Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

Kavalum kadhalum - 5  

  RSS

Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 28
20/02/2020 1:16 pm  

ஆதி லீவு முடிந்து சென்னைக்கு திரும்பினான்,ஆனந்தியின் நினைவுகளுடனும் திருவிழாவின் சந்தோஷங்களுடனும் வீட்டுக்கு வந்தடைய....வந்ததும் வராததுமாக மூஞ்சியை அவ்வளவு கடுப்பா வைத்துக்கொண்டான் வேலைக்கு போகவேண்டுமென்று.வித்யாவும் கல்லூரிக்கு புரப்பட...
வித்யாவை காலேஜில் விட்டுட்டு ட்யூட்டி போகனும் என்று தயார் ஆகி அவளை விட்டுட்டு வரும் வழியில் ரேணுகா வை பார்த்தான்.....

"ஹாய் ரேணு..."

"ஐயோ இவனா ....?"😊என்று மனதில் நினைத்துக்கொண்டே

"ம்ம்ம் ஹாய் ஹாய்".இன்ஸ் என்ன சொல்லுங்க???என்று சாதாரணமாக அவள் உரையாட துவங்கினாள்

"சும்மா தான் உங்கள பார்த்தேன் அதான் பேசலாமே என்று உங்களருகில் வந்தேன் ,நீங்க பிஸியாக இருந்தா வேண்டாம் ஃப்ரீயா இருந்தா கொஞ்ச நேரம் பேசலாம்" என்று ஆதி அவளிடம் இயல்பாக கூறிவிட்டு அவள் என்ன சொல்ல முற்படுகிறாள் என்று அவளிடம் எதிர்பாக்க

அவளோ "எனக்கு வேலை இருக்கு நான் போறேன் இன்ஸ் . என்று கூறிவிட்டு அங்கிருந்து ஒரடி எடுத்து வைக்க அவள் தன்னிடம் பழக ஏனோ தயக்கம் கொள்கிறாள் என்பதை உணர்ந்தவன் போகயிருந்த அவளை தடுத்தான்.

"ஏய் நில்லு....என்கிட்ட ஏன் பேசுவதற்கே தயங்குகிறாய்?நான் என்ன உன்னை தின்று விழுங்கிவிடுவேனா என்ன "என்று புருவத்தை உயர்த்தி கேள்வி எழுப்ப

"பின்ன என்ன சும்மா... குரு குருனு போலிஸ் புத்தியை காட்டிட்டு இருந்தால் எப்படி உங்களிடம் நட்பாக பழகத்தோன்றும்? கொஞ்சம் நட்புணர்வோடு பேசினால் தான் என்ன? என்று அவள் வெடுக்கென்று அவன் கண்களை பார்த்து கேட்டுவிட ,அவனக்கு அவள் கேட்ட விதம் சிரிப்பை வரவழைத்தது.

"ஹாஹா.... சரி வா நான் உன்னை பைக்கில் ட்ராப் பன்றேன் எங்க போகனும் னு சொல்லு ரேணுகா என்று வினவ ? ப்பா ஆதி சார் இப்பதான் நீங்க சராசரி ஒரு நண்பனா என் கண்களுக்கு தென்படுறிங்க இனிமேல் நீங்களும் நானும் ஒரு நல்ல ப்ரண்ட்ஸ் ஓகேவா என்றதும் அவனும் ஓகே என்று அவனுடைய கட்டை விரலை உயர்த்தி காட்ட அவளும் தன்னுடைய கட்டைவிரலை உயர்த்தி காட்டிவிட்டு அவனுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.இப்பொழுதாவது எங்க போகனும் னு சொல்லுவியா ரேணுகா என்று அவன் கேட்க

"ஆர்ட் அகாடமி போகனும் ..

"ம்ம்ம் வழி சொல்லு"நான் இதுவரை உங்கள் ஆர்ட் அகாடமிக்கு வந்ததே இல்லை

வண்டியை எடுங்க பாஸ் வழி தானா தெரியும் என்று அவன் தோளை தோழமையோடு அவள் தட்ட இருசக்கரவாகனத்தை கிளப்பி அவள் சொன்ன இடத்துக்கு பறந்தான்.

அவ இறங்குற இடம் வந்தது ....அவளை இறக்கி விட்டவன் அங்கேயே வெளியில் நின்று காத்துக்கொண்டு இருந்தான். என்னமோ தெரியல இன்னைக்கு ஆதிக்கு அவளை பிரிந்து செல்ல மனசு இல்லை அவ கிட்ட நிறைய பேசனும் தோன்றியது. இதுவரை முன்பின் தெரியாத யாரையும் தோழமை ஆக்கியது இல்லை. அது என்னமோ ரேணுகாவிடம் பழகிவிட அவனுக்கு எளிமையாக இருந்தது.

ரொம்ப நேரம் ஆகியும் அவ வெளியே வரவில்லை.இவனே கதவை திறந்து உள்ள போனான்.அங்கு வரவேற்பில் இருந்த பெண் "சார் இங்க யாரும் உள்ள எல்லாம் வரக்கூடாது அனுமதி இல்லாமல் "என்று கூற "மேடம் என் தோழி ரேணுகா ஒரு ஆர்டிஸ்ட் இங்கதான் வேலை செய்கிறாள் என்று கூற"ஓ அவங்களா ,அவங்க வருவாங்க நீங்க வெளியே காத்துட்டு இருங்க சார் என்று கூற "மேடம் இப்ப அவங்கள பார்க்க முடியாத என்ன?? என்று சந்தேகத்துடன் கேற்க "சார் அவங்க அங்க இன்னொரு ஆர்டிஸ்ட்க்கு மாடலா நின்னுட்டு இருக்காங்க"இப்ப நீங்க பார்க்க முடியாது . என்று கூறியும் அவள் பேச்சை மீறி கதவை தட்டினான். கதவை திறப்பதற்கு முன் ரேணுகா அங்கிருந்த ஒரு போர்வையை தன் உடலை சுற்றி போர்த்திக்கொண்டு கதவை திறக்க அவன் அதிர்ந்து போனான். ஒருபக்கம் அவள் அணிந்திருந்த உடை ஒரு ஓரமாக மடித்து வைத்திருந்த நிலையில் அங்கிருந்த ஒரு பெண் ஓவியர் கையில் ப்ரஷ்ஷுடனும் அங்கிருந்த வரைப்படத்தில் ரேணுகாவின் சாயலும் இருக்க "என்ன ரேணு இது ? நீ இங்க ..என்று பேச்சை தடுமாற்றத்துடன் ஆரம்பிக்க அவளோ "அ..ஆமாம் ஆதி நான் இங்கே நிர்வாண படத்திற்கு மாடலா நின்னுட்டு இருக்கேன்" என்று தலை குனிந்து நிற்க

ஆதிக்கு ஆத்திரம் தாங்கவில்லை... அவள் கண்ணத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டான் சும்மா உச்சி மண்டை வரைக்கும் வலிச்சிருக்கும் அவளுக்கு.

" ஏய் என்ன ரேணு இதெல்லாம்? என்று கொதித்தெழ"

ஆதி இது ஜஸ்ட் ஒரு மாடல் காக நான் இப்படி நிக்கிறேன் அவ்வளவு தான்..... இங்க இருக்கிறது அத்தனை ஓவியர்களும் பெண்கள் தான் அதனால் நீ நினைக்கிற மாதிரி எதுவும் பிரச்சினை இல்லை... இங்க பாருங்க ஆதி....நாங்க ஒரு ஓவிய கலைஞர் ..எங்களுக்கு மாடலா யார் வருவா சொல்லு????👍நாங்களே எங்களுக்கு மாடலா நின்னுப்போம்
நிர்வாண ஓவியம்க்கு நிர்வாணமா தானே நிக்கனும் ம்ம்ம் ?என்று தலையசைத்து கேட்க

என்னமோ சொல்ற ஆனால் எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கல என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.

ஆனால் இது எனக்கு ப்ரொபஷன் ஆதி இதுல தவறு என்று குறிப்பிட எதுவும் இல்லை . எங்களை மாதிரி ஓவியக்கலைஞர்களுக்கு உடலமைப்பே ஒரு ஓவியமா தான் தெரியும். என்று சற்று ஆர்டிஸ்ட் என்ற கர்வத்துடன் கூறிவிட்டு

"உனக்கு ஒன்னு தெரியுமா?இன்ஸ்" இதெல்லாம் நான் விருப்பம் பட்டு பன்னுறேனு நினைக்கிறியா??எல்லாம் என் தங்கச்சி யை படிக்க வைக்கனும் னு தான் . ஓவியம் தான் என்னோட துறை ...இதை தவிற வேற எதுவும் எனக்கு தெரியாது. இது மூலமாக நான் வருமானம் ஈட்டினால் தான் உண்டு. என்று கூற

ரேணு ப்ளிஸ்.... இதெல்லாம் என்னால பார்க்க முடியல, உன்கிட்ட எனக்கு ஏதோ ஒரு பொஸஸிவ் இருக்கிறது. உன்கிட்ட தோழமையோடு பழகுகிறேன் என்ற உரிமையில் சிலவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

என் மேல ஏன் இவ்வளவு கரிசனம்?காதலா?இ..ல்லை சும்மா தான் கேட்டேன்.என்று அவள் தோளை குலுக்கி கேட்க

ஹாஹா இல்லை....

பின்ன??😊

நண்பன்.ஒரு நல்ல நண்பனா இருக்க ஆசை படுறேன் ரேணு

ஓ...ஹாஹா... அப்படினா சரி....ஓகே இரு வெயிட் பன்னு வரேன் ..உனக்கு தான் மாடலா இருக்கிறது பிடிக்கல ல... இனி நான் மாடல் பொம்மை யா நிக்கவே மாட்டேன் இது உன்மேல சத்தியம் போதுமா

ம்ம்ம்.... உனக்கு ஒரு வேலை நானே பார்த்து தரேன் ஓகே....ஓவியம் பகுதி நேர கலையா வச்சிக்க. சரியா??

சரி டா சாமி....கொஞ்சம் வெயிட் பன்னு நான் வரேன்.

ஐய்யயோ ....ட்யூட்டி க்கு நேரம் ஆச்சு,உன்கிட்ட பேசிட்டு இருந்ததுல நான் என் ட்யூட்டி மறந்துட்டேன் நான் கிளம்புறன்...என்று அவளிடம் விடைபெற்று சென்றான்.

😀😀😀😀😀😀
ரேணுகா - செம்ம கேரக்டர் டா நீ....உன்னை கட்டிக்க போறவ கொடுத்து வச்சிருக்கனும். அந்த ஏழாவது மாடி ராகவா என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பன்னப்போ....ச்ச ஆம்பள பசங்கள வெறுக்க ஆரம்பிச்சன். ஆனால் முதல் முறை ஒரு நல்ல ஆண்மகனை நான் வாழ்க்கை ல பார்க்கிறேன்....என்னமோ தெரியவில்லை அழுகையா வருது . என்று தன் மனதுக்குள் கூறிக்கொண்டு சுவரில் சாய்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.

தொடரும்.

 

Share: