Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Episode-42  

  RSS

Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
05/09/2020 4:50 pm  

நீ என் தேவதை-Episode-42 😍 

என்னதான் ருக்கு முயற்சி செய்தாலும், இவர்களுக்குள் அன்பும் காதலும் அதிகம் ஆனது. அல்லது அப்படி தோன்றியது.

நடுவில் ஒரு முறை சிவாவும், தியாகுவும் வந்தனர்.  அவர்களுக்கு, சத்யா சந்தோசமாக இருப்பதாகவே தோன்றியது.

தியாகுவை முதன் முதலில் பார்த்த ஆச்சி, அவரிடம் மனதார மன்னிப்பு வேண்டினார்.

என்னங்க  பெரியவங்க நீங்க போய் ?

இல்லங்க. உங்க பொண்ணை  எப்பிடியெல்லாம்  சீராட்டி வளர்த்து இப்படி இந்த மாதிரி ஒரு எடத்துல கட்டி குடுப்பீங்களா? எல்லாம் விதி . ஆனா உங்க பொண்ணு சொக்க  தங்கம். அவள  போல ஒரு பொண்ண இந்த உலகத்துல பாக்க முடியாது.  எந்த பந்தாவும் இல்ல. என்னவோ எனக்கு அவளை பாக்கும்போது என்னோட பொண்ணாதான்  தெரியறா . கண்ணை துடைத்து கொண்டார்.  எனக்கு  அவளை  அனுப்பவே இஷ்டம் இல்ல.  ஆனா நீங்க அவளை கையோட அழைச்சுட்டு போய்டுங்க.

சரிங்கம்மா, அவகிட்ட நா கேட்கிறேன்.சத்யாவோ,

இல்லப்பா  இன்னும் கொஞ்ச நாள் இங்க ஆச்சியோட  இருந்துட்டு வரேனே , ப்ளீஸ் பா ,

இங்க என்னம்மா இருக்கு?

இந்த சுத்தமான காத்து , தண்ணீ , மனுசங்க, எல்லாமே,

உனக்கு வேணுன்னா  நீ சிவாவோட கூட இருக்கலாம்.

அப்புறமா அண்ணனோட இருக்கேன், இப்ப இங்க.,சரியா ?

அவள் கண்களில் ஏதோ ஏக்கம் இருந்தது.

வேற  ஏதாவது காரணம் இருக்கா  சத்யா? கிளம்பும் போது சிவா கிடுக்கி பிடி போட்டான். வார்த்தைகளின் உள்ளர்த்தம் சத்யாவுக்கு  புரியவில்லை.

புரியில்லண்ணா!

இல்ல அங்க வராததுக்கு  ஆச்சியை தவிர வேற யாராவது ?

தெரியல்லண்ணா.

மெல்லிய புன்னகை வந்தது.

ஆனா, அண்ணா  அப்பாகிட்ட சொல்லாதது இன்னொன்னு இருக்கு . உன்கிட்ட சொல்லறேன்.  இது, இங்க  என்னோட  அம்மா வோட இருக்குற மாதிரி இருக்கு.

நினைச்சேன். தலை கோதினான்.

இவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் .

இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருந்த முத்துவுக்கு, ஏனோ அவள் தன் மேல் சாய்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவன் கைகளும், மனமும், அவளுக்காக  ஏங்கியது.

என்னதான் இருந்தாலும் .,  சத்யா அங்கிருப்பதால்  தியாகுவும், சிவாவும், சாதாரணமாகவே முத்துவிடம் பேசினர் .

முத்துவும் அவர்களிடம் நல்ல விதமாகவே நடந்து  கொண்டான்.  ஆனால் அப்போதும் அங்கு வந்த செந்திலுக்கு, இதை எல்லாம்  பொறுக்க முடியவில்லை.

சிறிது நாட்கள் கழித்து வருவாதாக சத்யா சொன்னது இவனுக்காகவே என்று  நினைத்துக் கொண்டான்.

இல்லை .,அப்படி எல்லாம் இல்லை என்று செந்தில்பின்னாளில் புரிய வைத்தான்.

என்னதான் செந்தில் சரவணன், ஆச்சி என்று ஆட்கள் நிறைய இருந்தாலும் தன் மனதில் உள்ள எண்ணங்களை  எல்லாம்  தன உற்ற தோழன்  காளையிடம் (மாடு) தான் கூறுவான்.

அவன் காளையிடம்  பேசிக் கொண்டிருக்கும் போது, இவள் மறைந்திருந்து கேட்பாள். மிகவும் ரசிப்பாள். முத்துவின் இன்னொரு முகம்.  அதில் கோபம், முரட்டுத்தனம் எதுவும் இருக்காது. அப்படிதான் இவளுக்கு முத்து தன்னை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்பதை தெரிந்து கொண்டதும்.

ஆனால்  விருப்பத்தை இவளிடம் கூற முடியாதவன் வெறுப்பதாக கூறுவதை இவள் எப்படித் தாங்குவாள் ?

 

சிவா எப்போதடா வர போகிறான் என்று காத்துக் கொண்டிருந்திருந்தாள் கங்கா.  அவளுக்கு இப்போதெல்லாம் நிறைய கதைகள் அவனிடம் பேசுவதற்கு இருந்தது. சத்யாவும் இல்லாததால், அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சில விஷயங்களை மட்டுமே சத்யாவிடம் போனில் பேச முடிந்தது. அவளை தொந்தரவு செய்யா கங்கா விரும்பவில்லை.  ரம்யாவும் ரிஷியும் கூட இப்போது இங்கு இல்லை. ஆனால்  எத்தனை பேர் இருந்தாலும், அவள் மனம் சிவா, சிவா என்று அவனையே சுத்தி வந்தது.

இதோ சிவா வந்து விட்டான்.  அவன் வருவதற்கே நள்ளிரவு ஆகி விட்டது. இருப்பினும், சிவகாமி அவனுக்காகவே முழித்திருந்தார். கங்கா அவனுக்கு தோசை செய்து தந்த  சிவகாமி அவன் அருகிலேயே இருந்து பரிமாறினார்.

அவன் தலை கோதியவள் எப்படா எப்படா என் கூடவே இருக்கப்போற ?

நான் என்னம்மா பண்ணுவேன்? பேசாம நீங்க அங்க வந்துடலாம் இல்ல,

அதுவும் சரிதான், நீயும் எத்தனை நாளக்குதான் இப்படியே தனியாவே இருக்க முடியும் ?

சீக்கிரமா உனக்கும் கல்யாணத்துக்கு பாக்கணும்பா, சத்யாவையே நினைச்சு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் உன்னோட வாழ்க்கையை பத்தியே நினைக்காம இருப்ப?

அவன் பதில் ஏதும் பேசவில்லை. அவனுக்கே கங்கா விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாத போது அவன் எப்படி அன்னைக்கு பதில் கூற முடியும்?

அன்று இரவு அவனுக்கு தூக்கம் ஆட்டம் காட்டியது. அவன் தன்னுடைய வாழ்க்கையை பற்றிய முடிவு எடுத்தாக வேண்டும்.

அவன் வேலை பார்க்கும் பொன்னேரி தொகுதியின் எம்.பி மகளுக்கு இவனை பாக்கலாம் என்று அவரே நேரில் வந்து கேட்டிருந்தார். ஆனால் இவனுக்கு பிடிக்க வில்லை. இல்லைங்க , நான்  கல்யாணத்த பத்தி யோசிக்கல்லங்க. மன்னிச்சுடுங்க.

இல்ல தம்பி உங்க வீட்டுல வந்து நான் பேசறேன்.

இவனால் மறுக்க முடியாதபடி அழுத்தமாய் சொன்னார்.

தன்னுடைய பெற்றோரிடம் எப்படிக் கூறுவது?

தன் திருமணத்தை பற்றி  தான் எப்படி பேசுவது என்று நினைத்தான். அதிலும், சத்யா  அவளை பற்றி எப்படி அப்படியே விட்டு விட முடியும் குழப்பமாக இருந்தது.

கங்காவோ இங்கு மிகுந்த மன வேதனையில் இருந்தாள். சிவாவை தவிர இந்த உலகத்தில் தனக்கு வேறு எதுவும் இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. சிவா அவளின் மனம் முழுவதும் ஆக்ரமித்திருந்தான்.

அவனின் திருமணம் வேறு  என்பதை பற்றி  அவளால் நினைக்க கூட முடியவில்லை.  வயது வித்தியாசம் என்பதை பற்றி எல்லாம் கங்கா நினைக்கவே இல்லை.  இப்போதோ அவள் கல்லூரிக்கு தனியாகத்தான் போகிறாள். எத்தனை பேரை பார்க்கிறாள்? யாரை பற்றியும் எந்த எண்ணமும் தோன்றவே இல்லை. கல்லூரியிலும் எந்த ஆண் மகனிடமும் தோன்றாதது சிவாவிடம் மட்டுமே தோன்றுகிறது. அந்த  அறையில் அவளுக்கு மூச்சுமுட்டியது. தோட்டத்தில் வந்து சிறிது நேரம் அமர்ந்து  கொள்ள வந்தாள்.

இருப்பினும் தனது தகுதி தான் என்ன? இந்த கேள்வி அவளை படுத்தியது. பேயாக அவள் காதலை முழுங்கியது. தனக்கு எந்த தகுதியும் இல்லாத போது எப்படி அவரிடம் காதலை சொல்ல முடியும்? முடியாது. இந்த அனாதைக்கு பாதுகாப்பு தந்தார்கள். படிப்பு மட்டும் தான் தனக்கு துணை. மனதில் உறுதி கொண்டாலும், தன் இழப்பு அவளுக்கு வலியை தரவே செய்தது. அது கண்ணீராக வெளி வந்தது. அப்போதுதான் அவளின் மனதின் நாயகன் அங்கு சோதனையாக வந்து சேர்ந்தான். யாருடைய வருகைக்காக காத்திருந்தாளோ அவனின் வருகை இப்போது துன்பத்தையே தந்தது.

சிவாவுக்கும் தன்னையுடைய அறையில் இருக்க பிடிக்கவில்லை.  அவனும் தோட்டத்திற்கு வந்தான்.

என்ன கங்கா இங்க இந்த நேரத்துல?

கங்கா கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது.

ஒண்ணுமில்ல , சும்மாதான்.

அவளை உற்று நோக்கினான்.

என்ன பாரு?

இல்லை , அவள் அவனை பார்க்கவில்லை.

அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தவனுக்கு அவள் கண்ணீர் தெரிந்தது.😪😌

என்னாச்சு?

என்ன எதுவும் கேட்காதீங்க.,          

அறையில் சென்று பூட்டிக் கொண்டாள்.....

பின்னோடே சென்றவனுக்கு  நாளைக்கு பேசறேன் என்ற பதில் தான் கிடைத்தது.

மீண்டும் வருவாள் தேவதை.................. 😋 😋 😋 

baraniusha

Share: