Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

அலாதின்  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 613
10/06/2019 1:43 am  

நாயகன் : மெனா மசூத்

நாயகி : நாமி ஸ்காட்

பூதம் : வில் ஸ்மித்

நாயகனும் அவருடைய குட்டிக் குரங்கும் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளும் சேட்டைகளுமாகி சந்தோஷமாக வாழ்கிறார்கள். இந்த நிலையில், நகரில் ஒரு அழகிக்கு ஆபத்தில் உதவுகிறான் நாயகன். அவள் தன்னை அக்ரபா ராஜ்ஜிய இளவரசியின் பணிப்பெண் என்று அறிமுகம் செய்துகொள்கிறாள். இருவருக்கும் நட்பு மலர்கிறது. 

 

தன் குரங்கு பழக்க தோஷத்தில் திருடிவிட்ட நாயகியின் ப்ரேஸ்லெட்டை திருப்பிக் கொடுக்க காவலர்களை ஏமாற்றிவிட்டு நாயகன் அரண்மனைக்குள் நுழைந்து ப்ரேஸ்லெட்டை திருப்பிக் கொடுத்துவிட்டு அவளுடைய ஹேர் கிளிப்பை திருடி அதை திருப்பிக் கொடுக்க நாளையும் வருவேன் என்கிறான். அவள் மீது அவனுக்கு இருக்கும் விருப்பத்தை கோடிட்டு கட்டிவிட்டு அவன் திரும்பும் வேளையில் அந்த நாட்டு மன்னனின் முக்கிய ஆலோசகரிடம் சிக்கிக் கொள்கிறான்.

 

ஆலோசகர் மாய குகைக்குள் இருக்கும் மந்திர விளக்கை எடுக்க பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அந்த வேலைக்கு நாயகனை பயன்படுத்துகிறான். இடையே அவன் பழகுவது பணிப்பெண் அல்ல... அவள் தான் ராஜ்யத்தின் இளவரசி என்பதையும் தெரிவிக்கிறான்.

 

நாயகன் விளக்கை எடுக்க தன் குரங்கோடு குகைக்குள் செல்கிறான். விளக்கை வெளியே கொண்டுவந்து ஆலோசகரிடம் கொடுத்ததும் அவன் நாயகனை மீண்டும் குகைக்குள் தள்ளிவிடுகிறான். ஆனால் சேட்டை குரங்கு அவனிடமிருந்து விளக்கை திருடிவிடுகிறது. நாயகன் விளக்கை தேய்க்கிறார். மில் ஸ்மித் பூதமாக வெளியே வருகிறார்.

 

இதற்கு பிறகு வழக்கமான அலாவுதீனும் அற்புத விளக்கும் தான். நாயகன் கேட்பதை பூதம் செய்யும். ஆனால் ஒரு கண்டிஷன்... ஒன்லி மூன்று வரங்கள்தான் கேட்க முடியும்.

 

அந்த வரத்தை பயன்படுத்தி நாயகன் நாயகியை கரம்பிடிக்க நினைக்கிறார். பூதம் உதவுகிறது. இல்லாத நாட்டுக்கு இளவரசனாக மாறி அரண்மனைக்கு வருகிறார். விளக்கு நாயகனிடம் இருப்பதை ஆலோசகர் அறிந்துகொள்கிறார். மோதலும் சூழ்ச்சியும் ஆரம்பமாகிறது. நாயகியை கைப்பிடிதாரா, பூதத்திற்கு விடுதலை கொடுத்தாரா என்பதே மீதி கதை...

 

இதில் நோட் திஸ் பாயிண்ட் : நாயகியோட பெட் டெரர் புலி, நாயகனோட பெட் கிரேஸி மங்கி...

 

நாயகி பியூட்டி, நாயகன் ஸ்மாட்ர்டி, பூதம் கியூட்டி... 

 

கிராபிக்ஸ் எல்லாம் அளவா தலைவலி வராத அளவுக்கு இருக்கு... குட்டீஸுக்கு ரொம்ப பிடிக்கும்... பெரியவர்களும் பயம் இல்லாம கூட உட்காரலாம்...  

 

மொத்தத்தில் நல்ல படம்... 

 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Quote




Share: