Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

என் மெளத்தின் கவிதையே!!! - Full New Tamil Novel Online  

Page 3 / 4
  RSS

Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
29/06/2020 6:09 pm  

ஹாய் பிரெண்ட்ஸ்,

என் மெளனத்தின் கவிதேயே ! அடுத்த இரண்டு அத்தியாங்கள் பதிந்துள்ளேண் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி

இனிதா மோகன் தமிழினி


ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
05/07/2020 3:28 pm  

                                  அத்தியாயம் 24

 

 தமிழருவி ,நிலவனின் செய்கையில் ஒரு நொடி அதிர்ந்து பார்த்தவள்,அடுத்த  நொடி அவனின் நெஞ்சில் கைவைத்து தன்னிடமிருந்து வேகமாக  அவனை தள்ளினாள்.

 நிலவனோ,  அவளில் செய்கையில் திகைத்து நின்றான்.

 அருவியோ, திகைத்து நின்றவனிடம்,“உங்களிடம் இப்படி ஒரு செயலை நான் எதிர்பார்க்கவில்லை..” என்றாள் கோபத்துடன்.

நிலவனுக்கோ ஒன்றும் புரியாமல் “அருவி என்னாச்சு..” என்றான்.

அருவியோ,” ஒரு  பெண்ணிடம் காதல் வருவது ஒன்று அவளின் அழகில் வரனும்,இல்லையென்றால் அவளின் குணம் பார்த்து , மனம் பார்த்து வரனும், ஆனால் நீங்கள் நன்றிக்காக காதலை வரவைக்கிறீர்களா..?” என்றவளை  திகைத்து பார்த்தான்.

அருவியோ, அவனின் பார்வையை தாங்கியபடியே, “உங்கள் மீது எனக்கு நல்ல எண்ணமும், மதிப்பும் இருந்தது. ஆனால் உங்கள் தங்கையை  பழைய படி மாற்றியதற்கு, நன்றிக்காக நீங்கள் என்னை நேசிக்கவும் வேண்டாம், அதை இப்படி வெளிப்படுத்தவும் வேண்டாம்..” என்றவளிடம்.

“அருவி நீ ஏதோ  தவறாக புரிந்து கொண்டாய்..” என்று நிலவன் சொல்ல வருவதை ஏற்காமல்.

“என்னை எனக்காக நேசிப்பவராகத் தான் என் கணவர் இருக்க வேண்டும்.உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று ,விவகாரத்து கேட்ட அன்றே எனக்கு தெரிந்தது .  நன்றிக்காக என்னை நேசிக்க வேண்டாம்..” என்றாள் முகம் சிவக்க.

நிலவனோ,  அவள் சொல்லியதை கேட்டு துடித்தவன்,”அருவி நான் சொல்வதை ஒரு நிமிடம் கேள். நீ  நினைப்பது போல் எதுவும் இல்லை, நீ ஏதோ தவறாக புரிந்து கொண்டாய்..”என்றவனிடம்.

“இல்லை இப்பொழுது தான் உங்களை  சரியாக புரிந்து கொண்டேன்,என்னை பொறுத்தவரை, மாமாவிற்காக இந்த குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்தவுடன்  நீங்கள் என்னிடம் முதல் முதலாக கேட்ட விவகாரத்தை தந்து விட்டு, நான் இந்த வீட்டை விட்டு சென்று விடுவேன்..”என்றாள்.

நிலவனோ ,அவள் சொல்லியதை கேட்டு மனம் வலிக்க, “அருவி  ஏன்? இப்படி  பேசுகிறாய், நான் எந்த நன்றிக்காகவும் உன்னை விரும்பவில்லை.உண்மையாளுமே உன்னை மனதார நேசிக்கிறேன்..” என்றவனிடம்.

“நீங்கள் சொல்வதை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது,ஆனால் அதை நம்பத்தான் முடியவில்லை.இனிமேல் இந்த மாதிரி தேவையில்லாததை செய்யாமல் ,நீங்கள் நீங்களாக இருங்கள்..” என்றவள் சட்டென்று அறையை விட்டு வெளியில் சென்றாள்.

நிலவனோ, செய்வதறியாமல் தலையை கைகளில் தாங்கியபடி  படுக்கையில் சென்று அமர்ந்தான்.

 அவன் மனதிற்குள் புயல் அடித்தது, தான் யோசிக்காமல் செய்த ஒரு செயலால் இன்று தன் வாழ்க்கையே கேள்விக் குறியாகி விட்டாதே!என்று மனதார வருந்தினான். அருவியிடம் தான் விவகாரத்து கேட்டது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று நினைத்தான்.

 நிலவன், முதலில் அருவிக்கு தான் முத்தமிட்டது தான் பிடிக்கவில்லை என்று நினைத்தான்..ஆனால் அவள் தன் காதலையே நம்பவில்லை !என்று தெரிந்த பொழுது தான் துடித்துப் போய்விட்டான்.

அருவியிடம் தன் மனதை அவள் மொத்தமாக கொள்ளையடித்து விட்டாள், என்று எப்படி சொல்லிப் புரிய வைப்பது,என்று அவனுக்கு சுத்தமாக புரியவில்லை.

ஒரு சொட்டு நீருக்காக ஏங்கியவனுக்கு, அருவியாக அமுதத்தை  தரவந்தவள் அவள் தான் என்று, தான் தமதமாக புரிந்து கொண்டதை  அவளிடம் எப்படி சொல்வது என்று யோசித்தான்.

எது எப்படி இருந்தாலும் அவள் வாழ்க்கை இனி தன்னோடுதான்,அதை யாராலும் இனி மாற்றமுடியாது .அவளே நினைத்தாலும் இனி தன்னிடமிருந்து அவளை பிரிக்கமுடியாது என்று மனதிற்குள் உறுதி கொண்ட பின்பு தான் அவன் மனம் கொஞ்சம் லேசானது.

 மனதிற்குள் ‘அடி லூசு பொண்டாட்டி உன்னை உனக்காகத் தான் நேசித்தேன், அதை எப்பொழுது புரிந்து கொள்வாயோ? அதை உனக்கு புரியவைக்காமல் நானும் ஓயமாட்டேன். ‘இனிமேல் தான் இந்த ஒளிர்நிலவனை பற்றி தெரிந்து கொள்வாய் ,மை டியர் தமிழழகி..’என்று மனதிற்குள் நினைத்தான்.

 அருவியை  எந்த சூழ்நிலையிலும் இங்கிருந்து செல்ல விடமாட்டேன். என்று முடிவெடுத்தவன், அடுத்து என்ன செய்ய வேண்டும் .என்ற யோசனையுடன்  அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான்.

எத்தனை நேரம் அப்படி இருந்தான் என்று அவனுக்கே தெரியாது?சிறிது நேரம் கழித்து  தன் நண்பன் பாரியை தேடிச் சென்றான்.

பாரியோ அரிசி ஆலையில் லோடு  ஏற்றுவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

நிலவன் அவன் முன் சென்று  நின்று,” பாரி உன்னிடம் ஒன்று கேட்கனும்..” என்று அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் பாரியின் அலுவலக அறைக்கு இழுத்துச் சென்றான்..

பாரியோ, எதுவும் புரியாமல் நண்பன் இழுத்த இழுப்புக்கு சென்றான்.

நிலவன் பாரியை பிடித்து நாற்காலியில் அமர வைத்து,தானும் அவனுக்கு எதிரில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு, “மச்சா உன் தங்கச்சியை எப்படி ஊசார் செய்யறதுன்னு சொல்லுடா..” என்றான்.

பாரிக்கோ முதலில் விசயம் புரியாவிட்டாலும் , அருவியைத் தான்சொல்லுகிறேன் என்று உணர்ந்தவன்,  நிலவனின் மச்சான் என்ற அழைப்பும் , அவனின் மன மாறுதலையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்தான்.

நிலவன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே மச்சான் என்று அழைப்பான்.ஆனால் எதையும்  நிலவனிடம் காட்டிக் கொள்ளாமல் “என்னடா சொல்லுகிறாய் கொஞ்சம் புரியும் படி சொல்லுடா ..”என்றான்.

நிலவனோ, பாரிய முறைத்தபடியே “டேய் விளக்கெண்ணெயே அருவியை எப்படி என் வழிக்கு கொண்டு வரதுன்னு சொல்லுடா ..”என்றான்.

பாரியோ” ஓ விவகாரத்துக்கு சம்மதிக்க வைக்கனுமா..?” என்று புரியாத மாதிரி வேண்டுமென்றே கேட்டான்.

நிலவனோ, அவனை கொலைவெறியில் பார்த்தவன்,”டேய் என்னை கொலைகாரன் ஆக்காதே ! ஏன் டா அண்ணனும் , தங்கையும் அதையே பிடித்துக் கொண்டு தொங்கறீங்கா..?” என்றவனிடம்.

“நாங்க சரியாத் தான் இருக்கிறோம் , நீ தான் அடிக்கடி மனசை  மாற்றிக் கொண்டு  எங்க உயிரை வாங்குகிறாய் ..”என்றான்.

நிலவனோ,” அப்பா மகராசா உன்னிடம் போய் ஐடியா கேட்க வந்தேன் பார், என்னை முதலில் ஏதாவது எடுத்து அடிச்சுக்கனும்..” என்றான் கோபமாக.

பாரியோ மனதிற்குள் சிரித்தபடி, “நிலவா என்னடா ஆச்சு விளக்கமா சொல்லு ..”என்றவனிடம்.

“போடா நான் போகிறேன் என் பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே எழுந்தான்.

 

  பாரியோ, “நிலவா  கோப்படாதே  உட்கார், நான் என்ன செய்யனும், உனக்கு இப்போ என்ன வேண்டும் ..”என்றான்.

நிலவன் சொல்ல ஆரம்பிப்பதற்குள், அரிசி ஆலையில் வேலை செய்யும் ஒருவன் ஓடி வந்து “அண்ணா அந்த கனகராயன் இன்று  ஜாமீனில்  வெளி வந்துவிட்டானாம்! நம்ம தங்கப்பன்  அவனை பார்த்தானாம், இப்ப தான் வந்து சொல்லிட்டு போறான் . உங்கள் இருவரையும் பார்த்து இருக்கும் படி சொன்னான்..” என்றான்.

அவன் சொன்னதை கேட்டதும் நண்பர்கள் இருவரும் உறைந்து போய் நின்றனர்.

நிலவனோ அடுத்த நொடி முகத்தில் கோபம் மின்ன  “நான் கிளம்புகிறேன்..” என்று நகர்ந்தான்.

பாரியோ, அவனின் கைகளை பிடித்து “நிலவா நீ  கொஞ்சம் அமைதியாக இருடா..உன்னை நம்பி ஒருத்தி இருக்கிறாள் என்று எப்பொழுதும்  மறந்து விடாதே..” என்றவனிடம்.

நிலவனோ , “ம்ம்ம்..” என்று மட்டும் சொல்லி விட்டு தன் வேகநடையுடன் வெளியில் சென்றான்..

பாரிக்கோ என்ன செய்வதென்று தெரியாமல், அருவிக்கு அலைபேசியில் அழைத்து, கனகராயன் வந்துவிட்டதையும், நிலவனின் கோபத்தையும் சொல்லி வருந்தினான்.

அருவியோ, “கவலைப்படாதீர்கள் அண்ணா.. நான் பார்த்துக் கொள்கிறேன்..”என்றவள் நிலவன் வரவுக்காக காத்திருந்தாள்.

நிலவனோ , பாரியின் அரிசி ஆலையிலிருந்து நேராக ஆற்றங்கரைக்கு சென்றவனுக்கு, மனதிற்குள் சொல்ல முடியாத வலியை அனுபவித்தான்.

 அவன் இத்தனை நாட்களாக  மறக்க நினைத்தும்! மறக்க முடியாமல் ஒதுக்கி வைத்த   ஆறாத வடுக்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தது.

பூபாலனின் அன்பும்,தனக்காக உயிரைவிட்டதும், தங்கையின்  திருமண வாழ்வு தொடங்கிய உடனே கருகியதும். ஒவ்வொன்றாக நினைவு  வந்து அவனை கொல்லாமல் கொன்றது.

 நடந்த நிகழ்வுகள் பச்சை புண்ணாக அவன் மனதை வலிக்க செய்தது.அதற்கு கரணமானவனை வெட்டி புதைக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது.

இன்னும் சற்று நேரம் அங்கே இருந்தால், கனகராயனை  தானே தேடிச் சென்று விடுவோமா!   என்ற பயம் வரவும்,உடனே வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

 அருவியோ, நிலவனின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்,நிலவன் அவனுடைய அலைபேசியை வீட்டிலேயே விட்டு சென்றிருந்தான்.அதனால் அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

மனம் முழுவதும் இனம் புரியாத பயத்துடன் கணவனின் வரவை வழி மேல் விழி வைத்து பார்த்திருந்தாள்.

அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவளின் எண்ணத்தின் நாயகன் தன் வேக  நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அருவிக்கு அவனின் முகத்தை  பார்த்தவுடனேயே,  அவன் மனம் சரியில்லை என்று புரிந்து விட்டது.

நிலவன் பின்னாலேயே சென்றவள், அவன் கைகால் முகம் கழுவி வரும் வரை காத்திருந்தவள், அவன் வந்தவுடன்  “சாப்பிட வாங்க..” என்று அழைத்தாள்.

அவனோ, “எனக்கு பசியில்லை என்றவன் ,படுக்கையில் சென்று  ஒரு கையை தலைக்கு வைத்து, முகத்தையும் மறைத்தபடி படுத்துக் கொண்டான்.

அருவிக்கு என்ன செய்வது?   சிறிது நேரத்திற்கு முன்  தானும் அவனிடம்    சண்டை போட்டோமே , இப்பொழுது எப்படி அவனிடம் பேசுவது?என்று நினைத்து ஒன்றும் புரியாமல்  நின்றபடியே குழம்பி தவித்தாள்.

சிறிது நேரம் அப்படியே நின்றவள், தன் குழப்பத்தை ஒதுக்கி விட்டு, அவன் தன் மீது கோப்பட்டாலும், அவனிடம் பேசியே ஆகவேண்டும் என்ற முடிவுடன், என்றுமில்லாமல் அன்று அவன் அருகில், தானாக சென்று படுக்கையில் அமர்ந்தாள்.

நிலவனிடம் எந்த அசைவும் இல்லை.அருவியோ, அவன் தூங்கிவிட்டானோ என்று ஒரு நொடி தயங்கியவள்,அடுத்த நொடி, “ஒளிர்..” என்று மென்மையாக அழைத்தாள்.

நிலவன்  தூங்கவில்லை, தன் யோசனையிலேயே சுழன்று கொண்டிருந்தவனுக்கு அருவியின் மென்மையான அழைப்பு கேட்கவில்லை.

அருவியோ, அவனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும் சத்தமாக “ஒளிர்..” என்று அழைத்தாள்.

நிலவன் அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவன்,அவளை கேள்வியாக பார்த்தான்.

அருவியோ, அவனின் பார்வையை தாங்கியபடியே,” ஒளிர்  வந்து உங்களுக்கு மனம் சரியில்லை என்று எனக்கு தெரியும்..  அந்த ஆள் வெளியில் வந்துவிட்டான் என்று  பாரி அண்ணா சொன்னார்..” என்றவளிடம்.

நிலவனோ ,எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.

அருவியோ, அவன் மனதை சரியாக்க வேண்டும் என்ற உறுதியுடன்,” ஒளிர் பிளீஸ் என்னை ஒரு தோழியாக நினைத்து உங்கள் மனக்கவலையை இறக்கி வைக்கலாமே, எதையும் மனதில் அடக்கி வைத்தால், மன அழுத்தம் தான் மிகும் ..” என்றாள்.

நிலவனோ  ஒரு நிமிடம் மெளனமாகவே இருந்தவன், ஒரு பொருமூச்சுடன், அருவி இந்த வலி என் உயிர் உள்ளவரை என்னை கொல்லும்,இதற்கு மருந்தே இல்லை,எல்லாம் என் அவசரபுத்தியாலும் , கோவத்தாலும்  நிகழ்ந்தது.ஒரு உயிரை பலி கொடுத்து விட்டு குற்றயுணர்வில் தவித்துக் கொண்டிருக்கிறேன்..” என்றவனின் குரலும் ,கண்களும் ஒரு சேர கலங்கியது.

அருவியோ, அவனின் கலங்கிய விழிகளை  பார்த்தவுடன் தன்னையும் அறியாமல் அவனிடம் நெருங்கி அமர்ந்தவள்,அவனின் கைகளை மென்மையாக பற்றி அழுத்திக் கொடுத்தாள்.

நிலவனோ, அதை உணராமல் தன் கவலையிலேயே முழ்கியவன், “அருவி என்னால் இதை தாங்கவே முடியவில்லை, என் கண்முன்னே எனக்காக பூபாலன்  துடிதுடித்து  இறந்ததை நினைக்கையில் , அவனை எப்படியாவது காப்பாற்றி இருக்க வேண்டும் ,இப்படி அவனை காலன் பிடியில் நானே தள்ளிவிட்டேனே என்ற குற்றயுணர்வு உயிர் போகும் வலியை தருகிறது..”என்றான் .

அருவியோ, என்ன சொல்வது என்று தெரியாமல், அவன் மனதிலிருப்பதை கொட்டட்டும் என்று  அமைதியாக இருந்தாள்.

நிலவனோ , “அருவி இத்தனைக்கும் கரணமான அந்த கனகராயன்! எந்த கவலையும் இல்லாமல், தண்டனையும் அனுபவிக்காமல், இன்று ஜாமீனில் வெளிவந்து விட்டான், என்று நினைக்கும்  பொழுது அவனை கொன்று புதைக்கும் எண்ணம் தான்  வருகிறது..” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தாள் அருவி.

நிலவனோ மனைவியின் அதிர்ச்சியை உணராமல், “என் தங்கையும் வாழவேண்டிய வயதில் இப்படி  அறைக்குள்ளேயே, தண்டனை அனுபவிப்பது தான் கொடுமையிலும் கொடுமை, அதுவும் ஒரு பாவமும் அறியாத அவள் முகத்தில் திரவகம் எறிந்தானே! அவனை என்ன செய்தால் தகும் என்று இருக்கிறது..” என்றான் கோபமாக.

அருவியோ,  தான் பிடித்திருந்த அவனின் கைகளை மென்மையாக வருடியபடியே ,”ஒளிர் இனி எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதீர்கள்! தப்பு செய்தவர்கள் நிச்சயம்  தண்டனை அனுபவிப்பார்கள்.சட்டம் தன் கடமை செய்யும்..” என்றவளிடம்.

“எனக்கு அந்த நம்பிக்கை என்றே போய்விட்டது.உயிர் சாட்சியாக நாங்கள் மூன்று பேரும் இருந்தும், அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே..”  எளிதாக வெளியில் வந்து விட்டானே..”என்றவனிடம்.

“ஒளிர் நிச்சயமாக அவனுக்கு நான் தண்டனை வாங்கி தருவேன்.அவனுக்கு கிடைக்கும் தண்டனையை  பார்த்து ,  யாருக்கும்  இந்த மாதிரி தப்பு  இனி செய்ய  துணிவு  வரக்கூடாது..” என்றாள்.

நிலவனோ, அவள் சொன்னதை கேட்டு ,”உன்னால் முடியுமா..?” என்று கேட்டான்.

அவளோ, “நிச்சயமாக முடியும்,அவனுக்கு தண்டனை வாங்கித் தருவது தான் அடுத்து என் முதல் வேலை,  அதற்கான வேலையை  நான் இன்றே தொடங்குகிறேன், என்னை நீங்கள் முழுமையாக நம்பலாம்,ஆனால் எனக்கு நீங்கள் ஒரு வாக்கு கொடுக்க வேண்டும்..” என்றாள்.

அவனோ ,என்ன? வென்று கேட்டான்.

“நீங்கள்  இனிமேல் எந்த அடிதடிக்கும்  போகக் கூடாது . அந்த கனகராயனே உங்களிடம் வம்பு செய்தாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.இனி அவனை நாம் சட்டப்படி பார்த்துக் கொள்ளலாம் ..” என்றாள்.

 நிலவனோ , அவளின் நம்பிக்கையான வார்த்தைகளாலும்,அவளின் அக்கறையிலும் , மனம் நெகிழ்ந்தவன் , தன் கைகளை பற்றியிருந்த அவளின் கைகளை அழுத்திய படியே “நிச்சயமாக  நான் இனி எந்த வம்புக்கும் போக மாட்டேன் . போதும் நான் பட்டதெல்லாம், என் கோபத்தால் நண்பனை இழந்தது மட்டுமின்றி, என் தங்கையின் அன்பையும் இழந்து விட்டேன்..” என்று கலங்கியபடி கூறியவனிடம்..

“ஒளிர் பிளீஸ் வருந்தாதீர்கள், கனி நிச்சயமாக உங்களை புரிந்து கொள்வாள்,  வெகு விரைவில் உங்களிடம் பழைய படி பேசுவாள், என்றவளின் முகத்தை வியந்து பார்த்தான்.

அவளோ கணவனின் பார்வையை உணராமல்  “இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்..” என்றவளிடம்.

“நிச்சயமாக இனி எனக்கு நல்லது தான் நடக்கும்,அதுவும் நீ என்னுடன் இருந்தால் எந்த கஷ்டமும் என்னை நெருங்காது,என்னை விட்டு எப்பொழுதும் போகமாட்டாய் தானே..” என்று கண்களில் ஏக்கத்துடன் கேட்டான்.

அருவியோ, அவனின் ஏக்கப் பார்வையில் ஒரு நொடி  தடுமாறியவள், பின்பு தன்னை சமன்படுத்திக் கொண்டு ,”முதலில் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்,அதன் பிறகு இதை பற்றி பேசலாம்..” என்று  அந்த  பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தவள், அவனை வற்புறுத்தி உணவு உண்ணச்  செய்தாள்.

 நிலவனுக்கு  அருவியுடன் பேசிய பிறகு மனம் லேசாக இருப்பதை போல் உணர்ந்தவன், அன்று நிம்மதியான உறக்கத்தை தழுவினான்.

அருவியோ , கணவனின்  மாற்றத்தை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் ,இரு கொள்ளி பாம்பாக  தவித்தாள்.

பாவம் இனி தான் கணவனின் அதிரடியை தான் பார்க்கப் போகிறோம்! என்று அவளுக்கு  தெரியவில்லை.

தொடரும்…


ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
12/08/2020 2:52 pm  

  அத்தியாயம் 25(a)

 

 அடுத்து வந்த நாட்களில்  நிலவனிடம் அதிக மாற்றங்கள் தெரிந்தது.அருவியிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தான்.கொஞ்சம் கொஞ்சமாக  கணவன் என்ற எண்ணத்தை அவள் மனதில் உணரவைக்க முயன்றான்.

அருவியோ, அதை உணர்ந்தாலும்,  தனக்கிருந்த மனக்குழப்பத்தின் காரணமாக அதை  ஏற்கமுடியாமல் தவித்தாள்.

நிலவனோ, அவளுள் ஒரு தோழமை உணர்வை வளர்க்க முயற்சித்தான்.அவளிடம் இயல்பாக தன் விருப்பு, வெறுப்புகளை பகிர்ந்து கொண்டான்.

அருவிக்கோ, அதுவே அவனிடம் இயல்பான நெருக்கத்தை கொடுத்தது.  அப்படி நிலவனைப் பற்றி அறிந்து கொண்டவளுக்கு அவன் மீது மிகுந்த மரியாதை வந்தது.

நிலவனுக்கு விவசாயத்தின் மீது இருந்த விருப்பமும், ஆர்வமும் அவளை பிரமிக்க வைத்தது.அவன் விவசாயத்தை பற்றி பேசும் பொழுது அவனின் கண்களில் தெரிந்த ஆசையையும், பிரகாசத்தையும்  கண்டு ,அவள் மனதிலும் அவன் விவசாயத்தில் சாதிக்க வேண்டும் என்ற  ஆசை  துளிர்த்தது.

அருவிக்கும்  இயல்பாகவே நிலவன் மீது நேசம் பூத்தது.ஆனால் அதை   அவனிடம் மறைத்தவள்,தன்னுள் பொக்கிஷமாக அதை பாதுகாத்தாள். இருவரும் தங்களுக்குள்ளேயே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தனர்.

 அவர்களின் அகவாழ்க்கையோ எந்த மாற்றங்களும் இல்லாமல்   சென்றது.ஆனால்  புறவாழ்க்கையில் போராட்டங்கள் முடிவுறாமல் தொடர்ந்தது.

கனகராயன் வரவால் அந்த குடும்பத்தில் மீண்டும் புயல் வீச தொடங்கியது.

திருமறவனும்  விசயம் கேள்விப் பட்டதும், உடைந்து போனார்.நிலவன் தான் அவரை தேற்றினான்.நீலிமா மூலம் செங்கனிக்கு விசயம் தெரிந்து , அவளும் பழைய படியே தன் அறைக்குள்ளேயே அடைந்தாள்.

என்நேரமும் கண்ணீருடன் இருந்த கனியை  அருவியால் பார்க்க முடியவில்லை.தான் எடுத்த அத்தனை  முயற்சியும் வீணாகிவிட்டதே! என்று அவளும் நொந்து போனாள்.

 நிலவன் தான் அருவியையும் தேற்றினான். மனம் தாங்காமல் தன்னிடம் புலம்பிய மனைவியிடம் “அருவி  எனக்கு உன்னிடம் பிடித்ததே உன் தைரியம் தான். பிரச்சனைகளை கண்டு கலங்காமல் நீ அதை கையாளும் விதம் கண்டு நான்எப்பொழுதும் வியந்திருக்கிறேன். அந்த தைரியத்தை என்றும் விட்டுவிடாதே .  நீ  எனக்கு சொன்னதைத் தான்  நான் உனக்கு திருப்பி சொல்கிறேன். இனி நடப்பவை  நல்லவையாகத் தான் நடக்கும்.கனி விரைவில் சரியாகிவிடுவாள் ..”என்றவனை வியப்பாக பார்த்தாள்.

 அவனோ, அவளின் பார்வையை  தாங்கிய படி, “என்னடா  இவன் இப்படி சொல்கிறான் என்று பார்க்கிறாயா..?”என்றவன். அவளின் கைகளை மென்மையாக பற்றியபடி “ இனி எதுவந்தாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை   உன்னால்  தான் எனக்கு  வந்தது. போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது? இனி  சேர்ந்தே போராடுவோம்..” என்றான்.

அருவியோ, அவனையே விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தாள். மனதிற்குள் ‘அவனை தான் முதல் முதலாக பார்த்ததற்கும்,இப்போது இருக்கும் நிலவனுக்கும் எத்தனை வித்தியாசம்’ என்று நினைத்தாள்.

 அவளின் வியந்த பார்வையை ஒரு மென்புன்னகையுடன் பார்த்தவன்,  “மை டியர் பொண்டாட்டி என்ன இப்படி ஆளை விழுங்குவது போல் பார்க்கிறாய்..”என்றான்.

அவளோ, அவனை முறைத்துக் கொண்டே “நீங்க திருந்தவே மாட்டீங்க ! உங்க கூட  போய் பேசவந்தேன் பார் என்னை சொல்லனும்..” என்று  கூறியபடி நகர்ந்தவளை.

“மை டியர் தமிழழகி  எங்க  சென்றாலும்  என்னிடம்  வந்து தான் ஆகனும் போ..போ எத்தனை தூரம் போகிறாய் என்று நானும் பார்க்கிறேன்..” என்றான்..

அருவிக்கோ, அவன் சொன்னது காதில் விழுந்தாலும் கேட்காதது போல் ஓடினாள்.மனதிற்குள்  ஒர் இனம்புரியா உணர்வு அவளை ஆட்கொண்டது.

 

நிலவனுக்கோ, அருவி   கனியைப் பற்றி  புலம்பியதற்கு , ஆறுதல் கூறினாலும்,மனதிற்குள் அவனுக்குமே கனியின் நிலை மிகுந்த வேதனையை தந்தது.

என்ன செய்வது என்று யோசித்தவன்,கனியிடம் பேசியே தீரவேண்டும் என்ற முடிவுடன் அவள் அறைக்குள் பல நாட்களுக்கு பின் சென்றான்.

கனியோ,   தனக்கு மிகவும் பிடித்த கைவிணைப் பொருட்கள் செய்து கொண்டிருந்தாள்.அதை கண்ட நிலவன் மனதிற்குள் சிறு நிம்மதி அடைந்தான்.

பழையபடி அறைக்குள் அடைந்திருந்தாலும், தன் மனதை பிடித்த வேலையில் ஈடுபடுத்திக் கொள்கிறாளே! என்று எண்ணினான்.

அவளின் முகத்தை பார்த்தவனுக்கு   மனதில் ஊசி குத்துவது போல் வலித்தது.  இப்பொழுது கலையிழந்த ஓவியமாக  இருக்கும் தன் தங்கை ஒரு காலத்தில் சிட்டுக்குருவியைப் போல் துள்ளி திரிந்ததை    நினைத்து வருந்தினான்.

அந்த  நாட்கள் மீண்டும்  வராதா? அவள் முகத்தில்  அந்த மகிழ்ச்சியை  திரும்ப எப்பொழுது  பார்ப்போம்! என்று அவன் மனம் ஏங்கியது.

இந்த  சின்ன வயதில்  அவள் வயதுக்கு  மீறிய போராட்டத்தை வாழ்க்கை தந்துவிட்டதே!   என்று  கலங்கினான்.

 இத்தனை கஷ்டத்திலும் ஏதோ! அருவியால் இந்த அளவுக்கு மீண்டு இருக்கிறாளே! என்று நினைத்தக்  கொண்டே  அவளின் அருகில் சென்று நின்றவன். அவளின் தலையை மென்மையாக வருடியபடியே “கனிம்மா..” என்றான்.

செங்கனியோ, சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.அங்கு தன் பாசத்திற்குரிய அண்ணன் கண்களில் வலியுடன் தன்னையே பார்ப்பதை கண்டு, தன் கோபம், ஆதங்கம் அத்தனையும் மறந்து துள்ளி எழுந்து  “ஒளிர் அண்ணா..” என்று கதறலுடன் அவனின் நெஞ்சில் சாய்ந்து தன்னை மறந்து கதறினாள்.

எத்தனை நாட்களானது! அவளின் இந்த  ‘ஒளிர் அண்ணா’ என்ற அழைப்பை கேட்டு என்று எண்ணியவனுக்கும், கண்களில் கண்ணீர் தேங்கி அவனின் பார்வையை மறைத்தது.

செங்கனியோ, தன் அத்தனை மனத்துயரையும்   அன்றே கொட்டி தீர்த்துவிடுவது  போல்  தன் அண்ணனிடம்  அழுது கரைந்தாள்.

கனியின் அழுகை சத்தமே குடும்பத்தில் அனைவரையும் அங்கு வரவழைத்தது.பவளமல்லியோ அந்த காட்சியை கண்டு ஊமைக் கண்ணீர் வடித்தார்.

திருமறவனும், புகழ்வாணனும் கூட  மனம் வலிக்க அந்த காட்சியை பார்த்தனர். எப்படி கலகலப்பாக இருந்தவர்கள்,இத்தனை நாட்கள் எப்படித் தான் ஒருவருக்கொருவர் ஓரே வீட்டில் இருந்தும் பேசாமல் இருந்தார்களோ? என்று நினைத்தனர்.

நிலவனோ, கனியின் அழுகை முடிவில்லாமல் தொடர்வதைக்   கண்டு, “கனிம்மா போதும் டா நீ அழுதது..”  என்றவன்.

அவளின் முகத்தை வலுகட்டயமாக நிமிர்த்தி,”இந்த அண்ணனை மன்னித்து விடுடா.  என்னால் தான் உன் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று  ஒவ்வொரு நாளும்   நானும் குற்றயுணர்வில்   செத்துக் கொண்டிருக்கிறேன் ..” என்றான்.

 

கனியோ, “ஒளிர் அண்ணா அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்,  என் தலையில் அப்படி எழுதி  இருக்கிறது. அதற்கு நீங்க என்ன செய்வீங்க.நீங்கள்  தான் என்னை மன்னிக்கனும்,நான் தான் அன்று அறிவில்லாமல் அறியாமையில்  ஏதேதோ பேசிவிட்டேன்..”என்றாள் கண்களில் நீர் வடிய.

 நிலவனோ, “அப்படி எல்லாம் எதுவும் இல்லை கனிம்மா.உன் இடத்தில் நானிருந்தாலும் அப்படித் தான் பேசி இருப்பேன் ..” என்றான்.

அவளோ, அப்புறம் ஏன் ?அண்ணா இத்தனை நாட்கள் என்னிடம் பேசவே இல்லை. என்னை பார்க்கவும் இல்லை.நான் நீங்கள்  பேசுவீர்கள் என்று எத்தனை ஏங்கினேன் தெரியுமா?” என்றவுடன்.

“சாரிடா..சாரிடா நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு உன்னிடம் பேசுவது  என்று தயங்கித் தான் பேசலை டா..ஆனால் உனக்கு தெரியாமல் உன்னை பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்..” என்றவனிடம்.

“நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?” என்றவளை.

 தன் நெஞ்சோடு  அணைத்துக் கொண்டு, “அது எல்லாம் இல்லை டா .. ஏதோ போதாத காலம் நம்மை இப்படி வாட்டிவிட்டது.இனி எல்லாம் சரியாகிவிடும்.  உன்னை எந்த கவலையும் இனி  அணுகாமல் நான் பார்த்துக் கொள்வேன்..”என்றவனும், மனதிற்குள் சொல்ல முடியாத நிம்மதியை உணர்ந்தான்.

அருவியும் அங்கு தான் நின்றிருந்தாள்.இந்த காட்சியை அவளும் கண்டு அளவிட முடியாத  நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அடைந்தாள்.

நிலவனின் ஒவ்வொரு செயலும் அவளை வியப்படையச் செய்தது.அவள் பட்ட பாடு  வீண்போகவில்லையே என்று நினைத்தவளுக்கு ஏனோ இன்பனின் ஞாபகம் வந்தது.

 மனதிற்குள் ‘அவனும் இப்படித் தானே தனக்காக மகிழ்வான்.உடன் பிறந்தால் தான் சகோதரனா?எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பையும்,   அவள் கலங்கும் பொழுது நானிருக்கிறேன் என்ற தைரியத்தையும், நம்பிக்கையும் தரக் கூடிய ஆணின் அன்பும்,ஆணுக்குள்ளும் தாய்மையை மலரச் செய்யும் பாசம் நிறைந்த  ஆண்மகன் எல்லாம் உடன் பிறவா சகோதரன் தான்’ என்று நினைத்தாள்.

பவளமல்லியும், திருமறவனும் கூட  அந்த காட்சியை மகிழ்ச்சியுடன்  கண்டனர்.

நிலவனோ, கனியிடம் “ கனி இனி உன் கண்களில் நான் மகிழ்ச்சியைத் தான் பார்க்கனும்.அதற்காக இந்த அண்ணன் என்ன வேண்டுமானலும் செய்வேன் ,நீ நடந்ததை மறக்க முயற்சிக்கனும்.  உன் அண்ணன் எல்லாத்தையும் சரி செய்வேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது..

புகழ்வாணனும் அவர்கள் அருகில் வந்து,
“ கனிம்மா  நிலவன் சொன்னது போல் இனி நல்லதே நடக்கும். உனக்கு இரு விழி போல் இரண்டு அண்ணாக்கள் இருக்கும் போது நீ எதற்கும் வருந்தக் கூடாது..” என்றான்.

நிலவனும், கனியும் அவனை வியப்பாக பார்த்தனர். எப்பொழுதும் புகழ்வாணன் இப்படி எல்லாம் பேசக் கூடியவன் இல்லை.அவனின் பேச்சு அவர்களை  மிகுந்த வியப்படையச் செய்தது.

பெரிய மகனின் பேச்சு பெற்றவர்களையும் கூட வியக்கவைத்தது.

புகழ்வாணனும் அருவியைப் பார்த்து கொஞ்சம்..கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்தான்.

நீலிமாவோ, அனைத்தையும் அதிர்ச்சியாக பார்த்தாலே தவிர, எதுவும் பேசவில்லை. அருவி அன்று அவளை பேசியதிலிருந்தே! அவள் எதற்கும் வாயே திறப்பதில்லை.தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள்.

அருவியோ, அவர்களிடம் சென்று “வாவ் கனி  இரு விழி போல் உனக்கு இரண்டு அண்ணன்களின் துணை இருக்கும் பொழுது  இனி கவலை எதற்கு..” என்றாள் மகிழ்ச்சியாக.

 அருவி சொன்னதை கேட்டு மூன்று பேரும்  அவளை மகிழ்ச்சியுடனே பார்த்தனர். கனியின் முகத்தில் பழைய மகிழ்ச்சி லேசாக குடிக்கொண்டது.

நிலவனோ ,அருவியையே விழி எடுக்காமல் பார்த்தான். அவன் மனதில் ‘இவளால் தான் எல்லாப் பிரச்சனைகளும்  கொஞ்சம் கொஞ்சமாக  சரியாகிக் கொண்டே வருகிறது. இவள் தனக்கு கிடைக்காமல் கிடைத்த தேவதை என்று நினைத்தான்.

இனி கனிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பது தான், தன் அடுத்த வேலை..’ என்று உறுதி கொண்டான்.

அடுத்த நாள் வழக்கம் போல் நிலவன் வயலுக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது.. கனகராயன் அவனை வழி மறித்து வம்பிழுத்தான்.

ஆனால் நிலவனோ, அன்று தன் கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு அமைதியாக அவனை கடந்து வந்தான்.

முன் பிருந்த நிலவனாக இருந்தால்,  கனகராயன் மீது இருந்த கோபத்திற்கு அவனை வெட்டி போட்டிருப்பான்.ஆனால் இப்பொழுது அவன் தன் கோபத்தை கட்டுபடுத்திக் கொள்ள பழகிக் கொண்டான்.

அதுவும் தன்னை நம்பி ஒருத்தி இருக்கிறாள்! என்ற நினைப்பே அவனை மாற்றியிருந்தது.

அன்று இரவு அருவியிடம் கனகராயன் வம்பிழுத்ததையும், தான் எதுவும் பேசாமல் அமைதியாக அவனை கடந்து வந்ததையும்  சொன்னான்.

 நிலவன் இப்பொழுது எல்லாம்  தினமும் இரவு அன்று நடந்ததை அருவியிடம் சொல்வதை வழக்கமாக்கி இருந்தான்.

அருவியோ, அவனை வியந்து பார்த்த படியே,”எனக்காகவா?நான் சொன்னதற்காகவா? தேங்கஸ்..” என்றாள்.

நிலவனோ, “அப்படி எல்லாம் இல்லை, இருந்தாலும் இந்த சின்னப் பெண்ணின் மனசை கஷ்டப்படுத்த வேண்டாமே என்று தான்..” என்றவன். அவளின் நெற்றியில் தன் நெற்றியால் செல்லமாக முட்டி விட்டு படுக்க சென்றான்.

அருவியோ,அவனின் செய்கையில்  திகைத்தாளும்,மனதிற்குள் தன் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவன் அமைதியாக வந்திருக்கிறான் என்று மகிழ்ந்தாள்.

  தன் நெற்றியில், அவன்  தன் நெற்றியால் முட்டிய இடத்தை வருடினாள்.  மனதிற்குள் அவனின் குறும்பை ரசித்தபடியே படுத்தவள், அன்று நிம்மதியான உறக்கத்தை தழுவினாள்.

அடுத்து வந்த நாட்களில்  வீட்டில் மெல்ல மெல்ல பழைய படி எல்லாம் மாறினாளும், திருமறவனுக்கு மட்டும்  கனகராயன் வரவு மனதிற்குள் ஒரு  இனம் புரியாத பயத்தை தந்தது. அதுவே அவரை ஓய்ந்து போகவும்  வைத்தது.

தொடரும்.

அத்தியாயம் 25(b)

 

அன்று மதியம் அரிசி ஆலையிலிருந்து, ஓய்ந்து போய் வந்த திருமறவனை பார்த்த அருவிக்கு மனதிற்குள் வலித்தது.அவர் உணவு உண்டு வரும் வரை பொறுத்திருந்தவள், அவர்  வந்த ஓய்வாக அமர்ந்த பின்  அவர் அருகில் சென்று அமர்ந்தாள்.

திருமறவனோ, அவளை பார்த்து “என்னடம்மா சாப்பிட்டாச்சா? ஏன்? ஒரு மாதிரியாக இருக்கிறாய்..” என்று தன் கவலையை காட்டிக் கொள்ளாமல், அவள் முகத் தோற்றத்தை கண்டு கேட்டார்.

அருவியோ, மெல்ல அவர் புறம் நெருங்கி அமர்ந்து.. அவரின் கைகளை பற்றி தன் இரு கைகளுக்குள்ளும் பொத்தி வைத்துக் கொண்டு,” மாமா நீங்கள் இப்படி இருப்பது நன்றாகவே இல்லை..” என்றாள்.

அவரோ புரியாமல் அவளைப் பார்த்தார்.

அருவியோ,அவரின் பார்வையை தாங்கிய படியே,” என் மாமா எதையும் தைரியமாக எதிர் கொள்பவர். இன்று ஓய்ந்து போய் தெரிகிறாரே!  எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லாமே! என்றாள்.

அவரோ, “அப்படி எல்லாம் எதுவும் இல்லை டா நான் எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன்..” என்றார்.

அவளோ,  “இல்லை, எதுவோ இருக்கிறது. எனக்கு தெரியும் . உங்கள் முகமே எனக்கு காட்டிக் கொடுக்கிறது .ஆனால்  என்னிடம் சொல்லத் தான் உங்களுக்கு  விருப்பம் இல்லை?” என்றவளிடம்.

“உன்னிடம் சொல்லாமல் நான்  யாரிடம் சொல்லப் போகிறேன் அருவிம்மா.கனகராயன் பெயிலில்  வெளி வந்திருக்கிறானே! அவனால் மறுபடியும் ஏதாவது பிரச்சனை    வருமோ? என்று தான் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது..” என்றவரிடம்.

“ஓ..!” என்றவள். தன் கைகளுக்குள் இருந்த அவரின் கைகளை மென்மையாக அழுத்திய படியே, “மாமா இனி  எதுவந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். அவனுக்கு தண்டனை வாங்கித் தராமல்  நான் விட மாட்டேன்.இனி அதைப் பற்றி நீங்கள்  கவலைப்படாமல், எப்போதும் போல் இருபது வயது பையன் மாதிரி துரு..துருன்னு இருக்கனும் ஓகே..”  என்றாள்.

அவரோ, மெல்ல சிரித்த படி “நான் எப்பொழுதும் போல் தான் டா இருக்கிறேன்..” என்று கண்களுக்கு எட்டாமல் சிரித்தார்.

அருவியோ ,” எனக்கு தெரியாதா? என் மாமாவை பற்றி ,இப்பொழுது கூட எனக்காக சிரிக்கிறீர்கள்.உங்கள் கண்களில் சிரிப்பில்லை.. நீங்கள் சிரிக்கும் பொழுது உங்கள் கண்ணும் சேர்ந்து சிரிக்கும்..” என்றாள்.

அவரோ ,”அப்படியா..” என்றார் வியப்புடன்..

அவளோ, “ம்ம்! அப்பா அதிகமாக உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்.அதுமட்டுமின்றி நான் இங்கு வந்த இந்த கொஞ்ச நாட்களிலேயே  தெரிந்து கொண்டேன்..” என்று சிரித்தவளை கண்குளிர  பார்த்தார்.

அவர் மனமோ ‘தன் நண்பனை அவருக்கு  ஞாபகப் படுத்தியது.அவனும் இப்படித்தான்  எத்தனை நாட்கள் கழித்துப் பார்த்தாலும்,தன் கண்களைப் பார்த்தே தன் மனதை கண்டு கொள்வான்.அவன் என்  கூட இருக்க முடியவில்லையே, என்று தன் மகளை தன்னிடம் சேர்த்திருக்கிறானோ! என்று நினைத்துக் கொண்டார்.

தன்னையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “கண்ணம்மா என்னை பார்த்துக் கொள்ளத் தான் உன்னை என்னிடம் சேர்த்திருக்கிறான்! என் ஆருயிர்  நண்பன். எனக்கென்ன கவலை வரப்போகிறது..” என்றார்.

 அருவிக்கோ,  அவரின் ‘கண்ணம்மா’ என்ற அழைப்பு தன் தந்தையின் அழைப்பை ஞாபகப் படுத்தியதில்  கண்களில் நீர் கோர்த்தது.

 திருமறவனோ ,அதை கண்டு   பதறி ,”என்னடம்மா  ஏன்? கண்கலங்குகிறாய்..” என்றார்.

அருவியோ, எதுவும் சொல்லாமல் அவரின் தோளில் மெல்ல சாய்ந்தவள், “அப்பா ஞாபகம் வந்துருச்சு மாமா.. நான் அவரை ரொம்ப மிஸ் செய்றேன்..” என்றாள்.

அவரோ ,அவளின் தலையை மென்மையாக வருடியபடி  அமைதியாக அமர்ந்திருந்தார்.அவருக்கும் துயரத்தில் வார்த்தையே வரவில்லை..

பவளமல்லியோ,  சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்து கொண்டே.. இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  அவருக்கும் அருவியின் அழுகை வருத்தத்தை தந்தது.

புகழ்வாணனுக்கு அன்று விடுமுறை . நீலிமாவும் , அவனும்   மதிய உணவு உண்ணஅறையிலிருந்து வெளியில்  வந்தார்கள். இவர்களின் உரையாடலைக் கேட்டு அசையாமல் அப்படியே நின்றனர்.

புகழ்வாணனுக்கு, அருவியின் ஒவ்வொரு செயலும்,அவள் மீது மரியாதையை  தந்தது.

நீலிமாவுக்கு, அருவி திருமறவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து வியப்பாக இருந்தது. கிராமத்தில் பெண்கள் பெரிய மனுசி ஆனாலே தந்தையிடமே நெருங்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இங்கு  இவள் என்னவென்றால் மாமனாரின் தோளில் சாய்ந்து கொண்டு இருக்கிறாளே! என்று நினைத்தாள்.

அவளுக்கு தெரியவில்லை  கள்ளம் கபடமில்லாத அன்புக்கு எந்த தடைகளும் இல்லை என்று ..மாமனாரும் இன்னொரு தந்தையை போன்றவர் என்று அவள் அப்பொழுது  உணரவில்லை.

நிலீமாவிற்கோ,திருமறவன் அருவி மீது கொண்ட பாசம், அவள் மனதிலும் பொறாமையை துளிர்க்க செய்தது.

நிலவனும்  அப்பொழுது தான் வயலில் இருந்து வீட்டிற்குள்  வந்தான்.அவனும் இருவரும் பேசியதை கேட்டு அப்படியே சிலையாக நின்றான்.

அவன் மனதிற்குள், அருவி ஒரு புரியாத புதிராக இருந்தாள்.சில நேரம் தைரியமானவளாகவும், சில நேரம் பாசத்திற்கு ஏங்கும் குழந்தையாகவும் தெரிந்தாள். அவளின் ஒவ்வொரு செயலும் அவனை அவள் பால் ஈர்க்க செய்தது.

 மெல்ல..மெல்ல அவளின் மேல் கொண்ட நேசத்தில்  தன்னை அறியாமல்  கரைந்து கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

திருமறவனோ, சிறிது நேரம் அருவியை அழவிட்டவர்.தன் தோளில் சாய்ந்திருந்தவளை நிமிர்த்தி “அருவி இனி அப்பா இல்லைன்னு நீ வருந்தக்கூடாது.உனக்கு நானும், அத்தையும் அம்மா, அப்பா இடத்தில் எப்பொழுதும்  இருக்கிறோம்..” என்றார்.

அவளோ, எதுவும் பேசாமல் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்,இன்று  காலை எழுந்ததிலிருந்தே! ஏனோ? அவளின் தந்தையின்  ஞாபகம் அதிகமாக  வந்தது.

அதுவும் கனகராயன் வழக்கை தான் எடுத்து நடத்தனும் என்று நினைத்தவுடனேயே ,அவளுக்கு அவளின் தந்தையின்  ஞாபகம் தான்  அதிகம் வந்தது.அவளின் முதல் வழக்கை காண அவளின் தந்தை இன்று இல்லையே!  என்று நினைத்தவளுக்கு மனதில் சொல்லிடங்காத துயரம்  பொங்கியது.

தன் தந்தையின்  நம்பிக்கையான வார்த்தைக்காக  மனம் ஏங்கியது.’உன்னால் முடியும் கண்ணம்மா நீ தான் டா ஜெயிப்பாய் ,,’என்று அவள் செய்யும் எல்லா காரியத்தையும் ஊக்கப்படுத்துவார்.

இன்று திருமறவனின் ‘கண்ணம்மா’ என்ற அழைப்பு  இன்னும் அவளுக்கு  தன் தந்தையின் ஞாபகத்தை அதிகமாக்கியது.

திருமறவனோ, அவளின் அமைதியை கண்டு “அருவிம்மா அழுகை நம்மை பலவீனப்படுத்தும்.செங்கனிக்கு சொல்வதைத் தான் உனக்கும் சொல்கிறேன்.இழந்ததை நினைத்து வருந்துவதை விட இருப்பதை வைத்து மகிழனும்.வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும்..”என்றார்.

அருவியோ ,”ம்ம்!” என்று மட்டும் சொன்னாள்.

அவளின் தலையை மென்மையாக தடவியவர் “நீ இந்த வழக்கை எடுத்து நடத்தும்மா. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன்.  உன்னால் முடியும் கண்ணம்மா.  நீ தான் டா ஜெயிப்பாய்..” என்றார்.

 அவளோ, அவரை விழி விரித்துப் பார்த்தாள்,அவளுக்கு    தேவை அந்த வார்த்தை தானே!  தன் தந்தையே  வந்து சொன்னது போல் இருந்தது.

 அடுத்த நொடியே “நிச்சயமாக மாமா நான் இந்த வழக்கில் ஜெயிப்பேன்.அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்..” என்றாள் மகிழ்ச்சியாக.

 இவர்களின் உரையாடலை கேட்டு நீலிமாவைத் தவிர அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

நாட்கள் வேகமாக நகர்ந்தது. அருவி சொன்ன மாதிரியே அந்த வழக்கை தான் எடுத்து நடத்துவதற்கு  சட்டபடி அனுமதி வாங்கியவுடன்..

முதல் வேலையாக கனகராயனால் சாட்சிகளை கலைப்பதற்கும், பொய் சாட்சியங்கள் தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளது. என்று திறமையாக வாதடி கனகராயனின் ஜாமீனை ரத்து செய்தாள்.

 அடுத்து  கனகராயன் மீதான வழக்கு  விசாரணைக்கு வந்தது. அந்த வழக்குக்கு  தேவையான  அத்தனை ஆதாரங்களையும் நிலவனின் உதவியுடன்  சேகரித்தாள்.

அதில் தனக்கு என்ன  சந்தேகம் வந்தாளும்  தனது குடும்ப வக்கிலீடம் கேட்டு அறிந்து கொண்டாள்..

நிலவனும், இன்பனும் அவளை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

அருவி  அன்று தான்  இந்த வழக்குக்காக  நீதிமன்றம் செல்லும் முதல் நாள்,அன்று காலையிலே எழும் பொழுதே அவளுக்கு  மனம் ஒரு வித படபடப்பாக இருந்தது.

நீதிமன்றம் செல்லும் முன்  தன் தந்தையின் படத்தை வணங்கினாள். பவளமல்லி, திருமறவன் கால்களில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கினாள்.அவர்களும்  மனதார வாழ்த்தி அனுப்பினார்கள்.

செங்கனியும், புகழ்வாணனும் கூட வாழ்த்தினார்கள்.நிலவன் தான்  அன்று அவளை நீதிமன்றத்திற்கு  அழைத்துச் சென்றான்.

அருவியோ, ஒரு வித அமைதியுடனேயே நிலவனுடன்  சென்றாள்.நீதிமன்றம் சென்றும் யோசனையுடனே இருந்தாள்.

அவர்களுடைய  வழக்கு விசாரணைக்கு வரும் சமயம், அவள் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக! இன்பன் வந்து அவள் முன் நின்றான்.

அருவியோ,  ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள்.அவளின் கண்களில் ஆனந்த கண்ணீர் தேங்கியது.

 இன்பனோ, அருவியின் கைகளை பிடித்து “வாழ்த்துக்கள் அம்மு, ஆல் தி வெரி பெஸ்ட்..” என்றான்.

  அருவியோ, மகிழ்ச்சியுடன் “நீ எப்படி வந்தாய் ..”என்றாள்.

இன்பனோ , கொஞ்சம் தள்ளி நின்று அலைப்பேசியில் பேசியபடியே  இவர்களையே  பார்த்துக் கொண்டிருந்த நிலவனை சுட்டிக்காட்டி,” அவர் தான் நீ என்னை தேடுவாய் என்று நினைத்து  என்னை வரவழைத்தார். உன்னிடம் சொல்ல வேண்டாம் சர்பிரைஸ்சாக இருக்கட்டும் என்றார்.அது தான் சொல்லை..”என்றான்.

அருவியோ ,அதிர்ச்சியுடன் நிலவனை பார்த்தவள். வார்த்தைகளால்  சொல்ல முடியாத நன்றியை!  கண்களால் காட்டினாள்.அவளின் கண்களில் தெரிந்த நேசத்தை கண்டு நிலவன் தான் திக்குமுக்காடிப் போனான்.

தொடரும்..

 


ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
12/08/2020 2:57 pm  

அத்தியாயம் 26

அருவி மிகுந்த மகிழ்ச்சியுடனே  தன்  முதல் வழக்கு  விசாரனையை எதிர்கொண்டாள்.அவள் வழக்கை எதிர்கொண்ட விதம்,அவளுக்கு இது  முதல் வழக்கு என்று எண்ண முடியாதது  போல் இருந்தது.

ஒரு சிறந்த கைதேர்ந்த வழக்கறிஞர் போல் வாதடினாள்.கனகராயனுக்கு எதிராக பல ஆதரங்களையும், சரியான சட்ட உட்பிரிவுகளுடன் அவனின் குற்றங்களை பட்டியிலிட்டாள்.

இன்பனும், நிலவனும் அவளின் வாதங்களை கண்டு பிரமித்தனர். நிலவனுக்கு மனதிற்குள் நிச்சயமாக செங்கனிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.

  நிலவன், அருவியுடன்  இன்பனும் வழக்கு விசாரணை முடிந்தவுடன்  அவர்களுடன்   வீட்டிற்கு சென்றான்.

அருவியோ, மனதிற்குள் நிலவனையே நினைத்துக் கொண்டிருந்தாள்.தன் மனம் அறிந்து இன்பனை வரவழைத்தது!அவளுள் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

நீதிமன்றத்திற்கு போகும் பொழுது  இன்பன் ஞாபகமாகவே அவளுக்கு இருந்தது.ஆனால்  அவனின்  வரவை அவள் ஒரு சதவீதம் கூட எதிர்பார்க்கவில்லை.

அவள் மனதிற்குள் நிலவன் மீது மரியாதையும், நேசமும் பெறுகிக்   கொண்டே போனது.

இன்பனை கண்ட திருமறவனும், பவளமல்லியும்  மகிழ்ச்சியுடனே வரவேற்றனர்.

அருவியோசொல்ல முடியாத ஆன்ந்தத்தில் திளைத்தாள். பின்  அவன் தன் பிறந்த வீட்டு உறவென்று தன்  புகுந்த வீட்டிற்கு வந்துள்ள சொந்தம் அல்லவா!  

புகுந்த வீட்டில் எத்தனை அன்பான உறவுகள் கிடைத்தாலும், ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டு உறவு என்றுமே அளவில்லாத மகிழ்ச்சியை கொடுக்கும்.அருவியும் அதற்கு விதிவிலக்கல்லவே!

 அன்று முழுவதும் அளவில்லா மகிழ்ச்சியுடன் வளைய வந்தாள்.இன்பனிடம் தனியாக பேசும் வாய்ப்பு கிடைத்தவுடன் அவனின் திருமணத்தை பற்றி பேசினாள்.

இன்பனோ, “அம்மு நான் சம்மதித்தாள் போதுமா?அந்த பெண் சம்மதிக்க வேண்டாமா?நிலவன், மாமா எல்லாரும் சம்மதிக்கனுமே ..”என்றவனிடம்.

 “நீ உன் முடிவை மட்டும் சொல்லு நான் மத்ததை  பார்த்துக் கொள்கிறேன்..” என்றாள்.

இன்பனோ, அவளின்  கண்களையே பார்த்த படி,”என் அம்மு எனக்கு எது செய்தாலும் அது என் நன்மைக்காகத் தான் இருக்கும். அதனால் உனக்கு பிடித்ததை செய்..” என்று தன் சம்மத்தை மறைமுகமாக சொன்னான்.

அருவியோ, அவனின் பதிலில் மகிழ்ந்தவள்.. “தேங்கஸ்..தேங்கஸ் இன்பா,செங்கனி அருமையான பெண் உனக்கு ஏற்ற பெண்.அவளை பற்றி முன்னமே எல்லாம் உனக்கு  சொல்லியிருக்கேன் ,இருந்தாலும் மறுபடியும் கேட்கிறேன்   உனக்கு சம்மதம் தானே..”என்றவளிடம்.

“அம்மு  எனக்கு அதை பற்றி  எந்த பிரச்சனையும் இல்லை ,அந்த பெண்ணிடம் பேசிவிட்டு சொல்லு..” என்றான்.

 செங்கனியை இதுவரை அவன் நேரில் பார்த்ததே இல்லை.தான் சொன்ன ஓரே காரணத்திற்காக அவன் சம்மதம் சொல்லியது அவளுக்கு அவன் மீது இன்னும் அன்பை அதிகரிக்கச் செய்தது. அந்த அன்பு அவள்   கண்களில் ஆன்ந்த கண்ணீரை வரவழைத்தது.

ஓரு கைம்பெண்ணை மணக்கும் எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லையே! என்று எண்ணியவள் இன்பனை நினைத்து பெருமை கொண்டாள்.

முதலில்  இதைப் பற்றி மாமாவிடம் பேசிவிட்டு நிலவனிடம் சொல்ல வேண்டும்.அதன் பிறகு தான் செங்கனியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

இன்பனை இரண்டு நாட்கள் தங்கச் சொல்லி  வற்புறுத்தி அங்கேயே இருக்க வைத்தாள்.

அன்று இரவு உணவு முடிந்த பின்  ஓய்வாக வெளிப்புறத் திண்ணையில் அமர்ந்து அருவியும், இன்பனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நிலவனும் அவர்களை  தேடி அங்கு வந்தவன், அருவியின் அருகில் உரிமையாக தோளில் கைகளைப் போட்டு அமர்ந்தான்.

அருவியோ, இன்பன் முன் இப்படி செய்கிறானே! என்று  நினைத்து அவன் கையை விலக்க முயற்சித்தாள்.

நிலவனோ ,அவள் முயற்சியை தடுத்தவன்,இன்னும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு,”மை டியர் தமிழழகி இன்று கோர்ட்டில்  பிச்சு உதறிட்டே, சூப்பர்  டி பொண்டாட்டி..” என்றான்.

அருவிக்கோ ,கோபம் எல்லையை கடந்தது.. அருகில் இன்பன்  இருக்கிறானே! என்று நினைத்தவள். பல்லை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்

 

இன்பனோ நிலவனின் பேச்சை  கேட்டு வியந்தபடியே, “அது என்ன தமிழழகி..” என்றான்.

நிலவனோ, “தமிழ்  மொழி என்றாலே அழகு தான் .அது போல்தமிழருவியும்  தன் எண்ணத்தில், செயலில்,தைரியத்தில்,நேர்மையில், கருணையில்,அன்பில் பேச்சில் ,அப்புறம் கோபத்தில் கூட அழகு. அது தான் தமிழழகி..” என்று கண்ணடித்து சிரித்தான்.

இன்பனோ, “வாவ் சூப்பர் அம்முவை இதை விட அழகாக சொல்லவும் முடியாது.இவ்வளவு அழகாக  அழைக்கவும் முடியாது.. “என்றான்.

அருவியோ, நிலவனின் பேச்சை கேட்டு முகத்தில் எள்ளும் , கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள்.மனதிற்குள் நிலவனை வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

 இன்பனோ, மனதிற்குள் நிலவனும்,அருவியும் மனதால் நெருங்கிவிட்டார்கள் . இனி  தன் அம்முவின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.

அருவியோ இதற்குமேல் இங்கு இருந்தால் இவனை கன்ட்ரோல் செய்ய முடியாது.இன்பன் முன் மானத்தை வாங்கி விடுவான் என்று நினைத்தவள், வேலை இருப்பதாக சொல்லி வீட்டிற்குள் ஒடினாள்.

 இனபனும், நிலவனும் அவள் ஓடுவதை பார்த்து சிரித்துக் கொண்டனர்.

இன்பன் நிலவன் அருகில் நெருங்கி அமர்ந்து,”நிலவா அம்மு முகத்தில்  நான் எப்பொழுதும்  சிரிப்பை மட்டும்  தான் பார்க்கனும்.நீங்கள்  இருவரும்  இதே போல் எப்பொழுதும்  மகிழ்ச்சியுடன் வாழனும்..” என்றான்.

நிலவனோ, “உன் அம்முவை என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன் நீ கவலைப்படாதே..” என்றான்.

“  நீ அம்முவை நன்றாக பார்த்துக் கொள்வாய் என்று எனக்கு தெரியும். என் மாமாவின் தேர்வு என்றும் நல்லதாகத் தான் இருக்கும்..”என்றான்

நிலவனோ , எதுவும் பேசாமல் அமைதியாக அவனையே பார்த்திருந்தான்.

“நிலவா, அருவி எதாவது தெரியாமல் தவறு செய்தாலும்,சொன்னால் புரிந்து கொள்வாள்.அடித்து மட்டும் விடாதே..” என்றவனுக்கு குரலே எழும்பவில்லை.

நிலவனுக்கு புரிந்தது.அன்று அடித்ததை தான் மனதில் வைத்து சொல்கிறான் என்று நினைத்து,” அன்று அறியாமல் அப்படி நடந்து கொண்டேன் . இனி ஒருபோதும் அந்த தப்பை நான் செய்ய மாட்டேன்..”என்று தலைகுனிந்தபடியே சொன்னான்.

இனபனோ,சட்டென்று அவனின் கைகளை பற்றி,”என்னை தவறாக நினைத்துக் கொள்ளாதே,  அம்முக்கு இனி நான் தான் எல்லாம்,அவளுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்கமுடியாது..” என்றவனின் கண்கள் லேசாக கலங்கியது.

நிலவனோ,”அச்சோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை,உங்களின் அன்பு எனக்கு தெரியும்.உண்மையில் உன்னைப்போல் உடன் பிறவா   சகோதரன் கிடைக்க அருவி கொடுத்து வைத்திருக்கனும்..” என்றான்.

இன்பனும்,“நானும் தான் அவள் எனக்கு உறவாக கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்..” என்றான்  

இருவரும் சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டு இருந்தனர். திருமறவன் வந்து இருவரையும் தூங்க போகச் சொன்ன பின்னரே சென்றனர்.

அருவியோ ,தங்கள் அறைக்குள் நடைபயின்று கொண்டிருந்தாள்.மனதிற்குள் கணவனை நினைத்து கொலை வெறியில் இருந்தாள்.

 அவனின் அட்டகாசம் அளவில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.அதற்க்கு  இன்று முடிவு கட்டனும் என்று உறுதி கொண்டாள்.

நிலவன் அறைக்குள் வந்து கதவடைக்கும் வரை பொறுத்திருந்தவள்..அவனின் அருகில் சென்று கோபத்துடன்.

“ஒளிர் வர…வர நீங்கள் செய்வது ஒன்றும் சரியில்லை..” என்றாள்.

அவனோ புரியாமல் “என்ன செய்தேன்..”  என்றான்.

“இன்பன் முன் ரொம்ப ஓவரா போறீங்க..”

அவனோ, “ஓ!..அப்படியா தமிழழகி..”  என்றபடி அவளின் அருகில் நெருங்கி நின்றான்.

அவளோ,”ஒளிர் நமக்குள் இருக்கும் பிரச்சனை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.என்னை எனக்காகத் தான் பிடிக்கனும். என் மீது பரிதாப்பட்டு  ஏற்றுக் கொள்ள வேண்டாம்..” என்றாள்.

அவனோ “ஓ! அப்படியா..” என்றான் நக்கலாக.

அவளோ, “ஆமாம் அப்படித்தான் ,எல்லா பிரச்சனையும் முடிந்த பின் நீங்கள் என்னிடம் ஆசையாக கேட்ட விவகாரத்தை தந்து விட்டு  நான் போய் விடுகிறேன்.. இனி இன்று போல் என்னைத் தொட்டு பேசாதீர்கள்..” என்று சொன்னவளை பார்த்தவனுக்கு கோபத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது.

அவளின் விழிகளை பார்த்த படி,  “ஓகே வக்கீலம்மா..பேசி முடிச்சாச்சா?  இன்னும் இருக்கிறதா?அடுத்து  என்ன செய்யலாம்..” என்று கூறியபடியே அவளின் அருகில் இன்னும் நெருங்கி நின்றான்.

அவளோ பின்னால் நகர்ந்த படியே..

 "நீங்கள் நடந்து கொள்ளும் முறை கொஞ்சம் கூட சரியில்லை.." என்றவளிடம்..

"அப்படியா  அருவி டார்லிங்..பின் எப்படி நடந்து கொள்வது என்று நீயே சொல்லு.. நான் அச்சு பிசாகமல் அப்படியே நடந்து கொள்வேன்..ஏன்? என்றால் நான் அருவிதாசன் .."என்றான்.

 

அவளோ அவனை முறைத்தபடி "தயவு செய்து கொஞ்சம் சீரியஸாக பேசுங்கள் .."என்றாள்..

 

அவனோ.."அச்சோ அருவி அப்போ நான் வேண்டுமானால் போய் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு டீரிப்ஸ் உடன் பேசட்டுமா.." என்று  கூறியவனை பார்த்து தலையில் அடித்து படியே நகரந்தவளை..

 

ஓரே எட்டில் பிடித்து இழுத்தவன்.." அருவி இங்கே பார் .. இனி நீ என்ன சொன்னாலும் அதற்கு நான் ஓத்துக் கொள்ள மாட்டேன்.. நடந்ததை பற்றி பேசாமல்  இனி நடக்க போவதை பற்றி பேசுவோமா.."என்றான்.

 

அவளோ,"பிளீஸ்  நான் சொல்வதை கேளுங்கள்.." என்றவளை முறைத்தவன்.."நீ இத்தனை நேரம் வகுப்பு எடுத்ததை நான் கேட்டு கொண்டு தானே இருந்தேன்..இனி நீ  நான் சொல்வதை  கேளு .."என்றான் கோபமாக..

 

அவளோ இவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று குழம்பிய படியே நின்றவளுக்கு திடீர் என்று ஒரு யோசனை தோன்றியது..

 

"இங்கே பாருங்கள் உங்களை எனக்கு பிடிக்கவில்லை.. உங்கள் நிறத்திற்கும் என் நிறத்திற்கும் சுத்தமாக பொருந்தாது .. அதனால் நான் சொல்வதை கேளுங்கள்.." என்றாள்..

 

அவனோ அந்த இடமே அதிரும் படி சிரித்தவன்.. "இது தான் உன் பிரச்சனையா .. இதற்கு எளிதாக ஒரு வழி இருக்கிறது.."என்றவன். அவளை ஆழமாக பார்த்தபடியே அவளை சட்டென்று தன் புறம் இழுத்தவன் ..அவள் முகம் நோக்கி குனிந்தான்..

 

அருவிக்கோ,  அவனின் அதிரடியில் கண்களில் நீர் கோர்த்தது.

நிலவனோ, அவளின் கண்களில் கண்ணீரைக் கண்டவுடன் சட்டென்று அவளை விட்டு நகர்ந்தான்.” உன் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது..” என்று அவளின்  முகத்தை பார்க்காமல் கூறியவன். நேராக படுக்கையில்  சென்று  முகத்தை மூடிக் கொண்டுப் படுத்தான்.

அருவிக்கோ,  அவனின் விலகலும் மனதை வலிக்க செய்தது.அவனை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தன்னுடனே போராடி களைத்துப் போனாள்.

தொடரும்..

This post was modified 3 months ago by Initha Mohankumar Tamizhini

ReplyQuoteInitha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
12/08/2020 3:06 pm  

அத்தியாயம் 27

 அன்று இரவு   அருவி வெகு நேரம் உறங்காமல் விழித்தே இருந்தவள், கணவன் புறம் திரும்பிப் படுத்தாள்.அவனையே பார்த்தபடி படுத்திருந்தவள், தன் மனதிற்குள் அவனை தனக்கு  மிகவும் பிடித்திருந்த போதும்!ஏன்? அவனை நாம்   கஷ்டப்படுத்துகிறோம்! என்று தன்னையே நொந்து கொண்டாள்.

அருவிக்கு  நன்றாக தெரியும் நிலவனைப் பிரிந்து  தன்னால் வாழ முடியாதென்று.. அவள் மனதிலும்  கொஞ்சம், கொஞ்சமாக நிலவன்  பனித்துளியாக  நுழைந்திருந்தான்.

நிலவனின் வாடிய முகம் அவளை வலிக்கச் செய்தது,அவன் ஆசையாக நெருங்கி வரும் பொழுது, நாம் விலகிப் போவது அவனை எப்படி வேதனைக்குள்ளாக்கும், என்று நினைத்து வருந்தினாள்.பெண்புத்தி பின் புத்தி தான் என்று  நினைத்தாள்.

இனிமேல் இப்படி நடந்து கொள்ளக் கூடாது.போதும் அவனை பிடிக்காதது போல் தான் நடித்தது. கிடைத்திருக்கும் அழகான  வாழ்க்கையை ஏற்று வாழ்வது தான் புத்திசாலித்தனம் என்று நினைத்தாள்.

 நிலவன்  தான் தனக்கு ஏற்றவன் என்று அப்பா அவனை திருமணம் செய்து வைத்திருக்கிறார்.அப்பாவின் தேர்வு என்றும் மோசமாகது.நாம் தான் அது புரியாமல்  இத்தனை நாள் அவனை கஷ்டப் படுத்திவிட்டோம் என்று எண்ணினாள்.

அவன் முதலில் தன்னை ஏற்காதை கூட அவள்  மறந்தேவிட்டாள்.

அதுவும் நிலவனின் குணம், குறும்பு,அன்பு, நேசம்,திமிர் என்று எல்லாமே அவளை கவர்ந்திருந்தது. அவன் தன் காதலை சொன்னபிறகும்,தான் அவனை விலக்கி வைத்திருப்பது  நியாமே இல்லை என்று நினைத்தவள்,இனிமேல் நிலவனிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு தான் உறங்கினாள்.

அருவிக்கு காலையில்  துயில் களைந்து விழிக்கும் போதே ,மனம் என்றும் இல்லாமல் அன்று  சோர்வாகத் தான் இருந்தது.

 நிலவன் இரவு நடந்த நிகழ்வை நினைத்து  தன் மீது  கோபமாக இருப்பானோ?  வெறுத்து விடுவானோ ?என்று நினைத்து  வருந்தினாள். அதுவே அவளின் சோர்வுக்கு  காரணம்.

சோர்வுடனே  அவன் எங்கே என்று  அறை முழுவதும்  பார்வையை சூழற்றினாள்.

அவளின் அருமை கணவனோ!  குளித்து முடித்து வேட்டி, சட்டையில் தயாராகி கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தான்.

இவள் எழுந்து அமர்ந்ததை கண்ணாடி வழியாக பார்த்தவன், அவள் வருந்தவே தேவை இல்லாததை போல்  புன்னகையுடன், “குட்மார்னிங் மை டியர் தமிழழகி..” என்றான்.

அருவிக்கோ, அவனின் புன்னகை முகம்  சோர்ந்திருந்த  தன்  மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்  டானிக் போல் இருந்தது.அவளும்  புன்னகையுடனே “குட்மார்னிங் ஒளிர்..” என்றாள்.

அவனோ, “வக்கீலம்மா இன்று  அதிசயமாக இத்தனை நேரம் தூங்கியதால்,உடம்பு எதுவும் சரியில்லையோன்னு நினைத்துப் பயந்துட்டேன்..” என்றவனிடம்..

அவளோ,”அதெல்லாம் ஒன்றும் இல்லை.நைட் லேட்டா தூங்கினேன்,அது தான்  இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்..” என்றாள்.

அவனோ, அவளின் அருகில் வந்து  வழக்கமான குறும்புடன், “கண்டதையும் நினைத்து, இருக்கும் கொஞ்சுண்டு மூளையையும் குழப்பிக் கொள்ளாதே..” என்று அவள் தலையில் செல்லமாக  தட்டினான்.

அருவியோ,  தன் தலையின்  மேலிருந்த அவனின் கைகளை தட்டியவள்,”உங்களுக்கு ஏற்ற ஜோடியாக இருப்பதற்கு இருக்கிற மூளையே போதும்..” என்று நக்கலாக சொல்லியவள், தனக்கு மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றாள்.

 அவனோ, “வக்கீலம்மாவிற்கு பேசுவதற்கு சொல்லியா தரவேண்டும்..”: என்று சிரித்துக் கொண்டே சொன்னான்..

அவளோ, குளியலறைகுள் செல்லாமல் திரும்பி அவன் அருகில் வந்து  நின்று முறைத்தபடியே ,” ஹப்பா சாமி நான் வக்கீல் தான் அதை தினமும் எனக்கு ஞாபகப்படுத்த வேண்டாம்..”என்று  கோபமாக சொல்லிய படி திரும்பி நடந்தாள்.

நிலவனோ, அவளை ஒரே எட்டில் பிடித்து நிறுத்தியவன், “ஹோய் கோபமா? சும்மா விளையாட்டிற்குத் தானே சொன்னேன்..” என்றான்.

அருவியோ, எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.

நிலவனோ, “ஓகே..ஓகே.. தெரியாமல் சொல்லிவிட்டேன் சாரி  தமிழருவி..   என்றான்.

அருவிக்கோ, அவனின் வருத்தமும் பிடிக்கவில்லை..அவன் தன் பெயரை என்றும் இல்லாமல் ,இன்று  நீட்டி முழக்கி அழைத்ததும் பிடிக்கவில்லை..    பதில் பேசாமல்  மெளனமாகவே நின்றாள்.

நிலவனோ, அவள் அமைதியாக இருப்பதை கண்டு , “இன்னும் கோபம் தீரவில்லையா..?” என்றவுடன்.

, “கோபமெல்லாம் இல்லை..” என்றாள்

 “அப்புறம் ஏன்  முகத்தை தூக்கி வைச்சிருக்கே..”

“ம்ம்! சும்மா விளையாட்டுக்கு.. உங்களுக்கு மட்டும் தான் விளையாடத் தெரியுமா? எனக்கும் தெரியும். அதுதான் யாருக்கும் அடங்காத இந்த அய்யனாரையே சாரி கேட்க வைத்துட்டானே..” என்று நாக்கை துருத்தி காட்டியவள், அடுத்த நொடி  நிற்காமல் ஓடிச் சென்று குளியலைறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

நிலவனோ, சிரித்தபடி, “ஹோய்!  இப்பொழுது எனக்கு நேரமாகிவிட்டது. வயலுக்கு சென்று வந்து உன்னை  பேசிக் கொள்கிறேன் ..” என்றான்.

அருவியோ,குளியலறையிலிருந்து தலையை மட்டும் வெளியில் நீட்டிய படி, “ஓகே..ஓகே அப்போது பார்த்துக்கலாம். இப்போது சாப்பிட்டு  விட்டு போங்க.. இல்லை ஒரு பத்து நிமிடம்  காத்திருங்கள், குளித்து விட்டு வந்து டிபன் எடுத்து வைக்கிறேன்..” என்றவளிடம்..

“இல்லை வேண்டாம் நான் அம்மாவை எடுத்து வைக்கச்  சொல்லி உண்டு கொள்கிறேன், இப்போதே நேரமாகிவிட்டது!வருகிறேன்..” என்றபடி நகர்ந்தான்.

அருவியோ, குளித்து தயராகி இன்பனை தேடிச் சென்றாள்.ஆனால் அவனோ, நிலவனுடன் வயலுக்குச் சென்று விட்டான் என்று பவளமல்லி கூறினார்.

அருவியோ,  அவர் சொன்னதை கேட்டதும், ‘மனதிற்குள் என்ன இரண்டு  பேரும்  இப்படி பின்னிப் பினைகிறார்களே!’ என்று நினத்தபடியே இன்பனை அலைபேசியில் அழைத்தாள்.

      

இன்பனோ, நிலவன் வயலில் இறங்கி வேலை செய்வதையே வியந்து  பார்த்துக் கொண்டு இருந்தான்.

விவசாயம் செய்வது எவ்வளவு கடினமான வேலை என்று எண்ணினான்.  எளிதாக நம் தட்டுக்கு உணவு வருவதில்லை, ஒவ்வொரு  அரிசி பருக்கையிலும் விவசாயின் கடினமான  உழைப்பு இருக்கிறது என்று பெருமையாக நினைத்தான்.

 ஏசி ரூமில் உட்கார்ந்து வேலை செய்வதையே பெருமையாக நினைக்கும் இன்றைய தலைமுறையினர்  கட்டயமாக விவசாயின் கஷ்டத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

விவசாயத்தையும், விவசாயியையும்  போற்றி பாதுகாக்க வேண்டும்.விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், நாம் தட்டில் கைவைக்க முடியும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்  அப்பொழுது தான் விவ்சாயம் செழிக்கும் என்று  நினைத்தான்.

இன்பனின்  மனதிற்குள் நிலவன் வயலுக்கு நடந்து வரும் வழியில், தன்னிடம் விவசாயத்தைப் பற்றிப்  பேசிக் கொண்டே, வந்தது தான் திரையாக ஓடியது.

நிலவன் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மண்ணில்லாமல் செடி மற்றும் தாவரங்கள் வளர்க்கும் முறையை பற்றித் தான் அத்தனை ஆர்வமாகவும், நம்பிக்கையாகவும் இன்பனிடம்  பேசிய படி வந்தான்.

 இன்பா,”மண் என்பது ஒரு பிடிமானம் தான். தண்ணீரிலும், ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் உள்ளன.மரம் கூட தண்ணீரில் வளர்க்கும் முடியும் என்பது தான் உண்மை .”

“ஹைட்ரோபோனிக்ஸ்  ஒரு விதமான அறிவியல். இது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் விவசாய முறையாக உள்ளது. “

“தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறை, இடமின்மை  பிரச்சனைகளுக்கு ஹைட்ரோபோனிக்ஸ் முறை சரியான தீர்வாக அமைந்துள்ளது.”

“இந்த முறையில் கீரைவகைகள், கத்தரிக்காய், புதினா என்று பல வகையான காய்கறிகளை விளைவிக்க முடியும் .”

“வீட்டின் மொட்டைமாடி,சிறிய நிலப்பகுதி என எங்கும் பயிரட முடியும். குறைந்த  மனித உழைப்போடு, குறைந்த செலவில் அதிக லாபமும்,விளைச்சலும் கிடைக்கும்.அத்துடன் சத்தான காய்கறிகளும் கிடைக்கும்.”

“நாம் செடிக்கு 1 லிட்டர் தண்ணீர் விட்டால் அதில் வெறும் 17 சதவீதம் மட்டுமே  செடிக்கு செல்கிறது.மீதமிருக்கும் தண்ணீரை வெப்பம்,மண் போன்றவை உறிஞ்சிக் கொள்கிறது.”

‘ஆனால் இந்த முறையில் செடிக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டுமே தண்ணீர் தேவைப்படும்.”

“ஒரு செடிக்கு தேவை சூரியஒளி,கார்பண்டை ஆக்சைடு, தண்ணீர், தாதுக்கள் தான் முக்கியம். அதை இந்த முறையில் நாம்  சரியான அளவில் கொடுத்தால்,அதன் வளர்ச்சி நாம் நினைத்தது போல் கிடைக்கும் .”

“ஹைட்ரோபோனிக்ஸ் முறை மற்றும் வெற்றி பெற்றால் விவசாயத்தில் ஒரு நல்ல மாற்றம் விளையும்.,நகரத்தில் கூட இந்த முறை விவசாயத்தை எளிதாகச் செய்ய முடியும்.

 “மக்களுக்கு இந்த முறையைப் பற்றிய செய்திகள் இன்னும்    முழுமையாக தெரியவில்லை..” என்றான்.

“நான் இந்த முறையில் சிறிதாக விவசாயத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். “

“அதற்கான வேலையை தொடங்குவதற்கான முயற்சியை விரைவில் தொடங்கனும்..” என்று கண்களில் ஆசையுடன்  நிலவன் சொன்னதை கேட்ட இன்பனுக்கே அவனின் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை துளிர்த்தது.

இன்பனுக்கு ஏனோ? இப்போது நிலவன் மீது தோழமை உணர்வு அதிகரித்திருந்தது .அதற்கு அருவியின் கணவன் எனபது ஒரு காரணமாக இருந்தாலும்,நிலவனின் இயல்பும், குணமும் அருவியைப் போல் அவனையும் சாய்த்தது.

 நிலவன் வேலை செய்வதை  பார்த்துக் கொண்டே, மனதிற்குள் அவனைப் பற்றி அசை போட்டுக் கொண்டிருந்த  இன்பனை அவனது அலைபேசி சினுங்கி நடப்புக்கு கொண்டு வந்தது.

இன்பனோ, சட்டென்று  அழைத்தது யார் என்று பார்த்தான். அது தன் அம்முவின் அழைப்பு என்றவுடன், புன்னகையுடன் அதை உயிர்பித்து தன் காதுகளில் வைத்து “அம்மு ..”என்றான்.

அவளோ, “ஹலோ சார், என்ன எழுந்ததும் என்னைக் கூட பார்க்காமல் வயலுக்கு போயாச்சு,வருங்கால மச்சானை அளவா ஐஸ் வையுங்க சார்..” என்றவளிடம்.

அவனோ, சத்தமாக சிரித்த படி ,”அம்மு நீ குளித்து ரெடியாக லேட் ஆகும்ன்னு நிலவன் சொன்னார்.அது தான் டா வயலுக்கு சென்று வந்த பின்  பார்த்துக்கலாம் என்று நினைத்தேன்..” என்றவனிடம்.

“அந்த அய்யனார் அப்படியா சொன்னார்..அவரை நான் அப்புறம் கவனித்துக்கிறேன். நீ சீக்கிரம் வீட்டுக்கு வா.. நான் உனக்கு செங்கனியை அறிமுகப்படுத்தனும்..” என்றவளிடம்,

இன்பனோ, “நிலவன் உனக்கு அய்யனாரா! அம்மு உனக்கு வர..வர.. வாய்  ரொம்ப அதிகமாகிட்டே இருக்கிறது..”என்றவனிடம்.

“என் புருசனை நான் என்ன வேனா சொல்லுவேன்.அதை எல்லாம் நீ கண்டுக்காதே..” என்றாள்.

அவனோ, “ம்ம்!  அம்மு  நீ  நடத்து.. நடத்து.. பாவம் என் மச்சான்..” என்றான்.

“இப்பவே மச்சான் பாசமா? இன்பா நீ  ரொம்ப தேறிட்டே! சரி..சரி வெட்டிய பேசிட்டிருக்காமல் சீக்கிரம் வீட்டுக்கு வா ..”என்றவளிடம்.

“அம்மா தாயே நான் வெட்டிய பேசறேன்னா! எல்லாம் என் நேரம்.நான் நிலவன் வரும் பொழுதுகூட வருகிறேன்..”என்றான்.

“ம்ம்!..” என்றவள். “உடனே நீ சாப்பிட்டீயா?” என்றாள்.

அவனோ,”அம்மு ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டே ,அதெல்லாம் அத்தை  நல்லா சாப்பிட வைத்துத் தான் அனுப்பினார்..”என்றான்.

அவளுக்கோ, அவன் அப்படி சொன்னதும்  குற்றயுணர்வாக இருந்தது.”சாரி இன்பா..நல்லா தூங்கிட்டேன்,காலையில் லேட்டாகத் தான் எழுந்தேன். அது தான் உன்னை கவனிக்க முடியலை..” என்றவளிடம்.

“அச்சோ! அம்மு நான் சும்மா விளையாட்டுக்குத் தான் கேட்டேன்.என் அம்முவை பற்றி எனக்கு தெரியாதா?” என்றவன், அவளிடம் சிறிது நேரம்  பேசி அவளை சமாதானப்படுத்தி விட்டே அழைப்பை துண்டித்தான்.

அருவியோ, கணவனும், இன்பனும் வருவதற்கு எப்படியும் மதியம் ஆகும். அதற்குள் மாமாவிடம் முதலில் கனியின் திருமணத்தைப் பற்றி பேசவேண்டும் என்று நினைத்தாள்.

உடனே அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது,பேசாமல் மாமாவை அரிசி ஆலையிலே சென்று பார்த்து வரலாமா?என்று நினைத்தவள் ..

பவளமல்லியிடம்   சென்று, “அத்தை மாமாவை பார்க்க வேண்டும் நான் அரிசி ஆலை வரை சென்று வரட்டுமா..?” என்றாள்.

அவரோ, “என்ன ?விசயம் அருவிம்மா,மாமா இன்று அரிசிஆலைக்கு  போகவில்லை.. காலையில் நேரமாகவே யாரையோ பார்க்க வேண்டும் என்று  டவுன் வரைக்கும்  சென்று இருக்கிறார்..”என்றவரிடம்.

“ஓ! அப்படியா..” என்றவளின் முகம் வாடுவதை கண்ட பவளமல்லியோ,” அருவி  மாமா  இப்பொழுது வரும் நேரம் தானம்மா..”என்றுஅவர்  கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே! அவரின் கூற்றை பொய்யாக்காமல் திருமறவன்வீட்டிற்குள்வந்தார்.


  தொடரும்…

 

 அத்தியாயம் 28

அருவியோ, அவரை பார்த்ததும்  மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்று குடிக்க நீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

அவரும் புன்னகையுடன் நீரை வாங்கி குடித்து விட்டு ஓய்வாக சோஃபாவில் அமர்ந்தார்..

அருவியோ, பவளமல்லியையும் கைகளை பிடித்து அழைத்து வந்து ,திருமறவனின்  அருகில் அமரவைத்தவள், “அத்தை, மாமா உங்கள் இருவரிடமும் நான் ஒரு முக்கியமான விசயத்தை பற்றி பேசனும்..” என்றவள் அவர்களின்  கைகளை பற்றிய படி  கீழ் மண்டியிட்டு அமர்ந்தாள்.

அருவிக்கோ, பேசனும் என்று தைரியமாக சொன்னாலும், மனதிற்குள் ஏனோ! ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.அவள் சொல்லவந்த விசயத்தை கேட்டு, அவர் தவறாக நினைத்துக் கொள்வாரா? என்று அவளுக்கு தயக்கமாகத் தான் இருந்தது.

ஆனாலும், அவளுக்குள்ளே இயல்பாக இருக்கும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேச தயரானாள்.

 அருவியையே,அவர்கள் இருவரும்  யோசனையுடனே பார்த்தார்களே! தவிர எதுவும் கேட்கவில்லை..

 அருவியோ, அவர்களின் பார்வையை தாங்கியபடியே சுற்றி வளைக்காமல்,  “மாமா செங்கனியின் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்.அவள் வாழ்க்கை முழுவதும் இப்படியே  தனி மரமா வாழனுமா?” என்றாள்.

 திருமறவனோ,அவளை அதிர்ந்து பார்த்தார்.

அருவியோ,அவரின் கைகளை  பிடித்து அழுத்திக் கொடுத்தபடியே,”மாமா அவள் என்னை விட சின்னப் பெண். இப்படியே விட முடியாது தானே! அவளுக்கு  ஒரு நல்ல வாழ்க்கையை  ஏற்படுத்திக் கொடுப்பது நம் கடமையல்லவா..” என்றவள்.  பதிலுக்காக அவரையே கேள்வியாகப் பார்த்தாள்.

 பவளமல்லியோ, அருவி சொன்னதை கேட்டதும் கண்கள் கலங்க அவளையே பார்த்தார். அவர் மகளுக்கு அப்படி ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று, அவர் வேண்டாத கடவுள் இல்லையே!

திருமறவனோ, ஒரு பெருமூச்சுடன் “கண்ணம்மா எனக்கு மட்டும் அந்த எண்ணம் இல்லாமல் இல்லை.அதில் சில சிக்கல் இருக்கிறது..”என்றவர் பேச்சை சிறிது நிறுத்தி விட்டு தொடர்ந்தார்.

சரியாக அந்த நேரம் நீலிமாவும் குழந்தையுடன் தங்கள் அறையிலிருந்து வெளியில் வந்தவள், இவர்கள் பேசுவதை  அமைதியாக நின்று கேட்டாள்.

திருமறவனோ, அருவியை பார்த்தபடியே “அருவிம்மா முதலில் இந்த வழக்கில் நாம் வெற்றி பெற வேண்டும்..” என்றவுடன்.

அருவியோ, மாமா அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்றவளிடம்.

“அந்த நம்பிக்கை எனக்கு அதிகமாகவே  இருக்கிறதம்மா.அதில் சந்தேகம் இல்லை.ஆனால் கனி இருக்கும் மனநிலையில் அவள் இன்னொரு திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும். அது மட்டுமின்றி கனியின்  நிலைமை அறிந்து அவளை மனதார ஏற்றுக் கொள்ள ஒருவன் முன் வரவேண்டும்..” என்றவுடன்.

அருவியோ, சட்டென்று “ மாமா அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு உங்கள் சம்மதம் மட்டும் தான் வேண்டும். கனியை சம்மதிக்கவைப்பது என் பொறுப்பு ..”என்றவளை வியப்பாக பார்த்தனர் பவளமல்லியும், திருமறவனும்.

நீலிமாவோ யோசனையுடன் அவளையே பார்த்திருந்தாள்.

அருவியோ,எப்படியாவது அவர்களின் சம்மத்தை பெற்று விடவேண்டும் என்று நினைத்து.

“மாமா என் மீது நம்பிக்கை வைத்து சம்மதம் மட்டும் சொல்லுங்கள் ..”என்றவளிடம்.

அருவிம்மா, “கனிக்கு  ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் அதை விட சந்தோஷம் எங்களுக்கு வேறு ஏதும்மா? அப்படி ஒருவன் கிடைப்பானா?” என்றவரிடம்.

“மாமா, அப்படி ஒருவன் ஏற்கனே கிடைத்துவிட்டான்..” என்றாள்.

அவரோ, “அருவிம்மா புதிர் போடாமல் சொல்லம்மா..” என்றார்.

அருவியோ, “மாமா அது வேறு யாரும் இல்லை. என் உடன் பிறவா சகோதரன் இன்பன் தான்..” என்றாள்.

திருமறவனும், பவளமல்லியும் அருவி சொன்னதை கேட்டு,என்ன சொல்வதென்றே தெரியாமல், அசையாமல் சிலைபோல் அமர்ந்திருந்தனர்.

நீலிமாவோ, அருவி  சொன்னதை கேட்டவுடன்  கோபத்துடன், “அஃது எப்படி செங்கனியை இன்பனுக்கு  திருமணம் செய்து வைக்க முடியும்.இன்பன் செங்கனிக்கு அண்ணன் முறை தானே வரும்..” என்றாள்.

திருமறவனும், பவளமல்லியும் நீலிமாவை அதிர்ச்சியாக பார்த்தனர்.

அருவியோ, அதை கேட்டதும் கோபத்துடன்,
“முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இன்பன் ஓன்றும் செங்கனிக்கு இரத்த உறவு இல்லை. என் திருமணத்தின் மூலம் வந்த உறவு..”என்றவள் தொடர்ந்து..

“மாமாவும், என் அப்பாவும் உறவும் இல்லை.நட்பின் மூலம் தான் உறவானவர்கள்.இன்பன் எனக்கு அத்தை மகன் தான்.ஆனால் திருமணத்தால் எந்த உறவும் மாறிவிடாது.”

“செங்கனிக்கு இன்பன்  நேரடியாக உறவு இல்லை. அதனால் இந்த திருமணத்திலும், உறவு முறையிலும் எந்த பிரச்சனையும் இல்லை.”

“சட்டப்படி பார்த்தாலும்,நம்  இந்து திருமணச் சட்டம் 1955 ன் படி சபிண்டா உறவுகளுக்கு இடையிலானத் திருமணம் தடை செய்யப்  பட்டிருக்கிறது.”

“சாபிண்டா உறவு முறை என்றால், பெற்றோர் வழி இரத்த உறவுகள், அதாவது மூன்று  தலைமுறை தாய்வழி இரத்த உறவுகள் மற்றும் ஐந்து தலைமுறை தந்தை வழி இரத்த உறவுகள். இவர்களுக்கு இடையிலான திருமணமானது இந்து திருமணச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டிருக்கிறது.”

“இந்த சபிண்டா  உறவுகளைத் தான் உடன் பிறந்தவர்கள் என்றும்அதாவது கசீன் சிஸ்டர், பிரதர் என்று சொல்கிறோம்.”

“ஆனாலும், நம் இந்து சமூகத்தில் அத்தைமகன் ,தாய்மாமன் மகளை திருமணம் செய்து கொள்வது நெடுங்காலமாக தொடர்ந்து வருவதால்,  சட்டங்கள் மக்களுக்கானது என்பதாலும், நமது உணர்வுகளுக்கும்,மத நம்பிக்கைக்கும் மதிப்பளித்து சில சட்ட விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கிறது.”

 “குறிப்பாக 1955 இந்து திருமணச் சட்டத்தில் இத்தைகைய நம் சபிண்டா உறவு முறை திருமணத்திற்கு,அதாவது அத்தை மகள், மாமன் மகளுக்கு இடையிலான திருமணத்திற்கு  மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு,அத்திருமணத்தையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.”

“ஆனால், செங்கனியும், இன்பனும்  சபிண்டா உறவு முறையும் இல்லை.ஒரு திருமணத்தால் வந்த உறவு தான், அதனால் இந்திருமணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை..” என்றாள்.

நீலிமாவோ, “நீ சட்டம் படித்தவள் என்று காட்டுகிறாயா? நான் எதார்தத்தை சொன்னேன்..” என்றவள் அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை.

அவள் இயல்புக்கு மாறாக நீலிமாவின் மனமும் ஏனோ? செங்கனிக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் சரி  தான், என்ற எண்ணம் அவள் மனதிலும் வலுத்தது.

அருவிக்கோ, நீலிமா அமைதியாக இருப்பதை பார்த்து  என்னவோ போல் இருந்தது.

எல்லோருடைய   சம்மதத்துடனும்,ஆசிர்வாத்துடனும் இந்த திருமணம் நடக்க வேண்டும்  என்றும், இனியாவது கனியின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்றும்  அருவி நினைத்தாள்.

 அதனால், அருவி நீலிமாவை சமாதனப் படுத்தும் முயற்சியாக,“அக்கா  எனக்குத் தான் இன்பன் இரத்த சொந்தம்,செங்கனிக்கு இல்லை.   செங்கனியும், இன்பனும் சபிண்டா உறவும் இல்லை. எங்கள் திருமணத்தால் வந்த உறவு அவ்வளவு தான்..”

 “நீங்கள் சொல்வது போல் இன்பன் என்னுடன் பிறக்காதவனாக இருக்கலாம் , ஆனால் சிறுவயது முதல் இருவரும் ஓன்றாகவே வளர்ந்தவர்கள். அதனால் அவனை  நான் என் மனதார சகோதரனாகத் தான் நினைக்கிறேன்.”

 “அவன் தான் எனக்கு அண்ணன். இனிமேல் எனக்கு சகோதரனாக செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம்  அவன் தான் செய்வான்.”

  “இன்பனும் என்னை உடன் பிறந்த சகோதிரியாகத் தான் நினைக்கிறான்.  அதனால்  என்னுடைய அண்ணன்   என் கணவரின் தங்கையை திருமணம் செய்து கொள்ளலாம் தானேஅக்கா ..”என்றவுடன்.

நீலிமாவோ”,அத்தை, மாமாவுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை,அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி செய்யலாம்..” என்றாள்.

நீலிமாவையே,அனைவரும் நம்பமுடியாமல் பார்த்தார்கள்.என்னாயிற்று இவளுக்கு ,யாருடைய பேச்சையும் கேட்காதவள், இன்று அமைதியாக ஒத்துப் போகிறாளே!  என்ற எண்ணம் தான் எல்லோர் மனதிலும் தோன்றியது.

நீலிமாவை அருவியின் செயல்கள் தான், அவளிடமிருந்த தீய  குணத்தை, அவளே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக  மாற்றிக் கொண்டிருந்தது.

திருமணம் முடிந்த இந்த கொஞ்ச  நாளிலேயே, அருவி புகுந்த வீட்டினருடன் ஓன்றிப் போனதும் ,அவளின் அறிவும், குணமும்,அக்கறையும் நீலிமாவையும் வியக்க செய்தது.

அருவியை அனைவரும் பாசத்துடன் தாங்குவதும் ,நீலிமாவின் மனதில் ஏக்கத்தையும் , பொறாமையையும் உண்டு செய்தது.

அதுவே அவள் மனதில் மாற்றத்தை கொண்டுவந்தது. தானும் அவர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டுமென்ற  ஆசையை விதைத்தது.

நீலிமா மறைமுகமாக தன் சம்மதத்தை சொன்னவுடன்,அருவி திருமறவனின் முகத்தையே அவர் என்ன சொல்வாரோ? என்று பார்த்தாள்.

அவரோ,  பொதுவாக இருவரிடமும்..”கனியும், இன்பனும்  இரத்த சொந்தமில்லை, அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,செங்கனிக்கு இன்பன் போல் ஒரு கணவன் அமைந்தால் அதை விட  வேறு ஒரு மகிழ்ச்சியும்  இல்லை.எதற்கும் அவசரப்படாமல் யோசித்தே செய்வோம்..” என்றார்.

அருவிக்கோ, அவரின்  பதில் கொஞ்சம் வருத்தத்தை தந்தாலும், இது அவர் மகளின் வாழ்க்கை. எடுத்தேன் , கவுத்தேன் என்று முடிவெடுக்க முடியாது என்று உணர்ந்தவள், அவரின் விருப்ப படியே முடிவை விட்டாள்.

அதன் பிறகு அவர்வர் வேலைகளில் முழ்கிப் போனார்கள்.

நீலிமாவும் , குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டு, தானும் உண்டு முடித்தவள்,மாமியாருடன் சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தம் செய்து கொடுத்து விட்டு இசையமுதாவுடன் தங்கள் அறைக்கு சென்றாள்.

அருவியோ தன் சட்ட புத்தகத்தில் மூழ்கினாள்.

கனிக்கோ, அங்கு நடந்த விசயங்கள் எதுவும் தெரியாத்தால் அமைதியாக வந்து உண்டு முடித்தவள், காகித்தை கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யும் வேலையில் ஈடுபட்டாள்.

திருமறவனும் மதிய உணவை முடித்துக் கொண்டு அரிசி ஆலைக்கு சென்றார்.

நிலவனும், இன்பனும் மதிய உணவுக்கு வரவில்லை. பவளமல்லியோ, வேலையாளிடம் அவர்கள் இருவருக்கும் உணவு கொடுத்து அனுப்பினார்.

இன்பனும், நிலவனும் உணவு முடித்தபின்னர். இன்பன், தனக்கு  டவுனில் ஒரு வேலை இருப்பதாக நிலவனிடம் சொல்லி சென்றான்..

நிலவனும் வயல் வேலைகளை  முடித்து விட்டு அரிசி ஆலைக்கு சென்றான்.

அன்று இரவு  அரிசி ஆலையிலிருந்து ,திருமறவன்  வந்த பின்பும், நிலவன் வரவே இல்லை.அவனின் அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அருவியைத் தவிர வீட்டில் அனைவரும் சாதரணமாகத் தான் இருந்தார்கள்.

 திருமறவனோஅருவியின் பதற்றத்தைக் கண்டு, “நிலவன் ஏதாவது வேலையாகச் சென்று இருப்பான் .போனில் சார்ஜ் குறைந்திருக்கும் வேறொன்றும் இருக்காதும்மா, நீ கலங்காதே..” என்றார்.

அருவிக்கோ, அவர் சொன்னது எதுவும் மண்டைக்குள் ஏறவே இல்லை.அவளோ, நிலவனைப் பற்றி எந்த தகவலும் தெரியாமல் துடித்துப் போனாள், எதற்கும் கலங்காதவள் மனதிற்குள்  பயந்து நடுங்கினாள்.

  இன்பனின் அலைபேசிக்கு அழைத்தாளும், அவனும் அழைப்பை எடுக்கவே இல்லை.

அருவி  தான் வீட்டிற்கும், வாசலுக்கும் நடந்து கொண்டே இருந்தாள்.

 அருவியின் நிலைகண்டு ,திருமறவனும், பவளமல்லியும், நிலவன் வந்துவிடுவான் என்று சொன்னால்,அதை   கேட்காமல் இந்த பிள்ளை இப்படி பதறுகிறதே! என்று நினைத்தனர்.

ஒரு வழியாக சிறிது நேரத்தில்  இன்பன்  வீடு வந்து சேர்ந்தான்.அவனிடம் நிலவனைப் பற்றி விசாரித்தால் அவனுக்கும் எதுவும் தெரியவில்லை.

அருவியோ, இன்பனிடம் கோபமாக, “உனக்கு எத்தனை முறை அழைத்தேன் ஏன் டா போனை எடுக்கலை..” என்றாள்.

 அவனோ, “அம்மு சாரி டா நான் போனை  சைலண்ட் மோடில் போட்டிருந்தேன்.அது தான் கவனிக்கலை..” என்றான்.

அவளோ, கோபம் தீராமல் ,நீ எதற்கு டவுனுக்கு போனாய்..” என்றாள்.

இன்பனோ,ஒரு வாடிக்கையாளரை பார்க்க சென்றேன். என்றான்.

“ஓ !”என்றவள், ஒளிர் எங்கே போனாருன்னே தெரியலை டா, போனும் சுவிட்ச் ஆப்ன்னு வருது,எனக்கு பயமாக இருக்கிறது..” என்றவளிடம்.

திருமறவனோ,  அருவி எதற்கும்மா பயம். நான்  வீட்டிற்கு வரும் வரை,நிலவன் அரிசி ஆலையில் தான் இருந்தான். ஏதாவது வேலையாக வெளியில் சென்று இருப்பான்,வந்துவிடுவான்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ,அவளின் எண்ணத்தின் நாயகன் வீட்டிற்குள் வந்தான்.

 

தொடரும்


ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
12/08/2020 3:10 pm  

அத்தியாயம் 29

 

அருவிக்கு நிலவனைப்  பார்த்ததும் தான் உயிரே வந்தது.

கணவனுக்கு ஒன்றும் இல்லை தானே என்று நினைத்தவள், அவனை தலை முதல் கால் வரை சந்தேகத்துடன் பார்த்தாள்.

அவன் நன்றாக இருப்பதை பார்த்த பின் தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

 திருமறவனோ, மகனை கண்டதும்,”ஏன்?  நிலவா இவ்வளவு நேரம்  எங்கு சென்றாய் ?உன் போன் என்னாச்சு..”என்று அடுக்கடுக்காக கேள்வி  கேட்டவரிடம்.

 “கொஞ்சம் வேலை இருந்தது’ப்பா..போனில் சார்ஜ் இல்லை..” என்று மட்டும் சொன்னான்.

நிலவனின் முகம் சரியில்லாதைப் பார்த்து விட்டு,  யாரும் வேறு எதுவும்  அவனிடம்  கேட்கவில்லை.

உணவு உண்ணும் வேலையிலும் யாரும் , யாருடனும்  சரியாக பேசிக் கொள்ளவில்லை,அவரவர் யோசனையிலேயே மூழ்கிய படியே உண்டு முடித்தார்கள்.

நிலவன் இன்பனிடமும் பெயருக்கு பேசியவன், விரைவாக வந்து தங்கள் அறையில் படுத்துக் கொண்டான்.

அருவிக்கு ஒன்று மட்டும் அன்று தெளிவாக புரிந்தது. தன் மனம் அவனை எவ்வளவு தேடுகிறது என்றும், அவனுக்கு ஒன்று என்றால் தன் உயிரே போய்விடும் என்றும், தான் அவனை எந்தளவு நேசிக்கிறேன் என்றும் உணர்ந்து   கொண்டாள்.

அருவி வேலைகளை முடித்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தவள்,யோசனையாக படுத்துக் கொண்டிருந்த நிலவனைப் பார்த்ததும் ,’என்னாச்சு ? ஏன்  இப்படி இருக்கிறார், முகமே சரியில்லையே ‘ என்று மனதிற்குள் நினைத்தவள் அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

   நிலவனோ அவள் அருகில் அமர்ந்தது தெரிந்தும், அசையாமல் அப்படியே படுத்து இருந்தான்.

அருவியோ,மெல்ல “ஒளிர்..” என்று அழைத்தாள்.

அவன் அப்பொழுதும் பதில் சொல்லாமலேயே இருக்கவும், அவனின் கைகளை பற்றிய படியே, “ஒளிர் ஏன்? ஒரு மாதிரி இருக்கிறீர்கள்! ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.

அவனோ, சட்டென்று தன் கைகளை இழுத்துக் கொண்டவன், பேசாமல்  திரும்பிப் படுத்துக் கொண்டான்.

அருவிக்கோ, அவனின் செய்கையே உணர்த்தியது,அவனுக்கு தன் மேல் தான் கோபம் என்று.. காலையில் கூட நன்றாகத்தானே  இருந்தான் என்று நினைத்தவள்.

“ஒளிர் என் மீது ஏதாவது கோபமா?” என்றாள்.

அவனோ, சட்டென்று எழுந்து அமர்ந்தவன்,”உன் மீது கோபப்பட நான் யாரும்மா,எனக்கு ஏது அந்த  உரிமை..” என்று பூடகமாக பேசினான்.

அருவிக்கோ,அவன் பேசியது சுத்தமாக விளங்கவில்லை. உடனே,”ஒளிர் நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை..” என்றவுடன்.

“உனக்கு எப்படி புரியும் , என்னை எந்த இடத்தில் உன் மனதில் வைத்து இருக்கிறாய்! என்று இன்று தானே! எனக்கு நன்றாக புரிந்தது..”என்றவுடன்.

“ஒளிர் பிளீஸ் தெளிவாக சொல்லுங்கள்,நீங்கள் ஏதோ தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்! என்று மட்டும் தெரிகிறது..” என்றாள்.

அவனோ, “இன்று தான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன்..” என்றவுடன்.

“என்ன புரிந்து கொண்டீர்கள் அதை முதலில் சொல்லுங்கள்..” என்றாள்.

நிலவன், அதற்குமேல் அவளை சோதிக்காமல், “இன்பனுக்கும், செங்கனிக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று அப்பாவிடம் சொன்னாயா?”என்றவனிடம்.

“ஆமாம் சொன்னேன் .ஏன்? அதில் என்ன தவறு இருக்கிறது. கனி இப்படியே கடைசிவரை  வாழமுடியுமா? அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆசையில் மாமாவிடம் சொன்னேன்..” என்றாள்.

அவனோ, அதில் தவறில்லை,ஆனால் அதை முதலில் என்னிடம் தான்  சொல்லியிருக்கனும்.அப்பா சொல்லித் தான்  நான் தெரிந்து கொள்ள வேண்டிருக்கிறது.உன்  மனதில் கணவன் என்ற எண்ணம் என் மீது ஒரு சதவீதமாவது இருந்திருந்தால், என்னிடம் தானே முதலில் கூறியிருப்பாய் ..”என்றான்.

அருவிக்கு அப்பொழுது தான் விசயம் புரிந்தது. ‘ஓ.. சாருக்கு இது தான் கோபமா?’என்று நினைத்தவள்.

நிலவன் அருகில் நெருங்கி அமர்ந்து, அவனின் விரல்களை மென்மையாக பற்றி தடவியபடியே,”சாரி ஒளிர்..உங்களிடம் சொல்லக் கூடாது என்று நான் நினைக்கவில்லை, வீட்டிற்கு பெரியவர் மாமா, அவரிடம்  முதலில் சொல்லி சம்மதம் வாங்க வேண்டும் என்று எண்ணினேன். அவர் சம்மதிப்பாரா?  என்று அதே நினைவிலேயே இருந்தேனா, அது தான் உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன்..” என்றாள்.

நிலவனோ எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தான்.

அருவியோ,அவனுக்கு இன்னும் கோபம் தீரவில்லை என்று உணர்ந்தவள்.

“ஒளிர்  நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை.உங்களை ஒதுக்கனும் என்று நான்  நினைக்கவும் இல்லை.மனமறிந்து நான் எதுவும் செய்யவில்லை. என் செயல் உங்களை காயப்படுத்தியிருந்தால் , அதற்காக மனதார  நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்..” என்றவளுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

நிலவனோ, அவளின் கண்கள் கலங்குவதை கண்டவுடன், தன் கோபத்தை விட்டு, “ஏய் என்ன இது ,இதுக்குப் போய் கண்கலங்கிக் கொண்டு இருக்கிறாயே,நானும் நீ என்னிடம் சொல்லவில்லையே என்ற கோபத்தில் பேசிவிட்டேன் சாரிடா..” என்றான்.

அருவியோ, ஒரு சிறு தேம்பலுடன் அவனின் தோள்களில் சாய்ந்தவள், தன்நிலையை உணர்த்தும் பொருட்டு..

 “ஒளிர் உங்களை என் மனதில் கணவனாக நினைப்பதால் தான், இந்த குடும்பத்தை என் குடும்பமாக நினைக்கிறேன்.. நீங்கள்  தான் என் ஆனிவேர் .நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை ..”என்றாள்.

அவனோ, அவள் சொன்னதை கேட்டு வியந்து அவளைப் பார்த்தான்.

அருவியோ, அவனின் பார்வையை உணராமல் தன் போக்கில் அவன் தோள்களில் சாய்ந்தபடியே, “எனக்கு எல்லாமே நீங்கள் தான் என்று என் மனதார நினைக்கிறேன். அப்படி இருக்க நான் உங்களை எப்படி ஒதுக்குவேன்.ஆனால் நீங்கள் சொன்னது போல் இந்த விசயத்தை உங்களிடம் தான் முதலில் சொல்லியிருக்கனும் , சொல்லாதது என் தவறு தான் என்னை மன்னித்துவிடுங்கள்..” என்றவுடன்.

நிலவனோ, தன் தோள்களில் சாய்ந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன், அவளின் கலங்கிய விழிகளில் தன் விழிகளை கலந்து,”அருவி  நான் உன்னை வருத்தனும் என்று பேசவில்லை. கணவன் ,மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்க கூடாது என்று தான் கொஞ்சம் கோபப்பட்டுடேன்.”

…..

“அப்பா சொல்லித் தான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது, என் மனைவி என்னிடம் தான் எல்லா விசயத்தையும் முதலில் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன்,அது தான் கோபபட்டேன். இனி  இதைப் பற்றி பேசவேண்டாம்  ..”என்றவன் அவளின் விழிகளில் வழிந்த கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டான்.

அருவியும் அவன் சொன்னதுக்கு தலையாட்டியவள்,”உங்களுக்கு இன்பன்,கனி திருமணத்திற்கு சம்மதமா?” என்றாள்.

அவனோ, “இந்த திருமண ஏற்பாடே என் பொண்டாட்டியுடையது. அதில் எனக்கு சம்மதம் இல்லாமல் இருக்குமா?”என்றவுடன்.

அருவியோ, அவன் கூறியதை கேட்டு அளவில்லா மகிழ்ச்சியுடன் அவனிடம் புன்னைகயுடன் “தேங்க்ஸ்..தேங்கஸ்..”என்றாள்.

நிலவனுக்கும் அருவியின் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது, தன் வழக்கமான குறும்புடன் ,அவளின் நெற்றியை செல்லமாக தன் தலை கொண்டு முட்டியவன், “உன் நன்றியை வேறு மாதிரியும் சொல்லாம் மை டியர் தமிழழகி..”  என்றவன்.குறும்புடன்  கண்களை சிமிட்டி   தன் கன்னத்தை அவளிடம் காட்டினான்.

அவளோ, அவனின் குறும்பை ரசித்த படி “ஆசை தோசை அப்பள வடை..” என்று ராகம் பாடினாள்.

அவனோ,அவளின் பேச்சில் மயங்கியவன்,”டேய் நிலவா உன் பொண்டாட்டி  வாழ்க்கை முழுவதும் உன்னை  இப்படி பொழம்ப வைத்திருவா போல,உனக்கு அவ்வளவு தான் கொடுப்பனை..” என்று புலம்பியவனை பார்த்து அருவியோ வாய்விட்டு சிரித்தாள்.

நிலவனோ,அவளின் சிரிப்பில் கடுப்பானவன், “நல்லா சிரி,எனக்கும் நேரம்  வரும்.  அப்போது  உன்னை பேசிக் கொள்கிறேன் ..” என்றான்.

 அவளோ,” அப்படியா ? அந்த நேரம் வரும்போது பார்த்துக்கலாம் , இப்ப தூங்கலாம். எனக்கு தூக்கம் வருகிறது..” என்று படுக்கையின் ஓரத்தில் சென்று படுத்தாள்.

நிலவனோ, விளைக்கை அணைத்து விட்டு வந்து  படுத்தவன்,”அருவி இங்கே வா..” என்றான்.

அவளோ,”ம்ம்கூம்..” என்றாள்.

அவனோ, அவளின்  அருகில் நெருங்கிப் படுத்து, அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டவன், இனிமேல்  எப்பொழுதும் இங்கே தான் தூங்கனும் ..”என்றவன் தன் கை அணைப்பிலேயே  அவளை வைத்துக்  கொண்டு  நிம்மதியாக உறக்கத்தை தழுவினான்.

அருவியும் விரும்பியே  அவனின் கை சிறையில் சிறைப்பட்டவள் நிம்மதியாக உறங்கினாள்.

 

அடுத்த நாள் விடியல் இருவருக்கும் மிக அழகாக விடிந்தது.எப்பொழுதும் போல் நிலவன் வயலுக்கு சென்றான்.

இன்பன் அன்று நிலவனுடன் செல்லவில்லை.அருவி தான் கனியை அறிமுகப் படுத்தனும், அவளுடன் இன்பனை பேச வைக்கனும் என்று இன்பனை  வீட்டிலேயே இருக்கும் படி சொன்னாள்.

அருவிக்கு  தன் கணவன் இந்த திருமணமனதிற்கு சம்மதம்  சொன்னதுமே,  எப்படியும்  இந்த திருமணத்தை  அவனே நல்ல படியாக நடத்திவிடுவான்.. என்ற நம்பிக்கை துளிர்ந்தது.

அதனால் தான் துணிந்து செங்கனியையும்,இன்பனையும் பேச வைக்கும் முயற்ச்சியில் இறங்கினாள்.

 செங்கனியின் அறைக்கு  தன் வேலைகளை முடித்து விட்டு சென்ற அருவி, சிறிது நேரம் பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருந்தாள்.

அதன்பிறகு மெதுவாக இன்பனை பற்றி பேசியவள், “ கனி உனக்கு  இன்பனை அறிமுகப் படுத்துட்டுமா?” என்றாள்.

செங்கனியோ, “வேண்டாம் அண்ணி, தவறாக நினைக்க வேண்டாம். நான் யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை..”என்றவுடன்.

“கனி, இப்படியே யாருடனும் பழகாமல்  இருந்தால் எப்படி?இன்பன் எனக்கு அண்ணன் மாதிரி,எனக்கு என்று  இருக்கும் ஒரே உறவு அவன் தான்.இங்கேயே தங்கி இருக்கிறான் .இன்னும் இரண்டு நாளில் ஊருக்கு போய்டுவான். அது தான் சொன்னேன்.என் உறவு என்ற முறையில் மரியாதைக்காவது  பேசலாம் தானே..”என்றாள்.

கனியோ, “அண்ணி  எல்லோரும் உங்களைப் போல்  முக அழகை பெரிதாக நினைக்காமல், மனதை பெரிதாக நினைக்க மாட்டார்கள்..”  என்றாள்.

அருவியோ, எதுவும் பேசாமல்   அவள்  மனதிலிருப்பதை பேசட்டும், என்று அமைதியாக  இருந்தாள்.

கனியோ, தன்  மனதிலிருந்ததை கொட்டித் தீர்த்தாள்,” யாராவது என் முகத்தை பார்த்து  அருவருத்து சுழித்தால், என்னால் தாங்கிக் கொள்ள  முடிவதில்லை..  என் நிலை கண்டு பரிதாபப்பட்டாலும் பிடிக்கவில்லை ..அதனால் தான் நான் யாருடனும் பழகுவதில்லை..” என்றவள் தான் வரைந்து  கொண்டிருந்த ஓவியத்தில் கவனம் செலுத்தினாள்.

அருவியோ, கனியின் பேச்சைக் கேட்டு சிலையாக நின்றாள்.

அப்பொழுது    அவளின் அறை வாயிலில்  இருந்து “வாவ் பியூட்டி பூல் ..”என்று ஒர் ஆண்மகனின் சத்தம் கேட்டு எதர்ச்சையாக குரல் வந்த திசையை  திரும்பிப் பார்த்தாள் கனி..

அங்கே நின்றிருந்தவன் தான்,  இன்பன் என்று பார்த்தவுடன் புரிந்து கொண்டவள், எதுவும் பேசாமல் தான் வரைந்து கொண்டிருந்த  ஒவியத்தில் கவனத்தை செலுத்தினாள்.

  இன்பனை அருவி தான்,  “நான் சென்று சிறிது நேரம் கழித்து, நீ கனியின் அறைக்கு வா..” என்று சொல்லியிருந்தாள்..

அருவியின் சொல்படி  இன்பன் வந்தான், கனி பேசியதை எல்லாம் அறைவாயிலில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தான்.

கனி பேசியது அவனின் மனதையும் பாதித்தது.அவளின் மனம் நன்றாக புரிந்தது.அவளுடன் பழகியே ஆகவேண்டும் என்று நினைத்தவன், தானாகவே அறைவாயிலில் நின்று  பேச்சுக் கொடுத்தான்.

இன்பனோ,  கனியிடம் இயல்பாக “நான் உள்ளே வரலமா?” என்றான்.

அருவியோ,தனக்கும் அவர்களுக்கும் சம்மந்தம்மில்லாதது போல் அமைதியாக இருந்தாள்.

‘கனிக்கோ,இன்பன்  தன் அன்ணியின் உறாவாக இருந்தாலும், உரிமையுடன் உள்ளே வராமல்  தன்னிடம்அனுமதி கேட்டது .அவன் மீது மரியாதையை உண்டு செய்தது.

உடனே தன்னை அறியாமல் “வாங்க..” என்றாள்.

இன்பனோ, அவள் அனுமதி கொடுத்தவுடன் உள்ளே வந்தவன்,அவளின் ஒவியத்தை ரசித்து பார்த்த  படியே, “மிக அழகாக வரைகிறீர்கள்.  சித்தரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம் என்பது உங்கள் விசயத்தில் சரிதான்..” எத்தனை தத்ரூபமாக வரைகிறீர்கள்..” என்றான்.

கனியோ,எதுவும்  பேசாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தாள்.

 

 தொடரும்

 

அத்தியாயம் 30

இன்பன், கனியின் அறையை சுற்றி தன்  பார்வையை சுழற்றியவன்,அவளின்  கைவண்ணத்தில் மிளிர்ந்த கைவினைப் பொருட்களை கண்டு வியந்து  அவளிடம், “கனி இத்தனையும் நீங்கள் தான் செய்தீர்களா?அருமை..அருமை.. எத்தனை திறமைகள் உங்களிடம்..” என்றான்.

கனியோ, அவன் இவ்வளவு பேசும் பொழுது , நாம் பேசாமல் இருந்தால், நன்றாக இருக்காது என்று நினைத்தவள், அவனின் முகத்தை நிமிர்ந்து  பார்த்து சிறு புன்னகையுடன், “தேங்க்ஸ்..” என்றாள்.

அவனோ, அவளின் கண்களைப் பார்த்த படியே. “உண்மையாளுமே உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கிறது..” என்றான்.

கனிக்கோ, அவன் தன் முகத்தை பார்த்து சிறிதும் முகம் சுழிக்காமல், தன்  கண்களை பார்த்து பேசியது பிடித்திருந்தது.

இன்பனோ, அருவி புறம் திரும்பியவன், “அம்மு, நீ இவர்களை பார்த்து கற்றுக் கொள். எத்தனை திறமை பார்தாயா? நீயும் தான் இருக்கிறாயே! நல்ல குண்டு பூசணிக்காய் மாதிரி ..”என்றவுடன்.

 இன்பன்  தன்னை குண்டு பூசணிக்காய் என்று சொன்னவுடன்,  அருவிக்கு,அவன் மீது எல்லையில்லா கோபம் வந்தது.

 உடனே,  “என்னையா? குண்டுன்னு சொல்கிறாய்,பொய் சொன்னே உனக்கு போஜனமே கிடைக்காது..” என்றாள்.

அவனோ,”வேண்டுமானால்  நிலவனிடம் கேட்டுப் பார் ,அவர் சொல்லுவார்,பாவம் மனுசன் உன்னிடம் சொன்னால் நீ வருந்துவாய் என்று சொல்லாமல்  இருந்திருப்பார்..” என்றான்.

அருவியோ,” இன்பா, நீ ரொம்ப பேசுகிறாய்,என் புருசன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டார்..” என்றாள்.

கனியோ, அவர்களின் சண்டையை வியந்து  பார்த்தபடியே நின்றாள்.

இன்பனோ, தங்கள் சண்டையை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் , “கனி நீங்களே சொல்லுங்கள், அம்மு குண்டு தானே..” என்று அவளையும் தங்கள்பேச்சில் இயல்பாக  இழுத்தான்.

அவளோ, என்ன சொல்லவது என்று தெரியாமல், பேசாமல் நின்றாள்.

இன்பனோ,  கனியை  பேச வைக்கும் முயற்சியில்,”கனி நீங்கள் உண்மையை மட்டும் தான் சொல்வீர்கள் என்று நினைத்து உங்களை கேட்டேன்.. நீங்களோ பேசவே மாட்டிறீங்களே..” என்றவனிடம்.

“கனி உண்மைதான் சொல்லுவாள் என்று உனக்கு எப்படித் தெரியும்..” என்றாள் அருவி.

“ம்ம்! அது மைண்ட் ரீடிங்க, ஒருவர் முகத்தை பார்த்தாலே தெரிந்து விடும்,அதை எல்லாம் தெரிந்து கொள்ள நீ  இன்னும் வளரனும் அம்மு ..” என்றான்.

கனியோ, இன்பன் சொன்னதை கேட்டு சட்டென்று சிரித்து விட்டாள்.

அருவியோ, கனி சிரித்ததைப் பார்த்து,  வியந்து போய்  இந்தப் பெண் சிரித்தால்  எத்தனை அழகாக இருக்கிறது.”.என்று நினைத்தாள்.

இன்பனும் அதையே நினைத்தவன்,கனியை விழி எடுக்காது பார்த்த படி நின்றான்.

அருவியோ, “கனி நீயும் இந்த இன்பனுடன் சேர்ந்து கொண்டு என்னை கேலி செய்கிறாயா?..” என்று கேட்டகவும்.

அவளோ, பதறிப்போய்,”அச்சோ,அண்ணி அப்படி எல்லாம் இல்லை..” என்றாள்.

அருவியோ, சிறுபிள்ளையாக ,”போங்கள்  நான் உங்கள் இருவரிடமும்  பேசமாட்டேன்,நான் போகிறேன்..” என்றபடி நகர்ந்தவளை.

கனி, “அண்ணி,ஒரு நிமிடம்  நான் சொல்வதை கேளுங்கள்..” என்றாள்.

இன்பனோ, “போகட்டும் விடுங்கள் கனி..” என்றவன்.அருவியிடம் திரும்பி, “அம்மு நீ வேண்டுமானால் நிலவனிடம் மறக்காமல் இன்று  நான் சொன்னதைக் கேட்டுப் பார்..” என்றான்.

அவளோ, “போடா! “என்றபடி அறையின் வாயில் வரை சென்று திரும்பிப்  இன்பனைப் பார்த்து, கண்ணசைத்து விட்டு சென்றாள்.

நல்லவேளை அதை கனி பார்க்கவில்லை.அந்த கண்ணசைவுக்கு அர்த்தம் இன்பனுக்கு நன்றாகவே புரிந்தது.

கனியோ, இன்பனிடம் “அய்யோ ஏன் சார் அண்ணியை அப்படி சொன்னீர்கள், இப்போது பாருங்கள் கோபித்துக்  கொண்டு போகிறார்களே..” என்றவளிடம்.

“கனி அம்முவின் கோபம் பற்றி எனக்கு  நன்றாகத் தெரியும்.அவளால் என்னிடம் அதிக நேரம் கோபத்தை காட்ட முடியாது,  நீங்களே பாருங்கள் இன்னும் சற்று நேரத்தில் இன்பா என்ற படி வருவாள்..” என்றவன் தொடர்ந்து..

  “ கனி   என்னை சார் என்றெல்லாம் அழைத்து சங்கடப்படுத்தாதீங்க,இன்பன் என்றே பெயர் சொல்லி அழையுங்கள்..”என்றான்.

கனியோ, தயங்கியபடி ,”நீங்கள் என்னை விட பெரியவர்களாக இருப்பீர்கள் !எப்படி  நான் பெயர் சொல்லி அழைப்பது..” என்றவுடன்.

இன்பனோ, “அது எல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை,அம்முவும் என்னை விட சின்னவள் தான்,ஆனாலும் பெயர் சொல்வது மட்டுமில்லை..வாடா போடா என்று தான் கூப்பிடுவாள்..”என்றான்.

கனியோ,சிரித்தபடி அமைதியாக இருந்தாள்.

ஆனால் இன்பன், தன் இயல்பான தோழமை குணத்தால் கனியை  பழகிய அந்த கொஞ்ச நேரத்திலேயே இயல்பாக பேச வைத்தான்.அது தான் இன்பன்,யாருடனும் எளிதாக பழகிவிடுவான்.

கனியோ, இன்பன் பேசியதிலிருந்து ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டாள்.அது இன்பன்   அருவி மீது வைத்திருக்கும் அன்பு.அவன்  பேசிய வார்த்தைகளில் அதிகம்  பேசியது அருவியை  பற்றித் தான்.

 சிறிது நேரத்திலேயே,” இன்பா ..இன்பா..” என்ற அழைத்தபடி வந்த அருவியைப் பார்த்ததும், கனிக்கு அவளை அறியாமல் சிரிப்பு வந்தது.இன்பன் சொன்னது எவ்வளவு உண்மை என்று நினைத்தாள்.

இன்பனோ, “என்ன அம்மு..” என்றான்.

அருவியோ, “உங்கள் இருவருக்கும் லெமன் ஜூஸ் கொண்டு வந்தேன்..” என்று ஆளுக்கொரு டம்ளரை கொடுத்தவள்,தனக்கும் எடுத்துக் கொண்டு  அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

இன்பனோ, நின்றபடியே ஜூஸ் குடிப்பதை கண்ட அருவி, “இன்பா, இங்கே உட்கார்..” என்று செங்கனியின் படுக்கையை காட்டினாள்.

கனிக்கோ, அப்பொழுது தான் தோன்றியது, இன்பனை தான்  அமரக் கூட சொல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோமே! என்று நினைத்து,  தன்னையே நொந்து கொண்டவள் ,சட்டென்று  தன் அருகில் ஒவியம் வரையும் பொருட்களை வைத்திருந்த இருக்கையை சுத்தம் செய்து, அவன் புறம் நகர்த்தி அவனை அமரச் சொன்னாள்.

 இன்பனும் அவள் சொன்னதும்   எந்த மறுப்பும்  சொல்லாமல் அமர்ந்தான்.

நேரம் போவதே தெரியாமல் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.இன்பனும்,அருவியும் தான் பேசினார்கள்.கனி வெறும் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருந்தாள்.

ஆனால் அவர்கள் இருவரின் பாசம், சண்டை,குறும்பு அனைத்தையும் மனதார ரசித்தாள்.தானும் ஒரு காலத்தில் ஒளிர் அண்ணாவுடன் இப்படித் தானே இருந்தோம் என்று ஏக்கமாக நினைத்தாள்.

மதிய உணவுக்காக நிலவன் வரும் வரை பேசிக் கொண்டு தான் இருந்தார்கள்.

நீலிமாவும், பவளமல்லியும் அவர்கள் பேசுவதை பார்த்தாலும், அதில் கலந்து கொள்ளாமல்    அவரவர் வேலையில் முழ்கினார்கள்.

நிலவன் வந்ததும், அருவி இன்பனையும் அழைத்து உணவு பறிமாறினாள்.அன்று கனியையும் வற்புறுத்தி அவர்களுடனே உணவு உண்ண வைத்தாள்.

உண்டு முடித்து பிறகு கனி அறைக்கு சென்றுவிட்டாள்,இவர்கள் மூன்று பேர் மட்டும்   பேசிக்   கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது இன்பன் நிலவனிடம், “நிலவா நான் ஒன்று கேட்பேன் நீ உண்மையை மட்டும் சொல்லனும்..” என்றான் பீடிகையுடன்.

நிலவனும் “ம்ம்! கேளு இன்பா..” என்றான்.

அருவியோ, என்ன கேட்கப் போகிறான் என்று இன்பனின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இன்பனோ, “நிலவா அம்மு இங்கே வந்த பின் கொஞ்சம் குண்டு பூசணிக்காய் ஆகிட்டா தானே..” என்றான்.

அருவியோ, இவன் இதை விடவே மாட்டானா? என்று நினைத்து இன்பனை   எரித்து விடுவது போல் பார்த்தாள்.

நிலவனோ, அதைக்கண்டவன், என்ன சொல்வது என்று தெரியாமல் திரு..திருவென்று முழித்தான்.

அருவியோ,நிலவனைப் பார்த்து, “நீங்களே சொல்லுங்கள் நான் குண்டா ..”என்று கேட்டாள்.

நிலவனோ, வெகு வேகமாக ‘இல்லை’ என்று தலையாட்டினான்.

அருவியோ,அதைக் கண்டவள், கர்வத்துடன் இன்பனை  பார்த்து எப்படி என்று தன் புருவத்தை உயர்த்திக் காட்டினாள்.

இன்பனோ, “நிலவா நல்லா அம்முக்கு ஜால்றா அடிக்கிறே..” என்றான்.

இனபன் சொல்வது போல், அருவி முன்பு இருந்ததை விட தற்போது கொஞ்சம் பூசினாற் போல் தான் இருந்தாள்.ஆனால் நிலவன் அதை  சொல்லாமல்  அசடு வழிந்த படி இன்பனைப் பார்த்தான்.

நிலவன், மனதிற்குள் ‘இப்பொழுது தான்  அவள்  என்னிடம் நெருங்கிப் பழகுகிறாள்.அதை கெடுத்துக் கொள்ள நான் என்ன மடையனா?’என்று  நினைத்தான்.

 அருவியோ, “போடா உனக்கு என்னைப் பார்த்து பொறாமை,அது தான் இப்படி சொல்கிறாய்..” என்று அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு, வீட்டிற்குள் சென்றாள்.

அருவி நேராக   தங்கள் அறைக்குத் தான்  சென்றாள், அங்கு கண்ணாடி முன் நின்று தன் உருவத்தை இப்படியும், அப்படியும்  திரும்பி.. திரும்பி பார்த்தாள். ஆனால் அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை..

கணவன் வந்தால் கேட்க வேண்டும் என்று அவனுக்காக காத்திருந்தாள்.

 சிறிது நேரத்தில் தங்கள் அறைக்கு வந்த  நிலவனிடம் ,”உண்மையாக  சொல்லுங்கள் நான் குண்டு பூசணிக்காய் மாதிரியா இருக்கேன்..” என்றாள்.

அவனோ, “நான் உண்மையை சொல்லட்டுமா? பொய் சொல்லட்டுமா? வக்கீலிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்களே ..”என்றவனை முறைத்தாள்.

அவனோ,”சரி..சரி.. வக்கீலிடம் பொய் சொன்னாலும், பொண்டாட்டிகிட்ட பொய் சொல்லக் கூடாது, உண்மையை மட்டும் தான்  சொல்லனும்..” என்றவன்..

”கொஞ்சம் நீ குண்டு பூசணிக்காய் போல தான் இருக்கிறாய்.ஆனால் எனக்கு நீ இப்படி இருப்பது தான் ரொம்ப பிடித்திருக்கிறது..” என்றவனிடம்.

“அப்புறம் வெளியில் எதற்கு தலையாட்டினீர்கள்..” என்றவளிடம்.

“ம்ம்! என் பொண்டாட்டியை யாரிடமும் விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தான்..” என்றான்.

அவளோ, எதுவும் பேசாமல் இருக்கவும்.

அவனோ,  “நீ கேட்டாய் என்று தானே நான் சொன்னேன். இப்பொழுது  முகத்தை தூக்கி வைத்திருக்கிறாயே..” என்றவுடன்..

அருவியோ,அவனை  முறைத்தபடியே, “இந்த கருப்பனுக்கு இந்த குண்டுபூசணிக்காயே போதும்..” என்றாள்.

நிலவனோ, அதை கேட்டு கோபத்துடன், “என்னையா கருப்பன் என்கிறாய், இரு உன்னையும் கருப்பியாக்குகிறேன்..”என்றவன் அவள் தான் சொன்னது  புரியாமல் மூழிப்பதை பார்த்து, மனதிற்குள் சிரித்த படியே , அவளை தன் அருகே இழுத்தான்.

அருவி சற்றும் எதிர்பார்க்காத பொழுது, அவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன், அவளின்  மாம்பழக் கன்னத்தில் தன் முதல் முத்திரையைப் பதித்தான்.

அவளோ, நடப்பதை உணரமுடியாமல்  சிலையாக நின்றாள்.

அவனோ, “இப்பொழுது நீயும் கருப்பாகிட்டே ..”என்றபடியே,அவளின் முகம் முழுவதும் தன் முத்திரைகளை பதித்தவன்,இறுதியாக அவளின் இதழில் இழைப்பாறினான்.

அருவியோ, அப்படியே உறைந்து போய் நின்றாள்.நிலவனோ தன்னை மறந்து அவளுள் முழ்கிப் போனான்.

இருவரும் தங்களின் நிலை மறந்து எத்தனை நேரம் அப்படி இருந்தார்களோ! அவர்களுக்கே தெரியாது.எங்கேயோ கேட்ட குயிலோசையில் நடப்புக்கு வந்தார்கள்.

நிலவன் அருவியின் முகத்தையே பார்த்தான், அவளோ திக்குபிரமை பிடித்தது போல் நின்றிருந்தாள்.

அவனோ, கண்களில் சிரிப்புடன் “மைடியர் தமிழழகி எனக்கு ஏற்ற ஜோடியாக நீயும் கருப்பாகிடே..” என்று குறும்புடன் சொன்னான்.

அவளோ பேச்சே மறந்தது போல், மெளன சிலையாக நின்றாள்.

நிலவனோ, அவள்  நிலைகண்டு  புன்னைகையுடன், தன் விரல்களால் அவள் முகத்தில் கோலமிட்டு, அந்த சிலைக்கு உயிர் கொடுத்தான்.

அருவியோ,அவனின் விரல் தீண்டலில் சிலிர்த்து நடப்புக்கு வந்தாள்.அவளின் முகமோ வெட்கத்தால்  இரத்தமெனச் சிவந்திருந்தது.அதை மறைக்க கணவனின் நெஞ்சிலேயே தஞ்சம் புகுந்தாள்.

அவனோ,  “ஹோய்  மை டியர் தமிழழகி ..நிமிர்ந்து என்னைப் பார், நீ வெட்கப் படும் பொழுது எத்தனை அழகாக இருக்கிறாய் தெரியுமா? எனக்கு உன்னை கருப்பாக்கிட்டே இருக்கனும் போல் இருக்கிறதே..”என்றான்.

அவளோ, இன்னும் கணவனின் நெஞ்சில் புதைந்தாள்.

அவனோ, வலுக்கட்டாயமாகஅவளின் முகத்தை தன் நெஞ்சிலிருந்து நிமிர்த்தினான்,

அருவியோ, கண்களை திறக்காமலே  அழுச்சாட்டியம் செய்தாள்.

 அவனோ, அருவி என் மீது கோபமா? இப்படி இருந்தால் நான் என்ன  நினைக்கிறது.. என்று வேண்டுமென்றே   கூறியவுடன், அவள் சட்டென்று  தன் விழிகளை திறந்தாள்.

அவனோ, தன் வழக்கமான குறும்புடன், “உனக்கு கோபமாக இருந்தால் ,  உன் கோபம் தீரும் வரை  என்னை வேண்டுமானால்  நீயும்  சிவப்பாகி விடு..” என்று தன் கன்னத்தை அவள் புறம் காட்டினான்.

அவளோ, தன் கைகளால் அவன் காட்டிய கன்னத்தில் பட்டென்று ஒன்று வைத்தாள்.

அவனோ, “அய்யோ மை டியர் தமிழழகி  உனக்கு டிரைனிங் போதவில்லை..இனி நான் தினமும் எப்படி சிவப்பாக்கனும்னு சொல்லித் தரேன் ..”என்றான்.

அவளோ,  மனதிற்குள் இவனிடம் பேசுவதே வீண்வேலை.. எது சொன்னாலும் ஏடா கூடமாகவே பேசுவான்  என்று நினைத்து,அவனிடமிருந்து விலகி  அறையிலிருந்து வெளியில் ஓடினாள்.

நிலவனோ, “வாவ் நிலவா! வக்கீலம்மாவையே வாயடைக்க வைத்துட்டீயே, நீ தேறிட்டே டா..” என்று  தனக்குத் தானே கூறிய படி தன் சட்டை பட்டையை தூக்கிவிட்டுக் கொண்டான்.

 

தொடரும்


ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
12/08/2020 3:14 pm  

Hi Friends,

என் மெளனத்தின் கவிதையே! கதையின் அடுத்த ஏழு அத்தியாங்கள் (25a,25b,26,27,28,29,30)  பதிந்துள்ளேன்.படித்து விட்டு  கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. 

நன்றி

இனிதா மோகன் தமிழினி

 


ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
16/10/2020 5:28 pm  

அத்தியாயம் 31

 

 அடுத்து வந்த நாட்கள் வேகமாக சென்றது. இன்பன் இரண்டு நாளில் சென்னை செல்கிறேன்! என்று கூறியவனை.. அருவி தன் பிடிவாதத்தால்மேலும் இரண்டு நாட்கள் தங்க வைத்தாள்.

இன்பன் இருந்த அந்த நான்கு நாட்களும்  அருவியும் ,இன்பனும் கனியுடனேயே  தங்கள் நேரத்தை  கழித்தனர்.

அருவியின் முயற்சியாலும், இன்பனின் இயல்பான குணத்தாலும், கனியின் மனதிற்குள் இன்பன் மீது  ஒரு தனி மரியாதையும், தோழமையுணர்வும் உண்டாகிருந்தது.

 இன்பன் கனிக்கும் ஒரு நல்ல நண்பனாகிப் போனான்.பழகியது நான்கு நாட்கள் என்றாலும் பல வருடம் பழகியது போல் ஒரு உணர்வை இன்பன் கனியின் மனதில் விதைத்திருந்தான்.

அவன் ஊருக்குச் செல்லும் பொழுது கனி கூட முகம் வாடித் தான் விடை கொடுத்தாள்.

 

இன்பனோ,இவள் தான்  தன் மனைவி என்ற முடிவுடன் தான்   ஊருக்கு சென்றான்.அவன் ஊருக்கு செல்லும் முன்,திருமறவனிடமும், நிலவனிடமும்  “கனியை தனக்கு  ரொம்ப பிடித்திருக்கிறது என்றும், .அவளை திருமணம் செய்ய உங்கள் சம்மதம் வேண்டும்..”என்றும்  கேட்டான்.

அருவி மூலம் விசயத்தை அறிந்திருந்த திருமறவனும்,நிலவனும்   கலந்து ஆலோசித்து ஓர் முடிவு எடுத்திருந்தார்கள்.. அதன் படி  இன்பனிடம்கனியை உங்கள் விருப்பப் படி திருமணம் முடித்துக் கொடுக்க   எங்களுக்கு மனபூர்வமான சம்மதம்  தான்.. ஆனால்  இந்த திருமணத்திற்கு கனி சம்மதிக்க வேண்டும் ..அவள் சம்மதித்தால்   கனியின் வழக்கு முடிந்த பின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்..” என்று அவனிடம் உறுதி கொடுத்தார்கள்.

இன்பனோ, “வழக்கு முடியும் வரை இந்த விசயம்  கனிக்குத் தெரிய வேண்டாம்.. கண்டிப்பாக கனி இந்த திருமணத்திற்குச் சம்மதிப்பாள்..அவளை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு..”  என்று சொல்லிச் சென்றான்.

இன்பன் ஊருக்குச் சென்ற பின் கனியோ தன் வேலைகளிலேயே மூழ்கிப் போனாள்.

அருவியோ வழக்கு விசாரனைக்கு தேவையான ஆதாரங்களை சேகரிப்பதிலும்,சட்ட புத்தகத்தை படிப்பதிலும் தன் நேரத்தை செலவிட்டாள்.

நிலவனோ தன் விருப்பமான விவசாயத்தை மேம்படுத்துவதில் ஈடுபட்டான்.  அவன் ஆசைபட்டதைப்  போல் ஹைட்ரோபோனிக்ஸ் முறையை  நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டான்.

இன்பனோ தினமும் தொலைபேசியில் அழைத்து அருவியுடன் பேசியவன் ,கனியுடனும்  ஒரு சில வார்த்தைகள் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான்.

 நிலவன்  மட்டும் தன் வழக்கமான குறும்புகளால் அருவியை படுத்திக்  எடுத்துக் கொண்டே இருந்தான் ..

அன்றும் அருவிக்கு முன் துயில் கலைந்து விழித்தவன்தன் அருகில்   ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மனைவியை! விழி எடுக்காது சிறிது நேரம் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்..

 காலை நேர தென்றல் காற்றின் விளையாட்டால்! தன்னவளின் முகத்தின் அழகை மறைத்த..  முடிக்கத்தைகளை மென்மையாக ஒதுக்கி விட்டவனின் மனதிற்குள்..

 

ஒருவரின் உண்மையான அழகும், குணமும் அவர்கள் உறங்கும் பொழுது  தான் தெரியும் என்று அவன்  எதிலையோ! எப்பொழுதோ! படித்தது அப்பொழுது   ஞாபகத்தில் வந்தது..

ஆம்! அது எத்தனை உண்மை! என்று நினைத்தான்..அருவியின் கள்ளம் கபடம்மில்லாத  குணமும்,அழகும் அவனை அவளின் மேல்  பித்தாக்கியது.

 அவனோ, மெல்ல அருவியின் புறம் நெருங்கிஅவளின் நெற்றியில் மென்மையாக இதழ்ப் பதித்தான்..

அவளோ, கணவனின் நெருக்கத்தைஅறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

நிலவனோ, மனதிற்குள் கும்பகர்ண்ணிஎன்று வசைப்பாடியவன் எழுந்து  குளியலறைக்குச் சென்றான்..

 

 சற்று நேரத்தில்  குளித்து முடித்து  ஈரத்தலையுடன்  குளியலறையிலிருந்து வெளியில் வந்தான்.

 தன் அருமை மனைவியோ! இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு.. சின்ன புன்னகையுடன் அவளிடம் சென்று நின்றான்.

மெதுவாக  அவள் புறம் குனிந்து, தன் ஈரத்தைலையை வேகமாக சிலுப்பினான்..

 அருவியோ, தன் மீது விழுந்த நீர்துளியால் உறக்கம் கலைந்து அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள்..

நிலவனோ, அவளின் செயலைக் கண்டு  வாய்விட்டே சிரித்தான்..

அருவிக்கோ, கணவன் நின்றிருந்த கோலமே அவன் தான்,  தன் மீது நீர்த்துளிகளைத் தெரிக்க விட்டான்  என்று புரிந்தது..

உடனே கோபத்துடன் அவனை முறைத்தபடியே, “எதற்கு இப்படி செய்தீர்கள்..” என்றாள்..

அவனோ, “நீ தூங்கும் அழகை பார்த்தவுடன் உன்னை கருப்பாக்கனும் போல்  ஆசையாக இருந்தது. அது தான்  இப்படிச் செய்தேன் ..”  என்று  குறும்பாக கண்களை  சிமிட்டினான்.

அவளோ அதிர்ந்து என்னது..” என்றதும்..

அவனோ, “ம்ம்! நான் என்ன செய்யட்டும். நீ இவ்வளவு அழகாக இருந்தால்! அஃது தான் கருப்பாக்கிடலாம் என்று முடிவே செய்துவிட்டேன்..” என்றவன்..

 அவளின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல், அவள் முகத்திலிருந்த நீர்துளிகளை தன் இதழ்களாலேயே ஒற்றி எடுத்தான்..

அருவியோ,  அவனின் செயலில் உறைந்து போய் பித்து பிடித்தது போல் சிலையாக அமர்ந்திருந்தாள்.

நிலவனோ, அவளின் நிலையை கண்டு மனதிற்குள் சிரித்த படியே, அவளின் காதருகில் குனிந்து இதற்கே இப்படி அமர்ந்தாள் எப்படி?இன்னும் இருக்கிறதே அதற்கெல்லாம் என்ன செய்வாய்  மை டியர் பொண்டாட்டி..” என்றான்..

அவளோ, அவனின் வார்த்தைகளை கேட்டு திகைத்தவள்.. தன் காதுகளில் விழுந்தது  மெய்யோ!பொய்யோ!  என்று நினைத்து..குழம்பிய படியே அவனைப்  பார்த்தாள்..

அவனோ,  அவள் குழம்புவதைக் கண்டும் காணாமல்  அங்கிருந்து சென்றான்.

அருவியோ,  சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்..

தன் முகத்தில் கணவனின்  இதழ்கள் ஏற்படுத்திய குறுகுறுப்பை ஓர் சிலிர்ப்புடன் உணர்ந்தவள், அந்த இடத்தை தன் விரல்களால் வருடிய படியே குளியலறைக்குள் சென்றாள்

அன்று முழுவதும் அந்த குறுகுறுப்பு அவளை ஆட்கொண்டது..அவள் தன்நிலையில் இல்லாமலேயே! சுற்றிக் கொண்டிருந்தாள்.

மனதிற்குள்  கணவனின் குறும்பை ரசித்தாள்.அவனின் ஒவ்வொரு செயலும் அவளை காட்டாற்று வெல்லமாக அவன் புறம் இழுத்துச் சென்றது..

நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காது என்பதற்கு ஏற்ப  வேகமாக நகர்ந்தது. அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கனகராயன் வழக்கும் விசாரணைக்கு வந்தது.

 

  அருவிக்கு மனதிற்குள் வழக்கைப் பற்றி சிறு பயம் இருந்தாலும்,மற்றவர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றியே ஆகவேண்டும்என்ற  வெறி அவளுள் பிறந்தது..

ஓர் அப்பாவிப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும்,தான் கனகராயனுக்கு வாங்கி தரும் தண்டனை ..

பெண்களுக்கு எதிராக இந்த மாதிரி கொடுமையை  செய்ய  நினைக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் நினைத்தாள்.

 வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.. வழக்குக்குத் தேவையான, கனகராயனுக்கு எதிரான ஆதாரங்களையும் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் சமர்பித்தாள்.

வழக்கில் முக்கிய சாட்சியாக செங்கனியும், பரிதியும் இருந்தனர்.

சாட்சி சொல்ல நீதிமன்றம் வருவதற்கு தயங்கிய செங்கனியை அருவிதான் தைரியம் சொல்லி அழைத்து வந்தாள்.

கனி  உன் சாட்சி மட்டுமே கனகராயனுக்கு தண்டனை வாங்கித் தரும். அவனுக்கு கிடைக்கும் தண்டனை இனி எந்த பெண்ணுக்கும் இஃது போல்  தீய செயல் செய்யும் எண்ணத்தை மற்றவர்களுக்கு தரக் கூடாது..”என்று பேசியே  கனியை தயார்படுத்தினாள்.

அருவியின் திறமையான வாதமும்,செங்கனி, பரிதியின் சாட்சியமும் வழக்குக்கு பலம் சேர்த்தது..

கனகராயன் சார்பாக ஆஜரான வக்கீலின் குறுக்கு விசாரனையை கூட செங்கனியும், பரிதியும் தைரியமாக எதிர் கொண்டனர்.

அருவியின் முதல் வழக்கு என்று நம்பமுடியாத அளவு தன் வாதத்தைச் சரியாக எடுத்து வைத்திருந்தாள்.

அருவியின் திறமையான வாதத்தால் , பூ பாலனை திட்டமிட்டு  கொலை செய்ததும், செங்கனியின் மீது திராவக வீச்சும், முன்பகை காரணாமாகத் தான்  கனகராயன்   செய்தான் என்று நிரூபித்தாள்.

திருமறவன் குடும்பத்தாருக்கோ அன்று தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

.

வழக்கு விசாரனை முடிந்த பின் தீர்ப்பை இரண்டு நாள்   ஒத்தி வைத்தார் நீதிபதி.

அந்த இரண்டு நாட்களும்  பயத்துடனும்! குழப்பத்துடனுமே  கழிந்தது..

அவர்கள் ஆவலுடன்  எதிர்பார்த்த   தீர்ப்பு வழங்கும் நாளும் வந்தது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் நீதிமன்றம் சென்றனர்.

அவர்களின் வழக்கு விசாரணைக்கு  வரும் நேரத்திற்காக.. படபடப்புடன் காத்திருந்தனர்..

அருவியோ மனதிற்குள் தன் தந்தை இடம் வேண்டிக் கொண்டு இருந்தாள்.தான் நிச்சயமாக வழக்கை வென்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும், ஏனோ! மனதில் ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.

அருவியின் எண்ணம் போலவே வழக்கில் அவள் தான் வெற்றி  பெற்றிருந்தாள்.

கனகராயனின் குற்றம் ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டதால் அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

தமிழருவியின் திறமையான வாதம் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்க உறுதுணையாக இருந்தாக கூறிய நீதிபதி அவளுக்கு வாழ்த்து சொல்லியதுடன்,

 
 கனகராயன் போல் ஆட்கள் சமுதாயத்தின் விஷம்..  தன் பலி வெறியை தீர்த்துக் கொள்ள ஓர் உயிரை கொல்லுவது மிகப் பெரிய குற்றம்..இந்த மாதிரி ஆட்களை களைய வேண்டும் , அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும்,  தற்போது  பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களுக்கு  காரணமாக இருக்கும் ஆண்வர்க்கத்தையும் கண்டித்தார்.

பெண்பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்பதில்  இந்த சமுதாயம்  காட்டும் ஆர்வத்தை ஆண்பிள்ளைகளை வளர்ப்பதிலும் காட்ட வேண்டும்   என்றும்..

பெண்ணை சகமனுசியாக மதித்து நடத்தனும் என்று.. சிறுவயதிலேயே ஆண்பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும் என்றும்..

பெண் குழந்தைகள் மீது இந்த மாதிரி வன்முறையை கையாள்பவர்களுக்கு இந்த தீர்ப்பு தகுந்த பாடமாக இருக்க வேண்டும்..” என்று கூறிய நீதிபதி..

 கனகராயனுக்கு மரணதண்டனையை உறுதிப்படுத்தி,தன் பேனா முனையை உடைத்தார்

 நீதிபதியின் தீர்ப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.. அருவியை சுற்றியிருந்த அனைவரும்  பாராட்டினார்கள்..

 

திருமறவனோ, மகிழ்ச்சியில்  அருவியின்  கைகளை பற்றி தன் கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டவர், “கண்ணம்மா நீ சாதிச்சுட்டே..”என்று குரல் தழுதழுக்க கூறினார்..

 

அவர் மனம் முழுவதும்  தன் மகளுக்கு நீதி கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியே திளைத்திருந்தது.

 

பவளமல்லியோ, அவளை கட்டி அணைத்து தன் வாழ்த்தை சொன்னார்..

 

பாரியோ,  “அருவிம்மா என் நண்பனின் இழப்புக்கும்,என் உடன் பிறவா தங்கைக்கும்  நீதி கிடைத்துவிட்டது.. உனக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லைம்மா..” என்றான் குரல் தழுதழுக்க..

 

புகழ்வாணனும், நீலிமாவும் கூட மகிழ்ந்து அருவியை வாழ்த்தினார்கள்..

 

கனியோ கண்களில் நீர் ஆறாக வடிய ..பேச்சற்று  அவளை கை எடுத்துக் கும்பிட்டாள்..

 

அருவியோ,கனியின் செயலைக் கண்டு பதறி ,  “கனி என்ன இது..” என்று கடிந்த படி  அவளை அணைத்துக் கொண்டாள்..

 

 கனியோ தன் மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீராக வடித்தாள்..அவள் மனதில் பெரிய சுமை இறங்கி மனம் லேசானது..

 

நிலவனோ, அனைத்தையும் வேடிக்கை பார்த்தானோ தவிர.. அவளை வாழ்த்தவும் இல்லை..அவள் புறம் வரவும் இல்லை..

 

 

அருவிக்கு ஏனோ மனமே சரியில்லை..இத்தனை பெரிய வெற்றி பெற்றும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை..

 

மனம் முழுவதும் ஏதோ இனம் புரிய பாரம் அழுத்தியது.

 

எத்தனை பேர் தன்னை வாழ்த்தினாலும்,வாழ்த்த  வேண்டியவனோ! எதுவுமே சொல்லாமல் அமைதியாக  இருக்கிறானே? என்று கலங்கிக் தவித்தாள்.

 

வீடு வரும் வழியெல்லாம் மெளனமாகவே வந்தாள்.யாருடனும் எதுவும் பேசவில்லை.ஆனால் அவளின் விழிகள் மட்டும் தன் கணவனையே  பார்வையால்  தொடர்ந்தது.

 

அவனோ ,தனக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லாதது போல் அமர்ந்து பயணத்தை ரசித்தபடி வந்தான்.

 

வீடு வந்ததும்  யாருடனும் பேசாமல், அமைதியாக  தங்கள் அறைக்கு சென்றாள்.

 

மனதிற்குள் கணவனை நினைத்தபடியே சாளரத்தின் கம்பியை பிடித்துக் கொண்டு சுற்றுப்புறத்தை வேடிக்கை  பார்த்த படி நின்று கொண்டிருந்தாள். 

 

சிறிது நேரத்தில் அவளின் எண்ணத்தின் நாயகனோ!அவளின்  பின் சத்தமில்லாமல் வந்து நின்றான்.

 

அருவியோ,அதை உணராமல் தன் நினைவிலேயே சூழன்று கொண்டிருந்தாள்.

 

நிலவனோ ,ஒரு நிமிடம் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் ,அடுத்த நொடி அவளை அழகாக தூக்கி சுற்றியபடியே.."மைடியர் தமிழழகி ஐயம் வெரி  ஹேப்பி.. உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.இதே போல் உன் வெற்றி என்றும் தொடர்வதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் .."என்றான்.

 

அவளோ ,அவனின் அதிரடியில் திக்குமுக்காடிப் போனாள்.அவளின் கண்களில் ஆனந்த கண்ணீர் அருவியாக பெருக்கெடுக்க கணவனின் முகத்தையே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

நிலவனோ,அவளை மெல்ல கீழே இறக்கி,அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை  மென்மையாக துடைத்தான்.

 

அவளோஅவனின் கரங்களை தட்டிவிட்டவள்,தேம்பிக் கொண்டே அவனின் நெஞ்சில் தன் மென்கரத்தால் அடித்தபடியே, "ஏன்? இத்தனை நேரம் பேசவே இல்லை.." என்றவள்.  அவனின் மார்பில் சாய்ந்து  தன் மனப்பாரத்தை எல்லாம் அழுது கரைத்தாள்.

 

அவனோ, அவள் அழுவது பொறுக்க முடியாமல், “அருவி பிளீஸ் சாரிடா .. நீ அழுதால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது..என்னால் தாங்க முடியவில்லை ..” என்றவுடன்..

 

அருவி அழுவதை நிறுத்தி விட்டு, அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “இத்தனை நேரம் நான் எத்தனை  கஷ்டப்பட்டேன் தெரியுமா..? “என்றாள்.

 

அவனோ,”  “ரொம்ப சாரிடா நீதிமன்றத்தில் உன்னை இப்படி தூக்கிச் சுற்றி வாழ்த்துச் சொல்ல முடியுமா ?நீயே சொல் .. தீர்ப்பு சொன்னவுடனேயே எனக்கு உன்னை ஓடிவந்து  கட்டி அணைத்து இப்படி   தூக்கி சுற்ற வேண்டும் போல் ஆசையாக இருந்தது..   நான் என்னை எவ்வளவு கட்டுப்படுத்திக் கொண்டே நின்றேன் தெரியுமா..?”என்றவுடன்..

 

அவளோ, விழிவிரிய நிஜமாகவா?” என்றாள்.

 

அவனோ, அவளின்  மூக்கின்  மீது தன் முக்கை லேசாக உரசிய படியே ம்ம்ம்..!” என்றான்..

 

அவளோ, அடுத்த நொடி அவனை இறுக அணைத்துக் கொண்டவள்.. “உங்களுக்கு என் மீது ஏதோ? கோபம் போல் என்று நான் பயந்துவிட்டேன்.. எத்தனை பேர் என்னைப் பாராட்டினாலும் நீங்கள் வாழ்த்துவது போல் இருக்குமா..?” என்றவள்.

 

ஐ லவ் யூ ஓளிர்..” என்று கூறியபடியே அவனின் முகம் எங்கும் முத்தமழைப் பொழிந்தாள்..

 

நிலவனோ , மனைவியின் அதிரடியில் திக்குமுக்காடிப் போனவன்,ஆசையாக அவளின் செயலை அனுபவித்தவன், “ஹோய் மை டியர் தமிழழகி என்ன இஃது ..”என்றான்.

 

அவளோ, “ம்ம்! நீங்கள் மட்டும் தான் என்னை கருப்பாக்குவீர்களா? நானும் உங்களை வட்டியும் முதலுமாகச்  சிவப்பாக்கிவிட்டேன்..” என்று கண்கள் மிளிர  சிரித்தவளைக் கண்டு ..விழி எடுக்காது பார்த்த படியே, மொத்தமாக  அவளிடம் சாய்ந்தான் அவளின் அய்யனார்..

 

 அருவியோ, சிலையாக நின்றவனின் தோள்களில் தன் கைகளை மாலையாக போட்ட படி,  சற்று எம்பி அவன் காதில் இதற்கே இப்படிசிலையானால் எப்படி அய்யனாரே ..”என்று அவன் சொன்னதையே திருப்பிச் சொன்னாள்   குறும்பாக..

 

அவனோ, அவளின் வார்த்தைகளை கேட்டு ஒரு நிமிடம் திகைத்தவன்..அடுத்த நொடி .அவளை தன் நெஞ்சோடு அணைத்தபடியே “இதற்கே என்றால்  என்ன அர்த்தம்..” என்றான் கண்கள் மின்ன..

 

அவளோ, “ம்ம்! அது எனக்கு எப்படித் தெரியும்.. என்னிடம்  அப்படிச் சொன்னவருக்குத் தான் தெரிந்திருக்க வேண்டும்..” என்றாள்.

 

அவனோ அவளின் பதிலைக் கேட்டு குறும்பு மின்ன  “எனக்கு   நன்றாக  தெரியும். மேடமுக்கு ஓகே என்றால்  எப்படி என்று நான்   தெரியவைத்து விடுகிறேன்..” என்றான் ..

 

அருவியோ,”முதலில் செங்கனியின் வாழ்க்கை நன்றாகட்டும்.  அப்புறம் நான் தெரிந்து கொள்கிறேன்..”  என்றவள் அவனின் அணைப்பில் இருந்து விலக முயற்சித்தாள்.

 

அவனோ , அவளின் முயற்சியை தடுத்தபடியே,”அருவி உண்மையிலேயே என்னை உனக்கு பிடித்து இருக்கிறதா? இல்லை விதியே என்று என்னை ஏற்றுக் கொண்டாயா..?” என்று கண்களில் தவிப்புடன் கேட்டான்..

 

அவனுக்கு  அன்றே அவள் மனதை.. தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது..

 

அருவியோ, கணவனின் தவிப்பை பொறுக்க முடியாமல் ,”ஒளிர் எதற்கு உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்.. உங்களை யாருக்காவது பிடிக்காமல் போகுமா? உங்களை   நான் என் உயிராக நேசிக்கிறேன்..”என்றாள்..

 

அவனோ, பதில் கூறாமல் அவளையே விழி எடுக்காது பார்த்திருந்தான்..

 

அவளோ,”ஒளிர் உங்களைப் போல் ஒருவர் கிடைக்க நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..அப்பா சரியாகத் தான் தேர்ந்தெடுத்துள்ளார்..”என்றாள்..

 

அவனோ,உடனே “ஓ!உன் அப்பாவிற்காகத் தான் என்னை பிடித்து இருக்கிறதா..?” என்றவுடன்..

 

அருவியோ,கோபமாக..  உங்களுக்காகத் தான்..உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது.. உங்களின் தைரியம்,அன்பு,பாசம், கர்வம், திமிர், காதல், குறும்பு  எல்லாமே என்னை ஈர்த்தது..” என்றவள்.

 

“ஓர் இக்கட்டான சூழலில் எதையும் எதிர்ப்பார்க்காமல் என் அப்பாவிற்கு மகனாக நீங்கள் கடைசி காரியம் செய்தது..என்னால் என்றுமே மறக்க முடியாது..

 

அது மட்டுமின்றி உங்களிடம் மிகவும் பிடித்ததே பிறருக்கு உதவும் குணம்...அதுவும் இல்லாதவர்களுக்கு உதவுவது ..”என்றவளை குழப்பமாக பார்த்தவனிடம்..

 

தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள்..ஆனால் நான் அதை விட உயர்ந்தது கல்வி கற்க இயலாதவர்களுக்கு கல்வி கொடுப்பது என்பேன்..அதை நீங்கள்  செய்து வருகிறீர்கள் அதுவும் கடந்த ஏழுவருடங்களாக என்பதும்  எனக்கு தெரியும்..” என்றவளை விழிவிரிய பார்த்தானே தவிர பேசவில்லை..

 

 எப்படித் தெரியும் என்று நினைக்கிறீர்களா? எல்லாம் பாரி அண்ணா தான் சொன்னார்..” என்றவளை அமைதியாகப் பார்த்தான்..

 

அருவி சொல்வது போல் நிலவன் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே.. படிக்க வசதியில்லாத   ஏழை குழந்தைகளைப் படிக்க வைக்க  தன்னால் முடிந்த உதவியை செய்தான்.

 

அதை இப்பொழுது வரை தொடர்கிறான்.. அவனால் முடிந்த  அளவு தன் சுய சம்பாத்தியத்தில் தான் இதை செய்து வருகிறான்..அதை பாரி இவளிடம் சொல்லியிருப்பான் போல என்று நினைத்தான்.

 

 

அருவியோ,அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்து, “இந்த குணங்கள் எல்லாம் தான் என்னை உங்களை நேசிக்க தூண்டியது..” என்றவளிடம்..

 

 “என்னைப் பற்றி  என்னை விட அதிகமாக அறிந்துவைத்துள்ளாய். உன்னை விட நான் கருப்பு என்று உனக்கு வருத்தமாக இல்லையா..?”என்றவனிடம்..

 

கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு..” என்று பாட்டாக படியவளை பார்த்து சிரித்தவனை..

 

அவனின் மீசையைப்  பிடித்து வேகமாக இழுத்து, “ உங்களின் இந்த உயரம்.. நீங்கள் சிரிக்கும் போது  கூடவே சிரிக்கும் இந்த  கண்கள்..அடங்காத இந்த திமிர் பிடித்த கேசம்.. இந்த மீசை எல்லாமே ரொம்ப பிடிக்கும்..ஒளிர் நீங்கள் என் கருப்பழகன்.என் அய்யனார் சிலை ..”என்று ராகம் பாடினாள்.

 

அவனோ, “வலிக்குது  டீ மீசையை விடு..” என்றான்.

 

என்னது டீயா ஹலோ மிஸ்டர் உடம்பு எப்படி இருக்கிறது..” என்றவளிடம்..

 

ம்ம்! ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது ..என் உடம்பின் ஒவ்வொரு செல்களும் என்  பொண்டாட்டி  தமிழழகி வேண்டும் என்கிறதே..” என்று கண்களில் போதையுடன் சொன்னவனிடம்..

 

 ம்ம்!வேண்டும்..வேண்டும் எனக்கு நல்ல ரெண்டு கொடுக்கனும் போல் இருக்கிறது..” என்றவளிடம்..

 

கொடு.. கொடு .. கொஞ்சம் முன்னர் கொடுத்தாயே! அப்படித்  தா..” என்று அவளின் செவ்விதழ்களை தன் விரல்களால் வருடினான்.

 

அவளோ,  அவனின் கைகளை தட்டிவிட்டு ஆசை தோசை..” என்று பாடியபடி அவனிடமிருந்து விலகி ஓடினாள்..

 

அவனோ, “ஹோய் மை டியர் தமிழழகி.. என்னை எவ்வளவு உனக்கு பிடிக்கும் என்று சொன்னாயே! உன்னை  எனக்கு எவ்வளவு பிடித்து இருக்குன்னு நான் சொல்ல வேண்டாமா..?” என்றவனிடம்..

 

அஃது எல்லாம் சொல்ல வேண்டாம்.. எனக்கு சொல்லாமலே தெரியும்..” என்று கூறியபடி ஓடியவளை கண்களில் காதல் பொங்க பார்த்தபடி நின்றான் அவளின் கருப்பழகன்..

 

தொடரும்..

 

 

அத்தியாயம் 32

இன்பன் அருவி வழக்கில் வென்றுவிட்டதை அறிந்து  எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தான்இறுதி தீர்ப்பன்று தான் அருவியின் அருகில் இல்லையே! என்று கலங்கினான்.

 அருவி தன் முதல் வழக்குளையே,வெற்றி பெற்றதை  பெருமையாக நினைத்தான்.

  தன் மாமா வணங்காமுடிக்கு,  அவளின் வெற்றியை  காண கொடுத்துவைக்கவில்லையே!   என்று வருந்தினான்.

  அருவியை காண வேண்டுமென்று, அவன் மனம் துடித்தது.தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கி  விட்டு, அருவியைக் காணச் சென்றான்.

  அருவிக்கோ,எதிர்பாராமல் இன்பனைக் கண்டது, மிகுந்த மகிச்சியைத் தந்தது.

அருவிமட்டுமின்றி திருமறவன் குடும்பமே, அவனை அன்போடு வரவேற்றது.

 அருவியிடம் இன்பன் தன் வாழ்த்தையும்,மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டான்.

அம்மு நீ உன் முதல் வழக்கிலேயே   வென்றதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.உன் வெற்றி இதே போல் தொடர வேண்டும்..” என்றான்.

தேங்கஸ் இன்பா..”  என்றவள்.”என்னடா சொல்லாமல் வந்திருக்கே.. “என்றவளிடம்.

உன்னைப் பார்க்கனும் போல இருந்துச்சு. அது தான் உடனே கிளம்பி வந்துட்டேன்..”

 “ஓஓ..நானும் உன்னைப் பார்க்கனும் என்று நினைத்தேன்டா.. நீயே வந்துட்டே..சரி நீ   போய் குளித்துட்டு வா.. நான் உனக்கு டிபன் எடுத்து வைக்கிறேன்..”என்றாள்.

  இன்பனோ,செங்கனியையே  காணவில்லையே!எங்கே அவள்  என்று நினைத்துஅவளின் அறையைப் பார்த்தான்.  

 அதுவரை அருவியும், இன்பனும் பேசிக் கொள்வதை  அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த நிலவன்..

 இன்பன் கனியை தேடுவதைக் கண்டு,அவன் அருகில் சென்று, “இன்பா கனிக்கு இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை ..காய்ச்சல் அது தான் படுத்து இருக்கிறாள்..” என்றவுடன்.

 “..அப்படியா, டாக்டரிடம் போனாளா? இப்போது எப்படி இருக்கிறது. பரவாயில்லையா? நான் அவளைப் பார்க்கலாமா?” என்று பதட்டமாக அடுக்கடுக்க கேள்வி கேட்டவனிடம்..

நிலவனோ,”இப்போது  நன்றாகயிருக்கிறதுமுதலில்  நீ சென்று பயணக் களைப்பு தீரக் குளித்து வா..டிபன் சாப்பிட்ட பின்னர்  அவளைப் பார்க்கலாம்..”  என்று கூறி இன்பனை விருந்தனர் அறைக்கு அனுப்பினான்.

இன்பனுக்கும் அதுவே சரியென்று தோன்றவும், குளிக்க சென்றான்.

நிலவனும்வயலுக்கு செல்லுவதற்காக   குளித்து தயாராகி வந்தான் .

இருவருக்கும்  அருவி உணவைப் பறிமாறினாள்.  இருவரும் உண்டு முடித்தபின் , நிலவன் வயலுக்கும்,இன்பன் கனியைக் காணவும்  சென்றனர்.

இன்பனுடன் அருவியும் கனியின் அறைக்குச் சென்றாள்.

செங்கனியைக் கண்டவுடன் இன்பனுக்கு மனசெல்லாம் வலித்தது. முன்பை விட இளைத்து கருத்திருந்தாள்.

உடல்நிலை சரியில்லாது ஒரு காரணம் என்றாலும், அவள் மனமும் சரியில்லை என்று பார்த்தவுடனே இன்பனுக்கு புரிந்து விட்டது.

கனியோ, இன்பனைக் கண்டதும் வியந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளவில்லை..

 அருவியும், இன்பனும், அவளின் கண்களில் இன்பனைக் பார்த்ததும் ,ஒரு நொடியே  தோன்றிய வியப்பைக் கண்டு கொண்டனர்.

இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்த பின்  அமைதியாகவே இருந்தனர்..

அருவிக்கு அவர்களின் அமைதி சங்கடத்தை ஏற்படுத்தியது.இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்து குடிக்க ஏதாவது எடுத்து வரட்டுமா..”என்றவளிடம்.

கனியோ, “எதுவும் வேண்டாம் அண்ணி..” என்றாள்.

இன்பனோ, “அம்மு நானும் இப்போது தானே உண்டேன்எனக்கும் எதுவும்  வேண்டாம்..” என்றான்..

அருவிக்கோ,அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.

கனியோ, இன்பன் கேட்பதற்கெல்லாம்  ஒற்றை வார்த்தையிலேயே பதில் சொன்னாள்.

இன்பனுக்கோ, கனி பட்டும்படாமல் பேசுவது மனதை வலிக்கச் செய்தது.அவளிடம் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்ந்தான்.

 இன்பனுக்கும்  அங்கு நிற்பது நெருப்பின் மேல் நிற்பதைப் போல் இருந்தது.

உடனே கனியிடம், “நீ ரெஸ்ட் எடு. நாங்கள் அப்புறம் வருகிறோம்..” என்றவன். அருவியை கையோடு அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான்.

  அங்கு சென்றவுடன், “அம்மு உண்மையைச் சொல்லு.. நீ கனியிடம் திருமணப் பேச்சை எடுத்தாயா?என்றவுடன்.

அவளோ, ஒரு நிமிடம் தயங்கியவள். பின்பு,”ஆமாம் இன்பா ,நான் ரெண்டு நாள்  முன், அவளிடம் உங்கள் இருவரின் திருமணத்தைப் பற்றி  பேசினேன்..” என்றாள்.

அவனோ, பதற்றத்துடன் கனி என்ன சொன்னாள்..” என்றான்.

எனக்கு திருமணமே  வேண்டாம்.நான் இப்படியே இருந்து கொள்கிறேன். என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொன்னாள்..”

 அதைக் கேட்ட இன்பன் அதிர்ச்சியுடன்,”அம்மு நீ ஏன் ? அவளிடம் திருமணத்தைப் பற்றிப் பேசினாய்! நான் அவளிடம்  நன்கு  பழகிய பின்பேசலாமென்று நினைத்தேன்..” .என்றவனிடம்.

இன்பா, முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால், அதற்கு  அதிக நாளாகும். என்று நினைத்துத் தான் நடப்பது நடக்கட்டும் என்று கேட்டுவிட்டேன்..” என்றவளிடம்.

ம்ம் இப்போது என்ன செய்வது, நீ திருமணத்தைப் பற்றி பேசியதால் தான், அவளுக்கு காய்ச்சலே வந்தது போல்..” என்றவனிடம்.

ஆமான்டா. அவள்  இதை நினைத்து மனதை குழப்பியிருப்பாள் போல..” என்றவள். தொடர்ந்து.

ஒளிர் கூட நீ எதற்கு  அவசரப் பட்டு  கனியிடம் திருமணப் பேச்சை எடுத்தாய்! என்று  என்னைக் கடிந்து கொண்டார்..”என்றவளிடம்.

சரி விடு அம்மு. அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்..”என்றவனிடம்.

ஆமாம் இன்பா, நானும் இதைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தேன். பேசாமல் சாட்சிக் காரன் காலில் விழுவதை விட, சண்டைகாரன் காலிலேயே விழுந்து விடலாம்..”என்றவளை புரியாமல் பார்த்தான் இன்பன்.

அருவியோ, “நீ கனியிடம் பேசு ..நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.. நானும் கொஞ்சம் அவரசப் பட்டு பேசியிருக்க கூடாது..”என்று வருந்தியவளிடம்.

அம்மு அதெல்லாம் ஒன்றுமில்லை.. எப்போதிருந்தாலும் பேசித்தானே ஆகனும், நீ கவலைப்படாதே  நான்  பார்த்துக் கொள்கிறேன் ..” என்றவனிடம்.

மாமாவோ, ஒளிரோ பேசியிருந்தால் நல்ல முடிவு கிடைத்திருக்கும் என்றுதோனுகிறது..”என்றாள்.

அப்படியெல்லாம் இல்லை..நீ பக்குவமாய்த் தான் பேசியிருப்பாய்..” என்றான் ஆறுதலாக.

ம்ம்..” என்றவளிடம், நான் நிலவனைப் பார்த்துட்டு வருகிறேன். என்று கூறிவிட்டு வயலுக்கு சென்றான்இன்பன்.

 

அருவியோ மனதிற்குள் இன்பனையும், கனியையும் எப்படியாவது சேர்த்து வைக்கனும்  என்ற   சிந்தனையிலேயே  உழன்றாள்.

நிலவன்  தன்  வயலில் தான் விரும்பிய ஹைட்ரோபோனிக்ஸ் முறையை செயல்படுத்தியிருந்தான்.

இன்பன் வயலுக்கும் சென்றதும்  முதலில் கண்டது அதைத் தான் .நிலவனின் உழைப்பு அதில் மிளிர்ந்தது.

அவனின் மனதில்  அப்பொழுது அருவிக்கு ஏற்ற ஜோடி நிலவன் தான் என்று தோன்றியது.

தன் மாமா அதனால் தான், அருவிக்கு நிலவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று எண்ணினான்.

இருவருமே தாங்கள் நினைப்பதை, எந்த தடங்கல் வந்தாலும்  சாதிக்கும் குணம் கொண்டவர்கள் என்று நினைத்தான்.

நிலவனோ, இன்பன்  வந்ததிலிருந்து ஏதோ யோசனையிலேயே   இருப்பதைக் கண்டு,”என்ன பலத்த யோசனை இன்பா..” என்றான்.

இன்பனோ, “அப்படி எல்லாம் ஒன்றுமில்லை..”என்றவனிடம்.

எனக்கு தெரியும். கனி உன்னிடம் சரியாக பேசவில்லை தானே..”என்றவுடன்.

நிலவனை வியப்பாக பார்த்தான் இன்பன்.

தன்னையே வியந்து பார்த்தவனிடம், “இன்பா என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியும்.அருவி அவளிடம் திருமணத்தைப்  பற்றி பேசியிருக்கிறாள்.அதுனுடைய வெளிப்பாடு இப்படித் தான் இருக்கும்..” என்றவன். ஒரு நெடிய பெருமூச்சு விட்டான்.

இன்பன் பதில் பேசாமல் மெளனமாகவே நின்றான்.

இன்பா,நிச்சயமாக எல்லாம் நல்ல படியாக நடக்கும்.. நீ கவலைப் படாதே !அவளின் வலி பெரியது. அது மறையும் வரை நாம் பொறுத்திருக்கிறளாம்..” என்றான்.

நானும் அப்படித் தான் நினைத்தேன்..” என்றவனிடம்.

இன்பா இதில் சிறிது  என் சுயநலுமும்   இருக்கிறது. உன் அருமை அம்முஉங்கள் இருவரின் வாழ்க்கை நன்றாகிய  பின் தான் எங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள்..” என்றவனிடம்.

! நீ கவலைப்படாதே உன்  தங்கையை நான் சரிகட்டுகிறேன்.. நீ என் தங்கையை சரி கட்டு டீல் ஓகே வா..” என்று குறும்பாக சொன்னவனிடம்..

 “இன்பா என் தங்கையை கூட சரிகட்டிவிடலாம்.ஆனால் உன் தங்கையை சரிக்கட்டுவது தான்  உலகிலேயே மிகப் பெரிய கஷ்டம் ..”என்று பெருமூச்சு விட்டவனிடம்.

முயச்சி செய் நண்பா! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..”என்று சிரித்தான்.

 நிலவனோ,”ம்ஹும்  அதைத் தான் செய்துட்டிருக்கேன் ..”என்றவனிடம்.

 “நிலவா, நான் ஒரு முறை கனியிடம் பேசிப் பார்க்கட்டுமா?  என் மனதில் அவள் தான் என் மனைவியென்று, நான் என்றோ முடிவெடுத்துவிட்டேன். அவளிடம் அதை புரிய வைக்க வேண்டும்.நிச்சயமாக அவள் மனம் மாறும் வரை நான் காத்திருப்பேன்..”

இன்பா, நீ  கனியிடம் பேசு.. காலம் முழுதும் சேர்ந்து வாழப் போகிறவர்கள். மனம் விட்டு பேசினால் தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்என் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால்,  அதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி என்றவனிடம்.

 “தேங்கஸ் நண்பா நிச்சயமாக நான் அவளின் மனதை காயப்படுத்தாமல் பேசிப் பார்க்கிறேன்..” என்றான்.

அதன் பிறகு இருவரும்  விவசாயத்தைப் பற்றிய பேச்சில் மூழ்கினார்கள்.

கனியோ,  தன் அறையில் படுத்த படியே, இன்பனை  இனி   எப்படி எதிர் கொள்வது என்ற சிந்தனையில் சூழன்று கொண்டிருந்தாள்.

அருவி   திருமணப் பேச்சை  எடுத்ததிலிருந்தே, கனி மனதற்குள் மருகினாள்.

அதுவும் இன்பனுடன் என்றதுமே அவள் பயந்தாள். இன்பனின் வசதிக்கும், படிப்புக்கும், அழகுக்கும், தான் சற்றும் அவனுக்கு  பொருத்தம் இல்லாதவள். என்ற தாழ்வுமனப்பான்மையே   அவளை வாட்டியது.

அதன் வெளிப்பாடே  உடல்நிலையை பாதித்தது.

ஒரு திருமணத்தால்  தான் பட்ட பாடே போதும். என்ற எண்ணம் அவள் மனதில் வலுத்தது.

இன்பனை அவளுக்கு பிடித்து இருந்தது.இன்பனைப் போல் ஒரு கணவன் கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

ஆனால், இன்பனுக்குநாம்  எந்த விதத்திலும் பொருத்தமில்லாதவளென்று நினைத்தாள். இனிஅவனிடம் தான் விலகியே இருக்க வேண்டுமென்று எண்ணினாள்.

இன்பனுக்கு ஏற்ற ஒரு நல்ல பெண்ணை அவன் திருமணம் புரிந்து  மகிழ்ச்சியாக வாழட்டும் . நாம் காலம் முழுவதும் இப்படியே இருந்து கொள்ளலாம் ,என்று மனதிற்குள் உறுதி கொண்டாள்.

கனிக்கு அப்பொழுது தெரியவில்லை.இன்பனும் சரி, அருவியும் சரி தாங்கள் நினைத்தை சாதிக்காமல் விடாமாட்டார்களென்று,ஏன் தன் அண்ணைப் பற்றியும் கூட அவள் அறியவில்லை..

 

தான் ஒரு கணக்குப் போட்டால் அவர்கள் ஒரு கணக்குப் போட்டு தன்னை வீழ்த்தப் போகிறார்கள் என்று அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை..

 

 தொடரும்..

 

 அத்தியாயம் 33

 

இன்பனோ ,இரண்டு நாட்கள் கனியை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை.. நிலவுடனே சுற்றிக் கொண்டிருந்தான்.

அருவியும் கனியை பார்க்கவே இல்லை. தன் வேலையிலேயே நேரத்தைக் கடத்தினாள்.

நிலவனோ,நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கனியுடன் கழித்தான்.

திருமறவனோ,அமைதியாக  நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரின் மனதிற்குள்  தன் மகன் மீதும், மருமகள் மீதும் முழு நம்பிக்கை இருந்தது.அதனால்,அவர்களே  இந்த விசயத்தை நல்ல விதமாக கையாளுட்டும்.அவசரப்பட்டு இப்போது நாம் இதில் தலையிட வேண்டாம் என்று எண்ணினார்.

 அன்று இன்பன் சென்னை கிளம்புவதாக இருந்தது. செல்வதற்கு முன் கனியிடம் பேசிவிட வேண்டுமென்று நினைத்தான்.

அருவியிடமும், நிலவனிடமும் சொல்லிவிட்டு கனியின் அறைக்குச் சென்றான்..

 கனி உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்தே அறையை விட்டு வெளியில் வராமலிருந்தாள்.

இன்பன் கனியின் அறையை மெதுவாக தட்டி, அனுமதிபெற்றுக் கொண்டு, உள்ளே சென்றான்.

 ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

கனியோ, அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமைதியாக குனிந்த படியே அமர்ந்திருந்தாள்.

இனபனோ, “கனி இப்பொழுது உடம்புக்கு பரவாயில்லையா?”என்றவனிடம்.

கனியோ, தலையை மட்டும் ஆட்டினாள்.

இன்பனோ,ஒரு நிமிடம் நெடிய மூச்சை வெளியிட்டவன், “கனி நான் ஒரு முக்கியமான விசயம் உன்னிடம் பேசவேண்டும்..”   என்றான்.

அவளோ, தலையை நிமிர்த்தாமலே அமர்ந்திருந்தாள்.

இன்பனோ,”கனி பிளீஸ் கொஞ்சம் நிமிர்ந்து என்னைப் பார்.. என் முகமென்ன அப்படி சகிக்க முடியாத படியா இருக்கிறது..” என்றவுடன்.

கனியோ, அதிர்ந்த படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

தன்னையே அதிர்ந்து பார்த்தவளின் கண்களை  பார்த்தபடியே, “அம்மு நம் திருமணத்தைப் பற்றி உன்னிடம் பேசினாள் என்று எனக்கு தெரியும் . நீ அதைப் பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறாய் ..”என்றான்.

கனியோ, பதில் சொல்லாமல் மெளனமாகவே இருந்தாள்.

இன்பனோ, தன் பொறுமையை இழந்து, “கனி ஏதாவது பேசு ..அப்பொழுது தானே உன் மனம் எனக்கு புரியும்..” என்றவுடன்.

எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை..நான் இப்படியே இருந்து கொள்கிறேன்.. எனக்கு இனி திருமணமே வேண்டாம். ஒரு திருமணத்தால் நான் பட்டதே போதும்..” என்றவுடன்.

இது தான் உன் முடிவா? ஒரு திருமணம் தோற்றுவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதா?”என்றவனை பேசாமல் பார்த்தாள்.

அவனோ, “நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால், வாழும் காலம் நரகம். வலிகளையும், காயங்களையும் கடந்து வரப் பழகிக் கொள்ள வேண்டும்.. “என்றான்.

அவளோ, எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாவே இருந்தாள்.

கனி நீ இப்படி இருப்பது யாருக்காவது மகிழ்ச்சியை கொடுக்குமா? உன் அம்மா, அப்பா, அண்ணன் எல்லோரும்  மனதிற்குள் எப்படி வருந்திக் கொண்டிருக்கிறார்கள் என்று உனக்கு தெரியாதா?”  என்றான்.

அவளோ, பதில் சொல்லாமல் கண்ணீர் சிந்தினாள்.

இன்பனோ, அவளின் கண்ணீரைக் கண்டு கலங்கியவன்,அவள் கன்னத்தில் வலிந்த நீரை துடைக்க  தன்னையும் அறியாமல் கை நீட்டியவன் ,கனியின்  திகைத்த பார்வையில் தன் கைகளை இழுத்துக் கொண்டான்.

கனி பிளீஸ் அழாதே, நீ அழுதால்  என்னால் தாங்க  முடியாது. நீ உன் மனதை மாற்றிக் கொள்ள முயற்சி செய் .. உன்னை இந்த நிலையில் என்னால் பார்க்கமுடியவில்லை ..”என்றவுடன்.

கனி தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே, “என் மேல் பரிதாபப்பட்டு இந்த திருமணத்திற்குச் சம்மதித்தீர்களா?”

பைத்தியம் மாதிரி பேசாதே.. உன்னைப் பார்த்து பரிதாபப்பட உன்னிடம் என்ன குறை இருக்கிறது..”

ஏன் இல்லை. என் கால்களின் நிலை  உங்களுக்குத் தெரியும். நான் ஒரு விதவை.அதுமட்டுமின்றி என் முகத்திலிருக்கும் இந்த காயம் இதையெல்லாம் பார்த்துத் தானே என் மேல் பரிதாபபட்டு  திருமணம் புரிய கேட்டீர்கள்..” என்றவளிடம்.

பரிதாப்பட்டு வாழ்க்கை கொடுக்க நான்அப்படி ஒன்றும் தாராள மனம் படைத்தவனில்லை..” என்றான் எரிச்சலாக.

அவளோ, “அப்படி என்றால் உங்கள் அழகுக்கு சிறிதும் பொருத்தமில்லாத என்னை ஏன் மணக்க நினைக்கிறீர்கள்..”

கனி நீ புத்திசாலி என்று நினைத்தேன்ஆனால், நீ புற அழகுக்கு இவ்வளவு முக்கியத்தும் தருவாய் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை அழிந்து போகும் புற அழகை விட ..என்றும் அழியாத அகஅழகு தான் முக்கியம்..”என்றவனை புரியாமல் பார்த்தவளிடம்.

உன் மனசு அழகு! உன் அன்பு அழகு! அது தான் எனக்கு வேண்டும். உனக்காவது உன்னைச் சுற்றி அன்பான குடும்பமிருக்கிறது.ஆனால் எனக்கு அம்முவைத் தவிர யாருமில்லை.உங்கள்  அன்பான  இந்த கூட்டுக்குள் நானும் சேரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்..” என்றவன் தொடர்ந்து.

கனி நான் உன்னை மனதார நேசிக்கிறேன். நீ சிரித்தால் எத்தனை அழகு  தெரியுமா? நான் காலம் முழுவதும் உன் முகத்தில் சிரிப்பை மட்டும் தான் காண வேண்டும். அதற்கு எனக்கொரு வாய்ப்பு கொடுக்க கூடாதா?”என்றவனிடம்.

இன்பன் நான் எந்த விதத்திலும் உங்களுக்கு பொருத்தமில்லாதவள். நீங்கள் வேறு யாரையாவது மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்..” என்றவளிடம்.

நான் இத்தனை தூரம் சொல்லியும், நீ கிழிந்து போன ரெக்காடு மாதிரி, திரும்ப.. திரும்ப. இதையே சொல்லிக் கொண்டு இருக்கிறாய்..” என்றவனை அதிர்ந்து பார்த்தவளிடம்.

என் முடிவையும் தெரிந்து கொள். எனக்கு மனைவி என்றொருத்தி வந்தால், அது நீ மட்டும் தான்.அது எத்தனை நாட்களானாலும் சரி. உன் சம்மத்திற்காக  நான் காத்திருப்பேன்..” என்றவனிடம்.

இன்பன், பிளீஸ் என் மனதை புரிந்து கொள்ளுங்கள். என்னைக் கட்டாயப் படுத்தாதீர்கள்..” என்றவளிடம்..

உனக்கு என்னை பிடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை..ஆனால் பிடித்திருந்தும், உன் வரட்டு பிடிவாதத்தால் அதை ஒத்துக் கொள்ள மனசில்லை, அப்படித்தானே ..”என்றவனை திகைப்புடன் பார்த்தாள்.

அவனோ, “ஒன்றே ஒன்று உன்னிடம் சொல்லிக் கொள்கிறேன் .உன் அருமை சின்ன அண்ணனும், அண்ணியும் , உனக்கு  ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் தான், தங்கள் வாழ்க்கையை தொடங்குவோம் என்ற உறுதியுடன் இருக்கிறார்கள்..” என்றான்.

அவளோ, அதைக் கேட்டு சிலையாக உறைந்தாள்.

அவனோ, “உனக்கு மற்றவர்கள் பற்றி கவலை எதற்கு? நீ உன் முடிவிலேயே இரு.. உன் காயம் தானே பெரியது. மற்றவர்கள் எப்படி போனால் உனக்கு என்ன? நானும் உன்னை எந்தவிதத்திலும் கட்டாயப் படுத்த மாட்டேன்.நான் இன்று சென்னை கிளம்புகிறேன்..” என்ற படியே ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்றவன்.

 “என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை..இனி முடிவு உன் கையில் .. நான் வருகிறேன்..” என்றவன் சட்டென்று அந்த அறையை விட்டு வெளியில் வந்தான்.

கனியோ, அவன் போவதையே வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

இன்பனோ, நடந்ததை அருவியிடம் சுருக்கமாக சொல்லிவிட்டு சென்னை  கிளம்பினான்.

நாட்கள் தெளிந்த நீரோடையாக நகர்ந்தது. அருவியோ தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தாள்.

கனியை நேரில் பார்த்தால் மட்டும் பெயருக்கு பேசினாள்.

கனிக்கோ அருவியின் நடவடிக்கை மனதை வலிக்க செய்தது.

அருவியோகசப்பு மருந்து தான் நோய்க்கு சிறந்த மருந்து. அவள் போக்கிலேயே விட்டு பிடிப்போம்என்று நினைத்தாள்.

நிலவனோ, வழக்கத்தைவிட தங்கையிடம் அன்பும், அக்கறையும் காட்டினான்.ஆனால் அவன்  தவறிக் கூட திருமணத்தைப் பற்றி பேசவில்லை..

திருமறவனும், பவளமல்லியும்  கனியிடம் திருமணப் பேச்சை எடுக்கவேயில்லை.அவளே யோசித்து முடிவெடுக்கட்டும் என்று நினைத்தனர்.

நீலிமாவும், புகழ்வாணனும் கூட அவளிடம் அன்பாக இருந்தார்கள்.

கனியோ, குற்றயுணர்வில் தவித்தாள்.தான் இவர்களுக்கு பாரமாக இருக்கிறோமா? என்று மனதிற்குள் மருகினாள்.

இன்பனோ, அன்று சென்றவன் தான். அதன் பிறகு கனியின் காதுகளுக்கு அவனைப் பற்றிய எந்த செய்தியும் எட்டவில்லை.

கனியை கட்டாயப்படுத்திருந்தால் கூட ,அவள் பிடிவாதம் பிடித்திருப்பாள்.ஆனால் அவளை அன்பாலேயே தங்கள் வழிக்கு கொண்டு வர அனைவரும் விழைந்தனர்.

கனியோ, இருகொள்ளி பாம்பாகத் தவித்தாள்.

ஒவ்வொருவரும் அவளிடம் வேறு..வேறு யுக்திகளை கையாண்டார்கள்.

நாட்கள் மெதுவாக நகர்ந்தது.அன்று ஞாயிறு விடுமுறை தினம்.அனைவரும் வீட்டில் தான் இருந்தார்கள்.

அருவியும், பவளமல்லியும் ஆண்களுக்கு காலை உணவை பறிமாறிக் கொண்டிருந்தார்கள். கனியும் அவர்களுடன் அமர்ந்து உண்டாள்.

நீலிமாவோ, இசையமுதை குளிக்கை வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, “அம்மா..” என்ற நீலிமாவின் அலறல் சத்தத்தில்அனைவரும்  பதறி அவர்கள் அறைக்குள்  ஓடினார்கள்.

அங்கு, நீலிமா குளியலறையில் கால் வழுக்கி கீழே விழுந்திருந்தாள். இசையமுது குளித்து முடித்து ஈரத்துடன் நின்றிருந்தாள்.

அருவியும், புகழ்வாணனும் ,அவளை கைதாங்கலாக அழைத்து வந்து படுக்கையில் அமரவைத்தனர்.

 கனி குழந்தையை  தூக்கிச் சென்று, அவள் ஈரத்தை துடைத்து உடை மாற்றி விட்டாள்.

 நீலிமாவோ ,வலியில் துடித்தாள்.பவளமல்லியோ, அவள் அருகில் சென்று காலில் அடிபட்டிருக்கிறதாஎன்று பரிசோதித்தார்.

அவளின் அடிபட்ட  கால்  வேகமாக வீங்க ஆரம்பித்தது.உடனே தாமதிக்காமல் மருத்துவம்னைக்கு அவளை அழைத்துச் சென்றனர்.

குழந்தையை கனியிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு புகழ்வாணன், பவளமல்லி, அருவி மூன்று பேரும் நீலிமாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

திருமறவனும்,நிலவனும் வீட்டிலேயே இருந்து கொண்டார்கள்.

நீலிமாவை பரிசோதித்த  மருத்துவர் .”காலில் லேசாக ஏர் கிரேக் இருக்கிறது . குறைந்தது பதினைந்து நாளாவது மாவுக் கட்டு போடனும், நடக்க கூடாது ..”என்று கூறி மாவுக் கட்டு போட்டு அனுப்பினார்.

 அந்த பதினைந்து நாளும் அருவி தான் நீலிமாவை கவனித்துக் கொண்டாள்.

நிலவன் கூட அருவியை, “என்ன அண்ணியுடன் ராசியாகிவிட்டாயா?”என்று கேலி செய்தவனிடம்..

உங்கள் அண்ணியுடன் எனக்கு என்ன வஞ்சம்.நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன்.அவர்கள் தான் என்னை வெறுப்பார்கள் நான் அப்படியில்லை..”என்றவள் தொடர்ந்து.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண                                              நன்னயம் செய்து விடல்.

 என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப நான் நல்லது செய்கிறேன்.என்றவளிடம்.

எல்லாருக்கும்  நல்லது செய் .என்னை மட்டும் டீலில் விட்டு விடு..”

உங்களை எந்த டீலில் விட்டேன்..”

ம்ஹூம்! நிச்சயமாக சொல்ல வேண்டுமா?” என்றபடியே அவளின் அருகில் நெருங்கி நின்றான்.

அவளோ, “நீங்கள் ஓன்றும் சொல்ல வேண்டாம். நான் போகிறேன்..” என்று நகர்ந்தவளை, தடுத்து. தன் புறம் இழுத்து அணைத்தவன்.

மை டியர் தமிழழகி உனக்கு என்ன டீல்ன்னு தெரிந்து விட்டதா?”என்றவனிடம்.

எனக்கு எதுவும் தெரியாது,நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை .ஆளை விடுங்க சாமி..”என்றவள். அவனிடமிருந்து விலகி  ஓடினாள்.

நிலவனோ, “போ..போ எத்தனை நாள் ஓடுவாய் என்று நானும் பார்க்கிறேன்..” என்று  சத்தமாக சொன்னான்.

அருவியோ,  அவனின் மிரட்டலை ரசித்தபடியே, தனக்குள் சிரித்துக்  கொண்டே நீலிமாவிடம் சென்றாள்.

நீலிமாவோ,அருவியின் அன்பிலும், கவனிப்பிலும் வியந்தாள்.

நாம் இந்த பெண்ணை எப்படி மனம் நோகப் பேசியிருக்கோம். ஆனால், அவள் அதையெல்லாம் சிறிதும்  மனதில் வைக்காமல், தன்னிடம் காட்டும் அன்பை கண்டு கலங்கினாள்.

  நீலிமாவிற்கு மாவுகட்டு போட்டு பதினைந்து நாளாகிருந்தால், மாவுக்கட்டை பிரித்து விட்டார்கள்.களிம்பு மட்டும் தடவச் சொல்லியிருந்தார்கள்.

 அருவியோ, களிம்பு தடவுவதற்காக அவள் அருகில் சென்று அமர்ந்து, நீலிமாவின் கால்களில் களிம்பை மென்மையாக தடவினாள்.

நீலிமாவோ ,அவளையே கண்களில் நீர் வடிய பார்த்துக் கொண்டிருந்தாள்.

அருவியோ, வெகு சிரத்தையாக, களிம்பு தடவிக் கொண்டிருந்தவளின் கைகளில், நீலிமாவின் கண்ணீர் துளிகள் விழுந்து தெரித்தது.

அருவியோ, அதில் அதிர்ந்து நிமிர்ந்தவள்.நீலிமாவின் கண்களில் கண்ணீரைக் கண்டு பதறிப் போய், “அக்கா ஏன் அழுகிறீர்கள்! கால் வலிக்குதா?” என்றவளிடம்.

நீலிமாவோ, அவளின் கைகளைப்  பற்றி தன் கண்களில் ஒற்றிக்   கொண்டு, “அருவி என்னை மன்னித்து விடு..” என்றவளை  அருவியோ  புரியாமல் பார்த்தாள்.

நீலிமாவோ,  “நான் உன்னை எந்தளவு மனம் நோகப் பேசியிருக்கிறேன்.உன்னை மட்டுமல்ல அத்தை, கனி எல்லோரிடமும் நான் அப்படித் தான் நடந்திருக்கிறேன். ஆனால் ,நீங்கள் அதையெல்லாம்  மனதில் வைக்காமல், என்னிடம் அன்பாக இருக்கிறீர்கள்.என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருக்கிறது..” என்று தேம்பியவளை.

அருவியோ, “அக்கா நடந்ததை மறந்துவிடுங்கள்.இனி நடப்பதை நினைப்போம்.. எனக்கும் உறவென்று இருப்பது நீங்க எல்லோரும் தான்..”என்றவள்  தொடர்ந்து.

வாழ்க்கை ரொம்ப குறுகியது .முடிந்தவரை அதை அழகாக வாழ்ந்து பார்த்திடனும்.பலிஉணர்ச்சியையும்,வெறுப்பையும் வளர்த்துக் கொண்டால், நம் நிம்மதியைத் தான் இழப்போம்..”என்றாள்.

நீலிமாவின் மனதிலோ, அருவியின் மீது மதிப்பும், அன்பும் கூடியது.   அருவியின்  தெளிவு  அவளை  வியக்க வைத்தது.

 பவளமல்லியோ, நீலிமாவிற்கு பழரசம் எடுத்துவந்தவர், இருவரும் பேசியதைக் கேட்டு மனதிற்குள் நிம்மதியடைந்தார்.

பெரிய மருமகளின் மாற்றம். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.அருவியால் தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தது என்று நினைத்தார்.

 இந்த குடும்பத்தின் தூணாக அருவி இருக்கிறாள். என்று பெருமை பட்டவர். இருவருக்கும் பழரசத்தை கொடுத்துவிட்டு, நகர்ந்தவரின் கைகளை பற்றிய நீலிமா.

அத்தை என்னை மன்னித்துவிடுங்கள், உங்கள் மனம் நோக எத்தனையோ முறை பேசியிருக்கேன். ஆனால் இப்போது தான் நான் என் தவறை உணர்ந்தேன்..”என்றவளிடம்.

நீலும்மா உடம்பு முடியாத நேரத்தில் ஏன்? மனதைப் போட்டு குழப்பிக்கிறாய்..நடந்தவற்றை மறந்து விடு, இனி மகிழ்ச்சியாக இருப்போம்..”என்றவரிடம்.

அத்தை நீங்கள் என் குணம் தெரிந்து அனுசரித்துப் போனது உங்கள் பெருந்தன்மை.இனி நான் அது போல் நடந்து கொள்ள மாட்டேன்  தயவு செய்து என்னை வெறுத்துவிடாதீர்கள்..” என்று கலங்கியவளிடம்.

நீலும்மா நான் எப்படி உன்னை வெறுப்பேன்.எனக்கு கனியைப் போல் தான் நீங்கள் இருவரும்.கண்டதையும் போட்டுக் குழப்பிக்காமல் ஓய்வெடு..” என்று அன்போடு கூறிச் சென்றார்.

அருவியோ, “அக்கா நீங்க கொஞ்ச நேரம் அமைதியாக தூங்குகள். நான் அப்புறம் வருகிறேன்..” என்றபடி அறையை விட்டு வெளியில் சென்றாள்.

கனியோ, ஆச்சரியமாக நடப்பவைகளை பார்த்தாள்.பெரிய அண்ணியையே  அருவி மாற்றிவிட்டாளே என்று வியந்தாள்.  

கனிக்கு  அருவியுடன் பழைய படி பேசவேண்டும் போல் ஏக்கமாக இருந்தது.அருவி தன்னிடம் சரியாக பேசி நாள் கணக்காகிவிட்டதே!

அருவியிடம் தான் திருமணம் வேண்டாம் என்று சொன்னதிலிருந்தே, தன்னிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். என்று நினைத்தவளுக்கு, அழுகையும், கோபமும் பொங்கிக் கொண்டு வந்தது.

அருவி வேண்டுமென்றே தன்னை ஒதுக்குவதைப் போல் உணர்ந்தாள்.

ஒரு முடிவுடன், தன் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த இசையமுதுவை தூக்கிக்  கொண்டு, அருவியின் அறைக்குச் சென்றாள்.

அருவியோ, சட்டபுத்தகத்தை எடுத்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள்,செங்கனி வந்ததை கவனிக்கவில்லை..

செங்கனியோ, அருவி புத்தகத்தில் முழ்கியுள்ளதைக் கண்டவள்,மெல்ல ம்ஹூம்..” என்று தான் இருப்பதைக்  காட்டிக் கொண்டாள்.

அருவியோ, கனியின் சத்ததில் புத்தகதிலிருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

கனியோ, இசையமுதுவிடம் , இசைக்குட்டி உன் சித்தியிடம் என் மீது என்ன கோபம் ,ஏன் என்னிடம் சரியாக பேசுவதில்லை என்று கேளுடா..” என்றாள்.

அருவியோ, கனியின் நேரடித் தாக்குதலில் அதிர்ந்தாள்.

கனியோ,  இசையமுதுவிடம், “உன் சித்தியை பதில் சொல்லச் சொல்..” என்றபடி நின்றிருந்தாள்.

அருவியோ, தான் படித்த புத்தகத்தை மூடிவைத்து விட்டு, கனியின் அருகில் வந்து, அவள் கையிலிருந்த இசையமுதுவை தூக்கியவள்.

இசைம்மா எனக்கு உன் அத்தை மீது எந்த கோபமும் இல்லை.. உங்க அத்தை தான் நாங்க சொல்வதை கேட்பதில்லையே! அது தான் நம் பேச்சுக்கு மரியாதை இல்லாதவர்களிடம் எதுக்க பேசனும் என்று அமைதியாக இருந்தேன்..”என்றவுடன்..

கனியோ, கோபத்துடன் அருவியின் தோள்களைப் பற்றி, தன் புறம் திருப்பி ,”நான் அப்படி என்ன  மரியாதை இல்லாமல் நடந்து  கொண்டேன்.நீங்கள் கூட என் மனதை புரிந்து கொள்ளவில்லையே..” என்று தேம்பியவளை.

அருவியோ, இழுத்து அணைத்துக் கொண்டாள்.”கனி நான் உன்னை புரிந்து கொண்டதால் தான்.இன்பனைநீ திருமணம் புரிந்து கொள்ள சொன்னேன்.எனக்கும், இன்பனுக்கும், உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள்.உன்னைப் போல் ஒருத்தி இன்பனுக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தால், அவன் வாழ்க்கை நன்றாக இருக்குமே! என்று நினைத்தேன்..” என்றவளிடம்.

அண்ணி,   நான் திருமணம் செய்யும்  மனநிலையில் இல்லை..நான் இப்படியே இருந்து கொள்கிறேனே..” என்று தன் தோள்களில் சாய்ந்து அழுதவளின் தலையை மென்மையாக வருடியவள்.

உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டும்..நீ இப்படி தனிமரமா நிற்பது, எங்க எல்லோருக்கும்  வேதனையாக இருக்கிறது..” என்றவளிடம்.

அண்ணி என் மனம் மரத்துப் போய்விட்டது.என்னை இப்படியே விட்டுவிடுங்கள்..”என்று கலங்கியவளிடம்.

கனி உனக்காக இல்லையென்றாலும், மாமா , அத்தையை நினைத்துப் பார். வயதான காலத்தில் மகளின் நிலை அவர்கள் மனதில் எத்தனை வேதனையை கொடுக்கும்..”என்றவளிடம் பதில் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.

கனிஅவர்கள் அத்தனை துயரத்தையும்! மனதில் அடக்கிக் கொண்டு  இருக்கிறார்கள். உனக்காக இல்லாவிட்டாலும் அவர்களுக்காக நீ உன் மனதை மாற்றிக் கொள்ளக் கூடாதா?”என்றவளிடம்.

அண்ணி ஒரு பெண் இரண்டாம் கல்யாணம் செய்தால், இந்த ஊரூம் ,சமூகமும் அவளை எப்படி பேசும் தெரியுமா?..”

கனி, மற்றவர்கள் என்ன பேசுவார்களோ? என்று பயந்து.. பயந்து. வாழ்ந்தால், வாழவே முடியாது. உன் கஷ்டத்தை உன்னை பேசுபவர்களா தாங்கப் போகிறார்கள்..” என்றவளிடம் பதிலே சொல்லாமல் மெளனமாகவே நின்றாள் கனி.

 அருவியோ, “கனி  இது நம் வாழ்க்கை , நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.ஆண் மட்டும் இரண்டாம் திருமணம் புரிந்தால் ஏற்றுக் கொள்ளும் இந்த சமூகம். பெண்களை ஏற்றுக் கொள்ளாமல், பேசுவது வேதனைப்பட வேண்டிய விசயம் தான்..”என்றவள் தொடர்ந்து.

பெண்ணுக்கும் ஒரு மனமிருக்கிறது. அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கிறது. என்று யாரும் புரிந்து கொள்வதில்லை. காலம்..காலமாக  பெண்ணுக்கு இரண்டாம் திருமணம் தவறானது என்ற எண்ணத்தை நம் மனதில் விதைத்து விட்டார்கள்..” என்று பெருமூச்சு விட்டவள்.தொடர்ந்து.

கனி காலம் மாறிவருகிறது. சில மாற்றங்களை நம்மில் இருந்தே தொடங்கலாம்.ஆண், பெண் இருபாலருக்குமே  துணை என்பது அவசியம்.அது உடல் ரீதியாக இல்லை என்றாலும், மன ரீதியாக வேண்டும்..” என்றவள் தொடர்ந்து.

நமக்கென்று ஒரு குடும்பம் வேண்டும்.  நம் கஷ்டத்தின் போது தோள் சாய நமக்குன்னு ஒரு துணை வேண்டும்.நம் கலாச்சரமே குடும்ப உறவைப் பின்னித் தான் இருக்கிறது. உனக்கு  சின்ன வயது. இன்னும் காலமிருக்கிறது. நீ வாழவேண்டிய  பெண்.உனக்கு மனம் விட்டு பேசவாவது ஒரு துணை அவசியம்..”என்றாள்.

கனியோ சிலையாக நின்றாள்.

கனி பெற்றவர்களுக்கு தங்கள் குழந்தைகள் துணையுடன்  மகிழ்ச்சியாக வாழ்வது தான் வயதான காலத்தில் நிம்மதியைத் தரும்.அந்த நிம்மதியை அத்தை, மாமாவுக்கு நீ கொடு ..”என்றாள்.

கனியோ, “அண்ணி எனக்கு  யோசிக்க டைம் கொடுங்கள். எனக்கு குழப்பமாக இருக்கிறது..” என்றவளிடம்.

கண்டிப்பாக உனக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள். ஒரு நல்ல முடிவைச் சொல்.இன்பனும் உனக்காகவே காத்திருக்கிறான்..” என்றவளிடம்.

ம்ம்..” என்றவள்.நீங்கள் பழையபடி என்னுடன் பேசவேண்டும்.உங்களால் தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக என் கவலைகளை மறந்தேன்..” என்று கண்களில் நீருடன்  குழந்தை தனமாக பேசியவளிடம்.

கனி என்ன இது?உன்னிடம் பேசாமல் நான் யாருடன் பேசப் போகிறேன் . அதுவும் நீ என் வருங்கால அண்ணி . உன்னை ஐஸ் வைத்தால் தானே எனக்கு பிறந்த வீட்டு சீர் கிடைக்கும் ..” என்று கேலி பேசியவளிடம்.

போங்க அண்ணி..”  என்றாள்முகம் சிவக்க. இருவர் கண்களிலுமே  ஆன்ந்தகண்ணீர் தேங்கியது.

இசை குட்டிக்கு என்ன புரிந்ததோ, தன் பிஞ்சுக் கரங்களால் இருவரின் கண்ணீரை மென்மையாக துடைத்துவிட்டது.

இருவரும் அவளை ஆசையுடன் அணைத்து,அவளின் பஞ்சு போன்ற கன்னத்தில் தங்கள் இதழ்களைப் பதித்தனர்.

தொடரும்..

அத்தியாயம் 34

அருவியோ, அன்று இரவு ,தங்கள் அறையில்தன் மடி மீது  தலைவைத்து படுத்திருந்த  கணவனிடம், கனியுடன் பேசியதை ஒன்று விடாமல் கணவனின் கேசத்தை வருடிய படியே ஒப்பித்தாள்.

நிலவனோ, மனைவி சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டே அவளை ஆச்சரியமாக பார்த்தவன்,”அருவி உன்னிடம் ஏதோ மேஜிக் இருக்கிறது. எல்லோரையும் மயக்கி விடுகிறாயே..” என்றவனிடம்.

ம்ம்!அந்த மேஜிக் பெயர் அன்பு. .எப்பேர்பட்டவங்களையும் சாய்க்க கூடிய ஆயுதம்..” என்றவளிடம்.

அது என்னமோ உண்மை தான்! அண்ணியையே சாய்த்துவிட்டாயே..” என்றவனிடம்.

உண்மையான அன்பு என்றும் தோற்றுப் போகாது. நம் நேர்மறை எண்ணங்களும், சிந்தனைகளும் நல்லதை தான் நடகக் வைக்கும் ..”என்றாள்.

அவனோ, தன் மனையாளை  பிரமிப்பாக பார்த்தான்.

பணத்திலேயே பிறந்து வளர்ந்தவள்,ஆனால் ஒரு துளி கூட திமிரோ, கர்வமோ இல்லை. மற்றவர்கள் மனம் நோகமால் நடப்பதிலும் சரி, பேசுவதிலும் சரி இவளுக்கு நிகர் இவள் தான் என்று நினைத்தவன்.

அருவி எனக்கு உன்னைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது..” என்றவனிடம்.

எல்லாம் என் அப்பாவிடமிருந்து வந்த குணம், அம்மாவையும் , அப்பாவையும் பார்த்து வளர்ந்தால், நானும் அப்படியே மாறிவிட்டேன்.அவர்களின் மனஒற்றுமை என்னை பிரமிக்க வைக்கும்..” என்றவளுக்கு  பெற்றவர்களின் நினைவு கண்களில் கண்ணீரை தேங்க வைத்தது.

நிலவனோ, அவளின் கண்ணீரை கண்டவுடன், அவள்  வருத்தத்தை  உணர்ந்து, “அருவி அத்தை,மாமா நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று நினை..” என்றவன். அவள் கண்களின் மீது தன் இதழ்களை மென்மையாக பதித்தான்.

அருவியோ, கணவனின்  மென்மையான செயலால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

நிலவனோ, “அருவி பெற்றவர்கள்  எப்போதுமே குழந்தைகளுக்கு,நல்ல வழிகாட்டியாகவும், எடுத்துக்காட்டாகவும் வாழ வேண்டுமென்று , நம் பெற்றோர்கள்  உணர்த்தியுள்ளார்கள்.நாமும் நம் குழந்தைகளுக்கு அதே போல் எடுத்துக் காட்டாக வாழவேண்டும் சரியா..” என்றவனிடம்.

ம்ம்..”என்று மட்டும் கூறியவளை, வம்பிழுக்கும் நோக்கத்துடன்.

ஆனால்அதற்கு  நீ தான் வாய்ப்பே தர மாட்டிங்கிறீயே ..”என்றவனை கோபமாக பார்த்தவள்.

அங்க சுத்தி, இங்க சுத்தி ,கடைசியில் இந்த பேச்சுக்குத் தான் வந்து நிற்பீங்கன்னு எனக்கு தெரியும்.இத்தனை பேசுகிறவர்.உங்கள் அருமை தங்கையை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டியது தானே..” என்றவளிடம்.

அதைத் தானே செய்துட்டு இருக்கேன்..” என்றவனை புரியாமல் பார்த்தவளிடம்.

அருவி  வார்த்தையால் சொல்வதை விட செயலால் அதை செய்ய வைக்க வேண்டும்.நான் கனியிடம் அதைத் தான் அன்பால் உணர்த்திக்  கொண்டிருக்கிறேன்..”என்றான்.

 அவளோ ,”எப்படி?” என்றாள்.

கனியின் மனதிற்கு தேவை இப்போது ஆறுதலும், அரவணைப்பும் தான்,அதை நாம் கொடுத்தால் அவள் தன் மனக் காயத்திலிருந்து எளிதாக வெளியில் வருவாள்.அப்பொழுது அவள் நல்ல விதமாக சிந்திப்பாள்.அவளுக்காக இல்லையென்றாலும் நம் மகிழ்ச்சிக்காகவது திருமணம் புரிந்து கொள்வதைப் பற்றி யோசிப்பாள் ..”என்றான்.

அருவியோ,” ! இப்படிக் கூட செய்யலாமா? பரவாயில்லை  என் புருசனுக்கு கூட இப்படியெல்லாம் யோசிக்க தெரிகிறதே..”என்று கேலி செய்தாள்.

அவனோ, “நீ தான் இன்னும் என்னை பற்றி தெரிந்து கொள்ளவே இல்லையே..” என்றவனிடம்.

அதெல்லாம்  எனக்கு நன்றாக தெரியும்..”என்றவள்.

அவனின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளியபடியே, “என் புருசன் செம அறிவாளி, கொஞ்சம் கோபக்காரர்ரொம்ப பாசமானவர், ரொமாண்டிக்  மன்னன், குணத்தில்  தங்கம், அப்புறம் என் கருப்பழகன் ..” என்று கொஞ்சியவள். அவனின் நெற்றியில் தன் தலையை செல்லமாக முட்டினாள்.

அவனோ,மனைவியின் நெருக்கத்திலும், பேச்சிலும் கிரங்கிப் போய் , அவளின் வயிற்றொடு தன் முகத்தை அழுத்தியவன், லவ் யூ டி  பொண்டாட்டி..” என்றான்.

நாட்கள் வாரங்களாக ஓடியது. இன்பன் இடையில் ஒரு முறை வந்தவன் ,கம்பெனி விசயமாக அருவியை சென்னைக்கு அழைத்துச் சென்றான்.

நிலவனுக்கோ, அருவி இல்லாத வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எப்படித் தான் அருவியில்லாமல் இந்த வீட்டில் இத்தனை வருடங்கள் இருந்தோமோ? என்று நினைத்தான்.

  தன் நண்பன் பரிதியை தேடிச் சென்று  புலம்பித் தள்ளினான்.

பரிதியோ, “டேய் நிலவா  இத்தனை நாள் என்னை பார்க்க வந்தாயா? என் தங்கச்சி ஊருக்கு போனால் தான் உனக்கு என் நினப்பே வருதா? “ என்றவனிடம்.

நிலவனோ, “டேய் அப்படியெல்லாம் இல்லைடா . வேலையே சரியாக இருந்தது.அதுதான் வரவில்லை..” என்றான்.

சரி.. சரி ஏன் சோர்வாக இருக்கிறாய்..” என்றவனிடம்.

வீட்டிற்கு சென்றால்,  அருவியின் நினைப்பாகவே இருக்கிறது..” என்று புலம்பியவனிடம்..

நிலவா பேசாமல் நீ சென்னைக்கு போய்ட்டு வாடா. என்னால் உன் புலம்பலை தாங்கமுடியலை..” என்றவனிடம்.

டேய்  உனக்கும் கல்யாணமனால் தான், என் நிலமை புரியும், முதலில் உனக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைக்கனும். அருவி வரட்டும். கனி கல்யாணம் முடிந்தவுடன் அடுத்தது உன்னோடது தான்..” என்றவனிடம்.

 பாரியோ,“ஏன் டா  உனக்கு இத்தனை கொலைவெறி . நான் நல்லா இருக்கிறது  உனக்கு பொறுக்கலையா?”என்றான்.

நிலவன் சிறிது நேரம் நண்பனிடம்கனியின் திருமணத்தைப் பற்றி பேசிவிட்டு வீட்டிற்கு வந்தான்.

அருவியில்லாத வெறுமையான அவர்களின்  அறை, அவனுக்கு  எரிச்சலைக் கொடுத்தது.

உடனே ஒரு முடிவுடன், ஒரு பையில்  தன் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு, அறையைவிட்டு வெளியில் வந்தான்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த ,தன் தாய், தந்தையிடம், சென்னை போவதாக சொல்லிவிட்டு கிளிம்பினான்.

தன் அண்ணன் , அண்ணியின் கேலி சிரிப்பைக், கண்டு கொள்ளாமல்  வேகமாக வெளியில் வந்தான்.

அருவிக்கோ, சென்னை வந்து ஒரு நாள் தான் முடிந்திருக்கிறது, என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.தான் பிறந்து வளர்ந்த வீட்டில் அவளால் இருக்கவும்  முடியவில்லை.

கணவனை அவள் மனம் தேடியது. அவளுக்கு எப்போது டா நல்லூர் போவோம் ,கணவனைப் பார்ப்போம் என்றிருந்தது.

இன்பனோ, அவளின் முகவாட்டத்தைப் பார்த்தே! புரிந்து கொண்டவன், “என் அம்முவுக்கு  தலைவனைப் பிரிந்ததால் பசலை நோய் வந்துவிட்டதா..”என்று கேலி செய்தவனிடம்.

போடா.. நானே அவரை  எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்ற வருத்த்திலிருந்தால், நீ கேலியா செய்கிறாய்..” என்று அடிக்க வந்தவளின் கைகளைப் பிடித்தவன்.

அம்மு, நீ கவலைப்படாதே, கண்டிப்பா நிலவன் உன்னைத் தேடி வந்துவிடுவார்..” என்றான்.

அவளோ, “போடா நான் தான் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் .அவரோ, தொல்லைவிட்டது. என்று தன்  செடி, கொடிகளுடன் டூயட் பாடிக் கொண்டிருப்பார்..” என்றாள்.

அப்போதுநான் டூயட் பாடும் ஆள்! இங்கே இருக்கும் போது! நான் யாருடன் பாடுவேன்..” என்ற குரலில் துள்ளிக் குதித்துக் கொண்டு திரும்பினாள்.

அங்கு ஒளிர்நிலவனைக் கண்டவள்,மகிழ்ச்சியில் தலைதெறிக்க ஓடியச் சென்று, அவனை ஆசையாக அணைத்துக் கொண்டாள்.

நிலவனோ,தன் கையிலிருந்த பையை கீழே போட்டு விட்டு,தன்னிடம் மானாக ஓடி வந்த மனைவியை மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான்.

அருவியோ, அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டே ..”ஏன்? நேத்தே வரவில்லை..” என்றவளிடம்.

நிலவனோ, “அவன்  கூப்பிட்டவுடன் என்னைக் கண்டு கொள்ளாமல் கிளம்பி வந்துவிட்டு, இப்போது ஏன்? வரவில்லை என்று குற்றப்பத்திரிக்கையா வாசிக்கிறாய்..” என்றான்.

அவளோ, மெல்ல தலையை நிமிர்த்தி கணவனைப் பார்த்தவள், “நான் உங்களிடம் கேட்டுவிட்டுத் தானே வந்தேன்..” என்றவளிடம்.

ஆமாம்..ஆமாம். நல்லா கேட்டாய்..” என்று சலித்துக் கொண்டான்.

இன்பனோ, சிறிதுநேரம் அவர்களுக்கு  தனிமை கொடுத்து தள்ளி நின்றவன்,அவர்களின் மோனநிலை கலையாததைக் கண்டு, மெல்ல அவர்களிடம் வந்தான்.

அவர்களோ , அவன் அருகில் வந்தததையும் அறியாமல், வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

இன்பனோ, தான்  அருகில் இருப்பதை தெரிவிக்க தன் குரலை செறுமினான்.

 இன்பனின் செறுமலையும் கண்டு கொள்ளாமல் நின்ற கணவன், மனைவியை கண்டு வியந்தபடியே.

போதும்..போதும். உங்கள் கொஞ்சலையெல்லாம் அறையில் வைத்துக் கொண்டால், என்னை மாதிரி சிங்கில்ஸ் எல்லாம் கொஞ்சம் பிழைத்து போவோம்..” என்றவுடன்.

அருவி முகம் சிவக்க கணவனிடமிருந்து விலகி நின்றாள்.

நிலவனோ, “பூஜை வேலை கரடி..” என்று முனங்கினான்.

இன்பனோ,”என்ன சொன்னாய்..” என்றவுடன்.

நிலவனோ, “ம்ம் உன்னைப் போல் நல்லவனே இல்லைன்னு சொன்னேன்..” என்றவனிடம்.

நண்பா இப்போதாவது என்னைப் பற்றி  புரிந்து கொண்டாயே..”என்றான்.

 அருவியோ,”போது,.. போதும். இருவரும் உங்கள் புகழ் பாடியது. ஒளிர் நீங்கள் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு, குளித்துட்டு வாங்க. நான் உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கிறேன்..” என்றவள்.

இன்பனிடம் திரும்பிஅவரை என் அறைக்கு அழைத்துச் செல்.நான் டிபன் வேலையைப் பார்க்கிறேன்..” என்றாள்.

 இன்பன், நிலவனை, “வாடா நண்பா..” என்று அருவியின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

 இன்பனுக்கும், நிலவனுக்கும் இடையே ஒரு அழகான தோழமை உணர்வு மலர்ந்திருந்தது.அது தான்  ஒருவரை ஒருவர் கேலி செய்யும்  அளவு நெருக்கமாக்கியது.

நிலவனோ, இன்பனின் தோள்களில் கைபோட்டுக் கொண்டே இன்பனுடன் சேர்ந்து நடந்தான்

அருவியோ, இருவரின் நெருக்கத்தை  கண்டு மகிழ்ந்தாள்.

நிலவன் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கியிருந்து, அருவியின் வேலையெல்லாம் முடிந்த பின்னர், அவளையும் அழைத்துக் கொண்டு தான் நல்லூர் வந்தான்.

 ஊருக்கு வந்தவுடனேயே இன்பன் , கனியின் திருமணவிசயத்தைப் பற்றி தன் தாய், தந்தையிடம் பேசியவன், தன் பெற்றோர்களிடம்  கனியிடம் திருமணத்தைப் பற்றி பேசச் சொன்னான்.

அவன் எதிர்பார்த்த படியே கனியின் மனதும் திருமணத்துக்கு தயாராகத் தான் இருந்தது.

  திருமறவன் மகளிடம் பக்குவமாக பேசி , மகளின் தயக்கத்தையும்பயத்தையும் போக்கி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார்.

எறும்பு ஊரா..ஊரா. கல்லும் தேயும், என்ற பழமொழிக்கு ஏற்ப.. குடும்பத்தின் கூட்டு முயற்சி அவளின் மனதை மாற்றியது.

இன்பனோ, கனி திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள் என்ற செய்தியைக் கேட்டவுடன், அவளைக் காண ஓடோடி வந்தான்.

கனியோ, அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் வெட்கத்தால் தவித்தாள்.

இன்பனோ, அவளின் நிலை புரிந்து,”கனி நான் உனக்கு முதலில் நல்ல நண்பன் . அதன் பின் தான் கணவன் என்ற உறவெல்லாம். அதனால், என்னிடம் எந்த தயக்கமும் வேண்டாம்..” என்றவன். அவளின் முகத்தை  தன் ஓற்றை விரல் கொண்டு நிமிர்த்தினான்.

கனியின் , கண்களில் கண்ணீரைப் பார்த்தவன்.

 “கனி என்னாச்சு.. ஏன் அழுகிறாய்! உனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லையா?” என்றவனிடம்.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. உங்களுக்கு நிஜமாக என்னைப் பிடித்திருக்கா? என் முகம் இப்படி இருப்பதில் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா?..” என்றவளிடம்.

கனி நான் அன்று சொன்னதைத் தான் இன்றும் சொல்வேன். எனக்கு உன் அகஅழகு தான் முக்கியம், புற அழகு இல்லை.. அதுவும்மில்லாமல் உனக்கு என்ன குறைச்சல் .செதுக்கி வைத்த சிற்பம் போல் அழகாக இருக்கிறாய்.. இன்று தான் கடைசி இனி இந்த சந்தேகம் உனக்கு என்றும் வரக்கூடாது..” என்றவன்.அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளின்  பிறை நெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்தான்.

 கனியோ, அவனின் செயலில் விக்கித்துப் போனாள்,அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.

இன்பனோ, அதைக் கண்டு , “கனி  என்னாச்சு.. ஆர் யூ ஓகே..” என்று பதறினான்.

அவளோ,பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

இன்பனோ, அவளின் பயத்தைக் கண்டு சிரித்தவன்,”இதற்கே இப்படியா..உன்னை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேனோ?”என்று குறும்புடன் கூறிச் சென்றான்.

கனி, இன்பனின் விருப்பப்படி திருமணம் எளிமையாக நடத்தலாம் என்று  பெரியவர்கள் நினைத்தனர்.

 அதன் படி மிக நெருங்கிய உறவுகளின் முன்னிலையில், இன்பன், செங்கனியின் திருமணம் கோவிலில் மிக எளிமையாக நடந்தது.

 திருமறவனும், பவளமல்லியும்  மகிழ்ச்சியுடன் இருவரையும் ஆசிர்வதித்தனர்..அவர்களின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது.

நிலவனோ, பட்டுச்சேலையில் வளையவந்த தன் மனைவியையே சுற்றிச் சுற்றி வந்தான்.

நீலிமாவோ, மூத்த மருமகளாக பொறுப்புடன் கல்யாண வேளையில் தன்னைப் புகுத்திக் கொண்டாள்.

புகழ்வாணனும், பட்டுப்பாவடையிலிருந்த தன்  மகளை தூக்கி வைத்துக் கொண்டு மனைவிக்கு உதவினான்.

பாரியோதன் உடன் பிறவா சகோதிரி கனியின்  திருமண வேலைகளை மகிழ்ச்சியுடன் இழுத்து போட்டு செய்தான்.

எல்லா  சடங்குகளும் முடிந்த பின் , வீட்டுக்கு வந்தவர்கள், சிறிது நேரம்  ஓய்வெடுத்தனர்.

நிலவனோ , அன்று முழுவதும் ஒரு மார்க்கமாகவே அழைந்து கொண்டிருந்தான்.

அருவியோ,நிலவனின் மாற்றத்தை மிரச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்றைய இரவின் தனிமையில் இன்பனும், கனியும்   கனியின் அறையில் தனித்து விடப்பட்டனர்.

இன்பனோ, கனியின் முகத்திலிருந்த தவிப்பையும்,பயத்தையும் கண்டு, அவள் அருகில் அமர்ந்து , அவளின் மென்கரத்தை பற்றி  மென்மையாக வருடிய படியே..

கனி எதற்கு உனக்கு இந்த தவிப்பும், பயமும். நான் உனக்கு என்றுமே முதலில் நல்ல நண்பன்.அதன் பிறகு தான் கணவன்.அதனால் உனக்கு என்னிடம் எந்த பயமும் வேண்டாம்..”என்றான்.

அவளோ, தலையை குனிந்த படி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

நிலவனோ, “கனி உன் தயக்கம் மாறும் வரை நான் காத்திருப்பேன்.அதனால், நீ நியாக இரு..” என்றவனை கண்களில் நன்றியுடன் பார்த்தாள் செங்கனி.

நிலவனோ, தங்கள் அறையில் அருவியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.

அருவியோ, கணவனின் நிலை தெரியாமல், தன் மாமியாருக்கு உதவி விட்டு, மெதுவாக தங்கள் அறைக்கு வந்தாள்.

நிலவனோ, அவள் வருவதைப் பார்த்துக் கொண்டே  அமைதியாக அமர்ந்திருந்தான்.

அருவிக்கோ, அவனின் அமைதி குழப்பத்தை ஏற்படுத்தியது. மெல்ல கணவனின் அருகில் சென்று அமர்ந்தவள்.

ஒளிர் தூங்கவில்லையா..”  என்றவுடன்.

ஆமாம்.. அது ஒன்று தான் எனக்கு குறைச்சல்..” என்றான்.

அவளோ, என்னாச்சு இவருக்கு என்று எண்ணியபடியே, அவனின் கைகளை  தொட்டவளை, சட்டென்று தட்டி விட்டவன்.

உனக்கு கொஞ்சமாவது என் நினைப்பு இருக்கா? மணி என்னவென்று பார். இத்தனை நேரம் என்ன செய்தாய். நீ வருவாய் என்று நான் இங்கு பைத்தியகாரனைப் போல்  தூங்காமல் உட்கார்ந்திருக்கிறேன்..” என்றான்.

அருவிக்கோ, அப்பொழுது தான் அவனின் கோபம் புரிந்தது..மாலையே அவளிடம் இன்று இரவு சீக்கிரம் வா.. நான் உன்னிடம் நிறைய பேசனும் என்று கூறியிருந்தான்.

அருவிதான் , தன் வேலை பளூவில்  மறந்திருந்தாள். தன் தவறை உணர்ந்து கணவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

ஒளிர் இன்று அதிக வேலை..அது தான் நானும், நீலிக்காகவும் அத்தைக்கு உதவிவிட்டு வருவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது..”என்றவளிடம்.

கொஞ்சம் தாமதம் இல்லை..மணியைப் பார் ஒன்றாகிவிட்டது..” என்றவனைப் பாவமாகப் பார்த்தாள்.

அவனோ,மெளனமாகவே இருந்தான்.

அருவியோ,அவனின் அருகில் நெருங்கி அமர்ந்து, அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டே,  “கல்யாணத்திற்கு வந்த உறவினர்களை நல்லபடியாக அனுப்பி வைத்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்த  நேரமாகிவிட்டது. சாரிப்பா..” என்றவுடன்.

அது தான் எத்தனை வேலையாட்கள் இருந்தார்களே! அப்புறம் என்ன..” என்றவனிடம்.

எத்தனை ஆட்கள் இருந்தாலும், சில வேலைகளை நாம் தானே செய்யனும்.ஆண்கள் உங்களுக்கு என்ன? உணவு உண்டு முடித்தால் வேலை முடிந்தது. பெண்களுக்கு அப்படியா?” என்றாள்.

அவனோ, “..”என்றவன்.”நான் எத்தனை ஆசையாக உனக்காக காத்திருந்தேன்..” என்றான்.

அவளோ, “அது தான் சாரி கேட்டுட்டேனே,இப்படியே சண்டை போட்டு, கிடைக்கிற நேரத்தையும் வீணடிக்கிறீர்களே..” என்றவுடன்.

ஓகே..ஓகே..”  என்றவன் .அவளை தன் அணைப்பில் வாகாக இறுத்திக் கொண்டு அவளின் தலைமேல் தன் தலையை வைத்து அமர்ந்தவன்,சிறிது நேரம் அமைதியாக அந்த நிலையை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான்.

அருவியோ, “ஒளிர் ஏதோ பேசனும் என்றீர்களே!”

ம்ம்.. அதை பற்றித் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..”

!”என்றவளிடம்.

அருவி நீ ஆசைப்பட்ட மாதிரியே இன்பன் , கனியின் திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டது..”என்றான்.

அவளோ,”ம்ம்..”  என்றாள்.

அடுத்து நம் வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன், நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்..”என்றான்.

அவளோ, “என்ன சொல்லனும்..” என்றவுடன்.

அருவி, நான்  திருமணத்திலேயே விருப்பமில்லாமல் தான் இருந்தேன்.ஏன் உன்னை திருமணம் புரியும் போது கூட, எனக்குள் எந்த எண்ணமும் இல்லை. .”என்றான்.

அவளோ, அவன் என்ன சொல்ல வருகிறான். என்று குழப்பத்துடனே, அவனைப் பார்த்துக்  கொண்டிருந்தாள்.

 அவனோ, தன்னையே விழிஎடுக்காமல் நிமிர்ந்து பார்த்தவளிடம், “அப்பாவின் வற்புறுத்தலில் தான் உன்னை மணந்தேன், அதனால் தான் உன்னிடம் விவகாரத்து கேட்டேன்..”என்றவனை சலனமே இல்லாமல் பார்த்தாள்.

அருவி   நீ இதை நம்பித்தான் ஆகனும்..”என்றவன்.

நீ எப்படி எனக்குள் வந்தாய் என்றே எனக்கு தெரியவில்லை,உன் குணம் என்னை உன்பால் ஈர்த்தது..”என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தவளிடம்.

என் மனதிற்குள் மெளனமாய்! கவிதையாய்! நுழைந்து கவிதையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்..”என்றவனை பிரமிப்பாக பார்த்தாலே தவிர, எதுவும் பேசவில்லை. அவன் மனதிலிருப்பதை சொல்லட்டும் என்று அமைதியாகவே இருந்தாள்.

அவனோ, மடை திறந்த வெல்லமாய் தன் மனதிலிருந்தை எல்லாம் தன் மனையாளிடம் கொட்டித் தீர்த்தான்.

அருவி நம் திருமணத்துக்கு முன் நான் இருந்த நிலை உனக்கு தெரியும். என்று நினைக்கிறேன். வாழ்க்கையின் மீது பிடிப்பே இல்லாமல் குற்றயுணர்வில் தவித்துக் கொண்டிருந்தேன்..”என்றவன் தொடர்ந்து.

என் வாழ்க்கையில்  வசந்தமாய் நீ நுழைந்த பின்னர் தான், வாழவேண்டுமென்ற எண்ணமே என் மனதில் துளிர்த்தது.ஒரு சொட்டு நீருக்கு ஏங்கி தவித்தவனுக்கு, நானிருக்கிறேன் என்று நீ அருவியாய் என் தாகத்தை தீர்க்க கவிதையாய் வந்தாய்..”என்றவன். அவளை தன் கைவளைவினுள்அழமாக புதைத்துக் கொண்டான்.

அவளோ, கணவனின் அன்பிலும், அணைப்பிலும் மகிச்சியுடன்  தன்னைத் தொலைத்தாள்.

நிலவனோ, சிறிது நேரம் அதே நிலையில் இருந்து விட்டு,  மெதுவாக அவளை விட்டு விலகி எழுந்தவன், தன் அலமாரியைத் திறந்துஅதிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து வந்தான்.

அருவியோ, அவனின் செயலையே மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிலவன் அவள் அருகில் வந்து, அவளின் கைகளைப் பிடித்து எழுப்பி நிறுத்தியவன்.

தன் கையிலிருந்த   பெட்டியை திறந்து அதிலிருந்துஒரு சங்கிலியை எடுத்து,அருவியின் கழுத்தில் அனுவித்தான்.

அருவியோ , பிரமிப்பாக அந்த சங்கிலியையே பார்த்தாள். அதில் இருந்த டாலர் .என்என்ற ஆங்கில எழுத்தில்  பின்னிப்பிணைந்து இருந்தது.

நிலவனோ, அந்த டாலரை கையில் எடுத்து பிடித்தவன்,அருவி, நிலவன், என்ற பெயரின் முதல் எழுத்தை  சேர்த்துச் செய்யச் சொல்லி வாங்கினேன், உனக்கு பிடித்து இருக்கிறதா..?என் சம்பாத்தியத்தில் வாங்கியது ..”என்றவுடன்.

அருவியோ,அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, “ரொம்ப பிடித்திருக்கிறது ஓளிர். எந்த  பெண்ணுக்கும் கணவன் முதல் முதலாக வாங்கித் தரும் பரிசு பிடிக்காமல் போகுமா?அதுவும் உங்கள் உழைப்பில்  கிடைத்த பரிசு..” என்றாள்.

அவனோ, அவளை இன்னும் தன்னுள் புதைத்துக் கொண்டவன், “அருவி  அன்று உன் கழுத்தில் நான்  விரும்பி மாங்கல்யத்தை  கட்டவில்லை..ஆனால் இன்று உன்னை என் உயிராக நேசித்து இதை அனுவித்தேன்..”என்றான்.

அருவியோ கணவனை மகிச்சியுடன்  பார்த்தவள், “ஒளிர் நான் உங்களுக்கு எந்த பரிசுமே வாங்கி வைக்கவில்லையே..” என்று வருந்தியவளிடம்.

நீயே எனக்கு பெரிய புதையல், இதில் தனியாக எதுக்கு டீ பரிசு..” என்றான்.

அவளோ, வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

இருவரும் அந்த மோன நிலையில், எத்தனை நேரம் இருந்தார்களோ !தெரியாது. எங்கேயோ கடிகாரம் நள்ளிரவு  இரண்டு   மணி  என்று , தான் இருப்பதைப் மணி அடித்துக் காட்டியது.

அந்த சத்தத்தில் நடப்புக்கு வந்த அருவியோ, “ஒளிர் தூக்கம் வருகிறது, தூங்கலமா..” என்றவுடன்.

என்னது தூக்கம் வருகிறதா? இன்னைக்கு நோ தூக்கம்.கொஞ்ச நேரத்திற்கு முன் பரிசு கொடுக்கலைன்னு வருத்தப்பட்டாயே! இப்பொழுது உன்னையே எனக்கு பரிசாகக் கொடு..” என்றான். குறும்பாக.

அவளோ, “ம்ம்..போங்கள்..” என்று சினுங்கியபடியே,“ஒளிர் இன்னும் கொஞ்ச நாள் நாம் ஒருவரை..ஒருவர் புரிந்து கொண்டபின் நம் வாழ்க்கையை தொடங்கலாமா?”என்றவளிடம்.

இதுவரை புரிந்து கொண்டதே போதும்..”என்றவன். அவளை அழகாக தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான்.

அருவியோ, முகம் சிவக்க முகத்தை மூடிக் கொண்டாள்.

அவனோ, அவளின் வெட்கத்தை ரசித்தபடியே, அவளின் கைகளை அகற்றி, அவளின் முகத்தை  தன் கைகளில் ஏந்தி..அருவி எனக்கு பரிசாக நீ வேண்டும். உனக்கு சம்மதமா?” என்றான்.

அவளோ, தன் சம்மதத்தை  சிறு கண் அசைவில்  சொன்னாள்.

அவனோ, மகிழ்ச்சியுடன் அவள் நெற்றியில்  தன் இதழ்களைப் பதித்தவன், அவள் முகமெங்கும் தன் முத்திரைகளை பதித்துக் கொண்டே  அவளுள் கரைந்து காணாமல் போனான்.

இருவரும்  தங்கள் காதலால்   இல்லறம் என்ற கவிதையை   மெளனமாக  எழுதினார்கள்.

அவர்களின் நெருக்கத்தை கண்டு நிலவுப் பெண்ணும் வெட்கப்பட்டு மேகத்திற்குள் ஒளிந்து கொண்டாள்.

தன் மனம் கவர்ந்தவளிடம் தனக்கு பிடித்த பரிசை களவாடினான் அந்த கள்வன்.

தொடரும்..

அத்தியாயம் 35

 அன்றைய விடியல் இருவருக்கும்  மிக அழகாக விடிந்தது.

செங்கதிரவனோ,வஞ்சகமே இல்லாம் தன் பொன் கதிர்களை அவர்கள் மீது வாரி வழங்கிக்   கொண்டிருந்தான்.

அருவியோ,கதிரவனின் புண்ணியத்தில் தன் துயில் கலைந்தவள், வெட்கத்துடன் கணவனின் பிடியிலிருந்து விலகி குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

நிலவனோ, அவள் குளித்து வரும் வரை  உறங்கிக் கொண்டிருந்தான். கணவன் தூங்கும் அழகை ரசித்துப் பார்த்தவள்,அவனிடம் அசைவை கண்டவுடன் ,  ஓரே ஓட்டமாக அறையை விட்டு ஓடினாள்.

 இன்பனும், கனியும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் .அவர்களிடம்  சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

பவளமல்லியோ,நிலவனை டிபன் சாப்பிட அழைத்து வரச் சொல்லவும், வேறு வழியில்லாமல் தங்கள் அறைக்கு தயங்கிய படியே சென்றாள்.

படுக்கையில் நிலவன் இல்லாததைக் கண்டவள், அவன் குளிக்கிறான் போல் என்று எண்ணினாள்.

அவன் குளித்து முடித்து வரட்டும் என்று நினைத்து,சாளரத்தின் அருகில் சென்று நின்று, வெளியில் வேடிக்கைப் பார்த்தாள்.

நிலவனோ, குளித்து முடித்து வெளியில் வந்தவன். மனைவி சாளரத்தின் அருகில் நிற்பதைக் கண்டுஅவள் அருகில் சென்று சத்தமில்லாமல் அவளை பின்னிருந்து அணைத்தான்.

கணவனின்  அணைப்பில் முதலில் திகைத்து, பின் வாகாக பொருந்திக் கொண்டவள்,“ஒளிர், அத்தை உங்களை சாப்பிட அழைத்து வரச் சொனார்கள். போகலாமா..” என்றாள்.

அவனோ, அவளின் தோளில் தன் முகத்தைப் பதித்து, அவளின் வாசத்தை தன் நுரையீரல் முழுவதும், நிரப்பிக் கொண்டே ,  “ம்ம்ம் எனக்கு பசியே இல்லை..”என்றான்.

அவளோ, “எனக்கு பசிக்கிறது சீக்கிரம் வாருங்கள்..” என்றவுடன்.

நீ  போ நான் வருகிறேன் ..”என்றவன். அவளின் கன்னத்தில் தன் இதழ்களை  அழுந்த பதித்த  பின்னரேஅவளை  விடுவித்தான்.

அதன் பிறகு அவர்களுக்கு நேரம் ரக்கைகட்டிக் கொண்டு பறந்தது.

நாட்கள் தெளிந்த நீரோடையாக நகர்ந்தது.இன்பனும்,செங்கனியும் ஒரு வழியாக சென்னை வாசியானார்கள். மாதம் ஒரு முறை மட்டும் நல்லூர்  வந்து சென்றனர்.

அருவியும், நிலவனும் நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் சென்னை சென்று  வந்தனர்.

பாரிக்கும் அவனுடைய அத்தை பெண்ணுடன் திருமணம் முடிந்தது .அவனும் குடும்பஸ்தன் ஆகிவிட்டான்.

திருமறவன் குடும்பத்தில்  மகிழ்ச்சி மட்டுமே சூழ்திருந்தது.அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது போல் அருவி கருவுற்றிருந்தாள்.

நிலவன் மட்டுமில்லாமல் குடும்பமே அவளை கையில் வைத்து தாங்கினார்கள்.

பிரசவ நேரம் நெருங்க..நெருங்க பெண்களுக்கே இயற்கையாக வரும் பயம் அருவியையும் ஆட்கொண்டது.

பவளமல்லிதான் தாயாக அவள் பயத்தை உணர்ந்து அவளுக்கு தைரியம் கொடுத்தார்.நீலிமாவும் அவளுக்கு ஆறுதலாக இருந்தாள்.

நிலவனோ, மனதிற்குள் அருவியை விட  பயந்திருந்தான்.தாயும், சேயும் நல்லபடியாக இருக்க வேண்டுமென்று எல்லாக் கடவுளையும்  வேண்டிக் கொண்டிருந்தான்.

இன்பனோ,அருவிக்கு விமர்ச்சியாக  வளைகாப்பு வைத்தாக வேண்டுமென்று ஆசைப்பட்டான்.

 இன்பன் தான் நினைத்தது போல, அனைவரின் சம்மதத்துடன் உடன்பிறந்தவன் கடமையாக! சீரும், சிறப்புமாக  அவளுக்கு வளைகாப்பு நடத்தினான்.

நிலவன் வளைகாப்பு முடிந்த பின்னர் அருவியை சென்னைக்கு அனுப்ப ஓத்துக் கொள்ளவில்லை. சென்னையில் எத்த்னை பெரிய மருத்துவமனை இருந்தாலும் பரவாயில்லை என்று மறுத்து விட்டான்.

இன்பனும், அவள் இங்கு இருப்பது  தான் நல்லது. பவளமல்லி பார்த்துக் கொள்வார் என்று நினைத்தான்.

எதிர்பார்த்த நாளில் அருவிக்கு பிரசவ வலி வந்தது. அவளை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அருவி வலியில்  துடிப்பதைக் கண்டு அவளை விட அதிகமாக நிலவன் துடித்தான்.

தாய், தந்தை, இருவரையும் அதிக நேரம் துடிக்க வைக்காமல், அவர்களின்  பெண்ணரசி  தன் அழுகையால் மருத்துவமனையையே அலற வைத்தாள்.

 நிலவனோ, தன் குழந்தையை கையில் வாங்கும் பொழுது உலகையே வென்றது போல் மகிழ்ந்தான்.அரை மயக்கதிலிருந்த தன் மனையாளின் நெற்றியில் இதழ் பதித்து தன் மகிழ்ச்சியை  பகிர்ந்து கொண்டான்.

திருமறவனும், பவளமல்லியும் தங்கள் பேத்தியின் அழகில் பூரித்து போனார்கள்.

இனபனும், கனியும் குழந்தையைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

அந்த மகிழ்ச்சியை  பெருக்குவது போல் கனியும் தாய்மை அடைந்திருந்தாள்.

நீலிமா அருவியையும்,குழந்தையையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.

குழந்தைக்கு மூன்று மாதம் ஆன பொழுது  நிலவனும், அருவியும்   தங்கள்  பெண்ணரசிக்குநேரிழைஎன்று பெயர் சூட்டினார்கள்.

நேரிழை நிறத்தில் தாயைக் கொண்டும், குணத்தில் தந்தையை  கொண்டும் பிறந்திருந்தாள்.

 நாட்கள் அழகாக நகர்ந்தது.கனிக்கும் ஒன்பதுமாதமான பிறகு வளைகாப்பு நடத்தினார்கள்.

 இன்பனும் கனியை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். பிரசவ நேரத்தில் இன்பன் கனியுடனே இருந்து கவனித்துக்  கொண்டான்.கனியும் அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள்.

இன்பனும், கனியும் தங்கள் குழந்தைக்கு நெறிச்சுடர்என்று பெயர் கூட்டினார்கள்.

இரண்டு மழலைகளும் தங்கள் குறும்பால் அந்த வீட்டையே இரண்டாக்கியது.

நாட்கள் அழகாக வருடங்களாக உருண்டோடியது.

ஒளிர்நிலவன் தான் ஆசைப்பட்டதைப் போல  விவசாயத்தில்  பெரும் சாதனையே புரிந்தான்.

ஹைட்ரோபோனிக்ஸ் முறையை செயல்படுத்தி வெற்றி கண்டவன்,அதை மற்ற சிறு விவசாய்களையும் செய்ய வைத்தான்.

 இந்த முறையில் நகரங்களிலும், எளிதாக தங்களுக்கு வேண்டிய கீரை வகைகளை தாங்களே ,உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்று செயல்படுத்திக் காட்டினான்.

இயற்கை உரங்களை  பயன் படுத்தி மண்வளத்தை காப்பதை பற்றிய கட்டுரைகளை அதிகம் எழுதி விவசாய்களிடம் விழிப்புணார்வை ஏற்படுத்தினான்.

அது மட்டுமின்றிவாரம் தோறும் கல்லூரிகளுக்கு சென்று  நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தான்.

இளைஞர்கள் மத்தியில் விவசாயத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்த தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டான்.

நல்லூர் கிராமே நிலவனின் முயற்சியால் விவசாயத்தில் செழித்தது.

அருவியோ, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வாதடினாள்.அது மட்டுமின்றி  பாமரமக்களுக்கும் புரியும் படி அரசியல் சட்டத்தை எளிமை படுத்தி பெண்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தன்னை புகுத்திக்  கொண்டாள்.

 கணவன்,மனைவி இருவரும் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு  நேரத்தை பொதுச் சேவையில் கழித்தனர்.

கனியோ, பொறுப்பான குடும்ப தலைவியாக தன்னை மாற்றிக் கொண்டாள்.தன் கணவன் குழந்தைகளை கவனிப்பது மட்டுமின்றி, கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் பள்ளியை  தொடங்கி அதையும் நடத்தி வந்தாள்.

இன்பனோ தொழிலைக் கவனிப்பதுடன், அருவியின் சொத்துக்களையும் நிர்வாகித்தான்.

நிலவனோ,அருவியின் சொத்துக்கள் மூலம்  வரும் வருமானத்தை அவளின் சம்மதத்துடன்   வணங்காமுடி பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து , படிக்க வசதியில்லாத ஏழை   குழந்தைகளை படிக்க வைத்தான்.

அந்த டிரஸ்டை  இன்பன் தான் நிர்வகித்து வந்தான்.

 எத்தனை வேலைப் பளூ இருந்தாலும்,இன்பன் தன் குடும்பத்துடன் பொங்கலுக்கு மட்டும் நல்லூர் வந்து விடுவான்..

திருமறவன் குடும்பமே பொங்கலை சிறப்பாக கொண்டாடுவார்கள்.தமிழர் திருநாள் என்பது மட்டுமின்றி,இயற்கைக்கு நன்றி சொல்லும் அந்த திருநாளை தவறவிடமாட்டார்கள்..

அந்த வருடமும் வழக்கம் போல் பொங்கலை கொண்டாட இன்பன் தன் குடும்பத்துடன் நல்லூர் வந்திருந்தான். இனபனின் மகன் நெறிச்சுடருக்கு ஐந்து வயதாகிருந்தது.

நிலவன் மகள் நேரிழைக்கோ, ஆறு வயதாகியிருந்தது. இருவரும் சேர்ந்தார்கள் என்றால்,  தங்கள் குறும்பால் அந்த வீட்டையே தலைகீழாக்கி விடுவார்கள்.

இசையமுதாவோ, இவர்கள் இருவரையும் மேய்க்க முடியாமல்  திணறுவாள்.

பொங்கலன்று அனைவரும் விடியகாலையே எழுந்து குளித்து தயாராகி புத்தாடை அணிந்து, தங்கள் வயலுக்கு சென்று பொங்கல் வைத்து இயற்கையை வணங்குவார்கள்.

அன்றும் அதே போல் கிளம்பி வயலுக்கு சென்றார்கள்.

பொங்கலன்று பாரியும்  தன் குடும்பத்துடன்  கலந்து கொள்வான்.பாரிக்கும் அன்பரசி என்ற பெண்குழந்தை இருக்கிறாள்.

திருமறவனும்,பவளமல்லியும் குழந்தைகளை பார்த்துக் கொண்டு ஓய்வாக  அமர்ந்திருந்தனர்.

 அருவி,கனி,நீலிமா மூவரும் பொங்கல் வைத்தார்கள்.ஆண்களோ  பேசிக் கொண்டே  வயல்வெளியில் நடந்தனர்.

பொங்கல் வைத்த பின்னர் சாமி கும்பிட தன் கணவனையும், குழந்தையையும் அருவி தேடினாள்.

  அவர்களோ,வயல்வெளியில்  நின்ற கோலத்தைக் கண்டு அதிர்ந்தாள்.

 நிலவனும்,நேரிழையும்  மட்டும் வயலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

இருவரின் உடை முழுவதும் சேறும் , சகதியுமாக இருந்தது.

அருவியோ,அதைக் கண்டு கோபத்துடன் அவர்கள் அருகில் சென்று, “ஒளிர் என்ன இது, சாமி கும்பிடும் நேரத்தில்  இருவரும் இந்த கோலத்தில்  நிற்கிறீர்கள்..” என்றவளிடம்..

மைடியர் தமிழ்ழகி!  விவசாயின் மகள் விவசாயம் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா? என் மகளும் விவசாயம் கற்றுக் கொள்ள வேண்டும் அது தான் பயிற்ச்சி கொடுத்தேன்..” என்றான்.

அவளோ,  கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்தாள்.

நிலவனோ, மனைவியை சமாதானப் படுத்தும் நோக்கத்துடன்,” மை டியர் தமிழழகி..தமிழுக்கு  ‘’  அழகு! அருவிக்கு கோபம் அழகு! விவசாயிக்கு சேறு அழகு! என்றவனின்  மனதை மயக்கும் வார்த்தைகளைக் கேட்டு தன் கோபத்தை மறந்தவள்.

உங்களை என்ன செய்யனும் தெரியுமா?ஆள் மயக்கி..” என்று கணவனை அன்பாக கடிந்து கொண்டாள்.

நேரிழையோ,”அப்பாநான் என்ன அழகு!” என்று மழலைக் குரலில் கேட்டாள்.

நிலவனோ,தன் மகளின்  கேள்வியில் மயங்கி மகளைத் தூக்கி முத்தமழை பொழிந்தவன்,  “ நீ என் உயிரின் அழகு டா ! “என்றான்.

அருவியோ, இருவரையும்  கிணற்று பம்பு செட்டுக்கு இழத்துச்  சென்று அவர்கள் கை, கால் கழுவ உதவினாள்.

நேரிழையின் பட்டுபாவடையிலிருந்த சேற்றை  மகளை வசைப்படிய படியே கழுவிவிட்டாள்.

நிலவனோ, அருவி  தன் மகளை  திட்டுவதைக் கண்டு  கோபத்துடன்,”அருவி குழந்தையை திட்டாதே! நான் தான் அழைத்துச் சென்றேன்..” என்றான் கோபமாக..

ஆமாம் மகளை  ஒரு வார்த்தைச் சொன்னால்  உங்களுக்கு பொறுக்காதே!..” என்று முகத்தை தூக்கியவளை, “சரி .. சரி விடு நம் சண்டையை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது சாமி கும்பிடலாம் வா..எல்லோரும் நமக்காக காத்திருக்கிறார்கள் பார்..” என்று மனைவியை சமாதானப் படித்தி அழைத்துச் சென்றான்.

இயற்கைக்கு நன்றி சொல்லி வணங்கிய பின் , அனைவருக்கும், நீலிமாவும்,அருவியும் பொங்கலைப் பறிமாறினார்கள். உண்டு முடித்த பின்னர் அருவி பாத்திரங்களை கழுவிச் சுத்தம் செய்ய கிணற்றடிக்கு எடுத்துச் சென்றாள்.

நிலவனின் கண்கள் அருவியையே  சுற்றி ..சுற்றி வட்டமடித்தது.அவனால் மனைவியை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை.

 

இன்று வழக்கத்தை விட அவன் மனைவி அழுகாக  இருந்தாள் .

 

நிலவனோ,கிணற்றடியிலிருந்த  பம்புசெட்டில் 

பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவளின் அருகில்தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு சென்று நின்றான்.

 

அவளோ,கணவனின் வருகையை உணராமல் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

 

நிலவனோ,மெல்ல அவள் காதருகில் குனிந்து‌,"வக்கீலம்மா இன்னைக்கு அநியாயத்திற்கு   ரொம்ப அழகாக இருக்கீங்க.." என்றவுடன்.

 

அருவியோ,கணவனின் குரலில் திகைத்து தடுமாறி விழப்போனவளை,சட்டென்று பிடித்து நிறுத்தியவன்,"ஹோய் ரிலேக்ஸ் நான் தான்.." என்றான்.

 

அருவியோ,ஆணழகனாக வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றவனை மனதில் எல்லையில்லா காதலுடன்  பார்த்தாள்.

 

அவனோ, மனைவியின் கண்களில் வழிந்த காதலை  ஆசையாக பார்த்தபடியே,"அருவி இந்த சேலையும், உன்

காதிலாடும் இந்த  ஜிமிக்கியும் ,மல்லிகப்பூ வாசமும் ஆளை மயக்குதடி .."  என்று கிரக்கமாக கூறியவன்,அவளின் ஜிமிக்கியை தன் விரல்களால் சுண்டிய படியே, "எனக்கு  இப்பவே

உன்னை கருப்பாக்கனும் போல் இருக்கே.." என்றான்..

 

அப்போது,"அம்மாவை கருப்பாக்கப் போறீங்களா ..?" என்று அருகில் கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட  இருவரும்திரும்பினார்கள் .

 

அங்கு இடுப்பில் கைவைத்த படி நேரிழை நின்று கொண்டிருந்தாள்.

 

 

நிலவனோ, மகளிடம் அம்மா காலையில் நாம் வயலில் விளையாடியதுக்கு திட்டினாள் தானே,அதற்கு தான் பனீஸ்மெண்டாக   அப்பா அம்மாவை கருப்பாக்க போறேன்னு சொன்னேன் ..”என்று மகளின் கேள்விக்கு வாய்யுக்கு வந்ததை உளரி வைத்தான்.

 

மகளோ, “அப்பாஅம்மா இன்னைக்கு அழகா இருக்காங்க. அதனால் இன்னைக்கு வேண்டாம்.நாளைக்கு வேனா கருப்பாக்கிடலாமா..” என்றாள்.

 

நிலவனோ, மகளின் பதிலை ரசித்தபடியே,” ஆமாண்டா தங்கம் நானும் அப்படித் தான் நினைத்தேன். நீங்க போய் பாட்டி தாத்தா கூட இருங்க. நான் அம்மா பாத்திரம் கழுவியவுடன், அம்மாவை கூட்டிட்டு வரேன்..” என்று சொல்லி மகளை அனுப்பி வைத்தான்.

 

குழந்தை சென்றதும், மனைவியிடம் நெருங்கி நின்றவன்,”தமிழழகி என்னைக் கொஞ்சம் சிவப்பாக்கே..” என்றான்.

 

 அருவியோ, “ஒளிர் என்னைக் கோபப்படுத்தாமல் சென்று விடுங்கள்..” என்றாள்.

 

அவனோ, தான் நினைத்ததை சாதித்த பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

 

அன்று முழுவதும் சிறியவர்கள் தங்கள் துணையுடனே   மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

 பெரியவர்களோ ! தங்கள் குழந்தைகளின் ஆனந்தமாக வாழ்வதைக் கண்டு  மகிழ்ந்தார்கள்.அவர்களுக்கு அதைவிட வேறு என்ன மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கிறது.

 

 திருமறவனோ, மனதிற்குள் இதையெல்லாம் பார்க்க தன் உயிர் நண்பன் இல்லையே என்று வருந்தினார்.

 

அன்று மாலையே இன்பன் ,அவசர வேலை இருப்பதாக சொல்லி, தன் குடும்பத்தை அழைத்துக்  கொண்டு சென்னை சென்றான்.

 

கனியோ, காரில் இன்பனின் அருகில்  தூங்கும் மகனை மடியில் வைத்துக் கொண்டு, கணவன் மீது கோபத்துடன் அமர்ந்திருந்தாள்.

 

அம்மா வீட்டிற்கு வந்தால், ஒரு நாள் கூட  கணவன் தன்னை  இருக்க விடுவதில்லை என்ற கவலையில் இருந்தாள்.

 

இன்பனோ, மனைவியை சமாதனப் படுத்த நினைத்து, “கனி  உண்மையாகவே அவசர வேலை. அது தான் அவசரமாக கிளம்ப வேண்டியதாகிவிட்டது..”  என்றான்.

 

கனியோ, “அப்படி என்றால் நீங்கள் மட்டும் போக வேண்டியது தானே..’ என்றாள்.

 

அவனோ, “ஏய் உன்னை விட்டு விட்டு, நான் எப்படி டீ இருப்பேன். நீயும், பையனும் இல்லாத வீட்டில் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது..” என்றான்.

அவளோ, “இப்படியே சொல்லிச் சொல்லி என்னை அம்மாவீட்டில் தங்கவே விடுவதில்லை..” என்று  முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

இன்பனோ, காரை ஓரமாக நிறுத்தி விட்டு, மனைவியின் முகத்தை பற்றி தன் புறம் திருப்பியவன், அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே, “கனி என்னால் உன்னை பிரிந்து ஒரு நாள் கூட இருக்க முடியாது.நீ கோபித்துக்  கொண்டாலும் அது தான் உண்மை..”என்றவன். அவளை விடுத்து சட்டென்று கோபமாக காரை ஸ்டார்ட் செய்தான்.

 

கனிக்கோ, இன்பனின் கோபம்  மனதை வருத்தியது.கணவனை சமாதனப் படுத்த நினைத்தவள், அவன் புறம் நகர்ந்து , அவனின் தோளில் சாய்ந்து கொண்டே சாரிங்க..” என்றாள்.

 

அவனோ, மனைவியின் நெருக்கத்தில் சட்டென்று தன் கோபத்தை விட்டவன் ,குறும்பாக, “சாரி கேட்டாவெல்லாம் பத்தாது.இங்கே  ஒன்று கொடு உன்னை மன்னித்து விடுகிறேன்..” என்று தன் இதழ்களை காட்டினான்.

 

அவளோ, கணவனின் குறும்பை ரசித்த படி, “வீட்டிற்கு போனதும் தருகிறேன்..” என்றவள் வெட்கத்துடன் அவன் தோள்களில் முகம் புதைத்தாள்.

 

இன்பனோ,மனைவியின்  பதிலில் மகிழ்ந்தவன், “இன்பா இன்று உன் காட்டில் மழைதான்..” என்று சத்தமாக கத்தியபடியே வண்டியை ஓட்டினான்.

 

அதே நேரம்  தங்கள் அறையில் நிலவன் தன் மகளை  நெஞ்சில் போட்டு தூங்க வைத்துக் கொண்டிருந்தான்.

 

அருவியோ,  வேலைகளை முடித்துவிட்டு  தங்கள் அறைக்கு வந்தாள்.

 

நிலவனோ,மனைவியின் ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்துவிட்டு, மகளை  தூக்கம் கலையாமல்  எடுத்து அருகில் படுக்க வைத்தான்.

 

அருவியோ, அறைக்கதைவை சாத்தி,விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் கணவன் அருகில்  வந்து  படுத்தாள்.

நிலவனோ,அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு, “அருவி  இன்று உன் முகம் ரொம்ப களைப்பாக  இருக்கிறது. ரொம்ப வேலையாடா..” என்றான்.

அருவியோ, “அப்படியெல்லாம் இல்லை ஒளிர்.இன்று காலையில்  நேரமாக  எழுந்ததால் கொஞ்சம் களைப்பாக இருக்கு ..”என்றாள்.

நிலவனோ,  “உன் களைப்பு  போக நான்  ஒரு மேஜிக்  செய்யட்டுமா..” என்றான் குறும்பாக.

அருவியோ, கணவனின் குறும்பை  புரிந்து கொண்டு, “நீங்கள் ஒரு மேஜிக்கும் செய்ய வேண்டாம் .என்னை தூங்க விட்டாலே போதும். நான்சரியாகி விடுவேன்..” என்றாள்.

அவனோ,” நீ சரியாகிவிடுவாய்.ஆனால் நான்  மேஜிக் செய்தால் தான் சரியாகுவேன்..”  என்றவன். மனைவியின் மதிமுகம் நோக்கி  குனிந்தான்.

 அருவியோ, தன் கணவனின் காதலில் மெழுகாக உருகி கரைந்தாள். இருவரும் ஒருவரின் அன்பில்  ஒருவர் கரைந்தனர்.

நிலவனோ, ஆனந்தமாக தனக்கு புதையலாக கிடைத்த தன் மனையாளையும், தன் மகளையும் தன் நெஞ்சில் சுமந்து கொண்டு நிம்மதியான உறக்கத்தை தழுவினான்.

இனி அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே வீசும்.

                                    சுபம்

This post was modified 2 weeks ago by Initha Mohankumar Tamizhini

ReplyQuoteInitha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 2 years ago
Posts: 40
16/10/2020 5:45 pm  

Hi Friends,

என்மெளனத்தின் கவிதையே! (31,32,33,34,35) இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன்.. இத்தனை நாள் காத்திருந்து பொறுமையாக படித்த உங்களின் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்..கதை பிடித்து இருக்கா என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள் என்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.. பல இக்கட்டான நிலையில் தான் இந்த கதையை எழுதினேன்.அதுவும் இறுதி அத்தியாயத்திற்கு இரண்டு நாட்கள் இடத்தை விட்டு நகராமல் எழுதினேன் ..தயவுசெய்து சைலெண்ட் ரீடர்ஸ்சும் படித்து விட்டு ஒரு வார்த்தை சொன்னால் எனக்கு அடுத்த கதை எழுத ஊக்கமாக இருக்கும்..
தொடர்ந்து உங்கள் ஆதர்வை தாருங்கள்..விரைவில் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.. வாசகர்கள் இல்லை என்றால் நான் இல்லை.. மறுபடியும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பேன்.
நன்றி
அன்புடன்..
இனிதா மோகன் தமிழினி..

 


NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
19/10/2020 8:49 am  

superb story sis na ipothan mulusa padichen sis.migavum arumai 😍 neraya message intha storyla solli irukiga.really nice 🤗 keep writing sis.waiting for ur nxt story 😎 


ReplyQuote
Page 3 / 4
Share: