Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

yatchagan ratchasanaga story  

Page 5 / 5
  RSS

HoneyGeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 9 months ago
Posts: 175
12/09/2020 5:15 am  

ராட்சஷன் 40

அந்த உருவத்தின் முகமூடியை கழட்ட அவர் முயற்சி செய்ய அந்த உருவம் அவரை தள்ளி விட்டுச் சென்றது.

வேகமாக அந்த உருவத்தை பின்னால் இருந்து பிடித்த ப்ரசாத்  முகமூடியை கழட்ட அங்கு தேவ் நின்று கொண்டிருந்தார். தேவ்வை  கண்ட ப்ரசாத்

"தேவ் நீயா!!!!" – ப்ரசாத்.

"ஆமாம்!"  - தேவ்.

"நீ இப்படி எதாவது செய்வேன்னு தெரியும் தேவ்! அதான் நான் கவனமா இருந்தேன்! நீ திருந்தவே மாட்டியா!!" - ப்ரசாத்.

"ஆமாம் நான் திருந்தமாட்டேன்" – தேவ்.

"எதும் பண்ணாத அவன் இப்போ வெளிய வந்தா எல்லாருக்கும் ஆபத்து" - ப்ரசாத்.

"எனக்கு அது தான் வேணும்" - தேவ்.

"கொஞ்சம் யோசி... நம்ம சண்டைக்கு அடுத்தவங்க ஏன் கஷ்டப் படனும்." - ப்ரசாத்.

"ஐ டோன்ட் கேர்" - தேவ்.

"நா இருக்குற வரை விடமாட்டேன்" - ப்ரசாத்.

"நீ இருந்தா தான..." - தேவ்.

பேசிக் கொண்டு இருந்தவர்கள் சண்டை இட ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் தேவ் ப்ரசாத்தின்  தலையில் அடித்தார்.

தலையில் அடித்ததும் மயங்கி விழுந்த ப்ரசாத், கடைசி நொடி வரை "வேண்டாம் தேவ்.. " என்று கூறியபடி கண்கள் மூட 

தேவ் வினய்யின் சவப்பெட்டி அருகில் சென்றார்.

48 நாள் முடியும் தருவாயில் இருக்க இரண்டு நாள் முன் வினய் சவப்பெட்டி திறக்கப் பட, அவன் ஆக்ரோசமாக எழுந்தான். எழுந்தவன் தோல் முழுவதும் கருகிப் போய், பார்க்க பயங்கரமாய், முழு மிருகமாக நிற்க அவனை கண்ட தேவ் பயத்தில் எச்சில் விழுங்கினார்.

ஒரு நொடி தான் தவறு செய்துவிட்டோமோ என்று யோசித்தார். உறுமல் சத்தம் கேட்டு வினய் பக்கம் திரும்பினார். அவன் உறுமல் அறை எங்கும் எதிரொலிக்க தேவ் பயத்தில் எச்சில் விழுங்கினார். அவனை பயப் பார்வை பார்த்தபடி மெதுவாக வாசல் கதவை நோக்கி நகர்ந்தார். பின்னல் நகர்ந்தவர் கீழே மயக்கமாக கிடந்த ப்ரசாத் மீது கால் தடுக்கி விழுந்தார்.

சத்தம் கேட்டு உறுமலுடன் அவர் புறம் திரும்பினான் வினய். தேவ்வை பார்த்த வினய் அவரை நோக்கி மெல்ல நடந்து வந்தான்.

தேவ் பயத்தில் கண்களை மூடிக் கொண்டார். அவனை அவர் தான் ஓநாய் மனிதனாக மாற்றி இருந்தாலும் இரவுகளிலும், பௌர்ணமி அன்றும் அவனை பார்த்ததில்லை. முதல் முறை அவனை ஓநாயாக பார்த்ததும் தன் தவறு புரிந்தது. தம்பி மற்றும் தம்பி மகனுக்காக ஒரு நொடி வருந்தினார். ஆனால் இப்பொழுது அதற்கு நேரமில்லை தான் உயிரோடு இருக்க இங்கிருந்து வெளியேருவதின் அவசியத்தை உணர்ந்து மெல்ல நகர்ந்தார்.

வினய் தேவ் ஐ நோக்கி முன்னேறினான். அவன் பார்வை தேவ் ஐ பசியோடு பார்க்க, உறுமலோடு அருகில் சென்றான்.

அதை கண்ட தேவ். "வினய் மை பாய்! நான் தான் தேவ்! என்னைத் தெரியலயா? நம்ம பார்ட்னர்ஸ்! இஃப் யூ லீவ் மீ... நான் உனக்கு எவ்வளவு பணம்னாலும் தர்றேன்" என்று தேவ் சொல்ல அதை கவனிக்கும் நிலையில் இல்லாத வினய் அவரை துரத்த முயல தேவ் ஒடினார்.

**********

தூக்கத்திலிருந்து அலறிய படி எழுந்தாள் நிதா. முகமெல்லாம் வியர்த்து வழிய ஃபோனைத் தேடி யட்சன் நம்பருக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவனைப் பற்றி தெரிந்து கொள்ள தவித்த நிதா வீட்டின் லேன்ட் லைனுக்கு அழைத்தாள். அழைப்பு ஏற்க படாமல் இருக்க யாரிடமும் சொல்லாமல் யட்சனை காண வண்டியை எடுத்துக் கொண்டு ப்ரசாத் இருப்பிடம் நோக்கிச் சென்றாள். போகும் வழியில் இடையில் யாரோ குறுக்கிட்டு ஓட சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள். 

அங்கு வினய் தேவ்வை துரத்திக் கொண்டு ஓட அதை யட்சன் என்று நினைத்து பின்னால் சென்றாள் நிதா. அங்கு வினய் தேவ் மீது உறுமியபடி பாய, அவனை அந்த கோலத்தில் பார்த்த நிதா பயம் மேலிட அலறினாள். தேவ்வை  துரத்தி பிடித்த வினய் அவரை வேட்டையாட தேவ் துடி துடித்து இறந்தார்.

தேவ்வை வினய்  வேட்டையாடுவதை பார்த்த நிதா பயத்தில் அலற வினய்யின் கவனம் நிதாவிடம் சென்றது. வினய் தன்னை பார்த்ததும் வேகமாக அவள் ஓட, வினய் இப்பொழுது நிதாவைத் துரத்தினான்.

திரும்பி திரும்பி பார்த்தவாறே ஓடிய நிதா பின்னால் அவன் வரும் சத்தம் இல்லாமல் இருக்க, மூச்சு வாங்க ஒரு மரத்தின் அடியில் இளைபாற மரத்தில் மேலிருந்து தொங்கியபடியே அவளது கழுத்தை பிடித்தான் வினய்.

வினய் நிதாவின் கழுத்தை பிடித்து நெறிக்க மூச்சு வாங்கிய படியே கீழே விழுந்த நிதா மயக்கமானாள். அப்போது வினய் நிதாவின் அருகினில் சென்று குனிய  அவளை பின்னிருந்து பிடித்து இழுத்து கீழே தள்ளினான் யட்சன்.

யட்சனை பார்த்ததும் வினய் கவனம் அவன் புறம் திரும்பியது உறுமிய படி அவனை நெருங்க. யட்சன் நிதாவை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான், வினய் யட்சனை துரத்திச் சென்றான்.

யட்சன் மறுபடியும் வினய் சவப்பெட்டி இருந்த அறையினுள் நுழைந்து நிதாவை படுக்க வைத்துவிட்டு கதவை சாற்றி வெளியேறினான்.

வினய் யட்சனை  ஆக்ரோசமாக தாக்க முற்பட, யட்சன் திருப்பி தாக்கினான். 48 நாள்  கடைபிடித்து வரும் விதிமுறைகளால்  யட்சன் வலுவிழந்து நிற்க, வினய்யின்  ஆக்ரோசத்தை சமாளிக்க முடியாமல் திணறினான் யட்சன்.  இருவரும் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள,  வினய்யின் தாக்குதல்களை  தன் வலுவிழந்த சக்தி  கொண்டு யட்சன் தடுத்துக் கொண்டிருந்தான்.  

யட்சனை  வீழ்த்த  வினய் மேற்கொண்டு எதும் செய்வதற்குள் மயக்கத்திலிருந்து எழுந்த ப்ரசாத் அவனை தடுத்தார். அவன் மீது புனித நீரை தெளித்து அவனை விரட்டியவர் யட்சனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல முயல திரும்பவும் யட்சனை பின்னிருந்து தாக்கினான் வினய்.  ப்ரசாத்தையும் அவன் தாக்க முயல வினய்யை தடுக்க முடியாத ப்ரசாத் அவன் முகத்திற்கு நேராக புனிதநீரை தெளிக்க அவரை விட்டான்.

வினய் தன்னை விட்டதும்  மைக்கேலை தேடி ஓடினார்.

யட்சன் வினய் இருவரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வலுவிழந்து கீழே  விழுந்த யட்சன் கை, கால்களில் நுரை தள்ள இழுத்துக் கொண்டிருக்க  அதை பார்த்த வினய் உறுமியபடி யட்சன் அருகில் வந்து அவன் தலையை கடித்து துண்டிக்க முயல, கை கால்கள் வெட்டிக்கொள்வதால் யட்சனின் கழுத்தில் கடிக்க  இயலவில்லை. அருகே இரும்பு கம்பி ஒன்று இருக்க அதை கொண்டு யட்சனின் நெஞ்சில்  குத்தினான் வினய். அந்த கம்பி  யட்சனின் நெஞ்சில் பாய்ந்ததும் தான்  புதைக்கப்பட்ட  இடத்திலேயே விழுந்து தன் இறுதி  மூச்சுக்கு யட்சன் போராட மேலும் அந்த இரும்பு கொண்டு அவனை குத்தினான் வினய். ரத்தம் எல்லாம் கீழே வடிய கொஞ்சம் கொஞ்சமாக தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டான் யட்சன்.

அவன் இறந்ததைக் கண்டு ஆக்ரோசமாக வினய் சிரிக்க அவன் பின்னால் இருந்து அதே இரும்பு  கொண்டு அவனை குத்தினார் ப்ரசாத். வினய் அவரை தடுக்க  முனைய அவரை மேலும் குத்திய ப்ரசாத் கையில் இருந்த கோடாரி கொண்டுஅவன் தலையை துண்டித்தார். "ரெஸ்ட் இன் பீஸ் மை சன்! நீ இருந்தா எல்லாரையும் கொன்றுவ  எனக்கு வேற வழியில்லை டா!" என்று ப்ரசாத்  கூற, அதை கேட்டபடியே  கண்மூடினான்  வினய் .

மேகம் இருண்டு மழை பொழிய  இடி சத்தம் கேட்டு கண்விழித்தாள் நிதா. கண் விழித்ததும் யட்சனைத் தேடி வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்.

அங்கு யட்சன் இறந்து கிடந்ததை கண்டு அவன் அருகில் வேகமாக சென்று அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

"நோ! டோலு! என் டோலு சாகக் கூடாது ! எழுந்து வாடா டோலு! நான் உன் டாலி வந்துருக்கேன்! ப்ளீஸ் வாடா!  நீ மனிசனா இல்லைனாலும் பரவாயில்லை! நீ என்கூட இருந்தா மட்டும் போதும்! திரும்பவும் என்னை விட்டுட்டு போயிட்டியே! அப்பவே தடுத்தேன் என்னை விட்டு போகாதேன்னு கேட்டியா" என்று அவனை கட்டிக் கொண்டு அழுதாள் நிதா.

அப்பொழுது அங்கு வந்த மைக்கேல்சன், விஜயன் இருவரும் இடம் இருந்த கோலத்தைப் பார்த்து நடந்ததை ஊகித்தனர்.

"நாங்க என்ன சொல்லிட்டு போனோம் ப்ரசாத்" - மைக்கேல்சன்.

"கொஞ்ச நேரம் சமாளிச்சிருந்தா யாராவது ஒருத்தரையாவது  காப்பாற்றி இருக்கலாம்" - விஜயன்.

"என்னால முடியல விஜயன். மகனா? இல்ல நா கூட்டிடு வந்தவனா?  ஆனா இப்போ ரெண்டு பேரும் இல்லாம போய்ட்டாங்க" - அழுதபடி கூறினார் ப்ரசாத்.

"எல்லா முயற்சியும் இப்படி உபயோகமில்லாமல் போகும்னு நினைக்கல" - மைக்கேல்சன்.

"சரி அடுத்து நடக்க வேண்டியத பார்ப்போம்" - விஜயன்.

"ம்...ம்..." - ப்ரசாத்.

அடுத்து வந்த நிமிடங்களில் ப்ரசாத், வினய் மற்றும் யட்சனுக்கு மைக்கேல்சன், விஜயன் உதவியுடன் இறுதி சடங்குகள் நடத்தி இருவரையும்  புதைத்தார். ப்ரசாத் தன் பணப்பலம் மூலம் நடந்த விசயங்கள் வெளியே தெரியாமல் யட்சன் மற்றும் வினய் பற்றி மறைத்தார். 

**********

யட்சன் இறந்ததை ஜீரணிக்க முடியாத நிதா தினமும் அழுது கொண்டே இருக்க அவளை ஒரு கரம் தொட்டது . நிதா முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வேகமாக திரும்பிப் பார்க்க அங்கு பவ்யா நின்றிருந்தார்

"என்னாச்சு நிதா! ஏன் அழுதுட்டே இருக்க!" - பவ்யா.

"....." - நிதா.

"அன்னைக்கு நைட் எங்கடா போன... அதுக்கப்பறம் ரொம்ப அழுதுகிட்டு இருக்க" - பவ்யா.

"....." - நிதா.

"சொன்னாதான மா தெரியும். அம்மா கிட்ட சொல்லுடா. நான் இருக்கேன்" - நிதா.

" எனக்கு அத்தான பார்க்கனும்" - நிதா.

"மாப்பிள்ளை உன்னை பார்க்க சீக்கிரம் வந்துடுவார்! அழாத மா!" – பவ்யா.

"......" - நிதா.

"மாப்பிள்ளை எந்த ஊருக்கு போயிருக்காருன்னு சொல்லு. சாம் கிட்ட சொல்லி அம்மா அவர் கிட்ட கூட்டிட்டு போக சொல்றேன்" - பவ்யா.

அதற்கு வேகமாக தன் கண்ணீரை துடைத்தவள் ஒரு முடிவோடு பவ்யா விடம் பேசத் தொடங்கினாள்.

"மாம்! எனக்கு இங்க இருந்தா அவர் நினைப்பா இருக்கு! நாம ஏன் அவர் திரும்பி வர வரைக்கும் இந்தியா போகக் கூடாது" – நிதா.

"ஓ! நீ சொல்வதும் சரிதான்! ஆனா மாப்பிள்ளை வந்து கேட்டா" - பவ்யா.

என்ன சொல்வதென்று தெரியாமல், உண்மையையும் சொல்ல முடியாமல் "நான் அவர் கிட்ட சொல்லிக்கிறேன்." என்றாள் நிதா.

" அது சரியில்லை! நீ மாப்பிள்ளைக்கு கால் போட்டுக் குடு. நான் கேட்கிறேன்" - பவ்யா.

"இல்லமா நாம கூப்பிட முடியாது. அவரா கூப்பிட்டதும் தான் பேச முடியும்" - நிதா.

"அவர்கிட்ட சொல்லாம எப்பிடி" - பவ்யா.

"அவர் என் பாதுகாப்புக்காக தானே இங்க இருக்க சொன்னார். இங்க விட இந்தியா சேஃப். சோ ஒன்னும் சொல்ல மாட்டார்" - நிதா சமாளித்தாள்.

"சரி! நமக்கு கொஞ்சம் இடமாற்றம் வேண்டும் நீயும் அவரை பத்தியே நினைச்சுட்டு இருக்க" – பவ்யா.

"எஸ் மாம்! இனி நாம இங்க இருக்க வேண்டாம்! வாங்க நாம இந்தியா போகலாம்! என்னால் அவரை மறக்க முடியலை" என்று நிதா கூற

"என்ன அவரை மறக்கப் போறியா?.. " - பவ்யா.

"இல்லமா. இங்க இருந்தா அவர பார்க்கப் போறேன்னு அன்னைக்கி மாறி போயிட்டு, இல்லனதும் அழுதுட்டு இருப்பேன். இதுவே இந்தியானா அப்பிடி எல்லாம் வர முடியாதுன்னு தெரியும்ல அததான் அப்பிடி சொல்லிட்டேன்" - நிதா.

பவ்யா அதற்கு ஏதோ சொல்வதற்குள் வைத்தி அவளை தடுத்தார் .

"இது தான் உன் வீடு நிதா? எங்கப் போகப் போற நீ?" – வைத்தி.

"அவ கரெக்டா தான் சொல்றா! கொஞ்ச நாள் அவ வேற இடம் போகணும்னு சொல்றா அவளை தடுக்காதீங்க! அவளை இப்பவாவது பீரியாவிடுங்க!"  – பவ்யா .

"நீ தேவையில்லாம எங்களுக்குள் வராத" – வைத்தி.

அந்த கணம் பவ்யா முடிவெடுத்தார் நிதாவை இந்தியா அழைத்துச் செல்ல, "அவ என் பொண்ணு கூடத்தான் வைத்தி! வாமா! நாம போகலாம்! சாம்கிட்ட சொல்லி டிக்கட் ரெடி பண்ணச் சொல்றேன்!".

"என்னடி வாய் நீளுது? அவளையும் உன்னை மாதிரி ஆக்கப் பார்க்குறீயா? நிதா அவ பேச்சை கேட்காத? நீ இந்தியா போக வேண்டாம்  ? என் முடிவை மாத்திகிட்டு, பவ்யாவை உனக்காக இங்க இருக்க அனுமதி கொடுத்தேன்! அதே மாதிரி நீயும் உன்  முடிவ மாத்திக்கமா?" – வைத்தி.

"நோ டேட்!  ஐ நோ வாட் அம் டூயிங் டேட்! நான் உங்க பேச்சு கேட்டு இதுவரை நடந்தது போதும்! இப்பவாவது என்னை என் இஷ்டப்படி வாழவிடுங்க ப்ளீஸ் டேட்! ஐ நீட் சேன்ஜ்" என்று நிதா கெஞ்ச வைத்தி வாயடைத்து நின்றார்.

பவ்யா நிதாவின் இந்தியா பயணம் பற்றி  சாமிடம் சொன்னதும் அவன் நிதாவை பார்க்க வந்தான்.

"என்னாச்சு நிதா! ஏன் உன் கணவர் இன்னும் உன்னை  கூட்டிட்டு போக வரலை! வினய் சார் ஆபிசிற்கும் வரல! இங்க என்ன தான் நடக்குது! நீ இப்ப எதுக்கு இந்தியா போகணும்னு சொல்ற" – சாம்.

"என்ன இப்ப எதுவும் கேட்காத சாம்! காலம் வரும் போது உன்  எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்! ஜஸ்ட் டேக் மீ அவுட் சாம்! ப்ளீஸ்" என்று நிதா கெஞ்ச சாம் அதற்கு மேல் பேசவில்லை .

நிதா யட்சன் இறந்ததை யாருக்கும் சொல்லாமல் தன்னுள்ளே போட்டு புதைத்துக் கொண்டாள்.

அவள் உள்ளூணர்வு திரும்பவும் அவன் வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்க அவள் யட்சனின் நினைவுகளோடு இந்தியா செல்ல புறப்பட்டாள்.

இதோ டிக்கட் கிடைத்து இந்தியா  நோக்கி செல்லும் விமானத்தில்  பயணம் செய்ய ஆரம்பித்தனர்  பவ்யா , சாம் மற்றும் நிதா.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் பவ்யா நிதாவிடம் "நிதாமா! மாப்பிளைகிட்ட நீ இந்தியா போறதை சொல்லிட்டியா! அவர் உன்னை வேலை முடிஞ்சதும் பார்க்க வரணும் இல்லையா அதான் சொன்னேன்மா" – பவ்யா

"எஸ் மாம்!" என்று நிதா கூறி அழுகையை அடக்கியபடி திரும்பிக் கொள்ள, சாம் நிதா பொய் சொல்வது தெரிந்தும் அவள் நேரம் வரும் போது தன்னிடம் அனைத்தும் சொல்வாள் என்று நம்பிக்கையோடு அமைதியாக இருந்தான்.

யட்சனின் நினைவுகளோடு நிதா கண்கள் கலங்க பவ்யாவிற்கு தெரியாமல் அந்த டாலரை தன் பையில் இருந்த எடுத்து பார்த்துக் கொண்டே இந்தியா நோக்கிய தன் பயணத்தை  தொடர்ந்தாள்  நிதா.

கடமையை முடிக்க வேண்டும் என்று உயித்தெழுந்து ராட்சஸனாக மாறி, தன் கடமையை முடிக்காமல் வினய்யுடன் போராடி தன் காதலியை காப்பாற்றி மடிந்த யட்சகன் அவன்.

 

முற்றும் 


ReplyQuote
Page 5 / 5
Share: