Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

மர்மங்கள்  

Page 3 / 4
  RSS

NIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
20/08/2020 1:57 pm  

Nice epi sis 😍 😍 waiting for ur nxt ud sis 🤗 🤗 


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 10 months ago
Posts: 180
24/08/2020 5:55 am  

பாகம் 2:

சிவாவின் தாய் அழுததை தொடர்ந்து சிரு கண்ஜாடை செய்ய  அதை கவனித்த வேதா அவர் அருகில் சென்றாள்.

“அம்மா! அழாதீங்கம்மா! அழுவதால் உங்க பையன் ஒன்றும்  திரும்பி வரப்போறதில்லை! அதனால் கொஞ்சம் உங்களை தேத்திக்கோங்கமா! “ என்று கூறியபடியே வேதா அவர்களை  சமாதானப்படுத்திக் கொண்டிருக்க 

இங்கு சிருஷ்டன் தடவியல் நிபுணர்களை விசாரித்துக் கொண்டிருந்தான்.

"எதாவது ஆயுதம் கிடைச்சதா?" – சிருஷ்டன்

"இல்லை சார்! சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் வரை தேடி பார்த்தாச்சு சார்! ஏதும் ஆயுதம் கிடைக்கவில்லை!" – நிபுணர்

"எதனால் தலை வெட்டப்பட்டிருக்கும்னு உங்களால் ஏதும் கெஸ் பண்ண முடியுதா?" – சிருஷ்டன்

"வெட்டப்பட்ட விதம், ஆழம் எல்லாம் பார்த்தா கூர்மையான வாளால் வெட்டப்பட்டிருக்கலாம்னு  தோணுது  சார்" – நிபுணர்

"வாட்! வாளா? என்ன சொல்றீங்க? அது எப்படி முடியும்? எந்த யுகத்தில் இருக்கீங்க? வாள் உபயோகம் எல்லாம் மன்னர், ஜமீன் பரம்பரையோட முடிஞ்சிருச்சே?" – சிருஷ்டன்.

"இல்லை சார்! வாளாலால் தான் வெட்டப்பட்டிருக்கு. வெட்டப்பட்ட விதத்தைப் பார்த்தா அந்த வாள் பல வருடம் பழைமையானது மாதிரி தான் சார் இருக்கு" என்று அந்த நிபுணர் சொன்னதை அடுத்து சிருஷ்டன் யோசனையில் ஆழ்ந்தான்.

இங்கு வேதா சிவாவின் அம்மாவை சாந்தப்படுத்திவிட்டு மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

“அம்மா! சிவாவ யார் கொன்றிருப்பாங்க? உங்களுக்கு யார் மேலாயாவது சந்தேகம் இருக்கா?“ – அத்வேதா

வேதா அப்படி கேட்டதும் அவர் அழுகை நின்று  முகத்தில் கலவரம் தெரிந்தது.

அதை கவனித்த வேதா "அம்மா! எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுங்க! அப்பத்தான் நாங்க கொலையாளிய கண்டுபிடிக்க முடியும்" என்று கூறவும் அந்த பெண்மணி ஒரு முடிவோடு பேசத் தொடங்கினார்.

“அம்மா! இந்த இடத்தில் குடியிருக்குறவங்க இரவு வேளையில் வெளியில் வரவே மாட்டோம் மா!“ – சிவாவின்  தாய்.

"ஏன்?" – அத்வேதா.

"பயம் தான் மா! அந்த நேரத்தில் தான் அவங்க இங்க உலாத்திகிட்டு இருப்பாங்க!" - சிவாவின் தாய்.

"அவங்கனா? யாரு?  யாரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கீங்கமா?" – அத்வேதா.

"நான் மரியாவை பத்தி சொல்லிட்டு இருக்கேன்மா?" – சிவாவின்  தாய்.

"மரியாவா? யார் அவங்க? கொஞ்சம் அவங்களை பத்தி விரிவா சொல்ல முடியுமா?"  – அத்வேதா.

"சொல்றேன் மா! மரியா  இந்த இடத்தில் தான் வாழ்ந்து  இறந்ததா  எல்லாரும் சொல்லிக்கிறாங்க?  அவ கல்யாணம் ஆகுறதுக்குள்ள அவளை யாரோ கொன்னதாகவும், அதனால் அவ ஆத்மா சாந்தி அடையாம  நைட் இங்க சுத்திட்டு இருக்கிறதாகவும் சொல்றாங்கமா. அவ கல்யாண ஆசை நிறைவேறாம இறந்து போனதால, இந்த இடத்திற்கு வர கல்யாணம் ஆகாத ஆண்களை கொன்னு தன் வன்மத்தை அவ நிறைவேற்றிக்கிறதா எல்லாரும் பேசிக்கிறாங்க... அதுவுமில்லாம இதுவரை அவளாள செத்து போன  ஆண்கள் எல்லாம் இரவு நேரத்தில் தலையில்லாத முண்டங்களா அலையுறாங்கனு சொல்லிக்கிறாங்க... பார்த்தவங்க இருக்காங்க" - சிவா தாய்.

"ஓ! அப்படியா? ஆனால் இவ்வளவு  சொல்ற நீங்க  சிவாவ  ஏன் இந்நேரம் வெளியில் அனுப்பினீங்க?" – அத்வேதா

"என் மக பக்கத்து ஊரில் இருக்காமா  அவளுக்கு உடம்பு சரியில்லைனு இவனை போய் பார்த்துட்டு வரச் சொல்லி கையில் காசு குடுத்து காலையிலேயே அனுப்பி விட்டேன்... இருட்டுறதுக்குள்ள வர சொல்லி! இந்த பாவிபய போய் அந்த காசுல தண்ணியடிச்சு இப்படி அவன் சாவ அவனே தேடிக்கிட்டான்மா!.." என்று கூறி அவர் அழுக வேதா அவரை தேற்றிவிட்டு சிருஷ்டனை நோக்கிச் சென்றாள்.

சிருஷ்டன் வேதா சொன்னதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பதை எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அத்வேதா

"இட்ஸ் நாட் ஜோக் சார்! அது உண்மையாகூட இருக்கலாம்!" – அத்வேதா

வேதா அப்படி சொன்னதும் தன் சிரிப்பை நிறுத்திய சிரு "ஒகே ஜோக்ஸ் அபார்ட்! இந்த காலத்தில் போய் இத போய் நம்பிக்கிட்டு இருக்க ஆவியாம்? பூதமாம்? சில்லி".

அவன் சொல்லியதை அடுத்து அத்வேதா அவன் அருகில் தன் லாப்டாப்பை திறந்து அதை காட்டினாள்.

"சார்! இங்க பாருங்க மரியான்ற பெயரில் ஒருத்தவங்க இருந்துருக்காங்க!" என்று கூறிய வேதா ஒரு புகைபடத்தை காட்டினாள்.

"சார்!  இவங்க தான் மரியா. இவங்க ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்த மேகன் என்பவரை காதலிச்சிருக்காங்க. வீட்டில் வேலை பார்த்த மரியா மேல ஆசை கொண்ட மேகன் யாருக்கும் தெரியாமல் அவங்களை திருமணம் செய்ய நினைச்சிருக்கார். அதை கேள்விபட்ட நவாப்  மேகனின் தந்தை,  மேகனை மரியா முன்னாடியே கொன்னுட்டு மரியாவையும் கொன்னு இருவரது உடலயும் ஊர் ஆட்கள் முன்னாடி எரிச்சிருக்கார். சில வருஷத்திற்கு முன்னாடி இப்ப கொலை நடந்துகிட்டு இருக்கிற அந்த இடத்தில் தான் இது எல்லாம் நடந்து இருக்கு. தன் காதல் மடிந்த இடத்தில் அவ அரூபமா ,ஆத்மா சாந்தியடையாமல்  இன்னும் வாழ்றதா சொல்லுறாங்க சார் அதுக்கான ஆதாரம் தான் இந்த கொலைகள். அதுமட்டுமில்லை சார் அவ திருமணம்  நிறைவேறாததால் அந்த இடத்தில் குடிவரும் திருமணமாகாத ஆண்களை மட்டும் தான் அவ தன் வெறிக்கு பலியாக்கிட்டு  இருக்கா! திருமணம் ஆனவர்களுக்கு எதுவும் ஆகுறதில்லை. இன்னோர் முக்கியமான விசயம் இங்க இறந்து போனவங்க இந்த  வாளால் தான் வெட்டப்படுறாங்க சார்! இதோ இந்த புகைபடத்தை பாருங்க"! என்று ஒரு வாளை காட்டினாள் அத்வேதா.

சற்று நேரம் அவள் சொன்னதை யோசித்து பார்த்தான்  சிருஷ்டன். 

"ம்ம்ம்ம் நாட் பேட்! கதை நல்லா இருக்கு அத்வேதா மேம்! இப்ப நீங்க சொன்ன மாதிரி நான் ஒரு கதை சொல்லவா ! அந்த இடத்தில் ஏதோ தப்பு பண்றாங்க! அதை மறைக்க இப்படி ஆவிகள் இருக்கிறதா கதைகட்டி விட்ருக்கானுங்க! மரியாவாம்! அவ வந்து கொலை பண்றாலாம். இதை எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு" – சிருஷ்டன்

"சார்! நான் சொல்றத நம்புங்க! அப்படி இந்த கதை உண்மையா இருக்கும் பட்சத்தில் அடுத்த உயிர் போகாமல் காப்பாத்த நாம் எதாவது செய்யனும் சார்? மரியாவை  கன்ட்ரோல் பண்ண நம்ம வழி யோசிக்கனும் சார்!" -  அத்வேதா

"ஆமா! வழி யோசிக்கனும் தான். மரியாவை  கட்டுப்படுத்த இல்லை. அந்த இடத்தில் என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்க வழி கண்டுபிடிக்கணும். அதற்கு கண்டிப்பா அந்த இடத்திற்கு போயாகணும்"  என்று சிருஷ்டன் சொல்ல வேதாவும் அதற்கு சம்மதித்தாள்.

**********

சிருஷ்டனும் அத்வேதாவும் சிவா இறந்த இடத்தில்  நின்று பார்த்துக் கொண்டிருக்க யாரும் தென்படவில்லை .

பொறுமையிழந்த சிரு  ஒரு கட்டத்தில் ஜீப்பின்  மேல் ஏறி அமர்ந்து கொண்டான்'

"யாரும் வர மாதிரி இல்லை? இனி மேல்  வரப்போறாதாகவும்  தெரியல. பேசாமல் வீட்டில் நிம்மதியா ஒரு தூக்கத்தை போட்டிருக்கலாம்! உன் பேச்சை கேட்டு வந்தேன் பாரு! என்னைச் சொல்லனும்" என்று சிருஷ்டன் கடுப்புடன் சொல்ல  அத்வேதா திரும்பிப் பார்த்து அவனை முறைத்துவிட்டு சற்று தூரம்  நடந்து சென்றாள்.

அப்போது மோதிரம் அவள் கண்களுக்குத் தெரிந்தது, அதை பார்த்தவள் அதை எடுத்து பார்த்தபடியே  திரும்ப எதிரில் நின்றாள் அவள். அவளை பார்த்ததும் "மரியா!" என்று வேதா  சொன்னது தான் தாமதம் வேதா அருகில் வந்த அந்த உருவம் மோதிரத்தை அவள் கைகளில்  இருந்து பறித்தது .

"இது என் மேகனுக்கு மட்டும் சொந்தம்! உன்கிட்ட தரமாட்டேன்! போ இங்க இருந்து!"  என்று அவள் கூற வேதா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அந்த உருவம் மாறி கண்களில் சிவப்போடு கொடூரமான முக அமைப்பை பெற்று  எரிந்த நிலையில்  நின்றாள் மரியா.

"போ!னு சொல்றேன்ல" என்று அந்த உருவம்  கத்த 'சிரு' என்று கத்தியபடியே  வேகமாக ஓடிவந்தாள் அத்வேதா.

அவள் பயத்தில் அலறியதை அடுத்து அவள் இருக்கும் இடம் நோக்கி வந்தான் சிருஷ்டன். 

"என்னாச்சு! சுண்டெலி! ஏன் இப்படி அலற?" – சிருஷ்டன்.

"அங்க மரியா  நிக்கிறா சிரு" என்று அத்வேதா பயத்தோடு தன் எதிர்திசையை காட்ட அதை தொடர்ந்து சிருஷ்டனும் பார்த்தான். அந்த இடம் யாருமின்றி வெறுமையாக காட்சி அளித்தது.


NIVETHA liked
ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 10 months ago
Posts: 180
26/08/2020 3:45 am  

பாகம் 3:

அடுத்த நாள் சிருஷ்டனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள் அத்வேதா.

"நம்புங்க சார்! நான் மரியாவ பார்த்தேன்! மரியாவ பத்தி நாம் படிச்ச குறிப்புகள் அனைத்தும் உண்மைதான் சார்! நேற்று நான் அவளை எரிந்த நிலையில் பார்த்தேன் சார்"  - அத்வேதா.

"ஒகே சிமூ! நான் நம்பிட்டேன். ஆமா நேத்து சிரு.. சிரு.. னு ஓடி வந்து கட்டிபிடிச்சிட்டு... இப்போ சாரா?... ஆனால் நீ ரொம்ப மோசம்! மாமா என்னை கட்டிபிடிச்சுக்கனு சொன்னா கட்டிப்பிடிக்கப் போறேன்! அதவிட்டு அவ வந்தா...  அவள பார்த்தேன்! இவள பார்த்தேன்னு கதை விட்டுட்டு இருக்க" என்று சிருஷ்டன் நக்கலடிக்க வேதா கடுப்பானாள்.

"சார்! நான் என்ன பேசிட்டு இருக்கேன் ! நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க?" – அத்வேதா.

"ஏன் சரியாதான் சொல்லிட்டு இருக்கேன்! நீ சொல்றபடி பார்த்தாலும் அங்க யாருமில்லையே" – சிருஷ்டன்.

"சார் நேற்று மரியா வந்தா சார்!" என்று வேதா சொல்லிக் கொண்டு இருக்க சிருஷ்டனுக்கு போன் கால் வந்தது. அதை எடுத்து பேசிய சிருஷ்டன் அங்கு  சொல்லப்பட்ட  செய்தியை அடுத்து போனை யோசனையாக வைத்தான் சிருஷ்டன்.

"நேற்றும் கொலை நடந்து இருக்கு வேதா! நாம் அந்த இடத்தைவிட்டு வந்ததும்..." என்று சிருஷ்டன் சொல்ல

"இப்பவாவது நான் சொல்றத நம்புறீங்களா சார்?" – அத்வேதா.

"ம்ம்ம் நம்பமாட்டேன். இன்னைக்கு நானா அவளா னு பார்த்துடுறேன்! யார் இப்படி எல்லாம் செய்றான்னு கண்டுபிடிக்கிறேன்" என்று சிருஷ்டன் சொல்ல அத்வேதாவிற்கு மரியாவை நினைத்து பயம் பிடித்துக் கொண்டது.

**********

வேதாவும், சிருவும் அந்த இடத்தில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் தங்கிக் கொள்ள வேதா பயத்தோடு வெளியில் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் எதிரில் மரியா தோன்றினாள். 

"சார்! அதோ! மரியா!" என்று வேதா கத்தியதை அடுத்து  வேகமாக கதவினை திறந்து அந்த இடத்திற்குச் சென்றான் சிருஷ்டன். அங்கு ஏதோ சத்தம் கேட்க சற்று தூரம் சென்றவன் காலில் அகப்பட்டது அந்த மோதிரம். அந்த மோதிரத்தை சிருஷ்டன் எடுக்க எதிரில் தோன்றினாள் மரியா

அவளை பார்த்ததும் சிருவிற்குள் ஏதோ செய்ய அவனை ‘வா’ என்று அருகில் அழைத்தாள் மரியா

வேகமாக அவள் அருகில் சென்ற சிருவின் கைகளை பற்றி மோதிரம் அணிவித்தாள் மரியா. அதை அடுத்து சிருவும் அவளுக்கு மோதிரம் அணிவிக்க அவள் அருகில் செல்ல வேகமாக சிருவை இழுத்துக் கொண்டு தரையில் சரிந்தாள் வேதா. இருவர் விழவும் வாள் ஒன்று வேதாவின் கைகளை உரசிவிட்டு தரையில் விழுந்தது. 

வேதாவின் கைகளில் ரத்தம் வரத் தொடங்க, தன் கைகளை அசைக்க முடியாமல் வலியில் கத்த ஆரம்பித்தாள் அத்வேதா. சிருஷ்டன் வேதாவின் சத்தத்தில் மயக்கத்தில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான்.

“ஏய்! என்னாச்சு! அய்யோ! கையில் ரத்தம் வருது பார்! வா ஆஸ்பிட்டல் போகலாம்” என்று அவளை எழுப்பிவிட்டு சிருஷ்டனும் எழ வேதா திகைத்து நின்றாள்.

வேதாவின்  எதிரில் நின்றிருந்தாள் மரியா. சாதாரண பெண்ணாக நின்றிருந்த மரியா சிருஷ்டனை பார்த்து கை நீட்ட வேதா “சிரு…” என்று கத்தவும் சிருஷ்டன் “ஹேய் என்னாச்சு?” என்று அவளிடம் திரும்பி விசாரித்துக் கொண்டிருக்க, மரியாவின்  கைகளை பக்கத்தில் இருந்து ஒருவன் பிடித்தான். அவன் கைகளை பிடித்ததும் இருவரும் சேர்ந்து வேதாவை பார்த்து சிரித்தபடியே  வானத்தில் மறைந்தனர்  வேதா அதை நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேதாவை உலுக்கினான் சிருஷ்டன்.

“ஏய்! எங்க பார்த்துட்டு இருக்க! வா போகலாம்! முதலுதவி பண்ணி இருக்கேன் சரி ஆகிடும்னு நினைக்கிறேன்! சின்ன காயம் தான் எதுக்கும் டாக்டர்கிட்ட செக் செய்யலாம்” என்று கூறியபடியே சிருஷ்டன் அத்வேதாவை ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

ஆஸ்பிட்டலில் மருந்து மாத்திரை கொடுத்து சிருஷ்டனின் அட்டூழியத்தால்  அத்வேதாவிற்கு  கைகளில் சிறிய கட்டுப் போடப்பட்டது.

வெளியில் வந்து கொண்டிருந்த  வேதாவிடம் திரும்பினான் சிரு.

“என்ன மேடம்! இப்ப பரவாயில்லையா ?” – சிருஷ்டன்.

“பரவாயில்லை சார்” – அத்வேதா.

“ஆமா! உன்கிட்ட கேட்கனும்னு இருந்தேன்! நேற்று என்ன ஆச்சு? கொஞ்ச நேரம் என்ன நடந்ததுனு எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை?” – சிருஷ்டன்.

அவன் அப்படி சொன்னதும் ‘மரியா அவனை தாக்க முயன்றது? அத்வேதா  அவனை காப்பாற்றியது’ என்று  அனைத்தையும் அவள் சொல்ல அதை கேட்ட சிரு கோபம் அடைந்தான். அவன் கோபத்தை பார்த்த அத்வேதா வாயை மூடிக் கொண்டாள். 

“ஏன்டி எத்தனை நாள் என்னை போட்டுத்தள்ள பிளான் பண்ண? கொஞ்ச நேரம் நீ லேட்டா வந்திருந்தீனா என் கை போயிருக்கும்? அப்புறம் நான் எப்படி சாப்பாடல்லாம் சாப்பிட்டு இருப்பேன்?” – சிருஷ்டன்.

“சார்... டி னுலாம் சொல்லாதீங்க.. உயிர் தப்பிச்சீங்கனு சந்தோசப்படுங்க சார்“ – அத்வேதா.

“ஏன் சொல்லமாட்ட? உண்மையா ஆவி வந்துச்சா! ஆமா அந்த மரியா திரும்பவும் என் கையை ஆட்டைய போட வந்துரப்போறாடி!”  – சிருஷ்டன்

“வர மாட்டா  சார்!” – அத்வேதா.

“ஏன்? அவ்வளவு உறுதியா எப்படி சொல்ற?” – சிருஷ்டன்.

“அவ மேகன் இறந்ததா நினைச்சு எல்லாத்தையும் கொன்னா! ஆனா நீங்க உயிர் தப்பிய பார்த்து அவ மேகன் உயிரோட இருக்கிறதா நினைச்சு போயிட்டா சார்” – அத்வேதா

“ஓஹோ! ஆவிக கூடலாம் பேசு? மனுசங்கள கண்டா மட்டும் எரிந்து விழு” என்று சிருஷ்டன் சொல்லியபடியே முன்னால்  செல்ல வேதா சிரித்தபடியே அவனை பின் தொடர்ந்தாள்

வேட்டை முடிந்தது.

விரைவில் அடுத்த மர்மத்தோடு சந்திக்க வருகிறேன்....


NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
27/08/2020 6:16 am  

super sis 🤩 🤩 waiting for ur nxt ud sis 😍 😍 😎 


ReplyQuoteHoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 10 months ago
Posts: 180
28/09/2020 1:27 pm  

முடிச்சு 3 :

சித்திரப்பாவை

பாகம் 1

அந்த அறை முழுவதும் ஆட்கள் பல சூழ்ந்து இருக்க  அவர்கள்  தங்களுக்குள் எதிரில் இருந்த சுவரை கை  காட்டி பேசிக் கொண்டிருந்தனர். இப்படி பலரும்  பேசிக் கொண்டிருக்க அவர்களின் பேச்சுக்குரல் அந்த அறையின் கதவு திறந்ததும் நிறுத்தப்பட்டது.

அந்த அறையின் கதவை திறந்து கொண்டு இருவர் வர அங்கு சூழ்ந்து இருந்தவர்களின் பார்வை அந்த இருவரையும் தொடர்ந்தது.

அந்த இருவரும் அங்கு மேடையில்   போடப்பட்டிருந்த சேர்களில் வந்து அமர அங்கு இருந்த மக்களும் தம் தம் இருக்கைகளுக்கு வந்து அமர்ந்தனர் .

அனைவரும் அமர்ந்ததும் அந்த இருவரில் ஒருவன் மற்ரொருவரைப் பார்த்து

"வர்மா! சார்! ஆரம்பிக்கலாமா!" என்று கேட்க  அந்த நபரால்  வர்மா என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர் தலையை ஆமோதிப்பதாக தலையசைத்தார். 

வர்மா தலையசைத்ததும் ஓவியக் கண்காட்சியின் மேற்பார்வையாளரான ரமணா  மக்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

"வணக்கம்! மக்களே! உங்க எல்லாரையும் இந்த வருட ஓவிய கண்காட்சிக்கு வருக! வருக! என்று வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

ஒவ்வொரு வருடமும் இங்க நடக்கும் ஓவியக் கண்காட்சியில் வர்மா சார் வரைந்த ஓவியங்கள் தான் பெரும்பான்மையான இடத்தை வகிக்கும்!  இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல! இந்த வருடமும் அவருடைய ஓவியங்கள்தான் பெரும்பாலும் இங்கு  இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த வருடம் இந்த ஒவியக் கண்காட்சியை கொஞ்சம் புதுமையாக நிகழ்த்தலாம்னு நாங்க முடிவு செய்திருக்கோம்!" என்று ஓவியக் கண்காட்சியின் மேற்பார்வையாளர் தெரிவிக்க மக்களுக்குள் சல சலப்பு ஏற்பட்டது. 

அதை பார்த்து சிரித்த அந்த ரமணா மேற்கொண்டு பேசத் தொடங்கினார். 

"ஒகே மக்களே! நான் நேரடியாக விசயத்திற்கு வரேன்! நாங்க இந்த வருடம் என்ன புதுமையா முயற்சி செய்திருக்கோம்னா... நம்ம வர்மா சார் தான் வரைந்த ஓவியங்களை ஒவ்வொரு வருடமும் விற்பனை செய்யாம பொக்கிஷமா வைக்கணும்னு  நினைப்பார். ஆனால் இந்த வருடம் அவர் வரைந்த இந்த ஒவியங்கள் முழுவதும் விற்பனைக்கு விடப் போறதா முடிவு செய்திருக்கார். ஆம் மக்களே! இங்கு அவர் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டு  அந்த ஏலத்தில் வரும் வருமானத்தை  அனாதை ஆசரமத்திற்கு தர போறதா நம்ம வர்மா முடிவு செய்து இருக்கார்!" என்று அவர் அறிவிக்க அதை தொடர்ந்து மக்கள் தங்களின் மகிழ்ச்சியை கரகோசத்துடன் பறைசாற்ற அதனை அடுத்து வர்மா சார் வரைந்த ஓவியங்கள் ஏலம் விடப்பட்டது.

அங்கு இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு ஓவியத்தை வாங்க முயற்சி செய்ய அதை புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் வர்மா.

இப்படியாக அந்த அறை ஏலம் விடப்பட்டு அரைமணித்துளிகள் பரபரப்பாக சென்று இருக்க சட்டென்று  வர்மாவுக்கு போன் கால் வர இங்கு சத்தமாக இருக்கவும் வேகமாக எழுந்து அருகில் உள்ள ரூமிற்கு  போன் பேச வர்மா   சென்றுவிட்டார். அவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த  ஒருவன் அவர் ரூமில் சென்று மறைந்ததும் தன் கையில் மறைத்து வைத்திருந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியின் மேற்பார்வையாளர்  ரமணா அருகில் வந்தான்.

வந்தவன் அவர் காதில் ஏதோ சொல்ல அதனை அடுத்து  அந்த ஓவியமும்  ஏலத்திற்கு விடப்பட்டது. 

அந்த ஓவியத்தை பார்த்த மேற்பார்வையாளர்

"ஆஹா! மக்களே! நமது வர்மா சார் வரைந்த ஓவியத்திலேயே மிகவும் அழகான ஓவியம்  இது. இதை பார்த்தீங்களா மக்களே! இந்த ஓவியம் 

அப்படியே ஒரு பெண் நிற்பது போல் தத்ரூபமாக வரைந்து வைத்திருக்கிறார். இத்தனை அழகும்! கலை நயமும்! வாள் ஏந்திய வீரப்பாவையாக மிளரும்   இந்த “ சித்திரப்பாவை “ ஓவியத்தின் விலை ஆரம்ப விலை 10000 ஆயிரம் ஆகும்! ஏலம் கேட்க ஆரம்பிப்பவர் கேட்கலாம்  என்று அவர் சொல்ல அங்கிருப்பவர் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்க ஆரம்பித்தனர்.

இறுதியில் அந்த ஓவியத்தை அதிகபட்ச மதிப்பு கொடுத்து வாங்கினார் ராகவன் .

அவர் அந்த ஓவியத்தை வாங்கி வெளியே சென்றதும் உள்ளே வந்தார் வர்மா! அதன்பின் வர்மாவிடம் விற்ற பணத்திற்கான காசோலை கொடுக்கப்பட அதை மறுத்தார் வர்மா.

"இந்த ஓவியங்களை வரைந்த பொழுது கிடைத்த மனநிறைவும்,   அதை வாங்க மக்கள்  காட்டிய ஆர்வமே  எனக்கு கிடைச்ச வெகுமதியாக நான் கருதுகின்றேன். அதுமட்டுமல்ல  இந்த ஏலத்தில் வந்த காசோலையை அனாதை ஆசிரமத்திற்கு நிதியுதவியா கொடுக்கின்றேன்னு  நான் முதலில் சொன்ன மாதிரியே  நான் செய்கிறேன் மக்களே! உங்கள் அன்புக்கு எனது நன்றிகள்!"  என்று சொல்லிவிட்டு அவர் அந்த பணத்தை அங்கு வந்த அனாதை ஆசிரமத்தை நிர்வகிப்பவரிடம் கொடுக்க  அந்த அறை முழுவதும் கரகோஷம் எதிரொலித்தது.

அதை அடுத்து விழா  நிறைவுக்கு வர அங்கு வந்தவர்கள் வர்மாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டு பிரியாவிடை பெற வர்மாவும் தன் வண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கிப் பயணமானார்.

அந்த அறையைவிட்டு அனைவரும் வெளியே வர தன் முகத்தை கேப் மூலம் மறைத்து வைத்தபடியே வந்த ஒருவன் அந்த கூட்டத்தில் ஒருவனாக கலந்து கொண்டு அந்த ஹாலில் இருந்து வெளியேறினான். 

அந்த 'சித்திரப்பாவை' ஒவியத்தை தன் வீட்டிற்கு கொண்டு சென்ற ராகவன் அந்த ஓவியத்தை தன் ஹாலில் மாட்ட ஆயத்தம் செய்ய  அவர் வருவதை கண்டு ஹாலுக்கு வந்த அவரது மனைவி கோபத்தோடு அவர் அருகில் வந்தார்.

"ம்ப்ச்.. வீட்டுக்கு வந்தததும் வராததுமா ஆரம்பிச்சுட்டீங்களா? உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது!படமா கொண்டு வந்து வீட்டில் அடுக்காதீங்கனு! சொன்னா கேட்கவே மாட்டிங்களா!" – ராகவன் மனைவி.

"என்னது படமா! இது ஓவியம் டீ! அங்க பாரு! எப்படி அழகா  ஒரு பாவையை வர்மா வரைச்சுருக்கார்னு" என்று ராகவன் சிலாகித்தபடியே சொல்ல அதை கேட்ட அவரின் மனைவி அவரை திட்டி தீர்த்துவிட்டார். 

ராகவன் தன் மனைவியை சமாதானப்படுத்த அறைக்குச் செல்ல இங்கு சுவரில் அவர் மாட்டி வைத்திருந்த ஒவியத்தில் இருந்த பெண்ணின் விழிகள் அசைந்தது.

*****

இரவில் ராகவன் தூங்கிக் கொண்டிருக்க ஹாலில் இருந்து வந்த சத்தம் அவர் செவியை தீண்டியது.  அதை கேட்ட ராகவன் தன் மனைவியை எழுப்ப முயல அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்த ராகவன் தானாக எழுந்து ஹால் நோக்கிச் சென்றார்.

அங்கு சென்றவர் லைட்டை போட கரண்ட் கட்டானது. வேகமாக டார்ச் லைட்டை தேடி எடுத்த ராகவன் அந்த அறை முழுவதும்  அடிக்க அங்கு யாரும் இருப்பதாக தெரியவில்லை. 'எங்கிருந்து சத்தம் வருது? ம்ம்ம் மனபிரமையா இருக்கும என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அவர் நகர முயல,

திரும்பவும் சத்தம் கேட்க  ஆரம்பித்தது. ராகவன் சத்தம் வந்த திசை நோக்கி  திரும்பி பார்க்க சன்னல் கதவுகள் ஆடியது.

"ம்ம்ம் இந்த சத்தம் தானா? என்று நினைத்தவர் அதன் அருகில் சென்று  அதை பூட்டிவிட்டு  திரும்பி நடக்க ஆரம்பித்தார். அவர் சற்று தூரம் சென்றதும்  திரும்பவும் சன்னல் கதவுகள் திறந்து கொண்டு சத்தம் போட, அதை பார்த்த ராகவனுக்கு  பயத்தில் மூச்சு வாங்க வேகமாக திரும்பினார். அப்போது ஒரு உருவம் அவர் எதிரில் நின்றது.

இருட்டில் மங்கலாக தெரிந்த அந்த உருவத்தை பார்த்த ராகவன் 'யார் அது?' என்று தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடியை அணிந்தபடியே அவர் பார்க்க முயல அதே நேரம் கரண்டும் வந்தது. வேகமாக எதிரில் பார்த்த ராகவனுக்கு அந்த இடம் வெற்றிடமாக காட்சி அளித்தது.

தனக்குள் குழம்பியவாறு அவர்  மேலும் நடக்க முற்பட ஏதோ ஒன்று அவர் காலை இடற, எதிரில் இருந்த ஓவியத்தில் அவர் இடித்துக் கொண்டார்.  தன் தலையை தடவிவிட்டுக் கொண்டே  அவர் தன் கைகளை பார்த்தவர் அதிர்ந்தார். தன் கைகளில் ரத்தம் பிசுபிசுத்தது. வேகமாக தன் நெற்றியை அவர் தடவிப் பார்க்க நெற்றியில் இருந்தும் ரத்தம் வழிந்தது. 

அதை பார்த்த ராகவன் தன் காயத்திற்கு மருந்திட அருகில் இருந்த அலமாரியின் கதவை திறந்து முதலுதவி பெட்டியை எடுத்தார். அதில் பஞ்சை எடுத்து தன் நெற்றியில் வைத்து அவர் ரத்தத்தை ஒற்றி எடுக்க பஞ்சு வெறுமையாக காட்சி அளித்தது.

அதன்பின் தன் கைகளை பார்த்த ராகவன் மேலும் அதிர்ந்தார் அதுவும் வெறுமையாக காட்சி அளித்தது.

சற்று முன்னர் கைகளிலும், நெற்றியிலும் வந்த ரத்தத்துளிகள் காணாமல் போனது எங்கணம்  என்று புரியாமல் குழம்பியபடியே  ராகவன் எதிரில் பார்க்க அந்த ஓவியம் ஆடத் தொடங்கியது.

அதை பார்த்த ராகவன்  அதன் அருகில் சென்று அதை நிறுத்த முயன்று கைகளை உயர்த்த சட்டென்று அந்த ஓவியம் நின்றது. ராகவன் புரியாமல் அந்த ஓவியத்தையே  பார்த்துக் கொண்டிருக்கும் போதே  அந்த சித்திரப்பாவையின் கண்கள் நகர்ந்தது. அதை அவர் ஒரு திடுக்கிடலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஓவியத்தின் மூக்கில்  இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது.

ஓவியத்தில் இருந்து  ரத்தம் வர ஆர்ம்பித்தை  தொடர்ந்து  இங்கு ராகவன் மூக்கில் இருந்தும் ரத்தம் வர ஆரம்பித்தது.  சற்று நேரத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் ராகவன்.

வருவாள்...


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 10 months ago
Posts: 180
30/09/2020 4:17 am  

பாகம் 2

அந்த போலீஸ் நிலையத்தின் உள்ளே கைலாஷ் எதிரில் புதியவன் ஒருவன் அமர்ந்து இருந்தான்.

தலையில் எண்ணெய் வைத்து படிய வாரி, சோடா புட்டி கண்ணாடி அணிந்து, பழைய பஞ்சாகமாக ஒருவன் அமர்ந்து இருக்க அவனை பார்த்த அத்வேதாவிற்கு சிரிப்பு ஒரு பக்கம் வந்தாலும் அவனை பார்க்க பாவமாகவும் இருந்தது.

அத்வேதா அருகில் இருந்தவனை  இப்படியாக அளவிட்டுக் கொண்டிருக்க அதை களைக்கும் விதமாக பேசினார்  கைலாஷ்.

"வேதா! மீட் அவர் நியூ அப்பாயிண்டீ ஆதிசேசன்!"  என்று அவர் அறிமுகப்படுத்த

"ஹலோ! வெல்கம் சார்!"  என்று வேதா அவனை நோக்கி கை நீட்டினாள். அதற்கு அவனோ  எதிர்வினையாக அவன் இருகைகளையும் குவித்து வேதாவிற்கு வணக்கம் சொன்னான். அதை பார்த்து வேதா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

"ஆதி! இவங்க அத்வேதா! வெரி டேலண்ட் விமன்! எக்ஸ்பர்ட் இன் டரக்கிங் , கன் ஷீட்டிங்" , "வேதா! இவர் ஆதி! வெல் வெர்ஸ் இன் கம்யூட்டர்! எக்ஸ்பேர்ட் இன்  ஹேக்கிங்! யு கேன் யூஸ் ஹிம்  இன் கேஸ்!" என்று கைலாஷ் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,

"வேதாக்கு இவர் உதவி தேவைபடாது  மிஸ்டர் கை! அவரை எனக்கு வேணா உதவி செய்யச் சொல்லுங்க!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் சிருஷ்டன்.

சிருஷ்டனின் முறுக்கேறிய புஜங்களும் , உடல்வாகும் ஆதியை பயமுறுத்த அவனை பார்த்து விழித்தான் ஆதிசேசன்.

ஆதியின் அருகில் வந்த சிருஷ்டன் "என்ன புது அப்பாயிண்ட்டா?"

"ம்ம்ம்ம்! எஸ் பாஸ்!" - ஆதி.

"ஓஹோ! உன்னை பார்த்தா திருடனை ஓடிப் போய் பிடிக்கிற மாதிரி தெரியலயே! நீயே திருடன் மாதிரி தான் இருக்க! ச்ச்ச்சப்பா திருட்டு முழி!" – சிருஷ்டன்.

"சிரு! ஸ்டாப் இட்! அவன் கம்யூட்டர் எக்ஸ்பார்ட்! ஹேக்கிங்ல கிங் அவனை பார்த்து திருடன் அது இதுனு சொல்லிட்டு இருக்க நீ! சே சாரி டு ஹிம்!"   – கைலாஷ்.

"ஓ! அவளோ பெரிய தில்லாலங்கடியா நீ! அப்ப சொல்லிற வேண்டியது தான்!"  – சிருஷ்டன்.

"என்ன சொல்ல போற சிரு?" – கைலாஷ்.

"சாரி தான்!" என்று கூறிய சிரு ஆதியைப் பார்த்து 'சாரி' சொல்லினான்.

சிரு சாரி சொல்லியதை பயத்துடன் ஏற்ற ஆதி, "தில்லா...லங்...கடியா ! அப்படினா என்ன?" என்று சிருவிடமே டவுட் கேட்டான்.

"ம்ப்ச் தில்லாங்கடினா என்னனு தெரியாதா! அது வேற ஒன்றும் இல்லை  குழந்தை பையா! தில்லாலங்கடி அப்படினா... என்னனா..." என்று கூறியபடியே அவன் தோள் மேல் கை போட்டு சிருஷ்டன் விளக்கம் சொல்ல  ஆரம்பிக்க அத்வேதா கைலாஷிடம் பேசினாள். 

"சார்! எதுக்காக எங்களை வரச் சொன்னிங்க! கேஸ் பத்தி பேசினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!" என்று அத்வேதா கைலாஷிடம் திரும்பி கேட்க சிருஷ்டன் ஆதியைவிட்டு விட்டு  அவளிடம் திரும்பினான்.

"ஓய்! சிமூ! இங்க நான் அவனுக்கு டவுட் கிளியர் பண்ணிட்டு இருக்கேன்! நீ பாட்டுக்க நடுவுல பேசுனா என்ன அர்த்தம் ம்..? – சிருஷ்டன்.

"ஓ! நோ! சிரு! சண்டை வேண்டாம்!  உன் விளையாட்டு தனத்தை கொஞ்சம் தள்ளி வச்சிட்டு நாம கேஸ் பத்தி பேசினா நல்லா இருக்கும்"  – கைலாஷ்.

"ம்ம்ம்" என்று வேதாவை பார்த்து பெருமூச்சுவிட்ட சிரு "சொல்லுங்க மிஸ்டர் கை! நான் வேண்டாம்னு சொன்னா விடவா போறீங்க?"

"நீ எனக்கு ஹெட்டா! இல்லை நான் உனக்கு ஹெட்டானு வர வர தெரியமாட்டிங்குதுடா சிரு"  – கைலாஷ்.

"நீங்க தான் ஹெட் பாஸ்! அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும்  வேண்டாம்!  நம்ம சிமூ கிட்ட கூடக் கேட்டுப் பாருங்க! நீங்க தான் ஹெட்னு சொல்லுவா" என்று கூறிய  சிரு வேதாவை பார்த்து கண்ணடிக்க அவள் அவனை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

"ச்சூ! உன் கூட என்னாலலாம் பேச முடியாது சிரு"  என்று கூறிய  கைலாஷ் கேஸ் பற்றிய விசயத்திற்கு வந்தார்.

மூவர் முன் ஒரு போட்டோவை தூக்கிப் போட்டவர், "இவர் ராகவன்! லீடிங் லாயர்! நேற்று இரவு தன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்!" - கைலாஷ்

"எனி இன்ஜுரி?" – அத்வேதா.

"பாடில ஒரு கீரல் இல்லை! ஆனா ஹேவி பிளட் லாஸ்! எப்படி செத்தார்னு இப்ப வரை நம்மாள கண்டுபிடிக்க முடியவில்லை" – கைலாஷ்.

" அடாப்ஸி  ரிப்போர்ட் வந்திடுச்சா?" – சிருஷ்டன்.

"இட்ஸ் இன் ப்ராசஸ்! சீக்கிரம் கிடைச்சிடும்" – கைலாஷ்.

"இது கொலையா இருக்குமா ? இல்லை தற்கொலையா இருக்குமா? வாட் ஆர் யூ திங்கிங் கைஸ்?"  – கைலாஷ்.

"நான் இது கொலையா இருக்கும்னு நினைக்கிறேன் சார்!" – அத்வேதா.

"நோ! இது தற்கொலை தான்! பாடில ஒரு மார்க்ஸ் இல்ல! சோ  இது கொலையா இருக்க வாய்ப்பில்லை" – சிருஷ்டன்.

"நோ! இப்படி நாம நினைக்கணும்தான் கொலையாளி பாடில மார்க் இல்லாம கொலை பண்ணிட்டு போயிருந்திருக்கான்!" – அத்வேதா.

"அப்ப கொலையாளி யார்? அவங்க எதை  வச்சு கொன்றுப்பாங்கனு உன்னால சொல்ல முடியுமா?" – சிருஷ்டன்.

"அதை கொலை நடந்த இடத்தில்  போய் பார்த்தாதான் கண்டுபிடிக்க முடியும்" – அத்வேதா.

"அங்க போய் பார்த்தா நானும் தான் சொல்வேன்!"  – சிருஷ்டன்.

அதற்கு வேதா முறைக்க "ஓய்! சிமூ! பதில் சொல்ல முடியலைனா  முறைப்பியோ?"  – சிருஷ்டன்.

அதற்கு வேதா பதில் சொல்வதற்குள் இடையில் பேசினார் கைலாஷ்.

"ஸ்டாப் இட் சிரு! கேஸ் பைலை நல்லா ஸ்டடி பண்ணுங்க இரண்டு பேரும் அதன்பின்  மேற்கொண்டு எதுவும் பேசிக்கலாம்! சிருஷ்டன் அண்ட் அத்வேதா.

 நோ மோர் ஆர்குமெண்ட்ஸ் பிளிஸ்!" – கைலாஷ்.

"அதற்கு சிருஷ்டன்  வேகமாக  ஓகே சார்!"  என்று கைலாஷை பார்த்து சலியூட் அடித்தவன்  வேதாவிடம் திரும்பி "வரியா!"  என்று வேதாவை பார்த்து  கண்ணடித்து சிரு கூப்பிட அத்வேதா வேகமாக கைலாஷிடம் திரும்பினாள்.

"பாருங்க சார்! உங்க முன்னாடியே வரியானு கூப்பிடுறான்!"  – அத்வேதா.

"சிரு!" என்று கைலாஷ் கத்த.

 "கேஸ்அ ஸ்டடி பண்ண வரியானு கூப்பிட்டேன் கைலாஷ் ஜீ!" என்று கைலாஷிடம் சொன்னவன் அவர் பார்க்காத வண்ணம் வேதாவை பார்த்து இதழ்களை குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை வைத்தான்.

அதை பார்த்த வேதா கடுப்பாக இங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதியோ! 'ம்ம்ம் இதுககிட்ட இருந்து வேலை பார்க்குறதுக்கு நான் பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம்' என்று மனதுள் நினைத்தவன் அத்வேதாவை பாவமாக பார்த்துக் கொண்டிருக்க

ஆதியின் பார்வையை கவனித்த சிருஷ்டன் "டேய்! சோடாபுட்டி! அங்க என்ன பார்வை! எங்ககிட்டலா பேச மாட்டியோ? நானும் வந்ததில் இருந்து பார்க்குறேன்! நீ பாட்டுக்க உட்கார்ந்து ஏதோ படம் பார்க்குற மாதிரி எங்களை பார்த்துட்டு இருக் ! சும்மா உட்காராம கேஸ் பத்தி எங்களுக்கு எதாவது ஐடியா சொல்லணும்! சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கிட்டு போகலாம்னு பார்க்குறீயா?"

"நான் கம்யூட்டர் சார்ந்த வேலை தான் பார்க்க முடியும் சார்! வேற வேலை எனக்கு பார்க்கத் தெரியாது" – ஆதிசேசன். 

"அடிங்க ... சும்மா கம்யூட்டரை யே  நோண்டிக்கிட்டு கேம் விளையாட்டிட்டு பொழுதை ஓட்டிடலாம்னு பார்க்குறீயா? வேற வேலையும் செய்யணும்." – சிருஷ்டன்.

"வேற வேலையா? அது என்ன வேலை?  என்ன செய்யணும்?" – ஆதிசேசன்.

"ம்ம்ம்" சற்று நேரம் யோசித்த சிருஷ்டன் "ம்ம்ம் டீ காபி கொண்டு வந்து  தரணும். கேஸ் பற்றிய விசயங்கள் நாங்க பேசும் போது எங்களுக்கு தேவையான பைலை எடுத்துத் தரது! நான் குடுக்கச் சொல்லி கொடுக்குறதை  என் சிமூ கிட்ட குடுக்கணும்! எல்லாத்துக்கும் மேலே எதிரிங்க எங்களை தாக்க வந்தா குண்டடி வாங்கிக்கிறது! இப்படி சொல்லிட்டே போகலாம்!" 

"என்னது குண்டடி வாங்கணுமா?" - ஆதிசேசன்.

"எஸ்டா சோடா புட்டி" – சிருஷ்டன்.

"சார்!" என்று ஆதி  கைலாஷை பார்த்து இழுக்க, கைலாஷ் கோபமாக சிருஷ்டனிடம் திரும்பினார்.

"சிரு! இப்ப நீ பேசாம வெளியே  போறீயா! இல்லை நான் உன் டேட் கிட்ட உன்னை பற்றிச் சொல்லவா?" – கைலாஷ்.

அதை கேட்டு சத்தமாக சிரித்த சிருஷ்டன் "என்ன கை சின்னபிள்ளைதனமா இருக்கு! அப்பாகிட்ட சொல்வேன்! ஆட்டுக்குட்டிகிட்ட சொல்வேன்னு மிரட்டுறீங்க ! யூ ஆர் சில்லி ! போ னு சொன்னா  போகப் போறேன்! அதைவிட்டுட்டு!" - என்று கூறியவன் தன் தோல்வியை ஏற்காமல் "எனக்கு இப்ப லஞ்ச டைம்! சோ! இப்ப நான் போறேன்! ஆனால்  சாப்பிட்டுவிட்டு திரும்பவும்  வருவேன்"  என்று சொல்லிவிட்டு வெளியே  செல்ல அவன் அகன்றதும் அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

அவன் சென்றததும் இருவரிடம் திரும்பிய கைலாஷ் "பையன் ரொம்ப நல்லவன் தான்! வாய் தான் கொஞ்சம் நீளம்! இரண்டு பேரும் அவன் பேசினதை  பெரிசா எதுவும் எடுத்துக்காதீங்க" என்று அவர் சொல்ல

அதற்கு அத்வேதா "ஐ நோ சார்!" என்று கூறிவிட்டு சிரித்தாள்.

அவள் அப்படி சொன்னதும் கைலாஷ் "சரி போய். நீங்க என்ன பண்ணணுமோ அதை பார்க்க ஆரம்பிங்க"

ஆதிசேசன் மற்றும் அத்வேதா வெளியேறி தங்கள் இடத்தை நோக்கி நடந்தனர்.

அப்போது ஆதி அத்வேதாவிடம், "நான் உங்களை ஒன்னு கேட்கலாமா?"

"எஸ்! சொல்லுங்க ஆதி சார்" - அத்வேதா.

"ஆதி சார்னுலா கூப்பிடாதீங்க! நான் அந்தளவுக்கு வொர்த் இல்லைங்க! கால் மீ ஆதி"  – ஆதிசேசன்.

அதற்கு சிரித்த அத்வேதா "ஓகே சொல்லுங்க ஆதி! என்ன கேட்கணும்?" 

"அவர் ஏன் உங்களை சிமூனு கூப்பிடுறார்?" – ஆதிசேசன்.

"எவரை சொல்றீங்க ஆதி" – அத்வேதா.

"அவர் தான்  மிஸ்டர் சிருஷ்டன்! சிமூ னா என்ன?" – ஆதிசேசன்.

அதற்கு அவனை கண்டு முறைத்தவள் "ம்ம்ம் அதை அவன்கிட்டயே கேட்டுகோ!" என்று சொல்லிவிட்டு அவள் விரைய இங்கு ஆதி முழித்துக் கொண்டு நின்றான்.

*****

ஓவிய கண்காட்சியில் இருந்து வெளிவந்த அந்த கேப் அணிந்த மனிதன் நேராக தான் தங்கி இருந்த விடுதியின் அறையை நோக்கிச் சென்றான். அவன் அறைக்குச் சென்றதும் அவனை எதிர்கொண்டான் அவன் நண்பன் மாதவ்.

"என்னடா! ராக்கி அந்த ஓவியத்தை தலைமுழுகிட்டு வந்தியா? இல்லையா?"  – மாதவ்.

"ஆமா டா!" – ராக்கி.

"நல்ல வேலை செஞ்சடா! இனியாவது நாம நைட்  நிம்மதியா தூங்கலாம்" என்று மாதவ் கூற ராக்கி அவன் அருகில் அமைதியாக அமர்ந்தான்.

"அவன் கண்முன் ஒரு பெண் வந்து  என்னோடு வா!" என்று அழைக்கும் காட்சி நிழலாட தன்னையே  தேற்றிக் கொண்டவன் தன் நண்பன் மாதவ் தன்னை பார்ப்பதை உணர்ந்து சிரித்து வைத்தான்.

அவன் சிரிப்பதை பார்த்த மாதவ், "என்னடா ஆச்சு!" 

"ஒன்றுமில்லைடா! ஒரு பெண் நிற்பது போல் இருக்குதுடா" – ராக்கி.

"இனி அப்படி தெரியாது!" என்று மாதவ் அவனுக்கு தைரியம் சொல்ல ராக்கி தன்னையே தேற்றிக் கொண்டான்.

அன்று இரவு....

ராக்கி தூங்கிக் கொண்டிருக்க கனவில் அதே பெண் 'என்னோடு வா' என்று அழைப்பது போல் இருக்க திடுக்கிட்டு விழித்தான் அவன். 

விழித்த அவன் எதிரில் இருந்த சுவரைப் பார்க்க அங்கு  ஊசலாடிக் கொண்டிருந்தது அந்த ஓவியம். அதை பார்த்த ராக்கி  வேகமாக எழுந்து லைட்டை போட்டுப் பார்க்க  அந்த இடம் ஓவியமின்றி காணப்பட்டது.

பயத்தில் அருகில் படுத்துக் கிடந்த தன் நண்பனை ராக்கி எழுப்ப  அவன் எழவில்லை. வேகமாக  குப்புறப்படுத்துக்கிடந்த மாதவ்வை ராக்கி திருப்பிப் பார்க்க அங்கு  மாதவ் வாயில் ரத்தம் வழிய, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.


ReplyQuote
NIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
30/09/2020 6:38 am  

ud super 😍 what is the flashback behind the painting 🙄 


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 10 months ago
Posts: 180
05/10/2020 6:20 am  

பாகம் 3

சிருஷ்டனும் அத்வேதாவும் ராகவன் வீட்டில் அமர்ந்து இருந்தனர்.

ராகவன் மனைவி அழுது கொண்டிருக்க அவரை பார்த்த சிருஷ்டன் அத்வேதாவிடம் கண்களால் சைகை செய்ய வேதா அவரிடம் பேச ஆரம்பித்தாள்.

"மிஸஸ் ராகவன்!  கொஞ்சம் அழுகையை நிறுத்திவிட்டு  உங்க கணவர் இறந்த அன்னைக்கு என்ன நடந்ததுனு கொஞ்சம் எங்களுக்கு சொல்ல முடியுமா? நீங்க சொல்ற விசயம்  கொலையாளிய நாங்க கண்டுபிடிக்க வசதியா இருக்கும்?" – அத்வேதா.

"ம்ம்ம் சொல்றேன்மா!" என்று தன் கண்களை துடைத்துக் கொண்டவர் மெதுவாக  அன்று இரவு ராகவன் ஓவிய கண்காட்சிவிட்டு வந்தது அதை தொடர்ந்து தங்களுக்குள் நடந்த விசயங்கள் என்று அனைத்தையும் அவர் சொல்லி முடிக்க , அவர் சொல்லியதை கேட்ட சிருஷ்டனும் அத்வேதாவும் மெதுவாக அவரிடம் கேள்வியை ஆரம்பித்தனர்.

"அவர் நைட் ரூமைவிட்டு ஹாலுக்கு எப்ப வந்தார்னு உங்களால கொஞ்சம் சொல்ல முடியுமா?" – அத்வேதா.

"இல்லைமா! எனக்கு நேரம் லா தெரியலமா! நான் ஒரு பிரசர் பேசண்ட்! நேற்று எனக்கு பிரசர் அதிகமாக இருந்ததால என்னால் முடியல அதனால்  நைட் மாத்திரை போட்டு அசந்து  தூங்கிட்டேன்! படுத்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கு! அதை அடுத்து மறுநாள் காலையில் தான் எழுந்தேன்"  என்று அவர் கூற

"நீங்க எப்ப எழுந்தீங்க? அவர் இறந்தார்னு  எப்ப பார்த்தீங்க?" – சிருஷ்டன்.

"எப்பவும் நான் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்திடுவேன் தம்பி! நேற்றும்  சீக்கிரம் எழுந்த நான் அவர் அருகில் இல்லைனு பார்த்துட்டு அவரை தேடி ஹாலுக்கு வந்தேன்! வந்து பார்த்தா! அவர்..."  என்று கூறிய அந்த பெண்மணி குலுங்கி குலுங்கி அழ , வேதா அவர் அருகில் சென்றாள்.

அந்த பெண்மணி சற்று தெளிந்ததும் அவரிடம் திரும்பிய சிருஷ்டன் "நாங்க ராகவன் சார் ரூமை கொஞ்சம் பார்க்கலாமா?" 

"தாராளமா!" என்று அவர் கூற  இருவரும் எழுந்தனர்.

சிரு வேதாவிடம் "நான் ராகவன் சார் ரூமை செக் பண்றேன்! நீ மத்த இடங்களை பாரு!"

அவன் சொல்லியதை அடுத்து வேதாவும் ஒவ்வொரு இடமாக ஆராய அவர்களுக்கு எதுவும் வித்தியாசமாக தென்படவில்லை.

வேதா அருகினில் வந்த சிருஷ்டன் "சன்னல், கதவுனு அது சுற்றி இருக்கும் எல்லா  இடத்தையும் பார்த்தாச்சு! ஆனா நமக்கு ஒரு  கைதடம் கூட கிடைக்கல! சோ கொலையாளி வெளியே இருந்து உள்ளே வர சான்ஸ் கம்மி!"

"எஸ்! சார்! சோ கொலையாளி கொலை நடந்த நேரம்  வீட்டுக்குள்ளேயே  தான் இருந்திருக்கணும்!" – அத்வேதா.

"நோ! இட்ஸ் இம்பாசிபிள்! இது கொலையில்லை! தற்கொலையாத்தான் இருக்கணும் னு நான் நினைக்குறேன்!" – சிருஷ்டன்.

"ஓ! அப்படினா!  அவர் எப்படி  தற்கொலை பண்ணிகிட்டார்னு உங்களால சொல்ல முடியுமா சார்!" – அத்வேதா.

"எஸ்! வெரி சிம்பிள்! அவர் தன் மனைவி வச்சிருந்த ஸ்லீப்பிங் டேப்லட்ஸ்  போட்டிருக்கணும்!" – சிருஷ்டன்.

"நோ! அவங்க மனைவி ரூமை நான் செக் பண்ணும் போது அங்கு ஸ்லீப்பிங் பில்ஸ் இல்லை" – அத்வேதா.

அதற்கு சிரு வேகமாக வேதாவிற்கு தன் மொபைலில் இருந்து ஒரு போட்டாவை காண்பித்தான்.

அதில் ராகவன் தூக்கமாத்திரை வாங்கினதுக்கான ரசீது இருந்தது. அதை பார்த்தவள் அவனிடம் திரும்பி இவ்ளோ தெரிஞ்ச நீங்க அவர் ஏன் அதை வாங்கனார்னு சொல்லமுடியுமா?  அவர் தற்கொலை பண்ணினதுக்கான மோடிவ் எதுனு உங்களால சொல்ல முடியுமா?" – அத்வேதா.

"ஓ! யெஸ்! மோடிவ் இனிமேல் தான் கண்டுபிடிக்கணும்! ஆனால் அவர் தற்கொலை செஞ்சுகிட்டார்னு இப்ப நீ ஒத்துக்கிறியா?"  – சிருஷ்டன்.

"ராகவன் வேற காரணத்திற்காக கூட ஸ்லீப்பிங் பில்ஸ் வாங்கி இருக்கலாம்! ஏன் நீங்க சொல்ற காரணம் கூட  கரெக்ட்டா இருந்து அவர் தற்கொலை கூட பண்ண வாய்ப்பு இருந்திருக்கலாம் சார்! ஆனா..." -என்று அத்வேதா இழுக்க சிருஷ்டன் வேகமாக "என்ன ஆனால்!"

"சார்! எனக்கு என்னமோ"  என்று வேதா சொல்வதற்குள்  சிரு பேசினான்.

"இது ஏதோ ஆவிகள் பண்ணி இருக்குற மாதிரி இருக்கு! என் பீலிங்ஸ் அப்படிதான் சொல்லுது ப்ளா ப்ளா! இதை தான நீ சொல்ல வந்த சிமூ! அம் ஐ ரைட்?"  – சிருஷ்டன்.

"எஸ் சார்! ஆனால்..." – அத்வேதா.

"இடியட்! உன் முட்டாள் தனமான இன்ஸ்டிங்ட் வச்சு ஒன்னும் பண்ண முடியாது! வா நாம  போகலாம்" - சிருஷ்டன்.

"எங்க கூப்பிடுறீங்க சார்?" – அத்வேதா

"இப்ப ஒரு போன் கால் வந்தது. ஒரு கல்லூரி மாணவன் ஒருவன் தன் ரூமில் இறந்து போயிருக்கான்! அவன் டெத் ரிசம்பிள்ஸ் ராகவன்ஸ் டெத்! இவருக்கு மூக்கில் ரத்தம் வந்தது. அந்த பையனுக்கு வாயில் ரத்தம் வழிந்து இருக்காம். அதை என்கொயரி  பண்ண போகலாம் வா!" – சிருஷ்டன்.

அதை கேட்ட அத்வேதா அவன் பின்னால் சென்றாள்.

ஹாலுக்கு வந்தவர்கள் மிஸஸ் ராகவனிடம் "எதாவது தேவைப்பட்டால் திரும்பவும் வருகிறோம் மிஸஸ் ராகவன்! வி ஆர் இன் ஹரி!" என்று சிருஷ்டன் சொல்ல அவரும் சம்மதமாக தலையசைத்தார்.

அவரை தாண்டி வெளியில்  செல்ல முயன்ற அத்வேதா  கண்களில் பட்டது அந்த ஓவியம். அதை பார்த்தவள் ஏதோ தோன்ற அதன் அருகில் சென்றாள்.  அவள் அந்த ஓவியத்தை  தொடுவதற்குள் சிரு வேதாவை அழைத்தான். 

"சிமூ! வா! போகலாம்" என்று அவன் சொல்ல வேதா அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டே  சென்றாள்.  அவள் சென்றதும் அந்த ஓவிய பாவையின் கண்கள் அசைந்தது.

வண்டியில் அமர்ந்த அத்வேதா யோசனையிலேயே வர சிருஷ்டன் அவளை கலைத்தான்.

"என்னாச்சு! என்ன யோசிகிட்டு இருக்க?" – சிருஷ்டன்.

"ம்ம் ஆங்... அது வந்து அந்த ஓவியம்" என்று அத்வேதா ஆரம்பிப்பதற்குள்,

"இன்னும் நீ பினாத்தலையேனு நினைச்சேன்! இந்தா ஆரம்பிச்சுட்டியா?" – சிருஷ்டன்.

"இல்லை சிரு எனக்கென்னவோ அந்த ஓவியத்தை  பார்த்ததில் இருந்து எனக்குள்ளே எதோ தோணிக்கிட்டே இருக்கு" – அத்வேதா.

"ரியலி! அத்வேதா ஜீ! அந்த வீட்டில் இருக்கும் டேபிள், சேர் பார்த்துலா உங்களுக்கு எதுவும் தோணலையா?" – சிருஷ்டன்.

"நோ! ஐ அம் சீரியஸ்! ராகவன் இறந்ததற்கும் அந்த ஓவியத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிரி இருக்கு சிரு!"  – அத்வேதா.

"ஓஹோ! உன் ஆசையையும்  ஏன் கெடுப்பானேன் வேதா செல்லம்! அந்த ஓவியத்தை பத்தியும் விசாரிச்சுடலாம்! கவலையை விடு" என்று சிருஷ்டன் சொல்ல அதற்கு சம்மதமாக தலையசைத்த அத்வேதா, அவன் செல்லம் என்று சொன்னதை சரியாக கவனிக்கவில்லை. அவள் இருந்த கவலையில் தன்னை மறந்து 'சிரு' என அழைத்ததை உணராமல் அமர்ந்திருக்க   அதை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான் சிருஷ்டன்.

அத்வேதாவும், சிருஷ்டனும் அந்த விடுதியின் முன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினர். அவர்கள் இறங்கி உள்ளே சென்று ஒரு ரூமின் முன் நின்று கதவை தட்டினர். அவர்கள் கதவை தட்டியதும் கதவை திறந்து கொண்டு   உள்ளே இருந்து வெளியே வந்தான் ராக்கி. ராக்கியை பார்த்த இருவரும் தங்கள் போலீஸ் அடையாள அட்டையை காண்பிக்க அவன்  அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.

ராக்கியை பார்த்ததும் சிருஷ்டன் அவன் தங்களை பார்த்து பயப்படுவதை நொடி நேரத்தில் கண்டு கொண்டான்.

"என்ன ராக்கி! ஏன் இப்படி வேர்க்குது உங்களுக்கு?" – சிருஷ்டன்.

"தெரியலை சார்! வேன் ஓடுனாலும் இங்க கொஞ்சம் வெக்கையா தான் இருக்கும்" – ராக்கி.

"ஓ! அப்படியா! எங்களுக்கு எதுவும் வேர்க்கலையே! ஒரு வேளை பயத்தினால் இப்படி உங்களுக்கு வேர்க்குதோ?" – சிருஷ்டன்.

"அப்படியெல்லாம் இல்லை சார்!" என்று ராக்கி தன் முகத்தை துடைத்தபடியே கூற அத்வேதா அவனிடம் திரும்பினாள்.

"உங்க பிரண்ட் எப்படி செத்தார்னு கொஞ்சம் சொல்ல முடியுமா ராக்கி!" – அத்வேதா. 

"சொல்றேன் மேம்! நாங்க நேற்று  நைட் தூக்கிட்டு இருக்கும் போது பக்கத்தில் ஏதோ முனங்கல் சத்தம் கேட்டது! வேகமாக நான் லைட்டை போட்டு  திரும்பிப் பார்த்தா அங்கு மாதவ் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்"  – ராக்கி.

"சோ! மாதவ் இறந்த போது நீங்க மட்டும் தான் கூட இருந்திருக்கீங்க ரைட்" – அத்வேதா.

"ஆமா மேம் ! ஆனால்  நான் அவனை எதுவும் பண்ணலை மேம்!" – ராக்கி.

"நீ எதுவும் பண்ணினேன்னு நாங்களும் எதுவும் சொல்லலையே தம்பி! ஆமா பக்கத்தில் தான் படுத்திருந்தேன் சொன்ன எதுவும் சத்தம் கேட்கலையா" – சிருஷ்டன்

"இல்லை சார்! முனங்கல் சத்தம் தான் கேட்டது! வேற எதுவும் கேட்கல சார்"  என்று அவன் கூற அதை கேட்டபடியே எழுந்த சிருஷ்டன் அத்வேதாவுக்கு கண்ணைக் காட்ட அத்வேதாவும்  எழுந்து அவனது ரூமை அலச சென்றாள்.

இங்கு சிருஷ்டன் ராக்கியை  பற்றிய விவரங்களை  விசாரித்துக் கொண்டிருந்தான். சிருஷ்டன் கேட்ட கேள்விக்கு இங்கு ராக்கி பதில் சொல்லிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் வெளியில் வந்த வேதா ராக்கியிடம் வந்து 

"நீங்க படம் நல்லா வரைவீங்களா? ராக்கி" – அத்வேதா.

"எஸ் மேம்! நானும் என் நண்பனும் ஒரு ஓவியக் கல்லூரியின் ஸ்டூடண்ட்!" – ராக்கி.

அதை கேட்ட சிருஷ்டன் அவளை குழப்பமாக பார்க்க மேற்கொண்டு பேசினாள் அத்வேதா

"ஓ! நீங்க ஓவியம் எதுவும் வரைச்சிருக்கீங்களா?" என்று ராக்கியைப் பார்த்து வேதா கூர்மையாக கேட்க

"வரையரது தான் எங்க வேலை மேம்" - ராக்கி.

"நான் அப்படி கேக்கலை... நீங்க ரீசன்டா எதாவது படம் வரைஞ்சிங்களா" - அத்வேதா.

"அப்படி எல்லாம் இல்லை மேம்!" என்று அவன் சற்று தடுமாறிக் கொண்டே சொன்னான்

அவனது தடுமாற்றத்தை அளவிட்ட வேதா மேற்கொண்டு பேச முயல சிருஷ்டன் அவளை தடுத்தான்.

"நம்ம கேஸ்க்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத கேள்வியை இப்ப நீ கேட்டுட்டு இருக்க வேதா" என்று அவளை மேற்கொண்டு பேசவிடாமல் அடக்கியவன் ராக்கியிடம் திரும்பினான்.

"ராக்கி உங்களுக்கு மிஸ்டர் ராகவனை தெரியுமா?" என்று அவர் புகைபடத்தை காண்பித்து சிருஷ்டன் கேட்க

"தெரியாது சார்! இப்ப தான் அவரை பார்க்குறேன்!" என்று ராக்கி  சொன்னதும்  சிருஷ்டன் யோசனையானான். 

"சரி! மாதவ் சமபந்தப்பட்ட விசயங்கள் வேறு எதாவது தெரிந்தால் எங்களுக்கு கால் பண்ணிச் சொல்லு" என்று கூறிவிட்டு சிருஷ்டன் விரைய அத்வேதா அந்த ரூமை சுற்றி முற்றி பார்த்தாள்.

அப்போது சுவரில் ஒரு ஓவியம் அசைந்து கொண்டிருப்பதை பார்த்து அதன் அருகில் சென்ற அத்வேதா அதை தொட அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணின் கண்களில் இருந்து ரத்தம் வடிந்தது. அதை பார்த்த அத்வேதா பயந்து கண்களை மூட, சற்று நேரத்தில் கண் திறந்த வேதாவின் முன்  முயற்சிக்க அந்த சுவர் வெற்றிடமாக இருந்தது.

அங்கு ஒவியமின்றி இருப்பதை பார்த்த அத்வேதா திகைத்து நின்றாள்.


NIVETHA liked
ReplyQuoteNIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
05/10/2020 6:53 am  

interesting ud sis 😲 eagerly waiting to know about the painting 🧐vedhaku enna aaga poguthunu therilaye 🤔 romba wait panna vechurathiga sis.come soon with ur nxt ud 🤗 😎 


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 10 months ago
Posts: 180
13/10/2020 5:08 am  

பாகம் 4

தன் கேபினிற்குள் அத்வேதா நுழைய அவளை வரவேற்றான் ஆதி.

"ஹாய் மேம்! குட் மார்னிங்" - ஆதி.

"எஸ் ஆதி! குட் மார்னிங்! அந்த வீடியோவை பார்க்க சொன்னேனே பார்த்தியா?" – அத்வேதா.

"வந்ததும் வராததுமா  கேஸ் தானா? கொஞ்சம் ஜாலியா பேசலாமே மேம்"  – ஆதிசேசன். 

"அவ கூட ஜாலியா பேசுனா உன் சோலி முடிஞ்சிடும் பரவாயில்லையா?"  என்று சிருஷ்டன் கேட்க இருவரும் திகைப்போடு திரும்பினர்.

அங்கு சிருஷ்டன் நிற்க ஆதி எச்சில் விழுங்கினான். சிருவைப் பார்த்த ஆதி வேகமாக

"மேம்! இதுதான் ராகவன்  வீட்டில் இருந்த  கேமிராவில் பதிவாகி  இருந்தது! நீங்க சொன்ன மாதிரி கொலை நடந்த நேரத்தில் கேமிரா ஆஃப் ஆகி இருக்கு! மறுபடியும் காலையில் ஆன் ஆகி இருந்திருக்கு!" என்று அவன் வேகமாக சொல்ல

"அது! அந்த பயம் இருக்கட்டும்"! என்று சொல்லிக் கொண்டே சிருஷ்டன்  இவர்கள் அருகில் வந்தான்.

"ம்ப்ச்!" என்று சிருவை பார்த்து வேதா தன் அதிருப்தியை வெளிகாட்டினாள். 

அதை கண்டு கொள்ளாத சிருஷ்டன் "ம்ம் என்ன நடக்குது இங்க? குழந்தை பையா?"

"மேம்! ராகவன் சார் வீட்டில் ரெக்காட் செய்யப்பட்ட வீடியோவை பார்க்கச் சொன்னாங்க.. சார்" - ஆதி.

"ஓஹோ! என்ன கண்டுபிடிச்சீங்க வேதா ஜீ"  – சிருஷ்டன்.

"சார்! ராகவன் சார் இறந்த அன்று கேமிரா ஆன் ஆகலை! யாரோ ஆஃப் பண்ணி வச்சிருந்திருக்காங்க" – அத்வேதா.

"ம்ம்ம் ஓ! ஆனா யார் அதை  ஆஃப் பண்ணாங்க" – சிருஷ்டன்.

"அதை தான் ஆதிகிட்ட கேட்டிட்டு இருந்தேன்" என்று அத்வேதா சிருஷ்டனிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே

"மேம்!  ராகவன் சார் வீட்டிற்கு வந்தவுடன் அவர் மேனேஜர் வந்து இருக்கார்! ஆனா அவர் வந்து போனதுக்கப்புறம் தான் மேம் கேமிரா வேலை செய்யலை! அவர் தான் அந்த ரூமை நோக்கி போறார்" என்று ஆதி சில காட்சிகளை காண்பிக்க

அதில் ராகவனின்  மேனேஜர் வீட்டினில்  உள்ளே வருவதும் போவதும்   போன்ற காட்சிகள்  அந்த கேமிராவில் பதிந்து போயிருக்க! அதை பார்த்த  சிருஷ்டன் வேகமாக போனை எடுத்து கான்ஸ்டபிளிடம்  மேனேஜரை பிடித்து வருமாறு தன் போனில் உத்தரவு பிறப்பித்தான்.

அப்போது அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த  அத்வேதா ஆதியை ஒரு இடத்தில் வீடியோவை நிப்பாட்ட சொன்னாள். அதன்பின் அதை அவள்  ஜூம் செய்யச் சொல்ல அந்த ஓவியம் அவள் பார்வைக்கு அருகில் வந்தது. அதில்  சிருஷ்டனும் வேதாவும் அன்று ராகவன் வீட்டிற்கு விசாரிக்க சென்ற நாளின் காட்சிகள் பதிவாகி இருந்தது.  அதில் வேதா சென்றதும் அந்த  ஒவியத்தில் இருந்த கண்கள் நகர்ந்தது அத்வேதாவிற்கு தெரிந்தது.

"உனக்கு ஏதாவது தெரிந்ததா ஆதி" – அத்வேதா.

"இல்லையே? என்ன தெரிஞ்சது?" – ஆதி.

"அந்த வீடியோவை ரீவைண்ட் செஞ்சு பார், அதில் **** செகென்ட் ல அந்த ஓவியத்தின் கண்கள் நகரும் அதைப் பாரு" என்று வேதா சொல்ல அந்த கண்களை பார்த்த ஆதிக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் திரும்ப அந்த கண்களை பார்த்த வேதா திகைத்தாள். அந்த கண்களில் இருந்து ரத்தம் வழிந்தது.

போன் பேசிவிட்டு வந்த சிருஷ்டன் "வேதா சீக்கிரம் வா! மேனேஜரை பிடிச்சாச்சு! கொலையாளி யார்னு அவனை கேட்டா தெரிஞ்சிடும்" என்று அவன் சொல்ல அத்வேதா அவன் பின்னால் சென்றாள்.

அங்கு லாக்கப்பில்  மேனேஜர் பயத்தில் அமர்ந்து இருந்தான். அவனை பார்த்த சிருஷ்டன் அடிக்க செல்ல

"சிரு வேண்டாம் விட்டுங்க! அவனை" என்று கூறிய வேதா அவர் முன் சென்றாள்

"ராகவன் சார் இறந்த அன்னைக்கு நைட் என்ன பார்த்தீங்கனு  கொஞ்சம் மறைக்காம சொல்ல முடியுமா?" – அத்வேதா.

"நான் அவரை எதுவும் செய்யலை மேம்!" – மேனேஜர்.

"தெரியும் நீங்க எதுவும் பண்ணலைனு! கொஞ்சம் நீங்க உண்மையை சொன்னா நல்லா இருக்கும்" – அத்வேதா.

"சொல்றேன் மேடம்!" – மேனேஜர்.

"என்ன நீ பாட்டுக்க அவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க! இரண்டு போட்டா அவன் உண்மையை சொல்ல போறான்" என்று கூறியபடியே சிருஷ்டன்

அவரை அடிக்கச் செல்ல அத்வேதா அவனை தடுத்தாள்.

"விடு சிரு! அவர் சொல்லிடுவார்" – அத்வேதா.

"அய்யோ சொல்லிடுறேன் மேடம்! என்னை அடிக்காதீங்க" என்று கூறிய மேனேஜர் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.

"ராகவன் சார்! எப்பவும் நைட் தண்ணி அடிக்குறது வழக்கம்! அவர் குடிக்குறது அவர் மனைவிக்குக் கூட  தெரியாது!  அதனால் அவர் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறதால அவர் குடிக்கிற நேரத்தில் ஹாலில் இருக்கும்  கேமிரா எல்லாத்தையும்  ஆப் பண்ணிச் சொல்லிடுவார்! அவர் குடிக்குறதுக்கு டெயிலி  நான் தான் சரக்கு வாங்கிட்டு வருவேன்  அன்னைக்கும் நான் சரக்கு வாங்கிட்டு போனப்ப...." என்று அவன் இழுக்க

"ம்ம்ம் சொல்லுங்க" – சிருஷ்டன்.

"ம்ம்ம் சொல்லிடுறேன் சார்!" என்று ஆரம்பித்தவன் "ராகவன் சார் இறந்த அன்னைக்கு நான் சரக்கு வாங்கிட்டு  போய் கேமிரா எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டேன்! ஹாலுக்கு சரக்கோட போனேன் ஆனால் அவர் அன்றைக்கு குடிக்கவே இல்லை சார்! அதனால்  நான் வாங்கிட்டு  வந்த பாட்டிலை எடுத்துட்டு போய்  ஸ்டோர் ரூம்ல என்னை சார் வைக்க சொன்னார்.  நானும் அவர் சொன்னார்னு வச்சிட்டு வந்து பார்த்தா... "

"அங்க நீ யாரை பார்த்தா! மறைக்காம சொல்லு!" – அத்வேதா.

"அது வந்து மேம்!" என்று அவன் தயங்க

"ஒரு பெண் ராணி கோலத்தில் வாளை இடுப்பில் சொருகியபடி நின்றாங்களா" என்று அத்வேதா சொல்ல அந்த மேனேஜர் திகைத்தான்.

"ஆமா மேம்! அந்த உருவம் அய்யா அருகில் வந்து நின்றது! அதை பார்த்து அவர் கத்த முயன்றார்.. ஆனா சத்தமே வரலை மேம்! அடுத்து என்னாச்சுனு தெரியலை அவர் கழுத்தை பிடிச்சுட்டு  கொஞ்ச நேரத்தில் அவர் கீழே விழுந்திட்டார். அதை பார்த்ததில் இருந்து நான் பயந்து போய் இப்படி ஒளிஞ்சு வாழ்ந்துட்டு இருக்கேன்" – மேனேஜர்.

"யோவ்! என்ன பொய்யா சொல்ற! உன்னை" என்று சிருஷ்டன் அடிக்க முயல அத்வேதா அவனை தடுத்தாள்

அவர் சொல்றது உண்மைதான் என்று அத்வேதா சொல்ல

"உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! இந்த யுகத்தில் ராணியாம்! வாளாம்!" – சிருஷ்டன்.

"உங்களுக்கு இது பொய்யா தெரியலாம்! ஆனா இது தான் உண்மை சார்!" – அத்வேதா.

"வில் யூ ப்ரூவ் இட்!" – சிருஷ்டன்.

"எஸ்! ஐ வில்! அதுக்கு முன்னாடி நாம வர்மா சாரை சந்திக்கணும்!" – அத்வேதா.

"வாட்! வர்மா வா! இந்த ஓவியம் வரைவாரே அவரா! யூ ஆர் டைவர்ட்டிங் கேஸ் அத்வேதா" – சிருஷ்டன்.

"நோ! சார்! அவரை சந்திச்சா! உங்க கேள்விக்கெல்லாம் விடை கிடைச்சிடும் சார்"  – அத்வேதா.

"ஒகே தென் ஒய் வி ஆர் வெயிட்டிங்! வி மூவ்" – சிருஷ்டன்.

மறு நிமிடம் கிளம்பிய இருவரும் வர்மாவின் முன் அமர்ந்தனர்.

அவர்களை  பார்த்த வர்மா "எஸ்! வாட் கேன் ஐ டூ பார் யூ"

அதற்கு சிரு வேதாவை பார்க்க வேதா அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது வேதாவை சிருஷ்டன் இடிக்க தன் சுயத்திற்கு வந்த வேதா  தன் செல்லில் வைத்திருந்த அந்த ஓவியப்பாவை புகைப்படத்தை காண்பித்தாள்.

அதை பார்த்த வர்மா, "நைஸ் பெயிண்டிங்! இதை எதுக்கு என்கிட்ட காண்பிக்குறீங்க?" 

"இந்த புகைபடம் நீங்க தான வரைச்சீங்க  வர்மா சார்! அதனால் இதை பத்தி சில டிடெயில்ஸ் எங்களுக்கு வேணும்! அதனால் தான் உங்களை தேடி வந்தோம்  வர்மா ஜீ" – சிருஷ்டன்.

"நோ! நோ! இந்த புகைபடம் நான் வரையலையே! நானே இந்த புகைப்படத்தை இப்ப தான் முதன்முறையா பார்க்குறேன்" என்று வர்மா சொல்ல இருவரும் அதிர்ந்தனர்.

"வாட்! என்ன சொல்றீங்க ஜீ! இந்த புகைபடம் உங்களுடைய பெயிண்டிங்னு   ராகவன் சார் வாங்கி இருக்கார்" – அத்வேதா.

"நோ! வே! இது மாதிரி நடக்க வாய்ப்பே இல்லை எங்கேயோ  தப்பு நடந்திருக்கு! நீங்க  எதுக்கும் ரமணாவை கேளுங்க" என்று வர்மா சொல்ல இருவரும் ஓவிய கண்காட்சி நடைபெற்ற இடம் நோக்கி விரைந்தனர்.

அங்கு ரமணாவிடம் விசாரித்ததற்கு அவர் "சாரி சார்! வர்மா சார் ஓவியம் தான் இது! இதை ஏன் அவர் இல்லைனு சொல்றார்னு தெரியல" 

"அன்னைக்கு நடந்த நிகழ்ச்சியை  கொஞ்சம் நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க ரமணண்! யாராவது மீட் பண்ணி இருப்பிங்க! நீங்க மறந்து கூட போயிருக்கலாம்" என்று அத்வேதா கூற

சற்று நேரம் யோசித்த ரமணா "ஆஃங் ஞாபகம் வந்திடுச்சு! அன்னைக்கு ஒருத்தர் வந்து இந்த ஓவியம் வர்மா சார் காரிலேயே விட்டுட்டு வந்ததா சொல்லி குடுத்திட்டு போனார்! அதன்பின் தான் ஏலம் விட ஆரம்பிச்சோம்" என்று கூற

"அவர் எப்படி இருப்பார்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?" – சிருஷ்டன்.

மீண்டும் சற்று நேரம் யோசித்தவர் "அவர் பேஸ் எனக்கு சரியா ஞாபகம் இல்லை!அவர் கேப் போட்டு முகத்தை பாதி மூடி இருந்தார் . அதனால் என்னால சரியா பார்க்க முடியல" என்று அவர் கூற அத்வேதா வேகமாக "அன்றைக்கு நடந்த விழா வீடியோவை நாங்க பார்க்கலாமா சார்?"  என்று கேட்டாள்.

"ஓ! எஸ் மேம்!" என்று அவர் கூறிய  ரமணா அந்த வீடியோவை போட்டு காண்பிக்க அதை பார்த்த சிருஷ்டன் ஒரு இடத்தில் நிறுத்தச் சொன்னான். அதில் கேப் போட்டு ஒருவன் கூட்டத்தில் ஐக்கியமாக அதை ஜூம் செய்து பார்த்த அத்வேதாவும், சிருவும் அதிர்ந்தனர்.

அதில் ராக்கி நின்று கொண்டிருந்தான்.

*****

சிருவும், அத்வேதாவும் ராக்கி முன் நின்றனர்.

அவர்களை பார்த்ததும் அவன் பயப்பட அத்வேதா வேகமாக "ராக்கி நீங்க எதற்கு ஓவிய கண்காட்சிக்கு போனிங்க? நீங்க வரைந்த ஓவியமா இது!" என்று அவள் அந்த சித்திரப்பாவை ஓவியத்தை காட்ட அதை பார்த்த ராக்கி அலறினான்.

"நோ! அதை காண்பிக்காதீங்க!" என்று அவன் பயத்தில் கத்த

"என்னாச்சு ராக்கி! ஏன் இதை பார்த்து பயப்படுறீங்க? உங்களுக்கும் இந்த ஓவியத்திற்கும் சம்பந்தம் இருக்கா" என்று அத்வேதா  கேட்டாள்

"இந்த ஓவியத்தால தான் என் பிரண்ட் நாலு பேரை நான் இழந்தேன்" என்று அவன் கூற அத்வேதாவும், சிருஷ்டனும் திகைத்துவிட்டனர்.


NIVETHA liked
ReplyQuote
Page 3 / 4
Share: