Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

"தொடுக்காத பூச்சரமே!"கதைத் திரி  

Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 3 years ago
Posts: 46
Topic starter  

Hi friends,

என் அடுத்த கதையான
தொடுக்காத பூச்சரமே ! கதையிலிருந்து ஒரு சின்ன முன்னோட்டம்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..உங்கள் கருத்துக்களை கொண்டே கதையை எப்போது தொடங்குவது என்று தீர்மானிப்பேன்..

தொடுக்காத பூச்சரமே!

நாயகன்: உதியனம்பி
நாயகி : நிறையாழி

தொடுக்காத பூச்சரமே!

முன்னோட்டம்.

"அம்மா எப்படி உங்களுக்கு இப்படிச் செய்ய மனசு வந்தது..என்னால் இதை ஜீரணிக்கவே முடியலை.."என்ற மகளை சலனமே இல்லாமல் பார்த்தார் செந்தழை..

தாய் அமைதியாகவே இருப்பதைக் கண்டவளுக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.

தன் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கியபடியே,"அம்மா நான் எம்.பில் முடித்து இருக்கேன்.அவனோ, வெறும் பத்தாவது ..அப்படி இருக்க நான் எப்படிம்மா அவனை கல்யாணம் செய்து கொள்வது .."என்றாள்.

செந்தழையோ, "அவன்,இவன்னு பேசினே பல்லைத் தட்டிவிடுவேன்..கொஞ்சம் படித்தால் மட்டு மரியாதை தெரியாத உனக்கு ..?"என்றார் கோபமாக..

அவளோ,தாயின் கோபத்தை பொருட்படுத்தாமல், ஏம்மா இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க..நான் எந்த விதத்தில் எதில் குறைந்தேன்.அப்பா எப்படிம்மா இதற்கு சம்மதித்தார் .."என்று கலங்கியவாறு கூறிய மகளை நெஞ்சில் தவிப்புடன் பார்த்தார் செந்தழை..

எப்படி சொல்வார் உண்மையை..மகள் அதை தாங்குவாளா ? என்று மனதிற்குள் துடிதுடித்தவர்,தன் கோபத்தை முகமூடியாக போட்டுக் கொண்டு, மகளிடம் " நிறை நானும் அப்பாவும் முடிவெடுத்தது, எடுத்தது தான். அதில் மாற்றம் இல்லை..நாங்கள் எது செய்தாலும்அது உன் நன்மைக்குத் தான்னு நினை.."என்றார்.

மகளோ,"அம்மா எனக்கு அவனை சுத்தமாகப் பிடிக்கவே இல்லை..பேரைப் பார் பேரை உதியனம்பியாம் ..நம்பியார்ன்னு வெச்சிருக்கலாம்.."என்ற மகளை முறைத்தவாறே.

"பேருக்கு என்னடி குறைச்சல்,அழகான தமிழ் பெயர்..பெயரைப் போல் ஆளும் ராஜகுமாரன் தான்..குணத்திலும் தங்கம்.."என்ற தாயாரிடம்.

"ஆமாம் தங்கத்தை உருக்கி நீங்களே மாலையா போட்டுக்கோங்க.." என்ற மகளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் செந்தழை குழம்பி நின்றார்.

***********†**********************************

"ஏம்ப்பா இப்படி செய்தீர்கள்..என்னைப் பற்றி முழுதாக தெரிந்தும் அவர் வாழ்க்கையை ஏன் கெடுத்தீர்கள்.."என்ற மகளை மனதில் சொல்ல முடியாத வலியுடன் பார்த்தார்ஆழியரசு..

,"யாழீ ..நீ பேசாமல் இருக்க போறீயா? இல்லையா ?"என்ற கணவனை பொருட்படுத்தாமல் மீண்டும் தன் தந்தையிடம் "உங்கள் மகனாக இருந்தால் என்னைப் போல் ஒரு பெண்ணை மணமுடிப்பீர்களா?' என்றவளின் காது கொய்ங் என்றது.

ஒரு நொடி என்ன நடந்தது என்றே அவளுக்கு புரியவில்லை .. தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் கணவனா? தன்னை அடித்தது என்று திகைப்புடன் நினைத்தாள்.

பெற்றவர்கள் இருவரும் மாப்பிள்ளையின் கோபத்தில் உறைந்து போய் நின்றனர்.

அவளோ,தீயாக எரிந்த கன்னத்தை பற்றிய படியே அவளுடைய அருமை கணவனை நிமிர்ந்து பார்த்தாள்..

அவனோ ,கண்கள் சிவக்க ரூத்திரமூர்த்தியாக நின்றிருந்தவன்,"யாழீ இனி நீ ஒரு வார்த்தை மாமாவை பேசினால் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது. மாமாவை கேள்வி கேட்கும் அளவுக்கு நீ வளர்ந்து விட்டாயா? எனக்கு எல்லாமே தெரியும் டீ..தெரிந்து தான் உன்னை விரும்பி மணந்தேன் .."என்றான்..

அவளோ ,மனதிற்குள் இவனுக்கு எல்லமே தெரியுமா? தெரிந்தும்மா என்னை மணந்தான். இவன் என்ன மனிதன் ! என்ற பிரமிப்புடன் கணவனையே விழி எடுக்காதுப் பார்த்தாள்..

********************************************

This topic was modified 1 month ago by Initha Mohankumar Tamizhini

Quote
Subha Mathi
(@subhamathi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 107
 
Nice.. starting sis 😍😍... waiting for more episodes sis 👍👍

ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 3 years ago
Posts: 46
Topic starter  

Hi friends,
என் அடுத்த கதையான தொடுக்காத பூச்சரமே! தை திருநாளில் முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன்..அன்றிலிருந்து தொடர்ந்து கதை வரும்..அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது கதையிலிருந்து ஒரு குட்டி முன்னோட்டம் பதிந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகள் தான் எனக்கு மிகப் பெரிய ஊக்கம்.
அன்புடன் ❤️
இனிதா மோகன்

தொடுக்காத பூச்சரமே!

முன்னோட்டம் 2

"டேய் சங்கு பேசாம ஓடிடு.. இல்லைன்னா உனக்கு சங்குதிடுவேன்.." என்றவளிடம்.

"ஏக்கா எப்பபாரு சங்கு ..சங்குங்கிற ,என் பேரு சங்குமணி.மணின்னு கூப்பிடலாம் தானே.."

உன் இஷ்டத்திற்கு அப்படியெல்லாம் கூப்பிட முடியாது .உன் அண்ணனையே நான் நம்பியார்ன்னு தான் கூப்பிடுவேன் பெருசா சொல்ல வந்துட்டான்.."

"ம்ஹும் மத்தவங்ககிட்டத் தானே அப்படி சொல்றே.. எங்கே உனக்கு தைரியம் இருந்தா எங்க அண்ணகிட்ட நம்பியார்ன்னு சொல்லே பார்ப்போம்.."

"டேய் என்ன என்னால முடியாதுன்னு நினைக்கிறாயா? வரச்சொல் உங்கண்ணனே ..அந்த நம்பியாரை நான் சொல்றேனா? இல்லையான்னு பாரு.."

"அவரை நீ எப்படியோ ஆசையா கூப்பிட்டுக்கோ..ஆனா அண்ணே பாவம் கா .உனக்காக டெய்லியும் வேலை வெட்டி உட்டுப்புட்டு உன் பின்னாடி வருது.அது மனசை நோகடிக்காதே அக்கா.."

" டேய் நானா என் பின்னாடி வரச் சொன்னேன்.என் மானத்தை வாங்கவே உன் அண்ணே என் பின்னாடி வரான்..என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி எனக்கு அவமானமா இருக்கு.."

"என்ன செய்ய எனக்குந்தான் அவமானமா இருக்கு ,ஊர் உலகத்திலே வேறு பொண்ணா இல்லை .போயும் ..போய் உன் பின்னாடி சுத்துதேன்னு.."

"டேய் என்ன லொள்ளா..என்னை வெறுப்பேத்தாமே ..மரியாதையா நான் சொன்னதை உங்க லொண்ணகிட்ட சொல்லிடு புரியுதா?இல்லைன்னா உனக்கு சங்கு தான் ஞாபகம் வச்சுக்கோ.."

****************†*******************************

நிறையாழி கணவனை இன்னும் காணோமே என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனை நினைத்தாலே இப்போதெல்லாம் அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சி தான் பொங்கி வழிகிறது.

அவன் எண்ணங்களும்,செயல்களும், சிந்தனைகளும் அவனைப் போலவே எத்தனை அழகு..என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே..அவளின் எண்ணத்தின் நாயகன் வந்துவிட்டான்.

உழைத்த களைப்பு ‌அவன் உடைகளில் தெரிந்தாலும்,அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் ,எப்போதும் போல் இவளை பார்த்து மென் சிரிப்பொன்றை உதிர்த்தவன்,தன் வண்டியை ஸ்டேன்டு போட்டு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

அவனின் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொள்ள ,"என்னங்க இன்னைக்கு வழக்கத்தை விட லேட் .."புன்னகையுடன் கேட்டவளிடம்..

"ஆமாம் யாழி இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம் .."என்றான்.

"சரி நீங்க குளிச்சுட்டு வாங்க.. நான் டிபன் எடுத்து வைக்கிறேன்.." என்று திரும்பியவளை தடுத்து நிறுத்தியவன்,அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தான்.

அவளோ, அதை குழப்பத்துடன் வாங்கிக் கொண்டாள்.

அவனோ,"பிரித்துப் பார் .."என்றவன், அவள் பிரிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

யாழியோ, அந்த கவரை கை நடுங்க பிரித்து பார்த்தவள்,மகிழ்ச்சியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள்.அடுத்த நொடி "..உதி.." என்று அழைத்தபடி ,அவன் கழுத்தை கட்டிக் கொண்டு,அவன் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள்.

அவனோ,மனதிற்குள் சொல்ல முடியாத வலியுடன் மனைவியின் மகிழ்ச்சியை ரசித்தான்.

*********************************************
பொங்கலன்று முதல் அத்தியாத்துடன் சந்திப்போம் ஃப்ரெண்ட்ஸ்..முடிந்தால் இடையில் ஒரு குட்டி டீ தருகிறேன்..
எப்போதும் போல் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..மறவாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😘

ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 3 years ago
Posts: 46
Topic starter  

            தொடுக்காத பூச்சரமே!

                அத்தியாயம் 1

உயிர் வரை ஊடுருவிச் செல்லும் மார்கழி மாதக் குளிரில் ,தன் போர்வையை கழுத்து வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தன் நித்திரையை தொடர்ந்தாள் நிறையாழி..

தாய் செந்தழையோ, சமையலறையிலிருந்து, “நிறை காலேஜ்க்கு நேரமாகுது எழுந்துருடீ.. அடுத்த வீட்டுக்குப் போகப் போற பொண்ணுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?எல்லாம் உன் அப்பா கொடுக்கும் செல்லம் ..”என்று புலம்பிக் கொண்டிருந்த மனைவியிடம் மெதுவாக வந்து நின்றார் ஆடழரசு.

“செந்தி அவள் சரியான நேரத்திற்கு கிளம்பிக் கொள்வாள்,நீ ஏன் காலையிலேயே இப்படி டென்ஷனாகிறாய் .அவளை குறை கூறுவதே உன் வேலை.." என்று மனைவியை கடிந்து கொண்டவரிடம்.

"ஆமாம் அவளை ஏதாவது சொன்னால் உங்களுக்கு பொறுக்காதே! பெரியவளையும் பாருங்க.. மார்கழி மாசம் தொடங்கியதிலிருந்து நேரமாக எழுந்து அழகாக கோலம் போட்டு,குளித்து கோயிலுக்கும் போய்ட்டு வந்துட்டாள்.இவளானால் இன்னும் படுக்கையை விட்டே எழவில்லை.." என்று குற்றப் பத்திரிகை வாசித்த மனைவியிடம்.

"செந்தி அவரவருக்கென்று தேவை வரும் போது, நல்லபடியாக நடந்து கொள்வார்கள்.விடு.."என்ற கணவனை என்ன சொல்வதென்று தெரியாமல்..

"அப்பாவும்,பொண்ணும் என்னமோ செய்யுங்க.. கடைசியில் என் தலை தான் உருளும்.பெண்ணை வளர்த்து வச்சிருக்கும் லட்சணத்தைப் பார்ன்னு.எல்லாம் என் தலையெழுத்து.." என்று நொந்து கொண்டு பேசிய மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் அமைதியாக நின்றார்.

ஆடழரசு,செந்தழை தம்பதிகளுக்கு இரு மகள்கள்.பெரியவள் பனிநிலவு ..இளையவள் நிறையாழி..

ஆடழரசு மாவட்ட தலைமை நூலக்தில் நூலகராக பணியாற்றுகிறார்..வரும் வருமானத்தில் நிறைவான வாழ்க்கை வாழ்பவர். தாங்கள் குடியிருக்கும் வீட்டைக் தவிர அவருக்கு பெரிதாக சொத்து பத்தென்று ஒன்றும் இல்லை.

ஆனால் ,தன் பெண்களை தன்னால் முடிந்தளவு நன்றாக படிக்க வைத்திருந்தார்.. பனிநிலவு எம்.எஸி ஜுவாலஜி முடித்திருந்தாள். நிறையாழி எம்.ஏ.தமிழ் லிட்ரேச்சர் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

ஆடழரசுக்கு பணி ஓய்வு பெற இன்னும் சில வருடங்களே இருந்தது.தான் பணி ஓய்வு பெறும் முன் பனிநிலுவுக்காவது திருமணத்தை முடித்து விட வேண்டுமென நினைத்தவர்,பெரியவளுக்கு தீவிரமாக வரன் பார்க்க தொடங்கினார்.

ஆடழரசு எதிர்பார்த்தது போலவே ஒரு நல்ல வரன் அமைந்திருந்தது. மாப்பிள்ளை சேத்தன் ஒரு வெட்னரி டாக்டர். ஒரே பையன்.தோற்றத்திலும் குறை சொல்லும்படி எதுவும் இல்லை.

பொருளாதார ரீதியாக அவர்கள் இவர்களை விட சற்று அதிகம் தான்..ஆனாலும் அவர்கள் குடும்பத்துக்கு இவர்களை மிகவும் பிடித்து விட்டது.

அதுமட்டுமின்றி பனிநிலவுக்கும்,சேத்தனுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட்டதால்,இருகுடும்பமும் முழுமனதுடன் திருமணத்தை விரைவாக வைத்துக் கொள்ள முடிவு செய்து அந்த மாத கடைசியிலேயே ஒரு நல்ல முகூர்த்த நாளை முடிவு செய்தார்கள்.

இன்னும் பத்து நாளில் திருமணம்.திருமண வேலைகள் அவருக்கு தலைக்கு மேல் இருந்தது.

ஆனால், ஆடழரசை ஒரு வேலையும் செய்யவிடாமல், அவரின் தங்கை மகன் உதியனம்பி! அத்தனை வேலைகளையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான்.

உதயனம்பி ஆடழரசின் தங்கை தாழ்குழலியின் ஒரே மகன்.பத்தாவது வரை தான் படித்து இருக்கிறான். சின்னதாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறான்.

உதியனம்பியின் தந்தை செங்குன்றன்.நம்பியின் சிறுவயதிலேயே ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.தாய் தாழ்குழலியியும் அதிகம் படிக்கவில்லை.

ஆடழரசு தான், தன் குடும்பத்துடன் , தன் தங்கை குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறார்.

தாழ்குழலியோ அண்ணன் தந்து உதவினாலும்,அண்ணனை அதிகம் தொந்தரவு செய்யாமல் தனக்கு தெரிந்த தையல் தொழிலைக் கொண்டு அக்கம்,பக்கம் துணி தைத்துக் கொடுத்து,அதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பத்தை பார்த்துக் கொண்டார்.

உதியனம்பி நன்றாக படிக்கும் பையன் தான்.ஆனால் தாயின் நிலை புரிந்து,தன் படிப்பை விட்டுவிட்டு பத்தாவது முடித்தவுடன் இருசக்கர பழுதுபார்க்கும் கடைக்கு வேலைக்கு சென்றான்.

இரண்டு வருடம் கண்ணும்,கருத்துமாக தொழிலைக் கற்றுக் கொண்டு, தனக்கென சிறியதாக ஒரு கடையை ஆரம்பித்து தன்னைப் போலவே கஷ்டத்திலிருந்த சங்குமணியை உதவிக்கு வைத்துக் கொண்டு, கடையை சிறப்பாக நடத்தி வருகிறான்.

உதயனம்பி தன் மாமா ஆடழரசு தன்னை படிக்கவைப்பதாக வற்புறுத்தியும் கேட்காமல் படிப்பை பாதியிலேயே விட்டான்.

தாழ்குழலி தான் அதற்கு முக்கிய காரணம்.அவருக்கு இருதயம் பலவீனமாக இருக்கிறதென்று தெரிந்த பின்னர் , தான் படிக்க வேண்டுமென்ற ஆசையை கைவிட்டான்.

தாழ்குழலிக்கு வைத்தியத்திற்கே நிறைய செலவானது.மேலும்..மேலும்,தன் மாமாவை தொந்தரவு செய்ய வேண்டாமென்று நினைத்தான்.

தாயையும் துணி தைப்பதை விடுத்து ஓய்வெடுக் வைத்தான்.

ஆடழரசு உதயனம்பி எத்தனை மறுத்தாலும் தன்னால் முடிந்த உதவியை தன் தங்கை குடும்பத்துக்கு இன்று வரை செய்து கொண்டு தான் இருந்தார்.

தன் மகள்களை நன்றாக படிக்க வைத்துவிட்டோம்,ஆனால் தன் மருமகனை படிக்க வைக்க முடியவில்லையே! என்ற வருத்தம் அவர் மனதை நெருஞ்சி முள்ளாக இப்போதும் குத்திக் கொண்டே தான் இருக்கிறது.

ஆடழரசுக்கு தன் முகம் பார்த்தே! தன் கஷ்டங்களைப் புரிந்து நடக்கும் தன் தங்கை மகன் உதயனம்பி என்றால் உயிர்.

அதுவும் யாருக்குமே வரவே கூடாத கஷ்டத்தில், நிலைகுழைந்து தான் திக்கு தெரியாமல் தவித்த போது கடவுளாக! அவன் தான் யாருமே செய்ய தயங்கும் உதவியை செய்ய துணிந்தான்.

அவர் வேண்டாமென்று எத்தனையோ சொல்லியும்,அம்மாவும்,மகனும் பிடிவாதமாக தன்னையும்,மனைவி செந்தழையையும் சம்மதிக்கவும் வைத்தார்கள்.

உதயனம்பிக்கும் மாமவென்றால் உயிர்.அவருக்காக எதுவும் செய்வான்.தன் சிறுவயதிலேயே தந்தையை இழந்து நின்றவனுக்கு தந்தையாக,தோழனாக அவர் தான் இன்று வரை அவனை அணைத்துக் கொண்டார்.

மாமாமட்டுமின்றி சிறுவயதிலிருந்தே அவரின் செல்ல மகள் நிறையாழிதான் அவனின் உலகம்.ஆனால், அவளோ! இவனை சிறிதும் மதிக்க மாட்டாள்.

உதியனம்பி படிக்கவில்லை என்பதும்,அவனின் தொழிலுமே அவள் மனதில் இவனை இளக்காரமாக நினைக்க வைத்தது.

என்னதான் அத்தை மகனை மதிக்காவிட்டாலும்,தன் அத்தை தாழ்குழலி மீது நிறையாழி உயிராக இருந்தாள்.

சிறுவயதிலிருந்தே தன் குறும்புத்தனத்தை ரசிப்பதும்,தன் தாயின் கோவத்திலிருந்து தன்னை எப்போதும் காப்பது அத்தை என்பதாலோ!இல்லை தன் மீது எல்லையில்லா அன்பை பொழிவதாலோ! அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணமோ! எதுவென்றுஅவளுக்கே தெரியாது?

ஆனால், அத்தை மகனை வெறுத்தாலும்,அத்தை மீது அன்பாக இருந்தாள்.

தன் தந்தை சொன்னது போல், நிறையாழி சரியான நேரத்திற்கு தயாராகி வந்து நின்றவள்,தன் தாயிடம் "செந்தி டார்லிங் எதற்கு காலையிலேயே சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தாய்.." என்றாள்.

செந்தழையோ,மகளின் வார்த்தையில் கோபத்துடன் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு, மகள் புறம் திரும்பியவர்,மகளின் குறும்புப் பார்வையிலும்,கள்ளம் கபடமற்ற சிரிப்பிலும் தன்னை மறந்து நின்றார்.

மகளோ சிலையாக நின்ற தாயிடம் "அம்மா பசிக்குது டிபன் ரெடியா." என்றாள்.

மகளின் பசிக்குது என்ற வார்த்தையில் நடப்புக்கு வந்தவர்,தட்டில் இட்லியையும் சாம்பாரையும் ஊற்றிக் கொடுத்தார்.

நிறையோ தாயிடம் தட்டை வாங்கிக் கொண்டே‌," உன் இட்லிக்கும்,சாம்பாருக்கும் நான் அடிமை..இப்போது தான் புரிகிறது. அப்பா ஏன்? செந்தி..செந்தின்னு உன் பின்னே சுற்றுகிறான்னு.." என்று கூறிக் கொண்டே, சமையல் மேடை மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்த படி உண்ணத் தொடங்கினாள்.

செந்தழையோ ,"ஏண்டி டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுன்னு எத்தனை முறை சொன்னாலும், உன் மண்டையில் ஏறுதா? வாய்யை மட்டும் கேளு ஒரு ஊருக்கு நீளும்‌.." என்று மகளை கடிந்து கொண்டே தான் பாதியில் விட்ட வேலையைத் தொடர்ந்தார்.

நிறையோ தாய் கடிந்ததை பொருட்படுத்தாமல் இட்லியை வாயில் திணித்துக் கொண்டே,"செந்தி இங்கே உட்கார்ந்து சாப்பிட்டால் தான்.. உன்னை சைட் அடித்துட்டே சாப்பிட முடியும்.."என்று தன்னை முறைத்த தாயைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள்.

மகளின் செயலில் எப்போதும் போல் மயங்கிய செந்தழை "போக்ரி உன்னை திருத்த முடியுமா?" என்றார்.

அப்போது சமையலறைக்குள், தாயுடன் தங்கை வாய்யாடுவதை பார்த்து ரசித்தபடியே நுழைந்த பனிநிலவு, "ஏம்மா காலையிலேயே அவளிடம் வாக்குவாதம்! அவள் எப்போதும் அப்படித்தானே விடுங்கள் .."என்றவுடன்.

"வாங்க கல்யாணப் பெண்ணே! எல்லாம் உன்னால் தான்.. உன்னை யாரு நேரமா எழுந்து கோவிலுக்கு போகச் சொன்னது..கல்யாணப் பெண்ணா லட்சணமா கனவில் மாம்ஸ்சோட டூயட் பாடுவதை விட்டு என்னை திட்டு வாங்க வைப்பதே உன் வேலை.." என்ற தங்கையை செல்லமாக முறைத்தாள் பனிநிலவு.

செந்தழையோ ," நிறை அவளாவது பெண்பிள்ளையா! லட்சணமா இருக்கா..அவளைப் பார்த்து கத்துக்கோன்னு சொன்னா..நீ அவளை குறை சொல்கிறாயா?" என்ற தாயிடம்..

"எப்போதும் என்னையே குறை சொல்லுங்கள்..கடவுளே பேசாமல் நீ என்னை செவிடா படைத்திருக்கலாம்..இந்த பேச்சை எல்லாம் கேட்காமலே இருந்திருப்பேன்.." என்ற மகளை வெட்டவா?குத்தவா என்று பார்த்து வைத்தார் செந்தழை..

பனிநிலவோ தங்கையின் குறும்பு பேச்சில் வந்த சிரிப்பை அடக்கிய படி தாய்க்கு உதவியாக காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

அப்போது "அத்தை.." என்று ஹாலிருந்து சத்தம் கேட்கவும்.

"செந்தி போ..போ.. நம்பியார் வந்தாச்சு போல..உன் காபியை குடிக்காமல் அவனால் ஒரு நாள் கூட இருக்க முடியாது.." என்றவளிடம்..

செந்தழை கோபமாக.."நிறை நீ என்ன அட்டகாசம் செய்தாலும், நான் பொறுத்து கொள்வேன்,ஆனால் நம்பியை ஏதாவது சொன்னால் பல்லை தட்டிவிடுவேன் ஞாபகம் வைச்சுக்கோ..அந்த பையன் மட்டும் இல்லையென்றால் உன் அப்பா தான் திண்டாடுவார்..பனியின் திருமணவேலை அத்தனையும் ஒத்தை ஆளாக அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கான்.."என்ற தாயை முறைத்துக் கொண்டே..

"ஆமாம், அது தான் புருசனும்,பொண்டாட்டியும் அவனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்களே.." என்றவுடன்.

"நிறை என் கோபத்தை அதிகப்படுத்தாமல், வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டு விட்டு காலேஜ்க்கு போகும் வழியைப் பார்.." என்றார்.

நிறையோ, "வாயை மூடிக் கொண்டு எப்படி சாப்பிடுவதாம்.." என்றவுடன்.

"அத்தை எனக்கும் அதே சந்தேகம் தான்! வாயை மூடிக் கொண்டு எப்படி சாப்பிடுவது.பேசாமல் நீங்களே ஊட்டிவிட்டால் அவள் சாப்பிட மட்டும் வாயைத் திறப்பாள். வேறு பிரச்சினையே வராது.நீங்களும் அடிக்கடி டென்ஷன் ஆக வேண்டாம்..” என்று கூறிக் கொண்டே, சமையலறைக்குள் வந்த உதியனம்பி கண்குளிர நிறையாழி சமையல் மேடையில் அமர்ந்திருக்கும் அழகை ரசித்தான்.

அவளோ,அவனை கண்களாலேயே பஸ்பமாக்கிக் கொண்டிருந்தாள்.

செந்தழையோ,"வாப்பா நம்பி.." என்று வரவேற்றவர்,"அவள் உருப்படியாக செய்யும் வேலை அது ஒன்று தான்!நான் ஊட்டிவிட்டால் அப்புறம் அதையும் செய்ய மாட்டாள்."என்றவுடன்.

நிறையாழிக்கு அவன் முன் தன்னை செந்தழை பேசியது மேலும் கோபத்தை தூண்டவும், வேகமாக தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை அப்படியே பட்டென்று வைத்து விட்டு, சமையல் மேடையிலிருந்து கீழே குதித்தவள்," எனக்கு டிபனே வேண்டாம் போங்க .."என்று கையை கழுவிக் கொண்டு கோபமாக சமையலறையை விட்டு நகர்ந்தாள்.

உதியனம்பியோ,அவள் செல்வதை கை நீட்டி தடுத்த படியே,"நிறை நமக்கு என்ன கோபமிருந்தாலும் அதை சாப்பாட்டு மேலே காட்டக் கூடாது.இந்த உணவு கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா ?" என்றான்.

நிறையாழியோ,"எனக்கு தெரிந்தவரை போதும், நீங்கள் வந்த வேலையை பாருங்க..என் விசயத்தில் தலையிடாதீங்க.."என்றவுடன்.

செந்தழையோ,"நிறை உனக்கு மரியாதையாக பேசத் தெரியாதா?அவர் சொன்னதில் என்ன தப்பு.. ஒழுங்கா தம்பியிடம் மன்னிப்புக் கேள் .."என்று கோபமாக கத்தினார்.

உதியனம்பியோ,"அத்தை நீங்க ஏன் இவ்வளவு கோபப்படறீங்க,அவள் என்னிடம் தானே இப்படி பேச முடியும்.விடுங்கள்.." என்றான்.

அவளோ, அவனுக்கு மட்டும் கேட்கும் படி ,"படித்திருந்தால் தானே மேனர்ஸ் தெரியும்,பட்டிக்காடு.." என்று முனங்கிக் கொண்டே சென்றாள்.

அவளின் வார்த்தைகள் அவனைக் கூறு போட்டது..கண்களில் வலியுடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.

தொடரும்..

ReplyQuoteInitha Mohankumar Tamizhini

NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 138
 
nice ud sis waiting for ur nxt ud sis.and storyla varra all character names are super sis 😍 

ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 3 years ago
Posts: 46
Topic starter  

தொடுக்காத பூச்சரமே!

அத்தியாயம் 2

உதயனம்பி ஒரு நிமிடம் நிறையின் வார்த்தையால் வலியை உணர்ந்தாலும்,அடுத்த நொடி சரியாகி விட்டான்.அவளின் கோபம் கூட அவனுக்கு பிடித்தமான ஒன்று தான்.

நிறையாழியோ,அவனை மனதிற்குள் வசைப்பாடிக் கொண்டே, கல்லூரிக்குத் தயாராகி வேகமாக பஸ் ஸ்டாப் நோக்கி சென்றாள்.

நிறை சென்ற பின் உதயனம்பியோ, அமைதியாக அமர்ந்து செந்தழை தந்த காபியைக் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது பனிநிலவு அவன் அருகில் மெதுவாக வந்து நின்றவள்..

"நம்பி நிறை லஞ்சு பாக்ஸ்சை எடுக்காமல் போய்விட்டாள்..இன்னும் பஸ் ஏறியிருக்க மாட்டாள்.. நீங்க கொஞ்சம் கொடுக்க முடியுமா ?.."என்று கேட்டவளிடம்..

"கொடுங்க நான் கொடுத்து விடுகிறேன்.." என்று குடித்துக் கொண்டிருந்த காபி டம்ளரை, பாதி காபியுடன் செந்தழையிடம் கொடுத்து விட்டு, டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டு வேகமாக நகர்ந்தவனைப் பார்த்த பனிநிலவு, நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

பனி நிலவுக்கு எப்போதும் உதயனம்பியை பிடிக்கும்.. தங்கள் குடும்பத்து மேல் அவன் வைத்திருக்கும் பாசம் அவளை பிரமிக்கச் செய்யும்.

தங்கை அவனை என்ன பேசினாலும்,அதை பெரிதாக எத்துக் கொள்ளாமல், அவன் நடந்து கொள்வது அவளை வியக்கச்செய்தது.அதுவே அவளுக்கு அவன் மீது அன்பையும் வளர்த்தது.

செந்தழையோ,பாதி காபியை குடிக்காமல் தன்னிடம் டம்ளரை தந்து விட்டு ஓடும் உதயநம்பியை, "நம்பி மீதி காபியை குடித்து விட்டுப் போப்பா.பஸ் வர இன்னும் நேரமிருக்கிறது..அப்படியே பஸ் போனாலும்,ஒரு நாள் பட்டினி கிடந்தால் தான், அவளுக்கு பொறுப்பு வரும்.." என்றவரிடம்..

"அத்தை காலையிலும் என்னால் அவள் சரியாக சாப்பிடவில்லை,அவள் பசி தாங்க மாட்டாள் .! காபி எங்கே போகுது, நாளைக்கு கூட வந்து நான் குடித்துக் கொள்கிறேன்.." என்று கூறியபடி ஓடியவனை ,என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்த படி நின்றார் செந்தழை.

பனிநிலவோ,அச்சோ நம்பி காபியை குடித்து முடிக்கவில்லையா? அதற்குள் நாம் டிபன் பாக்ஸை கொடுத்து விட்டோமே! என்று வருந்தினாள்..

செந்தழையோ,"பனி உனக்கு நம்பியை பற்றி தெரியாதா?அவன் காபி குடிக்கும் வரை பொறுமையாக இருந்திருக்க கூடாதா?" என்று புலம்பினார்.

பனியோ,"சாரிம்மா நான் குடித்திருப்பாருன்னு நினைச்சேன்.." என்ற பெரிய மகளிடம்.

"சரி விடு. உன்னை சொல்லி என்ன செய்ய.." என்றபடி தான் விட்ட வேலையை தொடர்ந்தார்.

நூலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த ஆடலரசோ, வீட்டிற்கு வந்த மருமகன் தன்னைக் கூடப் பார்க்காமல்! எங்கு இப்படி தலை தெறிக்க ஓடறான் என்று நினைத்தபடி, செந்தழையிடம் சென்று கேட்டார்.

மனைவி சொன்னதை கேட்டதும், ஆடலரசுக்கு மகளின் மீது சிறு கோபம் வந்தது.'மனைவி சொல்வது போல் நிறைக்கு எப்போது தான் பொறுப்பு வருமோ?' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

உதியனம்பி வெகு வேகமாக தன் வண்டியில் பஸ் ஸ்டாப்பு நோக்கிச் சென்றான்.

நிறையழியோ,தன் தோழி பூவணியிடம் தன் மனக்குமறலை எல்லாம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏண்டி நிறை இன்று என்னை விட்டுட்டே வந்துட்டே ."என்ற பூவணியிடம்..

"சாரி டீ வணி, எல்லாம் அந்த நம்பியாரால் வந்தது.அவனால் இன்று அம்மாவிடம் நல்லா திட்டு வாங்கினேன்.அந்த டென்ஷனில் உன்னை மறந்துட்டே வந்துட்டேன் .." என்றாள்.

பூவணியின் வீடும் நிறை வீட்டிற்கு அருகில் தான்..இருவருமே சிறு வயதிலிருந்தே இணை பிரியா தோழிகள்.ஒன்றாகவே பள்ளி சென்றவர்கள்,கல்லூரியிலும் ஒரே பிரிவை எடுத்து படிக்கிறார்கள்.

"அப்படி என்ன டீ செய்தாங்க நம்பி அண்ணா! "

"ம்ஹூம்..என்னை டென்ஷனாக்கவே காலங்காத்தாலே வீட்டுக்கு வந்து உட்கார்ந்துக்கறான்.."

"ஏண்டீ அவர் வீட்டுக்கு வந்தா, நீ ஏன்? டென்ஷன் ஆகறே.."

"எனக்கு அவனைப் பார்த்தாலே, ஏனோ? மனதிற்குள் பயமா இருக்கு!"

"நிறை எதுக்குடி பயம். அவர் என்ன சிங்கமா?புலியா?"

"தெரியலை டீ.. ஆனால், என் மனசுக்குள்அவன் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் இருந்துட்டே இருக்கு.."என்றவளிடம்.

"நிறை அவரை நீ விரும்புறீயா?.."

"லூஸா டீ நீ ! நான் போய் அவனை விரும்புவேனா?அப்படியெல்லாம் இல்லை.. எதுக்கு கேட்கிறே..?"

"எனக்கு என்னமோ உன்னை அறியாமலே நீ அவரை விரும்புறயோன்னு தோனுது.அதனால் தான் அவரைப் பார்த்தாலே டென்ஷன் ஆகறே.."

"பைத்தியம் மாதிரி உளராதே.. நான் அவனை விரும்புற அளவுக்கு அப்படி என்ன டீ அவனிடம் இருக்கு.."

"ஏன் ?என்ன இல்லை..தங்கமான குணம்,எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்,பெரியவர்களை மதிக்கும் பண்பு, நேர்மை, கடினமான உழைப்பாளி. இது மட்டும் இல்லை பார்ப்போரை கவர்ந்திழுக்கும் தோற்றம் . இத்தனையும் இருக்கு.. இது போதாதா?" என்றவளிடம்..

"எத்தனை இருந்தாலும் படிப்பு இல்லையே?"

"ஓகே நீ சொல்வது போல் படிப்பு முக்கியம் தான்.ஆனால் அந்த படிப்பு எதற்கு?

"இது என்னடி கேள்வி.படிப்பு தான் நம் அறிவை,சிந்தனையை, செயலை, எண்ணத்தை விசாலமாக்கும்.."

"கரெக்ட்..ஆனால் நம்பி அண்ணாவிடம் இது எல்லாமே அதிகமாக இருக்கு.அது உனக்கே தெரியும்.அதை ஒத்துக்கத்தான் உனக்கு மனசில்லை.. உன் மனக்கண்ணை நன்றாக திறந்து பார்.. அது உனக்கே புரியும்.."என்றவளிடம்..

"சரி இருந்துட்டு போகட்டும்.அதற்கு என்ன?"

"நிறை, உனக்கு எங்கே அவரை நாம் விரும்பிடுவோமோன்னு மனதிற்குள் பயம்.அது தான் அவரை நீ அவாய்ட் செய்யறே.."என்ற பூவணியை முறைத்தபடி..

"இச்சே.. அதற்கெல்லாம் சான்ஸே இல்லை.. நீ உன் கற்பனையை கொஞ்சம் மூட்டை கட்டி வை.."என்றாள்.

"நிறை இந்த காலத்தில் நம்பியண்ணா மாதிரி ஒரு நல்லவரை பார்ப்பதே கஷ்டம். எனறவளிடம்..

"அந்த நம்பியார் உலகமகா நல்லவராகவே இருந்துட்டு போகட்டும், அதற்கு இப்ப என்ன செய்யனும்கிற .."

"உன்னை ஒன்றும் செய்ய சொல்லலை ..அட்லீஸ்டு அவரை அவன்,இவன்னு பேசறதையாவது நிறுத்து .அவர் உன்னை விடப் பெரியவர்..ஆளுக்குத் தான் மரியாதை கொடுக்கலை..வயசுக்காவது மரியாதை கொடு ப்ளீஸ்.." என்றவளிடம்..

"வணி இன்னைக்கு உனக்கு என்னடீ ஆச்சு.. நீயும் என்னை படுத்தறே.."

"எனக்கு ஒன்னும் ஆகலை..அவர் மேல் உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ நார்மலா இரு அது போதும்.."என்றவளிடம்.

"சரி.சரி.. விடுடீ அவன் பேச்சே நமக்கு வேண்டாம்.." என்ற நிறையிடம்.

" நீ அவன்னு சொல்றதை மட்டும் நிறுத்தமாட்டே. அப்படித் தானே.."என்று சலித்துக் கொள்ளத் தான் அவளால் முடிந்தது.

பூவணியோ, நிறை எப்படியாவது நம்பியை புரிந்து கொண்டால் போதுமென்று தான் நினைத்தாள். அவளுக்கு, நம்பியை நிறையாழி மணந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும் மனதிற்குள் இருந்தது.

சிறுவயதிலிருந்தே உதயனம்பியை பூவணிக்கு தெரியும்.அவன் நிறை மேல் வைத்திருக்கும் பாசமும், நிறை என்ன சொன்னாலும் பொறுத்து போகும் அவனின் குணமும், நம்பி மீது அவளுக்கு மிகுந்த அன்பை உண்டாக்கியது.

அவள் மனதிற்குள் ,தனக்கு இப்படியொரு அண்ணன் இல்லையே, என்று எத்தனையோ நாள் ஏங்கியிருக்கிறாள்.

பூவணி தன் மனதிற்குள் இருவரைப் பற்றியும் யோசித்துக் கொண்டே சாலையை பார்த்தவள்,சிறு வியப்புடன் "நிறை அங்கே பாரு.." என்று சாலையின் எதிர்திசையை காட்டினாள்.

நிறையோ,பூவணி காட்டிய திசையை ஆர்வமாக பார்த்தாள்.அங்கே உதயனம்பி தன் பைக்கை ஸ்டேண்டு போட்டு நிறுத்திக் கொண்டிருந்தான்.

நிறையோ,'இவன் இங்கு என்ன செய்கிறான்..' என்று மனதிற்குள் நினைத்தாள்.

உதயனம்பியோ, வண்டியை நிறுத்தி விட்டு சாலையை கடந்து நேராக நிறையாழியிடம் வந்தவன்,அவள் கைகளில் அவள் மறந்து வந்த டிபன் பாக்ஸை கொடுத்தான்.

நிறையாழிக்கு அப்போது தான் ,டிபன் பாக்ஸை தான் வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்தது ஞாபகம் வந்தது.அவள் எதுவுமே‌ பேசாமல் அவனிடம் டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டாள்.

அவனோ,"நிறை என்ன கோபமிருந்தாலும்,சாப்பாட்டு மேல் இனி கோபத்தைக் காட்டாதே.." என்றவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் பூவணியிடம் ஒரு தலையசைப்புடன் திரும்பி சென்றான்.

நிறையோ , மனதிற்குள் 'உன்னால் தான் நான் கோபமே படுகிறேன்..'என்று நினைத்தவள்,அவனையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.

பூவணியோ, "நிறை நீ பசி தாங்கமாட்டேன்னு நம்பி அண்ணா கரெக்ட்டா டிபன் பாக்ஸை கொண்டு வந்துட்டார் பார்.நீ தான் எப்போதும் அவரை திட்டிக் கொண்டே இருக்கிறாய்.. அட்லீஸ்ட் ஒரு தேங்க்ஸ்சாவது சொல்லியிருக்கலாம்.." என்றவளிடம்.

"அம்மா தாயே! போதும் உன் அண்ணன் புராணம்.கொஞ்ச நேரம் நீ வாயை மூடுகிறாயா ?என்னை கடுப்பாக்காதே.." என்றவுடன் பூவணி கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.இதற்கு மேல் ஏதாவது சொன்னால் அவள் இன்னும் டென்ஷன் ஆகிடுவாளென்று.

உதயனம்பியோ, நிறையாழி பஸ் ஏறிப் போகும் வரை கிளம்பாமல், தன் வண்டியின் மீது கையை கட்டிய படி சாய்ந்து நின்று கொண்டான்.

நிறையாழிக்கோ, அதுவே எரிச்சலாக இருந்தது..'பெரிய ஹீரோன்னு நெனப்பு' என்று மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்தாள்.

பூவணிக்கோ, அவனின் ஒவ்வொரு செயலும் அவன் மீது மிகுந்த மதிப்பை அவள் மனதில் உருவாக்கியது.

உதயனம்பிக்கோ,நிறை தன்னிடம் எவ்வளவு வெறுப்பு காட்டினாலும்,அவனால்அதை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..அவனால் அவளை எப்போதும்,எதற்காகவும் வெறுக்க முடியாது.

நிறையாழி சென்றதும் , உதயனம்பி நேராக தன் கடைக்கு சென்றான்.

அங்கு, சங்குமணியிடம் சில வேலைகளை ஒப்படைத்து விட்டு , அவனுக்கு கல்யாண வேலையை பார்க்க செல்ல வேண்டியிருந்தது ,கல்யாண நாள் வேறு நெருங்கி கொண்டிருந்தது.

உதயனம்பி கடைக்கருகில் சென்று வண்டியை நிறுத்தியவுடனேவே ,மணி சிரித்தபடியே," நம்பியண்ணா காலை டூயூட்டி முடிஞ்சுச்சா.." என்றான்.

உதயனம்பி என்ன வேலையிருந்தாலும், தினமும் காலையில் நிறை கல்லூரி போகும் போதும்,மாலை கல்லூரியிலிருந்து வரும் போது எப்படியாவது அவளை பார்க்கச் செல்வான். பாதி நாள் நிறைக்கு தெரியாமலேயே, தள்ளி நின்று அவளை பார்த்து வருவான்.அதை குறிப்பிட்டுத்தான் மணி இப்போது கேட்டான்.

நம்பியோ,"டேய் வர..வர, உனக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாகிருச்சு.."

"போங்கண்ணா.. நீங்க தான் நிறை அக்கா பின்னாடியே சுத்தறீங்க! ஆனா ,அந்தக்கா உங்களை கண்டுக்கவே மாட்டீங்குது.."

"மணி பேசாம உன் வேலையை பாரு .எனக்கு அவளை தினமும் பார்க்கனும்! அதனால் போறேன்.அவ்வளவு தான்.."என்றான்.

"அண்ணா பொய் சொல்லாதீங்க..நீங்க நிறையக்காவை எவ்வளவு காதலிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்.. அந்த அக்காகிட்ட உங்க காதலை சீக்கிரம் சொல்லிருங்கண்ணா.. நீங்க மனசுக்குள்ளையே வைத்துட்டு இருந்தீங்கன்னா , அப்புறம் அந்தக்கா வேறு யாரையாவது கல்யாணம் செய்துட்டுப் போய்ட்டா நீங்க தாங்குவீங்களா..?"என்ற மணியை திகைத்துப் பார்த்தவன்..

" மணி, எனக்கு இதுக்கு பதில் சொல்லத் தெரியலை..அவளை கல்யாணம் செய்துக்கனும்னு எனக்கு பேராசை‌ தான்.ஆனால் அது நடக்குமான்னு தெரியலை.. நான் சொல்லி அவள் மறுத்து விட்டாள் என்னால் தாங்க முடியாது.."என்றவனை பாவமாக பார்த்தான் மணி.

உதயனம்பியை பற்றி மணிக்கு நன்றாக தெரியும்.அவன் கூடயிருந்த இத்தனை வருடங்களில், அவன் எதற்கும் ஆசைப்பட்டு பார்த்ததில்லை..

நம்பியின் குணமும்,கடின உழைப்பும் மணியை பிரமிக்க வைக்கும்.அது மட்டுமின்றி அவனின் இரக்க குணத்தை நினைத்தாலும் அவனுக்கு வியப்பாக இருக்கும்.

நம்பி மட்டும் இல்லையென்றால் தன் குடும்பம் இன்று நடுத்தெருவில் தான் நின்று இருக்கும்.

தன்னைக் கூட அவன் வேலையாள் போல் என்றுமே நினைத்ததே இல்லை..உடன்பிறவா சகோதரனாகத் தான் பார்கிறான்.அந்த உரிமையில் தான் மணியாலும் இந்தளவு பேச முடிகிறது.

உதயனம்பியும்,மணியை தன் உடன்பிறவா சகோதரனாகத் தான் நினைத்தான்.அதனால் தான் அவனை வேலையாள் போல் நடத்தாமல் தன்னிடம் சுதந்திரமாக பேச அனுமதித்திருந்தான்..

மணி தன்னையே யோசனையாக பார்த்ததை கண்டு ,"மணி நான் அவளை உண்மையா நேசிக்கிறேன்.அதை அவளிடம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை..என் அன்பு உண்மையாக இருந்தால் அதுவே எங்களை சேர்த்து வைக்கும்.."
என்றவன் தொடர்ந்து..

"நமக்கு பிடிச்சவங்க நம்ம கூடவே இருக்கனும்ன்னு அவசியமில்லை..எங்கிருந்தாலும் நல்லா இருந்தா போதும். அப்படி ஒரு வேளை அவள் வேறுயாரையாவது கல்யாணம் செய்துக்கிற சூழல் அமைந்தால் கூட, அவ சந்தோசமாக வாழ்ந்தா போதும். அவ நெனைப்பிலேயே நான் காலம் பூரா வாழ்ந்துடுவேன்.." என்றவனை அதிர்ந்து பார்த்தான் மணி.

இது என்ன மாதிரி அன்பு.இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனா?.தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு நினைத்துக் காதலிப்பவள் மீது அமிலம் வீசும் மனிதர்கள் மத்தியில், இப்படியும் ஒருவரா! என்று வியந்தான்.

'தன் அண்ணன் ஆசைப்படுவதை நிறைவேற்றிக் கொடு கடவுளே!'என்று மனதிற்குள் மனதார வேண்டிக் கொண்டான்.அவனால் செய்ய முடிந்தது அது ஒன்று தான்.

உதயனம்பி அன்று வீடு திரும்ப இரவு வெகு நேரம் ஆகிடுச்சு..அம்மா தனக்காக காத்திருப்பார்களே, என்று நினைத்தபடி வண்டியை வேகமாக வீட்டை நோக்கி செலுத்தினான்.

அவன் நினைத்தது போலவே ,தாழ்குழலி வாசலையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

மகனைப் பார்த்ததும் அவரின் முகம் பூ போல் மலர்ந்தது..வாடிப்போய் வந்த மகனை மலர்ந்த முகத்தோடு வரவேற்றவர்..

"ஏம்ப்பா இன்று இவ்வளவு நேரமாகிவிட்டது. ரொம்ப வேலையாப்பா .."என்றவரின் அருகில் வந்து அமர்ந்தவன், அப்படியே அவரின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

உதயனம்பிக்கு இது ஒரு பழக்கம், அதிக வேலையோ,அல்லது மனம் சரியில்லையென்றாலோ, தாயின் மடியில் சிறு குழந்தை போல் தலை வைத்து படுத்துக் கொள்வான்.அன்றும் அதுபோல் படுத்துக் கொண்டான்.

தாயின் கனிவான தலை வருடலும்,உதிம்மா என்ற அழைப்பும்,அவனுக்கு எல்லையில்லா நிம்மதியையும்,மன அமைதியையும் கொடுக்கும்..

தாழ்குழலிக்கும் மகனின் இந்த செயல் மிகவும் பிடித்தமான ஒன்று..மகன் எத்தனை பெரியவனாலும் அவருக்கு இன்னும் சிறுபிள்ளை போல் தான் தோன்றும்.

தாழ்குழலி மகனின் தலையை மென்மையாக வருடிய படியே, "கல்யாண வேலையெல்லாம் எப்படி போகிறது உதிம்மா..மாமா பாவம் பா.. நீ தான் அவருக்கு மூத்த பிள்ளை போல், கல்யாணம் முடியும் வரை கொஞ்சம் மாமாவுக்கு உதவியாக இருக்கனும்.." என்றவரிடம்.

"அம்மா அதை நீங்க எனக்கு சொல்லனுமா? அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.நீங்க கவலைப்படாதீங்க..நீங்க சாப்பிடீங்களா? மாத்திரை எல்லாம் கரெக்ட்டா சாப்படீங்க தானே.." என்ற மகனிடம் ..

அதெல்லாம் நான் சரியாக சாப்பிட்டுத் தான் இருக்கிறேன்.நீ குளித்துட்டு வா சாப்பிடலாம்.." என்றவரிடம்.

"ம்மா ஒரு பத்து நிமிஷம் இப்படியே படுத்துக்கிறேன்.." என்றவன் கண்களை மூடி சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தான்.

அவன் மனமோ, அன்று காலை மணியுடன் நடந்த உரையாடலை அசைபோட்டது.மணி சொல்வது போல் நிறையாழி வேறு யாரையாவது திருமணம் செய்தால் தன்னால் உண்மையாலுமே தாங்க முடியுமா? என்று எண்ணினான்.

நாமும் ஒழுங்காக படித்திருந்தால் ,அவளிடம் உரிமையாக நம்மை திருமணம் செய்து கொள்ளச் சொல்லிக் கேட்டிருக்கலாம், என்று நினைத்து கலங்கினான்.

தாழ்குழலியோ ,மகனின் முகமாற்றத்தை கண்டவர், "உதிம்மா என்னச்சுப்பா.. உன் முகமே சரியில்லையே.." என்றவுடன்..

வேகமாக எழுந்து அமர்ந்தவன், "அப்படியெல்லாம் எதுவும் இல்லை அதிக களைப்பு தான்..நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்க..நான் போய் குளித்துட்டு வரேன்.." என்று அவன் அறைக்குச் சென்றான்.

உதயனம்பியின் வீடு, மூன்றே அறைகள் கொண்ட சின்ன வீடு தான்..ஒரு வரவேற்பறை,சின்னதாக சமையல் அறை.. குளியலறையுடன் சேர்ந்த படுக்கையறை..

தாயும், மகனுக்கும் அதுவே போதுமானாதாக இருந்தது..

தாழ்குழலியோ, வரவேற்பறையிலேயே தனக்காக ஒரு கட்டில் போட்டு இருந்தார்.எப்போதும் அது தான் அவரின் இருப்பிடம்.. நம்பி படுக்கையறை உபயோகித்துக் கொள்வான்.

உதயனம்பி குளித்து வந்ததும்,தாழ்குழலி அவனுக்கு டிபன் எடுத்து வைத்தார் ..அவனோ, அமைதியாக சாப்பிட்டு விட்டு சென்று படுத்தான்.

அடுத்த நாள் காலை விடியல் அவனுக்கு மிக அழகாக விடிந்தது..நிறையாழியின் இனிமையான குரலை கேட்டபடியே கண்களை திறந்தான்..

தொடரும்..

ReplyQuote
Initha Mohankumar Tamizhini
(@inithamphankumar)
Eminent Member Writer
Joined: 3 years ago
Posts: 46
Topic starter  

Hi friends,

தொடுக்காத பூச்சரமே! கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. அடுத்த யூடி புதன்கிழமை..

நன்றி

இனிதா மோகன் தமிழினி

This post was modified 2 days ago by Initha Mohankumar Tamizhini

ReplyQuote

Share: