Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

நீ என் தேவதை - Tamil Novel  

Page 5 / 5
  RSS

Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
03/07/2020 10:19 am  

Episode-36

மருத்துவர், மெதுவாக ரம்யாவிடம்  பேசி பார்த்தார்.  அவளுக்கு என்ன பிடிக்கும், யாரைக்  கண்டால் பிடிக்காது. ரிஷியை பிடிக்குமா?, பெற்றோர் பற்றி? என்பது போன்ற கேள்விகளை கேட்டார். அதிலிருந்து சில  குறிப்புகளை எடுத்துக் கொண்டார்.  ஆனால் அதிலிருந்து அவருக்கு தேவையான விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதனால், அவளின் ஆழ்  மனதுக்குள் சென்று பார்த்தால் தான் தெரியும் என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி அதற்கான மருத்துவம் பார்க்கப் பட்டது.

 

   அதன்படி அவளிடம் அப்போது முதல் அவளது சிறியவயது வரை பின்னோக்கி சென்று கேட்டுப்பார்த்தார். முதலில் கேட்ட கேள்வியே அவளது பெற்றோர் பற்றியும் ரிஷியை பற்றியும்தான். அதிலிருந்து தெரிந்தது,  அவளுக்கு ரிஷியை ரொம்ப பிடிக்கும்.  அதற்கு காரணம்,  அவன் தந்தை மருத்துவமனையில்  இருந்த போது யாரவது வீட்டு  பெண்களுடன் இருந்தே தீர வேண்டும் என்று வாதாடியதுதான். அப்போது அவளுக்கு தோன்றியது, எனக்கு இவர்தான் கணவராக வேண்டும். இவர்தான் என்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்ற பாதுகாப்புக்கு உணர்வு.

 அதுவேதான் காதலாக மாறியது. அவள் சொன்னது இன்னொரு விஷயம், எனக்கு அவர் தொடும்போது புடிச்சிருக்கு. ஆனா ஏத்துக்க முடியல. எந்த விதமான காரணத்துக்காகவும் நான் அவரை  இழக்க விரும்பல. நான் என்ன சரிபடித்திக்கணும், காலம்பூரா சந்தோஷமா சேர்ந்து வாழனும். இதுதான் எனக்கு ஆசை.

 

 

   இன்னும் முன்னாடி , இன்னும் முன்னாடி என்று வருடங்களை பல  பின்னோக்கி நகர்ந்தது. எனக்கு நம்பிக்கையே இல்ல. ஏற்கனவே நாம் இப்ப அஞ்சு வயசுக்கு வந்துட்டோம். இதுலயும் கண்டு பிடிக்க முடியல்லேன்னா, நீங்க செக்ஸாலஜிஸ்ட் கிட்டதான் போய் பார்க்கணும். அதுக்கு அப்புறம்தான் வேற என்ன பண்ண முடியும்ன்னு யோசிக்கணும். மிச்சம் இருக்கறதியும் முடிச்சிடலாம். அதுக்கப்புறம் பாக்கலாம் என்றார் மருத்துவர்.

 

அப்படியே இருக்க வேண்டுமே, அவளுக்கு மனதில் எந்த பாதிப்பும் இல்லை என்றால் போதும். உடலில் இருக்கும் பாதிப்புகளை சரிபடுத்தி கொள்ளலாமே என்ற நப்பாசை தோன்றியது.

 

ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் சென்று விட்டு திரும்பும்போதெல்லாம் அவளுடன் வெளியில் எங்காவது செல்வதை வழக்கமாகி கொண்டிருந்தான் ரிஷி.

அது அவள் மனசோர்வை போக்கியது.   மருத்துவர் என்ன சொன்னார் என்ன சொன்னார் என்ற கேள்விகளும் குறைந்தது . அந்த  வழக்கம் இருவருக்கும் பிடித்தமானதாக இருந்தது. ரிஷிக்கும் அலுவலகப் பணிகள், ரம்யாவுக்காக மருத்துவரிடம் செல்வதற்கு என்ற கடினமான சூழ்நிலையில் , இந்த மாதிரி சில விஷயங்கள் அவன் மனதிற்கும் உற்சாகத்தை தந்தது .

 

சில சமயங்களில் உணவு விடுதிக்கு செல்வார்கள். சில சமயங்களில் பீச்சுக்கு செல்வார்கள். எல்லா விதங்களிலும் அவளை சந்தோசபடுத்தவே அவன் முயற்சி செய்தான். இப்போதெல்லாம்  அவளும் அவன் கையை பிடித்துக் கொண்டே சுற்றினாள் . வண்டியில் செல்லும்போது  அவன் தோளை  பிடித்துக் கொள்வாள். முன்பெல்லாம் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு சென்றால் தனது ஹாண்ட்  பாகைதான் நெஞ்சோடு சேர்த்து  அணைத்துக் கொள்வாள். இப்போதோ ரிஷியிடம் அண்டி ஒண்டிக் கொள்வாள். 

சில நேரங்களில்  அவள் இவன் புஜத்தை பிடிக்கும்போது அவளின் மென்மையும் அவன் மேல் படும். சில நேரங்களில் அவள்  இவன் மீது படும்போது , அவளின் மேனி வாசமும் சோப்பு வாசமும் கலந்து, இவனை மிரட்டும். அப்போதெல்லாம் மிகவும் முயற்சி செய்து தன்னை கட்டுப் படுத்திக் கொள்வான். (நாங்க மட்டும் என்ன? எல்லாத்தையும் பொம்பள வெட்கத்தை விட்டு வாய்ல சொல்ல முடியுமா? இப்படி இஷிக்கிட்டு நிக்கும்போதே தெரியல? நாங்க எம்புட்டு மயங்கிருக்கோன்னு ?) .

அவள் அழகாக அலங்காரம் செய்து கொள்ள ஆரம்பித்தாள். அவனுக்கு பிடித்த  நிறங்களை கேட்டு தெரிந்து கொண்டாள். பெரும்பாலும் அவனுடன்  இருக்கும் நேரங்களில் அந்த வர்ணங்களையே உடுத்திக் கொள்வாள்.  இவனுக்குதான் ஏக்க பெருமூச்சு வரும். (எத்தனை நாள்தான் அழகே உன்னை ஆராதிக்கறேன்னு இருக்க முடியும் )

அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு பிடித்தம் இருந்தது. அது அடுத்த நிலைக்கு முன்னேற்றம் அடைவதை  பற்றிய சிந்தனை இருவருக்கும் இல்லாமல் இல்லை.  இன்னும் சில வருடங்கள் தாமதித்தால் என்ன? அவள்தான் என் துணைவி, அவள் காலம் முழுவதும் என்னுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் . அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று மனதில் உறுதி கொண்டான். ஆனால் அவன் மன உறுதி எத்தனை நாளைக்குதான் நிற்கும் ? அவனும் உணர்ச்சிகள் நிறைந்தவன்தானே ?

 

தனிமை அவனை வாட்டியது. இருப்பினும் அடக்கிக் கொண்டான்.  இதோ இன்றுதான் அவர்களின் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும் நாள் . இன்று அவளை நல்ல படத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தான்.

 

  இன்று நானும் அவளுடன் இருக்கலாமா ? என்று மருத்துவரிடம் கேட்டுக் கொண்டான். அதுவும் ரம்யாவின் வேண்டுதலால்தான். அவன் எத்தனையோ சொல்லியும் இல்லங்க எனக்கு என்னமோ இன்னிக்கு நீங்க இருக்கணுன்னு மனசுக்கு படுதுங்க. இத்தனை நாளா  எனக்கு  ஒன்னும் தெரியல. ஆனா இன்னிக்கு ரொம்ப படபடப்பா  இருக்கு.

சத்யாவும் இல்ல. ப்ளீஸ்ங்க .....

 

சத்யா எங்கே ?

வருவாள் தேவதை ...........

baraniusha


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
07/07/2020 6:06 pm  

ஹலோ, சொல்லுங்க சரவணன்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க ?

நாங்கல்லாம் நல்லருக்கோங்க .  ஆனா  நம்ம முத்து !

முத்து ,

முத்துவுக்கு என்ன ?

 

இங்க ஊருல நடந்த பிரச்சனையில முதுகுல அரிவாள் வெட்டு பட்டுருக்கு .

அப்பிடின்னு சொல்ல சொன்னாங்களா ?

 என்னங்க இது?

இப்டில்லாம் கூட பொய் சொல்லுவாங்களா?

 அவனை கவர்மெண்டு ஆஸ்பத்திரிலதான் சேர்த்திருக்காங்க. போலீசு கேசு வேற. அவனுக்கு கூட நாங்க இருக்கறோம் .. அவனுக்கு ஒண்ணுன்னா ஊரே வரும் .  ஆனா உங்களுக்கு விஷயம் தெரியணுமேன்னுதான் போன் போட்டேன். நம்பரதும் நம்பாததும் உங்க விருப்பம்.

 சரி, நம்பறேன், எந்த ஆஸ்பத்திரி?வார்டு என்ன ? டாக்டர் என்ன சொல்லறாங்க ?

அவங்க எதுவுமே சொல்ல மாட்டேங்கறாங்க. சிடு சிடுன்னு எரிஞ்சு விழறாங்க.

நான் எவளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரேன் .

சரிங்க.

ஆன்! சரவணன், வேற எதுன்னாலும் எனக்கு கொஞ்சம் தகவல் சொல்லுங்க.

சரிங்க மேடம் .

முதலில் நம்ப முடியாதவளுக்கு யோசித்து பார்த்ததில் விஷயம் உண்மை என்றே தோன்றியது. குரலில் பதட்டம் இருந்தது. பயம் இருந்தது, வருத்தமும் இருந்தது.

சத்யா அப்படியே இடிந்து போய்  உட்கார்ந்து விட்டாள் .

 என்ன  சத்யா ? அம்மா தோளை  உலுக்கினாள்.

 

அம்மா, அம்மா, முத்துவுக்கு முதுகுல அரிவாள் வெட்டு பட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்.

 

என்னம்மா என்ன சொல்லற ? தகவல் யாரு சொன்னா? உண்மையானதுதானே ?

 

ஆமா , அவரோட பிராண்டுதான் பண்ணாங்க.

 

சரி இரு, பதட்ட படாத, நான் அப்பா கிட்ட பேசறேன்,  நாம சேர்ந்து போலாம். இரு,

 

அவரும் அலுவகத்தில் இருந்து உடனே வந்தார். மூவரும் உடனே காரில் கிளம்பி விட்டனர்.

 

மருத்துவமனையில்,

 

இவளுக்கே முத்துவை அடையாளம் தெரிய வில்லை. குப்புற படுத்திருந்தான். முகமெல்லாம் வீங்கி இருந்தது.

 

அவனை பார்த்த பெற்றோருக்கு பெரிய அதிர்ச்சி. இவளுக்கு எத்தனை பெரிய இடத்துல ராஜ  மாதிரி அழகோட அறிவோட, பணக்காரனா மாப்பிளை பாக்கணும்னு நினைச்சிருந்தோம், இவனா இவனா தன்  மகளுக்கு கணவன்? அந்த நிலையிலும் பெற்றோரால் அப்படி நினைக்காது இருக்க முடியவில்லை. ஆனால் சத்யாவோ, தான் ஒரு மருத்துவர் என்பதை கூட மறந்து விட்டாள் . அவள் கைகள் தாமாகவே அவன் தலையை கோதியது. முகத்தை தடவியது. ஏன்? காரணம் தெரியாது. கண்கள் கண்ணீரை கொட்டியது. நிற்க வில்லை. அன்னையும் தந்தையும் சமாதானம் செய்தும், அவளால் சில மணி நேரங்களுக்கு, மீள முடியவில்லை.

 

  சிறிது நேரம் கழித்துதான் அவள் சுய நினைவிற்கு வந்தாள் .  சுற்றுப்புறம் பார்த்தாள் .  கண்ணை துடைத்துக் கொண்டாள் . 

 

அப்பா அம்மா நீங்க ரெண்டு பெரும் வீட்டுக்கு போங்க. கோதியது .ஐ கேன் ஹாண்டில் திஸ்.

 

என்ன பேசற? நாங்க இங்கயே இருக்கறோம். 

இல்லமா  இங்க எதுவுமே சரியா இல்ல. உங்களால் இங்க இருக்க முடியாது.

 நீ மட்டும்?

 நான் இருந்துதானே ஆகணும். இவரு என்னோட புருஷனாச்சே !

நோ , நோ,உன்ன தனியா விட்டுட்டு போக முடியாது.

 சரி , நான் ரெஸ்ட் ரூம் போகணும். அதுக்கப்புறம் பேசலாம்.  உள்ளே சென்றவள், வாந்தி குமட்டியபடி வெளியில் வந்தாள் .மகளின் முகத்தை பார்த்தவருக்கு மனது பிசைந்தது. 

 அப்பா என்னாலையும் இங்க இருக்க முடியாது போல . நாம் டாக்டர் கிட்ட பேசி வேற ப்ரைவேட்ல பாக்கலாம்.

 

 மருத்துவரை  எப்போது பாக்கலாம் என்று நர்ஸிடம் கேட்க போனாள் . 

நீங்க டாக்டருன்னா, எதுக்கு இங்க வந்தீங்க? இது போலீசு கேசு. நீங்க நினச்சா மாதிரி எல்லாம் ஆட முடியாது.

இவள் மனதளவில் சோர்ந்து போனாள் .

சத்யா, வா நம்ம ஏதாவது ஒரு ஓட்டல்ல போய்  காபி சாப்டுட்டு, அந்த விஷயத்தையும் முடிச்சுக்கலாம்.

மீண்டும் மருத்துவமனைக்குள் நுழையும்போது, எதிரில், எஸ்.ஐ  வந்தார்.

ஹலோ மிஸ்டர்!

 தியாகு .

ஹா, எஸ் எஸ், எப்பிடி இருக்கீங்க? என்ன இந்த பக்கம்?

இல்ல என்னோட மாப்பிள்ளைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல, அதான்.

 உங்களோட வசதிக்கு இங்க? ஏதாவது மறைக்கிறீங்களா ? பார்வை கூர்மையானது

இல்ல,  ஏதோ சாதி பிரச்சனைல அரிவாள் வெட்டு.. தயங்கியபடியே சொன்னார்.

முத்து ?

எஸ் ,

ஓ! அவரு உங்க மறுமகனா ?

அதற்குள் பார்வை மற்ற இருவரிடமும் மாறியது.

இவங்க என்னோட மனைவி, மகள், அவரு இவளோட ஹஸ்பண்டு .

 அவரின் பார்வை, சத்யாவின் கண்ணை துளைத்தது.

நீங்க போங்க. நான் கொஞ்சம் சாருகிட்ட பேசணும். 

கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அவன் எப்படி உங்க மகளுக்கு?

அது ஒரு கட்டாய கல்யாணம் சார்.

ஏதாவது உதவி ?

ஆமா  சார், இதுவரைக்கும் நான் எதுவும் யாருகிட்டயும் கேட்டதில்லை. நீங்க தப்பா  நினைச்சுக்கலைனா, வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மட்டும் மாத்தி குடுக்க முடியுமா?

இதுக்கு நீங்க இவ்ளோ கூனி குறுக வேண்டியதில்லை தியாகு. உங்கள பத்தி எனக்கு தெரியாதா? 

இல்ல சார் இங்க ரெஸ்ட் ரூம் தான் சரியா இல்ல.

எஸ், எஸ், ஐ  நோ ! இப்பவே சீப் டாக்டர் கிட்ட பேசறேன் . உங்க பொண்ணு என்ன பண்ணறாங்க ?

அவ டாக்டரா இருக்கா . 

அப்புறம் என்ன ? 

கேசு மீடியாவுக்கு போய்டுச்சு. ஏதோ  வேற ஜாதி காதல் விவகாரம்,  பையன்,  கீழ்  சாதி, பொண்ணு மேல் சாதி.  பொண்ணோட  அப்பா, பையன வெட்ட போயிருக்காரு , அத இவன் வாங்கிக்கிட்டான். 

ஓ!  இதெல்லாம் உங்களுக்குதான் முன்னாடியே தெரிஞ்சுருக்குமே? 

இல்ல தெரியாதுங்க.

 நான் விசாரிச்சா வரைக்கும் முத்து, நல்லவன்தான். இது வரைக்கும் எந்த கேசும் இல்ல.

 

மத்தபடி உங்களுக்கு எந்த உதவி வேணுமின்னாலும் கூப்புடுங்க. நம்ம பழைய நட்பு தொடரனும் . தன்னுடைய கார்டை கொடுத்தார்.தியாகு வெளிப்படையாக பேச விரும்ப வில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்தது.

 

ரொம்ப தேங்க்ஸ்.

 

வந்து, விஷயத்தை சொன்னார்.

 

என்னாலதான் நீங்க இப்படி உதவி கேட்க வேண்டியதா போச்சு. ரொம்ப சாரி பா .

 

உனக்காகத்தானே? என்ன இப்போ. மகளை தோளில்  சாய்த்துக் கொண்டார்.

 

 

மீண்டும் வருவாள் தேவதை.............

 

This post was modified 1 week ago by Barani Usha

baraniusha


ReplyQuoteBarani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
14/07/2020 2:50 pm  

 

அதன் பிறகு  அங்கே இருந்த தனியார் மருத்துவமனைக்கு  அவன் மாற்றப்பட்டான் . அந்த விஷயம் அவனுக்கு தெரியாது. தெரியும்போது அவன் தரப்போகும் கொடிய வார்த்தைகளை சத்யா எப்படி தாங்குவாள்?

 அவனுக்கு நினைவு திரும்பியது. அங்கேயே நல்ல கவனிப்பு கிடைத்தது. மறுநாளே சிவகாமி வீட்டிற்கு சென்று இவர்களுக்கு தேவையான துணிகளை கொடுத்து விட்டாள் .  அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே  முத்துவுக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

 இதற்கு நடுவில் இரண்டு முறை காவலர் வந்து இவனிடம் இருந்து வாக்கு மூலம் வாங்கி கொண்டார். அவனுக்கு சத்யா அருகில் இருந்து கவனித்து கொள்வதே சீக்கிரம் குணமாவதற்கு காரணம்.

   மருத்துவரிடம் கூறி தானே வீட்டில் அருகில் இருந்து பார்த்துக் கொள்வதாய் கூறி டிஸ்சார்ஜ்  செய்தாள்.முத்து வீட்டிற்கு    வருவதர்க்கு முன், அவன் வீட்டு பாத்ரூமில், நவீன முறைப்படி டாய்லெட், ஹாண்ட்  ஷவர், எல்லாம் தியாகுவும், சரவணனும் சேர்ந்து மாற்றி இருந்தார்கள்.

 

சத்யாவும் தன்னுடனே வந்து விடுவாள் அல்லது அடுத்த இரண்டு மூன்று நாட்களிலாவது வந்து விடுவாள் என்றே தியாகு நினைத்தார். 

ஆனால்  சத்யாவோ, இல்லப்பா அட்லீஸ்ட் அவர் தன்னோடவேலைகளை தானே செய்யற  வரைக்கும்,தனியா விட முடியாது. அவங்க ஆச்சி வேற  இங்க இல்ல. அவங்க போன் பேசினாதான்  உண்டு. இந்த நிலைமைல  அவரை தனியா விட முடியாதுப்பா. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடறேன்.

 

   அது சரிதான் மா , ஆனா உன்னோட விருப்பமே இல்லாம, தாலி கட்டினவங்கிட்ட எப்படி உன்ன தனியா விட முடியும்?

 

அவரு எதுவும்  செய்ய செய்ய மாட்டருன்னு தோணுது. அதோட என்னால என்ன பாதுகாத்துக்க முடியும்.நான் கோழை  இல்லப்பா.

  எதுவா இருந்தாலும் கூப்டு. தெனம் ரென்டு தடவ பேசணும்,சரியா?

 சரிப்பா.,

அரை மனதுடனே ஒத்துக் கொண்டார்.

 நீங்க ஒரு மருத்துவர்ங்கறதுனால தான் இப்ப அவரை வீட்டுக்கு அனுப்பறேன். ஆனா நீங்க கணவன் மனைவியா நடந்துக்க கூடாது. உங்களுக்கே எல்லாம் தெரியும்.  புதன் கிழமை ஒரு தடவ செக்கப்புக்கு வாங்க.  பார்த்துட்டு, ட்ரெஸ்ஸிங் பண்ணிக்கலாம்.

ஓகே., டாக்டர்.,

இதுல என்னோட நம்பர் இருக்கு., எதுன்னாலும் கூப்பிடுங்க.

தேங்க்  யு வெரி மச் டாக்டர்.

இட்ஸ் ஓகே.

இவர்களை வீட்டில் விட்டு விட்டு, அன்றைய மாலைதான் தியாகு கிளம்பினார்.  அவருக்கு,ஏனோ  உயிரையே  தத்தளிப்பில் விட்டு விட்டு செல்வது போல  இருந்தது.

 இன்னும் அவன் ஆச்சி வரவில்லை. அதனால் வீட்டில் என்ன எப்படி ஒன்றும் புரியவில்லை. உதவிக்கும், துணைக்கும் சரவணனும், செல்வியும் அவ்வபோது வந்து என்ன  வேண்டும் என்று கேட்டு விட்டு போனார்கள். ஊரில் இருந்த வேறு சிலரும் அவ்வபோது வந்து நலம் விசாரித்தனர். இவளுக்கும் ஏதாவது வேண்டுமா வேண்டுமா  என்று கேட்டு கேட்டு செய்தனர்.

 

  அதில் சிலர் இவனைப் பற்றியும், இவன் செய்யும் நல்லது பற்றியும் சொல்லி விட்டு சென்றனர். ஆனால் எல்லோருமே, முத்துவை இவள் திருமணம் செய்தது, இவளுக்குத்தான் ராஜ யோகம் என்று பொருள்படும்படியே இருந்தது. யாருமே இவளை பற்றி சிந்தித்ததாகவே  இவளுக்கு தெரியவில்லை.

 

இவள் எதை பற்றியுமே யோசிக்கவில்லை. இவள் தன்னுடைய விஷயத்தை மட்டுமே கருத்தில் கொண்டாள் . தன்னுடைய மடிக்  கணினியில் படித்து கொண்டே இருந்தாள். இவளுக்கு மேல் படிப்பு படிக்க வேண்டும் என்பது ஆசை. மகாதேவனுக்கு, இவள் நியூரோ  படிக்க வேண்டும் என்பது ஆசை. மகாதேவனின் இழப்பு , இட மாறுதல்கள், தன் குடும்ப பிரச்னை,  திடீர் திருமணம், என்று இதை பற்றி எல்லாம் இவளால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் , இப்போது இருக்கும் நேரத்தை வீணடிக்காமல், தன்  கனவை நோக்கி பிராயணப் பட்டாள்.

 செல்வி உணவு கொண்டு வந்து தந்ததில் இவளுக்கு பெரும் நிம்மதி.  ஏனெனில் சமைக்க காஸ் அடுப்பு கூட கிடையாது. ஆச்சி  தனக்கு அதெல்லாம் சரிபட்டு வராது அதனால்  தனக்கு எதுவும்  வேண்டாம் என்று விட்டாள் . இவளுக்கு மண்என்னை அடுப்பெல்லாம் பார்த்தது கூட கிடையாது. காபியும், கூட பிளாஸ்கில் வந்து விடும். இதற்கெல்லாம் அவர்கள் காசு எதுவும் வாங்குவதில்லை. அதுவும் ஒரு சங்கடம்தான். இருப்பினும் செல்வியிடம் மட்டும்தான் இவள் நெருங்கி பழகியது.  அவளும் இவளை  உடன் பிறந்தவளை போலவே கவனித்துக் கொண்டாள் .அதற்கு ஒரு காரணம் உண்டு. இத்தனை பெரிய படிப்பு படித்திருந்தாலும் துளியும், ஆணவம் இல்லாமல் சத்யா நடந்துக் கொண்டாள் . அவள் உடுத்தும் துணிகளை பார்த்து கூட ஒரு வித மயக்கம் உண்டு. ஒன்றும் இல்லாதவர் கூட, பவுடரும், மேக்கப்புமாக திரிபவர்கள் மத்தியில்,  எந்த அலங்காரமும் இல்லாமலே தன்னை அழகாக வைத்துக் கொண்டவள் சத்யா. அவள் பேச்சும், நடத்தையும் , தானொரு மருத்துவர் என்பதை காட்டிக் கொண்டே இருக்கும். எந்நேரமும் சுறுசுறுப்பாக இருப்பாள், புன்னகை மாறாமல் இருப்பாள். அதிகமாக பேச மாட்டாள் .  இப்படி ஒவ்வொரு விஷயமும் அவளை உயர்திக் காட்டுவதாகவே இருந்தது.

  சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லை என்றாலும், இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டாள். முதல் பயம், பாம்பு. இரவில் இவளுக்கு பாத்ரூம் போகவேண்டும் என்றால், பின் புறத்தில் இருந்தது.  இதுவரை அவள் இருந்த இடங்களில், வீட்டின் உள்ளேயே இருக்கும். இப்போது மிகவும் சிரமப்பட்டாள்.முடிந்தவரை அடக்கிக் கொண்டே இருப்பாள் .

  அப்போதுதான் அவள் கவனித்தாள். என்னதான் மாத்திரை  போட்டு தூங்கினாலும், நடு இரவில் முத்து, அம்மா அம்மா என்று முனங்க ஆரம்பித்தான். என்ன ஏம்மா வுட்டுட்டு  போனே? எல்லாம் என்னய  அனாதை அனாதைன்னு கிண்டலடிக்கறாங்கம்மா ., 

 இவளுக்கு ரொம்ப பாவமாக இருந்ததது. மெதுவாய் தலை கோதினாள் . அவள் கையை அப்படியே இருக்கி பிடித்துக் கொண்டான். நெஞ்சில் அழுத்தி வைத்து அப்படியே உறங்கிப் போனான். இதுவே தினம் தினம் நடக்க ஆரம்பித்தது. அவனின் அம்மாவுக்கான ஏக்கம் இவளுக்கு புரிய ஆரம்பித்தது.

 

அவன் அன்னை இறந்தது, இவள் அன்னையை காப்பாற்றுவதற்காகவே. அதனால் அவனின் ஏக்கம் போக்க வேண்டும். முதலில் அவனுக்கு உடல் சுகமாக வேண்டும். பின்னர் அவனுக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்ய வேண்டும். ஒரு நல்ல துணை கிடைத்தால் அவளே அவனுக்கு மனைவியாகவும், அன்னையாகவும் இருப்பாள்.

 

  விதி வலியது. இப்படியெல்லாம் நினைத்த சத்யா அவனை வேறு ஒரு பெண்ணுடன் பார்க்கும்போது எப்படி ஏற்றுக் கொள்ள போகிறாள். இவளேதான் அவன் வாழ் க்கையை விட்டு வெளியேற நினைத்தாள் . ஆனால் அவன் இவளை வீட்டை விட்டு துரத்தும்போது ?

 

   ஆம், அத்தகைய நாள் தொலைவில் இல்லை.

இதோ காலையிலேயே ஆச்சி வந்து விட்டார். வீட்டின் தோற்றம் மாறி இருந்தது. எல்லாமே அதே போலதான் இருந்தது. ஆனால் ஏதோ மாற்றம். ஏனோ வீடு அழகாய் தெரிந்தது.

வீட்டின் வாசலில்  சிறுசிறு செடிகள் வரிசையாய் நட்டு வைக்கப்பட்டிருந்தது🔅🔆 🏝🏝வாசல் தெளித்து கோலம் போட்டிருந்தாள்(பெருசால்லாம் இல்ல,வெறும் ஸ்டார் தான்✨, அதுவே இப்பதான் செல்விகிட்ட கத்துக்கிட்டது, மருத்துவத்திற்கு நிறைய படங்கள் வரைந்திருந்தாலும், கோலமாவை சரியாக உதிர்த்து, கோலம் போடுவது சிரமமாத்தான் இருக்கு😆)

 

காபி மனம் வரவேற்றது(அதுவும் செல்வி உபயம் தான்)

 

கதவை தட்டினாள் . கதவு திறந்து கொண்டது.  சத்யா மெதுவாய் முத்துவை எழுப்பி காபி தந்தாள் . புது பூவாய்  மலர்ந்திருந்தாள் .

 

நீங்க ஏன் டாக்டர் இதெல்லாம் பண்ணிக்கிட்டு?

 

அதுக்காக !  அப்படியே விட்டுட  முடியுமா ?

 

இங்க பாருங்க முத்து , நீங்க இன்னிலேர்ந்து மெதுவா எழுந்து நடக்க ஆரம்பிக்கணும்.

 

கொஞ்சம் சரவணனை வர சொல்லுங்களேன்.(தன் செய்கையினால், முதலில் பேச தயங்கினாலும் பின்னர் மெதுவாய் சில சில வார்த்தைகளை மட்டும் பேச ஆரம்பித்திருந்தான்)

அவரு எதுக்கு?

இல்ல கை புடிச்சு நடக்க ?

அதான் நான் இருக்கேனே?

இல்லங்க அதெல்லாம் சரி வராது(நம்மளுக்கு சினிமால வர்ற மாதிரி தோள் புடிச்சு நடக்கணுமேன்னு ஆசை)

 

நான் சொல்லற மாதிரி உட்காரனும். நான் சொல்லும்போது மெதுவா பாலன்ஸ் பண்ணி நிக்க முயற்சி பண்ணுங்க. அப்புறமா ட்ரை டு வாக்.  ஓகே ! அவள் தலையை  ஆட்டி  ஆடி பேசுவதில், மயங்கினான். அவள் உதடுகளுக்கு முன்னால், கண்ணும், முகமும் ஆயிரம் பாஷை பேசியது. அந்த அழகில்  அவன் மட்டுமா மயங்கினான் ? அவன் ஆச்சியும் சேர்த்தே மயங்கினாள். இம்புட்டு அழகா ?

 சரி., கைய நீட்டுங்க .

 

மெதுவா பாலன்ஸ் பண்ணி நிக்க ஆரம்பிங்க.

 

அவன் முயற்சி செய்யும்போது,  அவன் கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டாள் .  குட், குட்.,

 

மெதுவாய் நின்றான். நீங்க நிக்கும்போது வெய்ட்ட முதுகுல போடாம மெதுவா  என்ன பாலன்ஸ் பண்ணி நடக்க ஆரம்பிங்க. ரொம்ப வேண்டாம். ரெண்டு அடி  எடுத்து வைங்க போதும். 

 

அவள் சொன்னதை அப்படியே செய்தான். அடப்பாவி, நா என்ன சொன்னாலும் அடங்  காம ஓடுவான். இவ என்னா சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டுறான். ஆச்சர்யமாக பார்த்தாள் .

 

குட் . இப்படியே கொஞ்சம் கொஞ்சமா பண்ணலே மாக்ஸிமம்  ஒரு 1 வீக்குல  நீங்க யாரு உதவியும்  இல்லாமலே  ரெஸ்ட் ரூம் வரைக்கும்  போகலாம்.

 

இப்ப  உங்களுக்கு ரெஸ்ட் ரூம் போகணுமா?

 

ம்ம்.,அவளின் செயல்களில் ஒரு மருத்துவரின் கவனிப்பு மட்டுமே இருந்தது. மற்ற நேரங்களில் அவனுக்கு அம்மாவாக மாற ஆரம்பித்திருந்தாள் அவளுக்கே தெரியாமல் !

 

இருங்க., நான் சரவணனை கூப்புடறேன். என்ன நீங்க பாலன்ஸ் இல்லாம விழுந்திட்டிங்கன்னா என்னால புடிக்க முடியாது.

 

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்  அவன் ஆச்சி.

 

நீங்க?

 

நீ யாரும்மா ? 

 

நீங்க தான் இவரோட பாட்டியா ?

 

ம்ம்., இன்னும் நீ யாருன்னு சொல்லவே இல்லையே?

 

அவளின் வார்தைக் கூர்மையும், பார்வைக் கூர்மையும், இவளை துளைத்தது.

 

நான் இவருக்கு டாக்டர்?

 

ம்ம்.,

 

அவனுக்கு  என்ன ? பறி தவித்தாள் .

 

இவள் சுதாரித்துக் கொண்டாள் .

 

எதிர் பாராதவிதமாக சரவணனே   அங்கு வந்தான். நிலைமையை சமாளித்தான்.

 

வாங்க ஆச்சி , எப்ப வந்தீங்க ?

 

முத்துவுக்கு என்ன ?

 

ஒண்ணும்  இல்ல இங்க ஊருல ஒரு  பிரச்னை. அதுல ஒரு சின்ன  வெட்டு காயம்.

 

அருவா வெட்டு? யாருக்கும் எனக்கு ஒரு போன போடன்னுனு தோணல? செத்தா  போய்ட்டேன்.  

இவ யாரு? கூத்தியாள வச்சுகிட்டானா உங்க பிரண்டு ? அதான் கொஞ்சறதுக்கு இவ இருக்காளே ? ஆச்சி எதுக்கு தொந்தரவா?

 

சத்யாவையும் முத்துவையும் முறைத்தாள் .

 

ஆச்சி , அந்த பொண்ண தப்பா பேசாதே. அவங்க என்னைய பாத்துக்கறதுக்காக மதராசுலேர்ந்து வந்துருக்காங்க.

 

எப்டி ? பகலுக்கு மட்டுமா ராவுக்குமா ? இரட்டை அர்த்தத்தில் பேசினாள் .

 

ஆச்சி! நீ சொல்லுற மாதிரி எதுவும் இல்ல. அப்படியே இருந்தாலும் அவ நான் தாலி கட்டுனவதான்  முத்து உளறிவிட்டான்.

 

என்ன சொல்லற?

 

அம்மா ஆச்சி, இவங்க நம்ம ஊருல, வைத்தியம் பாக்க வந்தாங்க, முடிச்சுட்டு ஊருக்கு போகர சமயத்துல இவன் அவங்களுக்கே தெரியாம சிவன் கோயில்ல வச்சு தாலி கட்டிட்டான் .

 

பளீரென கன்னத்தில் அறை  விழுந்தது. உன்னைய நான் இப்படியா வளத்தேன் ? எத்தனை பொண்ணுங்க உன்னையே சுதாராளுங்க? அதுல ஏதாவது ஒனக்கு காட்டி வச்சுருக்க மாட்டேன்? நம்ம மீனாட்சி நீயே கதியா கெடக்குறாளே? அவளையாவது கட்டி வச்சுருப்பேனே ? படுபாவி , சண்டாளா....

இப்படி கஷ்ட பட்டு வளத்தேனே! ஒரு தடவ என்னைய கேட்கணுமின்னு தோணுச்சா ?

கன்னத்தை பிடித்துக் கொண்டு கண் கலங்க அமர்ந்திருந்தான் முத்து .

 

கண்ணீரை துடைத்தவள் கேட்டாள் .

சரி, அந்த பொண்ணுக்கு உன்ன புடிச்சிருந்துச்சா ?

 

 

உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா தாயி? உங்க அப்பா ஆத்தாளுக்கு தெரியுமா ?

 

இல்லை  தலையாட்டினாள். 

 

அட படுபாவி, இந்த பொண்ண பாத்தாலே தெரியல? அவளை பெத்தவங்களுக்கு மனசு  எம்புட்டு தவிச்சிருக்கும் ? அந்த பாவம் உன்ன சும்மா விடுமா? இப்ப கூட உனக்கு உடம்புக்கு முடியலன்னு வந்துருக்கேடா? எத்தனை நல்ல மனசு இந்த பொண்ணுக்கு ?

 

என்ன மன்னிச்சுடு தாயி. இது எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்.
நானு இவன  சரியாய் வளக்கலை .கை  கூப்பி வேண்டியவள், பின்னர் தலையில் அடித்துக் கொண்டாள் . இப்படின்னு தெரிஞ்சிருந்தா ஏதாவது வண்டில விழுந்துருப்பேனே?

 

முத்துவுக்கும், தலை குனிவாய் இருந்தது. இவள் மல்லியின் மகள் என்று தெரிந்தால் ஆச்சி ஒத்துக் கொள்வாள் என்றே தோன்றியது. அவனுக்கு இப்போதும் தான் செய்தது தவறு என்று தோன்றவே இல்லை.

 

மீண்டும் வருவாள் தேவதை.............

baraniusha


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
22/07/2020 6:25 pm  

 

EPISODE-39 😎 

சென்னை.

 

 சரி, நான் டாக்டர்கிட்ட கேட்டு பாக்கிறேன். சரியா ?

இல்ல,  பொதுவா நாங்க அதுக்கு சம்மதிக்கறது இல்ல. என்ன இது அவங்க வாழ்க்கைல என்னவேனா நடந்திருக்கும் . அது உங்களோட திருமண வாழ்க்கையை பாதிக்க கூடாது.

             

இல்ல மேடம், இந்த திருமண வாழ்க்கை வெறும் கயறு சம்மந்தபட்டதா  நான் நினைக்கல.  இது எல்லாத்துக்கும் மேல.  அத தவிரவும் இது அவளோட இறந்த காலம். எனக்கு அதுக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா இப்போ இந்த நிமிஷம் அவ என்ன தேடறா.

 

சரி, நீங்க இவ்ளோ சொல்லர்துனால நான் ஒத்துக்கறேன். ஆனா இதுனால  அவங்க வாழ்க்கையில எந்த பாதிப்பும் வரக் கூடாது .

 எஸ், டாக்டர் .

ரம்யா, இப்போ உன்னோட 5ஆவது வயசுக்கு  போகப் போறோம்,  உன்னோட ஸ்கூல் பிரென்ட்ஸ்  யாரு? என்ன விளையாட்டு  புடிக்கும்? கேள்விகள் தொடர்ந்தன.

என்ன டீச்சர் அடிச்சாங்க, ம்ம்ம் ம்ம்ம் அழ  ஆரம்பித்தாள் .

எதுக்கு அடிச்சாங்க ?

நானு நேத்து ஹோம்  ஒர்க் பண்ணல .

அதுக்கு அடிச்சாங்களா?

ஆமா ,

சரி சரி  அழாத டீச்சர்கிட்ட உங்க அப்பாவை பேச  சொல்லறேன்.

எங்கப்பா எதுக்குமே பேச மாட்டாங்க .

ஏன் அப்படி சொல்லற?

ஆமா , அந்த மாமா, என்ன  என்னமோ பண்ணாங்க, அதை  அப்பாகிட்ட சொன்ன போது அப்பா கவனிக்கவே இல்ல.

 

இருவருக்கும், பகீர் என்றது.

 

எந்த மாமா?

 

மாமா மாமா பேரு  தெரியல ..

 

நல்ல யோசிச்சு பாரு ?

 

அவங்க அம்மாவோட தம்பி மாமா  ம்ம்ம் அவங்க மச்ச மாமா .

 

அவங்க எப்ப உங்க வீட்டுக்கு வந்தாங்க?

 

அம்மாக்கு அடிபட்டிச்சு இல்ல அப்போதான்

சரி அம்மாக்கு என்ன ஆச்சு ?

 

அம்மா அம்மா பாவம்.,  பாப்பா வீட்டுக்கு வருது இல்ல. அது செத்து  போச்சு.

 

அச்சச்சோ அது என்ன உன்னோட பொம்மை பாப்பாவா ?

 

இல்ல அம்மா தொப்பைல பாப்பா . அது நெஜ  பாப்ப்பா ,

ஓ!  அம்மாக்கு என்ன ஆச்சு ?

அம்மா பாவம், படி ஏறும்போது கீழ விழுந்து ஒரே ரத்தம் ....

அவள் பதறினாள். ரிஷி எழுந்து  அவள் கையை பிடித்துக் கொண்டான். சற்று சமாதானம் அடைந்தாள் .

அப்போ தான் அந்த மாமாவும் மாமியும் வீட்டுக்கு அம்மாவை பாக்க வந்தாங்க .

அப்போ  மாமா என்ன பாத்துக்கறேன்னு சொன்னாங்க. அதனால அத்தையும் அப்பாவும் ஹாஸ்பிடலுக்கு  போய்ட்டாங்க.

அப்போ மாமா நம்ம சாப்பாடு போடறேன்னு சொல்லி, என்ன பக்கத்து வீட்டுலேர்ந்து கூட்டிட்டு வந்தாங்க.

எனக்கு ஆசையா சாப்பாடு ஊட்டி விட்டாங்க. அதுக்கப்புறம்,

அய , என்ன இது? ட்ரெஸ்ஸல்லாம் இப்படி சாப்பாடு கொட்டி இருக்கே? நான் மாத்தி விடறேன்.

சரி, குழந்தை தலையை ஆட்டியது

துணி மாற்றும் சாக்கில் இங்க இது என்ன ?

ஒவ்வொரு இடமாக  அவன் கைகள் குழந்தையை வதைக்க ஆரம்பித்தது.

மாமா மாமா ...........

கொஞ்சம் கொஞ்சம்தான்.,   மாமா உனக்கு நிறைய சாக்கலேட்டு வாங்கி தரவா....

என்ன தொடாதீங்க. எனக்கு வலிக்குது ..

என்ன விடுங்களேன்.. குழந்தை வீறிட்டு ஆழ  ஆரம்பித்தது.  அப்படியும் அந்த காமுகன் குழந்தையின் வாயை  மறுகையால் மூடினான்.

அவனின் அட்டகாசத்தை தாங்க முடியாத அந்த பிஞ்சு பரிதாபம்,  மயக்கம் ஆனது. அதில் பயந்து போனான் அவன்.

இல்லையெனில் குழந்தை !!!

என்னதான் மருத்துவராக இருந்தாலும், அவராலேயே இவள் சொன்ன விஷயங்களை தாங்க முடியவில்லை.

 

ரிஷியின் நிலை இன்னும் மோசம்.

அன்றைய இரவு அவன் மனைவி வந்தாள் .  ஏற்கனவே குழந்தையிடம் ஆசையை  அனுபவித்தவன், அவன் மனைவி எத்தனையோ கெஞ்சியும் அவளையும் அன்று விடவில்லை. அதனால் குழந்தை தனியாக தூங்கியது. அதன் வலியோ அழுகையோ பாவம் யாருக்குமே கேட்காமல் போனது. மறுநாள் காலை  அதை வழக்கம்போல சாப்பாடு ஊட்டிவிட்டு, பக்கத்துக்கு வீட்டில் விளையாட அனுப்பினார். இவன் சிறிது நேரத்திலேயே குழந்தையை  அழைத்தான். ஆனால் குழந்தைக்கு விபரம் சொல்ல தெரியவில்லையென்றாலும், பூச்சாண்டி மாமா, பூச்சாண்டி மாமா, நான் போகல என்று அழுதது.

மாமா உனக்கு நிறைய சாக்கலேட் தர்றேன் வா, எத்தனையோ வற்புறுத்தியும் குழந்தை செல்லவில்லை. அதை பார்த்த அந்த பெண்மணிக்கு ஏதோ சந்தேகம் வந்தது. அதனால் அவன் எத்தனையோ கேட்டு  பார்த்தும்,  நல்ல வேலையாக அவர் அனுப்ப வில்லை. அன்றைய தினம் இரவு ராஜா  வந்தபோது அவர்  மெதுவாக சொல்லி பார்த்தார். இருப்பினும், நெருங்கிய சொந்தக்காரன் என்பதால், அவன் மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை(இப்போது இருப்பது போல இருபது வருடங்களுக்கு முன்பு இந்த அளவுக்கு குழந்தைகள் மீது பாலியல் தொல்லைகள் இருந்ததில்லை. மக்கள் மற்றவரை நம்பினர் , (எத்தனையோ அத்தைகளும் , மாமாக்களும் தான் துணையாக இருந்து பார்த்துக் கொள்வார்கள். இப்போது எத்தனை அங்கிளுக்கும் , ஆன்ட்டிக்களுக்கும்  அத்தகைய பாசம் இருக்கிறது என்பது தெரியவில்லை))

 

அவன் ஆசை நிறைவேறாத காரணத்தினாலும், நிறைவேறாது என்று  தெரிந்ததாலும், மாமா  உடனே கிளம்பி விட்டான். ராஜாவுக்கு அதை பற்றியே சந்தேகமே வரவில்லை. மனைவியும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விட்ட காரணத்தினால், இவர் மீண்டும் கடையை திறந்தார். உதவிக்கு  இருந்த அத்தையும் சில நாட்கள் கழித்து கிளம்பி விட்டார்.  அடுத்த சில நாட்களுக்கு வேறு சிலர் வந்து வந்து உதவினர் . சிமியும் நடுவில் வந்து பார்த்துக் மொண்டார். ஆனால்  யாராலயும் அந்த குழந்தையின் மன பாதிப்பு பற்றி மட்டும் அறிய முடியவில்லை. ஆனால் வளர வளர அவளிடம் நிறைய மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தது. பயம் மிகுதியாகியது. அதை அனைவருமே, பயந்தாங்கொள்ளி என்று கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அதனால் அவள் நட்பு வட்டமும் குறுக ஆரம்பித்தது. நல்ல வே ளையாக அவளுக்கு அந்த சம்பவம் மறக்க ஆரம்பித்தது. அதுவும் ஒரே நாள் என்பதால்தான். இவளை காப்பாற்றிய அந்த பக்கத்துக்கு வீட்டு  பெண்ணுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

 

சரி, இப்ப நீ மெல்ல மெல்ல வெளில வரணும்.

அதற்கு  பின், மருத்துவர் ரம்யாவிடம் எதை பற்றியும் பேசவில்லை. அனால் ரிஷியிடம் நிறைய பேசினார். இப்போ உங்க மனைவியோட நிலைமை என்னனு உங்களுக்கு தெரிஞ்சு போச்சு. இதுலேர்ந்து அவங்கள நாம கொஞ்சம் கொஞ்சமா தான் வெளில கொண்டு வர முடியும். உங்களுக்கு வேணுன்னா  ஒரு செக்ஸ்ஸாலஜிஸ்ட் கிட்ட பாக்கலாம். என்னோட பிரென்ட்ஸ்  இருக்காங்க .

 

 எனக்கு தேவையான்னு தெரியல. பட், ரம்யா அவளுக்கு தேவையான்னு நீங்கத்தான் சொல்லணும்.

 

நான் அவங்ககிட்ட பேசின வரைக்கும், அவங்களுக்கு இதில எந்த பயமும் இல்ல. பட் தயக்கம்  இருக்கு.  உங்கள அவங்களுக்கு புடிச்சிருக்கு. நீங்கதான் அவங்களுக்கு மருந்து. நீங்கதான் அவசரப்படாம நிதானமா ஹாண்டில் பண்ணனும். முதல்ல அவங்களுக்கு உங்ககிட்ட பயம் இருக்க கூடாது. அவங்களாகவே உங்களோட  நெருக்கத்தை விரும்பணும்.

 

எல்லாத்துக்கும் மேல செக்ஸ் இல்லங்கறதுனால நீக்க அவங்க வெறுக்க கூடாது. ஏன்னா அவங்களோட பிரச்சனை என்னனு அவங்களுக்கே தெரியாது.

 

ஓகே ! தேங்க்ஸ் தேங்க்ஸ் லோட் டாக்டர்., சீக்கிரமே நல்ல செய்தியோட வருவோம்.

எனக்குதான் அது  முதல் சந்தோஷம். ஆல் தி பெஸ்ட் .

யோசித்து பார்த்ததில்,  ரம்யாவின்  பெற்றோரின் மீதும் அவனுக்கு வெறுப்பு வந்தது. அவர்கள் நினைத்திருந்தால்  அவளை இந்த பிரச்னையில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்க முடியும் என்றே எண்ணினான்.

இவளின் பெற்றோர்  இருந்த நிலை பற்றி அவன் அறியாதது. அவர்களுக்கு யாரையும் சந்தேக பட தெரியவில்லை. அதுவும், எப்படி உடன் பிறந்தவனை?

எப்போதும் சோர்ந்து போவாள். ஆனால் , இன்று ஏனோ உற்சாகமாக இருந்தாள் .

 

அன்றைய இரவு இருவருக்கும் ஒரு நல்ல இரவாகவே இருந்தது.

மருத்துவர் என்ன கூறினார், என்று கேட்க இவள் 50வது முறையாக மனதில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

இங்க வா,  தன் தோள்  வளைவில் அவளை இறுக்கிக் கொண்டான். அவளுக்கு பிடித்திருந்தது.

இந்த சின்ன பொண்ணுக்கு ஒன்னும் பிரச்சனையே இல்ல. அவளை நீங்க

ஸ்கூலுக்கு கூட அனுப்பலான்னு சொன்னாங்க.

அப்படியா ?

ஆமாம்.

அவன் கிண்டலை புரிந்து கொண்டவளுக்கு வெட்கம் பிடுங்கியது.

நான் ஒன்னும் குழந்தை இல்லை.

அப்ப குமரியா ? காதில் கிசு கிசுத்தான்.

அன்றைய இரவு ஒரு நல்ல இரவாகவே இருந்தது. இதுவே அவர்களின் வாழ்க்கையில் அவர்களை அடுத்த நிலைக்கு,அழைத்துப் போக வேண்டும். அதற்கு ரிஷியின், ஆசை நிறைவேற வேண்டும்.

 

அது என்ன? 

 

என்னங்க, உங்களுக்கு என்னால ரொம்ப கஷ்டம் இல்ல?

 

ஏய் என்ன திடீர்னு சீரியசாயிட்ட ?

 

ப்ச் ரொம்ப சாரிங்க .

 

எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.

 

நீங்க சும்மாதான் சொல்லறீங்க ?

 

ம்ம்., ஆனா இந்த கஷ்டமெல்லாம் போக்க , எனக்கு ஒரு ஆசை, இல்ல எதிர்பார்ப்பு இருக்கு. இல்ல இல்ல,ரெண்டு.

என்ன?

 

நீ இனிமே என்னிக்கும் எதுக்கும் பயப்படவே கூடாது. உன்னோட சொந்த கால்ல நிக்கணும். தைரியத்தை வளத்துக்கணும்.

 

அதுக்கு நான் என்ன பண்ணனும் ?

 

என்னால உனக்கு ஹெல்ப் மட்டும்தான் பண்ண முடியும். யோசிக்க வேண்டியது உன்னோட வேலை.

 

நீ இத கண்டிப்பா பண்ணி தான் ஆகணும். நான் வெளில ஊருக்கு போய்ட்டா உன்னால எப்படி குழந்தைகளை தனியா பாத்துக்க முடியும்?(டேய்  சைகிள்  காப்புல  லாரி ஓட்டேரியே )

 

ம்ம்.,

 

அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.

 

செய்வியா ?

 

ம்ம்., கொஞ்சம் பயமா இருக்கு.

 

பெரு மூச்சு விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டான்.

சரி ,பண்ணறேன்.

 

மீண்டும், வருவாள் தேவதை ............

This post was modified 2 months ago by Barani Usha

baraniusha


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
03/08/2020 12:20 pm  

 

 

மதியம் கூட ஆச்சி ஒன்றுமே உண்ணவில்லை . முத்து வீம்பாய் நின்றான்.

 

எப்போ இவதான் வேணும்ன்னு அவன் என்ன கேட்காம ஒரு முடிவெடுத்துட்டேனோ இனி  நான் அங்கன வர மாட்டேன்.

 

வீட்டு  திண்ணையில் வந்து உட்கார்ந்து  கொண்டாள் . தன்னால்தானே அனைத்து பிரச்சனைகளும் என்று சத்யாவுக்கு குற்ற உணர்வு தாக்கியது.

அவர் உங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணதுனால கோபமா ? இல்ல என்ன கல்யாணம் பன்னதுனால கோபமா ?

குரல் தேனாக இருந்தது. அவள் முகத்தை கூர்மையாக உற்று நோக்கினாள் , ஆச்சி.

இதுக்கு எல்லாத்துக்கும் நாந்தான் காரணம். முகத்தை திருப்பிக் கண்ணீரை அடக்கிக் கொண்டாள் .என்ன மன்னிச்சுடுங்க.

எம்ம்புட்டு அழகு? எவ்ளோ அழகா பேசுது?  இவளை  பார்த்தா  யாருக்குத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசை வாராது?

 

நீ என்னம்மா பண்ணுவ பாவம், ஏதோ பொழப்புக்கு  இடத்துல  போச்சேன்னு எனக்கு தான் கவலை.

இன்னும் கொஞ்ச நாள்தான். அவருக்கு எப்போ மத்தவங்கதுணை இல்லாம தானாவே நடக்க முடியுதோ அப்ப நான் கிளம்பிடுவேன்.

உங்க அப்பன் ஆத்தா உன்னைய எப்பிடில்லாம் வளத்துருப்பாங்க ? உன்ன பாத்தாலே தெரியுதே தாயி.

சரி, நான் இல்லாத நேரத்துல அவன் எப்படி உன்னைய கல்யாணம் கட்டினான்? எல்லாமே எங்கிட்ட கேட்டு கேட்டுத்தான் செய்வான். இது மட்டும் எப்பிடி ?

நான்., உங்களுக்கு என்ன பார்த்தா எதுவும் தெரியலையா?

என்ன என்ன தெரியணும்?

உங்களுக்கு மூஞ்சி அடையாளம் தெரியல?

எங்கையோ பார்த்தாப்புல இருக்கு. ஆனா சட்டுனு ம்ம்ம் நீ மல்லி மாதிரி  இருக்கியே? உனக்கு  மல்லியை  தெரியுமா?

 நான் மல்லியோட பொண்ணு. அதனாலதான்……

அதனாலதான் நான் ஊருக்கு போய்ட போகறதுக்குள்ள எனக்கு தாலி கட்டிட்டாரு. இது , என்னோட அம்மாவோட தாலி, அதனால் நானு இதை அறுத்து கூட போட  முடியாதுன்னு சொன்னாரு.

எங்க  காட்டு பார்ப்போம் !

அவன் சொன்னது தப்பும்மா. இது உங்க அம்மாக்கு அவன் சித்தப்பு கட்ட முயற்சி பண்ண தாலி.  ஆனா இது முதன் முதல்ல உன் கழுத்துலத்தான் ஏறி இருக்கு. இதெல்லாம் அவனுக்கு தெரியாது. இது மல்லி அத்தையோட தாலின்னு சொல்லி நான்தான்  கீழ இருந்ததை எடுத்து சாமிகிட்ட வச்சிருந்தேன். அது பல வருஷமா சாமிக்கிட்டேதான் இருக்கு. அதைதான் கொண்டாந்து உனக்கு கட்டிருக்கான் .

நீ எதுக்கும் வருத்தமே படக் கூடாது தாயி. உங்க ஆத்தாளும், எம் பொண்ணும்  இந்த கூறு கேட்ட குடும்பதுனால படாத பாடு  பட்டதெல்லாம் போதும். என்னோட பொண்ணு உங்காத்தாளுக்காக உசுரையே கொடுத்துட்டா . அதுக்கு பழி  வாங்கறதா நினச்சு இந்த பரதேசி பய உன்னோட வாழ்க்கையையே கெடுத்துப் புட்டான் . சட்டென ஏதோ நினைத்தவள், ஏம்மா  அவன் உன்னைய வேற ஏதாச்சும் பண்ணிபுட்டானா?

இல்ல.,  நாங்க ரெண்டடி தள்ளி தான் நிக்கறோம்.

நல்ல வேளை ., கைய கிய வச்சிருந்தான்., இன்னும் சிக்கலாகிருக்கும்.

சாப்பாட்டுக்கு என்ன பண்ணற?

செல்விதான் குடுக்கறாங்க . ஆனா ராவுல தூங்கத்தான்  ரொம்ப கஷ்டமாருக்கு. பாம்பு வந்துடுமோன்னு பயமா இருக்கு .

இங்க எங்களுக்கு பாம்பு, பல்லி  , எலி எல்லாம் சகஜம். உனக்கு இதெல்லாம் பழக  கொஞ்சம் கஷ்டம்தான்.

அதுவும் பாவம்.  ரொம்ப நல்ல பொண்ணு. இனிமே அவளை   தொந்தரவு செய்ய வேண்டாம். உனக்கு என்ன வேணுமோ நான் செஞ்சு தரேன். செல்விக்கிட எதுவும் கேட்காத.  நான் அவகிட்ட சொல்லிக்கறேன். சரியா ?

ம்ம் ., இப்ப அவகிட்ட டீ கேட்டிருந்தேன் அத மட்டும் வாங்கிட்டு வந்துடறேன். 

போயிட்டு வா தாயி .

அவள் வருவதற்கு  சிறிது தாமதம் ஆனது. அதற்குள் முத்து மெதுவாக எழுந்து கொள்ள முயற்சி செய்தான். தனியாக முடியவில்லை.

டாக்டரு அலறினான்.

அதற்குள்  சத்யா பதறியடித்து ஓடி வந்தாள் .

என்ன முத்து  இது நான் இல்லாதபோது எதுக்கு இதெல்லாம் முயற்சி பண்ணறீங்க. மெதுவாக அவனை திருப்பி படுக்க வைத்தாள் . சிறிது ஆசுவாசம் அடைந்தான்.

 உங்களுக்கு எப்போ டீ  வேணுமோ சொல்லுங்க தர்றேன்.

 

ஆச்சிக்கு தான் தவிப்பாக இருந்தது. என்னோட பேரனை  எவ்ளோ நல்லா  பாத்துக்குது ? இவ இங்கையே இருந்தா எம்புட்டு நல்லா  இருக்கும்? மனம் ஏங்கியது.

 

அந்த பொண்ணோட வாழ்க்கையை நினைச்சு பார்த்தியா ? உனக்கு இத்தனை சுயநலமா ? மூளை திட்டியது.

சத்யாவின் கையை பிடித்தவள் , இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்வேனோ தெரியல.

என்னங்க இது. இது என்னோட கடமைதான?

கண்ணீரை துடைத்து விட்டாள் . தானும் குடித்து மற்ற இருவருக்கும் டீ  தந்தாள் .

அதற்குள் அவள் தந்தை அழைத்திருந்தார். சென்று போன்  பேச ஆராம்பித்தாள். இன்னும்  நான்கு  நாட்களில் சிவாவுடன் வந்து பார்ப்பதாக கூறினார். மனம் நிம்மதி அடைந்தது.

இதுவரை தன் குடும்பத்து அன்பை மட்டுமே அனுபவித்தவளுக்கு  ஆச்சியுடன்  இருக்கப்போகும் இந்த சில நாட்கள் அவளை சொர்கத்துக்கே கொண்டுபோகும்.....

கனவில் மிதக்க மீண்டும் வருவாள் தேவதை...............

baraniusha


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
17/08/2020 7:26 am  

ஹாய் மக்களே ,

எல்லாரும் எப்படி இருக்கீங்க ? போன வாரம் என்னால எபிசொட் கொடுக்க முடியல. மன்னிச்சுக்கோங்க. இந்த வார பதிவு இதோ 😍 😍 

Episode-41

காலையில், தலை முடியை எடுத்துக் கொண்டை  போட்டு கேட்ச் கிளிப்  மாட்டிக் கொண்டாள் . அதைப் பார்த்த ஆச்சி,

 என்னத்தா இது தலையை இப்படி மாட்டுற? முடி அத்தனையும் பாழா  போய்டுமே?

இல்ல ஆச்சி இதுதான் வசதி.

அது சரிதான்.  ஆனா தலைக்கு காலையில எண்ணெய் வைக்கணுமே?

இல்ல, பரவால்ல,  நான் அப்புறமா வச்சுக்கறேன்.

இப்ப என்ன வெட்டி முறிக்கற வேல இருக்கு? வா நான் எண்ணெய  தேக்கறேன்.

 பிடிவாதமாய் அமர்த்தி எண்ணெய்  வைத்தாள் .

என்னது இப்படி வறண்டு கிடக்கு?

மெதுவாய் தலையில் எண்ணெய்  தேய்த்து மசாஜ் செய்தாள் .

இவள் கண் மூடி ஆனந்தமாய்  ரசித்தாள்.

உனக்கு நல்ல மூடி அடர்த்தியா நீளமா இருக்கு. என்னோட மவளுக்கும் இப்படித்தான். கருகருன்னு பின்னல் போட்டா  அப்படியே  கரு நாகம் போலவே இருக்கும். நம்ம முத்துவுக்கும் நல்ல முடி.  இவனுக்கு எப்போ நாவிதன கூப்பிடலாம் ?

இப்போதைக்கு முடியாது ஆச்சி.  இன்னும்  ரெண்டு வாரமாவது ஆகணும். நாளைக்கு மறு  நாள்  டாக்டரு கிட்ட போகணும். அப்போ ஒரு வார்த்தை கேட்டுரலாம்.

நீ டாக்டருதான?

ஆமா, அதனால தான் அவருக்கு ஆஸ்பத்திரில வச்சு பாக்காம இங்கையே பாக்க முடியுது. அவங்க என்ன விட இன்னும் கொஞ்சம் பெரிய டாக்டரு. அவங்களுக்கு தான் சரியா  சொல்ல முடியும்.

சரிடா கண்ணு. எங்க முத்து  கருப்பா  இருந்தாலும் நல்ல களையான முகமில்ல? அவன் ஜல்லிக் கட்டுக்கு  போயிட்டு வந்தான்னா ஊருல இருக்கவளுங்க கண்ணு மொத்தமும் இவன் மேலதான். இன்னொமும்  அந்த ருக்கு , இவன் பின்னடியேதானே  சுத்துறா .

மனதில் ஏனோ ஏதோ இனம் புரியாத தடுமாற்றம்.

யாரு? என்ன பேரு ?

உனக்கு தெரியாதா ? இன்னமும் அந்த சிருக்கி இவனை  பாக்க வரல?

இல்ல.

அப்ப  என்ன வுடு . நல்லதா போச்சு.

பட்டணத்துல எல்லா  பிள்ளைகளும் ஆம்பளங்க மாதிரி தலையை வெட்டிக்கிடுதுங்க. இல்ல பேய் புடிச்ச மாதிரி தலையை விரிச்சு ஆடுதுங்க. உனக்கு எப்பிடி எத்தனை  தல முடி வச்சிருக்க ?

அதுவா ,.  எங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசை.அதான்.

அன்று முதல், அவளுக்கு வித விதமாக தலை அலங்காரம் பண்ணுவது தான் வேலை. ஒரு நாள் தாழம்பூ வைத்து விட்டாள் . மல்லி, ஜாதி, முல்லை என்று வித விதமாக பூ வைத்து விட்டாள் . இவளும் ஆசையோடு வைத்துக் கொண்டாள் . தன் மகளை ஆச்சி சந்தோசமாக வைத்துக் கொண்டது சிமிக்கு ஆச்சர்யம்தான்.

மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமானார்கள். எப்போதும் சரவணன் வந்து  முத்துவுக்கு உடம்பு துடைத்து விடுவது வழக்கம். ஆனால் அன்று காலை சரவணனுக்கு வர முடியாமல் போயிற்று. அதனால் முத்துவே மெதுவே உடல் துடைத்துக் கொண்டான். உதவிக்கு அழைக்கும்படி  இவள் கூறி  இருந்தாள் . இருப்பினும் அவனே செய்து கொண்டான்.  சிறிது நேரம் கழித்து , இவள் பார்த்த காட்சி .... அவனால் குனிந்து தன்னுடைய உள்ளாடையை போட  முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். ஓடி சென்று அதை  பிடுங்கி இவள் போட்டு விட்டாள் . அவமானத்தால் அவன் முகம் வெளிறி, கண்களில் குளம் கட்டியது . ஏனோ அதை  இவளால் தாங்க முடிய வில்லை . அவன் தலை  கோதி  கண்ணீர்  துடைத்து, நான் ஒரு டாக்டர். எங்களுக்கு அசிங்கம் அருவருப்பு எதுவும் கிடையாது, சொல்லிக் கொண்டே சட்டை, வேட்டி  எல்லாம் போட்டு விட்டாள் . வேலையை முடித்தவள் , உங்களுக்கு பொண்டாட்டியும்தான். அவன் கண்ணை பார்த்து கூறினாள் . பார்வையின் ஆழம் இவனால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும் பார்த்திருந்த ஆச்சிக்கு ஏதோ புரிந்தது.

மருத்துவரிடம் அடுத்த முறை சென்று பார்த்த போது  நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறினார்.  இருப்பினும்,

 இப்போதைக்கு தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம். மெடிசின்ஸ் அப்படியே கண்டின்யு பண்னுங்க. 

ஓகே தேங்க்ஸ் டாக்டர் .

 ஆனால் அன்றைய இரவு,  முத்து ,அன்னையின் அன்புக்கு மிகவும் ஏங்கிப் போனான். ஆச்சியால் பாவம் அன்னையின் அன்பைக் கொடுக்க முடியவில்லை .தனிமையும்,  அவமானங்களும் அவன் மனதில் ஏக்கங்களாக  புதைந்திருந்தன . காலையில்  சத்யா பேசியது அவன் ஏக்கத்தை வெளியில் கொண்டு வந்தது. அம்மா  அம்மா என்று தூக்கத்தில்  புலம்பிக் கொண்டிருந்தான்.  தூக்கத்தில் இருந்தவள் எழுந்து மெதுவாக தலை கோதினாள் . சற்று அமைதியானவன்   இவள் நகர்ந்ததும், என்னய  விட்டுட்டு போகாத்தம்மா, எல்லாரும்  என்னைய அனாதை  பயன்னு கிண்டலடிப்பானுங்க.  அம்மா போகாதம்மா. திடீரென அழ  ஆரம்பித்தான். இவளின் தாய்மை உணர்வு வெளி வந்தது. அவனை மார்போடு  அணைத்துக் கொண்டாள் . இதற்கு முன்பும் அவன் அம்மாவுக்காக ஏங்கினான்தான் . ஆனால் அப்போதெல்லாம் சத்யாவுக்கு தானே அம்மாவாக வேண்டும்  என்று தோன்றியதில்லை.  இந்த மாறுதல் புதியது. அவளுக்கே தெரியாதது.

அன்று முதல் தினமும் இரவில் அவனை அனைத்துக் கொண்டு உறங்க  ஆரம்பித்தாள் .   ஆச்சியும் இதை எல்லாம் கவனித்துக் கொண்டு தான்  இருந்தாள். அவளுக்கும் பாவம், இது சரியா,தவறா என்ற முடிவுக்கு வர முடியவில்லை .  ஆனால்  சத்யாவின் குணம் அவளுக்கும் பிடித்து போனது.

பேரனின் செயல் தவறுதான் என்றாலும், பாசம் அவளை கட்டிப் போட்டது. அதனால் பேரனை கடித்துக் கொள்வதை சிறிது  குறைத்திருந்தாள் . என்னதான் சத்யாவும் முத்துவும் கட்டாயத்தினால்   சேர்ந்து இருந்தாலும், இயற்கையும், தன் ரசவாதத்தைத் தொடங்கியது. சத்யாவே அவனுக்கு குளிக்க, உடை மாற்ற உதவினாள் .

ஒரு நாள் ஆச்சி எண்ணெய்  தேய்த்து  குளிக்க சொன்னாள் . அன்று நீ, விலாவி  குளி . நான் போய்  பிரண்டை  கொண்டு வரேன். இவளுக்கு சீக்காய்  வைத்து எல்லாம் குளிக்க தெரியாது.  கண்ணில் விழுந்து கண்ணு எரியுது ஆச்சி என்று அலறினாள் . ஆச்சி இல்லாததால்   முத்து  தான் வந்தான். வந்து  மெதுவாய் கண்களை தண்ணீர் விட்டு அலம்பினான்.

 தேங்க்ஸ் முத்து . ஆள்  பாக்க முரடனா  இருந்தாலும்,  ரொம்ப சாப்ட் தான். மனதில்  நினைத்துக் கொண்டாள்.

ஆனால் முத்துவுக்கோ அவளை பார்த்த நினைவுதான் ஆட்டிப்  படைத்தது.  ஒரு பக்கம் அவங்க பாவம் இங்க வந்து எனக்காகதானே கஷ்ட படறாங்க என்று தோன்றினாலும், அவள் என்னுடையவள் என்றே மனம் வாதிட்டது.

அவள் குளித்து உடை  மாற்றி வந்தாள் .  நெற்றியில் சிறிய பொட்டை வைத்துக்கொண்டவள், தலையை நன்றாக துவட்டினாள் . இல்லையென்றால் யார் ஆச்சியிடம் திட்டு வாங்குவது. தலையை துவட்டியவளுக்கும் முத்து  தன்னை ஒற்றை உள் பாவாடையில் பார்த்தது
மூளையை துளைத்தது . அவன்  முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள் . ஆனால்  அவளின் மணமும்  சீக்காய் மனமும் சேர்ந்து அவனை வாட்டியது. தலையில் சிறு பின்னலிட்டவள், ஆச்சி  கட்டி வைத்திருந்த பூவை தலையில் வைக்க போனாள் . அப்போது எதைச்சையாக முத்துவை  பார்த்தாள் . அவன் கண் இமைக்கவும்  மறந்து இவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனாகவே எழுந்து வந்து இவளுக்கு தலையில் பூவை வைத்தான். அவன் அதோடு நிற்காமல் அவள் கூந்தல் ஒதுக்கி  கழுத்தில் தோளில்  முத்தமிட்டான்.

இவளுக்கு உடல் சிலிர்த்தது.

சத்யா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க .

கண் மூடி அவனை, அவன் மூச்சுக்கு காற்றை ரசித்தாள் .

கதவு தட்டப் பட்டது.  இருவரும் மன்மதனின் பிடியில் இருந்து வெளியில் வந்தனர்.

மீண்டும் வருவாள் தேவதை .........

 

 

 

baraniusha


ReplyQuoteBarani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
27/08/2020 5:16 pm  

Episode-42

இயற்கையின் உந்துதலினால் இருவரின் உடல் இணையலாம்.  ஆனால்  மனது? முத்து தன்னுடைய .வருமானத்தை இஷ்டம் போல செலவு செய்பவன் இல்லை. ஆனால்  தன்னை  வயதில் ஆதரித்தவர்க்கு தன்னால் முடிந்த  உதவிகளை செய்வான். அதற்காகத்தான்  வெட்டு காயம் பட்டுக் கொண்டது கூட.  அதற்கெல்லாம் கவலை படுபவனும் அல்ல . முத்து  என்றுமே அப்படி உதவிக்காக நின்றவர்கள் தான் சரவணனும் செல்வியும்.   சரவணனை வேற்றாக  பார்த்ததில்லை. அதே போலத்தான் சரவணன் வீட்டிலும். என்றுமே  அவர்கள் இவனை  வேற்றாக  பார்த்ததில்லை.  அதே போலத்தான் ருக்குவின் வீட்டிலும். அதனால்  என்னவோ  ருக்கு இவன் மேல் மையல் கொண்டாள் . இவனுக்கு தான் பாவம் அவள் தங்கையாகவே தெரிந்தாள் .

ருக்குவும்  எத்தனையோ முறை இவனிடம் தன்  விருப்பத்தை சொல்லி விட்டாள் . இருப்பினும் இவன் சம்மதம் சொல்லவே இல்லை. இருந்தாலும் முத்து தனக்குத்தான் என்றே நினைத்திருந்தாள் .  ஆனால் இவன் திடீரென சத்யாவை  திருமணம் செய்திருந்தாலும்,  அது நிலைக்காது   நினைத்தாள். அதனால் இந்த முறை அவனுக்கு உதவி செய்வது போல், கூடவே இருந்து அவனை மயக்கி விட வேண்டும் என்று நினைத்தாள் .  ஆனால்  பாவம் முத்துவும் சத்யாவும் காதலிக்க ஆரம்பித்திருந்தனர். அது அவர்களுக்கே தெரியாத போது  இவளுக்கு எப்படி தெரியும் ?

இந்த காதல் எப்படி இத்தனை  சுலபத்தில் வந்தது ? இல்லை,  முத்துவை முதன்  முதலில் பார்த்த போதே சத்யாவுக்கு, பிடித்திருந்தது. அவன் விருப்பத்தை அவள் நிராகரிக்கவில்லை. பெற்றோரின் விருப்பத்தையே  தன்  விருப்பமாக கொண்டிருந்தாள். ஆனால்  அவன் அனாதையாக இருந்து கஷ்டப்பட தன்  அன்னை காரணம் என்ற குற்ற உணர்ச்சியே  அவன் மீது அளவு கடந்த அன்பை உண்டாக்கியது.

ஒரு நாள் காலையிலேயே,

 ருக்குவின் அண்ணன்  செந்தில் வந்தான். ஆம், அவனின் முதல் தங்கைக்கு திருமணம்  நிச்சயிக்கப் பட்டிருந்தது.  அதற்கு, புடவை, நகை வாங்க பணம் வாங்க, வந்திருந்தான்.

டேய், என்னடா இது, தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கும்போது இப்படி அடிபட்டு  கெடக்கே ?

அட போடா , இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நம்ம டாக்டரு இருக்காங்க,  அப்புறம் என்ன ?

முதலில் செந்திலுக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால், முத்து, சத்யாவை பற்றி புகழ்ந்து பேசியதும், வாய்க்கு வாய் டாக்டரு டாக்டரு எனவும், அவனுக்கே தெரியாமல், சத்யாவை அவனுக்கு பிடிக்காமல் போய்  விட்டது. தங்கையின் வாழ்க்கையை இவள் பறித்ததாகவே எண்ணினான்.  அது மட்டும்  இல்லாமல், இவன் போன சமயம் ஆச்சி தலை பின்னி, திருஷ்டி கழித்தாள் . என்  கண்ணே பட்டுடும், எம்புட்டு அழகு ? எம் பேரன் குடுத்து வச்சவன்.

இவள் கன்னம் சிவந்தது. முத்துவின் மேல் தன் கண்களை செலுத்தினாள் . அவனும் கண்டு கொண்டான்.

இவற்றையெல்லாம் பார்த்த செந்திலுக்கு, வயிறு எரிந்தது.

சரிடா, நாளைக்கு மறு  நாள் காலையில நாம  கடை தெருவுக்கு போகறோம் .

நான் வரல டா .,

அதெல்லாம் இல்ல, நீயி வர்ற?

என்ன டாக்டரு நான் போகலாமா?

இப்ப வேணாமே ? இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து போகலாமே ?

மாப்பிள்ளை  வீட்டுல கேட்டா ? இங்கண  பாருடா, நீயி வந்தாதான் எல்லாமே.  இல்லனா மேடம்  எப்ப உங்களுக்கு அனுமதி தர்றங்களோ அப்ப  வேற மாப்பிள்ளை பாத்துக்கலாம். கல்யாணத்த நிறுத்திப்புடலாம் சரிங்களா டாக்டரு?

அவனின் வார்த்தை இவளை சுட்டது. ஆனால்  அவளின் கணவனுக்கு ஒன்றுமே புரியவில்லை .

ஆச்சியும், அப்போதுதான் வெளியில் சென்றாள் . அதனால் பாவம் இவளுக்கு யார் துணையும் இல்லாமல் போயிற்று.

என்னடா இது , அபசுகனமா ? நீ எப்போ சொல்லறியோ அப்போவே போகலாம். பணத்தை வாங்கிட்டு போயிடு. டாக்டரு அந்த பெட்டி லேர்ந்து   மஞ்ச பைய கொண்டாந்து தாங்களேன்.

ஓ  ! பெட்டி சாவி கூட குடுத்தாச்சா ?

இவன் அசடு வழிந்தான்.

இங்கு நடந்ததை எல்லாம் கேட்ட ருக்கு, வானுக்கும் பூமிக்கும் குதித்தாள்.

அண்ணே  நீ என்ன பண்ணுவியோ தெரியாது. எனக்கு முத்து வேணும். அவ  இனிமே இங்க இருக்க கூடாது.

இரு, அவளை எப்படி விரட்டணுமோ அப்படி விரட்டலாம்.

இவர்களின் எண்ணப்படியே,  கடை தெருவுக்கு செந்தில், ருக்கு, முத்து  மூவரும் கிளம்பினர் .  தாலி செய்ய சொல்லி குடுத்திருந்ததால்  பெரியவர்கள் பின்னொரு தரம் செல்வதாக ஏற்பாடு.

ருக்கு, செந்தில், முத்து  மூவரும் கிளம்பினர் . அப்போது ஆச்சி, மூணு பேரா போக கூடாது. உன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு போடா, என்றாள் (அதுக்குத்தானே  நாங்க வெயிட்டிங்கு). அதனால் சத்யாவும், அவர்களுடன் செல்ல வேண்டியதாயிற்று .  அங்கேஒன்றும்  பெரிய அளவில் எல்லாம் கடைகள் இல்லை. இவர்கள் சென்ற பெரிய கடையே அப்படி ஒன்றும் பெரியாதாக இல்லை. அங்கே இவர்கள் தான் பார்த்து கொண்டிருந்தார்கள். மணமகளுக்கு வாங்கிய பின், ருக்கு தனக்கு என்று சிலது எடுத்துக் கொண்டாள் . அது அத்தனைக்கும் முத்து தான் பணம் கொடுத்தான்.

இவள் தனியாக  இருப்பதை பார்த்தவனுக்கு மனம் சங்கடப் பட்டது.

இவன் சத்யாவின் காதில் வந்து,  நீங்க எதுவும் எடுக்கலையா?

எனக்கு எதுக்கு.

நான் உங்களுக்காக தனியா  பணம் கொண்டாந்துருக்கேன். உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்கங்க.

இல்ல  பரவால்ல. எனக்கு இதெல்லாம் செட்டாகாது.

நீங்க வாங்கித்தான் ஆகணும். நானே ஒன்னுஎடுத்து தரேன்.

அவன் இவளுக்கு மெல்லிய ஒற்றை சரிகை  போட்ட ஒரு  சில்க் காட்டன் வாங்கினான். (டேய் புடவைய குடுத்து  மனச வாங்கிடுவியா )

இவளும் அவனுக்காகவும் ஆச்சிக்காகவும்  துணிகள் வாங்கினாள் .

ருக்குவுக்குத்தான் பொறுக்க வில்லை.(யம்மா இதுதான் அவங்களுக்கு பஸ்ட் (நைட்)சாரி )

ஒரு வழியாக அவர்கள் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். இவளின் புடைவையை பார்த்த ஆச்சிக்கு ஆச்சர்யம்தான். எப்போதும் விசேஷங்களுக்கு ஆச்சி தான் இவனுக்கும் சேர்த்து துணி எடுப்பாள் . முத்துவுக்கு இதில் எல்லாம் எப்போதுமே நாட்டம் இருந்ததில்லை .  ஆனால் திடீரென கிளம்பியதே உலக அதிசயம்தான்.

ருக்குவுக்காக என்றே  நினைத்தாள் .  இப்போதுதான்  காரணம் புரிந்தது. 

சத்யாவின் பிடிவாதத்தினால் இருவருமே அன்றே  அவள் எடுத்து குடுத்த  ஆடையை காட்டிக் கொண்டனர்.  மூவரும் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

 

மறுநாள் காலை  ருக்கு முத்துவுக்கு பிடிக்கும் என்று மீன் குழம்பு கொண்டுவந்தாள் . அதன் வாடை  சத்யாவுக்கு குமட்டி விட்டது. சிறு வயதில் இருந்தே சத்யாவுக்கு ஒத்து கொள்ளாததால், சிவா வேண்டாம் என்று விட்டான். குழந்தைகள் வேண்டாம் என்றதால் இவர்களும் எடுத்துக் கொள்வதில்லை. அதிலும் பாவம் சத்யாவை உடல் எங்கும் வீங்கி குழந்தை பட்ட  அவஸ்தை., சிமிக்கு நினைத்தாலே இறங்கவே இறங்காது. தியாகுவுக்கும் அதே தான் .

இந்த விஷயத்தை முதல் நாளே ஆச்சியிடம் இவள் கூறி விட்டாள் . அதனால் எந்த அசைவமும் இவளுக்காக ஆச்சி செய்ய வில்லை . ஆனால்  இன்று ருக்கு கொண்டுவந்ததும் இவளுக்கு தாங்கவில்லை . அதை பார்த்தவனுக்கு  மனம்  நெருடியது.  ருக்கு எனக்கு வேணாம்.

ஏன் நல்லாலியா ?

இல்ல அவங்களுக்கு ஒத்துக்காது .

உனக்கென்ன ?

அதெல்லாம் சொன்னா  புரியாது.

நீ என்  மனச நோகடிக்கர .

நீங்க வேண்ணா  சாப்பிடுங்க. நான் வெளில இருக்கன் .

எழுந்து  கொண்டவளுக்கு மயக்கம் வந்தது.

இவன் ஓடி சென்று தாங்கி பிடித்தான்.

நீங்க இப்படிலாம் ஓடக்  கூடாது.

அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.

இதை பார்த்த ருக்கு வெடுக்கென புடவையைஉதறி இடுப்பில் சொருகி கொண்டு சென்று விட்டாள் .

இவன் எதை பற்றியும் கவலை படவில்லை.  அவன் கவனம் முழுவதும் தன்  மனையாள்மீதே இருந்தது.

எனக்காக   நீங்க  ஏன் சாப்பிடல ?

தெரியல. மனசு சொல்லிச்சு.

இவள் எம்பி அவன் கன்னத்தில்  முத்தம் ஒன்றை பதித்தாள்.

இது எதுக்கு ?

தெரியல, மனசு சொல்லிச்சு.

அப்ப  இங்க, மறு  கன்னம் தந்தான். 

அவளின் அன்பும், முத்தங்களும் பெருகட்டும்.............

நம்மிடம்,

மீண்டும் வருவாள் தேவதை.

 

 

baraniusha


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
13/09/2020 6:18 pm  

நீ என் தேவதை-44

 

கங்கா மனதில் என்ன நினைத்தாளோ அதையே தான் வேறு விதமாக சிவாவும் நினைத்தான். என்ன ஆனாலும் சரி , கங்காவை மனதில் நினைக்க கூடாது, அவள் பற்றிய எண்ணங்களை மனதில் விதைப்பதும் தவறு. இனி அவளுக்கு என் மனத்திலும் சரி , வாழக்கையில் சரி, எந்த பங்களிப்பும் இல்லை.

அப்படியே விட்றதுக்கு நாம எதுக்கு ?😍🤔

மனதில் நினைத்ததை நடத்த விரும்பினான் சிவா,

மறுநாள் காலையிலேயே இதை பற்றி பெற்றோரிடம் பேசி விட்டான். சிமிக்கும், தியாகுவுக்கும், மகனின் மன மாற்றம் சந்தோஷத்தை தந்தது. அதற்கேற்ப அடுத்த வாரமே பெண்ணின் தந்தையும் வந்து பேசினார். ஆனால் மிகவும் பெரிய இடம், ஒத்து வருமா என்ற தயக்கம் அனைவருக்குமே இருந்தது. 

ஆனால், ஸ்வேதாவின்  அழகு அனைவரின் தயக்கத்தையும் தூக்கி எரிந்தது.  பெயருக்கேற்றாப்போல வெள்ளை  நிறம். பார்க்கும் போதே அனைவரின் மனதும் கொள்ளை போனது.குரல் அது தேனில் குழைத்தது போல இருந்தது.

இவர்களுக்கே இத்தனை மயக்கம் என்றால் , சிவாவுக்கு சொல்லத்தான் வேண்டுமா?

இவளின் பேச்சும் பணிவும் கூட அனைவருக்கும் பிடித்திருந்தது. கங்காவை தவிர அனைவருமே பெண் பார்க்க சென்றிருந்தனர். சத்யாவும் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டாள்.  அனைவருக்குமே பிடித்திருந்தது என்றாலும் ரிஷிக்கு மட்டும் ஏனோ நெருடலாகவே  இருந்தது.

ரிஷிக்கு கங்காவை பற்றியும் அவளது காதலை பற்றியும்  நன்றாகவே தெரிந்தவன் ஆயிற்றே . சிவாவின் இந்த முடிவு அவனுக்கே ஆச்சர்யம்தான். ஆனால் சத்யா சிவாவிடம் இதை பற்றி கேட்டதற்கு அவன் சொன்ன காரணங்கள் ஒத்து கொள்ளும்படியாகவே இருந்தது. அவர்களின் வயது வித்தியாசம் பெரிய விஷயமாகவே தெரிந்தது, என்றாலும் ஏனோ இளையவர்களுக்கு சிவாவின் இந்த மன மாற்றம் ஏற்க முடியவில்லை.அது மட்டும் இல்லாது, இப்போது கங்காவை பற்றிய கவலையும் சேர்ந்து கொண்டது.

பெண் வீடு.,

பெண் பார்க்க வருகிறார்கள் என்ற பரபரப்பு, பதட்டம் அனைவர் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும், தன் மகளை பெண் பார்க்க பல பேர் வரக் கூடாது என்பதில் அவர் கவனமாகவே இருந்தார்.(வீட்டு அம்மா கண்டீஷன் 😜)

சிவாவும் ஸ்வேதாவும் தனித்து விடப் பட்டனர்.

ஹாய் ,

ஹலோ,

என்ன பேசறதுன்னே  தெரியல்ல,

ம்ம்,

இருவருக்குமே சற்று வெட்கம், கூச்சம், படபடப்பு தொற்றி கொண்டது.

என்னோட கனவு , ஆசை எல்லாமே இந்த படிப்புதான். அதை நான் அச்சீவ் பண்ணிட்டேன். அடுத்தது என்னோட தங்கச்சி . அவதான் என்னோட உலகமே அவ மட்டும்தான். 

அப்போ உங்கள நம்பி உங்களோட மனசுல,  ஐ மீன் உங்க உலகத்துல யாராலயும் வரவே முடியாதா? சிரித்து கொண்டே அவள் கேட்டாலும் இவனுக்கு சுருக்கென்றது.

ச ச அப்பிடில்லாம் இல்ல.  எப்போ எனக்கு திருமணம் பிக்ஸ் பண்ணறாங்களோ அப்பவே அவங்களுக்கும் என்னோட உலகத்துல வந்துடுவாங்க இல்லையா ?

ம்ம்.,  சிரித்தாள் ., 

உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா?

எங்க  அப்பா சொல்லுவாரு.,

ஏனோ இவள் பதிலில்  இவன் திருப்தி அடையவில்லை.

அதற்கு நேர் மாறாக இவள் தந்தையோ,

எங்களுக்கு சம்மதம். நீங்க கலந்து பேசி எங்களுக்கு சொல்லுங்க.

அவரின் பேச்சு சாதாரணமாக இருந்தாலும், அவர்களின் பணம் பதவி, பந்தா காட்டியது. இருப்பினும், மகனுக்கு பிடித்திருந்தால் தங்களுக்கும் சம்மதம் என்றே நினைத்தனர்.

மகனுக்கு சம்மதம் என்பதால் இவர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.  பாவம் அங்கே கங்காவை பற்றி நினைப்பதற்குதான் ஆளில்லாமல் போய் விட்டனர். அன்று முதல் கங்காவிற்கு தான் ஏன் பிறந்தோம் என்ற எண்ணம் வந்து விட்டது. அது முதல் வீட்டினரிடம் இருந்து ஒதுங்கி கொள்ள ஆரம்பித்தாள். அது பற்றி சிமிக்கும் தியாகுவுக்கும் கூட தெரிய ஆரம்பித்து வி ட்டது.

சிவாவின் திருமணத்திற்கு பிறகு கங்காவை ஹாஸ்டலில் இருக்க சொல்வதே  நல்லது என்ற முடிவிற்கு வந்தனர். ஆனால் அதை எப்போது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்தது.

இவளுக்கு கல்லூரியில் நட்பு வட்டம் கிடைத்தது. அவர்கள் மூன்று  பேர். அவர்களுக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தது. இவளுக்கு தையல் நன்றாக தெரிந்திருந்தது. இவளின் ஆசிரியை ஏதேனும் சந்தேகம்  இருந்தால் இவளிடம் கேட்டு செய்யும்படி சொல்லி இருந்தார். இருப்பினும் இவளுக்கு சரியாக ஆங்கிலத்தில் சொல்ல வராது. அதனாலேயே இவளின் அருகாமை கூட சிலருக்கு பிடிக்கவில்லை. சிலர் இவள் காதுபடவே நாட்டுப்புறம் என்று கிண்டல் செய்வார்கள். இவள் மனம் சத்யாவுக்காக ரொம்பவே ஏங்கியது. முன்பெல்லாம் தினமும் இரவில் ஒன்றிரண்டு வார்தைகளாவது சிவாவிடம் பேசிவிட்டுதான் படுப்பாள். இப்போதெல்லாம்  சிவாவுக்குத்தான் கங்கா என்ற பெயர் கூட மறந்து விட்டதே.

தன் நிலைமையை எண்ணி அழ கூடாது என்று எத்தனை நினைத்தாலும் மனம் சிவாவை எண்ணியே நொந்து கொண்டது. இதனால் அவளால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதுமே கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்பவள், கடந்த சில தினங்களாக படிப்பில் நாட்டம் இல்லாதது ஆசிரியைக்கு நன்றாகவே தெரிந்தது. 

உங்களுக்கெல்லாம் படிக்க புடிக்கலன்னா வீட்டுலையே இருக்க வேண்டியது தானே? எதுக்கு எங்க உயிரை எடுக்கறீங்க? தன்னுடைய சுய சிந்தனையில் இருந்தவளை,வெளியில் கொண்டு வந்தது கடின சொற்களும் வகுப்பில் இருந்து வந்த கொல்லென்ற சிரிப்பும்தான். அவமானம் தாங்காமல் ,

சாரி  மேம் ,

ஆமா எல்லாத்துக்கும் இது ஒரு பதில்,(திட்டுகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன)

இவளின் நிலையை பார்த்த மற்றவர்க்கு கேலியாக இருந்தாலும், இந்த மூவருக்கும் பாவமாகவே இருந்தது.

சத்யா எப்போது வருவாள் ? கங்காவின் நிலை எப்படி மாறும்?

 

மீண்டும் வருவாள் தேவதை ..........

baraniusha


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
20/09/2020 5:35 pm  

நீ என் தேவதை-45

இந்த வாரம் ஒரு சின்ன அப்டேட் தான் கொடுக்க முடிஞ்சது, அடுத்த பதிவு சீக்கிரமே கொடுக்க பார்க்கறேன்.

அவர்கள் மூவருமே இவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். இருப்பினும் இவளால் அங்கிருக்க முடியவில்லை. கடற்கரைக்கு சென்று சிறிது நேரம்அமர்ந்து கொண்டாள்.
மனம் கட்டுப்படவில்லை. தன்னுடைய நடந்த சோகங்களையேதிருப்பி திருப்பி நினைத்து கொண்டிருந்தாள். ஏன் தனக்கு மட்டும் இத்தனை சோகங்கள், கஷ்டங்கள்? எனக்கென்று ஏன் எந்த உறவுகளும் இல்லை?
உனக்காக நான் இருக்கேன் சொல்ல ஒருவர் கூட இல்லையே? ஏன் ? வகுப்பில் எத்தனை பேரு சிரித்தார்கள்? எல்லாருக்கும் பெற்றோர் உறவினர் எத்தனை சொந்தங்கள்? எனக்கு! நான் ஒரு அனாதை, அனாதை.,

மீண்டும் மீண்டும் அதே வாசகம் அவள் காதில் ஒலித்தது.

என்ன விட்டுட்டு ஏம்பா போனீங்க? ஏம்ப்பா ஏம்பா .. இன்னிக்கு நான் இப்படி தனியா நிக்கறானே பா , கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கேன். நீ என்கிட்ட வா, வா,

அங்கே அவள் அன்னை நின்று கொண்டிருந்தாள். கண்ணை துடைத்து கொண்டாள்.

அம்மா நான் வந்துடறேன்., மெல்ல மெல்ல கடலுக்குள் சென்று கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அங்கே வந்த ரிஷியும் ரம்யாவும் அவளை பார்த்து விட்டனர்.

என்னங்க அந்த பொண்ணு கடலுக்குள்ள போகுதுங்க போங்க போய் இழுத்துட்டு வாங்க.,

அலறினாள் ரம்யா .,

யாரென்று தெரியாமலே சென்று அவள் தலை முடியை பற்றி இழுத்து பளீரென கன்னத்தில் ஒரு அறை விட்டான்.

அதற்குள் கூட்டம் கூடி விட்டது.

இவளை பார்த்தவனுக்கோ அதிர்ச்சி.......

தற்கொலை தான் தீர்வு என்பது தவறான முடிவு என்பதை சீக்கிரமே கங்கா புரிந்து கொள்வாள் ........

நம்புவோம்...

மீண்டும் வருவாள் தேவதை...........

baraniusha


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 66
27/09/2020 6:18 pm  

🤩 🤩 Episode-46 😍 😍 😍

அழ ஆரம்பித்த கங்காவை எப்படி சமாதான படுத்துவது தெரியாமல்  இருவரும்  தவித்தனர். 

கங்கா கொஞ்சம் நிறுத்தரியா ?

நிற்கவில்லை . ரம்யா தலை கோதி  கொண்டிருந்தாள் .

நல்ல வேளை . என்னோட பொண்டாட்டி கூட இருந்தா. இல்ல நாந்தான் கைய புடிச்சு இளுத்தேன்னு  டின்னு கட்டிருப்பாங்க.

அவன் எரிச்சலோடு சொன்னது பெண்கள் இருவருக்குமே சிரிப்பு வந்தது.

சிரி , இப்ப சிரி . உன்ன பார்த்து நாங்க ரெண்டு பேரும்  எப்படி பயந்துட்டோம் தெரியுமா ?

ரம்யாவும் பரிதவிப்போடு பார்த்து கொண்டிருந்தாள் .

சரி வாங்க வீட்டுக்கு போவோம்.

இருந்த கடுப்பில், ரம்யாவும் சேர்ந்து  திட்டு வாங்கினாள் .

ஏண்டி, பயம் பயம்  எல்லாத்துக்கும் பயந்து கிட்டு  ஒரு  கார்  கூட  ஓட்ட தெரியல.  சத்யாவும் உங்க வீட்டு பொண்ணுதானே , சித்தி எப்படி தைரியமா வளத்துருக்காங்க ?

ரம்யா எதுவும் வாயே திறக்க வில்லை.

ரிஷி நேராக தன்  வீட்டுக்கு அவளை  அழைத்து சென்றான்.  இன்னிக்கு எங்க வீட்டுல இரு. நாளைக்கு போகலாம்.

ம்ம்.,

நேராக  கார் வீட்டுக்கு பாய்ந்தது.

கங்கா  நீ வீட்டுக்கு  போ நான் இதோ வந்துடறேன் .

ரம்யா  டிக்கில ஏதாவது இருக்கா  பாரு.

ஏன் நீங்களே  பாருங்களேன். என்னையே  வேலை சொல்லறது. அளுத்துக்  கொண்டாள் . கங்கா  சிரித்து  கொண்டே மாடி ஏறினாள்.

ரம்யா டிக்கியை திறந்தாள் . கூடவே வந்த ரிஷி, சாரிடி பொண்டாட்டி !

 மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டாள் . எதிர் பார்க்காத போது  கன்னத்தில் முத்தம்  தந்தான்.

ப்ச்., என்ன இது?

ம்ம்.,  இந்தடெர்ன்ஷிப்.

ம்ம்.,

முழியாலே  முழிங்கிடாதடி !

என்ன பேச்செல்லாம் ஒரு  மாதிரி இருக்கு ?

பேச்சு கண்டிப்பாக இருந்தாலும், கண்களில் காதல் வழிந்தது, கன்னங்களில் சிவப்பேறியது.

ம்ம் பேசத்தானே முடியுது.....

அவன் ஸ்டைலாக கண்களை சிமிட்டினான்.

அவன் அசந்த நேரம் கன்னத்தில் தன் இதழ் பதித்து, கங்கா காத்துட்டுருப்பா..... சட்டென மறைந்தாள்.

கங்காவை எப்படி சமாதான படுத்துவது? யோசனையுடன் படி ஏறினான்.

அதற்குள் பெண்கள் இருவரும்  அடுக்களையில் இருந்தனர். அவனுக்கும் அந்த சந்தர்ப்பம் சத்யாவுடன் (தனியாக ) பேச தேவை பட்டது.

விஷயத்தை கேள்வி பட்டவளுக்கு மனம் , உடல் இரண்டுமே பதறியது.

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஏன் ?.... அவளுக்கு பிடித்து கொள்ள ஒரு  துணை தேவை பட்டது. அவளின் முக பாவனையை பார்த்த முத்து அவள் அருகிலேயே நின்று கொண்டான்.அவள் கையை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டான். இவள் அவன் கையை அழுத்தி பிடித்து கொண்டாள். நீ சாஞ்சுக்கதாண்டி இந்த தோள் தவிக்குது. மனம் கூவியது. வார்த்தைகளை வெளியில் வராமல் தான்பார்த்து கொண்டான். அதை அப்போதே சொல்லி இருந்தால் எத்தனையோ மன சங்கடங்களை தவிர்த்திருக்கலாம். அவன் சொல்லாததற்கு காரணம், அவனின் தாழ்வுணர்ச்சி. அதை சத்யா புரிந்து கொள்வாளா?

சரி ரிஷி, நீ அம்மாக்கு சொல்லிட்டியா ?

இல்ல சத்யா.

எனக்கு என்ன பண்ணறது, அவகிட்ட எப்படி பேசறது ஒண்ணுமே புரியல. இதை ரம்யா வேற எப்படி எடுத்துப்பா எனக்கு புரியல.

நீ கவலை படாத , அவ புரிஞ்சுக்குவா. இருந்தாலும் நீ கொஞ்சம் பாத்து நிதானமா ஹாண்டில் பண்ணு.

எல்லாம் இந்த சிவா பண்ண வேலை.

டேய் அண்ணனை இப்படி திட்டதடா.

அது இல்ல சத்யா கங்காவுக்கு ஏதாவது ஆகிருந்தா ?

நீ சொல்லறது சரிதான்.

சரி நான் அவகிட்ட பேசிட்டு சொல்லறேன்.

நைட்டு எவ்ளோ நேரம் ஆனாலும் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணிடுடா. ப்ளீஸ்

ஓகே சத்யா.

ரிஷி நான்  ரொம்ப கடமை பட்டுருக்கேண்டா., 

சத்யா ப்ளீஸ் .,  என்ன அந்நியம் ஆக்காத., 

சரிடா கண்ணா.,  நீ போய் ஆக வேண்டியத பாரு. 

ம்ம் ஓகே.,

ஹாலுக்கு வந்தவனுக்கு சுட சுட காபி தயாராக இருந்தது.

என்ன அக்காவோட  பேச்சு வார்த்தை எல்லாம் முடிஞ்சுதா?

ம்ம்., அவளின் கொஞ்சலும் நக்கலும் பாவம் இன்று அவனுக்கு புரியவில்லை.

கங்காவை குளித்து தன்னுடைய உடையை போட்டுக் கொள்ள சொல்லி ரம்யா அனுப்பி இருந்தாள்.ரிஷியின் மனா நிலை இவளுக்கு புரிந்தது. என்னங்க என்ன இது ? என்ன குழப்பம்?

தலையை கோதினாள்.  இவனுக்கு அவள் அருகாமை, அன்பு எல்லாம் தேவைப்பட்டது.

ரம்யா உன்கிட்ட கேட்காமலே நான் அவளை இங்க கூட்டிட்டு வந்துட்டேனே?

அதனால என்ன ?

உனக்கு கோபம் வருத்தம் எது இருந்தாலும் என்ன கோச்சுக்காதடி!

சரிடா பையா !

அப்புறம் உன்கிட்ட இன்னொரு விஷயம்  நான் கொஞ்சம் கங்கா கிட்ட தனியா பேசிட்டு வரவா?

என்னங்க இது ? இதெல்லாம் போய் எங்கிட்ட கேட்டுட்டு?

அவ நம்ம வீட்டு பொண்ணு. அவளுக்கு எந்த பிரச்னைனாலும் நாமதான் பாக்கணும். அவளுக்குனு யாரு இருக்கா?நீங்க பாத்துதான் நடந்துக்குவீங்க. எனக்கு தெரியும்.

அவளின் நம்பிக்கை அவர்களின் வாழ்க்கையில் வரப்போகும் வசந்ததிற்கு காரணம்.

பெரியம்மா எப்படி இருக்கீங்க?

என்னடா தீடிர்னு இந்த பக்கம் காத்து வீசுது? உனக்கு எங்க ஞாபகம் வந்துருக்கு?

என்ன பெரியம்மா நீங்க ? இப்பதானே உங்க வீட்டுலேர்ந்து இங்க வந்தோம்.  தெனம் தொந்தரவு பண்ண முடியுமா?

எனக்கு சரி உன்ன பெத்தவளுக்கு என்ன சமாதானம் வெச்சுருக்க ?

போய் கழுத்தை கட்டிக்கிட்டு முத்த மழை பொழிஞ்சுட வேண்டியதுதான்.

அதுக்கு சமாதானம் ஆகலேன்னா?

சிவாகிட்ட அட்வைஸ் கேட்பேன்.

நீ புழைச்சுக்குவே.

தேங்க்ஸ் பெரிமா.

டேய் ரிஷி,

இந்த கங்காவை வேற காணுண்டா. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறா. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. ஏதாவது ஸ்பெஷல் கிளாஸ் இருக்குமோ? இருந்தாலும் எனக்கு ஏன் சொல்லல?

அதில் உண்மையான பயம், பாசம் ,பதற்றம் எல்லாவற்றையும் இவனால் உணர முடிந்தது.

அதுக்குதான் நான் போன் பண்ணேன் . அவளை வழியில பார்த்தோம் . ரம்யாவுக்கு இன்னிக்கு அவளோட இருக்க ஆசை. அதான் இங்க கூட்டிட்டு  வந்துட்டேன். நீ ஒன்னும் கவலை படாத.

சரிடா அவ ஏன் எனக்கு  சொல்லல.

அதுவா ரெண்டும் செம்ம அரட்டை. டின்னர்கூட கிடைக்குமான்னு சந்தேகம் தான். வாய்க்கு வந்ததை அள்ளி விட்டான்.

சரி , அவ இருந்தா குடு.

அத்தை.

ஏண்டி நீ சொல்ல மாட்டியா? இங்க வயத்துல புளிய கரைக்குது.

மன்னிச்சுடுங்க அத்தை..

இதுதான் கடைசி தடவ. இனிமே இந்த மாதிரி பண்ண உன்ன எங்கையும் அனுப்ப மாட்டேன்.

ம்ம்.,

இதற்குள் மனையாளின் சோப் வாசனை கணவனை மயக்கியது.  கணவனின் அக்கறையும் அன்பும் மனையாளை மயக்கியது. அவள் நெஞ்சில் காதல் ஊற்று பொங்கியது.

மீண்டும் வருவாள் தேவதை........

 

baraniusha


ReplyQuotePage 5 / 5
Share: