிரிப்புடன்.

"என்னைய கடத்திட்டு போனா உன் நிலைமை கவலைக்கிடமா மாறிடும் ,அதுக்குதான் உன்னை காப்பாத்த நின்னு பார்க்கிறாங்க", என்றாள் கிண்டலாக. ஷ்யாம் சிரிப்புடன் அவளை பார்த்தான்.

நண்பர்களையும் விட்டுக்கொடுக்காமல் தன்னையும் விட்டு கொடுக்காமல் பேசும் அவளின் எண்ணம் அவன் மனதில் அவள் மேல் மதிப்பை உருவாக்கியது.

"ஓகே யூது நாம மறுபடியும் பார்க்கலாம்", என்று சுவர்மேல் இவள் ஏறுவதற்காக ஓர் பெரிய கல்லை போட்டு வைத்திருந்தாள். அந்த கல் மேல் ஏறினாள்.

"எப்ப பாக்கலாம், என்னைய மறந்துட்டானா ", என்றான் விளையாட்டாக.

அபு சிரித்துக்கொண்டே , "இவ்ளோ ஹேன்ட்சம் பாய்ய  யாராச்சும் மறப்பாங்களா ம்ம் ",என்று புருவம் உயர்த்தி இறக்கினாள்.

ஷ்யாம் சிரிப்புடன்," உன்னைய பார்த்ததுல எனக்கு ரொம்ப ஹேப்பி", என்றான் உண்மையான சந்தோஷத்துடன்.

"எனக்கும் தான் யூது", என்று காம்பவுண்ட் சுவரின் மேல் ஏறி உட்கார்ந்து அவனை பார்த்தாள்.

"பத்திரமா வீட்டுக்கு போ யூது, ஸ்கூபி கேட் இன்  டா ", என்றாள் சிரிப்புடன்.

ஸ்கூபி  ஷ்யாமை ஒர் பார்வை பார்த்து அவன் கால் பக்கத்தில் வந்து நின்றது. ஷ்யாம் குனிந்து,"
என்ன ஸ்கூபி குட் நைட் ",என்று லேசாக அணைத்து அதன் தலையை தடவி விட்டு எழுந்தான்.

"ஸ்கூபிக்கு உன்னைய ரொம்ப பிடிச்சு இருக்கு அதான் இப்படி பண்ணுது யூது, டைம் ஆச்சு ஸ்கூபி கேட் இன்", என்றாள்.
ஸ்கூபி கேட்டை தாண்டி உள்ளே  வேகமாக சென்றது.

"பாய் பாய் யூது பத்திரமா போயிட்டு வா, குட்நைட்", என்று உள்ளே மெதுவாக இறங்கி சென்றாள்.

ஷ்யாம் உதட்டில் சிரிப்பு உறைந்து நின்றது. வண்டியை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி சென்றான்.' என்னைய இவ யூதன்னு  கூப்பிட்ட, அப்பறம் யூதன் யூதுவா மாறி  போச்சு, காலேஜ் படிக்கிறவ  இப்படி என் பேர சொல்லி கூப்பிடுடான்னு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னா, என்னைய ஓட்டி தள்ளிடுவான்னுங்க', என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில்," அம்மா பூர்ணா இங்க வாடா", என்று பாசமாக  அழைத்தார் சந்திரமோகன்.( அபுவின் அப்பா, நம்ம பாஷைல சொல்லணும்னா விருமாண்டி)

"என்னப்பா??", என்று பக்கத்தில் உட்கார்ந்தாள் பூர்ண வர்ஷினி (அபுவின் அக்கா).

"இந்த போட்டோல இருக்க பையன பாரு", என்று தந்தார்.

"ம்ம் பையன் அழகா இருக்கான், யாருப்பா??".

"உனக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை, ஃப்ரெண்ட்ஸ் மூணு பேரு சேர்ந்து சொந்தமா கம்பெனி வச்சி இருக்காங்க,  பெரிய பணக்கார குடும்பம் மொத்த சொத்துக்கும் இவன்தான் வாரிசு, கூட பிறந்தவங்க யாரும் இல்ல, ஊட்டி, கொடைக்கானல்ல எஸ்டேட், கெஸ்ட் ஹவுஸ் இப்படி இன்னும் நிறைய இருக்கு, பையன் லண்டன்ல எம்பிஏ படிச்சுருக்கேன், விசாரிச்ச வரைக்கும் ரொம்ப நல்ல பையன்னு தான் சொன்னாங்க, பவானி குரூப் ஆப் கம்பெனி இவங்களோட தான், இவங்களுக்கு உன்னைய பிடிச்சிருக்கு, நீ ஓகே சொன்னா சண்டே வர சொல்லலாம்", என்றார்.

ஒரு நிமிடம் யோசித்து விட்டு," எங்க அப்பாவுக்கு என்ன இஷ்டமோ அதான் என் இஷ்டம், வர சொல்லுங்க பா", என்றாள் சிரிப்புடன்.

"டேய் மோகன் நான் சொன்னேன்ல பூர்ணா ஒத்துப்பான்னு பார்த்தியா", என்றார் ராஜாத்தி பாட்டி(அபுவின் பாட்டி) சந்தோஷமாக.

"என் பொண்ணு இல்ல அப்படிதான் இருப்பா", என்றார் பெருமையாக. இதனை இரு ஜோடி கண்கள் பார்த்தது. ஒன்று ஏக்கமாகவும் இன்னொன்று சலிப்புடனும் பார்த்தது.

அபுவின் ஞாபகம்  அடிக்கடி ஷ்யாம்கு வந்தது. அவன் நண்பர்களிடம் கூட அபுவை பற்றி சொல்லாமல் மறைதான்.  இப்படியே ஞாயிற்றுக்கிழமை வந்தது.

பொண்ணு பார்க்க அன்பு செல்வன், பவானி, நிதிலா மற்றும் ஷ்யாம் சென்றனர் .சந்திரமோகன் மேகலா மற்றும் ராஜாத்தி வரவேற்றனர். மேகலா அனைவருக்கும் பலகாரம் பரிமாறிவிட்டு பூர்ணாவை அழைத்து வந்தார்.

"உட்காருமா இந்த பார்மாலிட்டி எல்லாம் வேண்டாம் ", என்றார் பவானி.

பூர்ணா லேசான சிரிப்புடன் அவர்களுக்கு எதிர் சோபாவில் உட்கார்ந்தாள். ஷ்யாமின் கண்கள் அவ்வபோது வீட்டை நோட்டமிட்டது.

"இவ என் அண்ணேன் பொண்ணு, என் பொண்ணு மாதிரி தான், அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு தெரிஞ்சதும் நானும் வருவேன்னு வந்துட்டா" , என்றார் அன்பு சிரிப்புடன்.

"இப்படி தான் தம்பி இருக்கணும் அக்கறையா", என்றார் ராஜாத்தி பாட்டி சிரிப்புடன்.

"ரெண்டு பேரும் தனியா பேசணும்னா  பேசுங்க, நீங்கதான் வாழ போறீங்க, என்னமா நான் சொல்றது ", என்றார் அன்பு தன் கருத்தை நடக்க வைப்பது போல்.

"ம்ம்.. சரி தான் பா பூர்ணா தம்பிய அழைச்சிட்டு போய் பேசுமா", என்றார் பாட்டி.

"சரி பாட்டி வாங்க", என்று கீழே இருந்த ரூமிற்கு அழைத்து சென்றாள்.

"ஹாய் என் பேர் ஷ்யாம் யூதன், என் ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து எஸ்ஏஎன் கம்பெனி வச்சிருக்கோம் ",என்றான் சிரிப்புடன்.

"ஹாய் ஷ்யாம் நான் பூர்ண வர்ஷினி ,எம்பிஏ இங்க தான் படிச்சேன், இப்போ ஒரு பிரைவேட் கம்பெனில ஹச் ஆர்ரா ஒர்க் பண்றேன்", என்றாள் லேசான சிரிப்புடன்.

"குட் பூர்ணா உங்களுக்கு என் கிட்ட ஏதாச்சும் கேட்கணுமா கேளுங்க", என்றான் அதே சிரிப்புடன்.

"கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக விடுவீங்களா??", என்றாள் கூர்மையான பார்வையுடன்.

"அது உங்க இஷ்டம் அது உங்களோட சுதந்திரம் அதுல நான் தலையிட மாட்டேன் ", என்றான் உண்மையாக.

"தேங்க்யூ.. என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா", என்றாள் எதிர்பார்ப்புடன்.

"தேங்க்யூ... எதுக்கு உங்க சுதந்திரத்தை பறிக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை, நைட் பத்து மணிக்குள்ள  வீட்ல இருக்கணும் ஏன்னா உங்க சேப்டிகாக மட்டும் தான், அப்புறம் ம்ம்... யா உங்களுக்கு??", என்றான்.

சேப்டிகாக என்று அவன் சொன்னதில் உள்ள அக்கறையை அவள் மனம் உணர்ந்தது." ம்ம்.. பிடிச்சிருக்கு", என்றாள் சிரிப்புடன்.

"வேற ஏதாச்சும் கேட்கனுமா??", என்றான்.

"இப்போதைக்கு எதுவும் இல்லை, உங்களுக்கு??".

"அப்ப சரி எனக்கு எதுவும் இல்லை, வாங்க வெளிய போலாம்", என்று சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர். இவர்கள் முகத்தை பார்த்து பெரியவர்கள் புரிந்து கொண்டனர். ஷ்யாம் மற்றும் பூர்ணா அவரவர் இடத்திலேயே வந்து உட்கார்ந்தனர். இருவரும் தன் சம்மதத்தை சொன்னார்கள்.

"நிதிலா கல்யாணம்  முடிஞ்சதுக்கு அப்புறம் இவங்க கல்யாணத்த வச்சிக்கலாம்  சம்மந்தி ", என்றாள் அன்பு.

"சரிங்க சம்மந்தி ",என்றார் மோகன் சந்தோஷமாக.

ஸ்கூபி உள்ளே  வந்து பூர்ணாவின் காலடியில் நின்றது. ஸ்கூபிய பார்த்ததும்,' இது கன்ஃபார்மா அபு வீடு தான் அவ எங்கே??', என்று நினைத்தான்.

"இந்த டாக் உன் பெட்டா மா, உனக்கு பெட்னா ரொம்ப பிடிக்குமாடா", என்றார் பவானி அன்பாக.

"ஆமா ஆன்ட்டி இது சின்ன வயசுல இருந்தே என் கூட தான் இருக்கு, ஸ்கூபி சிட் டவுன்".

அது அவளின் காலடியில் உட்கார்ந்து. சமையலறையை அவ்வபோது பார்த்துக் கொண்டு இருந்தது. அதை பார்த்த ஷ்யாம் விக்கல் எடுப்பது போல் நடித்தான்.

"ஏய் அபு மாப்பிள்ளைக்கு விக்கல் வருது பாரு தண்ணி கொண்டு வா", என்றார் பாட்டி.

கையில் டிரேயில் தண்ணி தம்லரும் லாங் ஸ்காட் மேலே ஓர் சுடிதார் டாப் போட்டு, தலைமுடியை ஒரே கேச்சரில் அடைந்து, முகத்தில் சிறிய கருப்பு நிற பொட்டில் அவனுக்கு தேவதையாக தெரிந்தாள். தண்ணீரை அவனிடம் தந்துவிட்டு  அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவின் பின்னால் சென்று நின்றாள்.

"இவ என் ரெண்டாவது பொண்ணு பேரு அபூர்வ வர்ஷினி, பைனல் இயர் படிக்கிறா", என்று அறிமுகப்படுத்தினார் மோகன்.அபு லேசாக அனைவரையும் பார்த்து சிரித்தாள். அவள் சிரிக்கும்போது அவள் கன்னக்குழி அழகாக தெரிந்தது.

"என்ன அண்ணி உங்க சிஸ்டர் ரொம்ப சைலன்டா பேச மாட்டாங்களா??", என்றாள் நிதி. ஷ்யாம் தண்ணீரைக் குடித்தான்.

"அவ யார்கிட்டயும் பேசமாட்டா, ரொம்ப சைலன்ட், எங்க கூட எங்கேயும் வெளியே வரமாட்டா, சரியான தனிமை விரும்பி", என்றாள் லேசான கடுப்பை மறைத்துக் கொண்டு.

ஷ்யாமிக்கு புரை ஏறியது," பார்த்து.. பார்த்து..", என்றனர்.

ஷ்யாம் அவளை பார்த்தான். அவள் மற்றவரை பார்த்தாள் அவரவர் பேசிக்கொண்டு இருந்தனர். ஷ்யாமை பார்த்து நாக்கை நீட்டி பழிப்பு காட்டிவிட்டு சத்தம் வராமல் பேசுவதுபோல் சைகை செய்து சிரித்தாள். ஷ்யாமின் முகத்தில் சிரிப்பு பரவியது. இதனை நிதிலா கவனித்துவிட்டு ஷ்யாமையும் அபுவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

"அண்ணா..", என்றாள் மெதுவாக.

ஷ்யாம் அவன் உதட்டின் மேல் கை வைத்து யாரும் அறியாமல், "அமைதியாய் இரு", என்றான் மெதுவாக. ஸ்கூபி எழுந்து அபுவை பார்த்தது.

"என்ன ஸ்கூபி ஏன் எழுந்துட்ட??", என்றாள் பூர்ணா. அபு ஸ்கூபி உட்காரு என்று சைகை செய்தாள். அவளை அது ஏக்கமாக பார்த்தது.

"ஓ.. இவ நிக்கிறான்னு பார்க்கிறியா??, இவளுக்கு தான் உன்னைய பிடிக்காதுல்ல அப்புறம் ஏன் அவள பார்க்குற?? சிட் டவுன்", என்றாள் கண்டிப்பான குரலில்.

அபு கெஞ்சுவது போல் ஸ்கூபி பார்த்தாள் ஸ்கூபி அங்கேயே உட்கார்ந்தது.

"பூர்ணா..",என்றார் பாட்டி கண்டிப்புடன். "அது ஒன்னும் இல்ல சம்மந்தி சின்ன குட்டிக்கு நாயே பிடிக்காது ஆனா பாருங்க இந்த நாய் அவ கிட்ட தான் போகணும்னு அவளையே ஏக்கமா பார்க்குது  அதான் இப்படி சொன்னா",  என்று பாட்டி சமாளித்தார்.

"சாரி..", என்றாள் பூர்ணா பொதுவாக.

"அட என்னமா இதுல என்ன இருக்கு பிடிச்சவங்க கிட்ட தானே கோவத்த காட்டமுடியும், நாங்க தப்பா எடுத்துக்கல, என்ன பவானி??", என்றாள்  அன்பு.

"ஆமா பூர்ணா  அதுகிட்ட எல்லா உரிமையும் உனக்கு இருக்கு", என்றார் பெருந்தன்மையாக.

ஷ்யாமிருக்கு குழப்பமாக இருந்தது. முதலில் பார்த்த அபுவிற்கும் இப்பொழுது பார்க்கும் அபுவிற்கும் மொத்தமாக மாறி இருந்தாள் அவளை உற்று பார்த்தான். அவள் முகத்தில் லேசான சோகம் வந்து நொடியில் மறைந்து சாதாரணமாக மாறியது. ஆனால் அவள் கண்களில் மட்டும் அந்த சோகம் இருந்தது.' முன்னாடி பார்க்குறப்ப இவ கண்ல ஏதோ சோகம் தெறிர மாதிரி இருந்தது அது என் பிரம்மன்னு நினைச்சேன்,  அது  உண்மைன்னு இப்ப புரியுது', என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

"அப்ப நாங்க கிளம்புறோம் சம்மந்தி நிதிலா நிச்சயத்துக்கு அண்ணனோட அழைக்க வரோம்", என்றார் அன்பு.

"சரிங்க சம்மந்தி ", என்றார் மோகன் சிரிப்புடன். அனைவரும் கிளம்பி செல்ல போகும் போது அவளை யாரும் அறியாமல் பார்த்து ஷ்யாம் லேசாக தலை அசைத்தான். யாரும் அறியா வண்ணம்." பாய்", என்று கையை தூக்கி காட்டினாள்.

இந்த வீட்டிற்கு வரும்போது லேசா மனதுடன்  வந்தவன் இப்பொழுது பல கேள்விகளுடன் சுமையோடு சென்றான்.

அந்த இரு ஜோடி கண்கள் யார்???? எதனால் அபு இப்படி வெளியே ஒரு மாதிரியும் உள்ளே ஒரு மாதிரியும் இருக்கிறாள்??? ஷ்யாம் எதனால் அபு இப்படி இருக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பானா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்........

💗வரமாய் வருவேனடி💗....

 

This post was modified 1 month ago by Ramya Anamika

நல்லாதே நினை நல்லதே நடக்கும்..
அன்புடன் ,
ரம்யா அனாமிகா


ReplyQuoteRamya Anamika
(@anamika)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 58
29/12/2019 1:38 pm  

ஹாய் கண்மணிஸ் கதை எப்படி போகுது உங்க கருத்த சொன்னா எனக்கு எழுத உதவியா இருக்கும்😊😊😊 இதோ அடுத்த அத்தியாயம்.....

 

💖வரம்-2💖

"ஏய் ஸ்கூபி அவளுக்கு தான் உன்னைய பிடிக்காதுல்ல, அப்புறம் எதுக்கு அவளையே பாக்குற, இந்த மாதிரிலாம் பண்ணுன உன்னைய கொண்டுபோய் எங்கயாச்சும் விட்டுட்டு வந்திடுவேன்", என்றாள் பூர்ணா கோபமாக.

"ஏய் பூர்ணா உன்னையத் தான் சொல்லனும் டி, இந்த நாய நீ தானே வளக்கனும்னு சொல்லி கேட்ட, உன்னையத் தானே பொண்ணு பார்க்க வந்திருக்காங்க கவனமாய் இருக்க வேணாமா, நான் நடுவுல சமாளிக்காம இருந்திருந்தா இந்த வரன் நம்ம கைய விட்டுப் போயிருக்கும்", என்று பாட்டி திட்டினார்.

"ஆமா நான் தான் எல்லாத்துக்கும் காரணம், உங்க சின்னப் பேத்தி செல்லப் பேத்தியை எதுவும் சொல்லாதீங்க ", என்றாள் கோபமாக.

"யாரு செல்லப் பேத்தி அவளா?? இல்ல நீயா??? இந்த நாய் அவளப் பார்த்தா உனக்கு என்ன வந்துச்சு இத பத்தி பேச அதுதான் நேரமா, அப்பப் பேச கூடாதுன்னு உனக்குத் தெரியாது", என்றார் கோபமாக.

"ஆமா எனக்குத் தான் எதுவும் தெரியாது, உங்க சின்னப் பேத்தி செல்லப் பேத்திக்கு எல்லாம் தெரியும், இது என்னோட நாய் இது எப்படி அவளப் பார்க்கலாம் ", என்று கண்களைக் கசக்கினாள்.

"அட என்னம்மா  பூர்ணா இதுக்குப் போய் எதுக்கு அழுவுற, இப்ப இந்த நாய எங்கயாச்சும் அனுப்பனுமா  சொல்லு அனுப்பிடலாம் ", என்றார் மோகன் பாசமாக.

அபுவிற்கு பகிர் என்று இருந்தது. ஸ்கூபியை பார்த்து பூர்ணாவிடம் செல்லுமாறு சைகை செய்து கெஞ்சினாள். ஸ்கூபியும் அதை புரிந்து கொண்டு பூர்ணாவிடம் சென்று அவள் காலை நக்கி அவளை ஏக்கமாகப் பார்த்தது. "நான் என் ஸ்கூபிய எங்கயும் அனுப்ப மாட்டேன்", என்று அணைத்துக் கொண்டாள். அபுவிடமிருந்து பெருமூச்சு வந்தது.

"சரிமா உன் இஷ்டம்", என்றார் மோகன்.

"இந்த வரன் நல்ல படியாக அமைஞ்சுருச்சு மோகன் , இந்த கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சா போதும் ", என்றார் பாட்டி கவலையாக.

"அதுல ஒரு பிரச்சனையும் வராது கவலையை விடுமா", என்றார் ஆறுதலாக.

அபு அவள் ரூமிற்கு செல்லப் போனாள்."ஏய் சின்ன குட்டி எங்கப் போற???.

"ரூமுக்குப் போறேன் பாட்டி".

"நீ ரூமுக்குப் போயிட்டா, இதெல்லாம் யாரு சுத்தம் பண்ணுறது???,  உன் அம்மாவா??! அப்ப சமைக்கிறது யாரு??? உன் அக்காவா??! ", என்றார்  நக்கலாக.

"அத்த அவ ரூமுக்கு போகட்டும் நான் எடுத்து வச்சுட்டு சமைக்கிறேன் ", என்றார்  மேகலா. (அபுவின் அம்மா).

"ஏன் மகாராணி எடுத்து வச்சுட்டு போக மாட்டாங்களோ!!!", என்று கேட்டுக் கொண்டே வந்து மோகன் மற்றும் பாட்டியின் இடையில் உட்கார்ந்தாள் பூர்ணா.

"பூர்ணா உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன் பெரியவங்க பேசுறப்ப நடுவுல வராதான்னு , சரி வா உனக்கு சமையல் கத்துத் தரேன்".

"என்னம்மா உங்க பொண்ணுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசிட்டு அப்படியே சமாளிக்கிறீங்களா", என்றாள் நக்கலாக.

"நீயும் என் பொண்ணு தான் அத ஞாபகத்துல வச்சுக்க ", என்றார் கண்டிப்பான குரலில்.

"அப்பா பாருங்கப்பா, அம்மா என்னையே திட்றாங்க, நான் இந்த வீட்டுல இருக்குறது தான் எல்லாருக்கும் பிரச்சன", என்று புலம்பினாள்.

"அச்சோ அப்படி எல்லாம் இல்ல மா, ஏன்மா இப்படி பேசுற , ஏய் நீ ஒன்னும் சமையல் சொல்லித் தர வேணாம், அவ கத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல, அவளுக்கு கீழ வேல செய்ய நிறைய பேர் இருக்காங்க", என்றார் கோபமாக மேகலாவிடம்.

"ஏய் என்னடி வரவர உன் குரல் உயர்த்தி பேசுற, கால்னா காசுக்கு புரோஜனம் இல்லனாளும் பேச்சுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, ஏய் சின்னக் குட்டி எதுக்கு நிக்கிற வந்து சுத்தம் பண்ணு ", என்று திட்டினார் பாட்டி.

அபு எதுவும் பேசாமல் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். மேகலா தன் இளைய மகளின் நிலையை எண்ணி வருந்தினார் .மற்ற மூவரும் டிவியில் ஆழ்ந்தனர். சுத்தம் செய்து விட்டு தன் அறைக்குச் சென்றாள். மேகலா தன் போக்கில் வேலை செய்தாலும் அவர் மனம் பின்னோக்கி பயணம் செய்தது.

(பிளாஷ்பேக் ஸ்டார்ட்)

ராஜாத்தி மற்றும் சின்னையா அவருக்கு இரண்டு மகன்கள் ராஜமோகன் மற்றும் சந்திரமோகன். சின்னையா வசதியானவர் தன் சொந்த காலிலே நின்று சொத்து சம்பாதித்தவர். பல தொழில்களுக்கு அதிபதியாக இருந்தவர். ராஜாதி வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண். ராஜமோகன் கல்லூரி படிக்கும்போதே சின்னையா காலமானார். ராஜமோகன் தன் படிப்பை விட்டுவிட்டு தொழிலில் இறங்கினார். தன் தம்பியை நன்றாக படிக்க வைத்து அப்பா இல்லாத குறையைப் போக்கினார்.

ராஜாவுக்கு தன் சொந்த அண்ணன் மகள் வசதியும், அழகும் கூடிய சுந்தரியை திருமணம் செய்து வைத்தார் ராஜாத்தி. கல்யாணம் முடிந்து மூன்று வருடம் கழித்து ஒரு மகள் பிறந்தாள். அவள்தான் பூர்ண வர்ஷினி. நேத்திகடன் முடிக்க அனைவரும் இரு கார்களில் கோவிலுக்குச் சென்றனர். கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும்போது ராஜாத்தி, சந்திரமோகன், பூர்ணா ஒரு காரிலும், ராஜமோகன் சுந்தரி ஒரு காரிலும் வந்தனர். வரும் வழியில் ராஜமோகன் வந்த கார் விபத்தானது. அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியிலே சுந்தரியின் உயிர் பிரிந்தது. ராஜா சிகிச்சையில் இருந்தார். டாக்டர் காப்பாற்ற முடியாது காப்பாற்றுவது கஷ்டம் என்று கூறி இருவரையும் ராஜாவிடம் பேச அழைத்து சென்றார்.

"அண்ணே..",  என்றார் அழுகையுடன்.

"ராஜா..", என்று அழுதார் ராஜாத்தி. பூர்ணா 6 மாத குழந்தையாக மோகனின் தோளில் தூங்கிக் கொண்டு இருந்தாள்.

"மோகன் இனி பூர்ணா உன் பொண்ணு ,எந்த கஷ்டம் வந்தாலும் அவளை விட்டுறாத அவ ஆசைப்பட்டது எல்லாம் ஒரு அப்பாவா நீ எல்லாத்தையும் பண்ணுவேன்னு சத்தியம் பண்ணி கொடு ", என்று கை நீட்டினார்.

"அண்ணே அவ எப்போதுமே என் பொண்ணுதாண்ணே உனக்கு ஒன்னும் ஆகாது", என்று அழுதார்.

லேசாக சிரித்துக் கொண்டே, "சத்தியம் பண்ணு", என்றார் மீண்டும்.

"அண்ணே இவ ஆசைப்படுறது இவ நினைக்கிறது மட்டும்தான் நம்மளோட வீட்டில் நடக்கும் இது சத்தியம் ", என்று சத்தியம் செய்து கொடுத்தான். ராஜமோகன் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது, பிறகு காரியம் எல்லாம்  முடிந்தது.

மோகன் மற்றும் ராஜாத்தி பூர்ணாவைப் பார்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவராலும் குழந்தையை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். அதனால் மோகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தனர்." ஒரு குழந்தையுடன் யாரும் திருமணம் செய்ய  ஏத்துக்க மாட்டாங்க அதனால எனக்கு கல்யாணம் வேண்டாம் ", என்று மறுத்தார் மோகன்.

"நான் நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி  நம்ம தேவை எல்லாத்தையும் பூர்த்தி பண்ற மாதிரி நான் பார்த்து முடிக்கிறேன்",  என்றார் உறுதியாக.

"இல்லம்மா வரவ பூர்ணாவ நல்லா பாத்துப்பான்னு என்ன நிச்சயம், வசதியான பொண்ணு பூர்ணாவ பார்த்துக்க மாட்டா வசதி கம்மியா இருக்கிறவங்கதான் பார்த்துப்பாங்க, அப்படி பார்க்குறதா இருந்தா பாருங்க, இல்லனா வேணாம்", என்றார் முடிவாக.

"உன் இஷ்டம் என்னமோ பண்ணு  நம்மளால நாலு மாசம் கூட ஒழுங்கா பார்த்துக்க முடியல, வரவ என்ன பண்ணப் போறாளோ, வசதியான பொண்ணா இருந்தா கூட பரவால்ல இவன் இப்படி சொல்லுறான்", என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார் ராஜாத்தி.

மோகன் புரோக்கரை வரச்சொல்லி தன் மகளை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்கு சம்மதிக்கின்ற வரனாகப் பார்க்கச் சொன்னார். அப்படி பார்க்கும்போது கிடைத்தவர் தான் மேகலா. சாந்தமான குணம் கொண்டவர். வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர். ராஜாத்திக்கு மோகன் அவரை திருமணம் செய்ய விருப்பமே இல்லாமல் இருந்தார். திருமணம் நல்லபடியாக முடிந்தது. மோகன் பூர்ணாவுடன் அவர் அறையில் இருந்தார். மேகலா மோகனை எதிர்பார்க்காமல் பூர்ணாவிற்கும் பாலைக்  கொடுத்து தூங்க வைத்தார்.

"மேகலா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்".

"சொல்லுங்க".

"எனக்கு என் பொண்ணு தான் எல்லாமே அவ ஆசைப்படுறது தான் இந்த வீட்டுல நடக்கணும், நீ பூர்ணாவ எப்படி பார்த்துக்கிறியோ அத வச்சுதான் நமக்கு குழந்தை வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணுவேன்", என்றார் அழுத்தமாக.

மேகலாவின் மனம் உடைந்தது, நம்பிக்கை இல்லாமல் திருமணம் செய்து கொண்டார் என்று மனம் வலித்தது.
" சரிங்க இனிமே அவ உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் பொண்ணு தான், நம்ம பொண்ணுன்னு சொல்லுங்க", என்றார் பொறுமையாக.

"ம்ம்.. சரி அதே மாதிரி இவ நமக்கு பொறந்தவ இல்லன்னு இவளுக்கு என்னைக்குமே தெரியக் கூடாது", என்றார் கட்டளையாய்.

"நான் சொல்ல மாட்டேன்", என்றார் உறுதியாக.

"சரி", என்று பூர்ணாவின் பக்கத்தில் படுத்துக் கொண்டார் .பூர்ணாவின் மறுபக்கத்தில் மேகலா படுத்துக்கொண்டார். வீட்டில் அனைத்து வேலையும் மேகலா தான் செய்வார். செய்யவில்லை என்றால் ராஜாத்தி சாமி ஆடிவிடுவார் .பூர்ணாவைத் தன் மகளாகவே பார்த்தார்.

பூர்ணா மேகலா இல்லாமல் இருக்க மாட்டாள் அப்படி மாறிப் போனாள். இப்படியே  இரண்டு வருடம் சென்றது மேகலாவின் இந்த அணுகுமுறையில் ஈர்க்கப்பட்டு மோகன் அவருடன் வாழ ஆரம்பித்தார். அதற்கு பரிசாக அபு உருவானாள். அபு பிறக்கும் போது மேகலா தன் தாய் வீட்டிற்கு சென்றார். பூர்ணா அவர் இல்லாமல் அழுது உடல்நிலை சரியில்லாமல் போனது அதனால் குழந்தை பிறந்த பத்தே நாளில் தன் வீட்டிற்கே வந்து சேர்ந்தார்.

இப்படியே எந்த பிரச்சனையும் இல்லாமல் எட்டு மாதங்கள் சென்றது. இதைப் பொறுக்க முடியாத ராஜாத்தி  பூர்ணாவிடம், "ஏய் பூர்ணா நீ ஏன் எப்பப் பார்த்தாலும் அம்மா அம்மான்னு அவளையே சுத்திட்டு இருக்க, உன்ன அவளா பெத்தா, இப்ப அவளுக்கு அவ குழந்தை வந்திருச்சு இனிமே அவ எங்க உன்ன கவனிக்கப் போறா கவனிக்க மாட்டா", என்று  நான்கு வயது குழந்தையின் மனதில் நஞ்சை விதைத்தார்.

"பாட்டி என் அம்மா  எங்க???", என்று அழுதாள். ராஜா மற்றும் சுந்தரி போட்டோவை எடுத்து வந்து காட்டினார் .இதை எதையும் அறியாமல் அபுவிற்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தார் மேகலா.

"அம்மா.. அம்மா..", என்று கத்தி கொண்டே உள்ளே வந்தாள்.

"என்னடா வாவா பாப்பாவ பாரு எப்படி சிரிக்கிறா உன் குரல் கேட்டதும்", என்றார் அன்பாக.

"அம்மா நீ என் அம்மா இல்லையா??", என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

அபுவை கீழே படுக்க வைத்து விட்டு பூர்ணாவைத் தூக்கி மடியில் உட்கார வைத்து," நான் உன் அம்மாதான் பூர்ணா குட்டி அப்படி இல்லன்னு யார் சொன்னா?? நீ தான் என் முத பொண்ணு", என்று அணைத்து முத்தமிட்டார்.

"பாட்டி தான் சொன்னாங்க இவ வந்ததும் என்னைய கவனிக்க மாட்டீங்கன்னு ", என்றாள் அழுகையுடன்.

மேகலாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது." நான் உன் அம்மா தான் நீ என் பொண்ணு தான், நீ தான் எனக்கு முதல அப்புறம் தான் பாப்பா", என்று சமாதானம் செய்தார்.

அன்று மாலை மீண்டும் இதே பிரச்சனை வந்தது. மோகன் வந்ததும் பூர்ணாவை தூக்கிக் கொண்டு அபுவை பார்க்க ரூமிற்கு சென்றார்." அப்பா நான் உங்க பொண்ணு இல்லையா??", என்றாள் மீண்டும் அழுகையுடன்.

"அட என்னாச்சுடா என் பூர்ணாவுக்கு நீ என் பொண்ணு தான், ஏன் இப்படி எல்லாம் பேசுற??", என்றார் வருத்தமாக.

"பாட்டிதான் சொன்னாங்க எனக்கு பாப்பா வேணாம் இவள நீங்க கொஞ்ச கூடாது", என்று அழுதாள்.

இதனைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த மேகலா விற்கு பகீரென்று இருந்தது." பூர்ணா இப்படில்லாம் சொல்லக் கூடாது இவ உன் தங்கச்சி டா", என்றார் பொறுமையாக.

"இல்ல இவ என் தங்கச்சி இல்ல, இவளப் பார்க்க ஆரம்பிச்சா என்னையப் பார்க்க மாட்டீங்க", என்று மோகனிடம் இருந்து இறங்கி ஹாலுக்கு சென்று பாட்டியைக் கூப்பிட்டாள்.

மோகன் மற்றும் மேகலா இருவரும் ஹாலுக்கு வந்தனர் ."பாட்டி நீங்க தானே சொன்னீங்க, என் அப்பா அம்மா இவங்க இல்லன்னு, இவங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்துருச்சு இனிமே என்னைய பார்க்க மாட்டாங்கன்னு சொன்னீங்க தானே!!", என்றாள் பாட்டியிடம். பாட்டி முழித்தார்.

"அம்மா என்னம்மா இதெல்லாம்", என்றார் மோகன் கோவமாக.

"என்னடா நான் என்ன பொய்யா சொன்னேன், உண்மையைத் தானே சொன்னேன், உன் பொண்டாட்டி பொழுதன்னிக்கும்  அவ பெத்த புள்ள கூட தானே இருக்கா, நீ கூட வந்ததும் அவள தானே பார்க்கப் போற, இவ உன் பொண்ணா  இருந்திருந்தா இவளப் பார்க்காம போவியா?? இல்ல என்னையத் தான் பார்க்காம போவியா???", என்றார் கோபமாக.

"அம்மா..", என்றார் கோபமாக.

"என்னடா அம்மா, இவளே ஒரு பிச்சைக்காரக் குடும்பத்தச் சேர்ந்தவ, இவ கூட வாழ்ந்து குழந்தையும் பெத்துக்கிட்ட, உனக்குன்னு ஒரு குழந்தை வந்தா இவ மேல உனக்கு எப்படி பாசம் இருக்கும் , உன் அண்ணேன் குழந்தைய உன் குழந்தையா தானே வளர்ப்பேன்னு சத்தியம் பண்ணி இருக்க அத நீ சரியா பண்ணுறீயா!!??", என்றார் கோபமாக .

மோகன் விக்கிப் போய் நின்றார். அபுவைத் தூக்கிக் கொஞ்சும் போது அவரை அறியாமல் பாசம் அதிகம் ஆகியது. என் மகள், என் ரத்தம் என்ற எண்ணம் அவர் மனதில் ஓரத்தில் இருந்து எழுவதை அவரால் தடுக்க முடியாமல் போனது, அதை உணர்ந்தவர் குற்ற உணர்வு வந்தது.

"அத்த இப்ப  இவரு இவள என்ன பார்க்கல, இவளையும் அபுவையும் நாங்க பிரிச்சி பார்த்ததில்ல, நீங்க பிரிச்சுடாதீங்க, இவ என் பொண்ணு தான் இனி இப்படி பேசாதீங்க", என்று மேகலா கோவமாக பூர்ணாவை தூக்கிக் கொண்டு சமையல் அறைக்கு சென்று அவளுக்கு பாலைக் குடிக்க வைத்தார்.பாட்டி உள்ளே சென்றார்.

"பூர்ணா இங்க வாடா ", என்று மோகன் சோபாவில் உட்கார்ந்தார்.

பூர்ணா அவரின் மடியில் வந்து உட்கார்ந்தாள்." நீ என்னைய அப்பாவா தானே நினைக்கிற", என்றார் எதிர்பார்ப்புடன்.

"ஆமாப்பா", என்றாள் வேகமாக.

"இனிமே இப்படி பேசக் கூடாது, உனக்கு என்ன வேணும், என்ன வேணாம் உன் இஷ்டம் போல இருக்கலாம், இந்த வீட்ல யாரும் உன்னையத் தடுக்க மாட்டாங்க", என்றார் உறுதியாக.

"சரிப்பா நான் இப்படி பேச மாட்டேன் ஆனா நீங்க அபுவ தூக்கக்கூடாது, நீங்க என் அப்பா என் கூட தான் இருக்கனும்", என்றாள் கெஞ்சலாக.

மேகலாவின் காதுகள் அவர் கூறப்போகும் பதிலுக்காகக் காத்துக் கொண்டு இருந்தது.
" சரிடா நான் சொன்னேன்ல என் பொண்ணு என்ன நினைக்கிறாலோ அதான் நடக்கும்னு", என்றார் உறுதியாக.

"அப்பா..", என்று மகிழ்ச்சியில் அவர் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாள் அந்தச் சிறு குழந்தை.

"பூர்ணா குட்டி ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க அப்பாவுக்குச் சொல்லித் தறியா", என்று பேச்சை மாற்றி சமாதானம் செய்தார். அன்று இரவு மீண்டும் ஓர் பூகம்பம் வெடித்தது. மேகலாவின் பக்கத்தில் அபு படுத்திருந்தாள். அவளின் பக்கத்தில் பூர்ணாவும், பூர்ணாவின் பக்கத்தில் மோகன் படுத்து இருந்தனர். பூர்ணா எழுந்து மேகலாவிடம் வந்தாள்.

"என்னடா தூங்கலையா???", என்று தூக்கி மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

"அம்மா நான் தான் உன் பக்கத்துல படுக்கணும் இவள தொட்டில்ல படுக்க வைங்க", என்றாள் கிண்டலாக.

"என் பக்கத்தில் தானே படுக்கணும் நீ இந்தப்பக்கம் படு அபு இந்தப் பக்கம் படுக்கட்டும் அவ பாப்பால்ல", என்றார் பொறுமையாக.

"முடியாது அவளத் தொட்டில்ல போடுங்க, நான் அப்பா அம்மா நடுவுல படுக்கணும்", என்று சத்தம் போட்டு அழுதாள்.

மோகன் எழுந்து என்ன விஷயம் என்று விசாரித்தார்." பூர்ணா அழுகக் கூடாது அப்பா கிட்ட வா", என்றார்.

"முடியாது நான் அம்மாகூட தான் இருப்பேன் இவளத் தொட்டிலில் போடச் சொல்லுங்க ", என்று அழுதாள்.

"மேகலா அவளத் தொட்டில்ல போடு".

"சரி..", என்று போட்டார். பூர்ணா இருவரின் நடுவில் படுக்க வைத்து தூங்க வைத்தாள். நடு இரவில் அபு பசியில் லேசாக சிணுங்க ஆரம்பித்தாள். மேகலா எழப்  போனார், அவரை அணைத்துப் பிடித்து இருந்த பூர்ணாவை  விலகினார்.

"அம்மா எங்க போறீங்க??", என்று எழுந்து உட்கார்ந்தாள்.

"பாப்பா அழுகுறா டா  பால் கொடுத்துட்டு வரேன்", என்றார் பொறுமையாக.

"அம்மா என்னைய விட்டுட்டுப் போகாத", என்று அழுதாள்.

அபுவின் சிணுங்கல் நின்றது. பூர்ணாவைத் தூங்க வைத்தார். அடுத்து சிறிது நேரத்தில்  அபு அழுக ஆரம்பித்தாள். பூர்ணா மேகலாவை இம்மியளவும் கூட நகர விடாமல் செய்தாள். மோகனை மேகலா எழுப்பினார்.

"என்ன??".

"அபுக்கு இந்த பால குடுங்க இவ என்னைய விட மாட்டேங்கிறா", என்றார் கெஞ்சலாக. அபு அழுகை அதிகரித்தது. மோகன் சென்று பாலைக் கொடுத்தார். குழந்தையின் அழுகை குறைந்து தூங்க ஆரம்பித்தது.

பூர்ணா எழுந்து மோகன் பால் குடுப்பதைப் பார்த்ததும் அவனிடம் இறங்கி சென்றாள்." அப்பா இவ கிட்ட போக மாட்டேன்னு சொன்னீங்கல்ல", என்று அழுதாள்.

"பாப்பாவுக்குப் பசிக்கும் டா அதான் கொடுத்தேன் நீ வா தூங்கு", என்று தூக்கிச் சென்று படுக்க வைத்தார். மேகலா மற்றும் மோகன் இருவரையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். குழந்தையின் மனம் பாதித்ததால் பயத்தில் பூர்ணா அடிக்கடி எழுந்தாள். மேகலாவிற்கு அழுகையாக வந்தது. விடியற்காலையில் மீண்டும் அபு அழுதாள். மேகலா மற்றும் மோகனை எழவிடாமல் பூர்ணா பிடித்திருந்தாள். அழுத குழந்தை மீண்டும் தூங்கியது. மேகலா அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டே இருந்தார்.

மறுநாள் பூர்ணாவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு அபுவைப் பார்த்தார். அவள் சிரிக்கும்போது குழி அழகாக அவள் கன்னத்தில் விழுந்தது.
" நீ ஏன்டி இந்த பாவப்பட்ட வயித்துள வந்து பொறந்த, உன் சிரிப்பப் பார்த்தா உன்னைய அழவிட தோணுமா", என்று அழுதார்.

மோகன் ஃபைல் எடுக்க வீட்டுக்கு வந்தார். "என்ன மேகலா?? என்ன பண்ற?? ஏதாச்சும் வாங்கனுமா ??? சொல்லு வாங்கி தந்துட்டுப் போறேன்", என்றார்.

"ஆமா வாங்கனும்", என்றார் வெற்றுக் குரலில்.

"என்ன வாங்கனும்னு சொல்லு வாங்கிட்டு வந்து தரேன்".

"வரப்ப இந்த குழந்தைய கொல்ல விஷம் வாங்கிட்டு வாங்க", என்றார் கோவமாக.

"ஏய் இப்ப எதுக்கு இப்படி எல்லாம் பேசுற", என்றார் கோபமாக.

"வேற எப்படி பேசணும் சொல்றீங்க, எட்டு மாத குழந்தைக்குப் பால எடுத்து குடிக்கத் தெரியுமா, நைட்டு ஃபுல்லா பசில அழுதா, பூர்ணா கொஞ்சம் கூட நகர விட மாட்டேங்கிறா,  பக்கத்து ரூம்ல இருக்க உங்க அம்மாவுக்கு தெரியாதா குழந்த அழுகுறது, பசியில்ல அழுது சாகுறதுக்கு  ஒரேடியா விஷம் வச்சு சாவடிச்சுருறேன்", என்றார் கோபமாக.

மேகலா சொன்னதில் இருந்த உண்மை அவரைச் சுட்டது." கொஞ்ச நாளைக்கு நான் பூர்ணாவ பார்த்துக்குறேன், நீ அபுவ பார்த்துக்கோ", என்றார் .மேகலா எதுவும் பேசாமல்  அபுவைத் தூக்கிக்கொண்டு வேற ரூமிற்கு சென்றார்.

காலையில் சமைக்கத் தாமதம் ஆனதால்  அன்று மதியம் மேகலா பூர்ணாவுக்குச் சாப்பாடு குடுக்க அபுவைத் தூக்கிக்கொண்டு ஸ்கூலுக்கு  சென்றார். பூர்ணாவுடன் படிக்கும் குழந்தைகள் அபுவைப் பார்த்ததும் அவளைக் கொஞ்சினர். அவ கன்னக் குழி அழகில் மயங்கினார்கள். குழந்தையின் பெற்றோரும் இவளைத் தூக்கிக் கொஞ்சினார்கள். இது எல்லாம் பார்த்த பூர்ணாவிற்கு வன்மம் மனதில் உருவானது. அன்றிரவு மோகன் பூர்ணாவுக்குப் பிடித்த பொம்மை, சாக்லேட் என வாங்கிக் கொடுத்து தன்னுடனே வைத்துக் கொண்டார். மேகலா வேறு அறையில் படுத்துக் கொண்டார்.

நாட்கள் இப்படியே சென்றது அபுவின் சிரிப்புக்காக அவளைப் பார்க்க பக்கத்தில் இருக்கும் நிறைய பேர் வந்தனர். அவர்கள் யாரையும் வீட்டிற்குள் வரவிடாமல் பாட்டியை வைத்து தன் காரியத்தைச் சாதித்தாள்.

நாட்கள் அதன் போக்கில் சென்றது, மீண்டும் ஒரே அறையில் படுத்தனர். அபுவிற்குத் தனிப் படுக்கையாக மாறிப் போனது.
அபுவிற்கு ஐந்து வயது ஆனதும். நான்கு பேர் இருந்த அறை இப்போது மூன்று பேராக மாறியது. அபுவைத் தனி அறையில் படுக்க வைத்தனர். சிறுவயதிலிருந்தே தனியாக இருக்க பழகிக் கொண்டாள்.

"நான் படித்த ஸ்கூலில் அவளைச் சேர்க்கக்கூடாது", என்று பூர்ணா அழுதாள். அபுவை வேறு ஸ்கூலில் சேர்த்தனர். ஸ்கூலில் அவளுக்கு நெருங்கிய தோழியாக பிரியா மாறிப் போனாள்.

அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் அபு நேராக மேகலாவிடம் சென்று, "அம்மா.. அம்மா..", என்று புடவையைப் பிடித்து இழுத்தாள். பாட்டி மற்றும் பூர்ணா டைனிங் டேபிளில் உட்கார்ந்து இவர்களைப் பார்த்தனர்.

"என்னடா அபுகுட்டி ", என்று தூக்கி சமையல் மேடையில் உட்கார வைத்தார்.

"அம்மா இன்னைக்கு பிரியா ரசகுல்லா கொண்டு வந்தாம்மா, செம்ம டேஸ்டா இருந்தது எனக்கும் பண்ணி தாங்க ப்ளீஸ்", என்றாள் கெஞ்சலாக.

மேகலாவிடம் முதல் முதலாக அபு ஆசையாகக் கேட்டது இதுதான் என்பதால் ரொம்ப சந்தோஷப்பட்டார்." சரி டா குட்டி பண்ணித் தரேன் ஆனா அம்மாவுக்கு ரசகுல்லா பண்ணத் தெரியாது", என்றார் கவலையாக.

"அம்மா பிரியா அம்மாவுக்கு பண்ணத் தெரியும், இந்தாங்க இதான் பிரியா வீட்டு நம்பர் அவங்க அம்மா கிட்ட கேளுங்க பிரியா வீட்டுக்குப் போனதும் அம்மா கிட்ட சொல்லி இருப்பா", என்றாள் வேகமாக.

"சரி வா பேசலாம்", என்று தூக்கிக் கீழே இறக்கி விட்டுப்  போன் செய்து கேட்டார்.

"நீ போய் ட்ரஸ் மாத்திட்டு உடம்பெல்லாம் கழுவிட்டு வா நான் பண்ணித் தரேன் அபு ", என்றார் சிரித்துக்கொண்டே.

"சரிமா", என்று சிரிப்புடன் சென்றாள். செல்லும் அபுவைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு சமையல் அறைக்குச் செல்லப் போனார் மேகலா.

அபுவின் சிரிப்பு நிலைக்குமா??? அபு ஆசைப்பட்ட ரசகுலா அவளுக்கு கிடைக்குமா??? நடக்கும் சம்பவத்தினால் அபுவின் மனம் எப்படி மாறப்போகிறது??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.....

💗 வரமாய் வருவேனடி 💗....

 

This post was modified 1 month ago by Ramya Anamika

நல்லாதே நினை நல்லதே நடக்கும்..
அன்புடன் ,
ரம்யா அனாமிகா


ReplyQuote
Ramya Anamika
(@anamika)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 58
06/01/2020 9:41 am  

ஹாய் கண்மணிஸ் கதை எப்படி போகுது கண்மணிஸ்... Bore adikutha adhan yarumaye comment pannalaya... Next update poduren...

 

💖வரம்-3💖

(பிளாஷ்பேக் கண்டினியூ)

"அம்மா... அம்மா..", என்றாள்  பூர்ணா.

"என்னடா???", என்று பக்கத்தில்  வந்தார்  மேகலா.

"அம்மா எனக்கு குலோப் ஜாமுன் வேணும்".

"நாளைக்கு பண்ணி தரேன் டா, இன்னைக்கு ரசகுல்லா பண்ண போறேன்", என்றார் பொறுமையாக.

"நோ எனக்கு குளோப் ஜாமுன் இப்பவே வேணும்", என்றாள் பிடிவாதமாக.

"சரி ரெண்டுமே பண்ணி தரேன்".

"ஏய் உன் அப்பா வீட்ல இருந்து எடுத்துட்டு வந்து செய்வியா டி, ஒழுங்கா குலோப் ஜாமுன் மட்டும் பண்ணு", என்றார் பாட்டி கண்டிப்புடன்.

"சரி", என்று உள்ளே சென்றார். குலோப்ஜாமுன் செய்துவிட்டு, மூன்று உருண்டை மட்டும் அபுக்காக ரசகுல்லா செய்தார். குலோப்ஜாமுனை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து பூர்ணா மற்றும் பாட்டிக்கு எடுத்துத் தந்தார். அபு கீழே வந்தாள்.

"அம்மா... அம்மா.. ரசகுல்லா பண்ணிட்டீங்களா??", என்றாள் எதிர்பார்ப்புடன்.

மற்ற இருவரின் இதழும் நக்கலாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். "அபு உள்ள வா டா  அம்மா தரேன், இவ்ளோ நேரம் கீழ வராம என்ன பண்ணுன", என்று சமையல் அறைக்கு அழைத்து சென்று மேடையின் மேல் அவளை உட்கார வைத்தார்.

"ஹோம் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்,  அம்மா குடுங்க.. குடுங்க..", என்றான் அவசரமாக.

"அபு பால் கம்மியா இருந்தது அதனால மூணு உருண்ட மட்டும் தான் பண்ணுனேன் டா, இன்னொரு நாள் நிறைய பண்ணி தரேன் டா", என்று கொஞ்சலாக சொல்லிக் கொண்டே அவளிடம் தந்தார்.

"இது போதுமா", என்று சாப்பிடப் போனாள். அப்பொழுது,

"அம்மா..", என்று கத்திக்கொண்டு பூர்ணா வேகமாக வந்து அபுவின் கையில் இருந்த ரசகுல்லாவை கால் தடுக்கி விழுவது போல் தட்டி விட்டாள். ரசகுலா முழுவதும் கீழே விழுந்தது. அதை அபு ஏக்கமாக பார்த்தாள்.

"ஏய் இப்ப எதுக்கு இப்படி வந்து தட்டி விட்ட??", என்றார் கோபமாக.

"நான் கால் தடுக்கி விழப் போனது உங்களுக்கு பெருசா தெரியல, ரசகுல்லா கீழே விழுந்ததுதான் பெரிசா தெரியுது அப்படித்தானே!!", என்றாள் கோபமாக.

"அதானே அவ தடுக்கி விழ போனாலே ஏதாச்சும் புள்ளைக்கு ஆட்சான்னு பாத்தியாடி, உன் புள்ளையா இருந்தா இப்படிப் பண்ணுவியா??", என்றார் பாட்டி கோவமாக.

"போதும் அத்த இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க, பூர்ணா இப்ப எதுக்கு என்னைய கூப்பிட்டுக்கிட்டு வந்த", என்றார் கூர்மையான பார்வையுடன்.

"அது வந்து என் ஸ்கூல்ல ஒரு புரோகிராம் நடக்குது அத சொல்ல வந்தேன்", என்று சமாளித்தாள்.

"ஓ.. சரி அபு உனக்கு இன்னொரு நாள் ரசகுல்லா பண்ணி தரேன் டா", என்றார் கெஞ்சலாக.

"வேணாம்மா பரவால்ல, என்னைய கீழ இறக்கி விடுங்க, நான் ரூமுக்கு போறேன்", என்றாள் அழு குரலில்.

"அபு நீ இன்னும் பால் குடிக்கல டா, இந்தா இந்த பால குடி ",என்று கெஞ்சினார்.

"வேணாமா என்னைய  இறக்கி விடுங்க", என்றாள் அழுகையுடன்.

"ஏய் இப்ப எதுக்கு அழுது சீன் கிரியேட் பண்ற இன்னொரு நாளைக்கு ரசகுல்லா உனக்கு பண்ணி தரப் போறாங்க ", என்றாள் பூர்ணா திமிராக.

"அம்மா ப்ளீஸ்", என்றாள் மேகலாவை பார்த்து.

மேகலா கலங்கிய கண்களுடன் அவளை கீழே இறக்கிவிட்டார்.அபு மேலே அவள் அறைக்கு ஓடினாள். மேகலா அழுகையுடன் கீழே விழுந்த ரசகுல்லாவை சுத்தம் செய்தார்.

"அம்மா எனக்கு வந்து ஊட்டி விடுங்க ", என்றாள் பூர்ணா.

"நீயே போய் சாப்பிடு நான் நைட்டுக்கு சமைக்கணும் ", என்றார் வெற்று குரலில்.

"ஓ.. உன் பொண்ணு அழுதுகிட்டு போறான்னு இவள அழவைக்க பாக்குறியா,  இத உடனே மோகன் கிட்ட சொல்றேன் அவன் உன் அப்பா வீட்டுக்கு  அனுப்பட்டும்", என்றார் கோபமாக.

'ச்ச கிழவியும் பேத்தியும் சேர்ந்து அவள ஒரு வாய் ரசகுல்லா கூட சாப்பிட விடாம பண்ணிட்டாங்க, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாமல் போச்சு, இத அவர் கிட்ட சொன்னா காதுல கூட வாங்க மாட்டாரு, நான் அபுவ கவனிக்கிறது தான் இவங்க பிரச்சனையே இனிமே அவ கிட்ட இருந்து விலகி இருக்கணும், அப்படியாச்சும் இவங்க அவள நிம்மதியா இருக்க விடுறாங்கலான்னு  பார்க்கலாம்', என்று மனதிலே யோசித்துக்கொண்டு இருந்தார்.

"அம்மா இதுவே அபு கேட்டு இருந்தா உடனே ஊட்டி இருப்பீங்கல்ல, நான் உங்க பொண்ணு இல்லல்ல அதான்  இப்படி யோசிக்கிறீங்க", என்றாள்  அழுகையுடன்.

மேகலா வேகமாக அவளிடம் சென்று," இனிமே இப்படி பேசாத, அபு உன் விஷயத்துல  என்னைக்குமே தலையிடுறது இல்ல, நீ அவ்ளோட விஷயத்துல தலையிடாத, உனக்கு அப்புறம் தான் அபு புரிஞ்சதா வா", என்று அவளை இழுத்து சென்று ஊட்டி விட்டார். அவர் ஊட்டி விடுவதை மேலே இருந்து அபு ஏக்கமாக பார்த்தாள்.

அன்றிலிருந்து வீட்டில் யாரிடமும் பேச மாட்டாள். கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுவாள் அனைவரிடமிருந்தும் விலகியே இருந்தாள். ஆறாவது படிக்கும் போது ஸ்கூல் முடிந்து வரும் வழியில் ஓர் குட்டி நாய் பசியோடு சோகமாக இருந்தது. அவள் அதற்கு தன்னிடம் இருந்த பிஸ்கட் மற்றும் கீழே இருந்த டப்பாவில் தண்ணீர் ஊற்றி குடிக்க வைத்தாள். குட்டி நாய் சாப்பிட்டு முடித்தது." உன்னைய என் கூட வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும் தான் ஆச ஆனா நானே என் வீட்ல மூணாவது மனுஷி மாதிரி தான் இருக்கேன், உன்னைய எப்படி நான் அழச்சிட்டு போகமுடியும், பார்த்து பத்திரமா இரு பாய்", என்று நடக்க ஆரம்பித்தாள்.

குட்டி நாய் அவள் பின்னாலேயே வந்தது." உனக்கு யாரும் இல்லையா, சரி என் கூட வா ஆனா நீ என் அக்கா கூட தான் இருக்கணும், அவ நினைக்கிறது தான் வீட்டுல நடக்கும் என்கிட்ட வந்தா உன்னைய அடுத்த நிமிஷமே வெளில துரட்டிடுவாங்க, நான் உன்னைய பிடிக்காத மாதிரி தான் நடந்துப்பேன், நான் சொல்றது உனக்கு புரியுதா", என்றாள் பாவமாக. நாய்க்குட்டி தலையை ஆட்டியது." வா...", என்று முன்னால் சென்றாள். நாய் அவள் பின்னால் வந்தது.

"அம்மா.. அம்மா.. இந்த நாய பாரு என் பின்னாலே  வருது, நாய்னா எனக்கு பிடிக்கதுல்ல, இத துரத்துங்க முதல்ல", என்றாள் சத்தமாக .அனைவரும் வெளியே வந்தனர். நாய் அவளை பாவமாக பார்த்தது.

"ஏய் போ", என்று விரட்டினார் மேகலா.

"ஏய் உன்னைய எனக்கு பிடிக்கல, ஸ்கூபி தூபி டூல வர ஸ்கூபி மாதிரி இருக்க, அந்த பெரே எனக்கு பிடிக்காது போ", என்று விரட்டினாள்.

"எனக்கு இந்த நாய பிடிச்சிருக்கு, உனக்கு நான் ஸ்கூபின்னு  பேர் வைக்கிறேன் என்கிட்ட வா", என்று பக்கத்தில் உட்கார்ந்து அதன் தலையை தடவி கொடுத்தாள். ஸ்கூபி கண்களை மூடி அதை அனுபவித்தது." அப்பா ப்ளீஸ்ப்பா இந்த நாய நாமலே வச்சுக்கலாம்", என்றாள் பூர்ணா கெஞ்சலாக.

"அட எதுக்கு டா இதுக்கு போய் ப்ளீஸ் சொல்ற, நம்மலே வச்சுக்கலாம்", என்றார் பாசமாக. அன்றிலிருந்து  அனைவரும் இருக்கும்போது ஸ்கூபியை விட்டு விலகியும். அனைவரும் தூங்கியவுடன் ஸ்கூபி அபுவின் அறைக்கு சென்று தூங்கும். அபுவிற்கு பிடித்த விஷயத்தை கூட பிடிக்காது என்று சொல்லியே வாங்கிக் கொள்வாள். அதுவே அவள் வழக்கமாக மாறி போனது.

(பிளாஷ்பேக் ஓவர்)

நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தையும் அபு மற்றும் மேகலா நினைத்துப் பார்த்துக் கொண்டே தூங்கினார்கள். இரு நாட்கள் இப்படியே சென்றது.

"டேய் இன்னைக்கு எதுக்குடா ஆடிட்டோரியத்துக்கு வர சொன்னாங்க", என்றாள் பிரியா ஃபைவ் ஸ்டாரில் ஒரு ஸ்டார். (அச்சோ சொல்ல மறந்துட்டேன் இவங்க கேங் பேரு ஃபைவ் ஸ்டார் கேங்)

"அது வாடி உன் தாத்தா இந்த காலேஜ்க்கு கொஞ்சம்  அமௌண்ட்   டோனேட்  பண்ணுனருல்ல  அவருக்கு பாராட்டு விழா நடத்த தான் வர சொல்லி இருக்காங்க", என்றான் ராஜேஷ் கிண்டலாக.

"ஏய் போடா லூசு", என்றாள் கோவமாக.

"அப்புறம் என்னடி நாங்களும் உன் கூட தானே இருக்கோம் எங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்??", என்றான் தீபன்.

"டேய் சண்டை போடுறத நிறுத்திவிட்டு  வழக்கம்போல கடைசி சீட் பிடிங்கடா", என்றாள் அபு. கௌதம் மற்றும் ராஜேஷ் வேகமாக சென்று இடத்தை பிடித்தனர். தீபன், பிரியா, அபு, ராஜேஷ், கௌதம் என்று வரிசையாக உட்கார்ந்தனர்.

"ஹலோ ஃபைனல் இயர்  ஸ்டூடண்ஸ்  உங்களுக்கு உதவி செய்ய எஸ்.என்.ஏ குரூப் ஆஃப் கம்பெனி எம்டிஸ் வந்திருக்காங்க ", என்று அறிமுகப்படுத்தினார். ஷ்யாம், நிதர்சன் மற்றும் அரவிந்த் வந்திருந்தனர். "இவங்க மூணு பேர்ல அரவிந்த் இந்த காலேஜ்ல தான் படிச்சாரு, நம்ம காலேஜ் மேல இருந்த பற்றுனால  இதெல்லாம் பண்றாரு, இவரு பண்றதும் இல்லாம இவங்க நண்பர்களையும் அழைத்து வந்திருக்கிறார்", என்று பாராட்டினார் பிரின்ஸ்பல்.

"சார் இதுக்கு மேல  நாங்க பேசுறோம் சார் உங்க ஓர்க்க பாருங்க ",என்றான் அரவிந்த் சிரிப்புடன். பிரின்ஸ்பால் வெளியே சென்றார். "ஹாய் பிரண்ட்ஸ் நான் அரவிந்த். இந்த காலேஜ்ல தான் படிச்சேன், படிச்சு முடிச்சதும் என்ன பண்றது?? , எந்த வேலைக்கு போறது??? இப்படி பல கேள்வி என் மனசுல வந்தது, என் திறமை என்னன்னு எனக்கே தெரியாம இருந்தேன், எனக்கு சொல்லி தர ஆள் யாரும் இல்ல, அந்த மாதிரி ஒரு நிலம உங்க யாருக்கும் வரக்கூடாது அதுக்கு தான் நாங்க இப்ப பண்ணப் போறோம்", என்றான் சிரிப்புடன்.

"ஹாய் நான் நிதர்சன், நான் வேற காலேஜ்ல தான் படிச்சேன், உங்களுக்கு தெரிஞ்சுக்கணும்....
புதுசா கத்துக்கணும் இப்படி பல விஷயம் இருக்கும், அத வெளியே கொண்டு வாங்க, நீங்க எத கத்துக்கணும்னு ஆச படுறீங்களோ அத கத்துக்கலாம், எங்களுக்கு இதுக்காக எந்த பீஸ் தரத் தேவை இல்லை, இத நாங்க ஒரு பொது சேவை மாதிரி தான் பண்ணுறோம்", என்றான் சிரிப்புடன்.

"ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நான் ஷ்யாம் யூதன், நாம கத்துக்கணும்னு நினைக்கிறது கத்துக்க முடியாமல் போகலாம், அப்படி எதுவும் கத்துக்க முடியல அத எப்படியாச்சும் கத்துக்கணும் முயற்சி பண்ணுங்க, எது எதுல இன்ரஸ்ட் இருக்கோ அத சொல்லலாம், அதுக்கு நாங்க  ஏற்பாடு பண்றோம் ஆனா இத நாங்க ஒன் மந்த் மட்டும் தான் பண்ண முடியும், ஒன் மந்த் ஃபுல்லா கத்துக்க முடியாதுன்னு நினைக்காதீங்க நீங்க மேக்ஸிமம் எல்லாத்தையுமே கத்துக்க வச்சிடுவோம்",  என்றான் சிரிப்புடன்.

"எனி கொஸ்டின்ஸ் ", என்றான் நிதர்சன் .

"டேய் ராஜேஷ் கைய தூக்குடா", என்றாள் அபு.

ராஜேஷ் கையை தூக்கிக் கொண்டே, "ஆமா எதுக்கு கைய தூக்க சொன்ன", என்றான் சந்தேகமாக.

"போடா லூசு தூக்கிட்டு கேட்குறான் பாரு ",என்றான் கௌதம்.

"சூப்பர் நீங்க எந்திரிங்க", என்றான். ராஜேஷ் முழித்துக் கொண்டே எழுந்தான்." என்ன கொஸ்டின் சொல்லுங்க??".

"சமையல் கத்துக்கணும்னு ஆச கத்து தருவீங்களான்னு கேளுடா", என்றாள் அபு சிரிப்புடன் மெதுவாக. மற்ற மூன்று பேரும் மெதுவாக சிரித்தனர்.

"சார் எனக்கு எந்த டவுட்டும் இல்ல, இவ தான் தூக்க சொன்னா", என்று  மாட்டிவிட்டான்.ஷ்யாம்,நிதர், அரவிந்த் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"யார் அவங்க எந்திரிங்க", என்றான் அரவிந்த்.

அபு ராஜேஷை முறைத்துக் கொண்டே எழுந்தாள். ஷ்யாமிற்கு அவளைப் பார்த்ததும் ஆச்சரியம். "அபு  என்ன கேட்கப் போற ஏய் அபு.. அபு..", என்றனர் மாணவர்கள்.

"சைலன்ட் பிரன்ஸ்",என்றான் அரவிந்த்.

"என்ன கொஸ்டின் சொல்லுங்க உங்களுக்கு என்ன சந்தேகம்", என்றான் விடாமல் நிதர்.

'இவ கிட்ட போய் கேட்கிறானே இவ கண்டிப்பா ஏதாச்சும் எடக்கு மடக்கா தான் கேக்க போறா, இல்ல ஆல்ரெடி கேட்டிருப்பா', என்று மனதில் நினைத்தான் ஷ்யாம்.

"மாட்டிக்கிச்சே... மாட்டிக்கிச்சே..", என்று மெதுவாக பாடினான் தீபன். மற்ற மூன்று பேரும் இவளைப் பார்த்து சிரித்தனர். நான்கு பேரையும் பார்த்து பொய்யாக முறைத்தாள்.

"கேளும்மா என்ன சந்தேகமா இருந்தாலும் சொல்லு நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்", என்றான் அரவிந்த்.

"அது வந்து எனக்கு இன்டீரியல் டிசைன் கத்துக்கணும்னு ஆச சொல்லி தருவீர்களா", என்றாள். ஷ்யாமியிடம் இருந்து லேசான பெருமூச்சு வந்தது.

"கண்டிப்பா நீங்க எந்த டிபார்ட்மென்ட்", என்றான் நிதர்.

"ஆர்க்கிடெக்சர்".

"கண்டிப்பா சொல்லித்தரோம். நீ உட்காரு மா,  எனி கொஸ்டின்ஸ்", என்றான் அரவிந்த் .அனைவரும் அமைதியாக இருந்தனர்.அபு உட்கார்ந்தாள்." ஓகே ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கு எதுல இன்டர்ஸ்ட்னு லிஸ்ட் போட்டு கொடுங்க, நாங்க எப்ப ஸ்டார்ட் பண்ணலான்னு அரேஞ்ச் பண்ணிட்டு சொல்லுறோம் இப்ப நீங்க கிளம்பலாம்".

மாணவர்கள் கலைந்தனர். சிலர் வந்து ஃபைவ் ஸ்டார் கேங்கிடம் பேசி விட்டு சென்றனர். அபு ராஜேஷ் அடித்துக் கொண்டு இருந்தாள்‌" பிசாசு எதுக்குடி அடிக்கிற", என்று கத்திக்கொண்டு இருந்தான்.

"ஏய் எரும உன்னால நான் மாட்டி இருப்பேன் டா", என்று மீண்டும் அடித்தாள்.

அவளை இழுத்து குனியவைத்து மற்ற மூன்று பேரும் அடித்தனர். "என்னைய எதுக்குடா அடிக்கிறீங்க", என்றாள் எழுந்து வேகமாக.

"உன்னால நாங்களும் மாட்டி இருப்போம்டி நாயே, நீ சமைக்க கத்துக்கிட்டு யாருக்கு டி விஷம் வைக்க போற", என்றான் கௌதம்.

"அவ பண்ற சாப்பாடே விஷம் மாதிரி தான் இருக்கும், இதுல விஷம் வேற வைக்கணுமா", என்று பொய்யாக அழுத்துக் கொண்டான் தீபன்.

"ஏய் அப்படி சமைக்குற முடிவு இருந்தா முதல்ல உன் வீட்ல இருக்க சகுனி( பூர்ணா)-க்கும் சூனியக்காரி கிழவிக்கும்( பாட்டி ) பண்ணி கொடு டி", என்று யோசனை சொன்னாள் பிரியா.

"ம்ம்... சூப்பர் பிரியா ஐடியா... செம்ம... ரெம்ப்ப... கேவலமா இருக்கு", என்றான்  ராஜேஷ் கிண்டலாக.

"ஹலோ ஸ்டூடண்ட் அஞ்சு பேரும் இங்க என்ன பண்றிங்க??? இங்க வாங்க ", என்றான் நிதர். ஐந்து பேரும் அவர்கள் மூவரின் பக்கத்தில் வந்தனர்.

'அவளே போனாலும் இவன் வாங்கி கட்டிப்பான் போல', என்று மனதில் நினைத்தான் ஷ்யாம்.

"என்னடா வீட்டுக்கு கிளம்பலையா", என்றான் அரவிந்த்.

"கிளம்ப போறோம்", என்றனர்.

"சார் அன்னைக்கு நீங்க தானே அபு கூட நைட் வந்தது ", என்றான் கௌதம் ஷ்யாமை பார்த்து.

"இவர் தான் டா, ஏய் அபு உன் ஃப்ரெண்டு டி ",என்றான் தீபன் சந்தோஷமாக.

"ஆமா. நான் தான் வந்தேன், என்ன அபு என்னைய மறந்துட்டியா? ", என்று கிண்டலாக சிரித்தான்.

"ஏய் அபு நீ சொன்ன ஹாண்ட்சம்  ஃப்ரெண்ட் இவர்தானா டி ", என்றாள் பிரியா ஆச்சரியமாக‌.

"ஹாண்ட்சமா  இங்க என்ன நடக்குது", என்றனர் நிதர் மற்றும் அரவிந்த். தீபன் மற்றும் கௌதம் அன்று நைட்டு நடந்த அனைத்தையும் சொன்னார்கள்.

"அப்ப நிதி சொன்னா அபு இவ தானா, ஷ்யாம் இவ அக்காவ தானே உனக்கு பேசி முடிச்சுருக்காங்க", என்றான் அரவிந்த் ஆச்சரியமாக.

"ஆமாடா", என்றான் ஷ்யாம்.

அபுவின் நண்பர்கள் நான்கு பேரும் அபுவை பார்த்தனர்." ச்சா இவ்ளோ நல்லவர் போய் அந்த சகுனிக்கா  இந்த கல்யாணம் நடக்க கூடாது...  இவர் வாழ்க்கைய காப்பாத்து கடவுளே!!", என்று மெதுவாக வேண்டினாள் பிரியா. அபு பிரியாவை  லேசாக முறைத்தாள்.

"அபு உன் ஃப்ரெண்ட்ஸ இன்றோ  பண்ண மாட்டியா ",என்றான் நிதர். நான்கு பேரையும் அறிமுகம் செய்தாள்.

"அபு இவன் நிதர்சன் என் பெரியப்பா பையன், அன்னைக்கு வீட்டுக்கு என் கூட வந்தாலே நிதி அவளோட அண்ணன், இவன் அரவிந்த் எங்க உயிர் நண்பன், இப்ப எங்க மச்சான் நிதி இவன தான் கல்யாணம் பண்ண போறா", என்றான் சிரித்துக்கொண்டே.

"ஓ.. சரி ", என்றாள் சுரத்தே இல்லாமல்.

"ஓ.. சரியா?? இவன் உன் மாமா உன் அக்காவ கல்யாணம் பண்ண போறான் , சரி மாமான்னு சொல்லு", என்றான் அரவிந்த் கிண்டலாக.

அவள் நண்பர்கள் நான்கு பேரும் அரவிந்தை உற்று பார்த்தனர்."அவ அப்படி கூப்பிட மாட்டா", என்றாள் பிரியா வெடுக்கென்று.

"ஏன்???", என்றனர் மூவரும்.

"அவ கூப்பிட மாட்டா இவர பாக்குறப்ப மாமான்னு சொல்ல தோணி இருந்தா அவ முதலையே கூப்பிட்டு இருப்பா", என்றான் ராஜேஷ்.

"அபு..", என்று ஷ்யாம் அபுவை உற்றுப்பார்த்தான். அவனை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தாள். "என்னாச்சுடா ஏன் இப்படி இருக்க??? என்னைய மாமானு கூப்பிட சொல்ல மாட்டேன், நீ எப்போதும் போல யூதுன்னு  கூப்பிடு சரியா, நீ முதல்ல என் ஃப்ரெண்ட்  அப்புறம் தான் இந்த உறவு எல்லாம்", என்றான்  அவள் கண்களை பார்த்து. அவளின் கண்களில் லேசான மின்னல் வந்து மறைந்தது. அவள் குழிவிழும் கன்னம் அழகாக குழிவிழுது சிரித்துக் கொண்டே வேகமாக தலையை ஆட்டினாள்.

ஷ்யாமின் இந்த அணுகுமுறை இவள் நண்பர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கௌதம் அவள் கன்னத்தை கிள்ளி," அபு சிரிச்சுட்டா ", என்று சத்தம் போட்டு அபுவை சுற்றி விட்டாள். மற்ற நான்கு பேரும் வளையம் போல் வட்டமாக வந்து அவளை சுற்றி விட்டு சிரிக்க வைத்தனர். ஷ்யாம், நிதர் மற்றும் அரவிந்துக்கு அபுவை ஒரு குழந்தைபோல் அவர்கள் நண்பர்கள் பார்த்துக் கொள்வதை பார்த்து சிரித்தனர்.

"போதும்டா விடுங்க", என்றாள் சிரிப்புடன். அனைவரும்   சிரித்தனர்.

"ஆமா அபு நீ உண்மையாவே என்கிட்ட இந்த டவுட் தான் கேட்க வந்தியா", என்றான் நிதர் சந்தேகமாக.

"இல்ல", என்றனர் ஐந்து பேரும்.

"வேற என்ன??", என்றான் அரவிந்த்.

"சமைக்க சொல்லி தருவீங்களான்னு கேட்க வந்தா", என்றான் ராஜேஷ்.

"சமைக்கவா", என்றனர் மூவரும்.

"ஆமா என்ன ஆர்வமா இருந்தாலும் சொல்ல சொன்னீங்க இல்ல அதான்", என்றாள் குறும்பாக.

"நல்லவேள அதை நீ சொல்லல".

"சமைக்க அவ்ளோ ஆர்வமா அபு", என்றான் ஷ்யாம்.

"சமைக்க இல்ல கொல பண்ண அவ்ளோ ஆர்வம் இல்ல அபு", என்றான் தீபன் கிண்டலாக.

"போடா லூசு", என்றாள் பொய்யான கோபத்துடன்.

"சரி வாடா லூசு", என்று மீண்டும் கிண்டலாக அவளின் கையை பிடித்து இழுத்தான். அனைவரும் சிரித்தனர்.

"கௌதம் உன்னைய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குடா", என்றான் அரவிந்த்.

"ம்ம்.. ஒரே தெருவுல்ல தான் அண்ணா நம்ம ரெண்டு பேரும் இருக்கோம், உங்க வீட்டு பக்கத்துல தான் என் வீடும் ஆனா நாம பேசிக்கிட்டது இல்ல".

"ஆமா டா உன் கிட்ட நான் பேசினது இல்ல, இனிமே பேசலாம் இப்ப தான் நாம எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே ", என்றான் சிரிப்புடன்.

"கண்டிப்பா அண்ணா", என்றான் சிரிப்புடன்.

"வர வெள்ளிக்கிழமை நிதிக்கும் இவனுக்கும் என்கேஜ்மென்ட் ஈவினிங் தான் , எல்லாரும் வந்துருங்க ", என்றான் நிதர்.

"நிதி ஓ... உங்க சிஸ்டர் ஓகே ஓகே என்ன அரவிந்த் அண்ணா செம்ம லவ்வா", என்றான் தீபன் கிண்டலாக.

"செம்ம லவ்குறதுனால தான் வீட்ல தண்ணி தெளிச்சு கல்யாணம் பண்றாங்க, இது கூட உனக்கு தெரியல டா ", என்றான் ராஜேஷ் கிண்டலாக .

"டேய் கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க டா அண்ணாவ பேச விடலாம், அப்புறம் அண்ணா இந்த பிரியாவும் நானும் கடந்த நான்கு வருஷமா காதல் காவியம் எழுதுறோம்,  எங்கள ப்ரெண்டுனு சொல்லிட்டீங்க அதனால சொல்லுறோம்", என்றான் கௌதம் சிரிப்புடன்.

"சூப்பர்டா", என்றனர் மூவரும்.

"ஈஈஈஈ ‌.... வீட்ல சொல்லிட்டோம், வேலைக்கு போய் சொந்த கால்ல நின்னதுக்கு அப்புறம் தான் கல்யாணம் அண்ணா", என்றான் மூவரிடமும்.

"இப்ப மட்டும் என்ன கட்ட கால்லயா நிக்கிற", என்றாள் அபு கிண்டலாக.

"அபு...", என்றனர் பிரியா மற்றும் கௌதம்.

"ஓகே ஓகே டைமாச்சு போலாமா".

"இன்னும் என்கேஜ்மென்ட்கு வரேன்னு சொல்லவே இல்லையே", என்றான் ஷ்யாம் ஐந்து பேரையும் பார்த்து.

"சாரி அண்ணா நாங்கள் வரமாட்டோம், அபு ஃபேமிலி இருக்கற இடத்துக்கு எங்களுக்கு வர பிடிக்காது", என்றாள் பிரியா நேரடியாக.

"ஏன்??", என்றனர் மூவரும் கோரசாக.

"அது அப்படி தான் எங்க அபுவ கஷ்டப்படுத்துற யாரும் எங்களுக்கு  ஒரு நாளும் தேவை  இல்ல ", என்றான் தீபன் விளையாட்டுத் தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு.

"யாரு கஷ்டப்படுத்துறா", என்றான் ஷ்யாம் வேகமாக.

"ஏய் ஸ்டார்ஸ் நான் நல்லாத்தான் இருக்கேன், என்னைய யாரும் கஷ்டப்படுத்துல, வர விருப்பம் இல்லனா வரலைன்னு சொல்லுங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை யூது என்னைய பலி ஆடா ஆக்கப் பார்க்கிறாங்க", என்று சீரியஸாக ஆரம்பித்து விளையாட்டாக முடித்தாள்.

"சரி.. சரி..", என்றனர் நிதர் மற்றும் அரவிந்த் . ஷ்யாம் கூர்மையாக அபுவை பார்த்தான். அவள் கண்கள் அவனிடம் கெஞ்சியது ,'கேட்காதே', என்று அவன் பார்வையை விலக்கிக் கொண்டான்.

"ஆமா அண்ணா முடிஞ்சா வரேன்", என்றான் ராஜேஷ்.

"ம்ம்.. சரி", என்றனர்.

"பாய் ", என்று அனைவரும் கிளம்பினர்.

பாதி தூரம் சென்ற கௌதம் வேகமாக ஷ்யாமிடம் வந்து அவன் கையை பிடித்து, "அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா அபுவ உறவா இருக்க சொல்லாம ஃப்ரெண்டா இருக்க சொன்னதுக்கு", என்றான் உண்மையான சந்தோஷத்துடன்.

"ஏன்டா இதுக்கு போய் தேங்க்ஸ்  சொல்ற ", என்றான். நிதர் மற்றும் அரவிந்த் இவர்களை அமைதியாக பார்த்தனர்.

"உங்கள அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா, உறவுன்னு  சொல்லி இருந்தா  அபு பேசியிருக்க மாட்டா, ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னால தான் பேசுறா, இல்லனா  உங்கள விட்டு தூரமா விலகிப் போய் இருப்பா", என்றான் உண்மையாக.

"ஏன்??", என்றனர் மூவரும்.

"அவள உங்களுக்கு புரியாது அண்ணா, உங்க கூட பிரெண்டாயிட்டானா அவ மன புத்தகத்த அவளே திறந்நு காட்டுவா, நீங்க கேட்காமலே அண்ணா, சரி அண்ணா பாய் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வெயிட்டிங்", என்று வேகமாக ஓடினான்.

மூவருக்கும் அபு புரியாத புதிராக தெரிந்தனர் ." டேய் ஷ்யாம் உன் மச்சினிச்சி சூப்பர் டா, பேசாம நான் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா", என்றான் நிதர் விளையாட்டாக.

"வாய மூடிக்கிட்டு வா நீ இப்படி பேசினாது அவளுக்கு தெரிஞ்சா உன் பக்கம் கூட திரும்ப மாட்டா, உள்ள உறவையும் கெடுத்துக்காத", என்றான் ஷ்யாம் லேசான கோபத்துடன்.

"ஆமாடா ஷ்யாம் சொல்றது கரெக்ட் தான், அபு ரொம்ப வித்தியாசமா இருக்கா இவள கையாள்றது பொறுமையா தான் கையாளன்னும், பொண்ணு பார்க்கப் போனப்ப நிதி அங்க நடந்த எல்லாத்தையும் சொன்னா, உன் கிட்டயும் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்", என்றான் அரவிந்த்.

"சொன்னா டா".

"சரி வா  போலாம்", என்று கிளம்பி சென்றனர்.

நிதர்  பெற்றோர் மற்றும் ஷ்யாமின் பெற்றோர் அபுவின் வீட்டிற்கு இல்லல்ல பூர்ணாவின் வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் வரும்படி அழைத்தனர். வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை வந்தது. அபு தலைவலியுடன் வீட்டிற்கு வந்தாள்.

"அபு உனக்கு உன் ரூம்ல டிரஸ் எடுத்து வச்சிருக்கேன், குளிச்சுட்டு ரெடி ஆயிட்டு வா", என்றார் மேகலா.

"எங்க???" .

"என் நாத்தனார்கு  இன்னைக்கு நிச்சயதார்த்தம், சீக்கிரம் போய் கிளம்பி வா", என்றாள் பூர்ணா.

"நான் வரல செமையா தல வலிக்குது".

"ஏய் அவங்க எல்லாரும் வரணும்னு சொல்லிட்டு போயிருக்காங்க உன்னைய கூட்டிட்டு போகலைன்னா, எங்கன்னு கேட்பாங்க சீக்கிரம் போய் கிளம்பி வா, இவ கிட்ட இதே அக்கப்போரா போச்சு", என்று பாட்டி திட்டினார்.

"நான்தான் வரலைன்னு சொல்றேன்ல, எனக்குத் தலை வலிக்குது", என்றாள் கோபமாக.

"ஆமா எனக்கு நல்லது நடந்தா தான், உனக்கு எல்லாம் வலிக்குமே இந்த வரன் எனக்கு அமஞ்சுருச்சு அத பாதியிலேயே நிக்கணும் தானே இப்படி எல்லாம் பண்ற", என்றாள் பூர்ணா கோபமாக.

"ஏற்கனவே டைமாச்சு எதுக்கு சத்தம் போட்டு இருக்கீங்க, எல்லாரும் போய் சீக்கிரம் கிளம்புங்க", என்று வந்தார் மோகன் .

"எல்லாம் உங்க செல்ல பொண்ணு தான் நிச்சயதார்த்தத்திற்கு வர முடியாதாம்", என்றாள் குத்தலாக.

"அபு போய் கிளம்பு எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு", என்றார்  கோபமாக. அபு வேகமாக அவள் அறைக்கு சென்றாள். பூர்ணா வெற்றி சிரிப்புடன் கிளம்ப போனாள். மேகலா அபுவிற்கு டீயை போட்டுக்கொண்டு அவள் அறைக்கு சென்றார். தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள்.

"அபு இந்த டீய குடி தலைவலி கொஞ்சம் குறையும்", என்றார் கவலையாக. அபு எதுவும் பேசாமல் வாங்கி குடித்தாள். உனக்கு டிரஸ் எடுத்து வச்சிருக்கேன் போட மாட்டேன் சொல்லாத, அதுக்கு ஒரு பிரச்சனை கிளம்பும், சீக்கிரம் கிளம்பி வா டா", என்று வருத்தமாக சொல்லிவிட்டு சென்றார்.

அபுவிற்கு பர்புல் நிற சோலியை எடுத்து வைத்திருந்தார் மேகலா. குளித்து கிளம்பி கீழே வந்தாள். அபுவை பார்த்ததும் மேகலாவிற்கு அவரையே அறியாமல் கர்வம் வந்தது. 'இவ என் பொண்ணு, எவ்ளோ அழகா இருக்கா ,அவ கலருக்கு இந்த சோலி ரொம்ப நல்லா இருக்கு ',என்று மனதில் நினைத்து கொண்டார். பூர்ணா பச்சை நிற சோழி போட்டு அலங்காரத்துடன் அழகாக வந்தாள்.

அபுவைப் பார்த்து, "என் சோலி உன் சோலிய விட எவ்வவோ காஸ்ட்லின்னு தெரியுமா", என்றாள் நக்கலாக.

"பூர்ணா கிளம்பி போறப்ப என்ன பேச்சு இது, அவ உன்கிட்ட உன் சோலி என்ன ரேட்னு கேட்டாலா, ஏதாச்சும் உன்கிட்ட  பேசினாலா", என்றார் மேகலா.

"அம்மா நான் என்ன சொல்ல வந்தேன்னா ", என்று இழுத்தாள்.

"நீ ஒன்னும் சொல்ல வேணாம், பூர்ணா வா கிளம்பலாம்", என்றார் கண்டிப்பான குரலில். பூர்ணா உர்ரென்று காரில் ஏறி உட்கார்ந்தாள். அபுவிற்கு இது அனைத்தும் பழக்கப்பட்ட ஒன்றே முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பினாள்.

அங்கு நடக்கப்போகும் விபரீதம் தெரிந்தாள் அபு போவாளா???? பூர்ணாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்து கொண்டு இருக்கிறது அதை அவள் அறிவாளா??? ஷ்யாம் புதிரை கண்டுபிடிப்பானா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்........

💗வரமாய் வருவேனடி💗.......

 

This post was modified 1 month ago by Ramya Anamika

நல்லாதே நினை நல்லதே நடக்கும்..
அன்புடன் ,
ரம்யா அனாமிகா


ReplyQuote
Harini Dilip
(@harinidilip)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 5
06/01/2020 12:04 pm  

@anamika

Very nice start dear


ReplyQuote
Harini Dilip
(@harinidilip)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 5
06/01/2020 12:05 pm  

@anamika

Very nice update ma. Purani is very bad.

This post was modified 6 months ago by Harini Dilip

ReplyQuoteRamya Anamika
(@anamika)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 58
07/01/2020 8:30 am  

@harinidilip

Tq u 😍

நல்லாதே நினை நல்லதே நடக்கும்..
அன்புடன் ,
ரம்யா அனாமிகா


ReplyQuote
Anitha R
(@aniraju)
Eminent Member Registered
Joined: 10 months ago
Posts: 22
07/01/2020 10:13 am  

Nice update. Waiting for next ud sis


ReplyQuote
JAYALAKSHMI PALANIAPPAN
(@pljl)
Eminent Member Registered
Joined: 2 years ago
Posts: 23
07/01/2020 4:54 pm  

Where is the ud?  How to read?  It goes to comment section only? 


ReplyQuote
Kamali Karthika
(@kamali-2018)
Active Member Registered
Joined: 8 months ago
Posts: 6
07/01/2020 8:22 pm  

Supr nxt ud epo? Waiting


ReplyQuotePage 1 / 8
Share: