Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Kavalum kadhalum -14  

  RSS

Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 40
03/07/2020 6:56 am  

ஆனந்தியும் ஆதியும் ஒருவருக்கொருவர் புரிந்து இருந்தாலும் இன்னும் கணவன் மனைவியாய் தாம்பத்ய உறவில் ஒன்று சேரவில்லை .முதலிரவன்று அவளுக்கு அந்த நாட்கள் ஏற்பட்டதால் எதுவும் நடக்கவில்லை என்றாலும் அதற்கு பின்பு ட்யூட்டியில் சேர்ந்து வழக்கம் போல்  பணிபுரியும் பிஸியில் இதை பற்றி சிந்திக்கவில்லை.

இப்பவரைக்கும் எதுவும் நடக்கவில்லை என்று குடும்பத்தில் எவருக்கும் தெரியாது...அட இதெல்லாம் வெளியே சொல்ற விஷயமாம் என்று யாரிடமும் சொல்லாது இருவரும் மூடிமறைக்க...இன்னியோட கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆனது எனவே மாமியார் காமாட்சி இவர்கள் ஒன்று சேர்ந்த நாள் சரி தானே அப்படி என்றால் ஒரு மாதம் கடந்த நிலையில் நல்ல செய்தி இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்து அதை நாசுக்காக மருமகளிடம்" ம்ம்ம் ஆனந்தி உன் கிட்ட ஒன்னு கேக்கனும்" ..என்று தயங்கியபடி ஆரம்பிக்க

சொல்லுங்க அத்தை (ஆ..ஆ கிழவி இதை தான் கேக்க போகுது னு அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது)

"அம்மாடி  இப்ப உனக்கு தலை கில எதாவது சுத்துற மாதிரி இருக்கா"?☺️

"அட போங்க அத்தை எனக்கு என்ன லோ பி.பி இருக்கு?"☺️என்று வேணும்என்றே அவள் நக்கல் அடிக்க..

"சரி அது போகட்டும் வாந்தி கீந்தி வருதா?"என்று மீண்டும் அதையே சுட்டி கேக்க...வெடுக்கென்று அவள் "அத்தை நான் என்ன நோயாளி யா என்ன?😊என்று சிரிப்பை அடக்க முடியாது ஆனந்தி இதை சொல்லிவிட்டு சிரிக்க.

"அட கழுத...இவ நம்ப சொல்றது புரிஞ்சிக்க மாட்டேங்குறாளே?"😢என்று சுண்டக்காய் மூஞ்சியை வச்சிக்க... அத்தையின் முகம் வாட்டம் புரிந்தாலும் வேறு...வழியில்லை இந்த சங்கடமான சூழ்நிலை யிலிருந்து தப்பிக்க.

இதை கதவுக்கு பக்கத்தில் நின்று ஒட்டுகேட்ட ஆதி...."ச்ச இன்னைக்கு எப்படியாச்சும் இதை நடத்திரனும் இல்லாவிட்டால் ஒவ்வொரு மாதமும் தாயின் குடைச்சல் ஆனந்தியால் தாங்க இயலாது என்று எண்ணி முதலிரவிற்கு தேவையான மல்லிகை பூவும் ,வாசனை திரவமும்  வாங்கி வர கடைக்குச் சென்றான்.

கடைக்கு போனால் அங்க அவன் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு எதிர்பாராத விதமாக  வந்தான் "சார் ??☺️என்ன லெமன் ப்ளேவர் ரூம் ஸ்ப்ரேவா ?கும்முனு இருக்குமே வாசனை ,என்ன சார் வீட்டில் எதாவது விசேஷம் நடக்குதா ?என்று கேட்டுவிட

"ம்ம்ம் ஆமான் டா யப்பா விசேஷம் தான்.."என்று நொந்து கொள்ள

"சார் சொல்லியிருந்தா வந்து ஹெல்ப் பன்னியிருப்பனே ?"எதாவது ஹெல்ப் வேணுமா?என்று கேட்டான்அப்பாவியாக கேட்க..

"யோவ் ஏட்டு இது ஹெல்ப் பன்ற விசேஷம் இல்லை டா...கம்முனு போய் உன் வேலையை பாரு "

"ம்ம்ம் அப்படி என்ன விசேஷம் சார் வீட்டில் சொல்லவே மாட்டேங்குறிங்க"என்று மறுபடியும் துருவி துருவி ஆதியிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க

"ஏண்டா சத்தியமா நீ இரண்டு புள்ள பெத்தவன் தானா?இவ்ளோ வெகுளியா இருக்க?" நான் வாங்குற பொருள்களை பார்த்தும் கூடவா எதுக்கு வாங்குறேனு புரியல?என்று ஏட்டிடம் சொல்லி புரியவைக்க

"ஓ....ஓ....புரிஞ்சிருச்சு...😀ரைட்டு . சார் அப்படினா லெமன் ஃப்ளேவர் வேண்டாம். ம்ம் இதோ இந்த ஸ்ட்ராபரி வாசனை வருமே அந்த வாசனை திரவம் வாங்கிக்கோங்க...

"அது சரி ...😀அனுபவம் பேசுது". என்று இந்த முறை ஆதி அவனை கிண்டல் செய்ய

"அட போங்க சார் எனக்கு வெக்க வெக்கமா வருது"என்று முகத்தை திருப்பிக்கொள்ள

"ப்பா வெக்க படுறத என்னால பார்க்க முடியல தயவு செய்து கிளம்பிடு ".என்று அவனை விரட்டிவிட

"ம்ம்ம்.... கிளம்புறன் சார் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் அந்த ராகவா கேஸ் ல அவனை கொன்னது யாருன்னா ஒரு பொன்னு சார்  க்ளூ கிடைச்சிருக்கு .ஆனால் அந்த பொன்னு யாருன்னு சத்தியமா யூகிக்க முடியல...ஆனால் அது அதே தாமரை அப்பார்ட்மண்டுன்னு சொல்றாங்க..."என்று க்ளூ கிடைத்த விஷயத்தை இவன் காதில் போட்டுவைக்க

"யோவ் அந்த ஆளை யார் கொன்னாங்க னு யோசிக்கிற மூடு ல நான் இல்லை... அந்த பொறுக்கி   செத்தது நல்லதே....சாவட்டும் . நான் கிளம்புறன்."என்று பைக்கை கிளப்பி கூலிங் க்ளாஸ் அணிந்து விரைந்தான்.

😀😀😀😀
வீட்டில் விஷயம் தெரிந்து ஆனந்தியும் தயாராகிக்கொண்டு இருந்தாள்.இதற்கிடையில் அவளுடைய நாத்தனார் அவளிடம்
"அண்ணி....என்ன ?இன்னைக்கு புடவை ல கட்டி அழகா இருக்கீங்க நீங்களும் அண்ணனும் எங்க கிளம்ப போறிங்க"

"ஏதோ ரிஸார்ட் கூட்டிட்டு போறதா சொன்னார். இன்னைக்கு நைட் அங்க தான் தங்க போறோம்".

"ஓ....நடத்துங்க நடத்துங்க...குட்டி ஹனிமூன் கரெக்டா?"

"இருக்கலாம்"😀

"இதோ அண்ணன் வந்துருச்சு..இன்னா டா அண்ணா என்னைக்கும் இல்லாம மூஞ்சி இன்னைக்கு ப்ரைட்டா இருக்கு"

"அதுவா எல்லாம் ஒரு காரணமா தான். சரி சரி நானும் ஆனந்தியும் கிளம்புறோம் அம்மா வை கூப்பிடு சொல்லிட்டு கிளம்புறன்."

....தொடரும்

 





Share: