Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

மந்திர வியூகம் - Exclusive Tamil Novel  

Page 5 / 5

HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 189
 

மந்திரம் 39:

அதிகாலை வேளையில் சூரியோதத்தை பார்த்தபடியே  நின்றாள் கனிகா.  சூரியனை வெறித்தபடி லிங்காவிற்கும், இனியனுக்கும் மணம் நடந்தேறிய நாளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..  அன்று காந்தாயினி கனிகாவிடம்  வந்து லிங்காவிற்காக அழுததும் கரைந்ததும் மனக்கண்முன் வந்து போக அதை பற்றிய யோசனையில் நின்றவள் எதிரில் வந்து நின்றான் தீரேந்திரன்.

தீரேந்திரனையே சற்று நேரம் இமைக்காமல் கனிகா பார்த்துக் கொண்டிருக்க தீரேந்திரன் பேச ஆரம்பித்தான்.

"என்ன அம்மையாரே ! யோசனை எல்லாம் பலமாக இருக்கின்றது! தகிக்கும் பார்வையில் இன்று ஏனோ குளிர்நிலவு தெரிகின்றதே ! உங்கள் பார்வை குளிரில் மடியப் போகும் அவன் எவனோ ?" – தீரேந்திரன்.

"அப்படியேல்லாம் ஒன்றுமில்லை அரசே!" – கனிகா

"அப்படியா !" என்று அதிகமாக வியந்தவன்.

"என் பிணியை போக்க பதில் சொல்லுங்கள் அம்மையாரே!" – தீரேந்திரன்

அவன் பிணி என்று சொன்னதும் வேகமாக அவன் அருகில் வந்த கனிகா.  அவனை தொட்டுப் பார்த்தபடியே பதறினாள்.

"என்னாயிற்று அரசே !" என்று கனிகா கேட்டபடி பதற

அவள் கைகளை தன் கைகளுக்குள் பிணைத்தவன் "காதல் நோய் கண்டுவிட்டது தேவியாரே ! தாங்கள் தான் அதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்" - தீரேந்திரன்.

"என்ன பிதற்றுகிறீர்கள் ?" – கனிகா

"ஆம் ! தேவி

'கண்ணோடு கண்கலக்காமல்

உதட்டோடு உதடு ஒற்றி எடுக்காமல்

கையோடு கை கோர்க்காமல்

காதலோடு காதல் போர் புரிய

விளைகின்றது மனம்'

என்னை நோயில் இருந்து காப்பாற்றும் மருந்து தங்களுக்கு தான் தெரியும். சற்று என் கோரிக்கைக்கு  செவி சாயுங்கள் தேவியாரே !" - தீரேந்திரன்

"ம்ம்ம் நோய் அதிகமாகிவிட்டது என்று நினைக்கின்றேன் அரசே! ! அதனால் தான் தாங்கள்  காதல் பித்தன் போல் உளர ஆரம்பித்து விட்டீர்கள் ! நான் இன்னும் சற்று நேரம் இங்கு நின்று கொண்டு  இருந்தாள் உங்கள் பித்தம் அதிகமாகிவிடும் ! ஆகையால்  நான் செல்கிறேன்" என்று கனிகா செல்ல முற்பட அவளை செல்லவிடாமல் தடுத்தான் தீரேந்திரன்.

அவளை அருகில் இழுத்து கண்ணோடு கண் நோக்கி “ உண்மையை சொல்லிவிட்டு செல் தேவி ! பிடிக்கவில்லையா என்னை ? என் கண்ணை பார்த்து சொல் ! ‘’ என்று அவன் கேட்க

சற்று நேரம் அமைதியாக நின்ற கனிகா திரும்பி நின்றபடி பிடிக்கவில்லை என்று கூற அவளை பின்னாளில் இருந்து அணைத்து அவள் தோள்வளைவில்

தன் நாடியை வைத்த படி மேலும் தொடர்ந்தான் தீரேந்திரன்.

"உன் கண்கள் என்னை அணலாக சுட்டெரித்தே உன் மனம் என்னிடம் காதல் வயப்பட்டது  என்று எனக்கு தெரியும் தேவி ! உமது வாய் தான் பொய் சொல்கின்றது. ஆனால் உன் உடல் மொழிகள் என் அருகாமையை நீ ரசிப்பதை எனக்கு பறைசாற்றுகின்றது. நான் இல்லாத  நேரத்தில் தோழியிடம் என்னை பற்றி பேசி இன்புறுவதும், நான் இருந்தால் வேறு விதமாக நீ பேசி ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தினை யாம் கண்டு கொண்டோம் ! இன்று உன் மனதில் உள்ளதை தெரிந்து கொள்ளாமல்  நான் விடப்போவதில்லை தேவி " என்று சொல்லிய படியே "உன் காதலை ஒத்துக் கொள்ளமாட்டாயா தேவி?"  என்றான் தீரேந்திரன்

"ஆமாம்" - கனிகா

அவள் அப்படி கூறியவுடன் அவளை திருப்பி நேர் கொண்டு பார்த்தவன்  "உண்மையை சொல்லமாட்டாயா தேவி ?” - தீரேந்திரன்

அதை கவனித்த கனிகாவின் உள்ளே  சற்று சலனம் வர முயன்று வரவழைத்த தைரியத்தில் கனிகா பேசினாள்.

“ நான் உங்களுக்கு சற்றும் பொருத்தமற்றவள் அரசே!” – கனிகா

“ எனக்கு பொருத்தமற்றவளா நீ  ? வாள் கொண்டு மட்டுமல்ல விழி கொண்டும் என்னை விழ்த்தும் சூத்திரகாரி நீ ! எனக்கு பொருத்தமற்றவளா?

இளவரசன் என்று அறிந்தும் திமிராக என்னை எதிர்த்து பேசிய ஜாலக்காரி நீ எனக்கு பொருத்தமற்றவளா ?  எப்போதும் உன் கண்களால் என்னை வீழ்த்தும் சக்தி பெற்ற நீ பொருத்தமற்றவளா ?"  என்று சொல்லிக் கொண்டே சென்றவன் ஒரு கட்டத்தில் நிறுத்தி

"மனப்பொருத்தம் போதும் தேவி ! அதில் உன்னைவிட எனக்கு வேறு ஒருவரும் கை கோர்க்க முடியாது ! எனக்காக உருகும் , என் ஆயுட்காலம் முழுவதும் என்னோடு  போர் புனைய நீ மட்டும் போதுமடி  ! உன்னோடு நான் வாழும் அந்த ஒரு நாள் போதும் ! அந்த நினைவை ருசித்தபடி நான் வீழ்ந்து போவேன்" என்று தீரேந்திரன் கூற

வேகமாக அவன் உதடுகளை தன் கை கொண்டு மூடினாள் கனிகா.

அவள் விழிகளில் நீர் படலம் . அதை கண்ட தீரேந்திரன் அவளை அணைத்து ஆறுதல்படுத்த முயல அவனை வேகமாக தள்ளிவிட்டு

"நான் உங்களை என்றும் நினைக்கவும் இல்லை! எனக்கு உங்களை பிடிக்கவும் இல்லை!"என்று கனிகா கூறிவிட்டு ஓட,  

இங்கு தீரேந்திரன் சிலையாக நின்றான்.

அவன் மனம் வெதும்பியபடியே “ இந்த பெண்டீரை புரிந்துகொள்ள முடியவில்லை ஈசனே ! மனத்தில் உள்ளதை மறைத்து பொய்மை உரைப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே ! அவளை புரிந்து கொள்ளும் வல்லமையை எனக்கு  கொடுக்கும்மய்யா” என்று கூறியபடியே தீரேந்திரன் அரண்மனைக்குச் சென்றான்.

தீரேந்திரன் காதலை மறுத்துவிட்டு வந்த கனிகா  தனியாக நின்று நிலவை பார்த்து கலங்கியபடி நின்றாள்.

“ நிலமகளே ! என் மன்னவனை நான் நிராகரித்து வந்துவிட்டேன் ! அவரை வருத்தி நானும் வருந்தும் இந்த காலநிலையை சீக்கிரம் மாற்றுவாயாக ‘’என்று கனிகா கூறியபடியே கண்ணீர் வடித்தாள். 

 “ தலைவன் ஏக்கத்தில் தலைவியும்

தலைவி ஏக்கத்தில் தலைவனும்

தன் நிலையை வெதும்பி அவளும்

அவளை நினைத்து அவனும்

என்று இருவர் மனதையும் அறிந்த நிலமகள் உலா கண்டதோ !

உலா போகும் சந்திரமதியே நில்லாயோ !

இருவரின் ஏக்கங்களை களைப்பாயோ !

அவர்களின் சோகங்களை தீர்ப்பாயோ !

அவர்களுக்குள் மகிழ்ச்சியை பரப்புவாயோ! 

பிணைப்பினை உண்டாக்குவாயோ

சந்தோசத்தில் ஆர்ப்பரிப்பாயோ !

சொல்வாயே என் வெண்ணிலவே !"

************************ 

"குருவே ! நான்  காந்தாயினியை வைத்து அனைத்தும் தயார் செய்துவிட்டேன். அரசர் ! நாளை மந்திரவியூகத்தை சிவஆலயத்தில் இருந்து எடுத்துக் கொண்டு வருவார். வழியில் அதை நாம் கையகப்படுத்த அனைத்தையும் செய்துவிட்டேன்" என்று கலிங்கா கடோத்கஜனிடம் கூற

“சபாஷ் கலிங்கா !!! இனி வெற்றி நம் கையில்" என்று கடோத்கஜன் சிரித்தான் 

"கடோத்கஜா ! தீரனை தவறாக கணிக்காதே ! அவனை வெல்வது கடினம் !" என்று  இதயம் இடையில் பேச மந்திரம் மூலம் அதை அடக்கினான் கடோத்கஜன்.

லிங்கா தன் அறையில் தயாராகிக் கொண்டிருக்க வதனி தயங்கியபடியே உள்ளே வந்தாள் . அவள் வருகையை கண்ணாடி மூலம் கண்டறிந்த லிங்கா

“ என்ன வதனி என்ன தயக்கம்  ? எதாவது வேண்டுமா ? “– லிங்கா

"போஜனம் தயார் நிலையில் உள்ளது ! தங்களை அழைக்க வந்தேன் அரசே!" – வதனி

“ மகாராணி அழைத்தால் வராமல் இருக்க இயலுமா ? இதோ தங்களின் அடிமை தயார் நிலையில் “ – லிங்கா

“ அரசரே! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ! நான் என்றும் தங்களின் அடிமை ! நீங்கள் இல்லை பிரபு !" –  வதனி

“ அப்படியே ஆகட்டும் அரசியே ! ‘’ என்று தலைகுனிந்து வணங்கி லிங்கா கூற அதை கண்டு சிரித்தபடியே முன்னால் நடந்தாள் வதனி.

அவள் பின்னால் வந்த லிங்கா கவனிக்காமல் அருகில் இருந்த  தூணின் மேல்  மோத அதை கண்ட வதனி பதற்றம் கொண்டாள்.

“ பிரபு ! பிரபு ! என்னவாயிற்று ! பார்த்து வர மாட்டீர்களா ? பாருங்கள் முட்டிக் கொண்டீர்கள் “ என்று கூறியபடி வதனி லிங்கா கைகளை பார்க்க முயல , லிங்கா வதனியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை கவனித்த வதனி "என்ன பிரபு ? அப்படி பார்க்கிறீர்கள் ?" – வதனி

அவள் கேட்டதை அடுத்து அவள் அருகில் லிங்கா வர வதனிக்குள் அவன் பார்வை மாற்றம் ஏதோ செய்தது . தலைகுனிந்தபடி வதனி நின்று இருக்க

அவள் அருகில் வந்தவன் “ என்னை எப்படி அழைத்தாய் ?” என்று லிங்கா கேட்டதும் தான் வதனிக்கு தான் அவனை பிரபு என்று அழைத்தது ஞாபகம் வந்தது. சட்டென்று  அவனை விட்டு வதனி  நகர  முற்பட அவளை கைகளினால் சிறை செய்தான் லிங்கா. 

“ சொல்லிவிட்டு செல்லடி !வதனி’’ என்று அதிலேயே அவன் விடாபிடியாக நிற்க , வதனி வெட்கப்பட்டுக் கொண்டே அவன் அணைப்பில் நின்றாள்.

இருவரும் ஒரு மோனநிலையில் நிற்க

"அரசே !" என்ற சத்தம் கேட்டு இருவரும் பிரிந்தனர் .

அங்கு காந்தாயினி நின்று இருந்தாள். அவள் பார்வை லிங்கா வதனி கைகளை பற்றிக் கொண்டிருப்பதில் பட , அவளது பார்வையின் பொருளை கண்ட வதனி சட்டென்று விலக முற்பட்டாள். ஆனால் லிங்கா அவளது விலகலை அனுமதிக்காமல் அவளை அருகில் நிறுத்தியபடியே

"சொல்லுங்கள் ! காந்தாயினி ! எதற்காக தாங்கள் என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள்  ? தாம் வந்த தன் நோக்கத்தை சற்று விரைவாக கூறிவிட்டு சென்றால் நலம் ?" – லிங்கா

"அரசே ! மன்னிப்பு வேண்ட வந்தேன்! அன்று தங்களை தவறாக நினைத்து பேசிவிட்டேன் என்னை மன்னியுங்கள் !" – காந்தாயினி

"நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரிய தவறொன்றும் செய்யவில்லை ! ஆகையால் அதை பற்றி பேசி தங்களையே வதைத்து கொள்ள வேண்டாம்" – லிங்கா

அவன் அப்படி கூறியதும் 'இன்னும் ஒரு நாள் தான் பிரபு ! பின்பு நீர் என்னவர் ஆகிவிடுவீர்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட காந்தாயினி

வெளியில் "நன்றி அரசே !" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் லிங்கா திரும்பிப் பார்க்க அங்கு யாருமில்லை 'ம்ம்ம்' என்று பெருமூச்சுவிட்டபடி லிங்கா தீரேந்திரனை நாடிச் சென்றான்.

தீரேந்திரன், லிங்கா மற்றும் இனியன் மூவரும் மறுநாள் விடியலில் சிவ ஆலயத்திற்குச் செல்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

அன்று இரவு கனிகா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தீரேந்திரனை வாள் கொண்டு ஒரு உருவம் தாக்க முற்படுவது போல்  காட்சிகள் கனவில் தோன்ற திடுக்கிட்டு விழித்தாள்.

“ பிரபு ! வேண்டாம் !"  என்று அலறியபடியே எழுந்தவள் வேகமாக தீரேந்திரனை காண அரண்மனை நோக்கி பயணப்பட்டாள்.

அன்று இரவு தூக்கம் வராமல் நடை பயின்ற தீரேந்திரன் கனிகா வருகையை கண்டு குழப்பம் மேலிட அவளை எதிர்கொண்டான்.

"அரசே! தங்களுக்கு ஒன்றுமில்லையே !" என்று தன் கைகள் கொண்டு அவனை கனிகா வருட

"நான் நன்றாகத்தான் உள்ளேன் ? என்னாயிற்று உனக்கு ? எதற்காக இவ்வளவு  பதட்டம் ? இந்த இரவு நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ ?"  – தீரேந்திரன்

"தங்களை யாரோ வாள் கொண்டு..." - என்று ஆரம்பித்தவள் சட்டென்று அமைதியாகிவிட்டாள் .

"ஒன்றுமில்லை அரசே ! "என்று கூறிவிட்டு கனிகா செல்ல முயல

தீரேந்திரன் அவளை தடுத்தான்.

"என்ன விசயம் தேவி ! சொல்லிவிட்டுச் செல் !" – தீரேந்திரன்

“ஏதோ மனதில் குடைகின்றது அரசே ! ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக மனம் கிடந்து அடிக்கின்றது ! தங்களுக்கு எதாவது என்றால் நான் ‘’ என்று கனிகா அழுது கொண்டே ஏதோ சொல்ல முற்பட்டு நிறுத்திக் கொண்டாள்.

"ம்ம்ம் சொல் தேவி ! ஏன் பாதியில் நிறுத்திவிட்டாய் ?" –தீரேந்திரன்

"தாங்கள் நாளை எங்கும் செல்ல வேண்டாம் அரசே !" – கனிகா

"இல்லை தேவியாரே ! மந்திரவியூகத்தை பத்திரபடுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்த வேலையை  முடித்துக் கொண்டு விரைவாக வந்து விடுவேன் ! அதனை எடுத்து தேவியாரின் கைகளில் நான் தஞ்சம் பெறப் போகிறேன்!  சரிதானே தேவி" – தீரேந்திரன்

அதை கேட்ட கனிகா ஏதோ மறுப்பாக கூற வர அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு சிறை செய்தான் தீரேந்திரன்.

அப்போது காற்று பலமாக வீசி இருவரையும் வட்டமடித்துவிட்டுச் சென்றது.

நாளை நடப்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தால் கனிகா தீரேந்திரனை விட்டு இருக்கமாட்டாளோ ?

“ நடப்பது விதியின் வழி அதை மாற்றி அமைத்திட எவராலும் இயலாது “

மந்திரம் 40:

இதயம் கலிங்கா அமர்ந்து இருப்பதை பார்த்து சுற்றி முற்றி பார்த்தது. அங்கு கடோத்கஜன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு  பேச ஆரம்பித்தது.

“ கலிங்கா எப்படியாவது என்னை காப்பாற்று ! நான் என் உருவத்தை திரும்ப பெற வேண்டும் ! தீரேந்திரனை அழிக்க வேண்டும் ! உனக்கு பொன்னும் பொருளும் தருகிறேன் ! என்னை காப்பாற்றுடா ! ‘’ என்று அது கூற

“ என்ன மாயவா ! உன் நிலை அறிந்தும்  நீ இதை என்னிடம் கேட்கிறாயா? உனக்கு உதவி செய்து உன் நிலையை அடைய நான் என்ன முட்டாளா ?” – கலிங்கா

“ பின்பு எதற்கடா எனக்கு உதவி எல்லாம் புரிந்தீர்கள் ?” – மாயவன்

“ உனக்கு உதவி புரிவதில் எங்களுக்கும் நலனும் , பயனும் இருந்தது. உன்னை வைத்து மந்திரவியூகத்தை நாங்கள் கைப்பற்ற நினைத்தால் நீ அனைத்தையும் நாசம் செய்துவிட்டாய் ! ‘’- கலிங்கா

"அப்படி நான் என்ன செய்தேன் ?" – மாயவன்

"லிங்கா மற்றும் வதனியை கவர்ந்து வந்து அவர்கள் மூலம் தீரேந்திரனிடமிருந்து மந்திரவியூகத்தை நாங்கள் கைப்பற்ற நினைத்தால் லிங்கா , வதனி இடையில் புகுந்து இருவருக்கும் மணமுடித்து வைத்து வதனியை எங்கள் கைகளில் கிட்டாமல் செய்துவிட்டாய். அதற்கு பரதிபலனாய்  நீ இந்நிலையில் தான் இருக்க வேண்டும்" -கலிங்கா

“ ஈசா ! இவர்களின் பழி பாவங்களுக்கு நான் துணையாக இருந்த பலனை தற்போது அனுபவிக்கிறேன். தயவு கூர்ந்து எந்தன் இழிநிலையில் இருந்து என்னை காப்பாயாக !’’ என்று இதயம் அழுதது.

**********************

மாலை நேரம்,

 “ என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அரசியாரே ?” என்று லிங்கா தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்த வதனியின் செவியின் அருகில் கேட்க , சட்டென்று பதறியபடியே திரும்பினாள் வதனி

“நீங்களா அரசே ! பயம் ஆட்கொண்டுவிட்டது ! இனி இப்படி செய்யாதீர்கள்?”  – வதனி

"சரி செய்யவில்லை ! ஆனால் நேற்று என்னை வேறு மாதிரி அழைத்ததாக ஞாபகம் ?" – லிங்கா

"அது வந்து ... அரசே !" என்று வதனி தயங்க

அவளின் கண்களை நேராக பார்த்த லிங்கா “ என்னை மறுபடியும் அப்படி கூப்பிடமாட்டாயா வதனி ! என் மனதிற்கினியவளாக உன்னை நான் நெஞ்சில் நினைத்து பல நாட்கள் ஆகிவிட்டது. என்னை காதல் பேய் பிடித்து ஆட்டுகிறது ராணியாரே ! அதை தடுக்கும் வழி தங்களிடம் தான் உள்ளது”   – லிங்கா

அதை கேட்ட வதனி "உங்களை ஆட்கொண்ட காதல் பேய் என்னை சிறுவயதில் இருந்தே பிடித்துவிட்டது பிரபு!" என்று வதனி கூற ,

அதை கேட்ட லிங்கா வேகமாக அவள் கைகளை பிடித்து அருகில் இழுத்துக் கொண்டான்.

"இது முன்பே தெரிந்திருந்தால் ! என் ஆசையை அப்போதே நிவர்த்தி செய்திருப்பேனடி"  என்று கூறியவன் சற்றும் தாமதிக்காமல் இறுக அணைத்து

அவள் இதழில் கவி பாட, தங்களின் இல்லறத்தை இனிதாக தொடங்கினார்கள்.

மறுநாள், "சீக்கிரம் வருகிறேன் ராணியாரே காத்திருங்கள்!" என்று வதனி இதழில் இதழ் பதித்து அவளிடம் விடை பெற்று லிங்கா செல்ல

வதனி நாணத்தோடு வழி அனுப்பினாள்.

********************

இங்கு இனியன் குழலாளிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

“ என்னடி குழல் ! பேசாத மடந்தை ஆகிவிட்டாய் ! நான் ஜடம் அல்ல என்று நிரூபித்ததின் பயனாய் உன் வாய் மொழி கூட மறந்துவிட்டாய் போல் !" - இனியன்

“ அப்படியெல்லாம் இல்லை ! ஆனாலும் நீங்கள் மோசம் பிரபு ! அமைதியின் திருவுருவமாக இருந்துவிட்டு உங்களுக்குள் தான் ... ‘’ என்று கூறிய குழல் பாதியில் தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

“ என்ன குழல் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திவிட்டாய் ! ம்ம்ம் சொல்லடி என் சண்டிராணி  !" – இனியன்

“ ம்ம்ம் உங்களுக்குள் இருக்கும் வேறொருவனை கண்டேன் ! போதுமா !’’ – குழல்

“ போதாது ! நீ வேண்டும்! என்றும்... உன்னைவிட்டு ஒரு நொடி கூட பிரியக் கூடாது என்றும் மனம் சொல்கிறது. ஆனால் என் கடமையை செய்ய வேண்டுமே ! ம்ம்ம்..." என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டவன்.

"விரைவில் வருகிறேன் !’’  என்று அவளிடம் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றான் இனியன்

********************

தீரன் அரண்மனையைவிட்டு வெளியில் வர , எதிரில் வந்தனர் லிங்காவும் , இனியனும். மூவரும் கிளம்ப ஆயத்தமாக ஒற்றன் ஒருவன் வேகமாக வந்தான்.

"அரசே ! மூவரும் இதனை அணிந்து கொள்ள வேண்டும் என்று அடியார் ஒருவர் கொடுத்துவிட்டுச் சென்றார் என்று அவன் அந்த காப்பை  கொடுக்க மூவரும் அதை  அணிந்து கொண்டனர்.

காப்பை அணிந்தவர்கள் தம் தம் குதிரையை நோக்கிச் செல்ல , தீரேந்திரன் தன் குதிரையில் ஏறி அமர முயல கனிகா அவன் அருகில் வந்தாள் .

தீரேந்திரன் கனிகாவை அங்கு எதிர்பார்க்கவில்லை ! அவன் கேள்வியாக பார்க்க கனிகா பேசத் தொடங்கினாள்.

“ நானும் உங்களோடு வருகிறேன் அரசே!” – கனிகா

“ பயம் கொள்ளத் தேவையில்லை தேவி ! விரைவாக வந்துவிடுவேன் ! லிங்காவும் , இனியனும் என்னுடன் இருக்க நீ பயம் கொள்ள தேவையில்லை தேவி ! “ என்று கூறிவிட்டு அவள் கண்ணத்தை தட்டிவிட்டுச் சென்றான் தீரேந்திரன்.

போகும் அவனையே விழிஎடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கனிகா. மூவர் செல்வதையும் தூரத்துல் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காந்தாயினி .

“ இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் என்னவராகிவிடுவீர்கள் பிரபு ! அதன்பின் உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் “ என்று காந்தாயினி தனக்குள் கூறிக் கொண்டாள். .

தீரன் சிவ ஆலயத்தின் உள்ளே சென்று சிவனை தொழுது எழ அவர் காலடியில் இருந்த மந்திரவியூகம் ஒளி வீசியது. அதை தன் கைகளில் ஏந்தியவன் அதை பத்திரமாக ஒரு பெட்டிக்குள் வைத்து  பூட்டினான். மந்திர வியூகத்தை பெட்டிக்குள் வைத்தவன்  ஓலைச்சுவடியை தன் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வர கரும்புகை ஒன்று அவனை ஆட்கொண்டது. காற்று பலமாக வீசி சூறாவளி காற்றாக மாறத் தொடங்க

 நடக்க இருக்கும் விபரிதத்தை அறிந்த தீரேந்திரன் வேகமாக ஓலைசுவடியை பிரித்துப் பார்க்க அது அருகில் இருக்கும் இடத்தை காண்பித்தது.

தீரேந்திரன் வேகமாக அந்த இடத்தை நோக்கிச் செல்ல முனைய , கரும்புகை அவனை சூழ முற்பட்டது. அப்போது  அடியார் அதன்  முன் வந்து அதை கட்டுப்படுத்தியபடியே 

"தீரா ! விரைவாக செல் ! மந்திரவியூகத்தை பத்திரப்படுத்து !" என்று அவர் கூற தீரேந்திரன் மந்திரவியூகத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

தீரேந்திரன் செல்வதை கண்ட கலிங்கா அவனை பின் தொடர முயல, இனியனும் , லிங்காவும் அவனை பிடித்துக் கொண்டனர்.

கலிங்கா மந்திரங்களை உச்சரிக்க முயல இனியன் அவன் கழுத்தை பிடித்துக் கொண்டான். அதனை அடுத்து கலிங்கா தன் கையில் இருந்து ஏதோ எடுக்க முயல லிங்கா அவன் கையை பிடித்துக் கொண்டான்.

இருவரும் இங்கு போராடிக் கொண்டிருக்க அடியார் புகையோடு போராடிக் கொண்டிருந்தார். இறுதியில் கரும்புகை அவரை சூழ்ந்து கொள்ள அதில் மூழ்கி மூச்சையானார் அடியார்.

அந்த இடம் நோக்கி விரைந்த தீரேந்திரன் மந்திரவியூகத்தை பத்திரபடுத்திவிட்டு திரும்ப கரும்புகை மறுபடியும் தீரேந்திரனை ஆட்கொண்டது .

இங்கு கலிங்கா இவர்களிடமிருந்து தப்பித்து ஓட , இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.

கலிங்காவை துரத்திய லிங்காவும் , இனியனும்  தீரேந்திரன் புகையிடம் சிக்கிக் கொண்டிருப்பதை பார்த்து அருகில் செல்ல,  லிங்கா அணிவித்து  இருந்த ரூத்ராட்சை மாலை ஒளி வீசியது. அது  கரும்புகையின் மேல்பட  புகை மறைந்து  மாயவன் ரூபத்தில் நின்றான் கடோத்கஜன்.

கடோத்கஜன் தன் கைகளை நீட்ட அவன் கைகளில் வாள் முளைத்தது. வாளை கொண்டு தீரேந்திரனை நோக்கி கடோத்கஜன்  வீச, அதிலிருந்து விலகி அந்த வாளை கொண்டு கடோத்கஜனை தாக்கினான் தீரேந்திரன். தீரேந்திரனும் , கடோத்கஜனும் போரிட , இங்கு கலிங்கா பதுங்கி வந்து இனியனை  பின்னால் இருந்து தாக்க முற்பட்டான். அப்போது லிங்கா அவனை பிடித்து நிறுத்தி சண்டை போட இனியனும் சுதாரித்து கலிங்காவை தாக்கினான்.  கடோத்கஜனை தீரேந்திரன்  போரிட்டு வீழ்த்த முயற்சி செய்து கொண்டிருக்க , இனியனும் , லிங்காவும் கலிங்காவிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அனைவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மூவருக்குள்ளும் மாற்றம் ஏற்பட லிங்காவிற்கும், இனியனிற்கும் கண்கள் சுழன்றது.

எதிரில் இருக்கும் அனைத்தும் சுழல ஆரம்பிக்க, இருவரும் திணறுவதை கண்ட கலிங்கா இனியன் அருகில் சென்று வாளால் குத்த முயற்சி செய்ய , மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த  தீரேந்திரன் தன்னை கட்டுப்படுத்தியபடி எழுந்து வாளை கலிங்காவை நோக்கி வீசினான்.   அது சரியாக அவன் கையை துண்டித்தது.

லிங்கா வை குறி பார்த்து கடோத்கஜன் செல்ல அவனின் தலையைக் கொய்தான் தீரேந்திரன்.

துண்டிக்கப்பட்ட கையை பிடித்தபடி கலிங்கா பயந்து ஓட , கடோத்கஜன் தலை தனியாக உடம்பு தனியாக கிடந்தான்.

தன் நண்பர்களை காப்பாற்றி திரும்பிய தீரேந்திரனிற்கும் கண்கள் சொறுக அவன் முன் வந்து நின்றார் மகேந்திரர்.

அவரை பார்த்ததும் தீரேந்திரன், “ தாங்கள் ஈட்ட பணியை நிறைவேற்றிவிட்டேன் தந்தையே  ! மந்திரவியூகத்தை பத்திரப்படுத்திவிட்டேன் “என்று தீரேந்திரன் சொன்னது தான் தாமதம்  அவன் நெஞ்சில் வாளை இறக்கினார் மகேந்திரர்.

"தந்தையே !" என்று அவரை அதிர்ச்சியாக பார்த்தபடி தரையில் வீழ்ந்தான் தீரேந்திரன்.

மகேந்திரர் வாளை இறக்கியதும் அரைமயக்கத்தில் இருந்த லிங்காவும் , இனியனும் "தீரா !" என்று கத்த தரையில் துடித்துக் கொண்டிருந்தான் தீரேந்திரன்..

"சபாஷ் மகேந்திரா ! நல்ல காரியம் செய்துவிட்டாய் ! "என்று கூறியபடியே தரையில் கிடந்த தலை மறுபடியும் உடம்போடு ஓட்டிக் கொண்டது.

 "இனி நீ எனக்கு தேவையில்லை ! மடிந்து போ !" என்று கடோத்கஜன் கூற மகேந்திரர் தன்னை தானே வெட்டிக் கொண்டு இறந்தார்.

அறை மயக்கத்தில் நடக்கும் விசயங்களை கண்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நின்றனர் இனியனும் , லிங்காவும்.

சாவின் விளிம்பில் இருந்த தீரேந்திரன்.

“ என் ராஜ்ஜியத்தையும் என் மக்களையும் காப்பாற்று இனியா ! என் தங்கைகள் இனி உங்கள் பொறுப்பு ! “ என்று இருவரிடமிடமும் கூறிவிட்டு மடிந்தான் தீரேந்திரன்.

கயவனின் சூழ்ச்சியால், தந்தையின் கரங்களால் நெஞ்சில் வாள் பட்டு வீரத்திருமகனாக மண்ணின் மைந்தனாக கிடந்தான் தீரேந்திரன்.

 

வியூகம் தொடரும் .

This post was modified 6 months ago by HoneyGeethan

NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 134
 

sis ud super 🙂 🙂 kani romba pavam 😣 😣 😣 eagerly waiting for ur nxt ud sis 😊 😊 😊 


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 189
 

மந்திரம் 41:

தீரேந்திரன் இறந்ததும் அருகில் சென்று அவன் கையில் இருந்த ஓலைச்சுவடியை எடுக்க கடோத்கஜன்  முயல அது பறந்து சென்றது.

கடோத்கஜன் அதை பிடிக்க பின்னால் செல்ல அது ஒரு இடத்தில் சென்று நின்றது. கடோத்கஜன் அந்த இடத்திற்குச் சென்றதும் பெரும் சத்ததுடன் சிவலிங்கம் தோன்றியது. சிவலிங்கத்தை கண்டு கடோத்கஜன் பின்னடைய அதில் இருந்து வந்த ஒளி கடோத்கஜனை தூக்கி வீசியது.

“ ஈசனே ! மந்திரவியூகத்தை அடையாமல் நான் விட மாட்டேன் “ என்று கூறிய கடோத்கஜன்  காற்றோடு மாயமாகிப் போனான்.

கடோத்கஜனின் மந்திரகட்டுக்களில் இருந்து விடுபட்ட அடியார் தீரேந்திரன் அருகில் சென்று

“ தீரா ! உன் கருமபயன் இன்னும் முடியவில்லை. “ மந்திரவியூகத்தை" ஈசனின் வசம் ஒப்படைக்க மறுபடியும் பிறந்து வருவாயாக !" என்று கூறியவர் 

இனியன் மற்றும் லிங்கா அருகில் சென்று தன் கைகளை வைக்க அவர்கள் எழுந்து நின்றனர்.

அவர்களிடம் “ நீங்களும் உங்கள் கடமைகளை முடித்துவிட்டு அவனோடு வந்து சேர்வீர்களாக!”  என்று அவர்களையும் ஆசிர்வதித்துவிட்டு அடியார் சென்றுவிட்டார். 

*******************

தீரன் இறந்த செய்தியைக் கேட்டு  கலிங்காவிடம் விரைந்தாள் காந்தாயினி.

கலிங்கா தன் கையை  இழந்த நிலையில் காற்றோடு பேசிக் கொண்டிருந்தான்.

"குருவே ! எங்கு இருக்கிறீர்கள் ? நான் இங்கு கையை இழந்த நிலையில் துடித்துக் கொண்டிருக்கின்றேன். விரைந்து வாருங்கள் !" என்று கலிங்கா கடோத்கஜனை தேடியபடியே பேசிக் கொண்டிருக்க

அவன் முன் வந்து நின்றாள் காந்தாயினி.

“ என்ன கலிங்கா? இதெல்லாம் !  என்னவரிடம் நான் கரம் சேர்க்க எண்ணி நீ கொடுத்த காப்பை மூவர்க்கும் நான் கொடுத்தேன். ஆனால் நடந்தது என்னவோ வேறாக இருக்கிறதே ? என்னவர் என்னிடம் வந்து சேரவும் இல்லை. தீரேந்திரரும் இறந்துவிட்டார். என்ன நடக்கிறது இங்கே ? என்னை வைத்து நீ என்ன செய்து வைத்திருக்கிறாய்  ? உன்னை நான் விட மாட்டேன்" என்று காந்தாயினி கலிங்காவை நோக்கி கத்தினாள் ,

"உன் தேவை முடிந்தது காந்தாயினி ! இனி நீ இவ்வுலகிற்கு தேவையில்லை. உன்னவனை நினைத்துக் கொண்டே மடிந்து போ! உன் உயிர் பிரிந்தாலும், உன் ஆன்மா என்றும்  எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கட்டும் !" என்று கலிங்கா கூறி மந்திரங்களை  உச்சரித்தான்.

அதனை அடுத்து காந்தாயினி மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல் கிணற்றில் விழுந்து இறந்தாள் . அவள் இறந்தாலும் அவளது ஆன்மா கிணற்றில் தஞ்சம் புகுந்தது.

“ யாராவது என்னை காப்பாற்றுங்கள் ! எனக்கு விமோட்சனம் கொடுங்கள் ! ‘’ என்று அது கதற அடியார் கண்மூடியபடியே பேசினார்

“ நீ செய்த பாவத்தின் பலன்களை அடைந்து தான் ஆக வேண்டும் காந்தாயினி! . உன் பாவ பலன்கள் முடிந்ததும் உன்னவனால் நீ முக்தி அடைவாயாக “ என்று அவர் கூறியதும் காந்தாயினி நீரோடு நீராக கரைந்தாள்.

*****************

இனியனும், லிங்காவும்  மகேந்திரர் மற்றும் தீரேந்திரனின் பூதவுடலை தாங்கியபடி அரண்மனை நோக்கிச் சென்றனர்.

கனிகா தீரேந்திரனின்செய்தியை கேட்டு மயங்கிச் சரிந்தாள். அக்கணமே அவள் உயிர் பிரிந்தது.

“ போர்களத்தில் வென்று வந்த மன்னவனுக்கு வெற்றி வாகை சூட காத்திருந்த காரிகை மரணமாலை சூடிக் கொண்டாளோ ?

மணக்கோலத்தில் கை கோர்க்க  நினைத்த காரிகை மரண கோலத்தில் கை கோர்த்துக் கொண்டாளோ ? “

************

மகேந்திரரும் , தீரேந்திரனும் இறந்ததும், லிங்கா வதனியுடன் தன் நாட்டிற்கு புறப்பட்டான். தன் நண்பனின் சொல் காக்க...

இனியனும் தன் நண்பனின் சொற்படி நாட்டையும் ,  நாட்டு மக்களையும் பேணினான்.

ராஜ்ஜியத்தை திறம்பட ஆண்டனர் லிங்காவும் , இனியனும். மதுராந்தகத்தை அடைய  பல அரசர்கள் முற்றுகையிட , அவர்களை சமாளித்து திறம்பட  ஆட்சி செய்தான் இனியன்.  வளர்ச்சிகள் பல அடைந்து  வளமுடைய நாடாக  பல மாற்றம் பெற்றது மதுராந்தகம்.

நண்பனுக்கு ஈந்த வாக்கை காப்பாற்றிய வேந்தர்கள் தங்கள் காலம் முடிந்தவுடன் தன் நண்பனிடம் சென்று சேர்ந்தார்கள்.

மீண்டும் பிறப்பெடுக்க.

*******************

காலங்கள் உருண்டோட கண்விழித்தான் தீரன்.

கண்விழித்த எழுந்த தீரன் தான் படுக்கையில் படுத்திருப்பதை கண்டு திகைத்தான்.

'தான் கண்ட காட்சிகள் கனவா ? நனவா ?' என்று புரியாமல் குழப்பம் மேலிட விடியல் வரை விழித்துக் கொண்டிருந்தான் தீரன்.

தீரன் அன்று முழுவதும் குழப்பத்திலேயே இருக்க அதை கண்ட மீனாட்சி , தீரனின் அன்னை காந்தர்வரிடம் பதறினார்.

“ என்னங்க இங்க பாருங்க ! என் பிள்ளை முகமே சரியில்லை ! ஏதோ பேய்யை கண்டது போல் அரண்டு போய் உட்கார்ந்திருக்கான் “– மீனாட்சி

"ஆமாம் ! உன் பையனை பேய் அடிச்சிட்டாலும்!  இவன் யாரையும் அடிச்சா பத்தாதா! போய் வேளைய பாருடி" என்று காந்தர்வன் கூற

இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் லிங் .

"அப்பா ! அம்மா! சொல்றது சரிதான் ! அவன் இன்னைக்கு சரியில்லை ! ஒரு மாதிரி தான் இருக்கான். அம்மா சொல்ற மாதிரி பேய் தான் அடிச்சிருச்சு போல !" என்று லிங் அங்கு வந்த கனிஷ்காவை பார்த்துக் கொண்டே கூறினான்.

லிங் கூறியதை கேட்டு முறைத்தபடியே அங்கு வந்த கனி

"இப்ப என்ன மேன் சொன்ன நீ ?" – கனி

"அது ஒன்றுமில்லை மேடம் சும்மா ! அம்மாக்கு ஒரு சப்போர்ட்" என்று லிங் இழுத்ததும்

"ம்ம்ம்... உன்னை.."  என்று கனி ஆரம்பிப்பதற்குள் தீரன் அங்கு வந்தான். தீரன் வருவதைப் பார்த்த கனி லிங்கை முறைத்துவிட்டு அமர்ந்துவிட்டாள் 

வந்தவன் மீனாட்சி அருகில் சென்று அவர் கைகளை பிடித்துக் கொண்டே

“ அம்மா ! எனக்கு ஒன்றுமில்லை ! ஏதோ ஞாபகம் ! அதுவா சரியாகிடும்மா ! ரொம்ப தலைவலிக்குது.  எனக்கு ஒரு கப் காபி போட்டு குடும்மா!“ -  தீரன்

“ அதான் துரையே! சொல்லிட்டாரே  ஒன்னும் இல்லைனு!  அப்புறம் என்ன ? கண்டதையும் யோசிக்காம போய் வேலையை பாரு “ என்று காந்தர்வன் கூற அவரை முறைத்த  மீனாட்சி  காபி போட செல்ல கனி அவரை தடுத்தாள்.

“ அத்தை எனக்கும் ஒரு கப் காபி ! “என்று கனிஷ்கா கூற ,

 மீனாட்சி அவளை முறைத்துக் கொண்டே அவள் எதிரில் வந்து நின்றார். 

“ ஏண்டியம்மா ! இப்படி அடுத்தவங்க வீட்டுக்கு வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கியே ! நல்லாவா இருக்கு !  வேறவங்க வீட்டுக்கு போனா அங்க வேலை எல்லாம் செய்யனும்னு உனக்கு தெரியுமா ? தெரியாதா ?  அதை விடு உங்க வீட்டில்  இருக்கும் கிட்சன் பக்கம் எல்லாம் எட்டியாவது பார்ப்பியா ? இல்லையா ?" - மீனாட்சி

“ நோ அத்தை கிட்சன் பக்கம்லாம் நான் போனதே இல்லை. கிட்சனுக்குள்ள எல்லாம் போய் வெந்து சாக என்னால் முடியாது ! அதனால நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் ‘’– கனி

"அது என்னடியம்மா ! முடிவு ! வெளியவே வாங்கி திங்கலாம்னா ?" – மீனாட்சி

"அதில்லை அத்தை ! சமைக்க தெரிந்த பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்" – கனி

அதை கேட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த தீரனுக்கு புரையேறியது.

லிங் அவன் தலையை தட்டும் சாக்கில் குனிந்து, “ அப்புறம் மச்சான் ! எப்ப நீ சமைக்க , காபி போடலாம் கத்துக்கப் போற? ‘’ – லிங்

"நீ அடிவாங்கப் போறடா நாயே !" என்று தீரன் முணுமுணுக்க லிங் அமைதியாகிவிட்டான்.

சட்டென்று கனி தீரனை பார்த்து " என்ன தீரா ? என் புருஷன் எனக்கு எல்லாம் செய்வான் தானே ! நான் சொல்வதும் சரிதானே !"  –என்று தீரனைப் பார்த்து கனி கண்சிமிட்டியபடியே கூற காந்தர்வன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார் அதற்கு நேர்மாறாக மீனாட்சி கோபத்தில் நின்றார்.

“ ஏய் ! என்னடி வாய் ரொம்ப நீளுது ! வீட்டிற்கு விருந்தாட வந்து இருக்கேன்னு பார்த்தா ! என் பையனை பேர் சொல்லிலாம் கூப்பிடுற “ – மீனாட்சி

“ பேர் சொல்லிக் கூப்பிடத்தானே பேர் வைப்பாங்க ஓல்டு லேடி ! வேறு எப்படி கூப்பிடனும் உங்க பிள்ளைய ? சார் ! துரை ? இல்லை தீரேந்திரரே ? னு கூப்பிடனுமா ?" என்று கூறிவிட்டு சிரித்தபடியே கனி நகர முற்பட மீனாட்சி கொதித்து விட்டார்.

“ ஏய் நில்லுடி “ என்று மீனாட்சி எதோ கூற வர குழல் இடைபுகுந்தாள்

"அம்மா விடுங்க மா!  போய் வேலைய பாருங்க ! அவங்க நம்ம கெஸ்ட் தேவையில்லாம அவங்ககிட்ட எதுக்கு கத்திக்கிட்டு இருக்கீங்க?"  என்று கூறிய குழல்  கனியை முறைத்துக் கொண்டே மீனாட்சியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் .

கனியும் சிரித்தபடியே சென்றுவிட அவள் அழைத்த தீரேந்திரரே  என்ற வார்த்தையில் திகைத்து அமர்ந்து இருந்தான் தீரன்.

*******************

குகையில் கடோத்கஜன் கலிங்காவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“ கலிங்கா ! வரைபடத்தை எப்படியாவது கைப்பற்றி வா ! அதை வைத்து தான் நாம் மந்திரவியூகத்தை அடையமுடியும்” -  கடோத்கஜன்

அப்படியே செய்கிறேன் குருவே என்று கலிங்கா செல்ல முற்பட கடோத்கஜன் மறுபடியும் அழைத்தான்.

"கலிங்கா ஒன்றை நினைவில் வைத்துக் கொள்! அந்த வீட்டின் உள்ளே நாம் செல்ல இயலாது . வேறு விதமாகத்தான் அதை நாம்  கைப்பற்ற முடியும் “ என்று கலிங்காவை எச்சரிக்கை செய்து அனுப்பினான் கடோத்கஜன்.

மந்திரம் 42:

லிங் தீரனின் காதை கடித்தான்

“  மச்சி உனக்கு பொழுது போகலேனா இவங்க இரண்டு பேரையும் பேச விட்டா போதும்டா ! அவங்க சண்டை போட்ட மாதிரியும் இருக்கும்   உனக்கும்  பொழுது போன மாதிரியும் இருக்கும் -  “  என்று கூறிவிட்டு லிங் ஓட

" நில்லுடா  நாயே ! உனக்கு வர வர நக்கல் அதிகமா போச்சு ! உன்ன இன்னைக்கு நான் விட மாட்டேன்" என்று லிங்கை அடிக்கத் துரத்தினான்  தீரன்.

தீரனிடம் இருந்து தப்பித்து லிங் வெளியே வர எதிரில் வந்தாள் ரூபா. ரூபாவை பார்த்ததும் லிங் நின்றுவிட்டான். 

ரூபாவை பார்த்த தீரனும் நின்றுவிட , அவர்களை கடந்து  ரூபா சென்றதும் அவளை பின்பற்றி லிங்கும் செல்ல முயன்றான்.

அப்போது வேகமாக  அவனை தடுத்து நிறுத்தினான் தீரன்

“ மச்சி என் தங்கச்சி கிட்ட வம்பு பண்ண அவ்ளோ தான் “ – தீரன்

“ என்னது ரூபா தங்கச்சியா ? இது எப்ப இருந்து ?  ஆனா எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்குடா ! அவகூட பல ஜென்மம் வாழ்ந்த மாதிரி இருக்கு . கொஞ்சம் சேர்த்து வைடா ! “ – லிங்

“ அப்படியா ? என்ன அவள  லவ் பண்றியா நீ ?  நம்ப முடியலயே ! நீ தான் எவ்வள பார்த்தாலும் ஜொள்ளுவிட்டுட்டு  அலையுற ஆள் ஆச்சே ? ரூபாவும் அந்த வரிசையில் தான் வச்சிருக்கியா ? “ –தீரன்

"இல்லை மச்சான் ! உண்மையிலேயே ரொம்ப லவ் பண்றேன்டா!" – லிங்

"சரி ! சரி ! போனா போகுது உன்னைவிட நல்ல இளிச்சவாயன் அவளுக்கு கிடைக்க மாட்டான்! நான் சேர்த்து வைக்கிறேன்" - தீரன்

அதை கேட்டு லிங் முறைத்து அவனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தான் இனியன்

இனியனைப் பார்த்ததும் அவன் அருகில் சென்று அவனை அணைத்துக் கொண்டான் தீரன்.

பல ஜென்மங்கள் தாண்டி கண்ட தன் நண்பனை தீரன் அணைத்துக் கொள்ள இனியன் குழம்பினான்.

"என்னாச்சு தீரன் ! ?" – இனியன்

இனியன் அப்படி கேட்டதும் வேகமாக சுதாரித்த தீரன் ஒன்றுமில்லை சும்மா தான் என்று சட்டென்று விலகினான். 

“ என்னாச்சு இனியன் காலையிலேயே வந்துட்டீங்க ? ஏதாவது பிரச்சனையா ? “ -  தீரன்

தீரன் அப்படி கேட்டதும் அவன் கைகளில் அந்த பெட்டியை கொடுத்தான் இனியன். அதை  தீரன் திறந்து பார்க்க அதில் ஓலைசுவடி இருந்தது. அதை கண்ட தீரன் திகைத்தான்.

தீரனின் நிலை புரியாமல் பேசினான் இனியன்

“ இதை உன்னிடம் கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன்’’ என்று கூறிய இனியனின் கண்கள் குழலை தேடியது.

அப்போது அங்கு வந்த காந்தவர்வன் இனியனை பார்த்ததும்  வரவேற்றார் .

“அடடே இனியன் தம்பியா ! வாப்பா வா ! ‘’ -  காந்தர்வன்

அவரது வரவேற்பை அடுத்து அருகில் சென்றவன், "சார் ! உங்க கூட கொஞ்சம் தனியா பேசனும்" – இனியன்

அதை கேட்ட காந்தர்வன்  யோசனையோடு  அவனை அழைத்துக் கொண்டு பின்பக்கம் சென்றார்

"என்னப்பா ? என்ன விசயம் ? யாருக்கும் தெரியாமல் தனியா பேசுற அளவுக்கு " – காந்தர்வன்

"எனக்கு ரூத்ரமூர்த்தி சார் பத்தி தெரியணும் ?" – இனியன்

"அதான் அன்னைக்கே அவனைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேனேப்பா ! இன்னும் வேற என்ன இருக்கு அவனைபற்றி சொல்ல ? எனக்கு தெரிந்த அனைத்தையும்  சொல்லிட்டேனே தம்பி" என்று காந்தர்வன் குழப்பமாக கேட்டார்

இனியன்  அதற்கு மறுப்பாக தலையசைத்தபடி "இல்லை சார்! நீங்க இன்னும் சில விசயம் சொல்லல" – இனியன்

"என்ன சொல்றீங்க ?" – காந்தர்வன்

“ நீங்க ஏன் உங்க தம்பி காதல் மணம் பண்ணிக்கிட்டத மறைச்சீங்க ? “ – இனியன்

அதற்கு காந்தர்வன் தயங்க,

"அப்ப ரூத்ரமூர்த்தி காணாமல் போனதுக்கு நீங்க தான் காரணமா ?" – இனியன்

"அய்யோ ! அப்படியெல்லாம் இல்லை தம்பி ! நான் அவனை பற்றி எனக்குத் தெரிந்த எல்லாத்தையும்  சொல்லிடுறேன். நீங்க தான் அவனை கண்டுபிடிச்சு தரனும்" என்று கூறிய காந்தர்வன் பேசத் தொடங்கினார்.

என் கல்யாணத்திற்கு மூன்று மாதத்திற்கு அப்பறம் திடீர்ன்னு ஒரு நாள் ருத்ரன் என்கிட்ட வந்து தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் , அந்த பெண்ணை உடனே மணம் புரிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் என்கிட்ட வந்து சொன்னான், தம்பி ! அதை கேட்டு நானும்  அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன்" – காந்தர்வன்

இனியன் அதை கேட்டு புரியாமல் அவரைப்  பார்க்க காந்தர்வன் தொடர்ந்தார்

“ தான் தவறு செய்துவிட்டதாகவும் செல்வி அதான் அவன் காதலித்த பெண்ணின் பெயர் உண்டாகியிருப்பதாகவும் சொன்னான். அவன் செய்த தவறு வெளியே தெரியக் கூடாதுனு.. அவர்கள் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணமா, நான் செஞ்சு வைச்சேன். ஆனா திடீர்னு ஒரு நாள் அவங்கள காணோம்.. எங்க போனான்? ஏன் போனான்? என்ன ஆச்சுனு தெரியல ? அவன் மகன் தான் லிங்கேஷ் ன்னு அவன பாத்ததும் கண்டுபிடிச்சிட்டேன். அவன் சொல்றத பார்த்தா அவனையும் விட்டுட்டு ருத்ரன் போயிருக்கான் ! ஏன் இப்படி ருத்ரன் செஞ்சான்னு எனக்கு தெரியல தம்பி " – காந்தர்வன்

"அப்ப லிங்கேஷ் அம்மா ?" – இனியன்

"தெரியல தம்பி ! செல்வியையும் காணாம  நான் தேடி அலைஞ்சேன் !  செல்விக்கும் என்ன ஆச்சுனு தெரியல ?  அவளும் கிடைக்கல.. – காந்தர்வன்

இப்படி பேசிக் கொண்டே போனவர் ஏதோ ஞாபகம் வந்தவராய் இனியனிடம் திரும்பினார்

“ ஆமாம் இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் - ? “ – காந்தர்வன்

“ செல்வின்னு நீங்க கூப்பிடுறவங்க  என் அத்தை . “ – இனியன்

அதை கேட்டு காந்தர்வன் திகைத்து பேச்சிழந்து நின்றார். இனியன் தொடர்ந்து பேசினான்.

"அதுமட்டுமல்ல சார் ! அவங்க இரண்டு பேரும் இப்ப  உயிரோடு இல்லை."  – இனியன்

"என்ன செல்வியும் உயிரோடு இல்லையா ? என்று அதிர்ந்தவர் “ அன்னைக்கு என் தம்பிய  நான் அனுப்பாம இருந்திருந்தா அவன் உயிரோடு இருந்திருப்பான். அவன அனுப்பி நான் தப்பு பண்ணிட்டேன் “ என்று காந்தர்வன் அழுக

“ அப்பா ! “ என்ற அழைப்பை தொடர்ந்து திரும்பிப் பார்த்தனர் இருவரும் அங்கு தீரன் லிங்குடன் நின்று இருந்தான்

லிங்கை பார்த்ததும் அவனை கட்டிக் கொண்டார் காந்தர்வன்

"இப்படி உன் அப்பன் எல்லாரையும் விட்டுட்டு போயிட்டானேடா ! இனி நீ அனாதை இல்லைடா ! உனக்கு நாங்களா இருக்கோம்" என்று அவர் கூற அனைத்தையும் கேட்ட லிங் சந்தோசத்துடன்  'பெரியப்பா' என்றுஅவரை  அணைத்துக் கொண்டான்.

அவர்களின் மகிழ்ச்சியில் தலையிடாமல் இனியன் கிளம்பி வெளியே வர அவனை தொடர்ந்து தீரனும் வந்தான்

"தேங்க்ஸ் இனியா !" என்று தீரன் சொல்ல,

அதற்கு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுச்  சென்றான் இனியன்

இனியன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த தீரன் காதில் எதோ சத்தம் கேட்க அந்த சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான் தீரன். அந்த சத்தம் தீரனை  வெளியில் இழுத்துச் சென்றது. அங்கு யாரும் இருக்கும் அறிகுறி தென்படவில்லை. அப்போது தான் தன் கையில் ஓலைசுவடி இருப்பதை  கவனித்தான் தீரன் .

இனியன் கொடுத்ததை தான் பத்திரப்படுத்தவில்லை என்பதை அவன் உணர்ந்து  சுதாரிப்பதற்குள் பருந்து வந்து அவன் கையில் இருந்த ஓலைச்சுவடியை பறித்துவிட்டுச் சென்றது. ஓலைச்சுவடியை பருந்து எடுத்துக் கொண்டு செல்ல தீரன் என்ன செய்வதென்று புரியாமல் அது சென்ற திசையை பார்த்தபடி நின்றான்.

*********************

பருந்து சென்று கடோத்கஜன் முன்னால் நின்றது.

"சபாஷ் ! கலிங்கா ! காரியத்தை சாதித்துவிட்டாய் ! இனி நாம் தான் உலகை ஆளப் போகிறோம் ! வேகமாக சென்று கன்னியவளை அழைத்து கொண்டு வா !" என்று கடோத்கஜன் கூறிச் சிரிக்க ,

இதை தன் ஞான திருஷ்டி மூலம் பார்த்து கொண்டிருந்த அடியார்  “ இறைவா ! இது என்ன சோதனை ? “ என்று கூறியவர் வேகமாக தீரனை நோக்கி  விரைந்தார்.


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 189
 

மந்திரம் 43:

குழலும், லிங்கும் அமர்ந்து இருக்க குழலின் பக்கவாட்டில் அமர்ந்து இருந்தாள் ரூபா. லிங் குழலிடம் சைகை செய்ய அதை புரிந்து கொண்ட குழல் ரூபாவிடம் திரும்பினாள்

“ ரூபா வாயேன் கோவிலுக்கு போயிட்டு வரலாம்”- குழல்

"வேண்டாம்டி ! இன்னோரு நாள் போகலாம் ! அம்மாகிட்ட உடனே வரேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன் ! லேட்டானா அம்மா தேடுவாங்க !" – ரூபா

"கோவிலுக்குத் தானே ! போயிட்டு சீக்கிரம் வந்துரலாம் டி !" – என்று கூறி குழல் நச்சரிக்க ஆரம்பிக்க,

ரூபாவும்  வேறு வழியின்றி கோவிலுக்கு போக  சம்மதித்தாள் . 

இவர்கள் கிளம்பி வரவும் அவர்கள் அருகில் இனியன் தன் ஜீப்பை நிறுத்தவும் சரியாக இருந்தது.

இனியனைப் பார்த்ததும் குழல் குதூகலமானாள்.

"நீங்க எங்க இங்க ?" - குழல்

"ஒரு கேஸ் விசயமா இந்த பக்கம் வந்தேன். வேலை முடிஞ்சு போகும்போது உங்களை பார்த்தேன் . ஆமா எங்க கிளம்பிட்டீங்க ?" – இனியன்

"சும்மா கோவிலுக்கு போகலாம்னு ! நீங்களும் எங்க கூட வாங்க இனியன் . எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் !" – லிங்

லிங் அப்படி கூறியதும் குழலை ஒரு பார்வை பார்த்த இனியன் சிரித்துக் கொண்டே

"சரி வரேன் ! நண்பா !  எல்லாரும் வாங்க என் வண்டியில் போகலாம் ! நான் உங்களை டிராப் பண்றேன்" என்று இனியன் கூற அதை ஏற்று மூவரும் ஏறி அமர்ந்தனர்.

குழல் வேகமாக இனியன் அருகில் இருந்த சீட்டில்  ஏறி அமர்ந்தாள் .

அவளது செய்கையை  பார்த்து சிரித்துக் கொண்டே ரூபாவும் , லிங்கும் பின்னால் அமர்ந்தனர்.

தன் சீட்டில் அமர்ந்த இனியன் வண்டியை ஸ்டார்ட் செய்ய , ரூபா லிங்கை கண்டு கொள்ளாமல் வெளியில் பார்த்தபடி வந்தாள். அவளது கவனத்தை லிங் கலைத்தான்.

“ ரூபா நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் ?" – லிங்

"சொல்லுங்க" – ரூபா

"அன்னைக்கு ஏதோ விளையாட்டா தான் தீரா சொன்னான்.  மத்தபடி இதுவரை எந்தப் பொண்ணையும் நான் காதலிச்சது இல்லை" – லிங்

"இதை  எதுக்கு என்கிட்ட சொல்றீங்க ? நீங்க எந்த பொண்ணையும் காதலிங்க எனக்கு என்ன வந்தது  ?" என்று கூறிவிட்டு  ரூபா முகத்தை திருப்பிக் கொள்ள லிங் முகம் விழுந்துவிட்டது.

இவர்கள் பேச்சு காதில் விழுந்தாலும் இனியனும், குழலும் அதை கண்டு கொள்ளும் நிலையில் இல்லை ! குழல் அவனை காதலாக பார்த்துக் கொண்டு வர, இனியன் அவளிடம் கண் ஜாலம் செய்து கொண்டு வந்தான்.

"என்ன மேடம் பார்வையால ஆள அசர அடிக்குறீங்க?"   - இனியன்

"ஹ்ம்ம்ம் ஆமாம் அசரடிச்சிட்டாலும் ? நான்  பார்த்தால் உங்களுக்கு என்ன வந்ததாம் ? பேசாமல் வண்டியை ஓட்டுங்க !"  – குழல்

"ம்ம்ம் எங்க வண்டி ஓட்டுறது! இப்படி பார்த்துக்கிட்டு இருந்தா நான் வண்டி ஓட்டின மாதிரி தான்! ஆனா நீ இப்படி கண்ணால பேசினா அப்புறம் நான் எப்படி பதில் சொல்றதாம் என்று தான் வண்டி ஓட்டுறதை  குறிப்பால் காட்டினான் "– இனியன்

"ஹ்ம்ம்ம் கண்ணால் பதில் சொல்லுங்க ?"  -  குழல்

"எனக்கு  கைகளால்  பதில் சொல்லித்தானே பழக்கம்" என்று கூறியபடி இனியன் ஸ்டீரிங்கில் ஒரு கையை வைத்துக் கொண்டு மற்றோரு கையை குழல் கைகளோடு பிணைத்துக் கொண்டான் .

இவர்கள் இங்கு காதல் மொழிகள் பேசிக் கொண்டு வர அங்கு தீரன் கனி மற்றும் மீனாட்சியிடம் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டு இருந்தான்.

குணசேகரனும் , காந்தர்வனும் வெளியில் சென்று இருக்க மீனாட்சி தீரன் அருகில் வந்தார்

“ தீரா உன் திருமணம் பற்றி ஒரு முடிவு பண்ணியிருக்கேன் நான் “ – மீனாட்சி

அவர் அப்படி கூறியதும் தீரன்  பதற்றம் அடைந்தான். அதை கவனித்த மீனாட்சி

“ தீரா ! உனக்கு கனிஷ்கா மேல் ஓர் ஈர்ப்பு இருக்குனு தெரியும். ஆனா அவ வேண்டாம்டா உனக்கு. பொண்ணு மாதிரியா இருக்கா  அவ ! ஒரு அடக்கம் இல்லை!  பணிவு இல்லை . அச்சம் , நாணம் எல்லாம் என்ன விலைனு கேட்பா போலடா. அம்மா சொல்றத கேளு  ! உனக்கு நல்ல பொண்ணா  அம்மா கல்யாணம்  பண்ணி வைக்கிறேன்.” -  மீனாட்சி

அதை கேட்ட தீரன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு  கனி இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு பேசத் தொடங்கினான்.

“ ஆமாம்மா ! நீ சொல்றது கரெக்ட் தான் ! பொண்ணா அவ ! என்ன அந்த கண்களில் ஓர் ஈர்ப்பு இருக்கு ! அப்படியே ஆள உள்ளே இழுக்குது. அதுக்காகலாம்  அவள கல்யாணம் பண்ணிக்க முடியுமா ? அப்புறம் கண்ணங்கள் கொஞ்சம் ஆப்பிள் பழம் போல செவசெவனு இருக்கு... அப்படி லைட்டா தட்டுனா கூட சிவந்து போகுது அதுக்காகலாம் அவள  கல்யாணம் பண்ணிக்க முடியுமா ? அப்படியே நடுவுல பார்த்தா அந்த மூக்கு கொஞ்சம் கூர்மையா மச்சத்தோட அழகாக எடுப்பா இருக்கு ! அதுக்காகலாம் அவள  கல்யாணம் பண்ணிக்க முடியுமா ?" என்று தீரன் அடுக்கிக் கொண்டே போக மீனாட்சி அவனை தடுத்தார்.

"ஹேய் நிறுத்துடா ! இப்ப அவளை நீ திட்டுறீயா ?  வருணிக்கிறியாடா ?" – மீனாட்சி

"அய்யோ மம்மி கண்டுபிடிச்சுட்டாங்களே ! தீரா உசார் ! மாட்டிகிட்ட அவ்ளோ தான் ! சமாளி"  என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டவன்

"இது என்னம்மா கேள்வி ! அவளை திட்டிட்டு இருக்கேன்மா ! உனக்கு பிடிக்காதவ எனக்கும் பிடிக்காதவமா. உன்னை மீறி நான் எதாவது செய்வேனாமா ? நீ சொல்ற பொண்ணதான் நான் கட்டிக்குவேன்" என்று தீரா சொல்ல மீனாட்சி அவனை நெட்டி முறித்தார்.

"என் கண்ணு ! கொஞ்ச நேரத்தில் என் பிள்ளைய போய் தப்பா நெனச்சுட்டேனே !" என்று மீனாட்சி புலம்ப தீரன் சிரித்துக் கொண்டே திரும்ப,  அங்கு கனி கோபத்தோடு நின்று கொண்டு இருந்தாள்.

கனியை பார்த்ததும் தீரன் விழிக்க மீனாட்சி அதிகாரமாக பேசத் தொடங்கினார்

“ பார்த்தியாடி ? நான் சொன்னேன்ல என் பையன் என் பேச்சைத்தான் கேட்பானு ! உன்னை வேண்டாம்னு சொல்லிட்டான். இப்ப என்னடி சொல்ற ? “ – மீனாட்சி

"நான் என்னத்த சொல்ல ! அதான் உங்க புள்ளயே சொல்லிட்டாரே வேண்டாம்னு ! இனி உங்க பையனுக்கு நல்ல குடும்ப குத்துவிளக்கா பார்த்து திருமணம் பண்ணி வைங்க !  எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று தீரனை பார்த்து  முறைத்து கொண்டே கூறிவிட்டு  கனி சென்று விட்டாள்.

இங்கு தீரன் “ அய்யோ அம்மா !  இப்படி பண்ணிட்டீயே !" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே தலையில் கை வைத்தபடி அமர

"அதை பார்த்த மீனாட்சி அவ கிடக்குறாடா ! உனக்கு நல்ல பொண்ணா பார்த்து நான் கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்" என்று கூறிவிட்டு கிட்சனுக்குள்  அவர் சென்று விட தீரன் விழித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

கோவிலுக்கு சென்று இறங்கினர் இனியன், லிங் , குழல்  மற்றும் ரூபா.

லிங்கும் , ரூபாவும் முன்னால் செல்ல அவர்களை தொடர்ந்து செல்ல முனைந்த குழலை தடுத்தான் இனியன்.

“ அவங்க இரண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா பேசிக்கட்டும் ! நீ வெயிட் பண்ணு “ - இனியன்

"பாருடா ! சாரை பார்த்ததும்  நான் தப்பா  எடை போட்டுட்டேன் போல ! இரும்பு மனிதன்னு நான் நினைச்சேன் ஆனா காதல் பாடத்தில் சார் ! ரோமியோவ மிஞ்சிருவீங்க போல" – குழல்

"நான் உன்கிட்ட சொன்னேனா ? நான் இரும்பு மனிதன்னு? நீயா ஒன்னு நினைச்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாதுடி  !" – இனியன்

"அதுமட்டுமில்லாம நான் இன்னும் காதல் பாடம் சொல்லிக் குடுக்கக் கூட ஆரம்பிக்கல அதுக்குள்ள நீ என்னைய ரோமியோ  அளவுக்கு பில்டப் பண்ற? என்ன மாமா ? சொல்லிக்குடுக்கட்டும்மா  ?"  - இனியன்

"அதெல்லாம் வேண்டாம்" - குழல்

இனியன் குழலிடம் இப்படி  வம்பு செய்து பேசிக் கொண்டு இருக்க,  ரூபாவை அழைத்துக் கொண்டு குளக்கரைக்குச் சென்றான் லிங்.

சுற்றி முற்றி குழலை தேடினாள் ரூபா. 

"குழல் வர  மாட்டா ? நம்ம தனியா பேசனும் தான் இந்த ஏற்பாடு" – லிங்

"ஏன் ? அப்படி என்கிட்ட  தனியா என்ன பேச வேண்டியிருக்கு ?" – ரூபா

அவள் அப்படி சொன்னதும் லிங் ஒரு முடிவோடு பேசத் தொடங்கினான்.

"நான் நேரடியா விசயத்திற்கு வறேன் ! இங்க பாரு ரூபா !உனக்கு நான் வேறு பெண்ணோடு பேசுறது , பழகுறது பாதிக்காம இருக்கலாம் ! ஆனா எனக்கு அப்படியில்லை ! உன்னை ஒருத்தன் சும்மா பார்த்தாலே அவனை கொலை பண்ற அளவுக்கு எனக்கு வெறி வருது. நீ ! எனக்கு மட்டும் தான் சொந்தம் ! என்ற உணர்வு வருது. நான் உன்னை காதலிக்குறேன்!" என்று லிங் கூறவும் அதிர்ச்சியாகிவிட்டாள் ரூபா.

அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரூபா நகர முற்பட அவளை பிடித்து நிறுத்திய லிங்.

“ உனக்கு தேவையான நேரம் எடுத்துக்கோ ரூபா. ஆனா என்னை பிடிக்குதுன்னு சொன்னா மட்டும் போதும் ! " என்று லிங் கூறிவிட்டுச் திரும்பிப் பார்க்காமல் செல்ல,  செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ரூபா.

ஈசனை தரிசித்துவிட்டு கோவிலைவிட்டு வெளியே வந்தனர் ரூபா, குழல், லிங் மற்றும் இனியன்.

“ அம்மா தேடுவாங்க ! நான் போறேன்டி ! “  என்று கூறிய ரூபா குழல் ஏதோ சொல்ல வர அவளை தடுத்தாள் .

"வீடு பக்கத்தில் தான் இருக்கு ! நானே போய்கிறேன் "! என்று கூறிவிட்டு யாரையும் திரும்பி பார்க்காமல்  ரூபா சென்றுவிட்டாள்.

ரூபா சென்றதை அடுத்து  மூவரும் வண்டியில் ஏறி அமர முற்பட அவர்கள்  முன் தோன்றினார் அடியார். அவர் யாரேன்று புரியாமல் மூவரும் பார்க்க

“ விரைந்து வாருங்கள் ! நம் தேடலுக்கான நேரம் தொடங்கிவிட்டது. நாளை பெளர்ணமி. பொழுது புலர்வதற்குள் நாம் அதை கைப்பற்றியாக வேண்டும் “ என்று அவர் கூற மூவரும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர் போல் அவரின்பின் சென்றனர் . அவர் சென்று நின்றது தீரனின் வீட்டில்.  அவரை யார் என்று தீரன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் தீரனின் அருகில் வந்து ஏதோ உச்சரிக்க நால்வரும் சட்டென்று மறைந்து ஒரு அருவியின் முன் சென்று நின்றனர்.

அருவியைப் பார்த்ததும் தீரனுக்கு  ஏதோ நினைவுகள் வந்து போக தீரன் அருவியை நோக்கி அடி எடுத்து  வைக்க ,  அடியார் அவனை தடுத்தார்.

“ அவசரம் கொள்ளாதே தீரா! உள்ளே செல்வதற்கு முன் ஒரு காரியம் செய்தாக  வேண்டும் !” என்று கூறியவர் தன் பையில் இருந்து  மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியை எடுத்து இனியனிடம் நீட்டினார்.

அதை பார்த்து அனைவரும் திகைத்து நிற்க ,

“ நேரம் குறைவாக உள்ளது ! விரைவாக இதை கட்டி குழலை சரிபாதியாக ஏற்றுக் கொள் இனியா ! ம்ம் சீக்கிரம்.."   என்று அடியார் கூற அவரின் வார்த்தையில் சக்தி பெற்று வேகமாக தாலியை குழல் கழுத்தில் கட்டினான் இனியன்.

இவர்கள் திருமணம் நடந்தேறியதும் வேகமாக அங்கு கரும்புகை சூழ்ந்தது. அதை கண்ட அடியார் தீரனை அவசரப்படுத்தினார்.

"தீரா ! நீ மந்திரவியூகத்தை கைப்பற்றி ஈசனின் திருவடியில் சேர் ! இதை வைத்துக் கொள் தீரா இது உன்னை காக்கும் !" என்று கூறியபடியே  தீரனின் கைகளில் ஒன்றை கொடுக்க அதை அவன் வாங்கியதும் அங்கு பள்ளம் உருவாகி அடியாரை உள்ளுக்குள் இழுத்தது. அடியார் பள்ளத்தில் விழ அவர் மீது மண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடியது.

அதை கண்ட தீரன் அவரை காக்க அருகில் விரைய வேகமாக சுழல் உருவாகி அவனை தாக்கியது.

தீரன் என்ன செய்வதென்று புரியாமல் சில நேரம் ஸ்தம்பித்து நின்றான். பின்பு தன்னை தயார் படுத்திக் கொண்டு அருவியின் அருகில் சென்றான். அவனை பின்பற்றி லிங், குழல் மற்றும் இனியனும் சென்றனர்.

அருவியின் அருகில் சென்ற தீரன் சற்று நேரம் கண்மூடி நின்று மந்திரங்களை ஜபித்துவிட்டு கண் திறந்ததும் அருவி பிரிந்து இவர்கள் செல்ல வழிவிட்டது. அதனுள் சென்றவர்கள் முன் நின்றது அந்த  மாளிகை. பனிக்கட்டுகளால் ஆன அந்த மாளிகை  கண்ணாடி போல் தோற்றமளித்தது . அந்த மாளிகையின் உள்ளே இவர்கள் நடந்து செல்ல தரையில் பனிக்கட்டியின் அடியில் தண்ணீர் சூழப்பட்டு அதில் மீன்கள் மிதந்து கொண்டிருந்தது,.

அந்த மாளிகையின் தரை இவர்களின் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் உடைந்து கொண்டே வந்தது. அதை கண்ட தீரன் இனியனிடமும், லிங்கிடமும் திரும்பினான்.

“ நண்பர்களே ! ஈசனின்  நாமம் போட்டப்பட்ட பொருள் எதாவது தென்படுகின்றதா என்று பார்த்துக் கொண்டே வாருங்கள் ! “-தீரன்

தீரன் சொன்னதும் மூவரும் அந்த பொருளை தேட ஆரம்பிக்க,  குழல் பின்னால் உடைந்து கொண்டு வரும் தரையையே பயத்துடன் பார்த்துக் கொண்டு வந்தாள்.

தேடிக் கொண்டே வந்தவர்கள்  கதவின் அருகில் வந்ததும் நின்றார்கள் .

“ நண்பர்களே ! சீக்கிரம் தேடுங்கள் ! தரை வேறு உடைந்து கொண்டே வருகிறது ! நாம் விரைவாக அந்த பொருளை கைப்பற்றியாக வேண்டும் ! இல்லையேல் கீழ் நோக்கி பாதாளம் செல்ல வேண்டும் !" – தீரன்

ஆனால் அவர்கள் எவ்வளவு தேடியும் அவர்கள் தேடும் பொருளும் கிட்டாமல் போக அதன் பின் அவர்கள் அடி எடுத்து வைத்தால் தரை உடைந்து தாங்கள் கீழ் நோக்கி செல்லும் அபாயம் ஏற்படும் என்று உணர்ந்து அனைவரும் அசையாமல் அப்படியே நின்றனர் .

அப்போது இனியன் தான் அதை கவனித்தான். மேலே தொங்கிக் கொண்டிருந்த பனிக்கட்டி கண்ணாடியாக ஜொலிக்க அதில் தீரன் உருவம் தெரிந்தது. அவன் நெற்றியில் ஏதோ ஒன்று மின்னிக் கொண்டிருப்பதை பார்த்த  இனியன்.

“ தீரா ! அதோ உன் உருவம் தெரியுது பார் ! அதை பார்த்து நில் “ என்று இனியன் கூற தீரனும்  அந்த கண்ணாடியை பார்த்து  திரும்பி நின்றான்.

தீரன் கண்ணாடியை  பார்த்ததும் அவன் நெற்றியில் தோன்றிய ஒளி மூன்று கோடுகளாக மாற அது கண்ணாடியில் பட்டு தெறித்து கதவில் விழுந்து கதவு திறந்தது.

கதவு  திறந்ததும்  உள்ளே சென்றவர்கள் அந்த இடத்தை பார்த்து மலைத்து நின்றனர்.

அந்த இடம் உடுக்கை அமைப்பை கொண்டிருக்க , அவர்கள் நின்றிருந்த இடம் விட்டு மற்ற இடங்கள் அனைத்தும் தணலாக எரிந்து கொண்டு இருந்தது. அதன் அணல் அவர்களை தாக்க வெப்பத்தை தாங்க முடியாத லிங்

“ நண்பா ! இதை எப்படி கடப்பது ! வேகமாக யோசிடா ! வெப்பத்தை தாங்க முடியவில்லை ! “ -  லிங்

என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்தபடி தீரன் தன் கழுத்தில் கை வைக்க  அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ருத்திராட்ச மாலை அவிழ்ந்து விழுந்தது. அது தரையில் பட அந்த இடம் நீராக மாறி வெப்பத்தை தணித்தது.

  எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்து அவர்கள் உள்ளே செல்ல பாதையை காட்டியது.

நெருப்பை  கடந்தவர்கள்  அடுத்த அடி எடுத்து வைக்க அவர்கள் முன் ஒருவன் தோன்றினான். அவன் அருகில் இவர்கள் செல்ல , செல்ல அவன் முகம் விகாரமாக மாறி பூதமாக மாறினான். அவன் தன் அகண்ட வாயை திறக்க காற்று பலமாக வீசத் தொடங்கியது. நால்வரும் காற்றில் பறக்க ஆரம்பிக்க ,  இனியனை அவன் வாய்க்குள் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தான். . இனியன் அவன்  வாய்க்குள் செல்வதைப் பார்த்த  தீரன் அந்த அசுரனின் கழுத்தை பிடித்துக் கொண்டான். இதை பார்த்து குழல் பயத்தில் கத்தினாள்.

“ குழல் அவன் கையில் தொங்கிக் கொண்டிருக்கும் சக்கரத்தை  கழற்று “ – தீரன்

“ அய்யோ ! அது பார்க்கவே பயமா இருக்கு ! நான் எப்படி அது அருகில் போய் அதை எடுக்க முடியும் என்னால் முடியாது ! “ – குழல்

“ சொன்னதை செய் ! இல்லை என்றால் இனியன் நமக்கு  கிடைக்க மாட்டான் ! – “ தீரன்

அந்த பூதம் தீரனை தன் கைகள் கொண்டு பிடிக்க முயல , இதை பார்த்துக் கொண்டிருந்த லிங் , தீரனுடன் சேர்ந்து அந்த பூதத்துடன் போராடினான்.

லிங்கும், தீரனும் அந்த பூதத்தோடு போராட இதை பார்த்த குழல் வேகமாக அதன் அருகில் சென்று லிங் பிடித்துக் கொண்டிருந்த கையில் இருந்த சக்கரத்தை  கழற்றினாள்.

குழல் அதை கழற்றியதும் அந்த பூதம் தன் வாயை திறக்க கீழே விழுந்தான் இனியன்.

பிரமாண்ட உருவமாக இருந்த அந்த பூதம் சிறியதாக மாறி ஒரு ஆண் உருவமாக மாறியது. அந்த ஆண் உருவம் தீரனை பார்த்து வணங்கியது.

"தாங்கள் கூறியபடியே இத்தனை நான் இதை பாதுகாத்து வந்து விட்டேன் எஜமானே ! என் வேலை முடிந்தது ! நான் வருகிறேன் "என்று அவன் கூறியபடி மறைந்தான்.

 குழல் கையில் இருந்த சக்கரம் சட்டென்று அவளிடம் இருந்து  பிரிந்து சென்று சுற்றி கொண்டே ஒளி வீசியது. அதை கண்ட தீரன் “ மந்திரவியூகமே என்னிடம் வருவாயாக !" என்று கூறியபடி    தீரன் தன் கைகளை நீட்ட  இடையில் கரும்புகை ஒன்று தோன்றி அதை கவர்ந்து சென்றது.

கரும்புகை சென்றதும் அந்த இடம் இருள் சூழ்ந்து கொண்டது.

தீரனும் , லிங், இனியன் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க  ஒரு குரல் அந்த இடத்தில் எதிரொலித்தது

“ தீரேந்திரரே! நீங்கள் வடித்து வைத்த வியூகத்தின் பயனாக போலியான “ மந்திரவியூகம் “ அவனிடம் சென்று விட்டது. இனி தாங்கள் உண்மையான மந்திரவியூகத்தை கைப்பற்றி விரைந்து ஈசனிடம் சேர்ப்பீர்களாக ! நேரம் வேறு கடந்து செல்கிறது “ என்று அந்த ஒளி பேச அது கூறியதை  அடுத்து நால்வரும் அந்த இடத்தையே சுற்றி வந்தனர் .

அந்த இடம் முழுவதும் சட்டென்று  இருள் சூழ்ந்து  கொள்ள , நிலவின் வெளிச்சத்தில் கசிந்து வந்த ஒளியானது  அந்த சிலையின் மேல் பட அந்த இடம் பிரகாசம் அடைந்தது.

வெளிச்சம் அடைந்ததும் அந்த இடத்தை பார்த்தனர். அங்கு  சிவனின் சிலை மட்டும் இருக்க ஏதோ தோன்ற அதன் அருகில் சென்றான் தீரன். தீரன் சிவனின் அருகில் செல்ல  முனைய  அப்போது கீழே இருந்த கல் தீரனின் காலை பதம் பார்த்தது..

தீரனின் காலில் லேசாக ரத்தம் கசியத் தொடங்க  தீரனின் இரத்தத் துளிகள் தரையில் பட்டு தரையில் இருந்து  சிவலிங்கம் தோன்றியது. அதன் மேல் சக்கரம் போன்ற அமைப்பு சுற்றிக் கொண்டிருக்க அதை பிடிக்க தீரன் முனைந்தான். அப்போது இனியன் அவனை தடுத்து நிறுத்தினான்.

" தீரா ! நில் ! அது நகல்காட்சி ! இதோ கீழே  பார்"!  என்று இனியன் கூறியதும் அனைவரும் லிங்கத்தின் அடியில் பார்த்தனர். அங்கு மந்திரவியூகம் சுற்றிக் கொண்டிருந்தது. 

அதை எடுக்க தீரன் கைகளை நீட்ட அது தீரனின் கைகளுக்கு அகப்படாமல் தள்ளி சென்று கொண்டே இருந்தது.

அப்போது கண்கள் மூடியபடியே   யோசித்தான் தீரன்

“ தீரா ! நீ வகுத்த வியூகத்தின் படி அது மணமான கன்னியவள் கரங்களில் சேரும் !” என்று உள்ளுக்குள் ஒரு  ஒலி சொல்ல கண்களை திறந்த தீரன் குழலிடம் திரும்பினான்.

குழல் உன் கையை மந்திரவியூகத்தை நோக்கி நீட்டு என்று தீரன் சொல்ல குழலும் அவ்வாறே செய்தாள். 

குழல் தன் கைகளை நீட்ட  அவள் கரங்களில் வந்து தவழ்ந்தது மந்திரவியூகம் .

இதை கண்ட லிங் தீரனின் காதை கடித்தான்.

“ பேசாமல் மேடத்தை கூட்டி வந்திருக்கலாம் தீரா ! நீயும்  கல்யாணம் பண்ண மாதிரியும் ஆச்சு ! சக்கரத்தையும்  எடுத்த மாதிரியும் ஆச்சு “ – என்று லிங் கேலி செய்ய  அதற்கு தீரன் பார்த்த பார்வையில்  லிங் வாயை மூடிக் கொண்டான்.

"இது எல்லாம் முன்னமே வகுக்கப்பட்ட ஒன்று ! எனக்கு பின்னால் அதாவது எனக்கு எதாவது ஆகிவிட்டாள் என்னவள் இதை காக்க இந்த வரையரை வகுக்கப்பட்டுள்ளது. அதுவும் இல்லாம இது சக்கரம் ஒன்றும் கிடையாது இதன் பெயர் மந்திரவியூகம்"  - தீரன்

"என்னடா ஆச்சு உனக்கு ! ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்ட ? அது என்னடா மந்திரவியூகம்" என்று லிங் தீரனை பார்த்துக் கேட்க குழல் கைகளில் இருந்ததை  லிங்கிடம் காட்டி விளக்கம் சொன்னான் தீரன்.

"ஆமாம் ! இந்த விவரம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும் ? என்னமோ நீயே இதை வச்ச மாதிரி கரெக்டா கண்டுபிடிக்கிற?"  – இனியன்

“ தெரியலைடா ! ஏதோ ஒரு குரல் எனக்குள் சொல்லிக்கிட்டே இருக்கு ! அதன்படி நான் செய்துகிட்டு இருக்கிறேன் இனியா  “ – தீரன்

இவர்கள் இங்கு பேச அவர்கள் நின்று இருந்த இடம் இருள் சூழத் தொடங்கியது. அதை கண்ட தீரன் வேகமாக அவர்களை அவசரப்படுத்தினான்.

"வாருங்களடா ! மந்திரவியூகம் அதன் இடத்தை அடையும் வேளை நெருங்கிவிட்டது ! நாம் உடனே போயாக வேண்டும்  ! "என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மந்திரவியூகத்தில் இருந்து ஒளி வீசியது. அதை தொடர்ந்து அது சுத்த தொடங்கியது .

**********************

கடோத்கஜன் தன் கையில் இருந்த மந்திரவியூகத்தை பார்த்து வெற்றி களிப்பில் சிரித்தான்.

"ஆகா ! நாம் சாதித்துவிட்டோம் !" – கடோத்கஜன்

"குருவே எனக்கு ஒரு சந்தேகம் நம்மிடம் தான் ஓலைசுவடி இருக்கின்றதே பின்பு ஏன் அவர்களை பின்பற்றி சென்றீர்கள் ?" – கலிங்கா

"மூடா ! 'மந்திரவியூகம்'  மந்திரம் தந்திரங்கள் மூலம் வியூகம் அமைக்கப்பட்டு அவரது வழித்தோன்றல்களால்  காக்கபடும் ஒன்று. நம்மால் அதை அவ்வளவு எளிதாக கைப்பற்ற  முடியாது ! வைத்தவன் எவனோ அவன்  தான் எடுக்க வேண்டும் ! அதான் அவர்களை பின்தொடர்ந்தேன்" என்று கூறிய கடோத்கஜன் மந்திரவியூகத்தை கையில் எடுத்துப் பார்க்க  அது ஒளி எழுப்பாமல் நின்றது.

வேகமாக ஓலைசுவடியை பார்த்து மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பித்தான் கடோத்கஜன்.   அது அப்போதும் எந்த  பிரதிபலனையும் காட்டாமல் நின்றது.

"நான் ஏமாந்து விட்டோமடா !" என்று கடோத்கஜன்  கத்த அவன் எதிரில் மணலினால் ஆன உருவமாக நின்ற அடியார் சிரித்தார் .

“ என்னவனை ஒரு காலும்  நீ ஜெயிக்க இயலாது “ என்று அடியார் கூற

கடோத்கஜன் அவர் எதிரில் வந்து கோபத்தில் நின்றான்.

“ அதையும் பார்க்கலாம்டா ! எல்லாத்திற்கும் ! இன்று முடிவு வரப் போகிறது ! “ என்று அவரிடம் கத்திவிட்டு  கடோத்கஜன் தீரனை நோக்கி விரைந்தான்.

மந்திரம் 44:

மந்திர வியூகத்தை எடுத்துக் கொண்டு அருவியில் இருந்து வெளியே வந்தனர் தீரன், லிங் குழல் மற்றும் இனியன் .

அவர்கள் வெளியே வர அவர்களை எதிர்கொண்டான்  கடோத்கஜன்.

தீரனிடம் இருந்து மந்திர வியூகத்தை பறிக்க கடோத்கஜன் முயல தீரன் அவனை தடுத்தான்.

தீரன் இங்கு கடோத்கஜனிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க தீரனை பின்பக்கம் இருந்து தாக்க முயன்றான் கலிங்கா. அவனை பிடித்து நிறுத்தினான் இனியன். இனியன் தடுத்ததும் கலிங்கா அவனை தாக்க முயல லிங் அவனை பின்னால்  இருந்து பிடித்தான். லிங் பிடித்துக் கொள்ள இனியன் இங்கு கலிங்காவை அடித்தான். சற்று நேரத்தில் இனியன் பிடித்துக் கொள்ள லிங் அவனை அடித்தான். இருவரும் மாறி மாறி அடிக்கவும் அடி தாங்காமல் சுருண்டு விழ்ந்தான் கலிங்கா.

தீரன் இங்கு கடோத்கஜனிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க குழல் பயத்தோடு நின்று அவர்கள் சண்டை இடுவதைப்  பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் தீரனை பிடித்து தள்ளிய கடோத்கஜன் மந்திரங்களை உச்சரிக்க கரும்புகை உருவாகியது. அதில்  மறைந்து கொண்டான்  கடோத்கஜன்.

பெளர்ணமி பொழுது நன்றாக புலர 'மந்திரவியூகம்' சுற்றத் தொடங்கியது.

கீழே விழுந்த தீரன் சமாளித்து எழுவதற்கும் 'மந்திரவியூகம்' ஒளி வீசவும் சரியாக இருந்தது

வேகமாக அதை பிடிக்க தீரன் முயல இடையில் கரும்புகை சூறாவளி காற்றாக  சுழன்று மாயவன் உருவம் எடுத்தான் கடோத்கஜன். 

தீரனும் , கடோத்கஜனும் ' மந்திரவியூகத்தை' பிடிக்க முயல அது சுற்றி கொண்டே மேல் நோக்கிச் சென்றது.  தீரன் வேகமாக மாயவன் முதுகில் ஏறி எக்கி மந்திரவியூகத்தை பிடித்தபடி  தரையில் வீழ்ந்தான். விழுந்தவனை நோக்கி  கடோத்கஜன் வந்து கொண்டிருக்க சூதாரித்து எழுந்த தீரன்

“ கடோத்கஜா ! மடிந்து போ ! இனி இவ்வுலகில் நீ ஜனிக்கக் கூடாது ! “என்று கூறியபடியே தீரன்  மந்திரவியூகத்தை அவனை நோக்கி சுழற்ற  அது சுழன்று அவன் தலையை தனியாக துண்டித்தது.

தலை தனியாக துடித்துக் கொண்டிருக்க அவன் உடல் மந்திரவியூகத்தின் ஒளியால் சாம்பலாகி மண்ணோடு மண்ணாகியது.  தலை காற்றோடு பறந்து  சென்று ஆற்றில் கலந்து  அதனுள் ஐக்கியமாகியது.

 “ மந்திரவியூகம்”  மட்டும் தனியாக சுற்றிக் கொண்டிருக்க அதை கையில் தாங்கிய தீரன் சிவ ஆலயம் நோக்கி விரைந்தான். சிவ ஆலயத்திற்குச் சென்றவன்  அதை சிவன் பாதத்தில் வைக்க அது சக்கரமாக சுழன்று அவர் கால்களில் காப்பாக மாறியது.

இருள் சூழ்ந்து இருந்த வானம் பிரகாசமாக மாறியது.

பிரகாசம் அந்த குகைக்குள் ஒளிர அடியாரை சூழ்ந்து இருந்த மண் விலகியது.

கட்டவிழ்க்கப்பட்ட அடியார் இதயம் எதிரில் வந்து நின்றார். 

“ மாயவா ! உன் கர்மவினை பயனாய் உருவம் இன்றி தவித்தாய் . இப்போது உன் வினை தீர்ந்தது. எம்பெருமான் அருளாள் மோட்சம் பெற்றாய் நீ !  மறுஜென்மம் எடுத்து நன்மைகள்  பல செய்து உன் பாவத்தை தீர்ப்பாயாக ! “என்று அடியார் மாயவனிடம் கூற

அதை ஏற்று இதயமும் "நன்றி அடியாரே! நீங்கள் கூறியபடியே செய்கிறேன் !" என்று கூறிவிட்டு இதயம் மறைந்து விண்ணை நோக்கிச்  சென்றது.

மந்திரவியூகத்தை வைத்துவிட்டு வெளியே வந்த தீரன் முன் அடியார் வந்து நின்றார்.

"எல்லாம் ! முடிந்துவிட்டது ! இனி உன் வாழ்க்கையை நீ உனக்கு இட்ட  விதிப்படி வாழ்வாயாக  !" என்று தீரனை  ஆசிர்வதித்துவிட்டு  கோவிலுக்குள் சென்றார் அடியார்.

அவரை பார்த்தபடியே தீரன் நிற்க அவனை நோக்கி வந்தனர் குழல், இனியன் மற்றும் லிங்.

அப்போது அவர்கள் நால்வர் முகத்திலும் காற்று மோத  நால்வரும் கண்மூடி கண்திறந்தனர்.

நடந்த விசயங்கள் நினைவின்றி நால்வரும் குழம்பி நிற்க அவர்களில் முதலில் சூதாரித்தது தீரன் தான்.

"நான் எப்படி இங்கே ?" – தீரன்

"கோவில்ல தான இருந்தோம் இங்க எப்படி ?" – லிங்

இப்படி ஒவ்வொருவரும் குழப்பத்தில் கேள்விகள் கேட்க , குழல் ஏதோ வித்தியாசமாக தோன்ற கழுத்தை பார்த்தவள் அதிர்ந்தாள்

“ எனக்கு எப்ப திருமணம் ஆச்சு ? யார் எனக்கு இதை கட்டியது ?” – குழல்

குழல் சொன்னதை அடுத்து மூவரும் குழலைப் பார்க்க அதிர்ந்தனர்

"இது எப்படி சாத்தியம் ?" – இனியன்

"என்ன நடக்குது இங்கே ?" – தீரன்

அப்போது லிங்கின் பின்னால் ஒலிவட்டம் தோன்றியது

“ யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் ! எல்லாம் விதிப்படிதான் நடந்துள்ளது ! இனியா உன்  சரிபாதியாக குழலை ஏற்றுக் கொண்டுவிட்டாய் ! இங்கு நடந்த அனைத்திற்கும் காரண காரியம் இருக்கிறது. அதற்கு பதில் தேடி அலையாமல் நடப்பதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள் “ என்று அந்த  ஒளிவட்டம்  பேசிவிட்டு  செல்ல அதை ஏற்று அமைதியாக நால்வரும் நடந்து வந்தனர்.

 லிங் தான் முதலில் ஆரம்பித்தான் .

"டேய் ! என்னடா நடக்குது இங்கே ?" – லிங்

"ம்ம்ம் எல்லாம் முடிச்சு சுபம் போடும் போது ஆரம்பிடா நீ ! ஒன்னும் நடக்கல வா சொல்றேன்" என்று லிங்கை அடக்கியபடி தீரன் நடந்து வந்து கொண்டிருக்க ரூபா இவர்களை நோக்கி ஓடி வந்தாள்.

"உங்களை எங்க எல்லாம்  தேடுறேன்! இங்க இருக்கீங்களா ?"  என்று  தீரனை பார்த்து மூச்சு வாங்க பேசிய ரூபா அதனை அடுத்து கூறிய செய்தியில் தீரன் கோபம் அடைந்து வீட்டை நோக்கி விரைந்தான்.


NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 134
 

sis ud super 🤩 🤩 waiting for nxt ud 😎 😎 


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 189
 

தீரன் வீட்டிற்கு விரைய அவனை பின்பற்றி லிங்கும், ரூபாவும் சென்றனர். அவர்களை பின்பற்றி குழலும் செல்ல முயல அவளை தடுத்து நிறுத்தினான் இனியன்.

"உன்கிட்ட பேசனும் குழல்"- இனியன்

"என்ன பேசனும்?" – குழல்

"நம்ம இரண்டு பேருக்கும் நடந்த திருமணம் பற்றி யாருக்கும்  சொல்ல வேண்டாம்" என்று கூறிய இனியன் அதை தொடர்ந்து ஏதோ சொல்ல வர குழல் நடுவில் பேசினாள்.

“ ஏன்! இந்த திருமணத்தை மறைச்சு! அய்யாவுக்கு வேற திருமணம் செய்யனும் ஆசையோ? அப்படி ஏதும் நடந்துச்சு உங்களை கொன்னுட்டு தான் மறு வேலை பார்ப்பேன் “ – குழல்

"வாய மூடுடி! எப்ப பாரு வெட்டுவேன்! குத்துவேன்னு? என் மேல் உனக்கு ரொம்ப நம்பிக்கைடி! இந்த திருமணம் எப்படி நடந்துச்சு? எங்க நடந்துச்சுனு நம்ம கிட்ட கேட்பாங்க இந்த கேள்விக்கெல்லாம் பதில் வச்சிருக்கியாடி  நீ? பேச வந்துட்டா? என்று இனியன் கேட்டதும் தான் தன் தவறை உணர்ந்தாள் குழல்.

தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க குழல் ஆரம்பிக்க

“ இனி எதாவது பேசின நான் கொன்றுவேன்டி! உன்னை உன் வீட்டில் விட்டுட்டு நான் போறேன்!அப்புறம் நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ  “ என்று கூறிய இனியன் கோபத்தோடு தன் ஜீப்பை நோக்கி செல்ல குழல் அவனை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் அவனுக்குப் பின் சென்றாள்

******************

வீட்டுக்குள் நுழைந்த தீரன் அங்கு அலங்கார பொம்மையாக வேறு ஒருவன் முன் கனி அமர்ந்து இருப்பதை கண்டு கொதித்துவிட்டான் தீரன்.

தீரன் வந்ததை பார்த்தும் கண்டுகொள்ளாமல் அமர்ந்து இருந்தாள் கனி.

அங்கு கனி எதிரில் அமர்ந்து அவளை  ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். 

அதை கண்ட  தீரன் வேகமாக உள்ளே வர

“வாப்பா! தீரா! இவன் தான் நம் கனிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை. பேர் கமல் “ என்று குமுதா அவனை அறிமுகப்படுத்த தீரனை பார்த்து சிநேகமாக சிரித்தான் கமல்.

தீரன் அவனை கொலைவெறியோடு  பார்த்துக் கொண்டிருக்க,  இங்கு நடக்கும் விசயங்களை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் குணசேகரன் மற்றும் காந்தர்வன்

“ பெண் ரொம்ப அமைதியா இருக்கு! எனக்கு பிடிச்சிருக்குப் பா ! “ – என்று கமல்  தன் தந்தையிடம் கூற

லிங்கேஷ் தன் மனதில் நினைத்துக் கொண்டான். 'இன்னும் சற்று நேரத்தில் தெரியும்டி யார் அமைதினு? கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை'

தீரன் கனி அருகில் சென்றான்.

"என்னடி இதெல்லாம்?" – தீரன்

"மைண்ட் யுவர்  வேர்ட்ஸ்! டி போட்டு கூப்பிட நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்லை!" – கனி

"அப்படியா மேடம்! சரி சொல்லுங்க இங்க என்ன நடக்குது?" – தீரன்

"பார்த்தா தெரியல பெண் பார்க்கும் படலம் போயிட்டு இருக்கு?" – கனி

"அப்ப நமக்குள்ள இருக்கிறது என்னடி?" – தீரன்

"நத்திங்! நீங்க  என் அப்பா ப்ரண்ட் பையன் அவ்வளவுதான்"  – கனி

"ஓஹோ! அவ்வளவு தானா?" – தீரன்

"ஆமா! வேறு என்ன இருக்கு நம்ம இரண்டு பேருக்குள்ள?" – கனி

இவர்கள் பேச்சில் புகுந்தான் கமல் "ஹலோ? யார் நீ? அவங்க கூட உனக்கு என்ன பேசு வேண்டிகிடக்கு? அவ தான் சொல்றால எந்த ரிலேஷனும் இல்லைனு! அப்புறம் எதற்கு அவங்கள டிஸ்டர்ப் பண்றீங்க "

'செத்தான்டா கமலு ! இப்ப  தரமான சம்பவம் ஒன்னு  இங்கு நடக்கப் போகுது' என்று லிங்  மனசுக்குள் சொல்லிக் கொண்டே  1, 2 , 3  என்று எண்ண ஆரம்பிக்க

சற்று நேரத்தில் தரையில் கிடந்தான் கமல். தன் கைகளை பிடித்துக் கொண்டே அவன் எழுந்து கொள்ள முயல அவன் எதிரில் கைகளை முறுக்கியபடியே நின்றான் தீரன்.

“ உனக்கு இன்னும் 5 நிமிஷம் தான் டைம்! இந்த இடத்தை காலி பண்ற இல்லை “ என்று தீரன் தன் கைகளை காட்ட அதன்பின் நிற்க அவன் என்ன மடையனா? அந்த இடம் யாருமின்றி வெறுமையாக இருந்தது.

அவர்கள் சென்றதும் கனியிடம் திரும்பினான் தீரன்.

"தான் அவன் போயிட்டான்ல போய் உன் கிழிஞ்ச ஜீன்ஸ்அ போட்டுட்டு வா போ! நீ பண்ணிய விசயத்தில் டென்சன் தலைக்கு ஏறி தலை வலிக்குது!  அதனால நீ போய் மாமாவுக்கு காபி எடுத்துட்டு வா!" -  தீரன்

"நீ சொன்னா செய்யனுமா? முடியாது போடா! ஆமா என்ன காபிலா போட்டு வரச்  சொல்ற? என்ன மாமான்ற? உரிமையெல்லாம்  பலமா இருக்கு? போ போய் உங்கம்மா சொன்னவள கட்டிக்க போ! பேச வந்துட்டான்" – கனி

"முடியாதுடி! நீ இருக்கும் போது வேறவ எனக்கு எதுக்கு? அது ஏதோ அம்மாக்காக சொன்னது! அத போய் பெரிசா எடுத்துக்கிட்டு..." – தீரன்

"டேய் தீரா! நீ அன்னைக்கு சொன்னதுலாம் பொய்யாடா? அன்னைக்கு பேசுனதுக்கு  அப்படியே இப்ப தலைகீழா பேசுறியேடா நீ" – மீனாட்சி வருத்தப்பட

“ அம்மா! இவ்வளவு கலரா ஒரு பிகர் கிடைக்குமா? பாருமா அவ நிறத்தை. இவ்வளவு அழகான பொண்ணை விட சொல்றீயா? “ – தீரன்

"அவளுக்கு சமைக்க தெரியாதுடா" – மீனாட்சி

"அதான் நீ நல்லா சமைப்பியேமா அப்புறம் என்ன? அவ செய்யலேனா என்ன நீ செஞ்சுட்டு போ! இல்லைனா நான் செஞ்சுட்டு போறேன்" – தீரன்

"உன் தலையெழுத்த நீயே எழுதாதடா ! அவ மேல இப்ப நீ மயக்கமா இருக்க! கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆன பிறகு உனக்கு அவ மேல இருந்த  மயக்கம் தெளியும்! அப்ப  என்கிட்ட வந்து நான் மோசம் போயிட்டேன்னு அழு! அப்ப வச்சுக்குறேன்டா உன்னை.." என்று மீனாட்சி கூற, அதை கேட்டு அங்கிருந்த அனைவரும்  சிரித்தனர். அவர்கள் சிரித்ததும் தீரன் மீனாட்சியிடம் கோபமாக திரும்பினான்.

"அம்மா! ஏன் இப்டி என்னை  டேமேஜ் பண்ணுறீங்க?"  – தீரன்

"அட போடா"! என்று அவனை கண்டுகொள்ளாமல்  உள்ளே சென்றுவிட்டார் மீனாட்சி

அவர் சென்றதும் தீரன் கனியிடம் திரும்பினான்.

"இப்ப என்ன சொல்ற?" – தீரன்

"முடியாது! உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது." என்று கனி முறுக்கிக் கொள்ள , ரூபா நடுவில் பேசினாள்.

"அப்புறம் ஏன் கனி?  தீராவ வேகமாக கூட்டிட்டு வா! பெண் பார்க்கும் படலத்தை நிறுத்தனும்னு  என்று சொல்லி என்னை அனுப்பி வச்சீங்க"   என்று ரூபா கேட்க , கனி மாட்டிக் கொண்டு  முழித்தாள்.

ரூபா சொன்னதை அடுத்து தீரன் கோபமாக கனியிடம் திரும்பினான்.

கோபத்தில் வேகமாக அருகில் இருந்த ரூமிற்கு கனியை அழைத்துச் சென்று தாள் போட்டான் தீரன்.

அதை கண்ட ரூபா பதறினாள்

"அய்யோ! கனியை கோபமா கூட்டிட்டு போய் தீரா அண்ணா கதவ சாத்துறார்! பார்த்துட்டு பேசாமல் இருக்கீங்க? போய் காப்பாத்துங்க" என்று ரூபா லிங்கிடம் சொல்ல

"காதலர்கள் ஊடலை அவங்களே சரி செஞ்சுக்குவாங்க! அதுல நம்ம போய் தலையிடக்கூடாது! அதை விடு நம்ம விசயத்துற்கு வா! நாம எப்ப ஊடல் கொண்டு உன்னை நான் சரி செய்ய" என்று லிங் ஏக்கமாக கேட்க ரூபா புரியாமல் அவனை பார்த்தாள்.

 உனக்கு கடைசி வரை வனவாசம் தான்டா என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் லிங்.

“ ம்ம்ம் கொஞ்ச நேரத்தில் என்னை தவிக்கவச்சுட்டடி. உன்னை என்ன பண்ணலாம்? நீ செய்த தப்புக்கு தண்டனை கொடுத்து தான் ஆகனும் “ என்று சொல்லியபடி தீரன் கனியை அருகில் இழுத்து தண்டனை கொடுக்க அவன் கொடுத்த தண்டனையில் கனி முகம் சிவந்தது.

******************************

இனியன்  வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க தீரனும் அவனின் குடும்பமும் இனியன் வீட்டினுள் நுழைந்தது.

இனியன் தாய் குமுதா அவர்களை வரவேற்று அமர வைத்து உபசரிக்க ,  இனியனும் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்தான்.

காந்தர்வன் நேரடியாக விசயத்திற்கு வந்தார்.

 குமுதாவிடம் திரும்பியவர் “ என் பொண்ணு குழலை உங்க பையனுக்கு கட்டி வைக்க சம்மதமா மா? “என்று அவர் கேட்க

குமுதா இனியனை பார்த்து சிரித்துக் கொண்டே "என் பையனுக்கு குழலை கட்டிக்க கசக்குமா? என்ன? எங்களுக்கு சம்மதம்" என்று அவர் கூறியதும்  நிச்சய தேதி குறிக்கப்பட்டது.

நிச்சயம் நடந்தேறிய போதும் சரி! அதற்கு பின்பும் சரி இனியன் குழலிடம் பேசாமல் இருந்து தன் கோபத்தை காண்பித்தான். இனியனின் கோபத்தால் வருத்தமாக இருந்த குழல் திருமணம் முடிந்தால் அவனை சமாதனப்படுத்திவிடலாம் என்று நினைத்து திருமண நாளுக்காக காத்திருந்தாள்.

இதோ திருமண நாளும் வந்துவிட்டது.

நீல நீற வண்ணங்களில் திரைசீலைகள்,  பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை,  இதய வடிவிலானஅலங்காரத்தில் மணமக்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு, அந்த இதய வடிவில் ஒளி பட்டு மின்னியது எழுத்துக்கள்.  அந்த திருமண மண்டபமே பிரமாண்டமாக காட்சி அளித்தது.

 கனி ஆகாய நிறத்தில் பட்டுப்புடவையிலும் , குழல் பச்சை நிற பட்டுப்புடவையிலும்  நகைகள் அணிந்து  அழகாக ஜொலித்தார்கள்.

இனியனும் , தீரனும் பட்டு வேட்டி பட்டு சட்டையில் கம்பீரம் குறையாமல் நின்றனர்.

நாயகர்கள்  தன் இணையை ஆவலோடு  எதிர்நோக்கி காத்திருக்க  தம் தம் துணைகளின் அருகில்  வந்து அமர்ந்தனர் நாயகிகள்.

மேளம், தாளம் முழங்க மங்கள நாணை பூட்டி தம் தம்  நாயகர்களை  கைப்பற்றினர் நாயகிகள்.

அறுசுவை விருந்து கம கமக்க சுற்றம் சூழ்ந்து ஆசிர்வதிக்க திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. 

குழல் இனியனை ஆசையாக பார்க்க இனியன் அவள் பக்கம் திரும்பவேயில்லை. அதை பார்த்த குழல் தன்  மனசுக்குள் பொருமினாள்.

“ ரொம்பத்தான் பண்றார்! அன்னைக்கு ஏதோ தெரியாம சொல்லிட்டேன் அதுக்கு இவ்ளோ நாள்  மூஞ்ச தூக்கி வச்சிருக்கிறத பாரு ! உர்ராங்கொட்டான்! இருங்க நைட் உங்களை வச்சிக்கிறேன்!’’ என்று குழல் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

இரவு ரம்மியமாக இருக்க தீரன் கனியை பார்க்க  ஆசையோடு காத்துக் கொண்டிருந்தான். அப்போது கனி  உள்ளே நுழைய அவளைப் பார்த்தவனுக்கு சொத்தென்றாகிவிட்டது.

இரவு நேர நைட்  டிரஸில் சாதாரணமாக நடந்து வந்தாள்  கனி.

“ என்னடி டிரஸ் இது? ஒரு புடவை கட்டி தலைகுனிஞ்சு வருவேன்னு எதிர்பார்த்தா இப்படி நைட் டிரஸ்ல வந்து நிக்கிற?" – தீரன்

“ சே! பட்டிக்காடு! நீ இன்னும் பழைமைவாதியா இருக்கியேடா? இப்ப டிரண்ட்க்கு கொஞ்சம்  வா?" என்று கனி கடுப்புடன் கூற

“ நீ என்ன வேணாலும் சொல்லுடி? எத்தனை டிரஸ் வந்தாலும் புடவைக்கு நிகர் ஆகாதுடி?  புடவை உடுத்தினா ராங்கி கூட வெட்கப்பட்டு குனிஞ்ச தலைநிமிராமல் நடப்பாடி? அப்படி ஸ்பெசல் இருக்குடி அந்த உடைக்கு! அதுமட்டுமல்ல உனக்கு ஒன்னு தெரியுமா உலகத்திலேயே செக்ஸியான உடையான எது தெரியுமா?  புடவைதான்டி! அத முத தெரிஞ்சுக்க! பெரிசா பேச வந்துட்டா!" – தீரன்

தீரன் சொன்னதை அடுத்து அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தவள்

"ஏன்டா அப்படிச் சொல்ற?" – கனி

"பொண்ணுங்களோட அங்க அசைவுகளை! அவங்க அழக எடுத்து காட்டுறதே புடவைதான்டி" என்று தீரன் பேசிக் கொண்டே போக

கனி இடையில் பேசினாள்

"ஓகே! இப்ப என்னதான்டா என்ன பண்ணச் சொல்ற?" – கனி

கனி கேட்டதை அடுத்து தீரன் அவள் கண்களைப் பார்த்தபடியே பேசத் தொடங்கினான்.

"நீ பட்டுப்புடவை கட்டி தலைநிறைய பூ வச்சுட்டு வளையல் சத்தம் இசைக்க அப்படியே வெக்கப்பட்டு என் ரூமிற்குள் நீ நடந்து  வரனும்" – தீரன்

"ம்ம்ம் அப்புறம் ?" – கனி

"பழங்கள் வாசனை, ஊதுபத்தி வாசனை கலந்துவர ரூமில் மெழுகுவர்த்தி ஒளி மட்டும் தெரியணும்! அதில் நீ தேவதையா ஜொலிக்க அதை பார்த்து நான் ரசிச்சுக்கிட்டே உன் பக்கத்தில் வரணும்" என்று தீரன் கூறியபடியே அவளை பார்வையால் தீண்ட

வேகமாக அவன் கண்களை துணி கொண்டு மூடினாள் கனி.

"ஏய்! என்னடி பண்ற?" என்று தீரன் கேட்க

அவனை அழைத்துக் கொண்டு சென்று ஒரு இடத்தில் நிறுத்தி அவன் கண்களை திறந்தாள் கனி.கண்களை திறந்த தீரன் அந்த இடத்தை பார்த்து இமைக்க மறந்தான்.

அவன் வருணித்தற்கு மேலாக அந்த இடம் ரம்மியமாக இருந்தது.

மெழுவர்த்தியின் மத்தியில்  நின்று , மல்லிகை பூக்கள் மனத்தை நிரப்பி பார்வையை தீரன்  சுழலவிட கனி அங்கு இல்லை.

அவன் தேடல் ஒரு இடத்தில் ஸ்தம்பித்து நின்றது.

அங்கு கனி புடவை அணிந்து நின்றிருந்தாள்.  அவள் அருகில் சென்ற தீரன் அவளை பார்வையால் விழுங்க பெண்ணவளை வெக்கம் ஆட்சி செய்தது. அவள் வெட்கத்தை பார்த்தவன்

“ பார்டா! சண்டிராணி வெட்கம்லாம் பட்றா ! உன் வெக்கம் என்னை கிறங்கடிக்குதுடி !” என்று கூறியபடியே அவளை தூக்கிக் கொண்டு கட்டிலின்  அருகில் சென்றான் தீரன்.  அவளை கட்டிலில் கிடத்திவிட்டு  கனியை நோக்கி  குனிந்த தீரன் சட்டென்று நிமிர்ந்தான்.

 

“ ரைட்டர்ஜீ கொஞ்சம் இடத்தை காலி பண்றீங்களா?" – தீரன்

'அட கொக்கா மக்கா கண்டு பிடிச்சிட்டுனானே!

டேய் ஒரு சின்னபிட்டு மட்டும் எழுதிட்டு போயிறேன்டா' 

"அதெல்லாம் வேண்டாம் இதுவரை வருணித்ததே போதும்! கிளம்பு நீ!" என்று தீரன் வெளியில் தள்ளி கதவை சாற்ற

"டேய்! டேய் சாத்திட்டா  போற? போடா! நீ இல்லைனா என்ன? எனக்கு பிட்டு கிடைக்காதா?  என் காதல் மன்னன்கிட்ட போய் சம்பவத்தை எழுதிக்குறேன்! சரிதான் போடா! "

***************

இனியனது அறை :

இனியன் அருகில் சென்று நின்ற  குழல் அவனை பாவமாக பார்க்க

“ இந்த பாவ முகத்தை காண்பிச்சு என்னை கரெக்ட் பண்ண நினைக்காதடி! போ! அந்த பக்கம்! “ என்று இனியன் கத்த

"இப்ப என்ன சொல்லிட்டேனு இப்படி கோபமா கத்துறீங்க! நான் இங்கதான் உட்காருவேன்! இப்படி தான் பக்கத்தில் உட்காருவேன்! இப்படிதான் பக்கத்தில்  படுப்பேன்! இப்படிதான்" என்று அவன் அருகில் குழல் குனிய

"என்னை காப்பாத்துங்க! என் இஷ்டம் இல்லாம எல்லாம் நடக்குது" என்று இனியன் கத்தியதும் குழல் கொதித்துவிட்டாள்

"யோவ்! உன்னை!என்னடா ஓவரா பண்ற!"  என்று குழல் அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.  அவளின் அடிகளை வாங்கிக் கொண்ட இனியன் அந்த அடிக்கு திருப்பி பதில் கொடுத்தான்.. அவன் அடியில் குழல் மயங்கி கிறங்கினாள்

ஆசையாக குழலிடம் திரும்பிய இனியன் சற்று நிதானித்து திரும்பினான். 

 

"ரைட்டர் ஜீ! கதவுல இருந்து காத எடுங்க!" – இனியன்

"அந்த சம்பவம் மட்டும் எழுதிகிறேன்டா"

"இப்ப மரியாதையா இடத்தை காலி பண்ற நீ"  - இனியன்

"அப்பப்பா என்ன கத்து கத்துறான்  இவன்கிட்ட ஒன்னும் எழுதமுடியாது போலயே! அடுத்து நம்ம லிங் மட்டும் தான் பாக்கி அவன் கிட்ட போக வேண்டியது தான் வேற வழியில்லை"

**************

லிங் அங்கு ரூபாவை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

"அய்யோ! இந்த பய பேசிகிட்டுல  இருக்கு! இவன்  எப்ப அவள சம்மதிக்க வச்சு! எப்ப கல்யாணம் முடிச்சு!  நான் எப்ப பிட்டு எழுதி ....

ம்ம்ம்ம்ம்"----- இவன் தேற மாட்டான்.

 

அதனால் பிட்டு லா எழுதமுடியாது வாசகர்களே! நீங்களா உங்கள் கற்பனையில் சம்பவம் நடத்திக் கோங்க நம்ம நாயகர்களுக்கும் நாயகிக்கும்....

 

அப்பாடா ஒரு வழியா சிவன் பேரை சொல்லி ஒரு கதைய ஓட்டிட்டேன்.

என்னோடு பயணித்ததற்கு நன்றிகள் வாசகர்களே! அடுத்து வேற ஒரு கதைகளத்தோட சந்திப்போம் மக்களே!

ஓம் நமச்சிவாய!


NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 134
 

nice story sis 😍 😍 😍 😍 


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 189
 

Thank u ma


 


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 189
 

@velavaa thank u ma 😍😍😍


ReplyQuote
Page 5 / 5
Share: