நேர்கொண்ட பார்வை - படம் எப்படி இருந்தது?
அன்பு தோழமைகளே! நேற்று நேர்கொண்ட பார்வை படம் சென்றிருந்தேன். படத்தில் ஆண்களுக்கு மிக முக்கிய மெசேஜ் இருக்கிறது என்று என் நட்பு வட்டாரங்களும் இந்த யூடியூப் சேனல்களும் சொல்ல நானும் என் நாத்தனார் மகன் ,மகள் ,அவளது தோழி என்று மூன்று இளம் தலைமுறையை அழைத்துச் சென்றேன். நாம சொன்னாத்தான் இவங்களுக்கு பிடிக்காது அஜீத் சொன்னா பிடிக்கும் நமக்கும் இந்த மாதிரி விஷயங்களை சொல்லி சங்கோஜப்படர கஷ்டமிருக்காதுன்னு கூட்டிட்டு போயிட்டேங்க......
அப்புறம்......என்ன ஆச்சுன்னு கேக்கறீங்களா? ஸ்டார்ட் ஆனது படம் மட்டும் இல்லைங்க கலாச்சார சீர்கேடும் தான். இந்த படத்தை பத்தி இப்படி பேச எனக்கே கஷ்டமாதான் இருக்கு பட் படத்தை பார்க்கும்பொழுது ஒரு தமிழச்சியாக, நான் வளர்க்கப்பட்ட கலாச்சார கட்டமைப்பு படி இந்த படம் என்னை முகம் சுளிக்க வைத்தது. அது மட்டுமல்ல நான் கூட்டிவந்த இளம் தலைமுறையின் எதிர்காலம், சிந்தனை எல்லாமே என்னை அச்சுறுத்தியது.
எங்க பிரச்சனைன்னு தெரியலைங்க , நல்ல விஷயம் சொல்லனும்னு எடுக்கும் போது இந்த மாதிரி படு மோசமான விஷயங்களையும் சொல்ல வேண்டி வந்துடுச்சா ?அல்லது மோசமான விஷயங்களை மட்டும் காண்பித்தால் அறிவாளியான மக்கள் படத்தை புறக்கணித்துவிடுவார்கள்னு கடைசியா கருத்து சொல்லப்பட்டுச்சான்னு ,சத்தியமா எனக்கு புரியலைங்க.
நோ......மீன்ஸ்.....நோ. (வேண்டாம் என்றால் வேண்டாம் தான்) இது எந்த விஷயமாக இருந்தாலும் பொருந்தும். இந்த ஒரு சின்ன கருத்தை தவிர படம் முழுவதிலும் குப்பை குப்பை குப்பைதான். நம் ஊரில் இருக்கும் குப்பைகளை அள்ள ஆட்களே இல்லை. இதில் மேலும் மேலும் குப்பையாக்கினால் நம் கதி என்ன?'
அன்றாட பழக்கமாக வீட்டுக்கு பீர்பாட்டிலுடன் வரும் நம் படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்கள். ஆண்கள் "ஆப்பர்" (offer) செய்தார்கள் குடித்தோம் என்று கூறும் நவீனி, விடுதலை பெண்கள், இது எல்லாம் கூட பரவாயில்லை , ஓங்கி உச்சந்தலையில் அடித்த மாதிரியான வசனம் "நீங்கள் கன்னியா?" - அஜீத் "இல்லை" - கதாநாயகி "எப்போது கன்னித்தன்மையை இழந்தீர்கள்?" - அஜீத் "பத்தொன்பது வயசுல "- கதாநாயகி ஒரு நிமிஷம் ஆடிட்டேங்க..... நான் கூட்டிப் போன பசங்க பதினாறு மற்றும் பதினெட்டு வயசு. அதை தொடர்ந்து இன்னும் மோசம்" அதுக்கு காசு வாங்கனீங்களா?" - இது கதைக்கு தேவை போல தான் இருக்கும்., ஆனால் பதில் மறுபடியும் வயற்றில் புளியை கரைத்தது. "இல்லை...வி வெண்ட் வித் தி ஃபிளோ, ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது அதுக்கு ஏன் பணம் கொடுக்கனும்?" நல்ல கேள்வி, சரி அதோட நிறுத்திடுவாங்கன்னு பார்த்தா, அப்புறம் தாங்க இன்னும் ஒரு படி மேல. "அதுக்கப்புறமும் சில சந்தர்பங்கள்ல சில பேர் கூட நடந்திருக்கு, அதுக்கு காசு வாங்கனீங்களா?"
ஐய்யோ சாமி இதுக்கு மேல எப்படி சொல்வேன். முடியலைங்க... கருத்து சொல்லி இருக்காங்க தான் ஆனால் அதனை பக்குவப்பட்ட பண்பட்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் பார்த்தால் தமிழர் கலாச்சாரம் அழிவை நோக்கி இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து விடும். மற்ற மொழிகளை பற்றி பேசும் தகுதி எனக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை ஆனால் தமிழில் இப்படிப்பட்ட படம் ஒரு தேவையில்லாத ஆணி தான்.
"நோ.....மீன்ஸ்.... --நோ" இதனை அழகாகவும், நேர்மையாகவும், நேராகவும், கன்னியத் துடனும் , முகம் சுளிக்க வைக்காமல், நெற்றிப் பொட்டில் அறைந்தது போல் கூறுவதற்கு ஏகப்பட்ட குறும்படங்கள் இருக்கின்றன.அவைகளே எங்கள் இளைஞர்களை திருத்த போதுமானது.
உங்கள் சேவைக்கு நன்றி
உண்மையிலேயே எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இருந்தது நமக்கு மட்டும் தான் இந்த படம் பிடிக்கலையா? நம்ம தான் இந்த விழிப்புணர்வு படத்தை பத்தி தப்பு தப்பா யோசிக்கிறோமான்னு ஆனா என்னோட வாட்ஸ்அப் ஸ்டேடஸ்ல இது ஒரு மோசமான படம்னு போட்டபோது பத்தில் எட்டு பேர் ஆமாம் இது ஒரு மோசான படம் தான் எனக்கும் இப்படித்தான் தோன்றியதுன்னு பதில் கொடுத்தார்கள். அதிலும் ஒரு சதவிகிதம் நான் சான்றுகளுடன் விளக்கிய உடன் "அட......ஆமாம் பா நீ சொல்றதும் சரிதான்" என்று தெளிவடைந்து விட்டார்கள்.
தமிழ் சினிமாவுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. சினிமாவை சினிமாவாக பார்க்காமல் வாழ்வியலாக பார்ப்பவர்கள் தான் இங்கே ஏராளம். அப்படிபட்ட சமூகத்திற்கு முடிந்தவரை நல்லதை கொடுக்கலாமே. ஒரு பானை பாலில் ஒரு சொட்டு விஷம் இருப்பதே அபாயம் தாம். அப்படி என்றால் ஒரு பானை விஷத்தில் இரண்டு சொட்டு பால் தான் "நோ மீன்ஸ் நோ" " இப்படி பட்ட பொண்ணுங்களுக்கு இப்படி நடக்ககூடாது, நடக்கவிட மாட்டோம்"
இந்த படத்தை பற்றி பலரிடம் விவாதித்துவிட்டேன் அதில் என் கருத்தை கவர்ந்த சிலரின் வார்த்தைகள்.
Jasha Jasha- முகநூல் தோழி. — " இந்து நம்ம நாட்ல ரஜினி கமல் பிடிச்சு போட்ட சிகரெட்டே இன்னும் அணையாம பத்திகிட்டு எரியுது......தப்பும் , சரியும் இங்கே ஒன்னா கலந்து கிடக்கு இந்து பிரிச்சு பாக்கவே முடியல”
Jagadeesh (திரைப்பட விமர்சகர், யூடியூப் சேனல் நடத்துபவர்) — அக்கா என்னோட ஏழு வயசுல ரஜினி மாதிரி சிகிரட் தூக்கி போட்டு வாயில் புடிக்கனும்னு ஆசை வந்தது. ஒரு நிமிஷம் நான் தடம் மாறி இருக்க நிறைய வாய்ப்பிருந்தது. யாரு செஞ்ச புண்ணியமோ அதை கடந்து நல்லபடியா வந்துட்டேன்.
என் உள்மனதின் குரல்- “முன்னல்லாம் ஆண்கள் மட்டும் படத்துல தண்ணி அடிச்சு தம் அடிச்சு , தவறான உறவுன்னு காட்டி காட்டியே முக்கால்வாசி ஆண்களை குடிக்கும் புகைக்கும் அடிமையாக்கியாச்சு. இப்போ பெண்கள் குடிப்பதும் புகைப்பதும் மற்ற ஆணுடன் கூத்தடிப்பதும் காட்டப்படுகிறது , அடுத்து???
ஒரு கோட்டை சிறியதாக்க பக்கத்தில் பெரிய கோடு. ஆண் செய்யும் தவறுகளை சரி என்று சொல்ல பெண்களையும் மாற்றுவது சரியா? தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள் ஃபிரெண்ட்ஸ்
உங்கள் விமர்சனத்தையும் கீழே கமண்டஆக போடலாம்
அன்புடன் ,
இந்திரா செல்வம்.
அன்புடன்
இந்திரா செல்வம்
Nanum friends kitta movie eppadi irrukkunu kettutha ponna yellarum nallarukkunu sonnathala, ana yenda ponamnu aittu. yella thala fan's atha eppadi solli yenna yemathidaka. correct ta oru karutha sollarathukku pathila girls male Mari irrutha yenna appdi Kira mathiri kondu pona mathiritha therium athunala intha Padam yennakku pudikkala etha ennoda point of view..
நீங்க சொல்றது முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அக்கா....இன்றைக்கு வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு இளம் நடிகர்கள் தான் முன்னுதாரணங்கள்....தொன்றுதொட்டு எத்தனையோ பெரியவர்கள் இளமை, வாழ்வு ,சுகதுக்கங்களை தொலைத்து அறிவையும் பாதுகாப்பையும் வழங்கி சென்றிருந்தாலும் அதை ஏற்க இன்று இள மனம் தயங்குகிறது....
இதுவே தங்களுக்கு பிடித்த கதாநாயகன் சமூகத்துக்கு ஒத்துவராத ஒரு கருத்தை ஸ்டைல், நாகரிக வளர்ச்சி என வழங்கினால் அதை ஏற்க, ஆதரிக்க ஏன் கடை பரப்பவும் நம் இளைய சமுதாயம் தயங்குவதில்லை....
சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல இது ஒரு நாட்டின் பொருளாதாரம் ,சமூகம் ,உளவியலோடும் தொடர்புபட்டுள்ளது... இது உங்களை போன்று சிலர் மட்டும் சிந்தித்து போதாது அக்கா....
இப்படத்தை எடுபவரும்,நடிப்பவரும் சிந்திக்க வில்லையே... தங்களுக்கு இளவயதில் வளர்ந்துவரும் பூமியை கட்டியெழுப்பும் இளைய சமுதாயம் பிள்ளையாக....(மகனாக /மகளாக) உள்ளார்கள் என்று சிந்திக்கவில்லையே...
பணம் இங்கே அனைத்தையும் கட்டிப்போடுகிறது பெண்ணுக்குக் கற்பு முக்கியம் அதே கற்பு ஆணுக்கும் உண்டு இதை பெற்றோரும், சமூகமும் சரி சரியாக சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்....
சினிமா என்பதன் மூலம் ஒரு கருத்தை வழங்குவது தவறல்ல அதை சரியான விதத்தில் சரியான முறையில் வழங்க வேண்டும்.... இடம் பொருள் ஏவல் என்பது எல்லோருக்குமே பொருந்தும் அக்கா. உங்களுடைய ஆதங்கம் எனக்கு நன்றாக புரிகிறது ஆனால் இதை சிலர் ஏற்க மாட்டார்கள்..
காரணம் பணம் சம்பாதிக்க இயங்கும் மனம் நாகரீக சாக்கடைக்குள் மூழ்கி வளர்ந்துவரும் சமுதாயத்தை சீரழிக்கும் துடிக்கிறதே ஒழிய அந்த சாக்கடையை சுத்தம் செய்ய இங்கே யாரும் இல்லை... மது, மாது, புகை என்பது பணக்காரர்களின் பரிமாண வளர்ச்சியாக மாறிவிட்டது.... இன்றைய சமூகத்தில் நாகரீகமாக மாறி வரும் இந்த காலத்தில் சமூக பொறுப்பு என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டும்... அதை சரியான முறையில் வழங்க வேண்டும்...
உங்கள் ஆதங்கம் இந்த விமர்சனத்தில் புரிகிறது அக்கா இந்த படத்தை நீங்கள் தவறு சொல்லவில்லை. இதில் குறிப்பிட்ட விடயத்தை அவர்கள் வெளிப்படுத்திய விதம் தவறு என்று நீங்கள் கூறுகிறீர்கள் அக்கா இதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்...
நீங்க சொல்லறது ரொம்ப சரி அக்கா இந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் ஒரு போதும் ஒன்றாக ஆக முடியாது பிற மொழி படம் எடுக்கனும்னா படத்தோட கதைய மட்டும் தான் எடுக்கனுமோ தவிர... அவங்க கலாச்சாரத்தையும் சேர்த்து எடுக்க கூடாது. ஏற்கனவே நம்ம கலாச்சாரம் குத்துஉயிரும் கொலை உயிருமா இருக்கு... அத சாக அடிச்சிடுவாங்க போல.... ஆணுக்கு நிகர் பெண்கள் படிப்பு அறிவ குடுங்க , சொத்துரிமை குடுக்க சொல்லுங்க.... அத விட்டுடு ஆண் குடிச்சா பெண் குடிப்போம்னு சொல்றது பைத்தியகாரதனம் சினிமா ஒரு போதும் வளர்ச்சி பாதைக்கு நம்ம கூட்டிட்டு போகாது.....
நான் எல்லாரையும் குறை சொல்வதைவிட முக்கியமா உச்ச கட்ட நட்ச்சத்திர இடத்துல இருக்க அஜித் அவர் இப்படி பேசறது எனக்கு ரொம்ப வருத்தபடறேன்....
30 வயது 40 வயது ஆட்களே சூழ்நிலை புரியாம தப்பு பண்ற காலத்துல 17 வயதுல எதும் புரியதா தடம் மாறும் வயதுல உள்ளவங்க இப்படி படம் பார்த்தா எப்படி ஒழுக்கமும் கலாச்சாரமும் வளரும்...
எல்லாம் படத்துல அஜித் வேர லெவல்னு சொல்லிட்டு இருக்க நேர்த்துல மனசுக்கு பட்டத சொன்னதுக்கு நன்றி அக்கா...
உங்க Review சூப்பர் தொடர்ந்து பண்ணுங்க எங்கல போல ஆட்களுக்கு பயன்பாடா இருக்கும்...
எல்லா படங்களையும் review பண்ணாலநாலும் நல்ல நல்ல படங்கல பத்தி பேசுங்க அக்கா
உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு இனி கண்டிப்பா படிக்கிறேன் அக்கா
மேன்மேலும் வளர வாழ்த்துகள் அக்கா
நன்றி தம்பி ஜகதீஷ் .... உன்னுடைய விமர்சனங்களை நான் பார்த்து உன்னிடம் சிலாகிப்பதுதான் வழக்கம்... இப்போது என் விமர்சனத்தைப் பற்றி நிபேசி கேட்டதில் மகிழ்ச்சி .... நன்றி
அன்புடன்
இந்திரா செல்வம்
நீங்க சொல்றது முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அக்கா....இன்றைக்கு வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு இளம் நடிகர்கள் தான் ...
நன்றி பிரஷா.... இளம் தலைமுறையான நீங்கள் இவ்வளவு தெளிவாக பேசியிருப்பதில் மகிழ்ச்சி .... உங்களது நல்ல கருத்தினை உங்கள் வயதினவர்களுக்கு கடத்துங்கள்.... தெளிவான இளையசமுதாயம் தெளிவான நாடு........
அன்புடன்
இந்திரா செல்வம்
Nanum friends kitta movie eppadi irrukkunu kettutha ponna yellarum nallarukkunu sonnathala, ana yenda ponamnu aittu. yella thala fan's atha eppadi solli yenna yemathidaka. correct ta oru karutha sollarathukku pathila girls male Mari irrutha yenna appdi Kira mathiri kondu pona mathiritha therium athunala intha Padam yennakku pudikkala etha ennoda point of view..
Yes Priyanka ...niraiyapearukku intha Padam pidikkala.... but vealiya solla yosikkaranga... because everybody are praising the film.... anyways thank u priyanga for ur great support
அன்புடன்
இந்திரா செல்வம்
இந்திரா , இன்றைய இளைய தலைமுறை எப்படி போகுதுன்னு..நேர்ல பாத்த அனுபவத்துல சொல்றேன்.....பெங்களூர் பிடிஎம் ல நா சின்ன பொண்ணுங்க பண்ணுற அட்டகாசங்கள பாத்திருக்கேன்...பசங்க சும்மா இருந்தாலும் அவங்க டீஸ் பண்ணுவாங்க..நியூ இயர் ராத்ரி கடைகளில் சரக்கு வாங்க மினி ஸ்கர்ட் போட்ட பொண்ணுங்க பசங்கள விட அதிகம்...வெறுத்து போய்டுசு...என்னோட மூன்று வயசு பையன் கேட்டது...அந்த அக்கா கைல வச்சிருக்குறது யென? ..எப்டிங்க பதில் சொல்ல முடியும்..? நடக்குறத படமா காட்டுறதா சினிமா காரங்களும் சினிமா பாத்து கேட்டுபோறதா பொதுமக்களும் சொல்லிக்க வேண்டியதுதான்.....படம் எடுக்கரவங்க தங்கள் வீடு குழந்தைகளை யோசித்து படம் எடுப்பது நடிப்பது நல்லதுன்னு நினைக்கிறேன்.
சுகீ
இந்திரா , இன்றைய இளைய தலைமுறை எப்படி போகுதுன்னு..நேர்ல பாத்த அனுபவத்துல சொல்றேன்.....பெங்களூர் பிடிஎம் ல நா சின்ன பொண்ணுங்க பண்ணுற அட்டகாசங்கள பாத்திருக்கேன்...பசங்க சும்மா இருந்தாலும் அவங்க டீஸ் பண்ணுவாங்க..நியூ இயர் ராத்ரி கடைகளில் சரக்கு வாங்க மினி ஸ்கர்ட் போட்ட பொண்ணுங்க பசங்கள விட அதிகம்...வெறுத்து போய்டுசு...என்னோட மூன்று வயசு பையன் கேட்டது...அந்த அக்கா கைல வச்சிருக்குறது யென? ..எப்டிங்க பதில் சொல்ல முடியும்..? நடக்குறத படமா காட்டுறதா சினிமா காரங்களும் சினிமா பாத்து கேட்டுபோறதா பொதுமக்களும் சொல்லிக்க வேண்டியதுதான்.....படம் எடுக்கரவங்க தங்கள் வீடு குழந்தைகளை யோசித்து படம் எடுப்பது நடிப்பது நல்லதுன்னு நினைக்கிறேன்.
உங்களது தெளிவான கருத்துக்கு நன்றி Suba geetha ஆனால் இது நம் கலாச்சாரமா? ஆண்கள் குடிப்பதையே தடை செய்ய வேண்டும். இந்தப் படத்தில் ஆண் பெண் இருவரும் குடிக்கிறார்கள் குடித்தவர்களின் மூளை தான் மழுங்கிவிடுமே. அப்புறம் கலாசாரம் எப்படி நிற்கும். பிறகு ஒரே அறை அப்போ என்ன தான் நடக்கும் பிடித்திருந்தால் அது. பிடிக்கவில்லை என்றால் இது(NKP). இதெல்லாம் எங்கிருந்து வந்தது? மேற்கத்திய கலாச்சாரம்? படங்கள் மூலம் தான். நீங்கள் கூறுவது பெங்களூரு அடுத்து நம் மாநிலமாகக் கூட இருக்கலாம் அதற்கு முக்கிய பங்கு இதுபோன்ற படங்கள் . “இப்படியும் இருக்கலாம்என்று நம் இளைய தலைமுறைக்கு தோன்றுவது எத்தனை பெரிய அபாயம்? உண்மையிலேயே எனக்கு பயமாக இருக்கிறது சுப கீதா.
அன்புடன்
இந்திரா செல்வம்
நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் இருபாலரும் மது ..புகை ..யெல்லாம் உண்டு..சில பெண்கள் நா பார்ட்டி டிரிங்கர் என சொல்லிக் கேட்டிருக்கிறேன்... எங்கோ அல்ல ..நம் சிங்கார சென்னையில்தான்....2005லேயே...நிஜமாகவே பயமாக உள்ளது..கலாசார சீரழிவு....
சுகீ