பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இன்று இரவிலிருந்து தொடர்ந்து நூறு நாட்களுக்கு ட்ரீட் ரெடியாகிவிட்டது. இந்த முறையும் கமலஹாசன்தான் தொகுப்பாளர்.
பரபரப்பிற்கு பஞ்சமில்லாத முதல் சீஸனில் 15 போட்டியாளர்கள் இருந்தனர், மேலும் நான்கு பிரபலங்களுக்கு வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தார்கள். இரண்டாவது சீசனில், 16 பேர் வீட்டிற்குள் நுழைந்தனர், ஒரு போட்டியாளருக்கு மட்டுமே வைல்ட் கார்டு நுழைவு வழங்கப்பட்டது.
முதல் சீஸனோடு ஒப்பிடும் போது இரண்டாவது சீஸன் சற்று மந்தம் தான். ஆனால் மூன்றாவது சீஸன் பற்றிக்கொள்ளும் என்று தான் தோன்றுகிறது. போட்டியாளர்களின் பட்டியல் அப்படித்தான் கூறுகிறது.
1. பாத்திமா பாபு
2. லொஸ்லியா
3. சாக்சி அகர்வால்
4. மதுமிதா
5. கவின்
6. அபிராமி
7. சரவணன்
8. வனிதா விஜய்குமார்
9. சேரன்
10. ஷெரின்
11. மோகன் வைத்யா
12. தர்ஷன்
13. சாண்டி
14. முகென் ராவ்
15. ரேஷ்மா
பிக் பாஸ் மூன்றாவது சீஸன் முதல்நாள் படப்பிடிப்பு வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டு செய்யப்பட்டு சனிக்கிழமை மாலை வரை தொடர்ந்தது என்று தெரிகிறது.
அடுத்த 100 நாட்களுக்கு ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியில், வார நாட்களில் 60 நிமிடங்களும், வார இறுதி நாட்களில் 90 நிமிடங்களும் இயக்க நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் 3 இன் போட்டியாளர்கள் 100 நாட்களுக்குள் வீட்டிற்குள் பூட்டப்படுவார்கள். ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் நீக்குதல் இருக்கும், ஆனால் விதிவிலக்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு, பிக் பாஸ் சீசன் 2 தமிழின் வெற்றியாளரான ரியாத்விகா, ரூ .50 லட்சம் பரிசுத் தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வென்றார். இந்த முறை யார் மக்களின் மனதை வெல்லக் கூடும்? யார் சேஃப் கேம் ஆடுவார்கள்? யார் உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சையில் சிக்குவார்கள்? உங்களால் ஏதேனும் கணிக்க முடிகிறதா?
Ha ha ha first captain vanitha Vijaya Kumar and kavin bathroom cleaning fathima cooking sandy cleaning , first day ellarum “enga veetil ellanalum karthigai padaranga “ poga poga therium.
அன்புடன்
இந்திரா செல்வம்
முதல் நாள் காலையிலேயே நல்ல குத்து பாட்டா போட்டு எழுப்பிவிட்டானுங்க. கண்டஸ்டெண்ட்ஸ் எல்லாம் பயங்கரமா டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணினாங்க. சாண்டி தண்ணியில்லா ஸ்வ்மிங் தொட்டியில குதிச்சு ஆட்டம் போட்டு வழுக்கிவிழுந்து, அதையே மேனேஜ் பண்ணி ஆடினார்.... 🤣 🤣 🤣
சேரன் தனியா டைனிங் டேபிள்ல ஒதுங்கிட்டாரு... அவ்வளவு சீக்கிரம் யாரு சமைச்சிருப்பா... 🧐 🧐 🧐
சாண்டி ஸ்வ்மிங் தொட்டியில கவிழ்ந்ததுல தாடை பேந்துரிச்சு போல... கவின் கலாய்ச்சுட்டு இருந்தாரு... அந்த நேரம் பார்த்து பிக் பாஸ் டகால்னு கூப்பிட்டுட்டாரு. எல்லாரும் ஹால் சோபாவில் அசம்பில் ஆனாங்க... அடுத்த சில நிமிடங்கள் அட்வைஸ்... தண்ணீர் கேஸ் மீட்டர் பத்தி ரூல்ஸ் எக்ஸ்பிலைன் பண்ணப்பட்டது. அதை கைதட்டி சாண்டி வரவேற்க, பாத்திமா எழுந்து ஒரு லெக்ச்சர் கொடுத்தாங்க. நியாமனான லக்ச்சர் தான். சேரன் சார் அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்தாரு. அதுவும் நியாயமா தான் இருந்தது. பாத்திமா சைலன்ட் ஆயிட்டாங்க.
கவினும் சாண்டியும் செட் ஆயிட்டாங்க...
தலைவரையும் அணிகளையும் வித்தியாசமா தேர்ந்தெடுத்தாங்க.. நல்லா இருந்தது.
தலை - வனிதா...
பாத்ரூம் கிளீனிங் டீம் வித் மோகன் வைத்யா செம்ம கலாய்... 🤪 🤪 🤪 அதுமட்டும் இல்ல... அதுங்க டீமுக்குள்ளேயே டீம் பிரிச்சுச்சுங்க பாரு... செம்ம பிரி... 😀 😀
குக்கிங் டீம் நல்லா சமைச்சிருந்தாங்க... 👍 👍 👍
சாண்டி விழுந்து சமாளிச்சதை கண்பஸ் பண்ணிட்டாருங்கோவ்... 🤣 🤣 🤣 🤣 🤣
இந்த தரம் தூங்கினா நாயி இல்ல... டம் டம் டமார்...
என்னமோ புதுசா விளையாடறாய்ங்களே!!! சாப் சளி சாப் சளியா!!! - என்னடா அது!!!
ஐயோ சாண்டி!!! ஏண்டா இப்புடி??? - பாவம் அந்த புள்ள... தமிழ்ல ஒரு வார்த்த சொல்லி குடுக்க சொன்னா இப்டியாடா சொல்லிக் குடுப்ப??? 🤣 🤣 🤣
மோகன் வைத்யா சாங் + கவின் சாங் காம்பினேஷன் = நல்ல மிக்சிங்... 🍻
ராவ் ஜாங்கிரியா ப்ரபோஸ் பண்ண சூஸ் பண்ணினது சூப்பர்...
"ஹாய் அடை..." - "என்னடா வடை...?" 🤣 🤣 🤣
அடியேய் அபிராமி... முதல் நாளே எல்லா ரகசியத்தையும் ஏண்டி உளர்ர??? எல்லாம் ரெக்காடு... கவனம்.. கவனம்... இதுகெல்லாம் தெரிஞ்சு செய்யுதா தெரியாம செய்யுதா!!! கடவுளே!!! 🙄 🙄 🙄
அடேய் பிக் பாஸ்... நீயும் ஏண்டா??? - முதல் நாளே... ஐயோ தலை சுத்துதே... இதுகளை எப்படி நூறு நாள் சமாளிக்க போறேன்னு தெரியலையே!!! 😩 😩 😩
06/07/2019
OMG Meera!!! உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்ல. முதல்நாள் தானேம்மா பாத்திமா உனக்கு ஆறுதல் சொல்லி அரவனச்சாங்க. அவங்கள போயி இந்த ஏறு ஏறுறீயே! - எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள்னு இதைத்தான் கமல் சொல்றாரா!!!
பாத்திமா பாபு அந்த சூழ்நிலையை ரொம்ப அழகா கையாண்டாங்க. அந்த நேரத்துல தர்ஷன் ரியாக்ஷன் பர்ஃபக்ட்.
அடப்பாவிகளா! காமிடி க்வீனை கதறவிட்டுட்டீங்களேடா!!! பாவம் மது.
தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஸ்டெபிலைஸ்டா இருக்க மாதிரி தோணுது. ஆனாலும் ஒருசில இடத்துல சின்ன சறுக்கல் இருக்கு. உதாரணத்துக்கு மோகன் வைத்யா தலைமையை கமெண்ட் பண்ண வாய்ப்பு கிடைச்சப்ப சரியா பேசியிருக்கலாம். வயசானவர் பாவம் என்று நினைத்து கொஞ்சம் பூசி மொழுகிட்டாங்க போல. அது பெரிய தப்பு இல்ல. ஆனாலும் சின்ன சறுக்கல்... என்னதான் இருந்தாலும் அவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் தான் ஃபைனலிஸ்ட்...
கைதட்டினா நேர்மறை-எதிர்மறையா பேசணும்னு சொன்னப்போ, எல்லாரும் நேர்மறையில் ஆரம்பிச்சாங்க. ஆனா வனிதா மட்டும் எதிர்மறைல ஆரம்பிச்சாங்க. கவனிச்சீங்களா???
சாண்டி எப்பவும் ஜாலியா இருக்கார். எல்லாரையும் ஜாலியா வச்சிருக்கார். ஆனா கொஞ்சம் முரணா செயல்படறார். யாரை வீட்டைவிட்டு அனுப்ப விரும்புறீங்கன்னு கேட்டா மது பேர்ல கிராஸ் மார்க் போடுறார். அப்புறம் கடைசியா அவங்க கதறி அழுது முடிச்சு பெட்ரூம் பக்கம் போகும் போது தட்டிக்கொடுத்து பெட்டியை கட்டவேணான்னு சொன்னேல்ல... பார்த்தியா? என்று கேட்கறார். என்ன நினைக்கிறார்ங்கறதை சரியா வெளிப்படுத்த மாட்டேங்கிறார்.
குறும்படம் போட்டு ஷாக்ஷியை இன்னும் வன்மையா கண்டிச்சிருக்கலாம். அது பெரிய வருத்தம் எனக்கு. பாத்திமாபாபு தான் எவிட் ஆகப்போறாங்கன்னு எதிர்பார்க்கறேன். பார்க்கலாம்...