Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

yatchagan ratchasanaga  

Page 2 / 2
  RSS

Honeygeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 135
07/05/2020 1:02 pm  

டீசர் : 9

நேர்முகத் தேர்விற்காக ஒரு ரூமிற்குள் அனுப்பப் பட்டாள் நிதா. அங்கு அவன் அமர்ந்திருந்தான் நடுவரில் ஒருவராக. அவனை பார்த்ததும் அவள் கண்கள் அவளை அறியாமல் ரசிக்க ஆரம்பித்தது.

வினய் எதிரில் அமர்ந்தவள் அவனை பார்த்துக் கொண்டே இருக்க

"பிளிஸ் பி சீட்டட் "என்று பிரசாத் கூறியவுடன் தான் அவளுக்கு நிகழ்காலம் உரைத்தது.

'நிதா அந்த கண்கள பார்க்காத நீ நீயா இருக்க மாட்டே என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்" அதன் பின் வினய் பக்கம் திரும்பவே யில்லை.

அவள் வந்ததில் இருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த வினய் அவளை பார்வையால் ஆராய்ந்து கொண்டு இருந்தான்.

மிஸ் நிதா இப்ப நாங்க புதுசா ஆரம்பிக்க போற பொடிக் கம்பெனிக்கு நீங்க டிசைனிங் பண்ணனும் .என்று பிரசாத் கூறிச் சென்று விட

வினய் அவளை பார்த்தபடியே பேசினான்.

"சீயூ டூமாரோ அட் 9 சார்ப்" என்று கூறியவன் வாசல் பக்கம் பார்க்க நிதா கால்கள் வேகமாக வாசல் பக்கம் விரைந்தது.

"ச்..ச்..ச்.. அப்ப்பபா.... கண்ணாலயே மிரட்டரானே" என்று கூறி நிதா வேகமாக மூச்சினை வெளியே விட்டாள்.

காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த பிரசாத் கண்களில் பட்டது அந்த செய்தி .வேகமாக பேப்பரை எடுத்துக் கொண்டு வினய் அறைக்கு சென்றார் பிரசாத். அங்கே அவனும் அதை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


ReplyQuote
Honeygeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 135
11/05/2020 9:16 am  

டீசர் 10
செய்தித்தாளை வினய்யிடம் காட்டியவர்.. 
"என்ன இதெல்லாம் ? இதுல உன் பங்கு எதாவது இருக்கா ?" – பிரசாத்
"இல்லை ? " ஒன்றை வார்த்தையில் பதில் சொன்னான் வினய்.
"நோ ! நான் நம்ப மாட்டேன். நீ தான் இத பண்ணியிருக்க" – பிரசாத்
"ஒ ! டூ யூ ஹேவ் எனி எவிடன்ஸ்" – வினய்
"எவிடன்ஸ் ? யூ பிளடி பிட்ச் ! என் கிட்ட உன் விளையாட்ட காண்பிக்கிறியா ? அரை மணி நேரம் நீ பார்ட்டிலயே இல்லை .அதனால நீ அந்த நேரந்தான் இத பண்ணி இருக்க . உனக்கு தேவையானது தான் வீட்டுக்கே வருதே அப்புறம் நீ எதுக்கு அங்க போன. இது மட்டும் எதாவது பிரச்சனை ஆச்சு உன்ன கொன்றுவேன்டா! " என்று பிரசாத் கூறிவிட்டு சென்று விட வினய் இங்கு கோபத்தில் நின்று கொண்டிருந்தான்.
இங்கு நிதாவும் அந்த செய்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே டிவியிலும் அந்த செய்தி ஒலிபரப்பானது.
அதில் காட்சிகள் காண்பிக்கப்பட்டது பிரபல பண்ணை ஒன்றில் பல ஆடுகள் மற்றும் மாடுகள் கொடூரமான முறையில் செத்துக் கிடந்தன.


ReplyQuote




Honeygeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 135
12/05/2020 1:53 pm  

டீசர் 11
"நான் பார்ம் வீட்டில் நல்லா தூங்கிட்டு இருந்தேன் சார் அப்ப . தீடீர்னு சத்தம் கேட்டது வந்து பார்த்தா இப்டி எல்லாம் செத்துக் கிடந்தது." 
"அங்க யாரையாவது பார்த்தீங்களா ?" – செய்தியாளர்
அவர் சற்று நேரம் யோசித்தார் . பின்பு "எதோ ஒரு கருப்பு உருவம் நிழலா தெரிஞ்சது சார் ! ஆனால் என்னால சரியா பார்க்க முடியல ஒரே இருட்டா இருந்தது." என்று அவர் கூற
அத்துடன் அந்த செய்தி நிறைவு பெற்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த நிதா தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.
‘நிதா அருமையான கேஸ் கிடைச்சுருக்கு விடாத இந்த கேஸ்அ மட்டும் நீ கண்டுபிடிச்சுட்டா பெரிய ரிப்போட்டர் ஆகலாம்' என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். 
*****************************
பிரசாத் தன் ஆட்கள் கொண்டு இதனை செய்தவர் யார் என்று விசாரித்துக் கொண்டிருக்க அவருக்கு ஒரு போன் கால் வந்தது .
அவர் போனை காதுக்கு கொடுக்க எதிர்முனையில் சிரித்தார் தேவ் . அவர் சிரித்து முடித்ததும் ஒரு செய்தியை கூற பிரசாத் அதிர்ச்சி அடைந்தார் .


ReplyQuote
Honeygeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 135
17/05/2020 3:55 pm  

டீசர் 12

கல்லரையை தோண்டிய பிரசாத் கண்களில் விழுந்தது அந்த சவப்பெட்டி. பெட்டியின் மூடியை  மண்வெட்டி கொண்டு அடித்து திறந்தவர் அந்த பெட்டி திறந்ததும் அதிர்ந்து நின்றார்.

அப்போது ஒரு போன் கால் வர அதை எடுத்து காதிற்கு கொடுக்க எதிர்முனையில் சிரித்தார் தேவ் .

"என்ன பிரசாத் நீங்க ? நான் சொன்னத நம்பாம திறந்து வேற பார்க்குறீங்க ?"

"தேவ் ! உன் எதிரி நான் தான எதுக்கு இப்ப அவன இதுக்குள்ள இழுக்குற?  உன் ஆட்டத்த இதோட நிறுத்திக்க !" – பிரசாத்

"அப்ப அந்த நியூஸ்ஸூம்  உன் வேல தானா ?" – பிரசாத்

"பரவாயில்லையே பிரசாத் கரெக்டா கண்டுபிடிச்சுட்ட!" – தேவ்

"ஆமா ! உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்லனுமே . சொல்றது என்ன வீடியோவாகவே அனுப்புறேன். கண் குளிர பாரு" என்று கூறி அவர் ஒரு வீடியோ அனுப்ப அதை பார்த்த பிரசாத் மேலும் அதிர்ந்தார் .

அதில் அமாவாசை இருட்டில் ஒரு உருவம் நடந்து பண்ணை வீட்டிற்குள்சென்று அங்கு இருந்த மாடுகள் மற்றும் ஆடுகளை  ஏதோ செய்ய சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றும் இறந்து விழுந்தன.

அதை பார்த்த பிரசாத் கல்லரையில் அருகே மடிந்து அமர்ந்து, "வினய் ! மை சன் !" என்று ஒலமிட்டு கத்தினார் .


ReplyQuote



Honeygeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 135
10/06/2020 10:34 am  

டீசர்13
லண்டன் முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு யட்சனின் துணைவியானாள் . நிதா
இரவு வேளை நெருங்க நிதாவிற்கு வேர்வை முத்துக்கள் உதிர்த்தது. பயந்துகொண்டே யட்சன்
அறைக்கு செல்ல அவன் அவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில்
வந்து போன பாவத்தை கணிக்க முடியாமல் நிதா நிற்க , அவளை அருகில் அழைத்த யட்சன்
அவள் கைகளில் ஒரு பார்சலை நீட்டினான்.பச்சை வண்ண பாவாடையும் , பச்சை நிற சட்டையும் அணிந்து நிதா வெளியே வர அவள்
அருகில் வந்த யட்சன் அவளது முடிகளை தளர்த்தினான்.
அவள் அழகை மெருகேற்ற லமி அலங்கரித்த அலங்காரத்தை கலைத்தவன் அவளை
கண்ணாடி முன் நிற்க வைத்து
இனி வீட்டில் இப்படிதான் நீ இருக்க வேண்டும்
ரைட் என்று யட்சன் கூற
தன் தோற்றத்தை கண்ட நிதாவிற்கு தான் ஜெயிலில் இருக்கும் கைதி போல் தோன்றியது.

அதன்பின் அவளை அழைத்துச் சென்றவன்
ஒரு சேரில் அமர வைத்து அவள் கைகள் மற்றும் கால்களை கட்டினான்.
கட்டியவன் அவள் எதிரில் அமர்ந்து இனி இரவு எப்போதும் உனக்கு இங்கு தான். நான்
சொல்வது புரிகின்றதா – யட்சன்
அதற்கு நிதா வேகமாக தலையாட்டினாள்.


ReplyQuote
Honeygeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 135
19/06/2020 8:18 am  

டீசர் 14
வெளியே சென்று திரும்பி வந்த யட்சன் கைகளில் ஒரு ஈயத் தட்டு அதுவும் நெளிந்து போய் காணப்பட்டது. அதை நிதா அருகில் வைத்தவன்.
“ சாப்பிடு" என்று கூற நிதா முழித்தாள் .
தன் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தான் எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் திகைத்தவள் அவனிடம் சொல்வதற்கும் பயந்து பார்த்துக் கொண்டே இருந்தவள் அவள் முன் வைக்கப்பட்ட உணவை அப்போது தான் கவனித்தாள். அதை கண்டு மேலும் பீதி கிளம்ப அவனையே நிதா பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் .
அவள் பார்வையை படித்த யட்சன் "என்ன சாப்பிட மாட்டாயா ?" என்று அவன் கேட்க
நிதா அதற்கு "ஆம்" என்று தலையசைத்தாள்.
"பிடிக்காதா ?" – யட்சன்
அதற்கும் அவள் ஆம் என்று தலையசைக்க யட்சன் மிருகமாக மாறினான்.
வேகமாக அவள் அருகே வந்தவன் அவள் நாடியை பிடித்து அவள் வாயை திறக்க வைத்து அந்த தட்டில் இருந்ததை அப்படியே அவள் வாயில் தட்டினான். அதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நிதா திணறிக் கொண்டிருக்க அவள் திணறுவதை பார்த்து ரசித்தான் யட்சன்.

 


ReplyQuote




Honeygeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 135
30/06/2020 11:23 am  

டீசர் 15
நிதாவின் ஓய்ந்த தோற்றத்தை அளவிட்ட யட்சன் கண்களை பார்சலில் காட்டி ஏதோ சொல்ல அதை கவனித்தவள் முடியாது என்று தலையசைத்தாள்
அவள் தலையசைத்ததும் அவள் அருகில் அவன் வர
வேகமாக செய்கிறேன் சார் என்று கூறிய நிதா
கைகள் நடுங்க அந்த பார்சலை பிரித்து அதில் உள்ள பொருளை வெளியே எடுத்த நிதா அதன் நிறத்தை பார்த்ததும் மயங்கி விழுந்தாள்.
சற்று நேரத்தில் கண்விழித்தவள் முன் நின்ற யட்சன் திரும்பவும் அந்த பார்சலை நீட்ட
நோ ! சார் ! என்னால் இதை செய்ய முடியாது ! பிளிஸ் என்னை விட்டுங்க ! எனக்கு அதை பார்த்தாலே மயக்கம் வரும் என்று நிதா கண்ணீர் மல்க கூற
ம்ம்ம்ம் என்று சற்று நேரம் தன் தாடையை தடவியபடியே யோசித்தவன்
சரி செய்ய வேண்டாம் ! எதுக்கு தேவையில்லாம அத பிரிச்சு ஊத்திக்கிட்டு எனக்கு வேண்டியதை நேரடியா எடுத்துக்கிட்டா போச்சு என்று கூறி யட்சன் அருகில் வர
நோ ! சார் !என்று கத்திய நிதா கைகள் நடுங்க கண்ணின் இமையை சிமிட்டிபடியே அந்த திரவத்தை கோப்பையில் ஊற்றினாள்.


ReplyQuote
Page 2 / 2




Share: