Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Kavalum kadhalum -4  

  RSS

Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 11 months ago
Posts: 40
02/02/2020 4:36 am  

ஊரில் நேரம் போவதே தெரியவில்லை ஆனால் அங்கும் நம் வித்யா அவ்வப்போது செல்போனை நோண்டுவதும் யாருடனோ பேசுவதுமாக இருக்க வித்யாவின் நடவடிக்கை வித்தியாசமாக தெரிந்த ஆதிக்கு அவளை அழைத்து என்னவென்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்தான். அவளை கூப்பிட்டு வித்யா உனக்கு எதாவது பிரச்சனையா??என்று ஒரு அக்கறையில் கேற்க மலமலவென்று கண்களிலிருந்து நீர் வடிந்தது.
"என்னடி ஆச்சு உனக்கு எதாவது பிரச்சனையா கேற்கிறேன்ல சொல்லேன் டி என்று அவன் மீண்டும் அவள் தோள்பட்டையை உலுக்கி கேற்க
அந்த திடுக்கிடும் தகவல் கிடைத்தது

"அண்ணா என்னை ஒருத்தன் ரொம்ப நாற்களா  செக்ஸ் டார்ச்சர் தருகிறான் . என்று அழுது கொண்டே சொல்ல...அதை கேட்டு அவனுக்கு அதிர்ச்சி தொற்றியது .ஒரு அண்ணணாக அவளை மனம் தேற்ற உள்ளுக்குள் இருக்கும் போலிஸ் புத்தி தட்டி எழுப்பியது.."யார் இவளுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்துருக்கனும் ??எனக்கு வேண்டாதவங்க யாராவது பழிவாங்கும் நோக்கத்தில் செய்கிறார்களா அல்லது யாரா இருக்கும்.

"சரி டா மா...யார் அவன்???எப்படி இருப்பான்?

அவன் கொஞ்சம் கருப்பா உயரமா இருப்பான் மிடில் ஏஜ் ஆளு தான்...

மிடில்... ஏஜ் ??என்னடி சொல்ற??

ம்ம்ம்...ஆமா அண்ணா

ஸோ....எப்படி அவனுக்கு உன்னை தெரியும்??

அது வந்து ... என்று சற்று தயங்கியவாரே பேச்சை துவங்கினாள்

"வாட்ஸ் அப்ல மெஸெஜ் வந்தது சும்மா.. ஒரு ரிசார்ஜ் ஆபர் பற்றி அப்போ கால் பன்னி கேட்டதுக்கு அவன் பேச ஆரம்பித்து கடைசியில் அது இப்படி வந்து முடிந்தது.

ஓ......
அந்த நேரத்தில் ஒரு அண்ணணாக அவளை ஏறிமிதிக்க தோன்றியது "ஏண்டி எவ்வளவு விஷயம் பேப்பர் ல டீவி ல பாக்குறிங்க அப்படி இருந்தும் ஏண்டி இப்படி ஏமாறுறிங்க என்று பளார் னு அறை விட்டான்...ஏய் ரிசார்ஜ் க்கு...ஆசைபட்டு வாழ்க்கை யை தொலைப்பிங்களா டி...???😢இங்க பாரு கூட படிக்கும் ப்ரண்ட்ஸ் தவிற யார் கிட்ட ஆச்சும் பேசின.....அம்புட்டு தான் சொல்லிட்டேன்....என்று தந்தை ஸ்தானத்தில் இருக்கும் அண்ணணாக அவளை கண்டித்தான்.

சாரி அண்ணா... என்று சொல்லியும் அவளை முறைத்தபடி நிற்க
...மன்னிச்சிரு அண்ணா என்று காலில் விழ அவன் மனது இறங்கியது அவளை எழுப்பி நிற்கவைக்க அதற்குள் "ஏய் நாத்தனாரே "என்று ஆனந்தி கூப்பிடும் குரல் கேற்க

சரி போ....ஆனந்தி கூப்பிடுறா பாரு என்று தன் தங்கையின் தலையை வருடிவிட்டு அனுப்பி வைத்தான்.

...........
சற்று நேரத்தில் அவன் போன் ஸ்விட்ச் ஆன் செய்ய அவனது போனுக்கு...அழைப்பு வந்தது.
"ஆதி அங்கிள்...நான் ராகாவா பொன்னு பேசுறேன்..."

சொல்லுமா....

"அங்கிள் அது வந்து உங்க கிட்ட ஒரு உண்மை சொல்லனும்"என்று புதிர் போட

என்ன???????? என்று கேள்வி எழுப்பினான்

"அங்கிள் அது வந்து.. என்று அவள் பேச்சு இழுக்க

....
நம்பர் அதுக்குள்ள ஸ்விட்ச் ஆப் ஆயிட்டு மீண்டும் முயற்சிக்க அழைப்பு கிடைக்கவில்லை அவனும் திருவிழா பிஸியில்  எதையும் கண்டுக்கவே இல்லை....திருவிழாவின் நிகழ்ச்சியில் மூழ்கிவிட்டான். இது அவனுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பல்லவா இரண்டு நாள் எந்த தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா???

அன்னைக்கு ஆனந்தி வீட்டில் செம்ம விருந்து.... ஆதி நன்றாக  ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டான். என்னவோ சாப்பிடுவதற்கென்றே பிறந்தவன் போல ,அவன் தான் இரண்டு நாள் லீவாச்சே...அப்போ சாப்பாடு உறக்கம் உறவினர்கள் இதைதவிர..மத்தது ஞாபகம் வரும்😀😀ஆனால் தங்கச்சி பற்றிய நினைப்பு மட்டும் மனசுல ஓடிட்டே இருந்தது....

தங்கச்சியை டார்ச்சர் பன்னவன் கிடைச்சான் அவன் செத்தான் அந்த அளவு ஆதி உள்ளுக்குள் பொங்கி எழுந்துக்கொண்டிருந்தான். ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அனைவரிடமும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருந்தான்.அவ்வப்போது தன் மீது தவறு இருந்ததை உணர்ந்து வித்யா தன் அண்ணன் ஆதியிடம் "சாரி சாரி"என்று ஜாடைமாடையில் கேட்டுக்கொண்டிருக்க. தன் தங்கையை குழந்தையாய் பாவிக்கும் ஆதி அவளை இன்முகத்துடன் ஆதரவு சொல்லிக்கொண்டு இருந்தான்.

அண்ணா கிட்ட சொல்லிட்டோம் னு திருப்தியில் வித்யா சந்தோஷமாக  இருந்தாள் . ஆனந்தி அவளோட ஆளு ஆதியை சுத்தி சுத்தி வந்தாள்..😀😀😀அவளுக்கு அவ பிரச்சினை இந்த இரண்டு நாள் சாக்கில் அவனை எப்படியேனும் மயக்கிவிட வேண்டுமென்று.

பெரியவங்க ஆனந்தி ஆதியின் கல்யாணம் பற்றி ஆலோசிக்க துவங்கினர். முடிவு என்னவென்றால் இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம்.

😀😀😀😀செத்தான் டா...சேகரு.என்ற டைலாக் நினைவுக்கு வர ஆதி தன்னை மறந்து சிரிக்கலானான்.

தொடரும்

 


Topic Tags
Harini Dilip
(@harinidilip)
Active Member Registered
Joined: 2 years ago
Posts: 5
02/02/2020 4:01 pm  

Nice update.


ReplyQuote




Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 11 months ago
Posts: 40
06/02/2020 8:59 am  

Thank you ma.


ReplyQuote




Share: