Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Kavalum kadhalum -13  

  RSS

Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 40
03/07/2020 6:42 am  

அந்த வீட்டை விட்டு நகர்ந்து ஆதியும் மீனுவும் நடந்து வந்துக்கொண்டிருக்க அவன் மனதில் இருந்த சந்தேகத்தை பற்றி அவளிடம் பேசத்துவங்கினான்.
"மீனு எனக்கு என்னமோ எல்லாத்துக்கும் காரணம் அந்த ராகவா தான் இருக்கும்னு தோனுது. அவன் பக்கா பொறுக்கி னு தெரியுது. இந்த பொண்ணை சீரழிச்சவனும் அவன் தான்... அதான் அவனுடைய பெயரை பச்சை குத்திருக்கு இந்த பொன்னு".

"டேய் ஆதி நீ சொல்ற அந்த ராகவா யாருன்னு எனக்கு தெரியவில்லை கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு"

"சமீபத்தில் ராகவா மர்டர் கேஸ் என் பொறுப்புல நடந்திட்டு இருக்கு. நீ கூட இந்த கேஸ் பற்றி டிவி நியூஸில் பார்த்திருப்ப நினைக்கிறேன்.."என்று அவன் சொல்லி முடிக்க "ஆமாம். எங்கேயோ கேள்விபட்டேன். நான் எங்கே நியுஸ் பார்க்கிறேன் சொல்லு"

"எப்பபாரு பாட்டு நிகழ்ச்சியும் நடன நிகழ்ச்சி யும் பார்த்தா போதுமா மீனு இதையும் கொஞ்சம் பார்க்கனும்". என்று புன்னகையிக்க அவளோ முகத்தில் அசடு வழிய "சரி சரி விடு " இனி கண்டிப்பாக பார்க்கிறேன்.
ஆனால் இந்த பொன்னு பாவம் டா ,அவனால சீரழிந்து இப்படி நடைப்பிணமா...இருக்கா...பார்க்க வே கஷ்டமா இருக்கு. "என்று வருந்தினாள் மீனு. மாலை நேரம் ஆரம்பிக்க அவனோ அவள் பத்திரமாக வீட்டுக்கு போகவேண்டி..

"சரி மீனு நீ வீட்டுக்கு கிளம்பு நான் கமிஷனர் ஆபிஸ் க்கு போகனும் ...இதை பத்தி பேசிட்டு வரனும் . பை"என்று அனுப்பி வைக்க

"பை...ஆதி....அ....அப்புறம் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்?"என்று மீண்டும் பேச்சை துவங்கினாள்

"என்ன டி?" என்றான் சலிப்புடன்..

"அது வந்து ....காலேஜ் படிக்கிறப்பவே எனக்கு நீ என்றால் ரொம்ப இஷ்டம், நட்பு அப்படிங்கறது தாண்டி உன் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது ஆனால் என்னால உன்கிட்ட சொல்ல முடியல...கல்யாணம் எல்லாம் ஆயிட்டு இப்ப ஏன் சொல்றனு கேக்குறீயா??ஹாஹா இப்ப சொல்லலனா என்னால எப்பவுமே சொல்ல முடியாது னு தோனுது அதான் சொல்லிட்டேன். உன்னை மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் னு எனக்கு தோனல...ஸோ எனிவேஸ் பை டேக் கேர்." என்று வருத்தத்துடன் கூற

"ஓய் உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு சொல்லவே இல்லை"..என்று அவளிடம் குறும்புத்தனம் செய்ய

"நீ தான் கேக்கவே இல்லையே" என்று அவள் முகத்தை சுளிக்க..

"சரி இப்ப கேக்குறன் சொல்லு. "

எனக்கு போன வருஷம் மே மாசம் எங்க உறவுக்கார பையனோட கல்யாணம் ஆச்சு ...இப்ப அவரு வேலை விஷயமா வெளியூர் போயிருக்காரு அதான் பார்டிக்கு கூட்டிட்டு வர முடியவில்லை"

"ம்ம்ம்.... சரி நீ பார்த்து போயிட்டுவா🤣வேற எதாவது சொல்றதுக்கு இருக்கா மீனு." அவளை நோக்கி கைகுலுக்கி கேட்க..அவளோ கையை விலக்கி விட்டு

"என்ன சொல்றதுன்னு தெரியல...96 திரிஷா மாதிரி எல்லாம் டைலாக் பேசுவதற்கு எனக்கு தெரியாது என்று புன்னகையிக்க" கல்லூரி காலங்களில் பேசவே தெரியாத மீனு இப்ப இவ்வளவு அழகா பேசுறாளே என்று வியந்த அந்த நொடி..

"பை டா ஆதி" என்று கையசைக்க அவனோ ஆனந்தியிடம் வந்த அழைப்பேசி அழைப்பை பார்த்தவாறு

"ஹாஹா.... மீனு பை...ஆனந்தி வேற போன் பன்னிட்டா...நான் கிளம்புறன்" என்று விடைபெற்று. சென்றான்.

😀😀😀
வீட்டுக்கு அசதியில் வந்தவனை தண்ணீர் கொடுத்து வரவேற்றாள் ஆனந்தி ....

தண்ணீர் கொடுத்தவளை அருகில் அழைத்து உக்கார வைத்தான் . என்ன சொல்வது என்று தெரியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

"என்னடி அப்படி பார்க்கிற"?😊

"ஒன்னுல ....போயிட்டு வந்த விஷயம் நீங்க தானே சொல்லனும்."

"ஆமா கரெக்ட் நான் தான் சொல்லனும். ம்ம்ம்... பார்ட்டி செம்ம யா இருந்தது நீ இல்லாத குறை தான்."

"சும்மா நடிக்காதிங்க...வேணும்டே விட்டு போயிட்டு"என்று செல்லமாக கோபித்துக்கொள்ள

"ஹாஹா ... காதலில் நடிப்பு கூட ஒரு சுகம் தானே..."😀
.........

தொடரும்.

 

Share: