Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

நீ என் தேவதை - Tamil Novel  

Page 7 / 7
  RSS

Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 77
19/11/2020 1:17 pm  

THANKS MA., INDHA VAARAM KANDIPPA SATHYA EPISODE IRUKKU

 

baraniusha


NIVETHA liked
ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 77
19/11/2020 1:26 pm  

 😍 😍 😍 EPISODE-52.1 😘 😘 😘 😜 

மற்றவர்களை வழி  அனுப்பி விட்டு இவர்கள் இருவர் மட்டும் அங்கேயே இருந்து கொண்டனர். பனிகூழ்  ஆர்டர் செய்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தனர். இருவருக்குமே திகட்டவில்லை. பெண்ணவளின் நாணமோ வார்த்தைகளை யோசிக்க விடவில்லை. அவளின் அந்த நாணமே இவனையும் யோசிக்க விடாமல் தடுத்தது.

ஒரே  வீட்டில்  ஒரே அறையில் இருவரும் இருந்தாலும் இருவருக்குமே அடுத்த நிலைக்கு செல்ல தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. அது தயக்கமா  இல்லை  பயமா இருவருமே யோசிக்க விரும்பவில்லை. ஆனால் இருவருமே ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்திருந்தனர்.ஒருவரை  ஒருவர் பிரிந்து இருக்க முடியாது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.  ரிஷியின் பெற்றோரும் இங்கு இல்லை. என்ன விஷயமாக இருந்தாலும் ஓடி வந்து அன்னையிடம் சொல்லியே பழக்க  பட்டிருந்தவனுக்கு இப்போது மனைவியிடம் சொல்ல பழகி இருந்தான். பல விஷயங்களில் அவளுக்கே சிரிப்பு வரும். ஆனாலும் அவன் தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

எதுவா இருந்தாலும் நம்ம வீடு ஆளுங்க கிட்ட எதுக்கு மறைக்கணும்?

அதுக்காக பேனா  வாங்கினேன். பென்சில் வாங்கினேன். இதெல்லம்மா சொல்லுவாங்க?

பென்சில் பேனா  விஷயம்னு  ஆரம்பிக்கறது நாளைக்கு பொண்ணுங்க விஷயத்துல வந்து நின்னா ?

அவள் முறைத்தாள்.

அப்படின்னு எங்க அப்பா சொல்லுவாரு.

ம்ம்! அது சரி., இதெல்லாம் சொல்லிதான் மாமா அத்தைய மயக்கி வச்சுருக்காங்களா?

ஆமா .

ஆனா இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்.

நீதான் ஏற்கனவே மயங்கிட்டியே?

நான் ஒன்னும் மயங்கலப்பா !

அப்ப ஏன் மாமாவை பார்த்ததுமே முகத்துல லைட்  அடிக்குது?

அதெல்லாம் ஒன்னும் இல்ல.

இப்படியே புது மன தம்பதியின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இவர்களின் பிரிவுதான் இவர்களை சேர்த்து வைக்குமா?

என்னதான் இவர்கள் பொறுமையாக இருந்தாலும் விதி தான் விளையாட்டை ஆரம்பிக்காமல் விட்டு விடுமா என்ன?

எப்படி இருந்தாலும் சரி, இப்போது இவர்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பனிக்கூழ் வரும்வரை அவர்கள் காதலில் கரைந்து கொண்டிருக்கட்டும். அவர்களின் தனிமையை  நாம் கெடுக்க வேண்டாம்.

 

 

This post was modified 1 week ago by Barani Usha

baraniusha


NIVETHA liked
ReplyQuoteBarani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 77
19/11/2020 2:38 pm  

 😀 😀 😀 தேவதை-52.2 😀 😀 😀 

இவர்கள் இங்கே சந்தோசமாக இருந்தாலும் அங்கே சத்யாவின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயல் வீசியது. அவள் தலையில் விழப்போகும் இடியை எப்படித்தான் தாங்க போகிறாளோ அவள். அன்று ரிஷியும் கங்காவும்  சென்ற பிறகும் சத்யாவின் முகத்தில் இருந்த புன்னகை மாறவே இல்லை.

 அதன் காரணம் ரிஷிதான்  என்று அவன் நண்பன் ஏற்றி விட்டான். இவனும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டான். அவனுக்கு இருக்கும் சந்தேகங்களை அன்றே  அவன்  தன் மனையாளிடிம் கேட்டிருக்கலாம். கேட்டிருந்தால் எத்தனையோ விபரீதங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் நாம் என்ன நினைத்தாலும் காலம்தான் நம்மை வழி  நடத்தும்.

அன்று அவனுக்கு மனம் சரி இல்லாததால் வயலுக்கு போக வேண்டும் என்று தோன்றியது.

ஆச்சி நான் வயலுக்கு போறேன்.

சத்யாவிடம் சொல்லவே இல்லை. தன்னிடம் கூறுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே! இருந்தும் இவளாகவே மழை  பெய்யற  மாதிரி இருக்கே?

பதில் ஏதும் கூறாமல் செருப்பை போட்டுக் கொண்டான்.

நீங்க தனியா எங்கையும் போக கூடாது. உங்களால  தனியா மேனேஜ்  பண்ண முடியாது. வேணுன்னா நானும் வரேன்.

வாயே திறக்காமல் மட மடவென செல்ல ஆரம்பித்தான்.

அவனின் அந்த பாரா முகம் அவளுக்கு மனதில் வலியை  ஏற்படுத்தியது. கண்களில் வந்த கண்ணீர்  துளியை மெதுவாக துடைத்துக்  கொண்டாள். வயலுக்கு வந்தவன் சிறிது  நேரம் தனிமையில்  அமர்ந்துக் கொண்டான். வயலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மழை துளிகள் கூட தலையில் விழுந்த   தெரியவில்லை. மழைல  நீங்க நனையக் கூடாது, அந்த குரல் தான் காதில் விழுந்தது. இருப்பினும் வேண்டும் என்றே மழையில் உட்கார்ந்துக் கொண்டான். 

தான் பம்பாயில் இருந்த போதும் சில சமயங்களில் சித்தியும், தம்பியும் கூடத்தான் தண்னிடம் பாரா  முகம் காட்டி இருந்தனர். ஆனால் அப்போதெல்லாம் தந்தை ஏதோ ஒரு விதத்தில் தன்னை சமாதானப் படுத்தி விடுவார். ஆனால்  இது புதியது.அவளுக்கே தெரியாமல் அவள் அவனை விரும்ப ஆரம்பித்திருந்தாள். மனதை  மாற்றி கொள்ள புத்தகத்தை எடுத்து படித்தவளுக்கு வழக்கம் போல நேரம் போனதே தெரியவில்லை, திடீரென்று விழுந்த இடியின் ஓசையில்  தான் சுற்றுப்புறம் உணர்ந்தாள். அப்போது தான் முத்து இன்னும் வரவில்லை என்று யோசனை வந்தது , ஓடி சென்று ஆச்சியிடம் கேட்டாள் .

அவன் என்ன சின்ன புள்ளையா? வந்துருவான், கவலைபடாத.

சொல்லி விட்டு மாடுகள் நனையாமல் இருக்க கோணிப்பையை கட்டப் போனாள் .

மாடுகள பாக்க போறீங்க? உங்க பேரன் இன்னும் வரலைன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லையே?

இதுங்கள நாந்தான் பாக்கணும். அவனுக்கு அப்படியா? வயல்லேயே  படுத்து வளந்தவன். அவனுக்கு இந்த மழையெல்லாம்  ஒண்ணுமே இல்லை .

இவளால் சமாதானம் கொள்ள முடியவில்லை.

இல்ல ஆச்சி, மத்த சமயம் வேற,  இப்போ இன்னும் அவருக்கு முதுகு பாலன்ஸ் ஆகல. சளி இருமல் வந்தா  தாங்கவும்  முடியாது.

கவலை படாத வந்துருவான். செத்த நாழி பாப்போம். இல்லன்னா நான் சரவணனை போய்  பாக்க சொல்லறேன்.

இருப்பினும் இவள் மனம் தவித்தது . குட்டி போட்ட பூனையாய் இங்கும் அங்கும் தவித்தாள் .

இவளை பார்த்த ஆச்சிக்கு  சிரிப்புதான் வந்தது.

சத்யா தன்னை  விரும்புவதாக நினைத்திருந்தவனுக்கு, இன்று தான் அது என்றுமே நடக்காது என்று தெரிந்தது. தனக்கு முழுவதும் குணமானதும் அவள் சென்று விடுவாள் என்பதும் தெரிந்தது. 

மழைக்கு  முன் வந்த ருக்குவின் அண்ணன் வேறு விதமாக அவனுக்கு நிலையை எடுத்துரைத்தான்.

என்ன முத்து,வீட்டுக்கு விருந்தாளிங்கல்லாம்  வந்துருந்தாங்க போல?

இவனிடமிருந்து எந்தபதிலும் வராது போகவே முகத்தை பார்த்தவனுக்கு அவர்களின் வருகை இவனுக்கு உவப்பாக இல்லை என்பது நன்றாகவே புரிந்தது. அதையே சாக்கிட்டு இவனுக்குள் இருந்த காதலையே தாழ்வு மனநிலைக்கு கொண்டு சென்றான்.

யாரோ பையன் வந்துருந்தானே நல்ல சிவப்பா ஒசரமா ! ஆள  பாத்தாலே நல்ல படிப்பு,வசதின்னு  தெரிதுல. அவங்கள்லாம்  பணத்துலையே பொறந்து வளந்தவங்க. ஏஸி  ரூமுல குளு குளுன்னு  இருப்பாங்க. நம்மள மாதிரியா ? ஏன் மச்சான் நம்ம டாக்டரு வீடு கூட நல்ல பெரிசா வசதியாதான் இருக்குமில்ல? நான்  என்னனென்னவோ பேசிக்கிட்டு இருக்கேன். எப்படி இருந்தா  என்ன இப்போதைக்கு டாக்டரு உன்னோடதான இருக்கு ? பொடி  வைத்து  பேசினான்.

சரிடா நான் போறேன், பாவம் ருக்கு என்ன தேடும். நீயும் வரியா ?

பதில் ஏதும் சொல்ல வில்லை.மழைக்கு முன்னாடி வீடு போய் சேரணும் . நீயும் கிளம்புப்பா .,தோழன் கிளம்பி விட்டான்.

இவன் மட்டும் இங்கேயே கிடந்தான். சிறிது நேரம் கழித்து  சரவணன்தான் குடையுடன் இவனை அதட்டி அழைத்து சென்றான்.

அங்க அண்ணி எவ்ளோ கவலையா இருக்காங்க தெரியுமா? வாடா போலாம். கையை பிடித்து அழைத்து சென்றான்.

உடம்பெல்லாம் தண்ணீராக வந்தவனை பார்த்தவளுக்கு படபடப்பாக இருந்தது. உடனே அங்கே இருந்த  பெஞ்சில் உட்கார வைத்து, தன்னுடைய புடவை முந்தானையில் தலையை துவட்டினாள் .

அண்ணி நான் அப்படியே கிளம்பவா?வேற எதனாலும் கூப்பிடுங்க .

சரிங்க சரவணன், ரொம்ப தாங்ஸ்.

பரவால்லங்க. நீங்க கொஞ்சமாவது மூச்சு விடுங்க.

சரி., புன்னகையுடன் மொழிந்தாள்.

அதற்குள்  அவனை  திட்டிக் கொண்டே ஆச்சி  துவாலையை தந்தாள்.  இஞ்சி டீ  போடறேன்.

அவள் முந்தானையை தூக்கி இவனுக்கு துவட்டும்  போது இவளின் பெண்மை அவனுக்கு தெரிந்தது. தன்னை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான். சட்டென அவள் கையை உதறியவன், அவளிடம் இருந்து விலகி நின்றான்.இவன் முகம் கடுகடுவென இருந்தது.

 

மீண்டும் வருவாள் தேவதை...........

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

baraniusha


NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 11 months ago
Posts: 105
19/11/2020 5:10 pm  

Hiii sis 😍 ipdiyellam interesting ud ending kuduthutu next week tha ud poduvennu sonna nyayama solluga 🙄 come soon with ur nxt ud sis 😉 uds rendume konjam kuttya iruka mathri thonuthuga sis so konjam perusa kuduga 😛 

This post was modified 1 week ago by NIVETHA

ReplyQuote
Page 7 / 7
Share: