Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Kavalum kadhalum -8  

  RSS

Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 6 months ago
Posts: 33
26/03/2020 3:54 pm  

 

பூவரசன் அவகிட்ட அப்படி கேட்டதுல இருந்து ரேணுகா குழப்பமாவே இருந்தாள் ......என்ன செய்றது ????கல்யாணம் பன்னிக்கலாமா வேண்டாமானு யோசிச்சிட்டு இருந்தா...அப்போ மல்லிகா அவளருகே வந்து "அக்கா ......நீ இப்படியே யோசனை பன்னிட்டே இருந்தா அவ்வையார் ஆயிடுவ...இங்க பாரு பூவரசன் மாதிரி ஒரு நண்பன் புருஷனா அமைய நீ கொடுத்து வச்சிருக்கனும் சீக்கிரம் கல்யாணம் பன்ற வழிய பாரு"

"அதுக்கு இல்லை டி...முதலில்.உனக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா நல்லாயிருகக்கும் னு தோனுது ...."

"ம்ம்ம் எனக்கு இப்ப தான் 19 ஆனால்.. உனக்கு ???என்னை விட பெரியவ நீ தான் ......ஸோ.....நீ தான் முதல்ல கல்யாணம் பன்னிக்கனும்."

சரி சரி....எப்பவோ என்கூட படிச்ச பூவரசன் திடிரென்று ஏன் என்னை தேடி வரனும் .?என்று அவள் கேள்வி எழுப்ப அதை கேட்டு நகைத்துவிட்டு

"ஹலோ ஹலோ நீ காலேஜ் முடிச்சு 2 வருஷம் தான் ஆகுது சிஸ்டர்"😀இரண்டு வருஷமா லவ் எப்படி டா சொல்றது னு யோசிச்சிட்டு இருந்துருப்பான் அதான் வர வச்சிட்டேன்.

"என்ன???வர வச்சியா???"என்று குழம்பியபடி கேட்க

அ...ச்சி ச்சி...வந்தானு சொன்னேன் கா..டங் ஸ்லிப்

"ஓ...எப்படியோ அந்த பூவரசன் ஒருவழியா என் வாழ்க்கை ல வந்துட்டான் வாழ்ந்து தான் பார்ப்போம். என்று அவனது முகத்தை தன் கண் முன்னே கொண்டு வந்தவள் எதையோ நினைத்து வெட்கத்தில் சிரிக்க..."

"ஹாஹா அப்படி போடு "என்று தங்கச்சி விசில் அடிக்க

"என்ன நொப்பிடி போடு.....எங்க நான் உன்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பிருவேனு பயம் அதான் அவசர அவசரமாக என்னை அவனுக்கு கட்டி வைக்க முயற்சி பன்ற ம்ம்...😀"

"நான் கண்டிப்பா மாமியார் வீட்டுக்கு போகதான் போறேன் அக்கா ஆனால் அதுக்கு முன்பு நீ மாமியார் வீட்டுக்கு போய் சந்தோஷமா இரு சரியா ஓகேவா மை சிஸ்டர்."

"ம்ம்ம் ...ஏய் மல்லி நீ என் பொன்னு மாதிரி டி...உன் ஆசை தான் என் ஆசையும் நான் கண்டிப்பாக பூவரசனை கட்டிக்கிறேன். "

"ரொம்ப ஹாப்பி கா நானு....வா...இந்த சந்தோஷத்தை கொண்டாட நம்ப இன்னைக்கு ரெஸ்டாரன்ட் போவோமா என்று பாவமான முகப்பாவனை காட்ட"

"போச்சி....செலவு வச்சிட்டியா....?"

"ஐயோ அக்கா...ரொம்ப தான்.... அதான் கடுகு டப்பா ல 500ரூபாய் வச்சிருக்க ல அப்புறம் என்ன?"நான் ஒரு ப்ரைடு ரைஸ் நீ ஒரு சீரா ரைஸ் அவ்வளவு தானே திங்க போறோம் .

"ஹாஹா நல்லா புரிஞ்சி வச்சிருக்க டி..."

"பின்ன....நம்ப என்ன அவ்வளவு பெரிய சோத்து மூட்டை யா ???நமக்கு 500அதிகம் தான்..."

சரி சரி கிளம்பு......போலாம்.

இரண்டு பேரும் ஹோட்டல் போக ..அங்க ஆதியை மீட் பன்னாங்க எதர்ச்சையாக. அவன் பக்கத்து டேபிளில் உக்காந்து சாப்பிட்டு கொண்டே இருந்தான்.

"ஹாய் ஆதி அண்ணன் செம்ம கட்டு கட்டுறீங்க போல.."என்று மல்லிகா வெடுக்கென்று கலாய்க்க..

ரேணுகா அவளை சீண்டிவிட்டு சும்மா இரு டி என்று முனு முனுக்க

ஆதி சற்றும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல்"பேசட்டும் விடு ரேணு.... என் தங்கச்சி ப்ரண்டு தானே ...ஸோ வித்யாவும் ஒன்னுதான் மல்லிகாவும் ஒன்னு தான் எனக்கு."

மல்லிகா அவனை பார்த்து"அண்ணா... அப்போ எனக்கு என்ன பிரச்சனை னாலும் காப்பாத்துவியா அண்ணன்?என்று ஆச்சரிய பார்வை பார்க்க

மல்லி....உனக்கு என்ன ஆச்சு?என்று கேட்க

ஒன்னுல ஆதி அண்ணா சும்மா தான் கேட்டேன்...நீங்க சாப்பிடுங்க ...என்று கூற

ஆதி அவளை பார்த்து" ஓய் வாலு ...நீயும் ரேணுகாவும் என்ன வேணுமோ சாப்பிடுங்க நானே பில் பே பன்னிடுறேன்"என்று செல்லமாக கூற

ரேணு அவனிடம்"அய்யோ ஆதி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்"என்று நிராகரிக்க

"ஏன் நாங்க பில் பே பன்னா கல்லாவில் இருக்கிறவரு கோச்சிப்பாரா?" என்று சிரிக்க

ஹாஹா சரி ஆதி...என்று அவளும் சிரித்துவிட

அப்பாடா....500 மிச்சம்..... தாங்க்ஸ் ஆதி அண்ணா என்று அவனிடம் கிண்டலுடன் சொல்லிவிட்டு சிரிக்க

ரேணு அவளிடம்"ஏய் லூசு சில்லியா பிகேவ் பன்னாத "என்று கடிந்துக்கொள்ள

மல்லிகா "ச்சி பே அவரு நம்ம ப்ரண்டு தானே"என்று எதார்த்தமான தோரணை யில் கூற

சாப்பிட்டபடி பேசிக்கொண்டு இருக்கையில் அந்த ராகவா கேஸ் பத்தி பேச்சு ஆரம்பிக்க மல்லிகாவிற்கு புரை...ஏறியது.

தொடரும்

 


Quote
Share: