Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

மர்மங்கள்  

Page 4 / 4
  RSS

NIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
13/10/2020 10:08 am  

nice ud sis very interesting.antha painting paththi threrinjukanumnu romba eagera iruku so please come quick with nxt ud 😎 


ReplyQuote
HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 10 months ago
Posts: 180
15/10/2020 2:32 pm  

பாகம் 5

 தன் நண்பர்கள் இறந்து போனதற்கு அந்த ஓவியப் பெண் தான் காரணம் என்று ராக்கி சொல்ல

அத்வேதா வேகமாக  "நீ என்ன சொல்லுற ராக்கி? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு" என்று சொல்ல ராக்கி தன்னிடம் அந்த ஓவியம் வந்து சேர்ந்த  தருணத்தை சொல்ல ஆரம்பித்தான். 

"நான், மாதவ் மற்றும் என் பிரண்ட்ஸ் இரண்டு பேரும்  ஓவியக் கல்லூரி  மாணவர்கள். அன்று நாங்க எங்க  கிளாஸ்ல  இருக்கும் போது எங்க புரோபசர்  இந்த ஓவியத்தை எங்ககிட்ட காண்பிச்சு இது சித்திரப்பாவை ஒவியம்! இந்த ஓவியம்  பல வருசம் பழைமை வாய்ந்தது. அப்ப வாழ்ந்த ராஜா பகதூர் தன் ராணியை  ரொம்ப விரும்பினார். ராணியும் ராஜா மேல் பைத்தியமா இருந்தாங்க! அப்ப தான் ராஜாக்கு ஒரு ஆசை வந்துச்சு! தன் ராணியை ஓவியமா தீட்டி வைக்கணும்! ராஜாவும் தன் ஆசையை சொல்ல, அவர் அவையில் இருந்த அமைச்சர்கள் மக்களுக்கு தெரிவிக்க  பலர் ராணியை ஓவியம் வரைய முன்வந்தனர். அவர்களுக்குப் போட்டிகள் வைக்கப் பட்டன. அவர்கள் வரைந்ததை வைத்து அவர்களில் ஒருவன் தேர்வு செய்யப்பட்டான். அவன் ராணியை நிற்க வைத்து ஓவியம் வரைய ஆரம்பித்தான். சுமார் 7 நாட்களுக்கு மேல் அவன் ஓவியம் வரைய தன் ராஜாவின் ஆசை நிறைவேற்றும் பொருட்டு ஆடாமல் , அசையாமல் அப்படியே நின்றாள் ராணி. அவரை  பார்த்து ஓவியமாக ஓவியன் அவன்  தீட்டிக் கொண்டிருக்க  இறுதியில் கால் வரையும் நிலையில் ராணி கீழே விழுந்தார். அவரை அனைவரும் எழுப்ப முயல அவர் மீளா துயில் கொண்டிருந்தார். தன் ராணியின் பிரிவினை ஏற்க முடியாத ராஜா ஒரு காலை வேளையில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார். ராணி இறந்தாலும் தன் கணவனின் ஆசையை நிறைவேற்றாமல் உயிர் பிரிந்ததால் இன்னும் அவர்  ஆவியாக உலாவுறதா  கதைகள் பல  சொல்றாங்க!" என்று ராஜா பகதூர் பற்றி சொல்லி முடித்த புரோபஸர் மாணவர்களிடம்

"இப்ப இந்த ஓவியத்தை இங்க எதுக்கு கொண்டு வந்தேனா! இந்த ஒவியத்திற்கு மாடலாக  நின்ற ராணி சாரா தேவியின்  ஓவியம் முற்றுப் பெறவில்லை. அவரது கால்கள் இன்னும் வரையப்படாமல் இருக்கின்றது! ஆகையால் ஓவியத்தின் வல்லவர்களான உங்களில்  யார் இந்த ஓவியத்தின் கால்களை வரைந்து இந்த ஓவியத்தை  முடிக்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த சன்மானம்  காத்துட்டு இருக்கின்றது!" என்று அவர் கூறி முடிக்க மாணவர்கள் பலர் அந்த போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுக்க! பல சுற்றுக்கள் வைத்து அந்த ஓவியப்பாவை ஓவியத்தை முடிக்கும் வாய்ப்பு ராக்கிக்கும்  அவனது நண்பர்களுக்கும் தேடி வந்தது. 

ராக்கியின் நண்பர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஓவியத்தின் கால்களை தத்ரூபமாக வரைய  முடியாமல் போக இறுதியில் அந்த ஓவியம் ராக்கியிடம் வந்து சேர்ந்தது. ஆனால் அந்த ஓவியத்தை முடிக்க முயற்சி செய்தவர்களில் சிலர் பைத்தியம் பிடித்தும், சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அதனால் அந்த ஓவியத்தினால எங்களுக்கும் எதாவது ஆகிடும்னு பயந்து தான் நான் அந்த ஓவியத்தை  எங்களை விட்டு விளக்க முயற்சி செய்தேன்.

"அப்ப தான் வர்மா சார் ஓவிய கண்காட்சி நடக்கும் விசயம் எங்களுக்கு தெரிந்தது. அதனால்  அதை நான் பயன்படுத்துக்கிட்டேன்" என்று ராக்கி  சொல்ல அத்வேதாவும், சிருஷ்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அந்த ஓவியத்தை நீங்க வரைய முயற்சி செய்யலையா?" – அத்வேதா.

"இல்லை மேம்!" – ராக்கி.

"ஏன்?" – அத்வேதா.

"இல்லை மேம்! தினமும் நைட்  ஒரு உருவம் வந்து என்னை வரைந்து  கொடு  என்று என்னை பயமுறுத்துகிறது! அதனால் நான் பயந்துட்டு அந்த ஓவியம் பக்கமே போகல மேம்"  என்று அவன் கூற வேதா  யோசனையோடு அந்த இடத்தைவிட்டு அகன்றாள். சிரு போன் கால் வர அதை எடுத்துக் பேசியபடி அவள் பின் சென்றான்.

சிருஷ்டனும், அத்வேதாவும் கிளம்பியதும் கதவை சாற்றிவிட்டு திரும்பிய ராக்கியின் முன் நின்றாள் பாவை அவள். அவளை பார்த்ததும் ராக்கி கத்த ஆரம்பிக்க அவன் தொண்டையில் இருந்து சத்தம் வெளிவர மறுத்தது.

வேகமாக திரும்பி கதவினை அவன் தட்ட முயல அவன் கைகள் செயலிழந்து போனது. அவன் முன் வந்து நின்ற பாவையவள் அவனிடம் வண்ண தூரிகையை நீட்ட அதை மறுகை கொண்டு வாங்கியவன் 'இல்லை' என்று தலையாட்டியதும் மூக்கில் இருந்து ரத்தம் வழிய அப்படியே அந்த ஓவியத்தின் மேலேயே விழுந்தான்.

வெளியே வந்த அத்வேதா சற்று தூரம் சென்றதும் நின்றாள். வேகமாக திரும்பிப் பார்க்க ராக்கியின் மூடிய ரூமின் கதவுகள் அவளுக்கு தெரிந்தது. அதை பார்த்தவள் வேகமாக ராக்கியின் ரூம் நோக்கி செல்ல முயல சிருஷ்டன் அவளை தடுத்தான்.

"வேதா அடாப்ஸி ரிப்போர்ட் வந்திடுச்சு!" – சிருஷ்டன்.

ஓ! என்ன வந்திருக்கு ரிப்போர்ட்ல!" – அத்வேதா.

"அவங்களுக்கே தெரியல வேதா! ஹார்ட் அட்டாக்கா இருக்கலாம்னு சொல்றாங்க! ஆனா அப்படி உறுதியா சொல்லவும் முடியாது! என்றும் போட்டிருக்கு! அவங்களால டெத்க்கான காரணம் கண்டுபிடிக்க முடியலை"என்று சிருஷ்டன் சொல்ல

அதை கேட்ட அத்வேதா "ஓ! நோ!" என்று ராக்கியின் அறை கதவை நோக்கிச் செல்ல அவளை பின்பற்றி சிருஷ்டனும் சென்றான்.

வேதா ராக்கியின் கதவை தட்ட ராக்கி கதவை திறக்காமல் இருக்க சிருஷ்டன் தன் பலம் கொண்டு கதவை தள்ள கதவு சட்டென்று திறந்தது.

கதவை திறந்து உள்ளே சென்றவர்கள் ராக்கியை பார்த்து அதிர்ச்சியாகினர். அங்கு ராக்கி மூக்கில் ரத்தம் வழிய கையில் தூரிகையோடு இறந்து கிடந்தான்.

காரில் அத்வேதா மவுனமாக வர, சிருஷ்டன் அந்த மெளனத்தை கலைத்தான். 

"இப்ப நடந்துட்டு இருக்குற விசயங்கள் எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?" – சிருஷ்டன்.

"சில விசயங்களை நம்பித்தான் ஆகணும் சார்!" – அத்வேதா.

"இப்ப அந்த சித்திரப்பாவைக்கு என்ன தான் வேணுமாம்?" – சிருஷ்டன்.

"அவங்க சித்திரம் முழுவதுமா வரையணும்னு ஆசைப்படுறாங்க?" – அத்வேதா.

"வாட்! நீ என்ன முட்டாளா? அப்படி வரையணும் நினைக்குறவங்களை தான் அந்த அம்மா கொன்னுட்டு இருக்கு! இனி  எவன்  வரைவான்?" – சிருஷ்டன்.

"ம்ம்ம் அதுவும் கரெக்ட் தான்! அப்ப நாம வேற வழி தான் கண்டுபிடிக்கணும்!" – அத்வேதா.

"ராக்கியையும் அவன் நண்பனையும் அந்த அம்மா கொன்னதுக்கு கூட எதாவது லாஜிக் இருக்கு! ஆனால் இந்த ராகவனை எதுக்கு இந்தம்மா கொன்னாங்க?" - சிருஷ்டன்

"அது..." என்று இழுத்த அத்வேதா "அந்த காலத்தில் ராணி சாராதேவியுடைய ஆத்மா திருப்தி இல்லாமல் அலையுதுனு அவரை பகதூர் பின் ஆட்சி செய்த ராஜா வம்சத்து ஆட்கள் எல்லாரும் சேர்ந்து சில மந்திரங்கள் மூலம் கட்டி வைத்தார்கள். ஆனா அந்த ப்ரொஃபெசர் எப்போ அந்த ஓவியத்த அந்த ஜமீனில் இருந்து கொண்டு வந்தாரோ அப்பவே அவங்க அந்த மந்திர கட்டுகளில் இருந்து வெளியே வந்துட்டாங்க,  எப்ப ராணியோட ஓவியம் முற்றுப் பெறனும் ன்னு காலேஜ் பசங்கள் கிட்ட அவங்க ஓவியத்துல கால் வரைய சொன்னாறோ அப்பவே ராணியும் ராஜாவின் ஆசை நிறைவேற போதுன்னு நம்ப ஆரம்பிச்சாங்க! அந்த ஓவியம் போற இடங்களில்  இருக்கும் எல்லாரையும் அவங்க காலை வரைய சொல்லிக் கேட்கிறாங்க, அவங்க பயந்துட்டு மாட்டேன்னு சொன்னதும் ராஜாவின் ஆசை நிறைவேற்ற முடியாத அந்த கோபத்தில் கொல்றாங்க." – அத்வேதா.

"அப்ப இதுக்கு ஒரு முடிவே இல்லையா?"  – சிருஷ்டன்.

"ம்ம்ம்" என்று சற்று நேரம் யோசித்த வேதா "அதற்கு ஒரு முடிவு இருக்கு!" என்று சொல்ல சிரு அவளை கேள்வியாக பார்த்தான்.

"நாம் உடனே வர்மா சார் கிட்ட போகணும்" என்று அத்வேதா சொல்ல சிருஷ்டன் குழம்பியபடியே அவளைப்  பார்த்தான்.

இருவரும் வர்மா சார் முன் நின்றனர். வர்மா அவர்களை குழப்பமாக பார்த்தபடி "திரும்பவும் நீங்களா? இப்ப எதற்காக இங்க வந்து இருக்கீங்க?" 

"நீங்க எங்களுக்கு ஒரு உதவி செய்யணும் வர்மா சார்" - அத்வேதா கூற

"ம்ம் சொல்லுங்க? என்ன செய்யணும்." – வர்மா.

அதற்கு அத்வேதா கூறிய பதிலில் வர்மா மற்றும் சிரு அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

வர்மா அந்த ஓவியத்தின் கால்களை வரைய அந்த ஓவியம் முற்றுப் பெற்றது. அந்த ஓவியம் முற்றுப் பெற்றதும் அதை வாங்கிக் கொண்டு போன அத்வேதா அதை தீயினில் ஈட்டு எரித்தாள். அதை பார்த்த சிரு "இதை நீ மொதலையே செஞ்சிருக்கலாம்! எதற்கு தேவையில்லாம வரையணும்? எரிக்கணும்?"  – சிருஷ்டன்

"வரையாமா இந்த ஓவியத்தை எரிச்சா அவங்க திரும்ப வந்திருப்பாங்க!  அதனால் தான் நான் இப்படி செஞ்சேன்!" – அத்வேதா.

"இனி அவங்க வர மாட்டாங்களா!" – சிருஷ்டன்.

"வரமாட்டாங்க" – அத்வேதா.

"அதை எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற" -  சிருஷ்டன்

"அவங்க நினைச்சபடி ஓவியம் முற்றுப்பெற்றிடுச்சு! அதே மாதிரி அவங்க அவர் கணவர் பகதூரையும் பார்த்துட்டாங்க! இனி அவங்க திரும்ப வர மாட்டாங்க" – அத்வேதா

"பகதூரா?  யாரைச் சொல்ற நீ ! ஓ! அந்தம்மா ஓட ஆளா? ஆனா அவரை எங்க அந்தம்மா பார்த்துச்சு!  நம்ம வர்மா சார் தான வரைந்தார்?" என்று ஆரம்பித்த சிருஷ்டன் பாதியிலேயே நிறுத்திக் கொண்டான்

"ஓ! அந்த அம்மாவை டைவர்ட் பண்ணத்தான் வர்மா சாரை ராஜா கெட்டப் போட்டு வரையச் சொன்னியா? நீ கில்லாடி டீ பேயவே ஏமாதிட்டியே?" என்று சிருஷ்டன் கூறிவிட்டு முன்னே செல்ல பின்னால் சென்ற அத்வேதாவிற்கு நினைவுகள் வர்மாவை தான் சந்தித்த நாளிற்குச் சென்றது.

வர்மாவைப் பார்த்த வேதா அதிர்ந்தாள்.  அவர் வேதா கண்களுக்கு ராஜ தோரணையில் ராஜா பகதூராக தெரிந்தது அவள் நினைவில் ஆட அதை நினைத்துக் கொண்டே சிருஷ்டன் பின்னால் சென்றாள் அத்வேதா .

பாவை தணிந்தாள்.

முற்றும்

 

விரைவில் அடுத்த மர்மத்தோடு சந்திக்க வருகிறேன்.


NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
15/10/2020 3:36 pm  

nice and interesting ud sis 😍 waiting for ur next new ud 😍 


ReplyQuote
Page 4 / 4
Share: