Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

கபீர் சிங் ரெவ்யூ -...
 
Notifications
Clear all

கபீர் சிங் ரெவ்யூ - (மை வ்யூ)  


Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 613
Topic starter  

கபீர் சிங் - அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்.
நாயகன் : ஷாஹித் கபூர்
நாயகி : கீரா அத்வானி

படம் வந்து கொஞ்ச நாள் ஆயிடிச்சு... ரொம்ப நாளா ரெவியூ எழுதணும்னு நெனச்சுகிட்டே இருந்தேன். நேரம் அமையல... இன்னைக்கு அந்த நேரம் அமைஞ்சிருக்கு. சரி வாங்க படத்தை பற்றி பார்க்கலாம்.

 

ஒருத்தன் பண்ணின ரெக்காட நீங்க பிரேக் பண்ணனும். அதுவும் எப்படி பட்ட ரெக்காட்? கண்மூடித்தனமான கண்ணா பின்னான்னு - நெனச்சுக்கூட பார்க்க முடியாத லெவல்ல பண்ணிவச்ச ரெக்காட்... எப்படி பிரேக் பண்ணுவீங்க? அந்த ஏரியாவை டச் பண்ணவே பயமா இருக்கும்ல? அப்படியே டச் பண்ணீட்டிங்கன்னு வச்சுக்கோங்க. அப்புறம்? ஃபிரீயா ஒர்க் பண்ண முடியுமா? ஒவ்வொரு நிமிஷமும் டென்சன் இருக்கும். ரெக்கார்டை பிரேக் பண்ணணும்ங்கற டென்சன். அப்படி ஒரு டென்ஷனான வேலையைத்தான் ஷாஹித் கபூர் பண்ணியிருக்கார்.

 

பொதுவா இந்த மாதிரி சூப்பர் ஹிட் அடிச்ச படங்கள் ரீமேக் வரும் போது ஒரிஜினல் படம் பார்க்கும் போது இருந்த எபெக்ட் இருக்கவே இருக்காது. உதாரணத்துக்கு நிறைய படங்களை சொல்லலாம்... மணிச்சித்திரத்தாழ், திரிஷ்யம், ராவணன்... இன்னும் எந்த படத்தை வேணுன்னாலும் எடுத்து பாருங்க. ஒரிஜினல் பார்க்கற மாதிரி இருக்கவே இருக்காது. ஏன்னா அது அவ்வளவு சேலஞ்சிங்கான விஷயம்.

 

ஆனா கபீர் சிங் வேற லெவல்... ஷாஹித் கபூர்... என்னா ஆக்டர்யா நீ?  🤗  🤗  🤗  🤗 

 

அர்ஜுன் ரெட்டி பார்த்தவங்க, அந்த கேரக்டர்ல விஜய் தேவரகொண்டாவை தவிர வேற யாரையும் பொருத்திப்பார்க்க மாட்டவே மாட்டாங்க. அப்படிதான் நானும் நெனச்சிருந்தேன். ஆனா தியேட்டருக்கு போனா நம்ம மைண்ட் செட்டை, ஃபுட்லால ஒரே அடி அடிச்சு காலி பண்ணிடறார். அதுக்கப்புறம் விஜய் நம்ம மைண்டை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டார். எந்த இடத்துலயும் விஜய் தேவரகொண்டா முகத்தை நீங்க பார்க்கவே மாட்டீங்க.

 

சில சீன்லையெல்லாம் சான்ஸே இல்லங்க... குறிப்பா சொல்லனும்னா, கால்ல கிளாஸ் குத்திட்டு ட்ரீட்மெண்ட் எடுக்கற ஸீன்... குத்தினது அவளுக்கு. ஆனா அவனுக்கு வலிக்கும்... அந்த நேரத்துல ஷாஹித் முகத்தை பார்க்கணும்... சுத்தி இருக்கவங்ககிட்ட பேசுவான். ஆனா கண்ணு அவ மேலயே இருக்கும்...  😘  😘  😘  😘 

 

அப்புறம், அந்த பொண்ணோட அப்பாவை திட்டிட்டு அவளுக்கு டைம் கொடுப்பானே... அந்த ஸீன்... யம்மா!!! என்னா ஆக்டிங்!!! அந்த பொண்ணும் சும்மா சொல்லக் கூடாது... செம்ம...  😘  😘  😘 

 

ஹோலி ஃபைட், குடிச்சிட்டு ப்ரீதீன்னு கத்தறது... அவ கல்யாணம் முடிஞ்சா பிறகு ஓடிப்போய் அவ வீட்ல சண்டை போட்டு அடி வாங்கறது... புல்லட் லிப்லாக் 🙈🙈🙈🙈🙈🙈... க்ளைமேக்ஸ்... ஒவ்வொரு ஸீனும் லட்டு... இது எல்லாமே அர்ஜுன் ரெட்டில பார்த்ததுதான். ஆனா கபீர் சிங் பார்க்கும் போது புதுசா பார்க்கற மாதிரியே இருக்கும்... அதுலயும் க்ளைமேக்ஸ் சீனிலேயெல்லாம் கண்டிப்பா உங்க கண்ணு கலங்கும்...  😪  😪 

 

பத்மாவதில பார்த்த ஷாஹிதா இவர்னு சந்தேகமே வந்துடுச்சு எனக்கு... அவ்வளவு சேஞ்சஸ்... மனுஷன் கடுமையா உழைச்சிருக்கார்... கிட்டத்தட்ட ஆறு ஏழு கிலோவாவது கொறச்சிருப்பார்னு நினைக்கிறேன்... சூப்பர்...  🙄  🙄  🙄 

 

கண்டிப்பா குழந்தைங்களோட பார்க்க முடியாது... அதை மட்டும் பார்த்துக்கோங்க... மத்தபடி, அமோசன்ல படம் இன்னும் வரல... வந்தா இன்னும் நாலு தரம் கூட பார்ப்பேன்... எனக்கு அவ்வளவு பிடிச்சது... 😍 😍 😍 😍

 

படம் பார்த்தவங்க நீங்க என்ன ஃபீல் பண்ணுனீங்கன்னு சொல்லுங்க...

 

 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Quote
Share: