Barani Usha's Nee en Devadhai
வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்
தோழமைகளுக்கு வணக்கம்,
என் பெயர் பரணி உஷா. நான் இந்த துறைக்கு புதிய எழுத்தாளர். இருப்பினும் இதற்கு முன் சிறு சிறு கவிதைகளை எழுதி வந்திருக்கிறேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் தட்டி கொடுத்து ஊக்குவிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு கதை ஆசிரியராக பயணிக்க வாய்ப்பு அளித்த நித்யாவிற்கும் சகாப்தம் குழுமத்திற்கும் , மிக்க நன்றி.
இப்படிக்கு உங்கள் தோழி,
பரணி உஷா .
நீ என் தேவதை
இந்தக் கதையில் மொத்தம் மூன்று கதா நாயகர்கள் மூன்று கதா நாயகிகள். இதில் சில சமூக தவறுகள் (அ) அவலங்களை பற்றியும் குறிப்பிடப் போகிறேன். இந்தக் கதை காதல், நட்பு, தாய்மை என அனைத்தும் கலந்தது. என்னால் முடிந்த அளவு சுவாரஸ்யம் குறையாமல் எழுதப் பார்க்கிறேன். நாளை முதல் வாரம் ஒரு நாள் தேவதை உங்களை சந்திக்க வருவாள்
baraniusha
எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. ஆனா பலவித குழப்பங்கள். நடுவில நிறைய காதல். இப்போ குழப்பங்கள் எதுவும் வேண்டாம். நேரா கதைக்கு போலாமா?
சத்யாவும் முத்துவும் கணவன் மனைவி. முத்து கிராமத்துக்காரன். முரடன். ஆனா ரொம்ப நல்லவன்.( ஹீரோன்னாலே அப்பிடித்தான் ஹி ஹி ஹி)
சத்யா ரொம்ப சாப்ட் , பூ மாதிரி. ஆனா! இனிமே நடக்கப்போற சம்பவங்கள் எல்லாத்தையும் மாத்த போகுது.
சத்யா இப்ப பாம்பேல இருக்கா. பெரிசா பிரிண்ட்ஸ்லாம் யாரும் கிடையாது. அவங்க எல்லாரும் பெரும்பாலும் ரொம்ப சேட்டை. ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் ரொம்ப சின்சியர். நம்ம அக்கா போல.
சத்யா வேலை பாக்கறது அவங்க சித்தப்பா ஹாஸ்பிடல்ல. அதனாலயும் யாரும் அவகிட்ட ரொம்ப பேச மாட்டாங்க(ஓனர் வீட்டு பொண்ணு, பெரிய இடம்). அது அவளுக்கு ஒரு பெரிய சங்கடம் தான். வீட்டுலயும் அண்ணன் ரொம்பல்லாம் பேச மாட்டான். அப்பாவுக்கு எப்பவுமே வேலை தான். ரொம்ப கலகலப்பா பேச மாட்டார். இவங்க ரெண்டு பேரோட ட்ரைனிங்க்ல அம்மாவுக்கு பேச தெரியுமான்னு தெரியாமலே போச்சு. நம்ம அக்காவும் அதே மாதிரிதான். பேச தெரியுமான்னு தெரியாது. ஆனா அத கண்டுபுடிக்க வந்தான் ஒருத்தன். அவன்தான் ரிஷி. நம்ம இன்னொரு ஹீரோ.
அன்று எப்போதும் போல காலை விடிந்தது. காலையில் ஏழு மணிக்கு சத்யா ஹாஸ்பிடல் கோயிலில் ஆஜர்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று அர்ச்சகர் தமிழில் பூஜை செய்து கொண்டிருந்தார். இருப்பதோ ஹிந்தி பேசும் இடம். மருத்துவமனையில் அநேகம் ஆங்கிலம். ஸ்நேகமும் ஆங்கிலம். வீட்டிலும் 99 சதவிகிதம் ஹிந்தி கலந்த ஆங்கிலம். ஓ ஆ என்பது மட்டும் தமிழில் வரும். அதனால் கோயிலல்லாவது கட்டாயம் தமிழ் இருக்க வேண்டும் என்று சித்தப்பா மகாதேவனின் கட்டளை. சத்யா வந்ததால் அவருக்கு மறந்திருந்த அல்லது மறைந்திருந்த தமிழ் நியாபகம் வந்தது. அர்ச்சகர் கொடுத்த பூவை பெற்றுக்கொண்டு தலையில் சூடி கொண்டாள் சத்யா. அப்போது அம்ம்மா அம்மா வலி தாங்கலையே அப்பா வலிதாங்கலையே என்ற அலறல். மருத்துவமனையில் இது சகஜம்தான். அனால் இங்கு தமிழ் அலறல் சத்யாவை திரும்பி பார்க்க வைத்தது. அந்த அலறல் உடனே ஓடினாள். உடன் சென்று மருத்துவம் பார்க்க ஆரம்பித்தாள்.
பெரிய கட்டு போடா வேண்டி இருந்தது. ஆனால் பெரியதாய் ஒன்றும் இல்லை என்று தோணிற்று. இருப்பினும் XRAY எடுக்க வேண்டி இருந்தது. ஊசி மூலம் வலி மறக்க செய்தாள். அவன் வலி மறந்து தூங்க ஆரம்பித்தான். அவன் அம்மா அப்பா யாரும் போன் எடுக்கவில்லை. இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் அடி. XRAY வில் சிறு அளவில் எலும்பு முறிவு தெரிந்தது. சரி இப்போது இவர்க்கு யார் துணையாக இருப்பது?யார் பணம் கட்டுவார்கள்?. அவன் கண் முழித்தால் தான் தெரியும்.
காலையில் சென்று ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு பெரிய டாக்டரிடம் ரிப்போர்ட் செய்து விட்டு சிற்றுண்டியை முடித்தாள். அதற்கே 10 மணிக்கு மேல் ஆகி விட்டது. அதன் பின் ரிஷியிடம் வந்தாள். ஏனோ அவனை தனியாக விட மனம் வர வில்லை. இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதற்குள் ஒரு புது அட்மிஷன் வந்தது. அந்த கேஸை முடித்துக்கொண்டு மறுபடியும் அவனிடம் வந்தாள். அதற்குள் அவன் கண் விழித்திருந்தான்.
ஹோ டாக்டர்…. க்யா ஹுஆ…. என்றான்.
நானும் தமிழ் தான்.நீயும் தமிழ்த்தானே அப்புறம் எதுக்கு ஹிந்தி? உனக்கு ஒன்னும் இல்ல. மைல்டு க்ராக் அவ்வளவுதான்.
ஓ டாக்டர் என்ன இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டீங்க? எனக்கு எவ்ளவு வேலை இருக்கு தெரியுமா?
என்ன கேர்ள் பிரெண்ட பார்க்கணுமா?
என்னோட விஷயமே வேற. உங்களுக்கு அதல்லாம் புரியாது.
ஓ! சரி. உன்னோட காலுக்கும் புரியாது.
என்ன பண்ண! உதட்டை பிதுங்கினாள்.
அந்த அழகில் அவன் மயங்கி போனான்.
அது இல்ல டாக்டர். எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல ஒரு கம்பெனில இண்டெர்வியூ. அதுவும் பூனால.
ஓ!பெரிய விஷயம்தான். அது இருக்கட்டும். இப்ப உன்ன கவனிச்சுக்க யார் வருவா?உங்க அம்மா அப்பா யாருமே போன் எடுக்கல.
இப்ப யார் என்ன பாக்கவருவாங்கன்னு கவலையா இல்ல,யாரு பணம் காட்டுவாங்கன்னு கவலையா?
பணம் நானே கட்டிடுவேன். பார்த்துக்க யாரும் வேண்டாம். என்ன நானே பார்த்துக்குவேன்.
அப்புறம் என்பது போல் பார்த்தான்.
சத்யா ஆழமாக அவனை பார்த்தாள்.
உன்னோட ராஷ் டிரைவிங் பத்தி வீட்டுல தெரியுமா. அதான் அவங்க கிட்ட சொல்லாம மறைக்குறியா?
ஹலோ என்ன நீங்கபாட்டுலும் பேசிக்கிட்டேயே போறீங்க? நான் ராஷ் டிரைவிங் பண்ணதா உங்களுக்கு யார் சொன்னது? நான் ஒழுங்கா தான் வந்தேன். எதிர்க்க ஒரு கண்ணு தெரியாத பொண்ணு வந்துடுச்சு. டக்குன்னு பிரேக் புடிச்சதுல தவறி கீழ விழுந்திட்டேன்.
பொண்ணுக்கு என்ன ஒரு 18 வயசு இருக்குமா?
அதல்லாம் பார்க்கல என்று ஆரம்பித்தவன் அவள் தன்னை கிண்டல் செய்வதை புரிந்து கொண்டான். அவனுக்கு எரிச்சல் வந்தது. உண்மையை கூறியும் அவள் நம்பவில்லை.
உங்கள நம்ப வைக்கறது என்னோட வேலை இல்லை. நான் பூனா போகணும். அதுக்கு வழிய சொல்லுங்க.
சரி. உன்ன நான் நம்பலைன்னு உனக்கு கோபம். உங்க அம்மாவை இல்ல அப்பாவை வர சொல்லு. அவங்க கிட்ட நான் சொல்லறேன்.
ஐயோ டாக்டர் அவங்க ரெண்டுபேரும் ஒரு பிசினஸ் கான்பிரென்சுக்காக சிங்கப்பூர் போயிருக்காங்க. வர்றதுக்கு 1வீக் ஆகும். இது அவங்களோட லோக்கல் நம்பர். அவங்கள நான் தொந்தரவு பண்ண விரும்பல. இப்பதான் அங்க போய் சேந்துருப்பாங்க. நான் இதை சொன்னா உடனே அடிச்சு புடுச்சு ஓடி வருவாங்க.
சரி, யாராவது ரிலேட்டிவ்ஸ் வர சொல்லு.
எனக்கு யாரும் கிடையாது.
பிரண்ட்ஸ் வர சொல்லு.
ஹலோ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? என்ன டிஸ்சார்ஜ் பண்ணுங்க நான் வேற எங்கயாவது போறேன்.
சத்யாவுக்கு அவனை விட விருப்பம் இல்ல.நீ எங்க போனாலும் இதையேதான் சொல்லுவாங்க. உன்னோட ப்ரெண்ட கூப்பிடறதுல என்ன பிரச்சனை?
இதுவரை இவனை யாரும் கேள்வி கேட்டதில்லை. அப்பா அம்மாவும் இதமாக எடுத்து சொல்வார்கள். அதட்டியதில்லை. நண்பர்கள் நண்பர்களேதான். இன்னும் காதல் வலையில் சிக்கவில்லை. அதனால் இது புதுசாக இருந்தது.
ஆனால் இவளது அதட்டல் பிடித்திருந்தது! பள்ளியில் ஆசிரியர் முன்பு கை கட்டி நின்றிருந்தது ஞாபகம் வந்தது. இப்போதும் கையை கட்டி கொண்டான்.
சரி, வர சொல்றேன். அவன் நண்பன் முரளி இவனுக்கு துணைக்கு வந்தான். ரிஷி தூங்கி கொண்டிருந்தான். சத்யா அப்போது அங்கேயே வந்தாள்.
நீங்க இவருக்கு யாரு?
நான் முரளி. இவனுடைய நண்பன்.
ஓகே. இவங்க அப்பா அம்மா ஊருல இல்லன்னு சொன்னாரே,உண்மையா? இவனுக்கு விசுவாசம் நயன்தாரா கேள்வி கேட்பது போலவே இருந்தது.
ஆமா. அவங்க இங்க இல்ல. எந்த ஊருக்கு போயிருக்காங்க?(சிக்கல்ல சிக்கிட்ட சிகாமணி)அது தெரியல. இன்னும் அவன்கிட்ட நான் பேசல. ஆனா ஒரு பிசினஸ் விஷயமா ஊருக்கு போக போறாங்கன்னு மட்டும் தெரியும்(நீ வக்கீலா ஆகியிருந்தா பாதி கேஸ் முடிஞ்சிருக்கும் சத்யா)
சரி, ரொம்ப கவனமா பார்த்துக்கோங்க. சின்னதா ஒரு க்ராக் தான்.
ஆனா ஒழுங்கா பார்த்துக்கலைனா பெரிசாக வாய்ப்பிருக்கு. மேல கொஞ்சம் அடிபட்டுருக்கு. கவலை பட வேண்டாம். வெள்ளி கிழமை ஒரு தடவ கூட்டிகிட்டு வாங்க. எப்படி இருக்குன்னு பாப்போம். இன்னும் ஒரு நாள் இங்க இருக்கட்டும். அடுத்த நாள் மார்னிங் நான் டிஸ்சார்ஜ் பண்ணிடறேன். கீழ போய் பணம் கட்டிடுங்க.
அவன் பணம் கட்ட போனான். அதற்குள் இவன் கண் முழித்து தண்ணீர் கேட்டான். இவளே ஊட்டி விட்டாள். அம்மாவுக்கு அடுத்து இவ்வளவு நெருக்கத்தில் அவளை கண்டான். டாக்டர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.
அவன் அப்படி கூறினாலும் இவளுக்குத் தவறாக தெரியவில்லை.
நீ ரொம்ப அழகா இருக்க ! நவராத்திரிக்கு அம்மா ஜடை பின்னி குஞ்சலம் வைத்து பின்னி விடுவாள். எத்தனை விதமாய் அலங்காரங்கள் செய்து விடுவாள். அதை ரசிப்பதில் முதல் ஆள் அண்ணாதான். அவர்களின் பிரிவு இன்று தாக்கியது. இப்போது ரிஷி அவ்வாறு கூறியதும் தவறாக கொள்ளவில்லை. ஆனால் அதை அவனிடம் காட்ட விரும்பவில்லை. ஆண்களிடம் எப்போதும் இருக்கும் விழிப்புணர்வு மூளையை எழுப்பியது. ம்ம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரெண்டு வார்த்தை பேசினா போதுமே ஆரம்பிச்சுடுவீங்களே!
இல்ல டாக்டர். எனக்கு இன்னும் உங்க பெயர் கூட தெரியாது. ஆனா ரொம்ப நாளா பழகின மாதிரி தெரியுது. நான் ரொம்ப ஜாலி டைப் . ஆனா ஆத்மார்தமா யாருகிட்டயும் நான் பேசினதே இல்ல. சத்தியமா இதுல எந்த தப்பும் கிடையாது. என்ன நம்புங்க.
நம்பினாளா?
மீண்டும் வருவாள் தேவதை.....
baraniusha
ஹலோ சகோஸ்,
இந்த வார தேவதை உங்களை வெயிட் பண்ண வைக்காமல் இன்னிக்கே வந்துட்டா........
😀 😀 😀
நல்ல பேசுரப்பா. பேசாம சேல்ஸ் ஜோபுக்கு போலாம்.
பேசாம எப்படி சேல்ஸ் ஜோபுக்கு போறது?
அப்பா பெரிய கடி.....
இருவரும் அன்று முதலே நண்பர்கள் ஆகினர். அது சாதாரண நடப்பா இல்லை அதை தாண்டி வேறு ஏதேனும் உண்டா(போக போக தெரியும்)
சத்யாவிற்கு பிறந்த வீடு விட்டு வந்தது பெரிய சிரமம்தான். ஆனால் அதை அவளால் வெளிகாட்ட முடிவில்லை. சத்யாவின் சித்தப்பாவிற்கும் மனதளவில் பெரிய இழப்புகள் உண்டு. அவர் தன் முதல் மனைவியை இழந்த பின் வசந்தியை திருமணம் செய்து கொண்டார். வசந்தி பெரிய பணக்கார வீடு பெண். இந்த மருத்துவமனையின் ஒரே வாரிசு. இவர் மேல் இருந்த நம்பிக்கையில் வசந்தியின் அப்பா திருமணம் செய்து வைத்தார். ஆனால் வசந்திக்கு இவரை பிடிக்கவில்லை. பிள்ளைக்கும் பிடிக்காதவர் ஆனார். சத்யாவை இவருக்கு ரொம்ப பிடிக்கும். அவரின் உந்துதல்தான் இன்று இவள் மருத்துவராகி இருக்கிறாள் என்று சொல்லலாம். ஆனால் இவரின் அன்பு அவர் குடும்பத்தில் இருந்து இவளுக்கு கிடைக்கவில்லை. இங்கு வந்ததும் தன் அண்ணண் போல் இங்கு இன்னொரு அண்ணண் இருக்கிறார் என்ற ஆவல், அவன் எடுத்தெறிந்து பேசுகையில் துடைத்து எறியப்பட்டது . முதன் முதலாக சித்தப்பாவின் நிலையும் புரிந்தது. அதனால் அவள் தனியாக இன்னொரு தமிழ் பெண்ணின் வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டாள். சித்தப்பா மறுப்பேதும் சொல்ல வில்லை.ஆனால் அவர் மனம் அன்புக்காக ஏங்கி கொண்டிருந்தது.இருப்பினும் சத்யாவின் வருகை சித்திக்கும் அண்ணன்னுக்கும் பிடிக்கவில்லை. சத்யா வீட்டில் இருந்து தினமும் சமையல் செய்து கொண்டு வந்து விடுவாள். மதியம் அவருக்கு போட்டுவிட்டு தானும் உண்பதாகி பழக்கமாக்கிக் கொண்டாள். அந்த நேரமே அவருக்கு சந்தோஷமாய் இருந்தது. அவரின் மன பாரங்கள் அனைத்தும் நீங்கியது.
தன் சித்திக்கு தன்னை பிடிக்காமல் போனதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்பதை சத்யா உணர மாட்டாள். அதனால் தான் என்னவோ இன்று இவளால் ரிஷியிடம் வாய்க்கு வாய் வம்படிக்க முடிகிறது. தன்னிடம் இப்படி ஒரு பேச்சு திறமை இருக்கிறது என்று அவளுக்கென தெரியாது(எத்தனை பேச்சு போட்டி கப்பு மிஸ் ஆச்சோ) இவளுக்கென ஆச்சர்யம் தான்.
ரிஷி அழகன். ஆணழகன். பார்ப்பவரை சுண்டி இழுக்கும் வசீகரன். பண செழுமை அப்பட்டமாய் முகத்தில் தெரியும்.ஆனால் அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் மயங்கியதில்லை. இவள் தான் என் சரி பாதி என்று மனம் கூறுவதற்காக காத்திருக்கிறான். பார்ப்பவர்களுக்கு இவர்களின் நெருக்கம் வேற மாதிரி தோன்றினாலும் இவர்களுக்கு அந்த எண்ணம் வரவில்லை. இது நட்பின் உச்சம். நெருக்கம் என்றல் அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. அது மனம் சார்ந்தது.
வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் சத்யா பிடிவாதமாக இருந்தாள். சத்யா இங்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ரிஷிக்கு அந்த பூனா வேலை பிடிக்கவே இல்லை. அதனால் தன் நண்பன் ஆரம்பித்திருந்த புதிய கம்பெனியில் பார்ட்னராக சேர்ந்து கொண்டான். அது மருத்துவமனைகளுக்கு தேவையான சர்ஜிக்கல் பொருட்களை இறக்குமதி செய்து தரும் நிறுவனம். புதிய கம்பெனி என்பதால் வேலை பளு அதிகம் தான். அன்னையின் அன்பும் அப்பாவின்,சத்யாவின் ஊக்கமும் தான் அவனை வாழ்வில் உயர்த்த போகிறது. ரிஷியின் பெற்றோர் சத்யாவை காண அவளாக இருந்தனர். அதனால் நடக்கப்போகும் விபரீதங்கள் பாவம் அவர்களுக்கு தெரியாது.
எல்லாமே நன்றாக போய் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் மதியம் உணவிற்கு பின் சத்யாவின் சித்தப்பா மருத்துவமனையில் கீழே விழுந்து விட்டார். பின் கழுத்து மற்றும் மண்டையில் பலத்த அடி. உடனே மருத்துவம் பார்த்தும் எந்த பயனும் இல்லை. மூளை சாவு என்றனர். நன்றாக இருந்த உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டது.சத்யாவால் இந்த பேரிழப்பைத் தாங்க முடியவில்லை. தேற்றுவார் யாரும் இல்லை. ரிஷியின் அப்பாவும் அம்மாவும் ஓடி வந்தனர். அவர்கள் இல்லை என்றால் சத்யா என்ன ஆகி இருப்பாளோ?
அடுத்த நாள் விடியற் காலையிலேயே வந்து விட்டனர்.
அப்பாவும் அம்மாவும் வந்ததும் ஒரே கதறல்.
அப்பா அம்மா இங்க பாருங்களேன்,
சித்தப்பாவை பேச சொல்லுங்க. தினம் எங்கிட்ட அப்பிடி பேசுவாரு
நேத்துலேர்ந்து பேசவே இல்ல.
பேச சொல்லுங்கப்பா உங்க தம்பிகிட்ட பேச சொல்லுங்கப்பா ப்ளீஸ் பா ப்ளீஸ் பா என்று பார்ப்பவர்களையும் கலங்க செய்தது. சத்யா பொதுவாக தனது உணர்வுகளை வெளிக்காட்டியதில்லை. ஆனால் இந்த கதறல் புதியது. வசந்திக்குமே இது தாங்க முடியவில்லை. ரிஷியும் வந்து சேர்ந்து விட்டான். ரிஷியின் பெற்றோரும் சத்யாவின் பெற்றோரும் சந்திக்கும் முதல் தருணம். அவர்களுக்கு இதற்கு முன் நிறைய பேச வேண்டி இருந்தது. ஆனால் இவர்கள் ஒருவருடன் ஒருவர் சந்தித்த வேளையில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. இருப்பினும் யாரும் எதையும் வெளிக்காட்டி கொள்ளவில்லை. ரிஷியும் சத்யாவின் அண்ணன் சிவாவும் அனைத்து காரியங்களையும் பொறுப்பாக எடுத்து பார்த்துக் கொண்டனர். சித்தி மகன் அனைவரும் சென்னைக்கு கிளம்புகையில் வந்து நன்றி சொன்னான். சத்யாவும் இனி இங்கிருக்க வேண்டாம் என்று பெற்றோர் கூறி விட்டனர். சத்யாவிற்கும் சித்தப்பா பிரிவு தாங்க முடியாது என்று தோன்றி விட்டது. அதனால் அவளும் உடனேயே கிளம்பிவிட்டாள். பதினாறாம் நாள் காரியத்திற்கு வந்த போதே மருத்துவமனையில் இருந்து முறைப்படி விடு விக்கப்பட்டாள்.
சென்னைக்கு வந்ததும் பெரியதாக எந்த வேறுபாடும் தெரிய வில்லை, சோகமாகவே இருந்தாள். அடிக்கடி சித்தப்பா பேசியது எல்லாம் நினைவு கூர்வாள். அப்பா சித்தப்பா ரொம்ப ஹாஸ்யமா பேசுவார். முதல்ல எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா போக போக நானும் ரொம்ப ரசிக்க ஆரம்பிச்சேன். நிறையா தமிழ் பேசுவார். அவரு ஸ்கூல்ல படிச்ச செய்யுள் பத்தி சொல்லுவாரு. பிரீயா இருக்கும்போது கம்ப ராமாயணம் அது இதுன்னு எக்கச்சக்கமா படிப்பாரு. சித்தப்பா சித்தப்பா சித்தப்பா என்று ஓயாமல் அவர் நினைவுதான். இதுவே அவர் உயிரோடு இருக்கும்போது என்றால் இவர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். அவர் இறந்த பின்பு என்பதால் இவர்களால் அதை சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் குடும்ப நண்பர் மற்றும் குடும்ப மருத்துவர் பிரகாசம் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்திருந்தார். இவர் குடும்ப நண்பர் மட்டும் அல்ல. சத்தியாவின் தந்தை த்யாகராஜனுக்கும் ப்ரகாசத்திற்கும் பள்ளி சினேகம். அதனால் அவருக்கு குடும்ப விஷயங்கள் எல்லாம் அத்துப்படி. அதனால் எந்த வித தயக்கமும் இன்றி இவர்கள் நிலைமையை எடுத்து கூற முடிந்தது. இவர்கள் கூறியதில் இருந்து சத்யாவிற்கு சிறு வயது முதலே பார்க்காத போனில் மட்டும் பேச முடிந்த சித்தப்பாவிடம் எவ்வளவு பிரியம் கொண்டிருந்தாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இதற்கு பிரகாசம் ஒரு தீர்வு சொன்னார். அவருக்கு தெரிந்த ஒரு NGO கிராமங்களுக்கு சேவை செய்ய டாக்டர்ஸை அனுப்பறாங்க. உங்களுக்கு ஓகேன்னா இவளையும் அவங்க கூட கொஞ்ச நாளைக்கு அனுப்பி பார்க்கலாம். நிறைய மக்களை சந்திக்கும்போது மனசு கொஞ்சம் கொஞ்சமா பழைய நினைவுகளிருந்து வெளில வர்ரதுக்கு வாய்ப்பிருக்கு. என்ன சொல்லுற ராஜா? அது சரிதான். ஏற்கனவே புள்ளையும் கலெக்டராகி வேற வேற இடத்துக்கு போய்கிட்டு இருக்கான். இவளும் இத்தனை நாள் பாம்பேல இருந்தா. அடுத்து கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போய்டுவா. எங்க கூட இருக்கவே மாட்டாளே...
அது சரிதான் சிவகாமி அம்மா. ஆனா அவளோட பிரச்சனையும் நம்ம சரிப்படுத்த வேண்டி இருக்கே! இல்லன்னா ஏதாவது மன நல டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போங்க. மருந்து மாத்திரையில் சரி பண்ணிடலாம். நீங்க எல்லாரும் கலந்து பேசி சொல்லுங்க. எல்லாத்துக்கும் மேல குழந்தை தான் முடிவெடுக்கனும்.
சத்யாவின் அண்ணன் சிவாவோ சத்யா தன்னுடன் வந்து சில நாள் இருக்கும் படி கூறினார்.
என்னம்மா எப்படியாவது என்னை எப்பிடியாவது வீட்டை விட்டு துரத்திடணுமுன்னு பாக்கறியா?
அப்படி இல்லடா கண்ணு. உனக்கு ஒரு மாறுதல் வேணும். நீ சித்தப்பா மேல ரொம்ப பாசமா இருக்க. உன்னால அவரோட பிரிவு தாங்க முடியல. எங்களுக்கு மட்டும் உன்ன பிரிஞ்சு இருக்கணும்முன்னு ஆசையா சொல்லு. என்னாலையும் அப்பாவலயும் உன்ன பிரிஞ்சு இருக்க முடியுமா? ஏன் உங்க அண்ணனே உன்ன பிரிஞ்சு இருக்க எவ்வளவு கஷ்டப்படறான்? நீ இப்பிடி பேசலாமா? அம்மாவின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.
சரி சரி. நான் சும்மா தான் உன்ன கலாட்டா பண்ணேன். நான் யோசிச்சு சொல்லறேன். சரியாடி ஏன் செல்ல குட்டி அம்மா என்று கன்னத்தை கிள்ளி கொஞ்ச ஆரம்பித்தாள். இது ஒரு மகிழ்ச்சியான தருணம். சிவகாமி அதை ரசிக்க ஆரம்பித்தாள்.
அண்ணனும் தங்கையும் கொஞ்சி கொஞ்சியே ஏமாத்திடுவீங்களே?
ஏம்மா அப்பாவை விட்டுட்டே?
சீ!போடி, உனக்கு வேற வேலை இல்ல. வெட்கத்துடன் அம்மா ஓடியதை அப்பாவும் மகளும் கை தட்டி கலாட்டா செய்து சிரித்தனர்.🤗 🤗 🤗 🤗
மகிழ்ச்சியுடன் நம் தேவதை அடுத்த வாரம் வருவாள் ..
baraniusha
தேவதையின் கிராம பயணத்தை இதோ துடங்கிவிட்டாள்.........
முதலில் சிறிது நாட்களுக்கு சிவாவுடன் இருக்கலாம் என்று முடிவு செய்தாள். அது அவளுக்கு நல்ல பலனைத் தந்தது. சிவா தற்போது திண்டிவனத்தில் இருக்கிறான் . அவனுக்கு முக்கிய இடத்தில் இருப்பிடம் இருந்தாலும், அந்த குடியிருப்பை மறுத்து விட்டு அங்கிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தனியாக வீடு எடுத்துக் கொண்டிருக்கிறான். அப்பா அம்மா வந்து தன்னுடன் தங்கும் காலத்தில் மாற்றி கொள்ளலாம். இல்லை அவர்களுக்கு சம்மதம் என்றால் இங்கேயே சற்று பெரிய வீடாய் எடுத்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். சத்யா இப்போது வருவதால் அவளுக்கு இந்த இடம், ஊர், மக்கள், இவை எல்லாம் சரிப்பட்டு வருமா? ஏசியில் வளர்ந்தவள், இங்கு எப்படி சமாளிப்பாளோ என்று கவலையாகவே இருந்தான். சரி, அவளுக்கு கஷ்டமாய் இருந்தால் உடனேயே அனுப்பி விடலாம் என்று முடிவெடுத்தான்.ஆனால் சத்யாவிற்கு எதை பற்றியும் கவலை இல்லை. பல மாதங்களுக்கு பிறகு அண்ணனுடன் இருப்பதே அவளுக்கு சுகம். எப்போதும் சிவாவின் கையை கட்டிக் கொண்டு அண்ணா அண்ணா என்று சுற்றுவாள். அவள் பாம்பே சென்றதும் சகோதர பாசம் இன்னும் அதிகமாயிற்று.ரிஷியின் நட்பு அதை ஓரளவு சரி செய்தது என்றுக் கூறலாம்.
அம்மாவும் எப்ப பாரு ,அண்ணா அண்ணா தான். நாங்கல்லாம் தேவையே இல்லையா என்று திட்டுவாள். பெரிய படிப்பு படிக்க வெளியூர் செல்லும்போது அவர்களால் தாங்க முடியாதே என்ற கவலை அவளுக்கு. ஆனால் அப்பாவோ, அப்பத்தான் தனித்தனியா இருக்கணும். இப்பவாவது ஒன்னா இருக்கட்டுமே என்பார். எது எப்படியோ சத்யாவிற்கு இப்போதும் அதே அண்ணா தான். சத்யாதான் முதலில் சில காலம் சோகமாகவே இருந்தாள். தான் செய்தது தவறோ என்று சிவா நினைக்க ஆரம்பித்து விட்டான்.
ஆனால் அது எல்லாம் முதல் ஒருவாரத்துக்குத்தான். அதன் பின் தான் அவள் கங்காவை சந்தித்தாள். கங்கா வீடு வேலை செய்ய வந்தவள். அவள் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருப்பவள். மேலே படித்தால் மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம் என்று படிக்க வைக்கவில்லை. அவள் அந்த மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றவள். நன்றாக படித்தால் அவள் தந்தையிடம் சொல்லி உதவித்தொகை மூலம் படிப்பதற்கு சம்மதம் கேட்போம் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறி இருந்தனர். அவள் முதல் மதிப்பெண் வாங்கியதால் தலைமை ஆசிரியரே வந்து கேட்டு கூட இவள் தந்தை சம்மதிக்கவில்லை. அவளுக்கு நல்ல இடம் வந்தால் உடனே திருமணம் என்று முடிவெடுத்து விட்டார். 18 வயதிற்காக காத்திருப்பு. அவள் நல்ல நிறம். நல்ல உயரம். படிப்பது மட்டுமில்லாது வயக்காட்டு வேலை, சில வீடுகளுக்கு சென்று வேலை செய்வது என்று உடம்பு கட்டுக்கோப்பாக திடமாக இருந்தது. அவள் கல்வி தைரியம், அவள் கல்வி அவளுக்கு தன்னம்பிக்கை தந்திருந்தது. அவள் பார்க்க மிக சாதாரணம். ஆனால் அவள் அறிவும் பேச்சும் தன்னம்பிக்கையும் அபாரம். அது அவள் நடவடிக்கைகளிலும் தெரிந்தது. இப்படி எல்லாமே சேர்ந்து வருவது எல்லாருக்கும் நடக்காது. எல்லாமே இருந்தும் பண வசதியும் குடும்ப சூழ் நிலையும் அவளது படிப்பு ஆசையை நிறைவேற்றவே இல்லை.இம்ம்ம்ம்ம் ........ என்ன செய்வது எல்லாம் விதி.(அட இப்பிடி சும்மா விட்டுட முடியுமா? அப்புறம் எதுக்கு நம்ம ஹீரோ இருக்காரு)
அம்மா, உங்க துணியும் சேர்த்து நானே துவைச்சுடரேன். வேண்டாம்மா, என்னோடத நானே செய்ஞ்சுக்குவேன்.
ம்ம், கங்கா,நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?
சொல்லுங்கம்மா, இல்ல எங்க அண்ணனோட துணியெல்லாம் தோக்கிரியே, உனக்கு கஷ்டமா இல்ல?
இதுல என்னம்மா இருக்கு?
எங்க அப்பாவுக்கு செய்யறேன், நாளைக்கே கல்யாணம் முடிஞ்சாச்சுன்னா கொழுந்தினான் மச்சினன் மாமனார் இன்னும் வீட்டுக்கு வர்றவங்க எல்லாரோடதும் தான் செய்யணும். வேற என்ன பண்ண? இதுக்கல்லாம் அசிங்கம் பார்த்த முடியுமா?
தான் சொல்ல வந்ததை டக்கென்று சொல்லி விட்டாள்.
ஆனால் இது தேவை இல்லை என்று சத்யாவிற்கு தோன்றிற்று.
அண்ணா நீ உன்னோட ட்ரெஸ்ஸ தோய்க்கறதுக்கு மிஷின் வாங்கிக்கோ, அந்த பொண்ண வேலை வாங்காத.
ஏய்! என்ன எனக்கு மட்டும் ஆசையா என்ன? அதுதான் வந்து எனக்கு கல்யாணத்துக்கு காசு சேர்க்க எங்க அப்பா ரொம்ப கஷ்டப்படுது, நான் இந்த வேலையும் சேர்த்து செய்யறேன், எனக்கு ஒரு அம்பது ரூவா சேர்த்து குடுங்கன்னு சொல்லிச்சு. அம்பது ரூபாக்கு பதில் நான் 150 ரூபா தர்றேன். அனா அது அவளுக்கு தெரியாது. அவளோட சம்பளத்துல நான் பாதி தான் தரேன். மீதி அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணும்போது சர்பிரைசா தரலாமுன்னு வச்சிருக்கேன்.அந்த சமயத்துல குடுத்தா கல்யாணத்திற்கு சரியா உதவும். இப்பொன்னா வீட்டு செலவுக்குத் தான் சரியாய் இருக்கும்.
அண்ணா சூப்பர்👌 அப்போ அவ என்னோடதையும் சேர்த்தே செய்யட்டும் இன்னொரு 150 ரூபா சேர்த்து குடுத்துடு. ஓகே!
ஓகே.
அதற்கு பின் கங்காவும் அவளும் நெருங்க ஆரம்பித்தனர். இவள் மூலம் சிவாவுக்கும் கங்காவை பற்றி நிறைய தெரிய ஆரம்பித்தன. இதனை நாள் ஏதோ சிறிய பெண் கல்யாணத்திற்கு பணம் சேர்க்க வேலைக்கு வருகிறாள் என்று மட்டும் தான் தெரியும். ஆனால் இப்போது அவள் இந்த அளவிற்கு பாடங்களை உணர்ந்து படுத்திருக்கிறாள். அவளுக்கு வரைதலில் உள்ள ஆசை, படிப்பில் இருக்கும் ஆர்வம் எல்லாம் புரிந்தது. சிவாவுக்கும் சரி, சத்யாவுக்கு சரி, அவளை முடிந்தால் பட்டணத்தில் கல்லூரிக்கு சென்று படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் இருவரும் அவள் வீட்டிற்க்கே சென்று அவள் தந்தையை சந்தித்தனர். இவர்கள் வந்த காரணம் தெரிந்ததும் கங்காவை பார்த்து ஒரு முறைதான்👿. அவள் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது😥
அப்பா இவங்க வருவாங்கன்னு எனக்கு தெரியாது. அவங்களை நான் வர சொல்லல🤦♀️
ஏண்டி, உனக்குத்தான் பையன் பார்த்துக்கிட்டு இருக்கேனே, இன்னும் என்ன? ஓடுகாலி நாயே! என்று அவளைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.நிலைமை விபரீதம் ஆவதற்குள்
ஏங்க, இதை பாருங்க இதை பத்தி அந்த பொண்ணுக்கு எதுவுமே தெரியாது. ஏன் எங்களுக்கே தெரியாது.
உங்க பொண்ணுக்கு இருக்கற அறிவிற்கு அவ எவ்வளவோ பெரிய ஆ ளா வரலாம். எங்களுக்கு மனசு தாங்கல (ஆமப்பா , பாவம் எங்களுக்கும் மனசு தாங்கல, பாவம் கை புள்ள) அதனால்தான் வந்து கேட்டோம். அதுக்கப்புறம் உங்க இஷ்டம். அதுக்காக உங்க ஊர் கலெக்டரு முன்னாலேய நீங்க அந்த பொண்ண சித்ரவதை பண்ணா நீங்க என்னோட வேற முகத்தை பார்க்க வேண்டி வரும்.
சத்யா இது வரை அண்ணனின் இப்படிப்பட்ட கோபத்தை பார்த்ததில்லை👿.
கங்கா, காலையிலே வேலைக்கு வந்து சேரு. சத்யாவிற்கே கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது. மற்றவர்களை பற்றி கூற வேண்டுமா!
கங்காவின் கல்வி(காதல்) கை கூடுமா......... சத்யா என்ன செய்ய போகிறாள்.... மீண்டும் வருவாள் தேவதை.....
baraniusha