சென்னையின் எல்லைக்குள் வந்துவிட்டேன் இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்துவிடுவேன். நான் வசிப்பது சென்னையில் முக்கியமான அதுவும் மிகவும் பரபரப்பான ஏரியா ,ஆம். ஓஎம் ஆரில் உள்ள ஆடம்பர அப்பார்ட்மண்ட் ஒன்றில் வசிக்கிறேன். அப்பார்ட்மண்ட் உள்ளே என் கார் நுழைந்தது.
பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்க அங்கு குடியிருக்கும் ஒருவருடைய மூன்று வயது குழந்தை பந்து போட்டு விளையாடிக்கொண்டிருந்தது .
"அங்கிள் பால் போடுங்க" என்று மழலை மொழியில் என்னை அழைக்க நானும் வந்த களைப்பை கூட மறந்தவனாய் அந்த குழந்தைக்கு பந்து போட்டு விளையாடினேன். எனது போன் ரிங் ஆக அதை எடுத்து பேசத்துவங்கி..
"மா வந்துட்டேன் இங்கே தான் பார்க்கிங்கில் இருக்கேன்" என்று கூற.
"சரி டா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். சீக்கிரம் மேல வா"என்று தாய் காந்திமதி கூற உடனே அந்த குழந்தையிடமிருந்து விடைபெற்று கொண்டு லிப்டில் ஏறினேன். இரண்டாவது மாடியில் இருக்கும் என்னுடைய வீட்டை நோக்கி நடக்க எனது வீட்டுக்கதவை தட்டினேன்.
"வாடா ,என்ன சார் பார்க்கிங்கிலேயே நின்னுட்டிங்க?உள்ள வா காபி போட்டு தரேன்"என்று காந்திமதி அவனை அமரசொல்லிவிட்டு சமையலறையில் காபி தயாரிக்க சென்றுவிடவே
'சொல்ல வந்த விஷயம் என்னவாக இருக்கும்' என்று யோசித்தவாறு அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து டிவி ஆன் செய்ய அதற்குள் தாய் காந்திமதியும் தந்தை அன்பரசனும் வந்து அமர்ந்தனர்.
"அர்ஜுன் ,அது வந்து ராகவி," என்று கையிலிருந்த காபி கோப்பையை நீட்டியவாறு என்னிடம் பேசத்துவங்க ராகவி...ராகவி என்ற பெயரே எனக்கு கோபம் வரக்காரணமானது.
"ராகவி? இப்ப அவளுக்கு என்னவாம் இப்ப எதுக்கு அவளை பற்றி பேசுறீங்க?" என்று நான் சற்று கோபத்துடன் கேட்க என் தந்தை என்னை சற்று முதுகில் தடவிக்கொடுத்து "அர்ஜுன் ராகவி எங்களை பார்க்க காலையில் வந்திருந்தாள். அவள் கையில் ஒன்றரை வயதில் ஒரு பெண்குழந்தை"என்று அப்பா சொன்னவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை..
"என்ன? ஒன்றரை வயது பெண்குழந்தையா என்ன சொல்லுறீர்கள்" என்று என் புருவத்தை உயர்த்தியப்படி பெற்றோரை நோக்கி கேள்வி எழுப்ப அவர்கள் ஆம் என்றபடி தலையசைத்தனர்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை, ராகவி என்ற பெயரை கேட்டவுடன் கோபப்பட்ட நானோ தற்போது மேலும் இதைக்கேட்டு அதிர்ந்து போனேன்.
"அம்மா அப்படினா ராகவி என்னை டைவர்ஸ் பண்ணிட்டு போற சமயத்தில் கர்ப்பிணியாக இருந்தாலோ"என்று சந்தேகத்துடன் பார்த்தேன்.
"ஆமாம் டா அவள் உன்னை விட்டு போறப்போ மாசமாகி இருந்திருக்கா அதுகூட நமக்கு தெரியவில்லை பாரேன். அவளோடு குடும்பம் நடத்தின உனக்கு கூடவா டா தெரியல. அப்படி என்னடா பிரச்சினை உங்களுக்குள்ள ? அவளுக்கு உன்மேல இருந்த சந்தேக புத்தியை நீ நினைத்திருந்தால் மாற்றியிருக்கலாமே. ஏனடா அவசரப்பட்டு டைவர்ஸ் கொடுத்த. இப்ப பாரு உன் ரத்தம் வளர்ந்துட்டு வருது நம்ப வாரிசாக அவகிட்ட"என்று கூறி அழத்துவங்கினாள் காந்திமதி.
அவனுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை தன்னிலை மறந்தவனாய் எழுந்து அறைக்குள் புகுந்து கொண்டான்.
"ராகவி ...ராகவி என அவள் பெயரை உச்சரித்தான்" என்ன தோன்றியதோ தன் அறையில் மாட்டிவைத்திருந்த இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உற்றுநோக்கினான். ராகவியை மறந்துவிடவில்லை முழுவதுமாக இருப்பினும் அவளை நினைக்காமல் இருந்தேனே தற்போது குழந்தை என்ற பெயரில் ஓர் உறவு தனக்குள் பாலமாக இருக்கக்கூடும் என்று நினைக்கவில்லையே! " என்றபடி நொந்துக்கொள்ள..மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தான்...
"ராகவி நீ மாசமாக இருந்த விஷயம் தெரிந்திருந்தால் இப்படி அவசரப்பட்டு விவாகரத்து கொடுத்திருக்க மாட்டேனே..நீயாச்சும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே...
அ..அப்படினா எனக்கு குழந்தை... ஐயோ இப்ப நான் என்ன பண்ணுவேன். என்றபடி அழத்துவங்கினான். குழந்தையின் குரலை ஒருமுறை கேட்டுவிடலாம் என்று ராகவியிற்கு போன் செய்தான்.
போனை எடுத்தவள் "ஹலோ உ இஸ் திஸ்" என்று கேட்க அவனோ தட்டுதடுமாறி "நான்.. நான் அர்ஜுன்" என்றவுடன் போனை அதிர்ந்துபோய் கீழ தவறிவிட்டவள் மலமலவென்று அழத்துவங்கினாள்.
"ஹலோ ராகவி ராகவி.." என்றான் மீண்டும் அவள் அதை எடுத்து "சொல்லுங்கள் அர்ஜுன்" என மெல்லியக்குரலில் கூற "நான் குழந்தையோட அந்த மழலை பேச்சையும் முகத்தையும் பார்க்கணும் கொஞ்சம் வீடியோ கால் வரியா என்று கேட்க"
"ஓ...அப்போ இப்பக்கூட என்மேல உங்களுக்கு எந்த கரிசனமும் இல்லையா அர்ஜுன்" என்று ராகவி ஆதங்கம் கொள்ள
"ஐயோ ப்ளீஸ் புரிஞ்சிக்க ராகவி,உனக்கும் எனக்குமான உறவு ஒரு முடிந்துப்போன அத்தியாயம். இதை மீண்டும் திரும்பி பார்க்க மனமில்லை..ஆனால் எனக்கு ,எனக்கே தெரியாமல் உன் வயிற்றில் மலர்ந்த என் செல்லத்தை நான் பார்க்கணும் ப்ளீஸ்" என்றான் சிறிது அழுகையுடன்.
அவளும் கால் செய்ய அந்த வீடியோ காலில் தன் குழந்தையின் முகத்தை முதன் முதலில் பார்த்தான். அது சிரித்துக்கொண்டே அவனை பார்த்தது .
"செல்லம்..செல்லம் நான் அப்பா டா" என்றான் தன்னை காட்டியபடி அதுவோ மழலை மொழியில் "ஊ...அ"என்று எதையோ உச்சரிக்க முயன்றது. அதைக்கேட்டு அவன் தன்னை மறந்து சிரிக்கலானான்.
"செல்லம்...."என்று மறுமுறை பேசத்துவங்கும்போது போன் ஸ்விட்ச் ஆப் ஆனது.
"சை...இந்த நேரம் பார்த்து ஸ்விட்ச் ஆப் ஆகணுமா" என்று நகத்தை கடித்தபடி தன் மெத்தையில் அமர...உள்ளே வந்த காந்திமதி "ஓய் அர்ஜுன் இங்கபாரு எதையும் மனசுல போட்டு குழப்பாத டா. உனக்கு இப்பக்கூட ஒன்றும் கெட்டுப்போகல மறுபடியும் விருப்பப்பட்டால் ராகவியோட ஒரு புது வாழ்க்கையை வாழ ஆரம்பி டா" என்றதும் அவனுக்கு வெறுப்பேரியது.
"மா..நான் வருத்தப்படுறது இப்ப ராகவிக்காக இல்லை.. என் குழந்தைக்காக..அவள் பிறந்த அந்த நொடியைக்கூட பார்க்க கொடுத்து வைக்காத பாவியாகிவிட்டேன்" என்று தாயின் மடியில் படுத்து அழத்துவங்கினான். அவன் தலையை மெல்ல வருடிய தாய் அவனுக்கு தலைக்கு வாட்டமாக தலையனையை வைத்துவிட்டு போர்வையை போர்த்தி "கொஞ்சம் நேரம் தூங்கு எழு எல்லாம் சரியாகிடும்" என்றபடி அவன் போனை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
.....
மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் ,மெல்ல போர்வையை விலக்கி எழுந்தான் அர்ஜுன். சார்ஜில் இருந்த போனை எடுத்தப்படி அதை பார்த்துக்கொண்டு முற்றத்தில் இருக்கும் சோப்பாவில் வந்து அமர்ந்தான்.
அவனுடைய தம்பி அகில் அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வந்தான். வந்தவனோ "என்ன அர்ஜுன் ,எங்கயோ நம்ம இருந்த பழைய இடத்துக்கு போனியாமே எப்படி இருந்தது. " என்று வினவ அப்போது தான் ஆர்த்தியின் பிறந்தநாள் காரணமாக முதியோர் இல்லம் சென்றது நினைவுக்கு வர..
"ஏ..ஆமாம் அகில் சூப்பர். நம்ம இருந்த வீடு எல்லாம் அப்படியே ஏதோ ஒருசில மாற்றத்தோடு நல்லாருக்கு. ஆனால் பழைய ஆளுங்க யாரும் அங்க இருக்கிற மாதிரி எதுவும் தெரியல" என்று கூற..
"ஓ...ஓ...ஓ நீ அப்படி வர..ம்ம்ம் புரியுது புரியுது ஆர்த்தி அக்காவை தானே தேடி போன?" என்று நக்கலடிக்க..."அடப்பாவி இப்படி கோர்த்து விடுறியே டா" என்று தன் நெற்றியில் அடித்துக்கொண்டு சிரிக்க..மாலை நேர சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு தாய் காந்திமதி வந்து நீட்டினாள்.
"வாவ் கிச்சிடி" என்றபடியே அகில் எடுக்க..
"டேய் கையை கழுவு..அப்றம் வந்து சாப்பிடு " என்று அர்ஜுன் கட்டளையிட "ஐயோ இவன்வேற எப்பபாரு " என்று முனவிக்கொண்டே கையை அலம்பிட்டு வந்து அமர்ந்தான் . இருவருமாக அமர்ந்து கிச்சிடியை வாயில் திணித்துக்கொண்டிருக்க...
"அர்ஜுன் ,இந்த மாதிரி கிச்சடி நான் ஒருவாட்டி சாப்பிட்ட மாதிரி ஞாபகம் இருக்கிறது என்று கூற"
"ஏன் எங்க சாப்பிட்ட ?" என்று புருவத்தை உயர்த்த..
"ராகவி அண்ணி பண்ணியிருக்காங்க ஒருவாட்டி செம்ம" என்று பாராட்ட அவனுக்கோ காண்டாகி "டேய் சனியனே இப்ப ஏன் நீ அவளை பத்தி பேசிட்டு இருக்கிற" என்று கடிந்து கொள்ள...
"சரி சரி பேசல ஆமாம் ஆர்த்தி அக்காவை பற்றி பேசுறப்ப முகத்தில் ஆயிரம் வாட்ஸ் எரிந்தது அது ஏன் ராகவி அண்ணி பற்றி பேசுறப்ப முகத்தில் கோபம் வருது"என்று வினவ..உர்ருன்னு தட்டை நகர்த்திவிட்டு எழுந்தான்.
இதை கண்ட காந்திமதியோ "நம்ப பையனுக்கு ராகவி மேல வெறுப்பு இன்னும் போகலையோ..எப்படி இவனை ராகவியோடு சேர்த்து வைக்கிறது " என்று யோசிக்க அதற்கு அகில் "வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை" என்று நக்கலடிக்க
அதை கண்ட தாயோ "டேய் என் வேதனை உனக்கு விளையாட்டா போச்சா? ராகவியிற்கும் அர்ஜுனுக்கும் பிறந்த குழந்தை கண்முன்னே நிக்கிறப்ப எப்படி டா அந்த வாரிசை ஏத்துக்காம இருக்க முடியும்? ராகவி முக்கியமில்லை என்றாலும் அந்த குழந்தை நம்ப வாரிசு ஆச்சே எப்படியாச்சும் சேர்த்து வைக்கனும் இரண்டு பேரையும் வழி சொல்லுடா அகில்" என்று தாய் கேட்க...
"மா நான் ஒன்னு சொல்லவா?"
"சொல்லு அகில்"எனக்கூற
"ஏற்கனவே படிச்ச நாவல் எடுத்து படிக்க தோன்றும் நினைக்கிற?"என்று கேட்க அவரோ "ஏன் படிக்கலாமே நம்ப மனசுக்கு அந்த கதை பிடிச்சிருந்தா என்று கூற" அவனோ சிரித்துவிட்டு
"அப்படி பார்த்தால் அர்ஜுனை பொறுத்தவரை ராகவி ஒரு பிடிக்காத கதை" அது மறுபடியும் சேக்குறது ரொம்ப கஷ்டம். போய் வேலையை பாருமா என்று சொல்லி விட்டு அவன் அறையை நோக்கி நடந்தான்.
தொடரும்
@sivaranjani17052017sure